காதலெனும் நீ, கனவாக நான். கவிதையாக நீ , கானலாக நான்.
கனவே சேராயோ?? 19
அவன் இவ்வளவு லகுவாக பேசுவான் என்று அவள் சுத்தமாக எதிர்பார்த்து இருக்கவில்லை. இதுவரை அவனை ஆளுமையாகவும் அழுத்தமாக மட்டும்தான் பார்த்திருக்கிறாள். இவ்வளவு பிரச்சனை நடந்த பிறகும், இத்தனை மென்மையை அவள் ஆச்சரியமாகத்தான் பார்த்திருந்தாள்.
“அப்போ, நீங்க என்னை வேலைல இருந்து தூக்க போறதில்லையா சார்”?? என்று கேட்டாள் மானசா.
“நான் இவ்வளவு நேரம் பேசுறதுக்கு அதுதான் அர்த்தம்னு நினைக்கிறேன்”? என்றான் தேஜா அழுத்தமாக.
“ஆனா பெரிய பாஸுக்கு கோபம் அதிகமா இருந்துச்சு. இன்னிக்கு அவர் ஆபீஸ் வரல. அவர் வந்தா? என்னை வேலையிலிருந்து தூக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு இல்லையா சார்? ஆனா சத்தியமா இதெல்லாம் வேணும்னே நடக்கல சார். எனக்கு சுத்தமா உங்க மேல இன்ட்ரஸ்ட் இல்ல” என்று அவள் வாய் தவறி கூறி விட. அவன் அவளை புருவம் ஏற்றி பார்த்தான்.
“ஐ மீன், மேரேஜ் பண்ணிக்கிற தாட் இப்ப இல்ல சார். தம்பியை குணப்படுத்தனும், அவன் ட்ரீட்மென்ட்டுக்கான செலவு ஃபுல்லா அப்பா பார்க்கிறார். அப்பாவோட பர்டனை என்னால முடிஞ்ச அளவுக்கு குறைக்கணும். தம்பி ஆசைப்பட்டதை அவனுக்கு செய்யணும். ஃபேமிலிக்கு சப்போர்ட்டா இருக்கணும். நான் திருமணத்தை பத்தி சுத்தமா யோசிக்கவே இல்ல. அவனோட பிரச்சினைனாலதான் இதெல்லாம் நடந்தது. பெரிய பாஸ் கிட்ட நீங்க இதை எக்ஸ்பிளைன் பண்ணி சொல்றீங்களா சார்”? என்று கேட்டாள்.
அவளை விலக்கி விடும் ஆர்வம் மானசாவிடம். அவள் கேட்ட விதத்தில் அவனுக்கு புன்னகை தான் வந்தது. ஆனால் அதை அவன் மறைத்துக் கொண்டான்.
“நீ போய் உன் வேலைய பாரு. மத்த எல்லாத்தையும் நான் பாத்துக்கிறேன்” என்றான் தேஜா.
“நாளைக்கு அப்ப நான் வேலைக்கு வரட்டுமா சார்? நீங்க உண்மையிலேயே என்னை வேலை விட்டு தூக்கலையா சார்”? என்றாள்.
ரிப்போர்ட்டை எல்லாம் ஆராய்ந்தீர்களா?? என்று மானசா கேட்கவில்லை. அதில் இருக்கும் உண்மை தன்மை தான் அவளுக்கு தெரியுமே??
“உங்ககிட்ட உண்மை இருக்குன்னு போது?? உங்களை எதுக்காக வேலையை விட்டு தூக்கணும்”? அலட்டிக்கொள்ளாமல் கேட்டான் தேஜா.
“அப்கோர்ஸ் சார். ஆனா என் தம்பி பண்ணி வச்ச சொதப்பல்ல, எல்லாரும் ஒரு மாதிரி பேசுறாங்க. எனக்கும் இவ்வளவு நல்ல வேலையை விட்டு போறதுக்கு மனசு வரல தான். நல்ல சேலரி நல்ல இன்கிரிமெண்ட் நல்ல பொசிஷனும் வேற?? ஆனா எல்லாரும் சீப்பா பேசுறாங்க” அவள் தயக்கத்தோடு பேசிவிட்டு தலை குனிந்தாள்.
தவறு அவர்களுடையது எனும் போது மற்றவர்களுக்கு காரணம் கூற முடியாது.
“சோ, அதுக்கு என்ன பண்ண முடியும்?? எல்லார்கிட்டயும் போய் எக்ஸ்ப்ளைன் பண்ண முடியுமா?? இல்ல எல்லார் வாயை தான் நம்ம கை கொண்டு அடைக்க முடியுமா”? அவன் அசால்டாகவே கேட்டான்.
