அத்தியாயம் -7

 

கோவில் தூணில் நன்றாக சாய்ந்து நின்று கொண்டு , “ என்னையும் உங்களோட வருங்கால கணவரையும்  எதுக்காக மேடம் கம்பேர் பண்ணுறீங்க?” என நக்கலாக கேட்டவனது கேள்விக்கு பதில் கூறாமல் அமைதியாக நின்றிருந்தாள் கீதாஞ்சலி.

பின்னர் அலட்சியமாக அவனைப் பார்த்தவள், “தப்பு தான் உங்களை யாரோடயும் கம்பேர் பண்ணியிருக்க கூடாது. லுக் மிஸ்டர் மிருகேந்திரன் ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்குறோம்னு நினைக்காதீங்க.  எல்லா நேரமும் தப்பிச்சிட்டு இருக்க முடியாது. கூடிய சீக்கிரம் வகையா மாட்டுவீங்க. அன்னைக்கு தான் உங்களுக்கு மறக்க முடியாத நாளாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்தாள்.

“ ம்ம்…குட்…சோ…நான் புத்திசாலின்னு ஒத்துக்கிறீங்க? “ என்றவன் அவள் முகத்தருகே குனிந்து, “ ஓகே மேடம் …நான் இந்த தடவை உங்களுக்கு ஓபன் சேலஞ்ச் விடுறேன். என்னோட அடுத்த ப்ராஜெக்ட் இன்னும் கொஞ்ச நாள்ல ஆரம்பிச்சிடுவேன்… இடமும் நாளும் இப்பவே நான்  உங்களுக்கு சொல்லிடுறேன். முடிஞ்சா இந்த தடவையாவது பிடிக்க ட்ரை பண்ணுங்க கமிஷ்னர் மேடம். இடம் இராமேஸ்வரம் ல இருந்து தனுஷ்கோடி வழியா இந்தோனேசியாவுக்குப் போகுது எங்களோட சரக்கு. அடுத்த மாசம் பதினஞ்சாம் தேதில இருந்து இருபதாம் தேதிக்குள்ள எப்ப வேணாலும் கப்பல்  போகலாம். ஆல் டீடெயில்ஸ் குடுத்துட்டேன். இனி எங்களை பிடிக்கறது உங்களோட சாமர்த்தியம் .”என்று கூறியவனிடமிருந்து விலகி  சற்று பின்னால் நகர்ந்து  நின்று அவனை உறுத்து விழித்தாள் கீதாஞ்சலி.

அவனோ  கைகளை கட்டிக்கொண்டு அவளை  தான் சின்னச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனது  சிரிப்பு மற்றும் அலட்சிய பார்வையினால் அவளுக்கு கோபம் தான் வந்தது. 

ஒவ்வொரு முறையும் காவல்துறை கண்களில் சிக்காமல் ஆட்டம் காண்பித்து கொண்டிருக்கும் விருகேந்திரனை தக்க சமயத்தில் கையும் களவுமாக பிடிக்க காத்துக் கொண்டிருக்கின்றாள்.

அவளது வெட்டும் பார்வையை கண்டு மீணடும்  புன்னகைத்தவன், “ என்ன மேடம் ? என்ன பேசா மடந்தையா நிக்குறீங்க? கடுப்பாகுதா? ஆகட்டும் ஆகட்டும்…நம்ம கிட்டயே இவ்வளவு தெனாவெட்டா பேசுறானே…இவன் பேசுறதை ரெக்கார்ட் பண்ணி எவிடென்சா சப்மிட் பண்ணி உள்ள தள்ளலாமா? இல்ல இப்படியே இவனை என்கவுண்டர் ல போட்டுடலாமான்னு யோசிக்குறீங்களா? “ என்றான்

அவன் பேசியதைக் கேட்டு எள்ளலாக சிரித்தவள் அவனது கேள்விக்கு பதில் ஒன்றும் கூறாமல் நகர்ந்தாள்.

“ மேடம் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம போறிங்களே…!” என்றான் சற்று உரக்கவே.

“ அதுக்குள்ள என்ன அவசரம் மிஸ்டர்? வெயிட் அண்ட் வாட்ச்…” என்றவள் அவனை அழுத்தமாக பார்த்துவிட்டுச் சென்றாள்..

மிருகேனின் புருவ மத்தியில் முடிச்சு விழுந்தது. எதிர்பாராத நேரத்தில் ஏதோ செய்ய காத்திருக்கின்றாள் என்பது மட்டும் நன்கு தெளிவாகியது அவனுக்கு..

