அத்தியாயம் -10

கைகளை பின்னால் கட்டிக்கொண்டு ஜன்னலருகே நின்று வெளிப்புறத்தை வெறித்துக் கொண்டிருந்தாள் கீதாஞ்சலி.

அத்தனை கோபம் அவளுள். மீண்டும் மீண்டும் அவனிடம் தோற்றுப் கொண்டேயிருப்பது அவளுள் பெரும் பிரளையத்தையே ஏற்படுத்தியிருந்தது. ஆதவ் பட்பட்டென்று பேசி விடுகின்றான். ஆனால் கீதாஞ்சலியோ அமைதியாக இருக்கும் எரிமலையை போன்று தனக்குள்ளேயே கோபம் என்னும் எரிமலைக் குழம்பை பதப்படுத்தி வைத்திருக்கின்றாள். அது வெடித்து சிதறும் நேரம் வெகு தூரத்தில் இல்லை என்பதை அறியவில்லை அவள்.

ஒவ்வொரு முறையும் காவல்துறையின் கண்களை ஏமாற்றி விட்டு கண்கட்டு வித்தை நிகழ்த்தும் மிருகேனின் மீது வன்மமும் கோபமும் அதிகரித்து கொண்டேயிருந்தது.

“ மே ஐ கம்  இன் மேம்…” என்ற குரல் கேட்டு திரும்பினாள் கீதாஞ்சலி.

ஆதவ்வுடன் ஒரு காவலர் நின்றிருந்தார்..

“ எஸ்…கம்..இன்..” என்றவள் தனது எண்ணவோட்டங்களை தள்ளி வைத்து விட்டு இருக்கையில் அமர்ந்தாள்.

“ப்ளீஸ் பீ சீடட்….ஆதவ்…நீங்களும் தான் முகிலன்..”

“ மேடம்…இந்த தடவை கடத்தல் பொருள் கிடைச்சும் கூட ஒண்ணும் பிரயோஜனம் இல்லை… நாங்க அரெஸ்ட் பண்ணின அந்த ஆள்…தன்னோட சுயலாபத்துக்காக தான் யானைத் தந்தத்தையும் மரகதக் கல்லையும் கடத்தினேன்னு சொல்றார் மேடம். “ என்றார் முகிலன்.

ஆதவ் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்

முகலின் பேசுவதை பொறுமையாக கேட்டவள் ஆதவ்வின் புறம் திரும்பி,  “என்ன மிஸ்டர் ஆதவ்..? ஏன் அமைதியா இருக்கீங்க?. போன தடவை என்னோட தலைமையில் நடத்தின தேடுதல்ல தவறு இருந்திருக்கலாம்ன்னு சொன்னீங்க. இந்த தடவை தி கிரேட் ஏ சி பி ஆதவ் ஆத்ரேயன் நேர்ல போய் தேடியும் ஒன்னும் கிடைக்காம திரும்ப வந்திருக்கீங்களே…! சோ..சேட். இப்ப புரியுதா? நான் ஏன் அந்த மிருகேந்திரனோட புத்திசாலித்தனத்தை அடிக்கடி சொல்லி காமிக்குறேன்னு..நீங்க ஒரு வழியில் யோசிச்சா அவன் பத்து வழியில் யோசிப்பான். நீங்க நூறு வழியில் யோசிச்சா…அவன் பத்தாயிரம் வழியில் யோசிப்பான். தட்ஸ் ஓகே..உங்களுக்கே தெரியுது…இந்த யானைத் தந்தமும் மரகத கல்லும்  நம்மளை திசை திருப்பறதுக்கான நாடகம்ன்னு…எப்படியோ நம்ம கண்ணுல மண்ணைத் தூவிட்டு சரக்கை சேஃபா மூவ் பண்ணிருக்கான். இந்த வழக்குல தலையை பிச்சிக்கிட்டு‌  இருந்துட்டு மத்த கேஸூகளை கோட்ட விட்டுட வேண்டாம். குவாரி கேஸ் எந்த அளவுல இருக்கு ? அடுத்த வாரம் திங்கட்கிழமை பசுபதியை கோர்ட்ல புரோடியூஸ் பண்ணனும். இந்த மிருகேந்திரனை கொஞ்சம் விட்டுப் பிடிப்போம். வேற ஏதாவது அப்டேட்ஸ் இருக்கா…” என்றாள்..

