கண்ணில் கருமணியாக,
நெஞ்சில் நினைவுகளாக
சுவாசத்தின் நிறைவாக,
நீ மட்டுமே..
கனவே சேராயோ??? 26
தேஜா அவளை அப்படி பார்த்திருக்கிறான். ஆனால் பொதுவாக பெண்கள் அப்படி போடுவார்களே? என்பது போல கூறிவிட்டான்.
அந்த இடத்தில் பெரிதாக ஆட்கள் இல்லை தான். இன்னும் வேலை தொடங்கப்படவில்லை. அதன் சுற்றத்திற்கு முள்வேலிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தது. காம்பவுண்ட் கட்டுவதற்கான கருங்கல்கள் வந்து இறங்கி இருந்தது. ஆங்காங்கே ஒரு சிலர் அதன் வேலைகளுக்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர்.
அதன் பிறகு எங்கு எதை செய்ய வேண்டும் என்று அவள் சுட்டிக்காட்டிக் கொண்டிருக்க.
“கையில பிளான் எடுத்துட்டு வரலையா”? என்று கேட்டான் தேஜா.
அவள் முகத்தைச் சுருக்கி நாக்கைக் கடித்தபடி, “சாரி சார்” என்றாள்.
அவன் மீண்டும் கன்னக்கதுப்பில் நாக்கை வைத்து உருட்டியபடி அவளைப் பார்த்தான்.
‘இவர் எதுக்கு இப்ப அடிக்கடி இப்படி பண்றாரு’?
‘திட்டாம அமைதியா பார்த்து வைக்கிறார்? அதற்கு கூட கேள்வி கேப்பியா’? என்ற மனதை சாடியவள்.
“பட் சார், பிளான் போன்ல இருக்கு என்றாள்.
அவசரமாக தன் அலைபேசியை எடுத்து அதில் பிளானை ஓபன் செய்து அவனுக்கு காட்டினாள்.
அதை பார்ப்பதற்கு இருவரும் நெருங்கும் நிலையானது. அவள் அதில் விளக்கம் கூறிக் கொண்டிருக்க. அவளின் வாசம் அவனின் நாசியை தீண்டி சித்திரவதை செய்துக் கொண்டிருந்தது. தன்னிலை இழப்பதை உணர்ந்தவன்.
“இதுல பாக்குறது எனக்கு கம்ஃபர்டபிலா இல்ல? என்னோட நம்பருக்கு இதை அனுப்பி வைங்க. என்னோட போன்ல டிஸ்ப்ளே பெருசா இருக்கும்” என்று கூறிவிட்டு. அவன் போனை எடுத்தான்.
சரி என்று தலையாட்டியவள். மிடறு விழுங்கிக்கொண்டு அவனைப் பார்த்தாள்.
அவன் சொன்னதை செய்யாமல், அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை பார்த்தவன்.
“வாட்”? என்று புருவம் உயர்த்தி கேட்டான்.
“ஒன்னும் இல்ல சார். உங்க போன் நம்பர் தெரியாது. பட் செக்ரட்டரி கிட்ட கேட்டுக்குறேன் சார்” என்று கூறிவிட்டு அவன் புறம் திரும்பியவள்.
“பாஸோட வாட்ஸப் நம்பர் குடுங்க சார்” என்று கேட்டாள்..
அவனும் மனப்பாடமாக இருந்த அலைபேசி எண்ணை சொல்ல ஆரம்பித்தான்.
அவளும் குறித்துக் கொண்டு தேஜாவிற்கு அதை அனுப்பிவிட்டு. அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவள் தன்னை என்னவென்று சேவ் செய்திருப்பாள்?? என்று பார்க்கும் ஆவல் அவனுக்குள் வந்தாலும். இது அதற்கான இடமில்லை என்பதை புரிந்து கொண்டவன்.
தன் அலைபேசியை அவளிடம் கொடுத்தான்.
“எக்ஸ்ப்ளைன் இட்” என்று கைகளை கட்டிக் கொண்டு நின்றான்.
அதை வாங்கும் போது அவள் கைகள் நடுக்கம் கொண்டது.
விலை உயர்ந்த அந்த போனை தவறுதலாக கீழே போட்டு விட்டால், என்ன ஆவது?? அல்லது தன் வியர்வைகள் அதில் படிந்து விட்டால்?? கை ரேகைகள் டிஸ்ப்ளேவை சேதம் செய்து விட்டால்?? என்ற கற்பனைகள் அவளை ஆக்கிரமித்தது.
