தன்னைச் சீண்டி விட்டுச் சென்ற மிருகேனை வெறித்துப் பார்த்திருந்தான் ஆதவ்.
கண்மண் தெரியாத அளவிற்கு அவன் மீது கோபத்தை வந்தது. அதனைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்று கொண்டிருந்தவனின் தோளினைத் தொட்டாள் மோகனா.
“ என்னாச்சு டியர்? அவர் யாரு? உங்களுக்கு வேண்டப்பட்டவங்களா? திடீர்னு உங்க ஃபேஸ் ஏன் டல்லாயிடுச்சு ?” என்றவள் அவனது முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தாள்.
கடுகடுவென இருந்தது ஆதவ்வின் முகம்.
“ வேண்டியவங்களா?” என்று மீண்டும் கேட்டாள் மோகனா.
தன்னை நிதானப் படுத்திக் கொண்டவன், “ஹான் என்ன கேட்ட? வேண்டப்பட்டவங்கன்னா…? ம்ம்…இவரு வேண்டப்படாதவங்க லிஸ்டல இருக்குறவரு.” என்று அழுத்தமாக கூறியவன் அருகிலிருந்த மதுக்கோப்பையை கையில் எடுத்துக் கொண்டு, ஷேல் ஐ ட்ரிங்க்?” என்று அவளிடம் அனுமதி கேட்டான்.
அவளுக்கு தான் சற்று ஆச்சர்யமாக இருந்தது. குடிப்பதற்கு தன்னிடம் அனுமதி வேண்டி நின்றவனைக் கண்டு சிரிப்பு வந்தாலும் ,மறுபுறம் அவனது நடவடிக்கை வித்தியாசமாக தெரிந்தது.
அவள் அமைதியாக நிற்பதை பார்த்தவன், “ஹலோ..! நான் டிரிங்க் பண்ணவான்னு கேட்டேன்…” என்று அவள் முன்னே கையை ஆட்டினான்.
“ ஹான்…ம்ம்..இதுக்கு போய் எதுக்கு என் கிட்ட பர்மிஷன் கேக்குறீங்க?”
“ அப்படி கிடையாது ..உனக்கு பிடிக்கலன்னா அதை பண்ண வேண்டாமேன்னு பாத்தேன்…”
“எனக்கு மட்டும் தான் இந்த சலுகையா? இல்ல யாருக்கு எது பிடிக்கலன்னாலும் அதை பண்ண மாட்டீங்களா…?” என்று மடக்கினாள்.
அவளுக்கு அவனிடம் இப்படி பேசிக் கொண்டிருப்பது பிடித்திருந்தது.
“ ம்ம்ச்…தெரியலை..ஆனா எல்லா விஷயங்கள்லயும் இது அப்ளிகபில் கிடையாது…எதாவது செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன்னா யாருக்காகவும் பாத்துட்டு சும்மா இருக்க மாட்டேன். முடிச்சி விட்டுட்டு போயிட்டே இருப்பேன்…” என்றான் இறுகிய குரலில்.
மென்மையாகவும் கடுமையாகவும் மாறி மாறி பேசும் ஆதவ்வை புரிந்து கொள்ள முடியவில்லை மோகனாவிற்கு.
அவளிடம் பேசிக்கொண்டே சிறிது சிறிதாக மது அருந்தியவன் நேரம் செல்லச் செல்ல அதிகமாக குடித்திருந்தான்.
காரணம் சற்று தொலைவில் அவன் கண்படும் தூரத்தில் மிருகேன் யாரிடமோ அமர்ந்து பேசிக் கொண்டிருந்தது தான்.
அவன் மீதிருந்த கோபமும் , வெறுப்பும் ஆதவ்வை வழக்கத்திற்கு மாறாக அதிகமாக மது அருந்த வைத்தது.
நிதானம் சற்று தவற ஆரம்பித்திருந்தது . மோகனாவின் பார்வை அவனது கழுத்து , கைகளில் மற்றும் பர்ஸை ஆராய்ந்தது.
இறுதியாக ஒரு கோப்பையை எடுத்து வாயில் சரிக்கப் போனவனின் கரங்களை இறுகப் பிடித்துக் கொண்டாள் மோகனா.