“ ரெண்டு நாள்‌ முன்னாடி பசுபதியோட ஆளை மிருகேந்திரனோட ஆட்கள் போட்டுத் தள்ளியிருக்காங்க. அது மட்டுமில்ல பசுபதி சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்சறதை வீடியோ ஷூட் பண்ணி போலீஸூக்கு அனுப்பியிருக்காங்க. ஆனா விசாரிச்சு பாத்ததுல பசுபதியோட ஆள் யாரும் சாகவேயில்லைன்னு சொல்றாங்க. ஆனா செத்தது பசுபதியோட நெருங்கிய அல்லக்கை ஒருத்தன் தான்..” என்றான் ஆதவ்.

“ பசுபதியோட தலைவன் பத்ரனுக்கும் மிருகேனுக்கும் தான் பெரிய பிரச்சினை ஓட்டிட்டு இருக்கு…ஆனா வெளியே தெரியாத மாதிரி கமுக்கமாக ரெண்டு பக்கமும் இருக்காங்க..” என்றார்‌ முகிலன்.

“ ம்ம்…ஓகே … மிருகேன் கேஸை அப்படியே விட்டுடுங்க. கொஞ்ச நாள் எதுவும் செய்ய வேண்டாம். பசுபதியோட கேஸை மட்டும் பாருங்க…இப்ப நீங்க கிளம்பலாம்..” என்றாள் கீதாஞ்சலி.

தமிழ்நாட்டின் எல்லையை தாண்டியவுடன்  குவளைகள் அனைத்தையும்  பெரிய கப்பலுக்கு வேக வேகமாக மாற்றி விட்டு கப்பலுக்கு மாறிக் கொண்டான் மிருகேன். 

அவனுக்குள்ளும் ஏதோஒன்று  நெருடலாக இருந்தது. கண்டிப்பாக இம்முறை தன்னைப் பிடிக்க அதிக வாய்ப்பிருந்தும் கூட வேண்டுமென்றே தன்னை பிடிக்க அமைந்த வாய்ப்பை தவற விட்டது போல தோன்றியது அவனுக்கு. 

ஆனால் கீதாஞ்சலி அவ்வளவு  லேசில் விட்டுவிட மாட்டாள் என்பது திண்ணமாக தெரிந்தது. 

அவளது செயலில் குழப்பங்கள் இருந்தாலும் ஏதோ ஒன்றிற்காக காத்திருக்கின்றாள் என்பது உறுதியானது .

பலவாறு யோசித்துக் கொண்டே தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து அலைப்பேசியை எடுத்து வஜ்ரவேலிற்கு அழைத்தான்.

“ சொல்லு மிருகேன்…சரக்கு எல்லாமே சேஃப் தானே? முக்கியமா நீ? போலீஸ் கெடுபிடி எப்படியிருந்தது?”

“ அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லைங்கய்யா. எல்லாமே சேஃப் தான். நாளை கழிச்சு சுலவேசி( sulawesi) தீவுக்குள்ள போய்டுவோம். பார்ட்டி ஷிப்போட ரெடியா இருக்காங்க. அவங்களோட ஆட்கள் சில பேர் மட்டும் நம்ம கப்பலுக்கு வந்து சரக்கெல்லாம் சரியா இருக்கான்னு பாத்துட்டு… ட்ரஸ்ட் பேர்ல் கொஞ்சம் அமௌண்ட், ஹாஸ்பிட்டல் பேர்ல் கொஞ்சம் அமௌண்ட், ஃபார்மா கம்பெனி பேர்ல் கொஞ்சம்னு பணத்தை பிரிச்சு பிரிச்சு‌ போட்டுடுவாங்க. இதுல பிரச்சினை ஏதும் வராதுங்கய்யா…வேலை முடிஞ்சவுடனே அடுத்த ரெண்டு நாள் ல நான் அங்க கிளம்பி வந்துடுவேங்க…” என்றான் பவ்யமாக.

அவர்  மீது எப்போதுமே மரியாதை கலந்த அன்பு அவனுக்கு இருக்கும். 

விவரமில்லாத வயதில் யாருமில்லாமல் ரோட்டோரத்தில் கிழிந்த துணியுடன் சுற்றித் திரிந்த அவனை அழைத்து வந்து பசியாற்றி, படிக்க வைத்தவர் வஜ்ரவேல். 

