அத்தியாயம் -2

துறைமுகத்திலிருந்து சற்று தொலைவில் நீரில் தத்தளித்தபடியே நின்றிருந்தன சில படகுகள்.

எங்கும் இருள் சூழ்ந்திருக்க நிலவின் வெளிச்சம் மட்டுமே அலைகளில் மிதந்து கொண்டிருந்தது.

“ ம்ம்…சீக்கிரம் ‌சீக்கிரம் வாங்க டா…எத்தனை பாக்ஸ் இருக்கு?அதுக்கு தகுந்த மாதிரி படகை எடுத்துட்டு வரச் சொல்லணும் டா.” என்றான் ஒருவன்.

“ நூத்தி பத்து பாக்ஸ் டா. எல்லாமே பெரிய சைஸ் தான்… எத்தனை படகு தேவைப்படும். அந்தாண்ட நிக்குற கப்பல்ல கொண்டு போய் கரெக்டா சரக்கை சேர்க்கணும்..” என்றான் மற்றொருவன்.

அதற்குள் சிறு சலசலப்பு கேட்க திரும்பிப் பார்த்தனர் இருவரும்.

கருப்பு நிற சட்டையும், ஜீன்ஸூம் அணிந்து தலையை ஜெல் வைத்து படிய வாறி, இடது  காதில் சிவப்பு நிற கடுக்கண் அணிந்து ,ஆறடிக்கும் சற்று அதிகமான உயரத்தில் திடகாத்திரமான உடற்கட்டுடன் படபடவென  படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான் மிருகேந்திரன்.

கைக்காப்பினை மேலே இழுத்து விட்டுக் கொண்டே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த நீண்ட கன்டெய்னர் மீது ஏறி வந்தான்.

“ என்னடா…எல்லாம் சரியா இருக்கா?” என்றபடி சுற்றிலும் பார்வையை சுழல விட்டான். 

அவனது கூரிய பார்வை இருளை கிழித்துக் கொண்டு அலசி ஆராய்ந்து கொண்டிருந்தது.

“ எல்லாம் ரெடிதான்ணே…நூத்தி பத்து பாக்ஸ்..இருக்கு. ஆனா இருபத்தஞ்சு படகு தான் இருக்கு… மீதியெல்லாம் கடலுக்கு போயிருக்கு…கிடைக்கலை…” என்றான் ஒருவன்.

தாடையை தடவியபடி யோசித்தவாறே இங்குமங்கும் நடந்து கொண்டிருந்தான்.

“ சரி நாலு ட்ரிப் அடிக்க வேண்டியது தான் வேற வழியே இல்லை…ஜாக்கிரதை…ஒரு பாக்ஸ் மிஸ் ஆகக்கூடாது சரியா…கவனமா படகுல ஏத்தணும் . பாரம் தாங்காம சாயறதுக்கு வாய்ப்பிருககு…நேரம் கொஞ்சமா தான் இருக்கு…ம்ம்.சீக்கிரம் ஆகட்டும்…” என்றபடி படகுகளை  கரையினருகே  இழுத்துக் கட்டினான்.

மளமளவென்று அங்கிருந்த ஆட்கள்  தண்ணீர் உட்புகாத பெரிய பெரிய அட்டைப்பெட்டிகளை எடுத்து படகில் வைத்தனர்.

இடுப்பில் கை வைத்துக் கொண்டு அவற்றையெல்லாம் பார்வையிட்டு கொண்டிருந்தான் மிருகேந்திரன்.

முதலில்  இருபத்தைந்து படகுகள் கப்பலுக்கு சென்று விட்டு திரும்பியிருந்தது.

அடுத்த இருபத்தைந்து பெட்டிகளை எடுத்து வைக்கும் போது எங்கிருந்தோ திடுமென்று போலீஸ் வாகனம் உள்ளே நுழைந்தது.

மிருகேனின் ஆட்கள் பதறத் தொடங்கினர்.

“ஷ்ஷ்….ஏன் டா பதறுறீங்க? அமைதியா இருங்க டா.” என்று உறுமினான்.