விழிகள் சிவக்க அவளைப் பார்த்தான் ஆதவ்.
“ போதுமே…! ஏற்கனவே ரொம்ப குடிச்சிருக்கீங்க. இதுக்கு மேல வேண்டாம்…வாங்க இங்க ஏதாவது ரூம் இருந்தா கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோங்க. நான் கேப் புக் பண்ணித் தர்றேன். அப்பறம் வீட்டுக்குப் போகலாம். இப்ப உங்களால ட்ரைவ் பண்ண முடியாது “ என்றவள் சுற்றிலும் பார்த்து விட்டு மூலையில் இருந்த தனி அறையை திறந்து பார்த்தாள். அங்கு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு ஆதரவை கைத்தாங்கலாக அணைத்துக் கொண்டு அறையினுள் நுழைந்தாள்..
தெரிந்தவரிடம் பேசிக் கொண்டே இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தான் மிருகேன். கேலிப் புன்னகை அவனிதழில் தவழ்ந்தது.
அறைக்குள் நுழைந்தவள் அவனை அங்கிருந்த ஒற்றை கட்டிலில் படுக்க வைத்தாள். அவனுடைய முழு பாரத்தை தாங்க முடியாமல் அவன் மீதே விழுந்தாள் மோகனா.
“ ஷப்பா…என்னா வெயிட்..” என்று அவன் மீதிருந்து எழுந்து நின்றவள் அவனை உற்றுப் பார்த்தாள். .
அலையலையான கேசத்தை ஜெல் வைத்து படிய வாரியிருந்தான். கூரிய நாசி, அடர்த்தியாக இருந்தாலும் அழகாக ட்ரிம் செய்யப்பட்ட மீசை, முரட்டு உதடுகள் ஏதோ முணுமுணுத்து கொண்டிருந்தது.
கை கால்களை பரப்பிக்கொண்டு படுத்திருந்தான். அந்த சிறிய கட்டில் அவனது பாதி உடலை மட்டுமே தாங்கியிருந்தது. மீதி உடல் கட்டிலுக்கு வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
மோகனாவிற்கு சிரிப்பு தான் வந்தது.
ஆனாலும் அவனது வசீகரிக்கும் வதனத்தையும் ஆண்மை ததும்பிய உடற்கட்டையும் கண்டு கிறங்கி தான் நின்றாள் பெண்ணவள்.
அவளது நாசி அவன் மீதிருந்த வந்த வாசனையை உள்ளிழுத்து கொண்டது.
அருகிலிருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு கொண்டு அமர்ந்தாள்.
கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சில கணங்கள் ஆதவ்வை இமைக்காமல் பார்த்திருந்தாள்.
“ செம்ம ஹேண்ட்சம்…அழகு….” என்று முணுமுணுத்து அவளது உதடுகள்.
பத்தொன்பது வயது இளமங்கையின் மனதில் சலனத்தை ஏற்படுத்தியிருந்தான் ஆதவ் .
சரியாகச் சொன்னால் கல்லூரி பருவத்தின் இனிமைகளை ரசித்து சிறகடித்து பறக்க வேண்டியவள் பாதை மாறி பயணித்துக் கொண்டிருந்தாள்.
அந்த வயதிற்கே உண்டான க்ரஷ் லிஸ்டில் சேர்ந்திருந்தான் ஆதவ்.
உருண்டு கீழே விழப் போனவனை அணைத்துக் கொண்டு அவனை நேராக படுக்க வைத்தாள்.
நேரமாவதை உணர்ந்து சலனப் படும் மனதினை அதட்டி தள்ளி வைத்து விட்டு அவனது கழுத்திலிருந்த தங்கச் சங்கலியை கழற்றி எடுத்தாள்.
கைகளை பிடித்துக் கொண்டு அவனது மோதிர விரலில் இருந்து மோதிரத்தை உருவி எடுத்துக் கொண்டாள்..அவனை மெல்ல திருப்பி பேன்ட் பாக்கெட்டிலிருந்து பர்ஸை எடுத்துப் பார்த்தாள்.
கற்றை கற்றையாக பணம். அவளது விழிகள் விரிந்தன.
