Ep 5

அத்தியாயம் 5

இரவு அந்த ஹோட்டலின் பால்கனியில் நின்று கொண்டிருந்தான் சிம்மன். 

வெறும் ஷார்ட்ஸ் மட்டும் அணிந்திருந்தவனோ அந்த ஹோட்டலில் இருந்து வெளியே தெரியும் நகரத்தை பார்த்த படியே, சிகரட்டை புகைத்து கொண்டிருந்தான். 

அதே வேளை அவனது அறையின் கதவு தட்டப்பட, சென்று திறந்தான். 

வெளியில் கார்த்திகா தான் கையில் பையுடன் நின்றிருந்தாள். 

அவனோ அவளை மேலிருந்து கீழ் ஒரு கணம் பார்த்து விட்டு, சென்று சோபாவில் அமர, அவளும் கதவை மூடி விட்டு அவன் பக்கத்தில் வந்து நின்றாள். 

சிம்மனோ புகையை இழுத்து விட்ட படி, “எதுக்கு வர இவ்ளோ லேட்?” என்று கர கரப்பான குரலில் வினவ, 

அவளோ “இல்லை சார் வர வழியில கொஞ்சம் ட்ராபிக் அதான்…” என்று இழுக்க, 

“ம்ம்” என்றவனோ “நீயே ட்ரெஸ்ஸ கழட்டு எனக்கு அதுக்கெல்லாம் பொறுமை இல்ல” என்று சொல்ல, 

அவளும் அவன் கூறுவதை அப்படியே செய்தாள். 

அவளுக்கு அவன் மீது ஆசை இருந்தாலும், அவனுக்கு அவள் வெறும் ஒரு இரவுத் தேவை மட்டுமே! 

தன் இச்சையை தீர்த்துக் கொள்ளவே அவளை அவ்வப்போது அணுகுவான். 

அது தெரிந்திருந்தாலும் அவனிடம் எந்த மறுப்பையும் அவளால் சொல்ல முடியவில்லை. 

மற்ற பெண்களை போலவே அவனது ஆளுமைக்கு  மொத்தமாக ஈர்க்கப்பட்டே அவன் சொல்லுவதையெல்லாம் கேட்கும் ஒரு பதுமை போல மாறியிருந்தாள் பாவை.

அவளை மெத்தையில் தள்ளியவன், அவனது தேடலை துவங்க, பெண்ணவளும் மொத்தமாக அவனுக்கு இணங்கி தான் போனாள். 

அவனை தீீீண்ட முடியாது. அவன் விழிகளை கூட பார்க்க முடியாது. ஆனாலும் அவனது தொடுகையையும், சீண்டல்களையும் அவள் மொத்தமாக ரசித்து கொண்டு தான் இருந்தாள். 

*****

அறையில் இருந்த பிருந்தாவோ அப்போது தான் குளித்து விட்டு குளியலறையில் இருந்து வெளியே வந்தாள். 

அங்கே கட்டிலில் அவளது தங்கை மிருவோ சிரித்த படியே போனை பார்த்துக் கொண்டிருக்க, 

அதை பார்த்த பிருந்தாவோ, “என் போனை வச்சி என்னடி பண்ணிட்டு இருக்க?” என்று கேட்க, 

அவளோ “ஒன்னு இல்லை சும்மா தான்” என்றாள் சமாளிப்பாக. 

பிருந்தாவும் ‘இவளுக்கு வேற வேலை இல்லை’ என சலித்த படியே, தனது நீளமான கூந்தலை துடைத்த கொண்டு, அந்த ஆளுயரக் கண்ணாடியின் முன் வந்து அமர்ந்தாள்.

மிருவோ ஓரக் கண்ணால் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருக்க, 

பிருந்தாவோ அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஹேர் டிரையர் மூலம் தனது கூந்தலை காய வைத்து விட்டு, எழுந்து சென்று அலமாரியை திறக்கப் போக, 

மிருவோ “அக்கா ஒரு நிமிஷம் அப்படியே நில்லு” என்று கத்த, 

பிருந்தாவோ “எதுக்குடி இப்படி சத்தம் போடுற?” என்று கேட்ட படி திரும்ப, 

மிருவோ சட்டென அவளை அதே கோலத்தில் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டாள். 