மேற்படிப்பு  முடித்தவுடன் வஜ்ரவேலிற்கு சொந்தமான மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனத்திலேயே மிருகேனை பணியில் அமர்த்தினார்.‌ 

இரு வருடங்கள் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. வியாபார நுணுக்கங்களை கற்றுக் கொண்டு ஆர்வமாக பணியாற்றிக் கொண்டிருந்தவனுக்கு  வஜ்ரவேலின் நிழலுகமான கடத்தல் தொழிலையும் கையில் எடுத்துச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 

அவர் எவ்வளவோ மறுத்தும் கூட அவருக்கு உதவியாக சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டான்.

 பகுதி நேரமாக செய்து கொண்டிருந்தவன் சில மாதங்களில் முழு நேரமாகவே அதனை செய்ய ஆரம்பித்து விட்டான். 

வஜ்ரவேலிற்கும் முன்பு போல் இறங்கி வேலை செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. எனவே அரை மனதுடன் அனைத்து பொறுப்புகளையும்‌ மிருகேந்திரனின் கைகளில் ஒப்படைத்து விட்டார். 

வஜ்ரவேலை விட ஒரு படி‌ மேலே சென்று  புத்திசாலித்தனத்தை காட்டினான் மிருகேந்திரன். 

என்ன தான்‌ வஜ்ரவேல் சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்தாலும் ஏழை எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்து வந்தார். 

இல்லை என்று வந்தவர்களுக்கு வாரி வழங்கினார். பல ஏழைகளின் பசியை போக்க அன்னதான சத்திர கூடங்கள், இலவச மருத்துவமனை, ஏழைக் குழந்தைகளில் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொண்டு மக்கள் மனதில் உயர்ந்த இடத்தில் இருந்தார். அவரைப் பற்றி நன்கு அறிந்த மிருகேந்திரனும் அவரது வழியை பின்பற்றி மக்களின் செல்வாக்கைப்‌ பெற்றான்.  

ஆனால் பரிதாபம் காலல்துறையின் வெறுப்பினையும் அளவிற்கு அதிகமாக சம்பாதித்துக் கொண்டான்.

வெற்றிகரமாக யானைத் தந்தங்களையும்‌ , மரகத் கற்களையும் கைமாற்றி விட்டு ஊர் திரும்பியிருந்தான் மிருகேந்திரன்.

மோகனாவிடம் இருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது  ஆதவ்விற்கு. ஏனோ அவனுக்கு ஒரு விதமான சலிப்பாக இருந்தது.

இருவரும் புகைப்படத்தை பகிர்ந்து கொள்ளாமலேயே இணையத்தில் உள்ள அந்த செயலி மூலம் பேசிக் கொண்டிருந்தனர்.

‘வரும் சனிக்கிழமை ஏ.எஸ் பஃப்பில் சந்திக்கலாமா?’ என்று கேட்டிருந்தாள் மோகனா.

அவனுக்கிருந்த மனநிலையில் பஃப்பிற்கு செல்ல வேண்டாம் என்று‌  நினைத்தான். 

மறுப்பு சொல்ல தட்டச்சு செய்யச் சென்றவன் ஏதோ ஒரு நினைவில் சரியென்று என்று அனுப்பி விட்டான். 

ஓரிரு முறை அவளே வேறு வேறு அலைப்பேசி எண்ணிலிருந்து அவனுக்கு அழைத்துப் பேசியிருந்தாள். 

அடிக்கடி ஏன்‌ எண்ணை மாற்றுகிறாய் என்று கேட்டதற்கு அலைப்பேசி பழுதாகி விட்டது என பூசி மொழுகினாள். 

ஆதவ்விற்கு தனது அலைப்பேசி எண்ணை கூட கொடுக்கவில்லை அவள்.

ஆனால் அவனது அலைப்பேசி எண்ணை அவள் வாங்கியிருந்தாள்.

சனிக்கிழமையும் வந்தது.

கருப்பு நிற டீ சர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து கிளம்பிக் கொண்டிருந்தான் ஆதவ். வழக்கத்திற்கு மாறாக கழுத்தில் தங்கச் சங்கிலி, தங்க கைக்கடிகாரம், பர்ஸ் முழுவதும் பணம் என ஒரு தினசாக கிளம்பியவனை தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த கீதாஞ்சலியும் ஜானகியும் ஒரு மார்க்கமாக பார்த்தார்கள்.