இருபுறமும் பார்வையிட்டுக் கொண்டே கண்டெய்னர்கள் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு வந்தவள் காவல்துறை வாகனம் நிற்பதற்குள்ளாகவே அதிலிருந்து  பாய்ந்து இறங்கினாள் கீதாஞ்சலி.

தூரத்திலிருந்தே அவளை பார்த்து விட்ட மிருகேன், ‘ஓஓஓ… கமிஷ்னரம்மா வா…வரட்டும் வரட்டும் ‘ என முணுமுணுத்துக் கொண்டான்.

“ஒரு இடம் விடாம எல்லா இடத்தையும் சேர்ச் பண்ணுங்க…ம்ம்..க்விக்…” என்றவள் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டே வந்தாள்.

“கமிஷனர் மேடம்.. வணக்கம்…” என கண்டெய்னர் மீதிருந்து அவன் அழைக்க, கீதாஞ்சலி சுற்றுமுற்றும் பார்த்தாள்.

“ இங்க….மேலே பாருங்க மேடம்….” என்று கூற அவளோ தான் நின்றிருந்த இடத்தில் இருந்து மேலே பார்த்தாள்.

“ கொஞ்சம் முன்னாடி வந்து பாருங்க மேடம்..இங்க..இங்க…கன்டெய்னர் மேல…” என்றான்.

சற்று முன்னால் நகர்ந்து வந்து நிமிர்ந்து பார்த்தாள்.

இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு நின்றிருந்தான் மிருகேன்.

“ என்ன விஷயம் மேடம்.. இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க?”

“ கீழ வாங்க…மிஸ்டர்..” என்றாள்.

“ என்ன சொல்றீங்க…? கேக்கல…இன்னும் கொஞ்சம் சத்தமா…” என்றான்.

“இடியட்…” என வாய்க்குள் முணுமுணுத்து விட்டு, “ கீழே  இறங்கி வாங்க‌ மிஸ்டர் மிருகேன்…” என்றாள் உரக்கமாகவே..

“ இதோ…” என்றவன் படபடவென அங்கு போடப்பட்டிருந்த ஏணிப்படிக்கட்டுகள் வழியாக இறங்கி வந்தான்.

அவளெதிரே வந்து நின்றவன் அவளை தலை முதல் கால் வரை கூர்ந்து பார்த்தான். அவளும் அவனைத்தான் பார்த்திருந்தாள்.

விழிகள் இரண்டும் கூரிய வாள் போல வெட்டிச் செல்ல தலையை உலுக்கிக் கொண்டவன் , “ என்ன விஷயம் இந்த அர்த்த ராத்திரியில இங்க வந்துருக்கீங்க?” என்றான்.

அவன் முதுகிற்கு பின்னால் எட்டிப் பார்த்தவள் , “ அந்த படகுலயெல்லாம் என்ன இருக்குது? இத்தனை படகும் இந்த நேரத்துல எங்க போகுது…?” என்றாள்.

“ அது வந்து…வந்து..எப்படி உங்க கிட்ட சொல்றது?” என்றான் போலியான பயத்துடன்

 “ ஓவரா பெர்பார்மன்ஸ் பண்ணாதீங்க… உண்மையை மட்டும் சொல்லுங்க?” என்றாள் லத்தியை அவனது தோள்பட்டையை தட்டியபடி .

அவன் அமைதியாக நின்றிருந்தான்.

“ என்னதிது இவ்வளவு பெரிய பாக்ஸ்…பாக்ஸ் ல  என்ன இருக்கு.? ஓபன்‌ பண்ணுங்க..” என்றாள்.

“ வேண்டாம்‌ மேடம்… ஓபன் பண்ணினா உங்களுக்கு தான் சங்கடமா இருக்கும்…” என்றான் கம்மிய குரலில்.