அந்த இரவு நேர கேளிக்கை விடுதிக்கு வந்திருந்தான் ஆதவ்.

மேலாளரிடம் சென்ற வாரத்தின் சிசிடிவி ஃபூட்டேஜை கேட்டிருந்தான்.

“சார் நீங்க கேட்ட பூட்டேஜ் இதோ. பாக்குறீங்களா?” என்றார்.

“ ம்ம்… போன சனிக்கிழமையோடது  மட்டும் போதும்.” என்றவன் அதை மட்டும் காண்பிக்கச் சொன்னான்.

மாலை நேர கேளிக்கை விருந்து பதிவாகியிருந்தது. 

அதில் மோகனா அந்த பெரிய மனிதரிடம் பேசிக் கொண்டிருந்தது, அவருடன் இணைந்து நடனமாடியது , அவரை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தது. மீண்டும் அறையிலிருந்து வெளியே வந்தது, வரும்‌‌ போது அவளது தோள்பையை  மாட்டிக் கொண்டு ஒயிலாக மாடியிலிருந்து இறங்கி வந்து வெளியே சென்றது என‌ அனைத்தும்‌ பதிவாகியிருந்தது.

அவளது முகத்தை ஜூம்‌ செய்து‌ தனது அலைப்பேசியில் சேமித்துக் கொண்டான்.

அந்த பெரிய மனிதரின் முகவரியை வாங்கியவன் அவரிடம் சென்று விசாரணை நடத்தினான்.

“ சார்..சார்..நான் எல்லாத்தையும் இந்த பொண்ணு கிட்ட இழந்தது ‌மட்டும்‌ வீட்டுக்குத் தெரிஞ்சதுன்னா  ரொம்ப பிரச்சினை ஆகிடும் சார்.‌ என் பொண்டாட்டி சாமி‌யாடிடுவா…தயவு செஞ்சு எதைப் பத்தியும் என் கிட்ட கேட்காதீங்க சார்…ப்ளீஸ் “ என கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டார்.

இரு கரங்களால் முகத்தை துடைத்துக் கொண்டவன் சலிப்புடன், “ம்ம்ச்…சார்..! இங்க பாருங்க  . நான் அந்த பொண்ணை பத்தின டீடெயில்ஸ். மட்டுந்தான் கேட்டேன். உங்க ஃபேமிலி கிட்ட எதுவும் சொல்லப் போறதில்ல. ஐ மீன் அந்தப் பொண்ணை முதல்ல எங்க பாத்தீங்க? எப்படி பேச ஆரம்பிச்சீங்க? அந்த பொண்ணோட மெயில் ஐடி, அட்ரஸ், என்ன பண்ணுறாங்க? இப்படி ஏதாவது விவரம் இருந்தா சொல்லுங்க..” என்றான்.

“சார்…யாரு கிட்டயும் சொல்லிட மாட்டீங்களா?” என்றார் தயக்கத்துடன்.

சமூகத்தில் உயர்ந்த இடத்தில் இருப்பதினால் தனக்குள்ள நல்ல பெயரை காப்பாற்றி கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ‌.‌ பெண் சபலத்தால் பெயர் கெட்டுவிடக்கூடும் என்ற‌ பயம் அவரது முகத்தில் பிரதிபலித்தது.

அதனை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

“ சார் ப்ளீஸ்..என்னை நம்புங்க” என்றவுடன் தான் விவரத்தை கூற ஆரம்பித்தார்.

“ சார் அந்தப் பொண்ணு‌ பேரு…தியா. பீ ஃப்ரெண்ட்ஸ் ஆப்‌ மூலமாக தான் ‌சார்‌ அறிமுகமானா. தனியா இருக்கறாளாம், அவளுக்குன்னு யாரும் இல்லை, யார் கிட்டயாவது மனசு விட்டு பேசினா நல்லா இருக்கும்ன்னு ஆரம்பிச்சது சார். அப்பறம் என்னைய‌ பத்தி கேட்டு தெரிஞ்சுகிட்டா. சாதாரணமா‌ ஆரம்பிச்ச பேச்சு கொஞ்ச நாள்ல மிட்‌ நைட் சாட் வரைக்கும் போச்சு. அப்பப்ப அவளோட‌ செலவுக்கு காசு கேப்பா. நானும்‌ இருபதாயிரம் முப்பதாயிரம்னு போட்டு விடுவேன்.” என்று கூறி விட்டு அவனது முகத்தை தயக்கமாக பார்த்தார்.

