அத்தியாயம் -3

வண்ண விளக்குகளால் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த ரெஸ்டோ பார்.

டி ஜேவில் ஆங்கிலப் பாடல்   தமிழ் பாடல் என மாறி மாறி ஒலித்து அந்த இடத்தையே அதிர வைத்துக் கொண்டிருக்க, ஆண் பெண் வயது வித்தியாசமின்றி நடனம் ஆடிக் கொண்டிருந்தனர்.

சற்று ஓரமாக போடப்பட்டிருந்த நீண்ட மேசையில் சிறு சிறு கோப்பைகளில் மது வகைகள் நிரப்பப்பட்டிருநதது‌

அதனருகே இருந்த நாற்காலியில்  கால் மேல் கால் போட்டுக் கொண்டு கையில் மதுக் கோப்பையுடன் பார்வையை சுழல விட்டுக் கொண்டிருந்தான்  ஆதவ் ஆத்ரேயன்.

அவனது கூரிய பார்வை அங்கிருந்தவர்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

அனைவரையும் வட்டமடித்துக் கொண்டு வந்தவனது பார்வை ஓரிடத்தில் நிலைத்தது.

நவநாகரீக மங்கையொருத்தி அங்கு அமர்ந்திருந்த ஐம்பது வயதை தாண்டிய பெரியவருடன் நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள்.

தொடை வரை மட்டுமே இருந்த அவளது உடை, பின் பக்கமும் முன் பக்கமும் சற்று தாராளமாகவே இறங்கி அவளது அங்க வளைவுகளை அழகாக எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது.

ஒய்யாரமாக கால் மீது கால் போட்டுக் கொண்டு அமரந்திருந்தவளின் விரல்கள் அவரது முகத்தில் கோலமிட்டு கொண்டிருந்தது.

“ ஹாய்…பேப்..யூ ஆர் லுக்கிங் சோ ஹாட்…வாட் அபௌட் டுடேஸ் நைட்..? “ என்று வழிந்து கொண்டே அவளது தொடையில் கை வைத்தார் அப்பெரியவர்.

மேலும் முன்னேற முயன்ற அவரது கரங்களை லாவகமாக இறுகப் பிடித்துக் கொண்டு கிளுக்கிச் சிரித்தாள் அம்மங்கை.

அவரது கேள்விக்கு பதில் கூறாமல்,  “ஷால் வீ டான்ஸ்… டார்லிங்..?” என்று கிறக்கமாக கூறியவள் அவரது கன்னத்தை கிள்ளி அந்த  பெரிய மனிதரிடம் தனது கரங்களை  நீட்டினாள்.

வெண்டைப்பிஞ்சு விரல்கள் நகச்சாயம் பூசப்பட்டு அழகாக நீண்டிருந்ததை பார்த்தவர் வாயெல்லாம் பல்லாக, “ஷூயோர்.. ஹனி…” என்று கூறி அவளது கரங்களைப் பற்றிக் கொண்டு நடனமாடத் தொடங்கினார்.

மிடறு மிடறாக மதுவை அருந்திய படி இவற்றையெல்லாம் சற்று‌ தொலைவிலிருந்து  பார்த்துக் கொண்டிருந்தான் ஆதவ்.

அமர்ந்திருந்த வாக்கிலேயே‌ அவனுக்கு பின்னாலிருந்த மேசையில்‌‌ இரு கைகளையும் நன்றாக ஊன்றிக் கொண்டு பார்வையால் அம்மங்கையை தலை முதல் கால் வரை அலசி ஆராய்ந்தான். இதழில் உறைந்த ஏளனச் சிரிப்புடன் அவள் மீது ஒரு அலட்சிய பார்வையை வீசினான்.

அவனது அலைப்பேசி தனது இருப்பைக் காட்ட ஒலிக்கவே, எடுத்து பார்த்தான்.