“ அதை நான் பாத்துக்குறேன்…என்ன இருக்குன்னு வந்து  ஓபன் பண்ணிக் காட்டுங்க..”என்று கூறிக்கொண்டே   அவனது சட்டைக்காலரை பிடித்து இழுத்துக்கொண்டு  நகர முயன்றவளின் கையை எடுத்து விட்டவன் , “ நான் உங்க கிட்ட ரொம்ப மரியாதையா தானே பேசுறேன்…நீங்க மட்டும் ஏன் சட்டையில் கை வைக்குறீங்க? ம்ம்…நானே வர்றேன். எங்கயும் ஓடி ஒளிய மாட்டேன்..” என்றவன் விலகி முன்னால் நடக்க அவன் பின்னே கீதாஞ்சலி நடந்தாள்.

படகில் ஏறியவன் அதிலிருந்த அட்டைப்பெட்டியை தன் புறமாக திருப்பிக் கொண்டு “ டேய்…கத்திரிக்கோல் கொடுங்க டா..” என்றான்.

நேர்த்தியாக கட்டப்பட்டிருந்த பெட்டியை கத்திரிக்கோல் கொண்டு பிரித்தான்.

அதற்குள்‌ சிறு சிறு பெட்டிகள் இருக்க “ம்ம்…இதையும் திறங்க..” என்றாள் விரைப்பாக

“ ஓகே… மேடம்…சட்டையை மாதிரியே நீங்களும் ரொம்ப விரைப்பாக இருக்கீங்க “என்று கூறி தோளைக் குலுக்கி விட்டு வேகமாக திறந்தான்.

அட்டைப்பெட்டியிலிருந்த  பொருளைப் பார்த்தவளின் முகம் அஷ்டகோணலாகியது.

“ என்னதிது …?” என்றாள் எரிச்சலுடன்

“ எல்லாமே உள் நாட்டு தயாரிப்பு…எங்க கம்பெனில தயாரான  சென்ட் பர்சண்ட் சேஃபான காண்டம்ஸ்…குவாலிட்டியை பத்தி நானே சொல்லக்கூடாது…சும்மா…. எவ்வளவு ஸ்பீடா இருந்தாலும்…ஒண்ணுமாகாது…செக் பண்ணலாமா?” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

“ வாட்‌யூ மீன்?” என சீறினாள்.

“ ஐ மீன்…எல்லாத்தையும்…எல்லா பாக்ஸையும் செக் பண்ணலாமான்னு கேட்டேன்…மேடம் . இதுக்கு ஏன் இவ்வளவு கோபப்படுறீங்க?” என்றான் நமட்டுச் சிரிப்புடன்.

அவளுக்கோ முகம் சிறுத்து போனது.

எனினும் எரிச்சலைக் காட்டிக் கொள்ளாமல், “ அதோ அந்த பாக்ஸை ஓபன் பண்ணுங்க…கமான் எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க..” என்றாள் சுற்றும் பார்த்தபடி.

“ இதோ…ஒபன் பண்ணுறேன் மேடம்….நம்ம கம்பெனி குவாலிட்டி அண்ட் வெரைட்டீஸை பாருங்க மேடம்…என்ன கலர் வேணும்? என்ன ஃப்ளேவர் வேணும்…? கேளுங்க…எல்லாம் நம்ம கிட்ட கிடைக்கும். அப்பறம் உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா மேடம்.?” என்றவனை கொலைவெறியோடு பார்த்தாள். 

பளாபளாவென்று  பல்வேறு வண்ணங்களில் சிறு சிறு பாக்கெட்டுகள் இருந்தது.

கையிலிருந்த லத்தியை வைத்து பாக்கெட்டில் இருந்தவைகளை திருப்பிப் பார்க்க , “ மேடம் இதெல்லாம் தீண்டத்தகாத பொருள் இல்ல மேடம்… கைலயே எடுத்துப்‌ பார்க்கலாம்…ம்ம்..இதோ பாருங்க…” என்றவன் ஒன்றை அவளிடம் நீட்ட ,” இடியட்…” என்றவள் படகை விட்டு கீழே இறங்க முயன்றவள் ஏதோ தோன்ற ,”படகை கொஞ்ச தூரத்துக்கு விடுங்க…” என்றாள்.

