வஜ்ரவேலின் கை ஓங்கியிருந்த நேரம் அது.
கீதாஞ்சலியும் அப்போது தான் மெது மெதுவாக பதவி உயர்வு பெற்றுக் கொண்டிருந்த சமயம்.
வஜ்ரவேலை எதுவும் செய்ய முடியாத நிலை.
அவளால் முடிந்த அளவிற்கு வஜ்ரவேலிற்கு எதிராக ஆதாரங்களை திரட்ட முயன்றாள். ஆனால் அவளது முயற்சிகள் அனைத்தும் வீணாகிப் போனது.
வஜ்ரவேல் நேரடியாக கடத்தலில் இறங்கவில்லை என்றாலும் கூட அவ்வப்போது மிருகேந்திரனுடன் இணைந்து சரக்கை கை மாற்றி விட உதி செய்வது, பாதுகாப்பை உறுதி செய்வது காவல்துறையினரிடம் சிக்கிக் கொள்ளாமல் தங்களுடைய திட்டத்தை செயல்படுத்தும் முறை என அனைத்திலும் மிருகேனுக்கு உறுதுணையாக இருந்தார்.
கீதாஞ்சலிக்கு நாளுக்கு நாள் அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
அவளுடன் பணிபுரியும் காவலர் ஒருவர் கூட , “ஏம்மா…இவ்வளவு மெனக்கெடுற? வஜ்ரவேல் அய்யாவும் மிருகேந்திரன் சாரும் எல்லாருக்கும் நல்லது தானே பண்ணுறாங்க. அவங்களால பெருசா யாருக்கும் எந்த விதமான பாதிப்பும் இல்லயே…”என்றார்.
அவரைத் தீயென முறைத்தவள், “அந்த வஜ்ரவேல் கிட்ட எவ்வளவு பணம் வாங்கினீங்க? அவரை எதுவும் பண்ண முடியாதுன்னு நேரடியா சொல்ல வேண்டியது தானே? இப்ப இல்லன்னாலும் கண்டிப்பா ஒரு நாள் மாட்டுவார் . அதுவரைக்கும் நான் ஓய மாட்டேன்..”என்று கண்களில் ஒரு விதமான தீவிரத்துடன் கூறியவளின் மனதில் ,’வெகு சீக்கிரம் மிருகேனை வஜ்ரவேலிடமிருந்து தனியே பிரித்து அழைத்து விட வேண்டும்’ என்ற எண்ணம் அதிகமானது.
எப்படியேனும் அவனை தன்னுடனே தக்க வைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி யிருந்தாள்.
மிருகேன் அடிக்கடி வெளியூர் சென்று வர வேண்டியிருந்தது. அதில் இன்னமும் எரிச்சலாகித்தான் போனது கீதாஞ்சலிக்கு.
ஒரு வாரம் கழித்து அன்று தான் வீட்டிற்கு வந்திருந்தான் மிருகேந்திரன்.
அவன் எந்த விஷயமாக செல்கிறான்? எப்போது வீட்டிற்கு வருவான்? என்று எதையுமே கேட்டுக் கொள்ள விருப்பமில்லை கீதாஞ்சலிக்கு.
வழக்கம் போல இரவு உணவை முடித்துக் கொண்டவன் தங்களுடைய அறைக்குள் நுழைந்தான்.
“கீது…கீது…”என்றழைத்துக் கொண்டே கட்டிலில் அமர்ந்தான்.
அவளோ குளித்து முடித்து விட்டு குளியலறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள்.
அவன் திரும்பி அமர்ந்திருந்தான்.
“என்ன இந்த நேரத்துல போய் குளிக்கற? அப்படி ஒண்ணும் வெக்கயா இல்லயே..?” என்றான்.
அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் திரும்பிப் பார்த்தான்.
குளியலறை கதவில் ஒரு கையை ஊன்றியிருந்தவள் மறு கையால் ஈராமாகியிருந்த அவளது கூந்தலை விரித்து விட்டுக் கொண்டிருந்தாள்.
மெல்லிய வெண்ணிற ஷிஃபான் புடவையை ஒரு புறமாக வழிய விட்டிருந்தாள்.
மெல்லிய புடவையின் முந்தானையோ முன்னழகை தாராளமாக எடுத்துக் காட்டியது.
அவனை மையலாக பார்த்தபடி ஒயிலாக நடந்து வந்தவள் டிரெஸ்ஸிங் டேபிளில் வைக்கப்பட்டிருந்த மல்லிகை சரத்தை கூந்தலில் சூடினாள்.
