அத்தியாயம் -25

கீதாஞ்சலி தனது பயிற்சி மையத்திற்கு கிளம்பத் தயாராகிக் கொண்டிருந்தாள்.

அவள் கிளம்புவதற்கு முதல் நாள் இரவு அவசர வேலையிருக்கின்றது என்று வஜ்ரவேலின் இல்லத்திற்கு கிளம்பிச் சென்றான் மிருகேன்.

அவனை எளிதில் கிளம்ப விடவில்லை கீதாஞ்சலி. 

அவளிடம்  கொஞ்சி , கெஞ்சி தான் அவன் கிளம்ப வேண்டியிருந்தது.

ஆனால் எதிர்பாராத விதமாக மறுநாள் காலை வஜ்ரவேலிற்கு மாரடைப்பு ஏற்பட்டு விடவே மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில் வஜ்ரவேல் முன்னின்று கை மாற்றி விட வேண்டிய விலையுயர்ந்த அரிய வகை வைரங்களை பத்திரமாக கடல் வழியாக தைவான் நாட்டிற்கு கடத்த வேண்டும்.

மிருகேந்திரனுக்கு முன்பின் கடத்தல் தொழிலில் அனுபவம் இல்லை. 

ஆனால் உடனடியாக கைமாற்றி விட வேண்டிய கட்டாயம். வஜ்ரவேல் பொதுவாக யாரையும் நம்ப மாட்டார். 

முடிந்த அளவிற்கு தானே முன்னின்று  கடத்தல் பொருளை கைமாற்றி விட்டுவிட்டு பணத்துடன் வருவார். 

ஒரு நாள் கூட மிருகனை தனது தொழிலுக்கு பயன்படுதியதில்லை.

மிருகேன் இந்தத் தொழிலில் ஈடுபடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

எனவே அவனை மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தச் சொல்லி முழு பொறுப்பையும் அவனிடம் விட்டுவிட்டார்.

ஆனால் விதி அவனை வலுக்கட்டாயமாக கடத்தல் தொழிலில் நுழைய வைத்துவிட்டது.

வைரங்களை பத்திரமாக கை மாற்றி விட அவன் மிகவும் சாமர்த்தியமாக செயல்பட வேண்டியிருந்தது.

அனுபவமும் இல்லாததால் மிகவும் திணறி தான் போனான் மிருகேந்திரன்.

வஜ்ரவேலிற்கு மிகவும் நம்பிக்கைக்குரிய இருவர் மட்டுமே அவனுக்கு பக்கபலமாக நின்று  வஜ்ரவேல் இருந்திருந்தால் எவ்வாறு யோசித்திருப்பார் எவ்வாறு செயல்பட்டிருப்பார் என்பதை கூறி அவனை வழி நடத்தினர்.

 காவல்துறையினரிடம் சிக்காமல்  இந்திய எல்லையை கடக்க உதவினர். 

அதன் பின்னர் மிருகேன் தனது புத்திசாலிதனத்தினால் வெற்றிகரமாக அரிய வகை வைரங்களை தைவானிற்கு கொண்டு‌ சென்று  வேறேருவருக்கு கைமாற்றி விட்டான்.

வெற்றிகரமாக அவன் வேலையை முடித்து விட்டு ஊர் திரும்ப ஒரு  வாரத்திற்கு மேலாகியிருந்தது.

கீதாஞ்சலியைப்‌ பற்றிய நினைவு அவனது சிந்தைனையிலிருந்து வெகுதூரம் சென்றிருந்தது.

மிருகேன் ஊர் திரும்பியிருந்த நேரம் தான் வஜ்ரவேலிற்கு இருதய அறுவை சிகிச்சை நடந்து முடிந்திருந்தது.

வஜ்ரவேல் சிறிது உடல்நிலை தேறி வந்த பின்னரே கீதாஞ்சலியின் நினைவு வந்தது. 

மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டவன் அடித்துப் பிடித்துக் கொண்டு அவளது பயிற்சி மையத்திற்கு ஓடினான்..

கீதாஞ்சலி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தாள்.

பொதுவாக பயிற்சியில் இருப்பவர்களை யாரும் சந்திக்க இயலாது. கீதாஞ்சலியை சந்திக்க முயன்று தோற்று போனான் மிருகேன்.

அவளது அலைப்பேசி எண்ணிற்கு அழைத்து அழைத்து ஓய்ந்து போனான்.

அவள் தன்னை புறக்கணிக்கிறாள் என்பதே அவனுக்கு சில நாட்களுக்குப் பிறகு தான் புரிந்தது.

அதன் பின்னர் தனக்கு தெரிந்தவர்களை வைத்து  எப்படியோ அவளை சந்தித்தான்.

“சாரி கீது.. வஜ்ரவேல் அய்யாவுக்கு திடீர்னு உடம்புக்கு முடியாம போயிடுச்சு. அதனால தான் உன் கிட்ட சரியா பேச‌முடியல.. உன்னை சரியாவே கண்டுக்கல நானு.  என்‌ மேல கோபமா தான் இருப்ப நீ…ப்ளீஸ் அவருக்குன்னு யாரும் இல்லை. நான் தான் அவரை பார்த்தாகணும். அடுத்து நாம எப்ப மீட் பண்ணலாம் சொல்லு? இங்க நின்னு சரியா  பேச முடியல. நாம வீட்டுல போய் பேசிக்கலாம். நீ அடுத்து எப்ப வீட்டுக்குப் போவ சொல்லு?”என்றான்.

அவனை அழுத்தமாக பார்த்தவள் கைகளைக் கட்டிக் கொண்டு , “ நாம எதுக்கு பேசணும்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்? “ என்றாள் எரிச்சலாக.

“ம்ம்ச்…ஆராம்பிச்சிட்டியா? “ என்றவன் இடுப்பில் கை வைத்து சலிப்புடன் தலையை உலுக்கிக் கொண்டான்

“தெரியும் மிஸ்டர் …நாந்தான் உங்களுக்கு சலிச்சி போயிட்டேன்ல. இப்படித்தான் பேசுவீங்க…. போங்க சார் போய் உங்களுக்கு முக்கியமானவங்களுக்கான வேலையை மட்டும் பாருங்க. என் கிட்ட பேசி உங்க பொன்னான நேரத்தை வேஸ்ட்‌ பண்ணாதீங்க. நீங்க உங்க அக்கறையை உங்களுக்கு தேவையானவங்களுக்கு காமிங்க எனக்கு வேணாம் உங்க அக்கறையும் அன்பும். உங்களுக்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. நீங்க கிளம்பலாம்..” என்று கூறி விட்டு நகர முயன்றவளின் கரத்தை பிடித்து இழுத்தான்.

அவனது திண்ணிய‌ மார்பில் மோதி நின்றாள்.

அவளது தாடையை இறுகப் பிடித்து நிமிர்த்தியவன்,”எந்த சம்பந்தமும் இல்லாம என் கூட அந்த ரெண்டு நாள் அப்படி இன்டீமேட்டா இருந்தியா? இதை விட இன்னும் ஏதாவது கேட்டுடப் போறேன். இறங்கி போறேன்ங்கறதுக்காக இஷ்டத்துக்கு பேசாத கீது. ஒரு மனுஷனோட உயிரை காப்பறதுனால உன் மேல அன்போ காதலோ குறைஞ்சிடுச்சுன்னு அர்த்தம் இல்லை. புரிஞ்சுக்க எனக்குன்னு இருக்குற ஒரே உறவே வஜ்ரவேல் அய்யா மட்டுந்தான். அவருக்கு ஏதாவதுன்னா நான்தானே பாக்கணும் கீது…தப்பு தான் உன் கிட்ட பேசாம இருந்தது. நான்இருந்த சூழ்நிலை அப்படி.  சண்டை‌ப் போட்டு , தேவையில்லாத வார்த்தையை விட்டு, நம்ம ரிலேஷன்ஷிப்பை சிக்கலாகிக்க வேணாம்.அடுந்த வாரம் சனிக்கிழமை சாயந்திரம வீட்டுக்கு வந்துட்டு சண்டே ஈவினிங் கிளம்பி வந்துடு. அதுக்கான ஏற்பாட்டையும் பண்ணிட்டேன்.” என்றவன் சுற்றும் பார்த்துவிட்டு யாருமில்லை என்பதை உறுதி செய்து கொண்டு இதழில் அவசர முத்தம் ஒன்றை பதித்து விட்டு விலகிச் சென்றான்.

அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தாள்.  ஒரு பெருமூச்சுடன் பயிற்சி நடக்கும் இடத்திற்கு விரைந்தாள்.

வஜ்ரவேவிற்கு பதிலாக தான் கடத்தல் தொழிலில் ஈடுபட்டு முதல் விலகலுக்கு வித்திட்டான் மிருகேன்.  

இதுவே தொடர்கதையாக போகின்றது என்பதறிந்தும் ஏதோ குருட்டு தைரியத்தில் இருந்து விட்டான் மிருகேன் . கீதாஞ்சலியை சற்றே குறைத்து மதிப்பிட்டு விட்டான்.

அவன் கூறியதைக் போன்றே அடுத்த வந்த சனிக்கிழமை மாலை கீதாஞ்சலி அவள் தங்கியிருந்த வீட்டிற்கு கிளம்பி விட்டாள். மிருகேனே அவளை அழைத்துப் போக வந்துவிட்டான்.

வீடு வரும் வரை முகத்தை தூக்கி வைத்து கொண்டிருந்தவள் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனது இறுகிய அணைப்பிற்குள் பாந்தமாக அடங்கினாள்.

அவளுக்காக பார்த்துப் பார்த்து சமைத்தவன் அவளுடன் இணைந்து உண்டுவிட்டு வழக்கம் போல தொலைக்காட்சியை ஓட விட்டுக் கொண்டே முத்த யுத்தத்தை தொடர்ந்தான். 

சற்றே நீண்ட இடைவெளிக்குப் பின்னர்  ஊடலுக்கு பிறகு தொடரும் முத்தம் என்பதினால் வன்மையான முத்தங்களாக இருந்தது இருவரிடமும்.

அவளை அப்படியே கையிலேந்திக் கொண்டவன் மஞ்சத்தில் அவளுடன் சரிந்தான். அவனது நீண்ட தேடலுக்கு அவளும் ஒத்துழைத்தாள்.

ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் இதுவே தொடர்கதையாக தொடர்ந்தது.

இப்படியே இரு வருடங்கள் கழிந்தது. கீதாஞ்சலிக்கும் கோவையிலேயே பணி நியமனம் கிடைத்தது. கிடைக்க வைத்திருந்தான் மிருகேந்திரன்.

அதுவே அவனுக்கு பெரும் சிக்கலை தருமென அவன் சிறிதும் எதிர் பார்த்திருக்க மாட்டான்.

வஜ்ரவேலிற்கு பதிலாக முழு நேரத் தொழிலாக கடத்தலை கையில் எடுத்துக் கொண்டான் மிருகேந்திரன். 

அதை தக்க சமயத்தில் கீதாஞ்சலியிடம் தெரிவித்து தேவைப்படும்  போது அவளது உதவியை நாடலாம் என்று நினைத்தான்.

ஆனால் அவளோ அதற்கு நேர்மாறாக கடத்தல் தொழிலில் ஈடுபடுபவர்களை அடித்து நொறுக்கி சிறையில் தள்ளிக் கொண்டிருந்தாள்.

அன்று காலை மிருகேன் வஜ்ரவேலிடம் மருத்துவ உபகரணங்கள் வெளிந்தாட்டிலிருந்து இறக்குமதி செய்வதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான்.