“ எங்க போறேன்னு கேக்கக் கூடாது…ஆனா பஃப்புக்கு போகாதன்னு நான் சொல்லலாம் இல்லையா?” என்றாள் கீதாஞ்சலி.

“ என்னடா…அங்க தான் போறியா நீ?” அதுக்கு எதுக்கு நகை கடை விளம்பரம் மாதிரி எல்லாத்தையும் மாட்டிண்டு போற?” என்று கோபமாக எழுந்தாள் ஜானகி.

“ ஜானு டார்லிங்…ப்ளீஸ்…! “ என்றவன் கீதாஞ்சலியிடம் திரும்பி, “ ஒரு லேடி கேடியை தான்‌ பிடிக்க போறேன். உனக்கு அப்பறமா முழு விபரத்தையும் சொல்றேன்…இப்பவேயிருந்து விசாரணையை ஆரம்பிக்காதே..” என்றவன் வேக வேகமாக கேஷூவல் ஷூவை மாட்டியவன் சுவற்றில் மாட்டியிருந்த ருத்ரனின்  பி.எம்‌.டபிள்யூவின் சாவியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

“ டேய்…டேய்…! அப்பாவாண்ட காரை எடுத்துண்டு போறேன்னு சொன்னியா டா? அவருக்கு எங்கானும் போக வேண்டியதாயிருக்கும்..”  என்றவளது குரல் காற்றில் கரைந்து தான் போனது.

மாலை நேர கேளிக்கை விருந்து ஆரம்பமாகியிருந்தது அந்த ரெஸ்டோ பாரில்.

ஆங்காங்கே இளசுகளும், பெருசுகளும் ஜோடியாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

உள்ளே நுழைந்தவனின்  பார்வை அனைவரையும் வட்டமடித்தது .

அவனது அலைப்பேசி ஒலிக்கவே எடுத்துப் பார்த்தான். புதிய எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

“ ஹலோ…! “ என்று எப்போதும் போல ஆளுமையாக ஒலித்தது அவனது குரல்.

அதில் ஒரு கணம் மறுமுனையிலிருந்த மோகனாவின் புருவம் சுருங்கி விரிந்தது.

 “ நான் தியா பேசுறேன்…வந்துட்டீங்களா? உங்க குரல் ஏன் கோபமா இருக்கு?” என்றாள் சரியாக.

.குரலை உயரத்திய தனது மடத்தனத்தை நொந்தவன், “ சாரி ஹனி…கொஞ்சம் வெர்க் டென்ஷன் அதான். நான் வந்துட்டேன். ப்ளாக் டீ சர்ட் ஜீன்ஸ் ல இருக்கேன். டி ஜே கிட்ட நிக்குறேன். நீ எங்க இருக்க?” என்றான்.

“ ஹாய்…! நான் உங்களைப் பாத்துட்டேன்.‌ லெப்ட் சைட்ல பாருங்க. டார்க் ப்ளூ கவுன்..” என்றவள் திரும்பி   நின்றிருந்தவனை நோக்கி வந்தாள்.

சரியாக அவனும் திரும்பி அவளைப் பார்த்தான்.

அவனைப் பார்த்தவளின் விழிகள்  ஒரு கணம் இமைக்க தான் மறந்தது. 

இறுகப் படித்திருந்த டீ சர்ட்டை மீறி அவனது தசைகள் கோளங்கள் திமிறிக் கொண்டிருந்தது. அடர்த்தியான அலையலையான தேசமும்,  அளவான மீசையும் அவனது முகவெட்டும் அவளுள் சிறு சலனத்தை ஏற்படுத்தியது.. 

உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கின்றான் என்பது அவன் அணிந்திருந்த டீ சர்ட்டில் நன்கு தெரிந்தது. அவன் மீது வந்த வாசனை திரவியத்தின் மணம் அவளது நாசி உள்வாங்கிக் கொண்டு விழிகளை சற்று மூட வைத்தது.

அவள் அசையாமல் நிற்கவும் , “ஹலோ…! மிஸ்..” என்று அவள் முகத்தின் முன்பு சொடக்கிட்டான்.

“ ஹான்…ஹாய்…! ஐ யம் தியா..” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டாள்.

