அத்தியாயம் 12

 

ருத்ரன் தூக்கியெறிந்த நாளிதழை எடுத்துப்‌ பார்த்தவனின் விழிகள் கோபத்தில் சிவந்தது.

“ வாட் தி ஹெல் இஸ் திஸ் ஆதவ்? ஒரு கவர்ன்மென்ட் சர்வென்ட்டா இருந்துட்டு இவ்வளவு சீப்பா பிகேவ் பண்ணியிருக்க? இதை உன் கிட்ட இருந்து நான் எதிர்பார்க்கல.  எல்லா சோஷியல் மீடியா அண்ட் நியூஸ் சேனல்ஸ்  இதைப் போட்டு கிழி கிழின்னு கிழிச்சிட்டு இருக்கான். எப்படி உன்னால இர்ரெஸ்பான்சிபிலா  நடந்துக்க முடியுது…?”என்றான் அழுத்தமாக.

“நீங்க நினைக்குற மாதிரியெல்லாம் ஒண்ணும் நடக்கல டாட்…அந்த இடியட் மிருகேனை பாத்ததுனால தான் கொஞ்சம் அதிகமா குடிச்சிட்டேன். பட் இந்த பொண்ணு கிட்ட தப்பாயெல்லாம் நடக்கல…ஒண்ணும் இல்லாத விஷயத்துக்கு இவ்வளவு தூரம் ஏன் கோபப்படுறீங்க ?யாரோ எவரோ இப்படி கேவலமா போட்டோ எடுத்து அனுப்பினா அதை நம்பி என்னை சந்தேகப்படுறீங்க..?”  என்றான் அலட்சியமாக.

“ அவ்வா…! அவ்வ்வா…! என்ன சொன்னீங்க…? என்ன சொன்னீங்க ஒண்ணுமில்லாத விஷயமா? அதெப்படி உங்களால இப்படி பேச முடியுது? நீங்க  சுத்தமா நிதானத்துலயே இல்ல…அங்க என்ன நடந்ததுன்னு தெரியுமா உங்களுக்கு? என்‌ மானம் மரியாதை எல்லாம் போச்சு…..என்னோட முகத்தை எல்லா சோஷியல் மீடியாலயும் காமிச்சு…என்னோட வாழ்க்கையையே நாசம்‌ பண்ணிட்டாங்க. உங்க கூட டான்ஸ் பண்ணினேன்ங்கற ஒரே காரணத்துக்காக என்னோட லைஃபையே கேள்விக்குறியா மாத்திட்டீங்களே…? இப்ப நான் எப்படி வெளியே தலை காட்டுவேன்….நீங்க நிதானத்துல இல்லாததுனால  தான் என் கிட்ட தப்பா தான் நடந்துக்கிட்டீங்க… பெரிய பொஷிஷன்ல இருக்கீங்க..நீங்க இப்படி நடந்துகிட்டதை பத்தி வெளியே சொன்னா என்னை தான் எல்லாரும் தப்பு சொல்லுவாங்க…என்னோட வாழ்க்கைக்கு என்ன‌ பதில்?  ஏதாவது வழி பண்ணுங்க….” என்று கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றாள். 

காலையில் எழுந்தவளுக்கு நாளிதழ்கள்  மற்றும்‌ சமூக ஊடகங்களில் இருவரது புகைப்படம் மற்றும் காணொளி வெளியானதை கண்டு பயம் பிடித்துக் கொண்டது. 

மேலும் ஆதவ்  அசிஸ்டன்ட் கமிஷ்னர் என்று தெரிய வந்ததும் இன்னும் கொஞ்சம் உதறல் தான் எடுத்தது.  

தப்பிக்கும் வழி தெரியவில்லை. மாட்டினால் கண்டிப்பாக ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு தான் இருக்க வேண்டும் என்று நீண்ட யோசனையில் அமர்ந்திருந்தவளுக்கு ஒரே ஒரு வழி மட்டுமே புலப்பட்டது. உடனே அதனை செயல்படுத்தியும் விட்டாள்.