இவ்வளவு பணம் மற்றும் தங்க அணிகலன்களை சம்பந்தமில்லாத இடத்திற்கு ஏன்அணிந்து வந்திருக்கின்றான் என்பதை யோசிக்க மறந்தாள் மோகனா.
அவனது கன்னத்தை தட்டியவள் , “ஆத்ரேயன் ..ஆத்ரேயன்…கொஞ்சம் முழிச்சி பாருங்களேன்….தங்கச்சியோட படிப்புக்கு செக் கொடுக்குறேன்னு சொன்னீங்களே….! செக் கொண்டு வந்தீங்களா?” என்று அப்போது தான் நினைவுக்கு வந்தவளாய் அவனை உலுக்கிக் கேட்டாள்.
“ வந்தவுடனேயே கேட்டிருக்கணும். அதை விட்டுட்டு தேவையில்லாம பேசி நேரத்தை வேஸ்ட் பண்ணிட்டேன் …ச்சை…! இப்ப செக் கொண்டு வநதுருக்கானா ? இல்லையான்னு தெரியலையே…? “ என்று வாய் விட்டு புலம்பியவள் அவனை மீண்டும் ஒரு முறை புரட்டி போட்டாள்.
அவனது சட்டைப்பை மற்றும் பேன்ட் பாக்கெட்டை பரிசோத்தித்தாள்.
ஆதவ் அதிகமாக குடித்திருந்தாலும் நடப்பதை ஓரளவிற்கு உணர முடிந்தது.
உதடுகள் லேசாக புன்னகைத்து கொண்டது.
“ஆத்ரேயன்…ப்ளீஸ்…! கொஞ்சம் முழிச்சு பாருங்களேன்..” என்றவள் நேரமாவதை உணர்ந்து அவசரமாக அவனை எழுப்பி அமர வைக்க முயன்று அவன் மீதே தடுமாறி எக்குத்தப்பாக விழுந்தாள்.
அவளது மென்மையை உணர்ந்த ஆதவ்வின் உடல் ஒரு கணம் சிலிர்த்துக் கொண்டது.
அவளது செய்கை வேடிக்கையாக தான் இருந்தது.
அவள் செய்வதனைத்தையும் உணர முடிந்தவனால் அதற்கு எதிர்வினையாற்றுவதற்கு எழுந்து கொள்ள அவனது உடல் ஒத்துழைக்கவில்லை.
இதற்கிடையில் சரியாக தாளிடாத கதவின் வழியாக ஏதோ ஒரு உருவம் இருவரும் நெருக்கமாக இருந்ததை புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றதை இருவரும் உணரவில்லை
அவனிடம் போராடி பார்த்தவள் ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் அமர்ந்து விட்டாள். அவளது ஆடை நெகிழ்ந்திருந்ததையோ…தலைமுடி கன்னாபி்ன்னாவென்று கலைந்திருந்ததையோ உணரும் நிலையில் அவளில்லை.
கையிலிருந்த தங்கச் சங்கிலி, மோதிரம் மற்றும் பர்ஸை பார்த்து ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.
“ சரி..தேறுன வரைக்கும் போதும்…இனியும் இங்க இருந்தா நமக்கு தான் ஆபத்து…” என்றவள் மூலையில் வைத்திருந்த கருப்புத் தோள்ப்பையை திறந்து அதிலிருந்த மாற்றுடையை கையில் எடுத்தாள்.
“இங்கேயே சேன்ஜ் பண்ணிக்கலாமா? இல்ல ரெஸ்ட் ரூமுக்கு போகலாமா?”என்று யோசித்தவள் தலையை மட்டும் திருப்பி ஆதவ்வைப் பார்த்தாள்.
விழி மூடி படுத்திருந்தான். அசைவேயில்லை அவனிடம்.
“ இவன் தான் நல்லா தூங்குறானே…நாம இங்கேயோ சேன்ஜ் பண்ணிட்டு எஸ்கேப் ஆகிடலாம்…”என்றவள் அணிந்திருந்த ஆடையை கழற்றி விட்டு மாற்றுடையை அணிந்து கொண்டிருந்தாள்.