“ ஜானு‌ டார்லிங்  காலிங்…” என்று வர , கையிலிருந்த கோப்பையுடன் மெதுவாக எழுந்தவன்  ஆடிக் கொண்டிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு   நகர்ந்தான்.

அந்தப் பெரிய மனிதருடன் ஆடிக் கொண்டிருந்த அம்மங்கை ஆடியவாறே  எதிர்பாராத விதமாக அவன் மீது வந்து மோத, கோப்பையிலிருந்த மது அவனது சட்டையில் கொட்டியது.

கோபமாக, “ யூ…இடி..” என அவன் ஆரம்பிக்கும் முன்பே, “ஹேய்.. ஹேண்ட்சம்…ஐ யம் ரியலி சாரி….யா. தெரியாம பட்டுடுச்சு…கூல்…கூல்” என கண்ளை சுருக்கி கூறியவள், அவனது தோளினைத் தட்டி விட்டு நடனத்தை தொடர்ந்தாள்.

அவளை முறைத்து விட்டு அலைப்பேசியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் ,  “சொல்லு ஜானு டார்லிங் “ என்றபடி அங்கிருந்த டிஷ்யூவினால் சட்டையில் கொட்டியிருந்த மதுவை  துடைத்தான்.

“ எங்க ஆதவ் இருக்க?”

“ ம்மா…என்ன வேணும் சொல்லுங்க?” என்றான் அலுப்புடன்.

“ ம்ம்ச்…ரொம்ப தான்‌ சலிச்சிக்குற ஆதவ்..உன்னோட வாட்ஸ்அப்க்கு ஒரு பையனோட ஃபோட்டோ அனுப்பியிருக்கேன். எப்படியிருக்கான்னு பாரு…”

“ எனக்கு எதுக்கும்மா…பையனோட‌ ஃபோட்டோ…ச்சீ…டூ பேட் ஜானு நீ…” என்றான் உதட்டில் சிறு குறும்புடன்.

“ ஏண்ணா‌…இவன் ஏதோதோ உளர்றான்….நீங்களே என்னன்னு சொல்லுங்க…” என்றவள் ருத்ரனிடம் அலைப்பேசியை கொடுத்தாள்.

அலைப்பேசியை வாங்கியவன்,  டேய்…எங்க பஃப்புல இருக்கியா?”என்றான் சரியாக.

“ ம்ம்…இல்ல…ல்ல..ஆனா…ஆமா..” என்றான் .

“ ம்ம்…ரொம்ப ஓவரா போயிடாத…. கீதாஞ்சலிக்கு ஒரு வரன் வந்துருக்கு. பையன்  ஆர்.ஆர் டிரேடர்ஸோட ஓனர் மிஸ்டர் வளவனோட ஒரே சன் விதேஷ்…சொந்தமா ஆர்கானிக் ப்ராடெக்டஸ் ரீடெய்லீங்கும், , மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ் மேன்யூபேக்சரிங் கம்பெனியும் நடத்துறான். என் வகையில் நான் விசாரிச்சு வரைக்கும் நல்ல பேஃமிலியா இருக்காங்க. பையனும்  நல்ல பையனா இருக்கான். இருந்தாலும் நீ கொஞ்சம் விசாரிச்சு பாரு…ஆதவ்..” என்றான் ருத்ரன்.

“ அது இருக்கட்டும். கீதுக்கா கிட்ட கல்யாணத்தை பத்தி பேசுனீங்களா? அவங்களுக்கு ஓகேன்னா மட்டும் ப்ரோசீட் பண்ணுங்க…” என்றபடி சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்.

“ அதெல்லாம் பேசிக்கலாம் ஆதவ்…”

“ம்ம்ச்…முதல்ல கீதுக்காட்ட பேசி ஒரு முடிவுக்கு வாங்க…அப்பறம் நான்‌ பையனைப் பாக்குறேன்..” என்ற படி புகையை இழுத்து வெளியிட்டான்.