“ ஹாய்‌…!ஐ யம் ஆத்ரேயன்…” என்று பாதி பெயரை மட்டும் அவனிடம் கூறினான்.

“ வாங்க..அங்க உன் போய் பேசலாம்..” என்றவள் அவனை அழைத்துக் கொண்டு மூலையில் போடப்பட்டிருந்த சோஃபாவில் கால் மீது கால் போட்டு அமர்ந்தாள்.

முட்டிக்கு சற்று மேலிருந்தது அவள் அணிந்திருந்த ஆடை. அடர் நீல நிற கையில்லா கவுனை அணிந்திருந்தாள்.

முதலில் அவனது கவனத்தில் பதிந்தது அவளது வாழைத்தண்டை ஒத்த வெண்ணிற வழுவழுப்பான கால்கள் தான். 

நிதானமாக அவனது பார்வை பாதங்களில் இருந்து மேலேறியது. சற்று பூசினார் போல் உடல்வாகு . ஆடையின் கழுத்து பகுதி சற்றே கீழிறங்கி தான் இருந்தது. பார்வை ஒரு கணம் அங்கு தங்கி நின்று பிறகு முகத்தை அளவெடுத்தது. கன்னங்களிரண்டும் ஆப்பிள் பழங்களை வெட்டி வைத்தது போல சிவந்து சற்று உப்பியிருந்தது. கன்னத்தை கடித்து வைக்கத் தோன்றிய மனதை தலையை உலுக்கி சமன்‌ படுத்திக் கொண்டான்.

சில கணங்கள் ஒருவரை ஒருவர் பார்வையினால் அளவெடுத்துக் கொண்டிருந்தனர்.

அவளே பேச்சினை ஆரம்பித்தாள்

“ நீங்க சாட் பண்ணினதை வச்சி நீங்க கொஞ்சம் வயசனாவரா இருப்பீங்க ன்று நினைச்சேன். ஆனா இவ்வளவு ஸ்மார்ட்டா ..யங்கா இருப்பீங்கன்னு நினைக்கவேயில்ல…யூ ஆர்‌லுக்கிங்  சோ. ஹாட்‌ அண்ட் ஹேண்ட்சம்..” என்றவள் எவ்விமான   கூச்சமும் இன்றி அவனருகே நெருங்கியமரந்தாள் .

அவளது செயலில் முதலில் திடுக்கிட்டாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் அவனும் அவளை நெருங்கியமர்ந்தான்.

ஏதேதோ அர்த்தமில்லாத பேச்சுக்கள். பொதுவாக பெண்களின் பின்னால் சுற்றும் ஆட்களை கண்டால் அறவே வெறுப்பவன். இன்று நேரம் போவது கூட தெரியாமல் அவளுடன் அமர்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்

அவள் தான் அதிகம் பேசியது.

 பேசும்‌ போதும் நரத்தமானடும் அவளது நீண்ட விழிகளையும் இளஞ்சிவப்பு நிற உதட்டுச் சாயம் பூசப்பட்ட உதடுகளையும் ரசித்துக் கொண்டிருந்தானா அல்லது ஆராய்ந்து கொண்டிருந்தானா அவனுக்கே வெளிச்சம்.

சிறிது நேரத்தில் மெல்லிய இசை டி ஜே வில் ஒலிக்க ஆரம்பிக்க இளஞ்ஜோடிகள் இசைக்கேற்ப நடனமாட ஆரம்பித்தனர்.

நேரம் செல்ல செல்ல மது வகைகள் பரிமாறப்பட்டன. இசையின் அதிர்வுகள் அதிகரித்தது.

“டான்ஸ் பண்ணலாமா?” என்றாள்.

“ எனக்கு டான்ஸெல்லாம் வராது.” என்றான் ஆதவ்

“ அட..பரவாயில்ல வாங்க. ஜஸ்ட் என்னோட ஹிப்பை பிடிச்சிக்கோங்க.. ரெண்டு கையையும் பிடிச்சிட்டு டான்ஸ் பண்ணுங்க. வந்துடும் அவ்வளவுதான்..” என்றவள் சொன்னதோடு‌ மட்டுமில்லாமல் அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றாள்.

அவளது அதிரடியில் அவன் தான்‌ சற்று விதிர்த்துப் போனான்.