அவரை கேவலமாக ஒரு பார்வை பார்த்தவன், “ சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சார்…பெரிய‌ மனுஷன் தான நீங்க. தனி ஆள் செலவுக்கு முப்பதாயிரம் அதிகம் இல்லையா..?” என்றான்.

“ வீட்டு வாடகை, சாப்பாடு,  ப்யூட்டி பார்லர் இதெல்லாம் சேர்த்து தான்…” என்றார்.

அவனுக்கு கடுப்பாக இருந்தது. நெற்றியை நீவி விட்டவன்,” சார் அந்தப்‌பொண்ணோட‌ ஆப் மெயில் ஐ டி இருந்தா கொடுங்க.‌போன் நம்பர்‌ ஏதும் இருக்கா? போட்டோ ஏதும் இருக்கா?” என்றான்.

“ ஆப் ல ஐடி  குடுத்திருந்தா அந்தப் பொண்ணு. ஃபோன் நம்பரும் குடுத்தா. போட்டோ கொடுக்கலை சார்..ஒரு நிமிஷம் “ என்றவர்  செயலியில் அவள் உபயோகித்த ஐடியையும் அலைபேசி எண்ணையும் ஆதவ்விடம் கொடுத்தார்.

அவற்றை வாங்கிக் கொண்டு வெளியே வந்தவன் அவளது அலைப்பேசிக்கு  அழைக்க அதுவே உபயோகத்தில் இல்லை என்று வந்தது.

“ சரியான கேடியா இருப்பா போல…”என‌ முணுமுணுத்தவாறே வெளியேறினான்.

அவளைப் பற்றிய தகவல்களை திரட்ட ஆரம்பித்தான்.

ஆனால் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை. கடைசி முயற்சியாக செயலியில் இருக்கும் அவளது ஐடிக்கு போலியான முகவரியில் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் குடுத்தான்.

இரு நாட்களாகியும் அவளிடமிருந்து பதில் ஒன்றும் வரவில்லை.

அலைப்பேசியை நோண்டிக் கொண்டிருந்த மோகனா ,” பீ ஃப்ரெண்ட்ஸ்” செயலிக்குச் சென்று பார்த்துக் கொண்டிருந்தாள். 

பத்திற்கும் மேற்பட்ட போலியான ஐடிக்களை வைத்திருக்கின்றாள். மாட்ட முடியாத அளவிற்கு அனைத்திலும் போலியான தகவல்களை கொடுத்திருந்தாள்.

அனைத்து ஐடிக்களையும் பார்த்து முடித்தவள் ‌, நீக்கி விடலாம்‌ என்று நினைத்திருந்த ஐடியில் ஆதவ் கொடுத்திருந்த ஃப்ரெண்ட் ரிக்வெஸ்டையும் ,” ஹாய்…!” என்ற குறுஞ்செய்தியையும் கண்டு ஒரு கணம் தயங்கினாள். 

வேண்டாம்…இதனை நீக்கி விடலாம் என்று நினைத்து விரல்களை கொண்டு போனவள் ஏனோ அவனது அழைப்பை ஏற்றுக் கொண்டு பதிலுக்கு “ ஹாய் டியர்..!” என்று குறுஞ்செய்தியை அனுப்பினாள்.

முப்பது பேரின் சாவிற்கு காரணமாகயிருந்த பசுபதியை  சுற்றி வளைத்து ஆந்திராவிலிருந்து தமிழக சிறைக்கு அழைத்து வந்திருந்தான் ஆதவ்  

“ சார்…இவனோட கல் குவாரி சட்ட விரோதமா தான் இத்தனை வருஷமா நடந்துட்டு இருந்திருக்கு. முறையான பர்மிஷன் வாங்கல.  இங்க வேலை செய்றவங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகள் செஞ்சி தரல , அதிகமா வேலையும் வாங்குறாங்க, வேலை செய்றவங்களை அடிமை மாதிரி நடத்திருக்காங்க, .சரியான சம்பளம் தரல. வேலை செய்றவங்களை  ரொம்பவே அலட்சியமா நடந்தியிருக்காங்க‌. வெடி வச்சிருக்குறது தெரிஞ்சும்‌ தொழிலாளிகளை மேல போகச் சொன்னது தப்பு.‌ ரெண்டாவது அங்க வேலை செய்றவங்களுக்கு வெடி வச்சிருக்குற தகவல் சரியான முறையில போய் சேரல. சந்தன மரம் கடத்தல், செம்மரம் கடத்தல், யானை தந்தம் , சிலை கடத்தல்ன்னு இவங்க மேல ஏகப்பட்ட வழக்கு பெண்டிங் ல இருக்கு சார்.” என்றார் மூத்த காவலர் ஒருவர்.