“ சரி ஆதவ்…” என்று கூறி அழைப்பை துண்டித்தான் ருத்ரன்.

புகையை இழுத்து வெளியிட்டுக் கொண்டே திரும்பவனின் பார்வையில் விழுந்தாள் அப்பெண்..

உள்ளே அப்பெரியவரிடம் இழைந்து கொண்டிருந்த அப்பெண்ணின் மீது அந்த பெரிய மனிதர் கைகளை போட்டுக் கொண்டு தள்ளாடியபடியே மேல் தளத்திற்கு சென்றார்.

அவருடன் சேர்ந்து அவளும் தள்ளாடியபடி மாடிக்கு சென்று அங்குள்ள அறையில் நுழைந்து கொண்டாள்.

அவளை பின்தொடர்ந்து சென்ற ஆதவ்வின் பார்வையில் அவள் அறையை சாற்றும் காட்சியே தென்பட்டது‌.

தாடையை தடவிய படி யோசனையுடன் அங்கிருந்த சோஃபாவில் அமர்ந்தான் ஆதவ்.

லேசாக சிவந்திருந்தன அவனது விழிகள். சோஃபாவில் இரு கைகளையும் விரித்து வைத்து தலையை  பின்னுக்கு சாய்த்து அமர்ந்திருந்தான்.

அரை மணி நேரம் கழித்து வெளியே வந்தாள் அப்பெண். 

அறையினுள் போகும் போது அறைகுறை ஆடையிலிருந்தவள் அறையை விட்டு வெளியேறும் போது டைட் ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கருப்பு நிற டீசர்டும் அதற்கு மேல் லெதர் ஜாக்கெட்டும் அணிந்து, தோள்ப்பையுடன் சுற்றுமுற்றும் பார்த்து விட்டு குளிர் கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியேறினாள் .

அங்கொன்று இங்கொன்றுமாக சில அறைகள் இருந்தன.  ஆனால் அனைத்தும் பூட்டியிருந்தது.

சற்று அதிகமாக மது அருந்தினாலும் நிதானமாகவே இருந்தான் ஆதவ்..  முட்டியில் கையை ஊன்றி  எழுந்து சென்று அந்த அறையை தட்டினான். யாரும் திறக்கவில்லை.

குமிழியில் கை வைத்து  நன்றாக இழுத்துத் திறந்தான். கதவு திறந்து கொண்டது.

உள்ளே நுழைந்தவன் பார்த்தது கட்டிலில் உருண்டு கொண்டிருந்த அந்தப் பெரிய‌ மனிதரை தான். 

அதிகமாக மது அருந்தியதால் எழக்கூட முடியாமல்  சட்டையின்றி வெறும் பேன்ட்டுடன் உருண்டு கொண்டு ஏதோ உளறிக்கொண்டிருந்தார்.

அவரருகில் வந்து நின்றவன் அவரது முகத்தருகே குனிந்து என்ன பேசுகிறார் என்பதை கவனித்தான்.

 *ஹாய்…ஹனி…டேக்…ஈ…. ட்… எவ்வ…வளவு…வே…ணூ….ம்னாலும். எடுத்துக்….கோ…. என்…ஜாய்‌,…ஈ..ஈ… சூப்…பரா…. ஆ..இருக்க….இந்தா…டூ…லேக்….ஸ்…மதிப்புள்ள..ஸ்விஸ்…வாட்..ச். பார்டனரோ…ட பண..ம்…அந்த பேஃக்ல …இருக்கு… அதுவும். வேணுமா? டே…க்…. இட்…டா…ர்..லி..ங்..உ….ம்…மா…கமா…ன்…வா…மம்ம்…வா…” என முத்தமிடுவது போல உதட்டை குவித்துக் கொண்டே எழ முயன்றவர் மீண்டும் பொத்தென்று மெத்தையில் விழுந்தார்.