கண்ணாடி முன்னின்று கூந்தலை முன்புறமாக எடுத்து விட்டாள்.
அவள் அணிந்திருந்த இரவிக்கை முழு முதுகையும் பளிங்காக எடுத்துக் காட்ட எச்சிலை கூட்டி விழுங்கினான் மிருகேன்.
வெகுநாள் கழித்து கீதாஞ்சலியை புடவையில் பார்த்ததில் முகம் கனிந்து போனது அவனுக்கு.
ஏனெனில் அவளை புடவையில் காண்பெதன்றால் அவனுக்கு அலாதி ப்ரியம். ஆனால் எப்போதும் போலில்லாமல் இன்று அதிக கவர்ச்சியாக , வேறு விதமான அழகுடன் இருந்தாள். அவளது திமிரும் நளினமும் கூட அவளது முகத்திற்கு புதிய சோபையை கொடுத்தது.
கண்ணாடி முன்பு நின்றிருந்தவளின் பின் வந்து நின்றான் மிருகேன்.
கையில்லாத ரவிக்கையும் இடையில் நின்று கொள்ள முடியாமல் வழுக்கிக்கொண்டு செல்லும் புடவையும் அவளது அழகை பிரம்மன் பார்த்துத் பார்த்து செதுக்கிய இருப்பானோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது.
முன்னிருந்த கண்ணாடியில் இருவரது பிம்பத்தையும் பார்த்தான்.
அழகு சிலையாக அவள் நின்றிருக்க அவனது விழகளோ அவளை அணுஅணுவாக ரசித்து தன்னுள்ளே நிரப்பிக் கொண்டிருந்தது.
மெல்ல அவளது விழிகளைத் பார்த்தான். அவளும் அவனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள். காதலும் மோகமும் அவனது விழிகளில் சம அளவில் இருந்தது.
“இ…இன்னைக்கு என்ன ஸ்பெஷல்..பு…புதுசா..”என்றான் தடுமாற்றத்தோடு.
அவன் புறம் திரும்பியவள் அவனை காதலாகப் பார்த்துக் கொண்டே அவனது சட்டை பட்டனை திருகினாள்.
“சொல்லு டி…” என்றான் கரகரத்த குரலில்.
இரு விரல் கொண்டு அவனிதழை அழுத்திக் பிடித்தவள், “இனி எல்லாமே புதுசா இருக்கணும்னு ஆசைப்படுறேன்..” என்றாள்.
அவளது விரலில் முத்தமிட்டவன் கரங்களை அவளது வெண்ணிற இடையில் படர விட்டான்.
“என்ன புதுசா வேணும்…?” என்றான் ஒரு மாதிரியாக.
அவனது மற்றொரு கரத்தையும் எடுத்து தனது இடையில் வைத்தவள் அவனது சட்டையின் முன்னிரு பட்டன்களை திறந்து விட்டு, “எல்லாமே….தான்…” என்றாள் கிறக்கமாக.
அதற்கு மேலும் அவனால் அமைதியாக நின்று கொண்டிருக்க முடியுமா?
போதையூட்டும் அவளது சிவந்த இதழ்கள், மையிட்ட விழிகள் , கூரிய நாசி, சங்கு கழுத்து , அளவான தோள்கள் , புடவையினுள் மறைந்தும் மறையாமலும் தெரியும் பெண்மையின் அழகு அவனுடலில் உஷ்ணத்தை கூட்ட அவளை தன்னுடன் இழுத்தணைத்துக் கொண்டான்
முதுகினை மறைத்த அடர்ந்த கார் மேகக் கூந்தலை முன்புறமாக ஒதுக்கி விட்டவனின் நாசியில் நெருக்கிக் கட்டிய மல்லிகையின் மணம் இன்னும் பித்துக் கொள்ள செய்தது. பளிங்கு போன்ற முதுகில் ஒற்றை விரலால் கோலமிட்டு அழுந்த முத்தமிட்டான்.
“ஸ்ஸ்…மிரு..”என அவள் மெல்லிய குரலில் முனக தன் நெஞ்சோடு அவளை இறுக்கி அணைத்து கழுத்து வளைவு, கன்னம் ஆகியவற்றில் முத்தமிட்டு பெண்ணவளை தடுமாற வைத்தான்.
மெல்ல அவனிடமிருந்து விலகியவள் அவனை மோகம் ததும்பும் முகத்துடன் பார்த்தாள்.