சூழ்நிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு  அவன் மீது மொத்தப் பழியையும்‌ போட்டுவிட்டு முடிந்தால்  அவனிடமிருந்து பணத்தை கறந்து விட்டு வந்து விடலாம் என்று நினைத்து தான் ஆதவ்வின் வீட்டு   முகவரியை  கண்டுபிடித்து வந்திருந்தாள்.  

ருத்ரனும் அப்போது தான் நாளிதழை பார்த்துவிட்டு கோபத்துடன் அமர்ந்திருந்தான். மோகனாவும் சரியான நேரத்திற்கு வந்து நிற்க, ஆதவ்வின் மீது கொலைவெறியானது ருத்ரனுக்கு.  

தன் மீதான மோகனாவின் பொய்யான குற்றச்சாட்டை கேட்டவனுக்கு நரம்புகள் புடைத்துக் கொண்டு கோபம் வர, ” அடிங்க…ஃப்ராடு…”என கோபத்துடன் அவளை நோக்கி முன்னேறியவனை கைப்பிடித்து  தடுத்தாள் ஜானகி.

“ எங்க டா போற?”

“ ஜானு …அவ சொல்வதையெல்லாம் நம்பாதே…! சரியான கேடி அவ…பக்கா ஃப்ராடு . “ என்று கோபத்தில் முகம் சிவந்தான்.

 “பொய் சொல்லாதீங்க ஆதவ்….நீங்க என்னோட…ட்ரெஸை கழட்ட சொல்லி …. என் கிட்ட….தப்பு தப்பா நடந்துக்கிட்டீங்க…” என்று கண்ணீர் விட தொடங்கினாள்.

அவள் அழுவதைக் காணச் சகியாத ஜானகி அவளருகே வந்து நின்று கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டு, “ அழாதே மா.. அழாதே… .உனக்கு நாங்க இருக்கோம்….உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைச்சு தர்றது எங்களோட கடமை “ என்று கூறிய படி மகனை முறைத்தாள்.

‘எதற்காக இந்த நாடகம்? எதற்காக இத்தனை பொய்கள்?’என்று யோசித்தவனுக்கு ஒன்றும் புரியவில்லை. 

சுறுசுறுவென கோபம் தான் தலைக்கு ஏறியது. 

மோகனாவை கன்னம் கன்னமாக அறைந்து தள்ள அவனது கைகள் பரபரத்தது. முயன்று அடக்கிக் கொண்டான்.

கீதாஞ்சலியின் பார்வை மோகனாவை துளைத்தெடுத்தது.

அவளது கூரிய பார்வையை சந்திக்க முடியாமல் ஜானகியின் கரங்களைப் பிடித்துக் கொண்டவள், “ஆன்ட்டி…நான்‌ பஃப்புக்கு போனது தப்பு தான் இல்லன்னு சொல்லல..முதல்ல தடவையா போனேன்…அதுவும் ஃப்ரெண்ட்ஸ் ரொம்ப  ரெக்வஸ்ட் பண்ணி கேட்டுக்கிட்டதனால தான். ஆனா என்னோட கெட்ட நேரம் இவர் கிட்ட மாட்டிக்கிட்டேன்.எனக்குன்னு ஒரு தங்கச்சி மட்டுந்தான் இருக்கா. அவளை நல்லா படிக்க வைக்கணும்னு நான் போராடிட்டு இருக்கேன். எனக்கு இந்த மாதிரி பஃப்புக்கு போறதெல்லாம் இது தான் முதல் தடவை. இப்ப இந்த மாதிரி இஷ்யூ ஆகிட்டதுனால என்னோட வேலையும் போயிடுச்சு. இனி எனக்கு யார் வேலை தருவாங்க.  நல்ல வேலை இருந்தா தான் என்னோட தங்கச்சியை நல்லா படிக்க வைச்சு கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும். இப்ப வேலையும் இல்லாம பேரும் கெட்டு போய் நிக்குறேன். என்னோட தங்கச்சியோட படிப்புக்கு, வீட்டு செலவுக்குன்னு நிறைய பணம் தேவைப்படுது. ஏகப்பட்ட கடன் வேற இருக்கு. வேலை இல்லாம எப்படி நான் நடுத்தெருவுலயா நிக்க முடியும்? நீங்களும் அங்கிளும் பாக்க நல்ல மாதிரி இருக்கீங்க…நீங்களே எனக்கான ஒரு நியாயத்தை சொல்லுங்க….” என மூச்சு பிடிக்க தத்ரூபமாக அழுது நடித்தாள்.