சுவற்றைப் பிடித்துக் கொண்டு மெல்ல எழுந்து அமர முயன்றவனுக்கு அவளது பிம்பம் மங்கலாக தெரிந்தது.
கண்களை கசிக்கிக் கொண்டே கட்டிலிலிருந்து முன்னால் நகர்ந்து அவளது கைகளை பிடித்து இழுத்தான்
அவளோ அதிர்ந்து போய் அவனைப் பார்த்தாள். அறைகுறை ஆடையுடன் நின்றிருந்தவளுக்கு ஒன்றம் புரியவில்லை.
“ என்…என்னேட செயின்… ..க்க்…..மோ. . மோ…திழம்..சாரி…சாரி..மோதிரம் , பரழ்ஸ் எல்லாத்தையும் கொ…க்க்க்…கொடுத்துட்டு…போ…. மரியாதை யா…” என்றவன் அவளது கைகளை வேகமாக மீண்டும் இழுத்தான்.
ஆடையை பிடித்துக் கொண்டே அவன் மீது மோதி விழுந்தாள் மோகனா.
“ப்ளீஸ்…! விடுங்க…முதல்ல .ட்ரெஸை சரி பண்ணிக்குறேன்…விடுங்க…” என்றாள் நடுங்கும் குரலில்.
ஆதவ்வின் துரதிருஷ்டமோ…என்னவோ…மீண்டும் வெளியே நின்று கொண்டிருந்த அவ்வுருவம் உள்ளே நடப்பதை காணொளியாக படமெடுத்து வைத்துக் கொண்டது..
ஆதவ்வின் அணைப்பில் நெளிந்து கொண்டிருந்தாள் பெண்ணவள்
“ ப்ளீஸ் ஆத்ரேயன்…! விடுங்க…நான் ட்ரெஸை முதல்ல சரி பண்ணிக்குறேன் அப்பறமா உங்க பொருளைத் தர்றேன்..”என்றவளை விடாமல் தன் கைவளைவுக்க்குள் வைத்திருந்தான் ஆதவ்.
தோளிலிருந்து நிற்காமல் வழிந்து கொண்டிருந்தது அவளது ஆடை.
இம்மாதிரியான சூழ்நிலையை அவள் எதிர் கொண்டதே இல்லை என்பதினால் முதன்முதலாக பயம் பிடித்துக் கொண்டது அவளுக்கு.
அவனது பிடி அத்தனை இறுக்கமாக இருந்தது
“ நீ ஒரு…கே…கேடி…ன்னு…. தெரியும்.. அதான்…உன்னை பிடிக்க….. இப்படி…. ட்ராமா..க்க்.. பண்ணுனேன்..ம்ம்…சீக்கிரம் என்னோட….பொரு.. பொருளையெல்லாத்தையும்….கொடு….யூ…சீட்டர்.. யூ…சீட்டர்…”என்றவன் அவளை விடாமல், “ எங்க …எங்க…ஒளிச்சு …வச்சிருக்க…?” என்றான்.
விக்கிக் கொண்டே அவளது தோள் பகுதி…இடை பகுதி…என தனது கரங்களால் அவளை சோதனையிட துடித்துப் போனாள் மோகனா.
முதன் முறையாக ஒரு ஆணின் கரங்கள் அத்துமீறி தன் உடலில் படுவதை ஏற்க முடியாது கண்கள் கலங்க ஆரம்பித்தது.
கற் சிலையாக அவள் நிற்க. அவனோ நிதானமின்றி சோதனை இடுகின்றேன் என்ற பெயரில் அவளுடலில் அவனது கரங்களை படர விட்டுக் கொண்டிருந்தான்..
அவளது வெளித்தோற்றம் மட்டுமே வயதிற்கு மீறிய வளர்ச்சியை காட்டுவதாக இருந்தது. ஆனால் மனதளவில் சிறு பெண்ணாக இருந்தவளுக்கு அவனது செய்கை அருவருப்பை தான் தந்தது.
ஒரு கட்டத்தில் அவனது கரம் எல்லைத் தாண்ட சுயவுணர்வடைந்தவள் பட்டென்று அவனது கரங்களை தட்டி விட்டு அவனை கட்டிலில் தள்ளினாள்.