பார்வையால் அவளது புத்திசாலித்தனத்தை மெச்சிக் கொண்டான் மிருகேன்‌

இன்னும் ரெண்டு காவலர்களையும் அழைத்து கொண்டவள்  படகை செலுத்த சொன்னாள்.

மோட்டார் படகு என்பதினால் சற்று வேகமாக சென்றது. சற்று தூரத்தில் ஒரு கப்பல் நின்றிருப்பதை கவனித்தவள் அங்கு படகை‌ விடுமாறு கூறினாள்.

கப்பல் அருகில்  படகு சென்றதும் மிருகேந்திரன் படகிலிருந்து கப்பலுக்கு குதித்தான்.

அவனைத் தொடர்ந்து மிருகேனின் ஆட்களும் காவலர்களும் குதித்து விட கீதாஞ்சலி சற்று தடுமாறினாள்.

காவலர்கள் அவள் இறங்குவதற்காக கையை நீட்ட , “ இப்படி நின்னு கையை கொடுத்தீங்கன்னா அவங்க கடல்ல தான் விழுவாங்க…நகருங்க..” என்றவன் அவர்களை தள்ளி நிற்க வைத்து விட்டு அவள் கப்பலினுள் இறங்குவதற்கு வாகாக நின்று கொண்டு கையைக் கொடுத்தான்.

படகு அங்குமிங்கும் ஆடிக்கொண்டிருக்க தடுமாற்றத்துடன் அவனது கைகளை இறுகப்பிடித்துக் கொண்டாள்.

மெல்ல படகிலிருந்து கப்பலுக்கு குதித்தாள் அவன் மீது மோதுவது போல வந்து நகர்ந்து நின்றாள்.

கப்பலைச் சுற்றி பார்வை சுழல விட்டவள், ” இந்த கப்பல் எங்க போகுது..?  இது ஏன் கரைக்கு வராம இங்கேயே நிக்குது…அதுவும் போர்ட்டுக்கு (port)  வெளியேவே நிக்குது..?” என்றாள்

“இந்தக் கப்பல் தாய்லாந்துக்கு போகுது.. மேடம். இந்தாங்க..அங்க கொண்டு  போறதுக்கு உண்டான டாக்குமெண்ட்ஸ்… சிக்னல் கிடைக்கல அதான் இங்க நின்னுட்டு இருக்கு. சீக்கிரமா  ப்ராடெக்ட்ஸையெல்லாம் டெலிவர் பண்ணனும். டைம் இல்லை. அதான் இங்கேயே எல்லாத்தையும் ஏத்திட்டேன்.” என்று அவளுக்கு விளக்கம் கொடுத்தவன்  தாய்லாந்தில் பொருளை விற்பதற்காக அனுமதிப் பெற்ற சான்றிதழ்களை அவளிடம் நீட்டினான்.

அனைத்தையும் சரி பார்த்தவள் அங்கிருந்த நீல நிற பெட்டியை பார்த்து கண்களை சுருக்கினாள்.

அதனருகே வந்து நின்றவள் அவனை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ இதை ஓபன் பண்ணுங்க…” என்றாள்.

“ மேடம் இதையுமா?”

“ காதுல விழலயா?” என கடுகடுத்தாள்.

*ஓகே மேடம்…” என்றவன் பெட்டியை திறந்தான்

*சாக்லேட்டோ..?” என்றாள்

“ஆமாம் மேடம்…எல்லாமே மூலிகை சாக்லேட்…” என்பதற்குள் ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள்.

“ அய்யய்யோ…சாப்ட்டுடீங்களா?” என்றான் ‌பதட்டமாக.

வாயில் போட்டு மென்று கொண்டே , “ஏன் பதறுறீங்க? சாக்…சாக்லெட் குள்ள என்ன வச்சி கடத்துறீங்க?” என்றாள்.