அவளது நடிப்பில் ஆதவ் வாய் பிளந்து நின்றிருந்தான்.

“ அடிப்பாவி…..பக்கா ப்ராடு…கொஞ்சம் கூட பயமேயில்லாம போலீஸ்கார குடும்பத்துலயே வந்து பணத்தை பிடுங்க என்னமா ப்ளான்‌ பணணுறா…? பாவம் பொண்ணுன்னு பார்த்தா ஓவரா பேசிட்டு போறாளே…” என முணுமுணுத்தவன்  கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் வேகமாக அவளருகே வந்து கையைப் பிடித்து தன் புறமாக திருப்பி பளாரென்று அறை விட்டான்.

இதனை சற்றும் எதிர்பாராதவளுக்கு சித்தம் கலங்கி போன்றதொரு பிரமை. 

விழிகளில் இருந்து நீர் வழிய ஆரம்பித்தது.

அவனது மொத்த கோபத்தையும் அவளது மென் பஞ்சு கன்னங்களில் பதிய வைத்திருந்தான்

ஐந்து விரல்களும் அச்சு பதித்தது போல பதிந்திருந்தது அவளது கன்னத்தில்.

அவளது தலைமுடியை கொத்தாக பிடித்தவன் , “ என்ன டி…? என்ன ஃப்ராடுத்தனம் பண்ணுற நீ? ச்சீ…நீயெல்லாம் ஒரு பொண்ணா?  நீ எவ்வளவு பெரிய கேடின்னு எனக்குத்தான் தெரியும். டாட். இந்தப் பொண்ணு பக்கா ப்ராடு. ஆஃப் மூலமா ஆம்பிளங்களோட நெருங்கிப் பழகி சரக்கை ஊத்திக் கொடுத்து அவங்களோட பணத்தை ஆட்டைய போட்டுட்டு கம்பி நீட்டிடுவா? இவளை பிடிக்கத் தான் நானும் ஒரு பணக்கார ஆளா ஆஃப் மூலம் அறிமுகம் ஆனேன்‌. அதுக்கப்புறம் தான் இவளை பஃப்புக்கு வரவழைச்சது. ஆனா நான் நினைச்சது ஒண்ணு நடந்தது ஒண்ணு. இவயெல்லாம் பொண்ணே இல்லை. பிராஸ்ட்டிடியூட்டை விட கேவலமான ஜென்மம்…எத்தனை பேரோட படுத்தாளோ…” என்  முடிப்பதற்குள் ,  “நிறுத்துங்க….போதும்…இதுக்கு …மேல…எதுவும் பே…பேசாதீங்க…நான் போயிடுறேன்… “ என்று உதடுகள் நடுங்க கூறியவள் வாசலை நோக்கி நடந்தாள்‌.

“சீப் ட்ராமா…இரிட்டேட்டிங்…” என்று உதட்டை சுளித்தான் ஆதவ்.

“நில்லும்மா…” என்றான் ருத்ரன்.

மோகனா அசையாமல் அதே இடத்தில் நிற்க அவளருகே வந்தான் ருத்ரன்.

“ உன் பேரு என்ன?”

“ மோகனா”

“ டாட்…பேரையே பொய்யான பேரைச் சொல்லி தான் என் கிட்ட பேச ஆரம்பிச்சா…இது தான் உண்மையான பேரா? இல்ல இதுவும் உன்னை மாதிரியே போலியானதா?ச்சீ…ச்சீ…எவ்வளவு பொய்.. அதுவும் போலீஸ்காரன் கிட்டயே ” என்றான் அருவருப்புடன்.

“அது போலியான பேர் தான்னு உன்னால ஏன் கண்டுபிடிக்க முடியல ஆதவ்.? அவ்வளவு தானா உன்னோட சாமர்த்தியம்? ஒரு பேரை உண்மையானதா பொய்யானாதான்னு கண்டுபிடிக்க முடியல உன்னால…நீயெல்லாம் என்ன ஏ சி பி?” என்றான் ருத்ரன்.