மேசையில் வைத்திருந்த அவனது பொருட்களை அவன் மீது வீசி விட்டு கலங்கிய கண்களுடன் ஆடையை திருத்திக் கொண்டு வெளியேறினாள். அப்போதும் கூட கதவு தாழிடவில்லை என்பதை உணரவில்லை அவள்.
கட்டிலில் விழுந்தவனுக்கு மீண்டும் எழுந்து கொள்ள முடியவில்லை .தலை சுற்றிக் கொண்டு வர தலை தாங்கிக் கொண்டு கட்டிலில் மல்லாந்து விழுந்தான்.
பொருட்களை மட்டும் தன்னருகில் வைத்துக் கொண்டவன் ஏதேதோ பிதற்றிக் கொண்டு உறங்கிப் போனான்.
வெளியே வந்த மோகனாவிற்கு உடல் உதறத் தொட்ங்கியது.
எத்தனையோ பேரை சாமர்த்தியமாக ஏமாற்றி பணம் பறித்தவளுக்கு இம்மாதிரியான சூழ்நிலை வந்ததேயில்லை என்று கூறி விட முடியாது ..வராத அளவிற்கு அவள் சூழ்நிலையை இலகுவாக கையாண்டாள்.
ஆனால் இன்று கையும் களவுமாக அவனிடம் மாட்டிக் கொண்டதை விட அவனது நெருக்கமும், ஆடையின்றி. முழுமையாக தன்னை பார்த்து விட்டான் என்கிற எண்ணமும் அவளுக்கு பதற்றத்தையும் அழுகையையும் வரவழைத்தது.
உதடு கடித்து அழுகையை கட்டுப்படுத்தியவள் ஆட்டோவைப் பிடித்து கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
தண்ணீர் குடிக்க எழுந்த கீதாஞ்சலி அலைப்பேசியை எடுத்து நேரத்தை பார்த்து விட்டு தனது வாட்ஸ்அப்பை திறந்தாள்.
அவளுக்கு வந்திருந்த குறுஞ்செய்தியை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள் புதிய எண்ணிலிருந்து ஏதோ செய்தி வைத்திருக்கவும் அதனை திறந்து பார்த்தாள்.
அதில் ஆதவ்வை மோகனா அணைத்துக் கொண்டு செல்லும் புகைப்படம் வந்திருந்தது. அதே போல் மேலும் இரண்டு புகைப்படங்கள் வந்திருக்கவே அவளது முகம் இறுகிப் போனது.
“ எத்தனை தடவை சொன்னாலும் கேக்க மாட்டான். இதென்ன புதுப்பழக்கம்னு தெரியலை.. வரட்டும் அவன்..” என்று முணுமுணுத்தவளுக்கு நேரம் இரவு இரண்டைக் தொட்டுக் கொண்டிருந்தது நியாபகம் வர வேகமாக அவனது அறைக்குச் சென்றாள்.
ஆதவ்வின் அறை திறந்தேயிருந்தது. அவன் வந்ததிற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
“ இன்னும் இவன் வரலையா…கால் பண்ணி பாப்போம் “ என்று சலித்துக் கொண்டே தனது அலைப்பேசி எடுத்து அவனுக்கு அழைத்தாள்.
அழைப்பு சென்று கொண்டிருந்தே ஒழிய ஏற்கப்படவில்லை.
“ இடியட் ஆதவ்…” என்று திட்டிக் கொண்டு மீண்டும் தனக்கு வந்த குறுஞ்செய்தியை பார்த்தாள்.
அதில் ஆதவ் சற்று நிதானமின்றி இருப்பது தெளிவாக தெரிந்தது .
அதுமட்டுமின்றி அக்குறுஞ்செய்திக்கு கீழே , “ லவ் பேர்ட்ஸ் “ என்று தட்டச்சு செயயப்பட்டு ஹார்டின் பறக்க விட்டிருந்தது .
அப்போது தான் அனுப்பிய எண்ணை நன்றாக ஊன்றி கவனித்தாள்.
” ஷிட்..போயும் போயும் இவன் கண்ணுலயா ஆதவ் படணும் …இது வெளியே தெரிஞ்சா எவ்வளவு அசிங்கம். போலீசா இருந்துட்டு கொஞ்சம் கூட ரெஸ்பான்சிபிலிட்டியே இல்ல இவனுக்கு…”என்று அவனுக்கு அர்ச்சித்தவள் தனதறைக்குள் நுழைந்து கொண்டாள்.