“ அய்யோ அதெல்லாம் நாங்க எதையும் கடத்தல மேடம்…நீங்க சாப்பிட்டது வயாகரா மாதிரியான மூலிகை சாக்லேட்…இதை சாப்பிட்டா ம்ம்…செம்மயா…அந்த விஷயம் நடக்குமாம்…இதைப் போய் இப்ப எதுக்கு மேடம் சாப்ட்டீங்க? இப்ப நான் என்ன பண்ணுவேன்…?” என போலியாக அவன் பயப்பட அவனைப் பார்த்து முறைத்து விட்டு நிதானமாக அவனைப் பார்த்துக் கொண்டே கப்பலின் பின்பக்கமாக  சென்றவள் பார்வையிடும் சாக்கில் ஓரமாக சென்று சாக்லேட்டை துப்பினாள்‌.

அவள் முன்பு முரட்டுக்கரம் ஒன்று தண்ணீர் போத்தலை நீட்ட , அதனை வாங்க மறுத்தாள்.

“வாயைக் கழுவிட்டீங்கன்னா அதோட வீரியம் குறைஞ்சிடும்..இல்லன்னா…வீட்டுக்கு போனா ஒரே அவஸ்த்தையா இருக்கும்..பாவம் கல்யாணம் வேற ஆகல இன்னும்…” என்று கையிலிருந்த புல்லை பிய்த்துக் கொண்டே வெட்கத்துடன் கூற,  கடுப்புடன் தண்ணீர் போத்தலை வாங்கி வாயை நன்றாக கொப்பளித்துக் கொண்டாள்.

வேறு வேறு நிறத்தில் பெட்டிகள் இருக்கவே அனைத்தையும் திறக்கச் சொன்னாள்..

அடுத்து இருந்த சில பெட்டிகளில் எல்லாம் பாலுணர்வை  தூண்டக்கூடிய பொருட்களாக இருந்தன.

அதனைப் பார்த்து முகத்தை சுளித்துக் கொண்டே அவனை தீயென முறைத்தாள்.

“மேடம் ரொம்ப முகத்தை சுளிக்காதீங்க. இதுவும் ஒரு பிசினஸ் தான். எல்லாம் சட்டப்படி அரசாங்கத்தோட அனுமதியோட தான் நடத்துறோம். அசிங்கப்படுறதுக்கு ஒண்ணும் இல்லை . மனுஷன் சந்தோஷமா இருக்குறதே மூணே மூணு விஷயத்துல தான் ஒன்னு பணம், ரெண்டாவது சரக்கு, மூணாவது மேட்டர்… அவ்வளவு தான்..” என்று வியக்கியானம் பேசினான்.  

அவனது பேச்சை காதில் வாங்கிக் கொள்ளாமல் அங்கிருந்த பெட்டிகளையும்  பெரிய அளவு குடுவைகளையும் பரிசோதித்து பார்க்க  அவர்கள் தேடி வந்தது கிடைக்கவில்லை.

காவலர்கள் இருவரும் உதட்டை பிதுக்கி எதுவுமில்லை என்பது போல ஜாடை செய்ய ஒரு பெருமூச்சுடன் விருகேந்திரனை பார்த்தாள் கீதாஞ்சலி.

“வேற எதுவும் சந்தேகம் இருந்தா கேளுங்க மேடம்.நான் க்ளியர் பண்ணிடுறேன்… தாய்லாந்துக்கு இதெல்லாம் எதுக்கு போகும்னு உங்களுக்கே நல்லாத் தெரியும்..நான் சொல்ல வேண்டியதில்ல…எங்களோட எல்லா ப்ராடெக்டஸூம் பாஸ்ட் மூவிங் மேடம்..யூஸ் பண்ணுனவங்களுக்கு தான்  எங்க ப்ராடெக்டோட குவாலிட்டித் தெரியும்…சின்ன தப்பு கூட நடக்காத அளவுக்கு நாங்க ரொம்ப கேர் ஃபுல்லா இருப்போம்…கஸ்டமர் சாடிஸ்பிகேக்ஷன் முக்கியமில்லையா..” என்றான்.

அவளுக்கோ கடுப்பாக இருந்தது. 

நிச்சயமாக ஏதோ செய்து கொண்டிருக்கின்றான். 