அவனது அடர்ந்த கேசத்தில் கரத்தை நுழைத்து அவனது முகத்தை தன் முகத்தருகே இழுத்தாள்.
முத்தமிடுவது போல இதழ்களை அவன் முகத்தருகில் கொண்டு சென்றவள் முத்தமிடாமல் ஆணவனின் உணர்வுகளை எரிமலையாக வெடிக்கச் செய்தாள்.
அவளது சிவந்த உதடுகள் வாவென்று அவனை அழைக்க, விலகி நின்று வேடிக்கை காட்டிய அவளது உதடுகளை தன் உதடுகளுக்குள் அழுத்தமாக பெருத்திக் கொண்டான்.
அவளது கரங்கள் மெல்ல அவனது சட்டை பொத்தான்களை விடுவிக்க திண்ணிய மார்பில் அவளது கரங்கள் விளையாடியது.
சட்டையை கழற்றி மூலையில் எறிந்து விட்டு அவளுடன் மஞ்சத்தில் தஞ்சமானான்.
மோகமது எரிமலையாக அவளது தேகத்தில் வெடித்து சிதறினாலும் கூட அவனது ஆழ்மனம் அவளது செயலை யோசிக்க வைத்துக் கொண்டு தான் இருந்தது. ஏனெனில் இதுவரை அவன் பார்த்த கீதாஞ்சலிக்கும் இன்று பார்ப்பதற்கும் ஆயிரம் வித்தியாசங்கள் இருந்தது.
மூளை இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தாலும் கூட அவனது உடல் அவனது கட்டுப்பாட்டை மீறி அவளிடம் சரணடைந்து கொண்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக வேகம் அவனிடம். அவனே எதிர்பாராத புதிய பாடங்களை அவள் கற்பிக்க சிலிர்த்து அடங்கியது அவனது தேகம்.
பிறகென்ன மனதில் எழுந்த சந்தேகம் எல்லாம் எங்கோ ஒடி ஒளிந்து கொள்ள, அன்றைய இரவு பல வகையான வர்ணஜாலங்களைக் காட்டியது.
அவனோ அவளை தன் வசப்படுத்திக் கொண்டிருக்க அவனது தலைக்கு மேலிருந்த அலைப்பேசி அதிர்ந்தது. அவன் மீதிருந்து மெல்லத் தலையை மட்டும் நீட்டி எட்டி பார்த்தாள் கீதாஞ்சலி.
“vajravel appa calling “என்று தொடுதிரையில் மின்னியது.
விழிகளை கீழிறக்கி பார்த்தாள்
அவனோ அவளது மென் வயிற்றில் முத்தங்களை பதித்துக் கொண்டிருந்தான்.
அவனது பற்தடங்கள் அவளது இடையில் பதிய, “ஆ…மெதுவா..மிரு..”என்றவளின் கரங்கள் வஜ்ரவேலின் அழைப்பைத் துண்டித்தது.
அவளுக்குத் தெரியும் இது தற்காலிக துண்டிப்பு தான் என.
நிரந்தரமாக அவனை வஜ்ரவேலிடமிருந்து எப்படி என்பதை அவளது மூளை பலமாக சிந்திக்கத் தொடங்கியது..
மிருகேனுடயை முடியடரந்த மார்பில் தலை வைத்து படுத்திருந்தாள்.
அவள் கூந்தலில் மூடியிருந்த மல்லிகை அனைத்தும் அவனது மார்பில் தஞ்சமடைந்திருந்தது.
அவற்றையெல்லாம் ஒதுக்கிக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.
அவளது கூந்தலை வருடியபடி,” கீது…” என்றான்.
“ம்ம்..சொல்லுங்க மிரு…”
“ நிஜமாவே உனக்கு என் மேல கோபம் இல்லையா? நான் இப்ப எப்படி இருக்கேனோ அப்படியே உன்னால ஏத்துக்க முடியுமா? இல்ல எனக்காக என்னை சகிச்சுக்கிறியா? எதுவாக இருந்தாலும் வெளிப்படையாக பேசிடு கீது…பின்னாடி எதுவும் பிரச்சினை வந்துடக்கூடாது. எனக்கு என்னவோ உறுத்தலா இருக்கு.”என்றான் அவளை ஆழ்ந்து பார்த்தபடி.