“ இவ்வளவு பெண்டிங் கேஸ் இந்தாளு மேல இருந்தும் எந்த கேஸூம் முடிக்க முடியலயா?” என்றான்‌ தாடையை தடவியபடி.

“ ஆமா…சார்.. வெளி ஸ்டேட்டுல இருந்து ஏகப்பட்ட பிரஷர் பசுபதி மேல கையை  வைக்கக்கூடாதுன்னு.. அப்பறம் வஜ்ரவேல் மிருகேன் ரெண்டு பேருக்கும் இருக்குற பொது எதிரி பசுபதியும் அவனோட தலைவன் பத்ரனும் தான் சார். இவனுங்குள்ள தான் அடிக்கடி பிரச்சினை ஆகும். ஆனா அது எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் போலீஸூக்கு அந்த பிரச்சினை தெரியாம பாத்துக்குவாங்க. “ என்ற கூடுதல் தகவலையும் கூறினார் அந்த காவலர்.

அதனைக் கேட்டவன் யோசனையுடன் புருவத்தை சுருக்கி, “ம்ம்… அது வேற இருக்குதா? சரி பாத்துக்கலாம். பசுபதியை ரிமாண்ட்ல வைங்க.  நான் கமிஷ்னர் ஆஃபிஸ் வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்.” என்றவன் காவல்துறை வாகனத்தை கிளம்பிக் கொண்டு சென்றான்.

கமிஷ்னர் அலுவலகத்தில் கீதாஞ்சலியின் எதிரே அமர்ந்திருந்தான் மிருகேந்திரன்.

“ சொல்லுங்க விரு…விருகேந்திரன். என்ன விஷயமா வந்திருக்கிறீங்க?” என்றவள் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அழகாக புன்னகைத்தவன், “ சிட்டிக்கு அவுட்டர்ல இருக்குற இடத்துல  மால் கட்டுற விஷயமா ஏற்கனவே டாக்குமெண்ட்ஸ் சப்மிட் பண்ணிருந்தேன். அதைப் பத்தி பேசறதுக்கு தான் வந்திருக்கேன்‌ மேடம்.  ரெண்டு மூணு தடவை வந்தேன். ஆனா உங்களை பாக்க முடியல. ஐ மீன் இந்த விஷயத்தை பத்தி உங்க கிட்ட  பேச முடியல. வேணும்னே அலைய விடுறீங்களோன்னு தோணுது. அப்பறம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஸ்பெஷல் ஸ்கூல் கட்டுறதுக்கான பர்மிஷனும் கேட்டுருந்தேன். அதுவும் எந்த நிலையில இருக்குதுன்னு கேட்டுட்டு போகலாம்னு வந்தேன்‌.” என்றான்.

தனது உதவியாளரை அழைத்த கீதாஞ்சலி, “ மிஸ்டர் விருகேந்திரனோட மால் சம்பந்தப்பட்ட ஃபைல் எடுத்துட்டு வாங்க. தென் ஸ்பெஷல் சில்டரன்ஸ்க்கு ஸ்கூல் ஸ்டார்ட் பண்றதுக்கான ஃபைலையும் எடுத்துட்டு வாங்க‌‌” என்றாள்.

உதவியாளர் கொண்டு வந்த வைத்த கோப்பினை எடுத்தவள் அதனை கூர்ந்து பார்த்தாள்.

நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இரு விரல்களை தாடையில் வைத்துக் கொண்டு அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அழகிய நெற்றி , கூரிய‌ நாசி, சற்றே உப்பிய கன்னங்கள், இரு வரி கவிதையாய் அவளது உதடுகள், மெல்லிய கழுத்து என மிக நிதானமாக அவளை அளவெடுத்துக் கொண்டிருந்தது அவனது லேசர் விழிகள்.

“ லுக் மிஸ்டர் ..” என நிமிர்ந்தவள் அவனது பார்வையை கண்டு எரிச்சலானாள்‌

“ மிஸ்டர் விருகேந்திரன்..” என்றாள் அழுத்தமாக.