மறுநாள் விடியலிலேயே நாளிதழ்கள், சமூக ஊடகங்கள் என்று அனைத்திலும் “ சென்னை மாநகர ஏசிபி ஆதவ் ஆத்ரேயன் இளம் பெண்ணிடம் அத்துமீறல் “ என்ற செய்தி கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டு வெளிவந்தது.
சமூக ஊடகங்களில் ஆதவ் மோகனாவிடம் நடந்து கொண்ட விதத்தை தவறாக சித்தரித்து வெளியிட்டிருந்தனர்.
அதில் ஆதவ் மற்றும் மோகனாவின் முகம் காணொளியில் தெளிவாக தெரிந்தது. அவளது கலங்கிய முகத்தை பார்ப்பவர்களுக்கு தவறாக தெரியும்படி சித்தரிக்கப்பட்டிருந்தது.
இவை எதையும் அறியாத ஆதவ் போதை சற்று தெளிந்ததும் கார் சாவியை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு கிளம்பினான்.
“ ச்சை…! ஃநைட் ஏன் அவ்வளவு குடிச்சி தொலைச்சேன்…. எல்லாம் அந்த மிருகேந்திரனை பார்த்ததுனால வந்த வினை….இல்லன்னா அந்த கேடி நல்லா மாட்டிருப்பா. எஸ்கேப் ஆகிட்டா” என்று முணுமுணுத்தவனுக்கு இரவு போதையில் மங்கலாக பார்த்த அவளது உருவம் கண்முன்னே தோன்றி உடலை உஷ்மேற்றியது.
“ஒ..ஒ.காட்.. இதென்ன புதுசு புதுசா ஏதேதோ தோணுது…” என்று தலை சிலுப்பிக் கொண்டு காரை ஓட்டினான்.
அவனது அலைப்பேசிக்கு அழைப்பு வர எடுத்துப் பார்த்தான். ருத்ரன் தான் அழைத்திருந்தான்.
அவனது அழைப்பினை ஏற்றவன் , “சொல்லுங்கப்பா…” என்றான்.
“ எங்க இருக்க?”
“ கொஞ்சம் ஹேங் ஓவர்…வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கேன்…” என்றான் சிறு தயக்க்த்துடன்.
எதுவும் பேசாமல் வைத்து விட்டான் ருத்ரன்.
யோசனையுடன் காரை ஓட்டிக் வந்தவன் காரேஜில் காரை நிறுத்தி விட்டு வீட்டினுள்ளே நுழைத்தான்.
வீடே மயான அமைதியாக இருந்தது.
“ஜானு டார்லிங்…” என்று அழைத்துக் கொண்டு வந்தவன் சோஃபாவில் இரு கைகளையும் கட்டிக் கொண்டு குனிந்து அமர்ந்திருந்த ருத்ரனைப் பார்த்தான்.
மறுபுறம் கீதாஞ்சலி முகம் இறுகிப் போய் அமர்ந்திருந்தாள். ஜானகி சமயலறையினுள் ஏதோ உருட்டிக் கொண்டிருந்தது தெரிந்தது.
ஏதோ சரியில்லை என்று புரிந்து கொண்டு ருத்ரனருகில் வந்தவன், “என்னாச்சு ப்பா…?” என்றான்.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்து விட்டு பார்வையை சற்று தள்ளி நின்றிருந்த மோகனாவின் மீது பதித்தான் ருத்ரன்.
தந்தையின் பார்வையை பின் தொடர்ந்தவனின் விழிகள் மோகனாவைக் கண்டு திகைத்து நின்றது.
“அப்பா…இது…” என்று ஆரம்பிக்கும் முன்பே பளாரென்று ஆதவ்வை அறைந்திருந்தான் ருத்ரன்.
கன்னத்தை பிடித்துக் கொண்டு அதிர்ந்து பார்க்கும் போதே நாளிதழ்களை தூக்கி அவனது முகத்தில் விட்டெறிந்தான் ருத்ரன்..