நெற்றியை நீவி விட்டுக் கொண்டே அறையை சுற்றிலும் பார்வையை விட்டான்.

கண்ணாடி டீப் பாயில் ஸ்டிக்கி நோட்ஸ் ஒன்று ஒட்டப்பட்டிருக்க அதை எடுத்துப் பார்த்தான்.

“ பை மிஸ்டர் ஜொள்ளு பார்ட்டி…எல்லாத்தையும் எனக்கே கொடுத்துட்டீங்க..வீட்டுக்கு போக காசு வேணாம். அதான் இந்த நூறு ரூபாய்…டேக் இட் …என்ஜாய்…” என்றெழுதி அதன் கீழே உதட்டுச்சாயத்துடன் தனது இதழ் பதித்து முத்தம் வைத்து விட்டு கண்ணடிப்பது போன்று ஸ்மைலியை போட்டிருந்தாள்.

“ம்ம்…மொத்தமா உருவாம விட்டா…திருந்தாத ஜென்மங்க..” என்று முணுமுணுத்தவனின் இதழ்கள் அப்பெரிய மனிதரின் கோலத்தை கண்டு ஏளனமாக வளைந்தது.

ஸ்டிக்கி நோட்ஸை அவரது சொட்டைத்தலையிலேயே ஒட்டி விட்டு கீழே இறங்கி வந்தான் ஆதவ். 

அங்கிருந்த மேனேஜரிடம் சிசிடிவி பூட்டேஜை எடுத்து வைக்குமாறு கூறிவிட்டு வெளியேறினான்.

தனது காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வர இரவு பன்னிரெண்டை தாண்டிவிட்டது.

தன்னிடம் இருந்த சாவியை கொண்டு கதவை சத்தமில்லாமல் திறந்தவன்‌ மெதுவாக மாடியேறினான்.

“ நில்லு டா…” என்ற குரல் கேட்கவும் அப்படியே படிக்கட்டில் நின்றான்.

படிக்கட்டில் ஏறி அவனருகே வந்து நின்றாள் கீதாஞ்சலி.

“எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டியா ஆதவ்…”

“ என்னத்த கேக்கணும் கீதுக்கா..?” என்றான்.

கண்கள் சிவந்து, தலை கலைந்து முன்னிரு சட்டைப் பட்டன்கள் திறந்து கிடந்தது. கண்கள் தூக்கத்திற்கு ஏங்கியது. கண்களை மூடியபடியே பின்னிருந்த சுவற்றில் சாய்ந்து நின்றான்.

“ குடிக்காதன்னு எத்தனை தடவை சொல்றது…? ஏ.சி பி யா இருந்துட்டு ரூல்ஸை மீறி  குடிச்சிட்டு வண்டியை ஓட்டிட்டு வந்துருக்க?” என்றாள் எரிச்சலுடன்.

அவள் முன்னே கை நீட்டி தடுத்தவன்,  “அக்கா…ப்ளீஸ்…தயவு செஞ்சு அட்வைஸ் பண்ணி டார்ச்சர் பண்ணாத..எனக்குத் தூக்கமா வருது…பை..” என்றபடி மாடியில் ஏறினான்.

“ சாப்டியா டா”

“ ப்ரைட் சிக்கன் ரைஸ்…ஸ்பைசி மட்டன் சுக்கா..ம்ம்..செம்ம டேஸ்ட்..”

“ ஏன்டா..பாவம் டா“

“ஏது ஆடும் , கோழியும் பாவமா?” என்றான் நக்கலாக.

“ என்னவோ பண்ணு. ஆனா இன்னும்  ரெண்டு‌ நாள்ல டியூட்டி ஜாயின் பண்ணனும் டா…இப்படியே பண்ணிட்டு இருக்காத.. தாடியை எடுத்துட்டு க்ளீன் ஷேவ் பண்ணி நீட்டா வா ” என்று உரக்கக் கூறினாள்.