நிதானமாக நன்றாக நிமிர்ந்து அமர்ந்தவன், “ சொல்லுங்க மேடம்” என்றான்.

அவனை முறைத்து விட்டு , “ஸ்பெஷல் சில்ட்ரன்ஸூக்காக கட்டுற ஸ்கூலுக்கான ப்ராஜெக்ட் ஓகே ஆயிடுச்சு. பட் நீங்க கட்டப் போற மாலுக்கு தான் அப்ரூவல் கொடுக்க முடியாது. அது அரசாங்கத்துக்கு  சொந்தமான இடம். பெட்டர் நீங்க வேற இடம் பாருங்க” என்றாள்.

அவனோ எரிச்சலுடன் , “ போன தடவை செலக்ட் பண்ணுன இடத்தையும் இதே காரணத்தை சொல்லி தான் ரிஜெக்ட் செஞ்சீங்க. இந்த தடவையும் அதே காரணம் சொன்னா என்ன பண்றது மேடம்?” என்றான்.

அவள் ஏதோ கூற வருவதற்குள் அவளது உதவியாளர் வந்து ,” மேடம் ஏசிபி சார் வந்துருக்காரு. அர்ஜெண்டா உங்களை பார்க்கணும்னு சொல்றார்.” என்றார்.

ஒரு கணம் யோசித்து விட்டு, “ வரச் சொல்லுங்க” என்றாள்

உள்ளே நுழைந்த ஆதவ் அவளுக்கு சல்யூட் அடித்து விட்டு ஒரு கோப்பினை அவளிடம் கொடுத்தான்.

ஏதேச்சையாக திரும்பியவனின் பார்வையில் விழுந்தான மிருகேந்திரன். 

அவனைப் பார்த்தவுடன் கை நரம்புகள் புடைத்துக் கொண்டு கிளம்பின. கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நின்றிருந்தான்  

மிருகேனும் ஆதவ்வை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“பசுபதியை அரெஸ்ட் பண்ணி அவனோட கல் குவாரிக்கும் சீல் வச்சாச்சு. இறந்தவங்க குடும்பத்துக்கு காம்பென்ஸேஷன் தரவும் ஏற்பாடு செய்தாச்சு‌ .அது சம்பந்தப்பட்ட ஃபைல் இது.” என்றான் விரைப்பாக.

“ குட்…ஃபர்தரா என்ன பண்ணனும்னு உங்களுக்கு மெயில் பண்ணுறேன். நீங்க போகலாம்.” என்றவள், “ ஒன் மினிட் ஆதவ். கேளம்பாக்கம் பஸ் ஸ்டாண்டை தாண்டி இருக்குற இந்த இடம் கவர்மெண்ட்டுக்கு சொந்தமானது தானே?” என்றவள் கோப்பினை அவன் புறம் நீட்டினாள்.

அதனை வாங்கி சரி பார்த்வன் , “எஸ் ..இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம் தான். ஏன் மேடம் ஏதாவது ப்ராப்ளமா?”என்றான் விருகேந்திரனை பார்த்தபடி.

“ ஒண்ணுமில்லை…சார் அந்த இடத்துலே மால் கட்டுறாராம். அப்ரூவலுக்காக அலையோ அலைன்னு அலையிறாரு. தெளிவு படுத்திக்க தான் கேட்டேன்.”என்றாள்

ஆதவ் நக்கலாக ,” தேடிப் பிடிச்சு அரசாங்கத்தோட நிலமா தான் எடுத்துட்டு வருவீங்களா சார்.” என்றான்.

பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் மிருகேந்திரன்.

“ இது அரசாங்கத்துக்கு சொந்தமான இடம் இல்லன்னு உங்களுக்கு நல்லா தெரியும். அது பொறம்போக்கு இடந்தான் . அநாவசியமான என்னைய அலைய விடுறீங்க” என்றான் சற்று காட்டமாக.