“ டாட்.என்னைய நீங்கள் ரொம்பவே அசிங்கப்படுத்துறீங்க. அதுவும் இந்த மாதிரி கேவலமான பொண்ணு முன்னாடியே….அவ உண்மையான‌ பேர் என்னன்னு கண்டுபிடிக்க முடியலன்னு சொன்னேனே ஒழிய அது போலியான பேர் தான்னு எனக்கு  நல்லாவே தெரியும்..” என்றான்‌ .

“அப்பறம் ஏன் சார் மணிக்கணக்கா அவங்க கூட சாட் பண்ணிட்டு இருந்தீங்க? என்ன தான் நான்‌ உன்னைய கண்டுக்கலனாலும் நீ பண்ற ஒவ்வொரு விஷயமும் எனக்குத் தெரியும் ஆதவ்.”

“ டாட்…என் கண்ணு முன்னாடியே ஒரு பணக்காரனோட தனி ரூம்ல போய் இருந்தவ இவ. அவரோட எப்படியோ இருந்துட்டு பணத்தையும் நகையையும் உருவிட்டு  வெளிய வந்தா. அவளைப் பத்தி விசாரிச்சதுல ஆப்‌ மூலமா பல பேரோட பழகி பணத்தையும் நகையையும் பிடிங்கிட்டு எஸ்கேப் ஆகிடுறா ‌ . சம்பந்தபட்டவங்க எல்லாம் சமூகத்துல நல்ல இடத்துல இருக்குறதுனால இவளோட மிரட்டலுக்கு பயந்துட்டு கம்பளைண்ட் பண்ணாம விட்டுடுறாங்க. அதனால தான் பானை ஆஃப் மூலமா அவக்கூட பேசிப்‌ பழகி பஃப்புக்கு வரச்சொன்னேன். மத்தபடி ஆசையா எல்லாம் இவ கூட பேசல நான். நடுவுல அந்த மிருகேந்திரனை பாத்ததுனால தன்  கொஞ்சம் ஓவரா குடிச்சிட்டேன். ஆனா தப்பா எதுவும் நடக்கலை.” என தன் தரப்பு விளக்கத்தை கூற அதனை காதில் வாங்கிக் கொள்ளாமல் அலைப்பேசி மற்றும் சமூக இயக்கங்களில் வெளிவந்த இருவரது நெருக்கமான புகைப்படங்களைக் காட்டி..” அப்ப இதெல்லாம் என்ன ஆதவ்? பாக்கவே இவ்வளவு கேவலமா.. ‌‌க்ளோஸா…ச்சே.!.ச்சே…! வேண்டாம் ஆதவ் ஒரு பொண்ணோட வாழ்க்கையை பாழாக்காத…”என்றான்‌ ருத்ரன்.

“டாட்..நான் என்னவோ அந்த பொண்ணை ரேப் பண்ணின ரேன்ஜூக்கு பேசிட்டு இருக்கீங்க…அப்ப நீங்க என்னைய நம்பல…இந்த கேவலமான தொழில் செய்யறவ சொல்ற பொய்யை நம்புறீங்க…அப்படித்தானே…?” என்றவன் வேகமாக மோகனாவினருகே சென்றவன், “ ஏய்…! இந்தா…உனக்கு என்ன வேணும்? எதுக்கு இங்க வந்து தேவையில்லாத ட்ராமா பண்ணிட்டு இருக்க..? உனக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சரி,.. கடைசியா நான் உன் வழிக்கே வர்றேன்…உனக்கு எவ்வளவு பணம் வேணும் சொல்லு தர்றேன்…அதை வாங்கிட்டு இடத்தை மரியாதையா காலி பண்ணு…அடுத்த நல்ல பார்ட்டியா பார்த்து வலை வீசி ஆரம்பி…” என்றவனை பட்டென்று நிமிர்ந்து பார்த்தாள் மோகனா.