ஆனால் ஆதாரமின்றி தெளிவாக செய்து முடிக்கின்றான். 

எந்த இடத்தில் தவற விடுகின்றோம் என்பது அவளுக்கு புரியவில்லை. 

சலிப்புடன் நேரத்தை பார்த்தாள் . 

காலை ஐந்து முப்பது. நள்ளிரவு முதல் விடியல் வரை முழுவதும் அலசி ஆராய்ந்து விட்டாள் ஆனால் அவளுக்கு கிடைத்த தகவல்படி தங்க பிஸ்கட்டுகள் எந்தப் பெட்டியிலும் கிடைக்கவில்லை.‌

கையைக் கட்டிக்கொண்டு நின்றிருந்தவனின் அருகில் வந்தவள், “ரொம்ப புத்திசாலித்தனமா நடந்துக்குறோம்னு நினைக்காதீங்க மிஸ்டர்..ஒரு நாள் கண்டிப்பா மாட்டுவீங்க..அன்னைக்கு இருக்கு உங்களுக்கு…” என்று பல்லைக் கடித்து கொண்டு கூறி விட்டு நகர்ந்தாள்.

“மேடம்…” என்று சத்தமாக அழைத்தான்.

“திரும்பி அவளைப் பாரத்தாள்‌

“ உங்க ஃப்ரதரை ரொம்ப கேட்டதா சொல்லுங்க…” என்றவன் பாக்கெட்டில் கை நுழைத்து நின்றான்.

“ இடியட்..” என‌முணுமுணுத்துக் கொண்டே காவல்துறை வாகனத்தில் ஏறியவள் மேலை கைப்பிடியை பிடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவனும் அவளை தான்‌ பார்த்துக் கொண்டிருந்தான்..

அவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு வாகனத்தை இயக்கச்  சொன்னாள்.

அவள் செல்லும் திசையை அவனது விழிகள் தொடர்ந்து கொண்டிருக்க அவனது அலைப்பேசி அலறி கவனத்தை கலைத்தது.

“என்னப்பா என்னாச்சு?”

“ கொஞ்ச  டிலே ஆகிடுச்சு. இன்னும் கொஞ்ச நேரத்தில சரக்கு கிளம்பிடும்… சரியான நேரத்துல அந்த பார்ட்டி கையில போய் சேரும். எல்லாமே காண்டம்ஸ் , சாக்லேட் பார்…எக்சட்ரா.. எக்சட்ரா வா தான் இருக்கு. அதுல இருந்து அவங்க எப்படி தங்கத்தை பிரிச்சு எடுத்துப்பாங்களோ அது அவங்க சாமர்த்தியம்…அவங்க கேட்ட அளவுக்கு தங்கம் இருக்கு…செக் பண்ணிக்க சொல்லுங்க…எந்த பொருளையும் தூர போடச் சொல்லாதீங்க..எல்லா பொருள்லயும் தங்கத்தை நல்லா பேஸ்ட் பண்ணி கலர் பண்ணி வச்சிருக்கேன். சின்ன சின்ன கலர் அட்டைப்பெட்டி , கலர் கலரா பொருளை சுத்தி வச்சிருக்குற கவர், இன்குலுடிங் காண்டம் …அண்ட் காண்டம் கவர்..புரியுதுங்களா?” என்றான் அழுத்தமாக.

எதிர்முனையில் கூறியதைக் கேட்டு தலையாட்டியவன் , “தனித்தனி பேங்க்ல வேற வேற பெயர்ல   பணத்தை டிபாசிட் பண்ணிடச் சொல்லுங்க…வச்சிடட்டுமா…இன்னும் கொஞ்ச நேரத்துல கப்பல் கிளம்பிடும்..”என்றவன் கலைத்து போடப்பட்டிருந்த அனைத்து பெட்டிகளையும் சரி செய்து வைத்தான். 

மீதியிருந்த பெட்டிகளும் சிறிது நேரத்தில் வந்துவிட கப்பல் தாய்லாந்தை நோக்கி புறப்பட்டது.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top