அவளும் சளைக்காமல் அவனை நேராக பார்த்துக்கொண்டே, “உண்மைய சொன்னா எனக்கு உங்க மேல அவ்வளவு கோபம் தான் இருந்தது. இன்னும் இருக்கு. ஆனா அதையும் மீறி உங்க மேல காதலும் ஆசையும் அதிகமாகவே இருக்கு. சரி நீங்க சொல்லுங்க…. வஜ்ரவேல் அய்யாவை விட்டுட்டு உங்களால வர முடியுமா? இந்த கடத்தல் தொழிலை அடியோடு விட்டுட்டு எனக்கே எனக்காக நமக்காக உங்களால வந்துட முடியுமா?” என்றாள் அழுத்தமாக.
அவனது தலை மறுப்பாக ஆடியது.
சில கணங்கள் கனத்த மௌனம் இருவரிடமும்.
ஏதோ நினைத்தவன் , “கீது உங்க அம்மா அப்பா கிட்ட நம்ம விஷயத்தை பத்தி பேசிடலாமா? எவ்வளவு நாள் இப்படியே இருக்கறது? “என்றவனின் குரல் பிசிறு தட்டியது.
நடைமுறை சிக்கலை அவன் உணர்ந்தேயிருந்தான்.
கீதாஞ்சலி அவனது மார்பில் அழுந்த முத்தமிட்டாள்
“ சில கேள்விகளை கேக்குறது அபத்தம்னு உங்களுக்கே தெரியுது. இதுக்கு நான் பதில் சொன்னேன்னா தேவையில்லாத பிரச்சினை தான் வரும். எந்த தாய் தகப்பனும் தன்னோட பொண்ணை ஒரு கடத்தல்காரனுக்கு உனக்கு கல்யாணம் பண்ணிக்கொடுக்க விரும்ப மாட்டாங்க. இப்போதைக்கு இந்த பிரசசனையை இப்படியே விட்டுடலாம். எனக்கு உங்க கூட சந்தோஷமா வாழணும்னு ஆசையா இருக்கு. எதைப் பத்தியும் இப்ப என்னால யோசிக்க கூட முடியலை. ப்ளீஸ்…மிரு…எதையாவது பேசி என்னை டென்ஷன் பண்ணாதீங்க…இப்போதைக்கு என்னை மட்டும் நீங்கள் கவனிச்சா போதும்….ஓகேவா? “என்றவள் அவனது மீசையை முறுக்கி விட்டு முத்தமிட்டாள்.
பிரச்சனைகள் தீவிரத்தை உணரும் நாட்கள் வெகு தூரமில்லை என்று இருவரும் உணர்ந்தேயிருந்தனர்
அடுத்தடுத்து வந்த நாட்களில் மிருகேனிடம் அதிகமாக நெருங்கினாள் கீதாஞ்சலி. .
வேலைக்குச் செல்லும் நேரத்தை தவிர மீதி நேரத்தை அவனுடன் செலவழித்தாள்.
அவனையும் முடிந்த அளவிற்கு ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தன்னுடனே இருக்க வைத்தாள்.
சில நேரங்களில் அவளது கட்டுப்பாட்டை மீறி அவன் வஜ்ரவேலிற்கு உதவ சென்று விடுவான் தான் . அத்தனை ஆத்திரமாக வரும் அவளுக்கு. முயன்று அடக்கிக் கொண்டு இருப்பாள்.
அவளும் மெல்ல மெல்ல அப்போது தான் பதவி உயர்வு பெற்றிருந்தாள்.
எனவே வஜ்ரவேலை நெருங்க முடியாத சூழ்நிலை.
நாளுக்கு நாள் மிருகேனது ஆதிக்கம் அதிகமானது. காவல்துறையினரால் கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு அவனது திட்டங்கள் இருந்தது.
கீதாஞ்சலியே நேரடியாக கடத்தல் வழக்கை விசாரித்தாலும் கூட எப்படியும் அவன் தப்பித்துக் கொண்டிருந்தான்.
நாட்கள் வேகமாக நகர்ந்தது.
அன்று காலை சோர்வுடன் நீள்விரிக்கையில் அமர்ந்திருந்தாள் கீதாஞ்சலி.
“என்னாச்சு கீது…? ஏன் டல்லா இருக்க?
“ ஒண்ணுமில்லை மிரு.. கொஞ்சம் டயர்டா இருக்கு அவ்வளவு தான்…” என்றாள்..
“இல்ல கீது…ஏதோ உன்னோட முகமே சரியில்லை..என்னன்னு விஷயத்தை சொல்லு…” என்றான் விடாமல்.
“ஐ யம் ப்ரெக்னன்ட்…” என்றாள் கைவிரல்களை ஒன்றோடொன்று கோர்த்தபடி.