கடத்தல் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் கூட வஜ்ரவேலின் ஏனைய முறையாக அவர் செய்யும் தொழில்களையும் கூட கவனித்து கொண்டிருந்தான் மிருகேன்.

“ அய்யா…இந்த மாசம்  பதினெட்டு மெஷினரீஸ் வாங்கியிருக்கோம். மொத்த அமௌண்ட் பதிமூணு கோடி…எல்லாத்தையும் இந்த தடவை இறக்குமதி செய்ய வேணடியதா போச்சு. அடுத்த தடவை நாமளே தயாரிக்கணும். இதெல்லாம் ரொம்ப காஸ்ட்லியா இருக்கு. நாமளே நம்ம சொந்த தயாரிப்புல குவாலிட்டியான விலை கொஞ்சம் குறைவாக கொடுக்கணும். இவ்ளவு பெரியது தொகை கட்டுப்படியாகாது. பெரிய பெரிய ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாம் விலையை பத்தி கவலைப்பட மாட்டாங்க. ஆனா சின்னச் சின்ன ஹாஸ்பிட்டல் இந்த மெஷினரீஸ் வாங்க ரொம்ப சிரமப்படுவாங்க. டெஸ்டுக்கு வர சாதாரண மக்கள் தலையில் தான் எல்லாத்தையும் கட்டுவாங்க. இந்த மெஷினரிஸ் மேனுபாக்சரிங் யூனிட்டை மட்டும் நம்ப புது ஆளுங்களை வச்சு தான் ஆரம்பிக்கணும். அவங்களுக்கு தான் இந்த பிராசஸ் எல்லாம் தெரியும். என்ன சொல்றீங்கய்யா? அடுத்த ஆறு‌ மாசத்துக்குள்ள இதை ஆரம்பிச்சுடலாமா?” என்றான்.

சாய்வு நாற்காலியில் அமர்ந்து கொண்டு அவனையே பார்த்துக் கொண்டிருந்தார் வஜ்ரவேல்.

அவரிடமிருந்து எந்த பதிலும் வராததால் நிமிர்ந்து அவனைப் பார்த்தான்.


“என்னங்கய்யா அப்படி பாக்குறீங்க?

 “ஒண்ணுமில்லை மிருகேன். கடத்தல் தொழில் உன்னோட வாழ்க்கை இல்ல. தயவு செஞ்சு இதை விட்டு விலகி போயிடு. உன்னைய தான் மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ் கம்பெனியை நடத்துன்னு சொல்லியிருக்கேன். நீயேன் தேவையில்லாம இந்த பிசினஸ் குள்ள நுழைஞ்ச?  வேணாம்‌ மிருகேன் இந்த வாழ்க்கை…இது விட்டு விலகி போயிடு…உனக்குன்னு ஒரு நல்ல வாழ்க்கையை அமைச்சிக்கோ…எனக்காகன்னு உன்னோட வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்காத.”எஎன்றார்.

அவரது கரங்களை பிடித்துக் கொண்டவன், “எட்டு வயசுல உங்க கையைப்‌ பிடிச்சிட்டு இந்த வீட்டுக்குள்ள வந்தேன். எனக்கு என்னோட பெத்தவங்க முகம் கூட நினைவுக்கு  இல்ல. எனக்கு எல்லாம் நீங்க தான். உங்க விஷயத்துல மட்டும் எனக்கு நல்லது கெட்டது தெரிய‌ மாட்டேங்குது. இவ்வளவு வருஷமா நீங்க கட்டிக் காத்த சாம்ராஜ்யத்தை சரிய விட மாட்டேன். நீங்க என்னை பத்தி கவலைப்படாம. இருங்க. எனக்கான வாழ்க்கையை நான் நிச்சியமாக அமைச்சிக்குவேன் “ என்றான்..