பிருந்தாவோ “எதுக்குடி போட்டோ எடுக்குற?” என்று கடுப்பாக கேட்க, 

மிருவோ “ஹாங் மாமா உன்னோட போட்டோ அனுப்ப சொன்னாரு. அதான் அனுப்பிட்டு இருக்கேன்” என்று சொல்ல, 

பிருந்தாவோ சட்டென தன்னை குனிந்து பார்த்தாள். 

அவளோ வெறும் பூந்துவாலையை மட்டும் தான் கட்டியிருந்தாள். 

அதை சுதாகரித்தவளோ “அடிப்பாவி! இந்த நிலைமையிலயா போட்டோ எடுப்ப? முதல்ல அதை டெலீட் பண்ணுடி!” என்று பதறியபடி பிருந்தா அவளைத் துரத்த, மிருதுளாவோ கட்டிலின் மறுபக்கம் குதித்து ஓடினாள்.

“ஐயோ அக்கா… மாமாவுக்கு உன் மேல எவ்ளோ லவ் தெரியுமா? பிருந்தா என்ன பண்ற? ஒரு போட்டோ அனுப்புன்னு மெசேஜ் மேல மெசேஜ் போடுறாரு. அதான் உன்னோட இந்த நேச்சுரல் அழகை அவருக்கு அனுப்பி வச்சேன்” என்று கண்ணடித்தபடி மிருதுளா சொல்ல, பிருந்தாவிற்கு முகம் முழுக்கச் சிவந்து போனது.

“மிரு… நிஜமாவே அனுப்பிட்டியா? அவர் என்ன நினைப்பாரு? சீக்கிரம் போனை குடு ப்ளீஸ்” என்று பிருந்தா கெஞ்சாத குறையாகக் கேட்க,

மிருதுளாவும் சிரித்துக்கொண்டே போனை அவளிடம் நீட்டினாள்.

பிருந்தாவோ படபடப்புடன் வாட்ஸ் அப்பைத் திறந்து பார்த்த போது தான், மிருதுளா அவளை ஏமாற்றியிருக்கிறாள் என்று தெரிந்தது. 

அந்தப் புகைப்படம் இன்னும் அனுப்பப்படவில்லை. 

அதை பார்த்ததும் தான் அவளுக்கு பெரு மூச்சே வந்தது. 

“சதிகாரி. கொஞ்ச நேரத்துல என் உயிரே போயிடுச்சு தெரியுமா!” என்று நெஞ்சில் கை வைத்த படி, தொப்பென மெத்தையில் அமர, 

மிருவோ சிரித்து கொண்டே, “ஏன் இப்படி பயப்படுற? எப்படி இருந்தாலும் அவர் உன்ன கட்டிக்க போறவரு தானே! பார்த்தா என்னாயிட போகுது?” என்று தோள்களை குலுக்க, 

அவளை முறைத்த பிருந்தாவோ, “அதுக்காக இப்படியா போட்டோ அனுப்புவாங்க. கல்யாணத்துக்கு முன்னாடி அதெல்லாம் நாகரிகம் கிடையாது. திரும்ப இப்படி பண்ண கொன்னுடுவேன்” என்று அவள் காதை திருகி விட, 

“அம்மா வலிக்கிது” என்று வலியில் கத்தினாள் மிருதுளா. 

“சரி சரி இனி இப்படி பண்ண மாட்டேன்.” என்று காதை தேய்த்து கொண்டே சொன்னவள், 

“இருந்தாலும் நீ ரொம்ப போர்க்கா. மாமா உன் கூட பேசணும்னு எவ்ளோ ஆசை படுறாரு. ஆனா நீ அவர் கூட பேசவும் மாட்டேங்குற! அட்லீஸ்ட் ஒரு போட்டோவாவது அனுப்பலாம். பாவம் அவரு உன்ன நினைச்சி உருகிட்டு இருப்பாரு” என்று நக்கலாக சொல்ல,

பிருந்தாவோ, “வாய மூடு. அவர் கூட எப்போ பேசணும்னு எனக்கு தெரியும்” என்று அவள் சொல்லவும் அவளது தொலைபேசி அலறவும் நேரம் சரியாக இருந்தது. 

அவளும் யார் என்று பார்க்க, ‘விஷ்வஜித்’ என்ற பெயர் திரையில் மின்னியது. 