அவள் ஏதோ  கூற வருவதற்குள் ஜானகி இடை புகுந்து , “ ஆதவ் நோக்கு பைத்தியம் தான் பிடிச்சு போச்சு. பஃப்புக்கு போகதேன்னு ஆயிரம் தடவை கீதாஞ்சலி சொன்னாளா இல்லையா?  இப்ப எல்லா தப்பையும் பண்ணிண்டு வந்துட்டு எதுவுமே நடக்காத மாதிரி பேசாதே…உன்னோட பணம் யாருக்கு வேணும்? இந்த பொண்ணோட வாழ்க்கைக்கு நீ தான் ரெஸ்பான்சிபில்…”என்ற தாயை புரியாமல் பார்த்தான் ஆதவ்.

“ ஜானு…என்ன சொல்ற நீ..? இல்ல எனக்கு நீ சொல்றது புரியலை…” என்றான்.

“ ஒரு நிமிஷம் இரு…” என்று கூறி வட்டு   தனதறைக்குள் நுழைந்தாள்.

சில நிமிடங்களில் திரும்பி வந்தவள் ஆதவ்வின் கையில் சிறிய பொருளை வைத்தாள்.

“ என்னதிது ?”என்றான் கோபமாக.

“ அந்த பொண்ணோட வாழ்க்கைக்கு நீ தான் ரெஸ்பானஸிபில்னு சொன்னேனே…! புரியலையா நோக்கு… காசு பணம்மெல்லாம் கொடுத்து அந்தப் பொண்ணை அசிங்கப்படுத்த வேண்டாம்.உன்னால ஏற்பட்ட அவமானம் உன்னாலையே சரியாகணும். அதுவும் இப்பவே.. அந்த பொண்ணு கழுத்துல இந்த திருமாங்கல்யத்தை கட்டு…” என்றாள் அழுத்தமாக ‌

“ ம்மா…பைத்தியமா நீ? என்ன நினைச்சிண்டு இந்த மாதிரி  காரியம் பண்ணின்டு இருக்க ? என்னால இந்த ஃப்ராடு கழுத்துலயெல்லாம் தாலி கட்ட முடியாது. முடிஞ்சா ரெண்டு பெண் போலீஸை கூட்டிட்டு வந்து ப்ராத்தல் கேர்ல் உள்ள தள்ளுறேன்..” என்றான் ஆத்திரமாக.

மிருகேந்திரன் தான் தானும் மோகனாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருப்பான் என்று நினைத்தவனுக்கு அவன் மீது வன்மம் கூடிக் கொண்டே சென்றது.

 அதனால் ஏற்பட்ட அளவு கடந்த கோபம், மோகனாவின் பழிச் சொல் ஆகியவையும் இலவச இணைப்பாக சேர்ந்து கொண்டு அவனை மிருகமாக்கிக் கொண்டிருந்தது. 

அதனால் வார்த்தைகள் கூர் ஈட்டியாக வந்து விழுந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.

அவனது வார்த்தைகளை கேட்டு விதிர்த்து போய் நின்றிருந்தாள் மோகனா.

“ஸ்டாபிட் ஆதவ்…” என்று கர்ஜித்தாள் கீதாஞ்சலி.

மோகனாவின் கூற்றில் அவளுக்கு சந்தேகம் இருந்தாலும் கூட அதற்காக ஆதவ் பயன்படுத்திய வார்த்தைகள் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

“ வார்த்தைகளை பார்த்து பேசு ஆதவ். என்ன தான் உனக்கு அந்த பொண்ணு மேல கோபம் இருந்தாலும் நீயும் மத்த ஆம்பிளைங்க மாதிரி அவளோட கேரக்டரை அஸாஸினேட் பண்ணி பேசாத…! நான் கிளம்புறேன்…இங்க இருந்தா எனக்கு டென்ஷன் தான் ஆகும்‌ . ம்மா…எதுவா இருந்தாலும் தீர விசாரிச்சிட்டு முடிவு பண்ணு. எமோஷனலா முடிவு செய்யாத…” என்றவள் தன்னுடைய பேச்சு அவ்வளவு தான் என்று இடத்தை விட்டு நகர்ந்து விட்டாள்.