தன்னை சிரமப்படுத்தி கொண்டவள். அதை கெட்டியாக அழுத்தி பற்றியபடி இருந்தாள்.
அவளுடைய பதட்டம். அவள் பற்றி இருக்கும் விதம், என்று அவன் புன்னகையை கூட்டி தான் இருந்தது. இதுவரை அவள் அலைப்பேசியை பற்றிய விதத்திலும், அவன் அலைபேசியை அவள் பற்றிய விதத்திலும் வேறுபாடு தெரிந்தது.
சிறுபிள்ளை கையில் இருக்கும் பொருளை தவற விடக்கூடாது என்பது போல கெட்டியாக பிடித்து இருக்குமே?? அப்படித்தான் அவன் அலைபேசியை அழுத்தி பற்றியிருந்தாள். அதில் அவனுக்கு புன்னகை தான் வந்தது. ஆனால் அதை தனக்குள் அடக்கிக் கொண்டான்.
இங்கு என்ன செய்ய வேண்டும் என்பதை கைகளால் சுட்டிக்காட்டி விட்டு, போனிலும் அது எங்கு வரவேண்டும் என்பதை காட்டினாள்.
“அதோ அந்த நார்த் ஈஸ்ட்ல தான் வாட்டர் சப்ளை வரும். ஏன்னா அந்த சைடுல இருந்து தான் ஏரிகளுக்கு தண்ணி கொண்டு வருவது ஈசியா இருக்கும். ஃபுல்லா காம்பவுண்ட் சுவர் கட்டிடனும். இங்க இருந்து வீடுகள் கட்ட ஆரம்பிச்சுடனும். கோட்டர்ஸ் ஒவ்வொன்னதுலயும் எட்டு வீடுகள் இருக்கும். அதுக்கு ஒரு பெட்ரூம் ஒரு ஹால் ஒரு கிச்சன். பெட்ரூம் மட்டும் பத்துக்கு பத்து, ஹால் பத்துக்கு எட்டு, கிச்சன் எட்டுக்கு அஞ்சு” என்றவள் கூற.
“பாத்ரூம்”? என்று கேட்டான்.
“அது பெட்ரூம் சைடு சார். எட்டுக்கு அஞ்சி இருக்கும்.
ஸ்கொயரா இருக்கிற வீட்ல பெட்ரூமும் பாத்ரூமும் ஒரு பக்கமும்னா, ஹாலும் கிச்சனும் இன்னொரு பக்கம் இருக்கும். எல்லா வீடுகளுடைய கன்ஸ்ட்ரக்ஷனும் அதே போல தான் இருக்கும் சார்.” என்று அந்த தொகுப்பு வீடுகளின் விளக்கத்தை கூறிக்கொண்டிருந்தாள்.
துப்பட்டாவால் அவள் வாயை முடியிருந்தாள். கண்கள் மட்டும் தான் தெரிந்தது. அவள் வார்த்தைகள் ஷாலுக்குள் அடங்கியது. ஆனால் அவள் கண்கள் ஆயிரம் பாஷைகளை பேசியது. அவள் கண்களில் அமில துடித்த தன் மனதை கட்டுப்படுத்தினான்.
அந்த இடத்திலிருந்து மறுமுனைக்கு போய்விட்டு திரும்பினார்கள்.
அவன் நேரத்தை பார்த்தான்.
மணி நான்கு என்று காட்டியது. மீண்டும் அலுவலகத்திற்கு செல்ல வேண்டுமா?? மிக தூரத்தில் இருக்கிறதே என்று அவள் முகத்தை சுருக்கினாள்.
அதை அவன் புரிந்து கொண்டான் போல?
மீண்டும் அவர்களுடைய பயணம் அதே போல தொடர்ந்தது. நடுவில் ஒரு இடத்தில் நிறுத்தச் சொன்னவன். இளநீரை வாங்கி அனைவருக்கும் கொடுக்கச் சொன்னான்.
தயக்கம் இல்லாமல் வாங்கி பருகினாள்.
அந்த நேரத்திற்கு அது அவசியமாகத்தான் பட்டது. அதனால் பிகு செய்து கொள்ளவில்லை. அவன் பர்சை எடுக்கவில்லை. எல்லாவற்றையும் செக்ரட்டரியை பார்த்துக் கொண்டார்.