“அடிப்பாவி… நீ மெசேஜ் பண்ணலன்னு சொன்ன? இப்போ அவரு போன் பண்றாரே!” என்று பிருந்தா பதற, 

மிருவோ விழுந்து விழுந்து சிரித்தபடி, “நான் மெசேஜ் பண்ணலன்னு தான் சொன்னேன்… கால் பண்ணலன்னு சொல்லலையே!” என்று சொன்னவள், அவசரமாக அங்கிருந்து வெளியே ஓடி விட்டாள். 

பிருந்தாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. 

இது நாள் வரை அவனோடு குறுஞ் செய்தியில் தான் பேசி இருக்கிறாள். 

அதுவும் பெரிதாக எதுவும் இல்லை. 

மிகக் குறைவாகவே பேசுவாள்.

அவனுக்கும் வேலை இருப்பதால் அவளிடம் பேச முடிவதில்லை.

இன்று முதன்முதலாக அவன் அழைக்கிறான். என்ன பேசுவது என்றே தெரியவில்லை. 

எச்சிலை கூட்டி விழுங்கிய படியே, மெதுவாக தொலைபேசியை அட்டெண்ட் செய்தவள் “ஹ.. ஹலோ”  என்றாள். 

அவளது குரல் அவளுக்கே கேட்காத வண்ணம் மிக மிக மெல்லியதாக ஒலித்தது.

மறு முனையில் “ஹலோ பிருந்தா இந்த நேரத்துல போன் பண்ணி இருக்க? இப்போ தான் என் கூட பேசணும்னு தோணிச்சோ?” என்று ஒலித்தது அவனின் குரல்.

பிருந்தாவோ “அது… வந்து… விஷ்வஜித்… தெரியாம கால் போயிடுச்சு…” என்று திக்கித் திணறிச் சமாளித்தாள்.

அவள் பதிலை கேட்டதும் மறு முனையில் ஒரு வித மெளனமே நிலவியது. 

அவளோ “ஹலோ விஷ்வா இருக்கீங்களா?” என்று அவள் கேட்க, 

“ம்ம் சொல்லு.” என்றான் கர கரப்பான குரலில். 

அவளோ “சாரி நான் உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?” என்று சற்று பட படப்புடனே கேட்க, 

அவனோ தன் முன்னால் மண்டியிட்டு  இருந்தவனின் வாய்க்குள்ளேயே துப்பாக்கியை சொருகிய படி, இருக்கையில் அமர்ந்து இருந்தவன்,

லேசாக சிரித்த படி, “நீ என்னை டிஸ்டர்ப் பண்ணாம வேற யார் என்னை டிஸ்டர்ப் பண்ண போறா?” என்று கையில் துப்பாக்கியை வைத்துக் கொண்டு போனில் கொஞ்சலாகப் பேசுவதை பார்த்த  அவனின் அடியாட்கள் அனைவருமே ஒருவரை ஒருவர் பயத்துடன் பார்த்துக் கொண்டனர். 

அந்த இடமே மரண அமைதியில் இருக்க, துப்பாக்கி முனையில் இருந்தவன் மரண பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தான்.

ஆனால் இது எதுவுமே தெரியாத அந்த அப்பாவியான பெண்ணோ அவன் சொன்னதை கேட்டு இதழ் பிரித்து லேசாக புன்னகைத்துக் கொண்டாள்.

அவனோ மேலும், “உண்மைய சொல்லப் போனா எனக்கு எப்பவுமே உன் நினைப்பா தான் இருக்கு. யூ ஆர் டோட்டலி டிஸ்டர்பிங் மீ பிருந்தா.” என்று சொன்னானே பார்க்கலாம், 

அவன் பக்கத்தில் இருந்த அவனின் தம்பி அஸ்வந்துக்கு சட்டென புரையேறி விட்டது. 

அவனோ ‘இந்த ரணகளத்துலையும் இவனுக்கு ஒரு கிளு கிளுப்பு கேக்குது பாரேன்’ என்று எண்ணி சிரித்துக் கொண்டான். 

இங்கே அவளுக்கோ என்ன பேசுவது என்றே புரியவில்லை. 