 ‘தன்னைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. யார் என்றும் தெரியவில்லை இவளுக்கு. ஒரு சில மாதங்களே ..அதுவும் நேரில் பார்த்துக் கூட பழகவில்லை. ஏதோ நெடுநாட்களாக பேசிப் பழகியதைப் போல நடந்து கொள்கிறாளே…!’என்று வியந்தான்

சில மாதங்களுக்கு முன்பு அந்த பெரியவரிடமும் இப்படித் தான் அவள் நடந்து கொண்டாள் என்பது நினைவுக்கு வந்ததும் அவளை இளக்காரமாக பார்த்தான். 

பெண்களைப் பற்றி பெரிதாக அபிப்ராயம் அவனுக்கு என்றுமே இருந்ததில்லை.‌ அதற்கு இன்னமும் தீனிப் போட்டுக் கொண்டிருந்தது அவளது செயல்பாடுகள். 

பெண்களைப் பற்றிய அவனது கருத்தில் விதி விலக்காக இருப்பது அவனது தாய் ஜானகியும்,  தமக்கை கீதாஞ்சலி மட்டுந்தான்.

“டிரிங்க் பண்ணுவீங்களா..?” என்று ஆரம்பித்தாள்

“ எப்பவாது…தான்..”

“ இப்ப எடுத்துக்கலையா?” என்றவளைப் பார்த்து ஏளனமாக வளைந்தது அவனது இதழ்கள்.

“ இப்ப தேவையில்லை. ஆமா..இதுக்கு முன்னாடி என்னை நீ‌ பார்த்ததேயில்லையா?” என்றான்.

“ ம்ம்…எங்கயோ பாத்து மாதிரியே இருக்கு .ஆனா எங்கன்னு தான்‌ தெரியலை..”

“ நியூஸெல்லாம் பாக்கறதில்லையா?”

“ம்ம்கூம்..” என்றாள் அவனுடன் நெருக்கமாக ஆடிக் கொண்டே.

“ ஹலோ…! ஆதவ் …எப்படியிருக்கீங்க?” என்ற குரல் கேட்கவும் திரும்பி பார்த்தான் ஆதவ்.

மிருகேந்திரன் தான் நின்றிருந்தான்.

மிருகேந்திரன் மீதான கோபம் அவளது இடையில் பதிந்திருந்த அவனது கரங்களின் அழுத்தத்தில் வெளிப்பட்டது.

“ ஸ்..ஸ்..ஆ…ஏன் இவ்வளவு இறுக்கிப் பிடிக்கிறீங்க?” என நேரங்காலம் புரியாமல் சிணுங்கினாள் மோகனா. 

உண்மையில் அவளுக்கு வலித்தது தான். ஆனால் அதையும் அவள் சிணுங்கிய படி  தான் கூறினாள்

அவளை ஒரு பார்வை பார்த்தவன்,  “ஒன் செக் ஹனி…இப்ப வந்துடுறேன்..” என்று கூறி விட்டு மிருகேந்திரனருகே சென்றான்.

“வணக்கம் பாஸ்..எப்படியிருக்கீங்க?” என்றவன் மோகனாவை எட்டிப் பார்த்து விட்டு, “ என்ன கேர்ள் ஃப்ரெண்டா? என்ஜாய்…” என்றான்.

“ ரொம்பத் துள்ளாத…ஒரு நாள் மாட்டும் போது இருக்கு…உனக்கு கச்சேரி…” என்றான் பல்லைக் கடித்துக் கொண்டே.

“  இந்த டயலாக்கையே எத்தனை தடவை சொல்லுவீங்க. கேட்டு கேட்டு சலிச்சுப் போச்சு…” என்று காதைக் குடைந்தவன் ,”  இந்த தடவை நான் ஓபனா எல்லாத்தையும் சொல்லியும் கூட நீங்க தான் கோட்டை விட்டுட்டு நிக்குறீங்க…சோ..சேட்..” என்றான் சிரிப்புடன்.

அப்படியே அவனை கழுத்தை வெறித்துக் கொள்ளும் ஆத்திரம் வந்தது ஆதவ்விற்கு. ஓரடி முன்னே எடுத்து வைத்து விட்டான்.

அதற்குள் மிருகேந்திரனை யாரோ அழைக்க அவன் ஆதவ்வை பார்த்து கண்ணடித்து விட்டுச் சென்றான்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

.

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top