அவருக்குத்தான் மனம் சமாதானம் ஆகவில்லை. மெதுவாக எழுந்து தனதறைக்குச்‌ சென்றார்.

காவல் நிலையத்தில் கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி

சில கடத்தல் வழக்குகள் முடிக்கப்படாமல் இருந்தது.

“மணி அண்ணே..! இந்த கேஸ் எல்லாம் ஏன் முடிக்காம அப்படி அப்படியே இருக்கு? இந்த வழக்குத் சம்பந்தபட்டவங்க யாரு, என்னன்னு எந்த ஒரு தகவலும் இல்லையே?” என்றாள்‌

“அது வந்து மேடம்…”எனத் தலையை சொறிந்தார் அவர்.

“ம்ம்ச்…என்னன்னு விஷயத்தை பட்டுன்னு‌ சொல்லுங்க…”

சுற்றிலும் பார்த்தவர் , “மேடம் நான் சொனன்னேன்னு சொல்லாதீங்க…இந்த பாதியில க்ளோஸ் ஆகியிருக்கும் கேஸ் ல எல்லாம் சம்பந்தப்பட்டவர் வஜ்ரவேல் அய்யா தான்.”

“எந்த வஜ்ரவேல்?” என்றாள் யோசனையுடன்.

“ஸ்கூல், காலேஜ், மெடிக்கல் எக்யூப்மெண்ட்ஸ் கம்பெனி, டிரஸ்ட் எல்லாம் வச்சி படுத்திட்டு வர்றாரே அவரு தான். அவரு மக்களுக்கு நல்லது நிறைய பண்ணுறதுனாலேயே அவர் பண்ணுற கடத்தல் தொழிலை யாரும் கண்டுக்க மாட்டேன்றாங்க..நிறைய பேருக்கு அவரு உதவி பண்ணியிருக்காரு…போதுமான ஆதாரங்கள் இல்லங்கறதுனால இந்த கேஸையெல்லாததையும் மூடிட்டாங்க. அது மட்டும் இல்ல. இப்ப ஒரு ரெண்டு வருஷமா அவரோட வளர்ப்பு மகன் மிருகேந்திரன் இந்த தொழிலை கையில் எடுத்துக்கிட்டாருன்னு எல்லாரும் சொல்றாங்க. வஜ்ரவேல் அய்யாவுக்கு உடம்புக்கு இப்ப எல்லாம் அடிக்கடி முடியாம போயிடுது…அதனால தான் அவரே தன்னோட மத்த கம்பெனியையும் பாத்துட்டு இந்த தொழிலையும் செய்யுறாரு. ஆனா கடத்தல் தொழில் பண்ணறதுக்கான எந்த ஒரு ஆதாரமும் இல்லாம பாத்துக்குறாரு.. தயவு செஞ்சு நாந்தான் இதெல்லாம் உங்களுக்கு சொன்னேன்னு யார் கிட்டயும் சொல்லியா நீங்க மேடம்..” என்று கூறி விட்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

ஆம்…! இப்போதெல்லாம் அடிக்கடி மிருகேன் வஜ்ரவேலிற்கு உடல்நிலை சரியில்லை என்று ஓடுவதை அவளால் உணர முடிந்தது.

சிஷ நாட்களுக்கு முன்பு ஒரு நாள் இரவு கூடலிற்கு முன்பு வந்த அலைப்பேசி அழைப்பை ஏற்று பதறியடித்து ஓடிய சம்பவம் நினைவிற்கு வந்து கோபத்தை  கிளறியது. 

அதை நினைத்து பார்த்தவளின் முகம் அவமானத்தில் கன்றி சிவந்து போனது. 

அன்றிலிருந்து அவனை காணவே முடியாதது , இப்போது அவன் கடத்தல் தொழிலில் வஜ்ரவேலிற்கு பதிலாக ஈடுபட்டு வருவது என் அனைத்தும் சேர்ந்து அவள் மனதை கடினமாக மாற்றிக் கொண்டிருந்தது.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top