பேச்சை மாற்றும் பொருட்டு “விஷ்வா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. நான் உங்களுக்கு நாளைக்கு போன் பண்ணுறேன். பாய்” என்று சொல்லி விட்டு போனை தூக்கி கட்டிலில் போட்டவளுக்கு அப்போது தான் மூச்சே வந்தது. 

விஷ்வஜித்தோ அவள் எண்ணம் அறிந்து புன்னகைத்துக் கொண்டவன், 

அவன் முன்னால் மண்டியிட்டு இருந்தவனிடம், “இன்னக்கி உனக்கு டைம் ரொம்ப நல்லா இருக்கு. உயிர் மேல ஆசை இருந்தா இனி என் கண்ணு முன்னாடி வந்துடாத. கெட் அவுட்” என்று கர்ஜித்த படியே, துப்பாக்கியை அவன் வாயில் இருந்து எடுத்து விட, அவனோ அலறியடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினான்.

அங்குள்ளவர்களுக்கோ அவனின் இந்த வித்தியமான செயல் வியப்பாகவே இருந்தது. 

அவனிடம் தவறு செய்து மாட்டி விட்டால் யாராலும் அவர்களை காப்பாற்ற முடியாது. 

ஆனால் இன்று அவனே ஒருவனை மன்னித்து அனுப்பி விட்டானே! 

அஸ்வந்தோ “வை ப்ரோ? அண்ணி போன் பண்ணதுமே அப்படியே டெரர் ஹீரோல இருந்து ரொமான்டிக் ஹீரோவா மாறிட்ட. உன் கிட்ட இப்படி ஒரு சேன்ஞ் வரும்னு நான் நினைச்சி கூட பார்க்கல” என்று நக்கலாக சொல்ல, 

விஷ்வஜித்தோ அவனை முறைத்த படியே, தன் கையில் உள்ள துப்பாக்கியை அவனிடம் தூக்கி போட்டவன், “போய் வேலையை பாருடா” என்று சொல்லி விட்டு வண்டியில் ஏறி புறப்பட, 

‘இது எங்க போய் முடிய போகுதோ தெரிலயே!’ என்று நினைத்துக் கொண்டவன், மற்ற அடியாட்களுடன் சேர்ந்து புறப்பட்டான்.

வண்டியில் போய் கொண்டிருந்த விஷ்வஜித்துக்கோ மனம் எல்லாம் பிருந்தாவின் நினைவாக தான் இருந்தது. 

விஷ்வஜித் ஒரு பெரிய பிசினஸ் மேன். 

ஆணழகணும் கூட. 

30 வயது தான் இருக்கும். 

வணிக உலகத்தில் எந்த அளவுக்கு அவன்  வெற்றியை சம்பாதித்து இருக்கிறானோ அதே அளவுக்கு எதிரிகளையும் சம்பாதித்து இருந்தான். 

அது தான் அவனை இந்த அளவுக்கு முரட்டுத் தனமாக மாற்றி இருந்தது. 

அவன் வீட்டில் எத்தனையோ பெண்களை பார்த்தும் யார் மேலும் அவனுக்கு எந்த ஈடுபாடும் வரவில்லை.

ஒரு முறை ஒரு திருமணத்தில் தான் பிருந்தாவை கண்டான். 

பார்த்த உடனேயே அவனுக்கு  மிகவும் பிடித்து போனது. 

ஏனோ அவளின் அப்பாவித் தனமும், அமைதியான குணமும் அவனை மொத்தமாக அவள் பக்கம் ஈர்த்து விட்டது எனலாம். 

ஆனால் பிருந்தாவுக்கு அவனை பற்றி எதுவுமே தெரியாது. 

அவன் ஒரு பிஸ்னஸ் மேன் என்பதை தவிர.

தன் தாய், தந்தைக்கு பிடித்திருக்கிறது என்பதனால் மட்டும் தான் இந்த திருமணத்துக்கு ஒத்துக் கொண்டு இருந்தாள். 

அதனாலேயே அவன் மீது அவளுக்கு பெரிதாக எந்த அபிப்ராயமும் இருக்கவில்லை எனலாம். 

தந்தை சொன்னால் எதையும் கண்ணை மூடிக் கொண்டு செய்யக் கூடியவள், இந்த திருமண விடயத்திலும் அவர் விருப்பத்தை மறுக்க முடியாமல் ஒத்துக் கொண்டாள்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top