“பாருடா.. சாருக்கு கோபமெல்லாம் வருது‌. ஹலோ.‌.! அந்த இடத்தை அரசாங்கம் எடுத்துக்கறதுக்கான ஃப்ராசஸ் போயிட்டு இருக்கு. சோ அதை உங்களுக்கு அபரூவ் பண்ண முடியாது. வேணும்னா  வேற நல்ல இடமா பாருங்க. உங்களை மாதிரியான ஆட்களுக்கு அடிச்சு வாங்குறது தான் பழக்கமாச்சே. யாரு கிட்ட போனாலும் இந்த இடம் கண்டிப்பா அப்ரூவல் ஆகாது உங்களுக்கு ‌ . திருட்டு , மொள்ளமாரி கும்பலுக்கெல்லாம் சொன்ன உடனே இடத்தை தூக்கி கொடுத்துட முடியாது… வேற இடம் பாத்துட்டு வந்து அப்ரூவல் வாங்கிக்கோங்க. எல்லாம் திருட்டு காசு தானே. அதுக்கு  எதுக்கு இவ்வளவு பில்டப்?” என்றான் அலட்சியமாக.

“ மேடம்…நான் உங்க கூட தான் பேசிட்டு இருந்தேன். தேவையில்லாம ஏபிசி சார் இந்த விஷயத்துல தலையிடுறாரு..அது நல்லதுக்கு இல்லன்னு சொல்லி வைங்க.” என்றான்.

ஆதவ்வும் கீதாஞ்சலியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

மேசையில் இரு கைகளையும் ஊன்றியவன் ,” கடைசியா கேக்குறேன் மேடம். இந்த இடத்துக்கு அப்ரூவல் கொடுக்க முடியுமா? முடியாதா?” என்றான்  கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு.

“என்ன மிரட்டிப் பாக்குறீங்களா?  சாரி மிஸ்டர் மிருகேந்திரன். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.” என்றாள் ஆதவ்வை விட அலட்சியமாக.

இருவரையும் ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவன் பேன்ட் பாக்கெட்டில் கைகளை நுழைத்துக் கொண்டு ,  “ஓகே ..க்யூட் சிப்லிங்ஸ்.. இடத்தை தான் குடுக்க மாட்டேனுட்டீங்க. பரவாயில்ல . அதை நான் பாத்துக்குறேன். அடுத்த ப்ராஜெக்ட் ல சந்திக்கலாமா ? பை…” என்று கூறி நகர முயன்றவனின் தோளைப் பிடித்து நிறுத்தினான் ஆதவ்.

“ என்ன ஏ சி பி சார்…என்ன வேணும்?” என்றான்.

“ என்னது அது?அடுத்த ப்ராஜெக்ட்?”

“அதை உங்க கமிஷ்னர் மேடம் கிட்டயே சொல்லிருக்கேன் கேட்டு தெரிஞ்சிக்கோங்க..” என்று கூறியவன் தனது சட்டையில் இருந்து ஆதவ்வின் கரங்களை எடுத்து விட்டவன் அவனை  பார்த்து , “ இட்ஸ் எ ஓபன் சேலன்ஞ்…கேட்ச் மீ…ஆஃப் யூ கேன்.” என்று கூறி கண் சிமிட்டியவன்  தனது குளிர் கண்ணாடியை   மாட்டிக் கொண்டு வெளியேறினான்.

அவன் சென்ற பாதையை வெறிக்க பார்த்திருந்தவளின்‌அருகில் வந்து நின்ற ஆதவ், “என்ன சொல்லிட்டு போனான் கீதுக்கா? என்ன ஓபன் சேலன்ஞ்?” என்றான்.

தலையை மட்டும் திருப்பி தமையனை முறைத்தவள் “ கால் மீ மேடம்.” என்றாள்‌

“ ஓ..சாரி மேடம்..என்ன சேலன்ஜ்? என்ன சொல்லிட்டு போறான்?” என்றான்.

“ ம்ம்…ஐ வில் டெல் யூ லேட்டர்… யூ மே கோ நவ்” என்று கூறி விட்டு கோப்பினை பார்க்க ஆரம்பித்தாள்..

அவள் மனதில் என்ன ஓடுகின்றது என்பது தெரியாமல் அவளை பார்த்து விட்டு வெளியே வந்தவனின் அலைப்பேசி ஒலி எழுப்பியது.

எடுத்துப் பார்த்தான்.

மோகனா தான் அந்த குறிப்பிட்ட செயலியிலிருந்து  குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தாள்.

“ ஹாய் டியர்…” என்ற குறுஞ்செய்தி இதய வடிவிலான ஈமோஜியை தாங்கி வந்திருந்தது.

அதைப் பார்த்தவனின் இதழ்கள் சற்று தாராளமாகவே விரிந்து கொண்டது.

பதிலுக்கு அவனும் ஒரு குறுஞ்செய்தியை தட்டி விட்டுவிட்டு காவல்துறை வாகனத்தில் ஏறி அமர்ந்தான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top