“ சாரி ஆன்ட்டி.. என்னால உங்க குடும்பத்துல குழப்பம் வேண்டாம். இந்த மாதிரி வார்த்தைகளை எல்லாம்…நா…நா கேட்டதேயில்லை…என்னை விட்டுடுங்க. நியாயம் கிடைக்கும்னு தான் இங்க வந்தேன். ஆனா என்னையே அசிங்கப்படுத்தி பேசுறாரு உங்க பையன்.” என்றவள் மீண்டும் அவ்விடத்தில் இருந்து நகர முயல, அவளது கரங்களை பிடித்து இழுத்துக் கொண்டு வந்த ஜானகி ஆதவ்வினருகில் நிறுத்தினாள்.

“ ஆதவ்….நான் எது பண்ணுனாலும் உன்னோட நல்லதுக்கு தான் பண்ணுவேன்யில்லையோ…? தெரிஞ்சோ தெரியாமலேயோ‌ அந்த பொண்ணோட பேர் உன்னால கெட்டுப் போயிடுத்து…இந்த பொண்ணோட கழுத்துல தாலி கட்டு.‌ அது தான் இந்த பொண்ணுக்கும்  சேஃப். வெளியே போனா இந்த பொண்ணை எந்த மாதிரி பேசுவாங்கன்னு நினைச்சு பாரு…உன்னோட வாதாட நேக்கு மனசுலயும் உடம்புலயும் தெம்பில்ல. இவ்வளவு நாள் எங்களோட சொல் பேச்சை கேக்காம தானே பஃபுக்கு  போன. அதனால வந்த பலனை நீ தான் அனுபவிச்சு ஆகணும். என்னையும் என் வார்த்தையும் நீ உண்மையிலேயே மதிக்கறதா இருந்தா..அந்த பொண்ணோட கழுத்துல தாலி கட்டு..” என்று அழுத்தமாக கூறிய ஜானகியிடம், “ஆன்ட்டி ப்ளீஸ்…! இதெல்லாம் வேணாம் ஆன்ட்டி…இது சரி வராது…” என்று பதறினாள் மோகனா .

அவளது மறுப்பை சட்டை செய்யாமல் ஆதவ்விடம் திருமாங்கல்யத்தை கொடுத்து மோகனாவின் கழுத்தில் கட்டச் சொல்லி வற்புறுத்தினாள் ஜானகி.

நடப்பதனைத்தையும் ருத்ரன் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனது மனமும் ஆதவ்வின் செயலால் மிகவும் குழம்பி போய் தான் இருந்தது. 

எனவே ஜானகியின் செயலுக்கு மறுப்பேதும் கூறாமல் கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

திருமாங்கல்யத்தை கையில் வைத்துக்கொண்டு மோகனாவை முறைத்துக் கொண்டிருந்தவனை,  “அவளை‌ முறைக்கறதை விட்டுட்டு…முதல்ல தாலியை கட்டு…” என்று அதட்டினாள் ஜானகி.

“அம்மா..நீ ரொம்ப அவசர படுற.. நிதானமா இதெல்லாம் பண்ணிக்கலாமே..” என்றான்‌ பல்லைக் கடித்துக் கொண்டு.

“நான் இந்த விஷயத்துல உன்னை நம்ப மாட்டேன்…ம்ம்…கட்டு “என்றாள் கோபமாக.

வேறு வழியின்றி , வேண்டா வெறுப்பாக மோகனாவின் கழுத்தில் தாலியை கட்டி பிடிக்காத மனைவியாக ஏற்றுக் கொள்ள வைத்திருந்தாள் ஜானகி.

பிள்ளையார் பிடிக்க போய் குரங்கு பிடித்த கதையாக மாறியிருந்தது மோகனாவின் நிலை. அரண்டு போய் நின்றிருந்தாள் ஜானகியின் அதிரடி செயலில். 

சிறைக்குச் செல்ல பயந்து அவள் ஏதோ ஒன்று செய்யப் போக, அனைத்தும் தலைகீழாக மாறி காலம் முழுவதும்  ஆதவ்வின் வாழ்க்கையில் ஆயுள் கைதியாக அவள் சிறை வைக்கப்பட்டாள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top