அழுவலகத்திற்கு வந்து இறங்கியதும்.
அவள் காரை திறக்க போக.
“நீங்க வீட்டுக்கு போகலாம் மிஸ் மானசா. பிளான நல்லபடியா முடிச்சு கொடுத்ததினால. உங்களுக்கு இந்த ஒன் ஹவர் பர்மிஷன் கொடுக்கிறேன். டேக் ரெஸ்ட்” என்று கூறிவிட.
உடனே அட்மார்க் புன்னகை ஒன்று அவள் முகத்தில் குடி கொண்டது.
“தேங்க்ஸ் சார்” என்று முகம் மலர கூறினாள்.
அவன் விடுவிடுவென்று அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டான்.
ஆனால், அவன் போன திக்கை பார்த்தபடி. இரண்டு கைகளையும் அவன் புறமாக உயர்த்தியபடி அவள் அவனை வாழ்த்தினாள்
“மகராசன். நல்லா இருக்கணும்” என்று அவள் மானசீகமாக கூற.
அதை தேஜா அப்பொழுது பார்க்கவில்லை என்றாலும், அதன் பிறகு பார்த்து தெரிந்து கொள்வான் என்பது வேறு விஷயம்.
தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.
தாயும் தந்தையும் வருவதற்கு முன்னாலேயே வீட்டிற்கும் வந்துவிட்டாள். அதுவும் தம்பிக்கு பிடித்த ஸ்வீட்டை வாங்கிக் கொண்டு.
கதவை திறந்து கொண்டு சென்றவள். அவன் பெயரைச் சொல்லி அழைத்தாள்.
அவன் வருவதாக தெரியவில்லை. கீழே உள்ள அறைகள் எல்லாம் சாத்தி இருக்க. அவன் மேலே தான் இருப்பான் என்று மேலே சென்றாள். அங்கும் அவர்கள் மூவரின் சாத்திய அறை தான் இருந்தது. அவன் அறைக்கு சென்று கதவை தட்டினாள்.. அது வெளிப்பக்கமாக சாத்தி இருப்பது அப்போதுதான் புரிந்தது.
அவன் அலைபேசி எண்ணை எடுத்து அவனுக்கு தொடர்பு கொண்டாள்.
இங்கு வேலை செய்து கொண்டிருப்பவன். அலைபேசி ஒலியில், எடுத்து, தன் தமக்கை என்று பார்த்ததும்.
“சொல்லுக்கா”? என்று புன்னகைமுகமாக கேட்டான்.
பெரிதாக கூட்டம் இல்லை என்றாலும், அவன் கூறியது நேஹாவின் காதுகளில் விழுந்தது . அவளும் அவனை திரும்பி பார்த்தாள்.
அதன் பிறகு அவன் முக பாவனை பார்க்க வேண்டுமே??
மேகாவிற்கே பயம் ஏற்படும் வகையில் இருந்தது.
“அய்யய்யோ! சீக்கிரம் வந்துட்டியா?? இதோ இங்க பக்கத்துல தான் இருக்கேன். இல்ல மொட்டை மாடியில, இல்லல்ல கீழே, இல்லல்ல ஒரு நிமிஷம் இரு” என்று அலைபேசியை கட் செய்தான்.
மீண்டும் மீண்டும் அது அடித்துக் கொண்டே இருக்க. பேய் விழி விழித்தான்.
‘என்ன பண்றான் இவன்’? என்று அவனைப் புருவம் எடுக்க பார்த்தாள் நேஹா.
‘ஒரே நேரத்தில் எத்தனை முக பாவனைகளை காட்டிக் கொண்டிருக்கிறான்?? இத்தனை எக்ஸ்பிரஷங்களை இவள் இதுவரை யாரிடமும் பார்த்ததில்லை. அதுவும் ஒரே நேரத்தில்.’ கண்களை விரித்து அவனையே பார்த்துக் கொண்டிருக்க.
இன்னும் சிலரும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தனர். இவளுக்கு தயக்கம் இருப்பது போல, அவர்களுக்கு இல்லை போலும்?? அவனை நெருங்கி என்ன ஏது என்று கேட்டார்கள்.