அவளை திருப்பிப்  பார்த்  சிரித்தவன்,  “எவனையாவது நான் திரும்பவும் என்கவுண்டர் பண்ணுவேன்…திரும்பவும் நீ சஸ்பென்ஷன்  கொடுப்ப… இதென்ன புதுசா…போ..போ..போய் தூங்கு…குட் நைட் “ என்று கூறி விட்டு லேசான தடுமாற்றதுடன் அறைக்குள் நுழைந்தவன் தொப்பென்று கட்டிலில் விழுந்தான்.

அவனது  அறையை திறந்து கொண்டு உள்ளே வந்தவள்  கட்டிலில் குறுக்காக படுத்திருந்தவனை நேராக படுக்க வைக்க முயன்றாள்.

“ மாடு மாதிரி வளர்ந்திருக்கான்…ப்பா…என்ன கனம்..? “ என முணுமுணுத்தவாறே அவனது சட்டையை மட்டும் கழற்றிவிட்டு நேராக படுக்க வைத்தவள் குளிரூட்டியை போட்டு விட்டு கதவைச் சாத்திச் சென்றாள்.

கப்பலில்  முன்புறம் நின்று கடலை வெறித்திருந்தான் மிருகேந்திரன். 

பல கோடி மதிப்புள்ள அரிய வகை வைரங்ளை  கைமாற்றி விட வேண்டும். 

இம்முறை தங்கத்தை கை மாற்றி விடுவதே மிகப்பெரிய சவாலாக இருந்தது. 

தங்கத்தை உருக்கி, நிறத்தை மாற்றி , விலை மலிவான பாதுகாப்பு சாதனத்தில் அதே நிறத்தில் ஒட்டி , என ஏகப்பட்ட வேலைகளை செய்ய வேண்டியதாய் போயிற்று..

முன்பு போல் எளிதாக சரக்குகளை கைமாற்றி விட முடிவதில்லை. 

எவ்வளவு சாதூர்யமாக செயல்பட்டாலும் ஆதவ்வும், கீதாஞ்சலியும் மோப்பம் பிடித்துக் கொண்டு வந்து வந்து விடுகிறார்கள். 

இருவரின் கண்ணிலும் மண்ணைத் தூவி விட்டு ஒவ்வொரு முறையும் பொருட்களை மாற்றி விடுவதற்குள் போதும் போதுமென்றாகி விடுகிறது. 

இதற்கு ஏதாவது முடிவு கட்ட வேண்டும் என் நினைத்துக் கொண்டிருந்தான்.

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு நினிறிருந்தவனின் அருகில் வந்த நின்ற அடியாள் ஒருவன் , “ அண்ணே..! என்று தலையை சொறிந்தான்.

“ என்ன‌ டா..”

“ பத்து நாளு இடுப்பொடிய வேலை அதிகம்.. உடம்பெல்லாம் வலிக்குது. அதனால…ம்ம்..” என இளித்தான் ‌

“ போ போய் தொலை…அளவா போட்டுத் தொலை..முழுசா குடிச்சிட்டு மட்டையாகிடாதீங்க..” என்றான் அழுத்தமாக.

“ அண்ணே…உங்களுக்கு?” என்றவனை தீயென முறைத்தான் மிருகேந்திரன்.

“ டேய்…அவருக்கு தான் இந்த பழக்கமெல்லாம் இல்லன்னு தெரியும் லா…அப்பறம் என்னத்துக்கு கோட்டிக்காரத்தனமா பேசிட்டு இருக்கவ….அவரு சுத்த சைவம் டா…ஒரு உயிரை எல்லாம் கொன்னு சாப்பிட மாட்டாரு. நீ வேற ஏதாவது பேசி உன்னோட உசுரை விட்டுடாத…” என்று நக்கலடித்தவன் மீது அருகிலிருந்த தென்னம் மட்டையை விசிறியடித்தான் மிருகேன்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top