ஆனால் அவனோ அவர்களுக்கு விளக்கம் கூறுவதற்கு முன்பாக. அவளை நோக்கி ஓடி வந்தவன். மூச்சு வாங்க நின்றான்.
“மேடம் எனக்கு ஒன் ஹவர் பர்மிஷன் கொடுங்க. இப்பவே நான் வீட்டுக்கு போய் ஆகணும்” என்றான் நிர்மல்.
“என்ன ஆச்சு?? என்று அவளும் பதட்டமாக கேட்க.
என்னவென்று சொல்வான் அவன்??
“வந்து எங்க அக்கா வீட்டுக்கு வந்துட்டாங்க. இல்ல, அவங்களுக்கு உடம்பு சரியில்லையாம். அவங்க ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போகணும். ப்ளீஸ் மேடம் எனக்கு இருக்கிறது ஒரே ஒரு அக்கா. அவங்கள பாத்துக்கிறதுக்கு இருக்கிற நான் ஒரே ஒரு தம்பி” என்று அவன் பேசிய பாவணையில் அவள் தானாக தலைகாட்டினாள்.
“சரி சரி போங்க. உங்க அக்காவ பாத்துக்கோங்க” என்று கூறிவிட்டாள்.
விடு விடுவென்று வாசலின் புறம் ஓடியவன். மீண்டும் அவள்புறமாக ஓடிவந்து. “தேங்க்ஸ் மேடம்” என்று புன்னகையை உதிர்த்துவிட்டு. அதே வேகத்தில் வாசலை அடைந்தான்.
கண்ணாடி சுவரின் வழியாக அவள் வெளிப்புறம் பார்க்க. அதே வேகத்தில் சாலையையும் கிராஸ் செய்து. ஆட்டோவையும் பிடிப்பது தெரிந்தது.
“இவன் என்ன இவ்வளவு அவசரமா போறான்”? அக்கா மேல அவ்வளவு பாசமா?? ரோட்ல கார் இடிக்கிற மாதிரி வந்ததை கூட பாக்காம ஓடுறான்.
அந்த டிரைவர் திட்டியதை கூட கண்டுக்கல. இந்நேரம் பிரேக் போடாம, அந்த வண்டி மோதி இருந்தா என்ன ஆகிறது? மனம் படபடக்க நின்றாள் நேஹா.
என்னதான் ரெஸ்டாரன்ட் நடத்திக் கொண்டிருந்தாலும், அவள் இளகிய மனம் படைத்தவள் தான். வேலை என்று வந்தால் கருத்தும் கண்ணுமாக இருப்பாள். இறங்கியும் வேலை செய்வாள். ஆனால் வேலை செய்பவர்களிடம் நன்றாகவே பழகுவாள். முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல்.
அவர்களுக்கு ஒன்றென்றால் உடனே உதவி செய்வான். அன்றும் அப்படித்தான் வேலை கேட்பவர்களுக்கு ஓய்வு கொடுத்ததினால் தான், ஆட்கள் குறைவாக இருந்தனர். அதனால் (Apron) அப்ரானை கட்டிக்கொண்டு அவளே இறங்கி வேலை செய்ய ஆரம்பித்து விட்டாள்.
அன்றுதான் அவளை முதன் முதலில் பார்த்து. அவளை சர்வர் என்று நினைத்து விட்டார்கள் அக்காவும் தம்பியும்.
அங்கு வேலை செய்பவர்களுக்கும் அவளை அதிகம் பிடிக்கும் என்று தான் சொல்ல வேண்டும்.
இந்த சொற்ப நாட்களில் நிர்மல் மனதிலும் அவள் குணத்தினால் குடி புகுந்து விட்டால் என்பதை அவன் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.
முதலில் கனவின் சித்தமாக அங்கு வந்து சேர்ந்தவன். அவள் அழகில் சொக்கி தான் போனான். பிறகு அவள் குணத்தில் ஈர்க்கப்பட்டான். மொத்தத்தில் அந்த ஒரு வாரத்தில் அவளிடம் மொத்தமாக விழுந்துவிட்டான் நிர்மல்.
இப்பொழுது அவளை வீழ்த்துவதற்குத்தான் அவன் பிரயத்தனப்பட்டு கொண்டிருக்கிறான்.
அதற்குள் வீட்டில் மாட்டிக்கொள்வானோ?? பார்க்கலாம்……
……