“ஐயோ! இல்ல சார். ஏற்கனவே என் மேல காண்டுல இருக்கவங்க. இதுதான் சான்சுன்னு இப்ப இந்த விஷயத்தை
பிடிச்சிக்கிட்டாங்க. நான் எதோ கோல்ட் டிக்கர் மாதிரியும், உங்களுக்கு வலை வீசுறதுக்காக, என் தம்பியை வச்சு நானே பேச வைக்கிறதா” என்று பேச வந்தவள். அவன் புருவத்தை மேலே ஏற்றவும், வாயை மூடிக்கொண்டாள். எச்சிலை உள்கூட்டி விழுங்கினாள்.
“ஆரம்பிச்சதை முடிச்சு வை” என்றான் தேஜா.
“இல்ல சார், வந்து என்னை தப்பான பொண்ணா பேச ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கு அது ஹர்டிங்கா இருக்கு. அதனால நீங்களா என்னை அனுப்புறதுக்கு முன்னாடி நான் வேலையை விட்டு போகலாம்னு யோசிச்சு தான்” என்று மீண்டும் முடிக்காமல் நிறுத்தினாள்.
“யாரோ பேசுறதுக்காக வேலையை விட்டு போக போறியா”? என்று ஒருமையில் கேட்டான்.
அவள் கைகளை பிசைந்து கொண்டு அமர்ந்திருந்தாள். என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை?? அவள் இருக்கும் குழப்பத்தில், அவன் ஒருமையில் பேசியது விளங்கவில்லை.
“நேத்து ஒரு மிஸ்டேக் நடந்தது. அதை கிளியர் பண்றதுக்கு நீ ரிப்போர்ட்ஸ் கொடுத்திருக்க. நான் அதை வெரிஃபை பண்ணிட்டேன். உங்க மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சிருச்சு. சோ, லீகலா நான் எந்த ஆக்ஷனும் எடுக்கல. எங்க அப்பா கிட்ட பேசிக்க எனக்கு தெரியும். பட் ஊர்ல இருக்குறவங்களுக்கெல்லாம் எக்ஸ்பிளைன் பண்ண வேண்டிய அவசியம் இல்லைன்னு தோணுது. இதுக்காக நீ வேலையை விட்டு போக போறியா இல்லையான்னு நீயே முடிவு பண்ணிக்கோ. அப்புறம் உன் தம்பிக்கு வேற கார் வாங்கி கொடுக்கிறேன்னு ப்ராமிஸ் பண்ணி இருக்கல்ல”?? என்று கேட்டான்.
அவள் ஆமாம் என்றாள். பிறகு இல்லை என்றாள்.. எந்த பக்கம் தலையாட்டுவது என்று தெரியாமல் விழித்தாள்.
அவள் கைகளில் வைத்து கசக்கி கொண்டிருந்த பேப்பரை பார்த்தவன்.
அவள் புறம் அவன் கரத்தை நீட்டினான்.
திரு திரு என்று விழித்தாள் மானசா.
‘இப்பதானே ரிசிகினேஷன் வேணாம்னு சொன்னாரு?? இப்ப ஏன் கேக்குறாரு’? என்று சிந்தித்தவள்.
நீட்டிய கரத்தில் அந்தப் பேப்பரை கொடுத்தாள்.
அவளைப் பார்த்துக் கொண்டே அதை வாங்கியவன். அதை எட்டு துண்டுகளாக கிழித்து அவளைப் பார்த்துக் கொண்டே குப்பைத் தொட்டியில் போட்டான்.
அவள் எட்டி குப்பைத்தொட்டியை பார்த்தாள்.
“வீட்டுக்கு போ, உன் தம்பி உன்னை எக்ஸ்பெக்ட் பண்ணிட்டு இருப்பான்ல”? என்றான்.
‘சரி’ என்று தலையாட்டி விட்டு எழுந்து கதவை நோக்கி சென்றவள். பிறகு நின்று அவனை திரும்பி பார்த்தாள்.
என்ன?? என்று அவன் மீண்டும் புருவத்தை உயர்த்தி கேட்டான்.
“பைல்.. பைல் சார்” என்றாள் தயக்கத்தோடு.
“அந்த பைல் உனக்கும், உன் தம்பிக்கு எவ்வளவு முக்கியம்னு எனக்கு தெரியும். அதை நான் பத்திரமா தான் வச்சிருக்கேன். நாளைக்கு சாயங்காலம் உன் தம்பியை வந்து வாங்கிட்டு போக சொல்லு” என்று கூறினான்.
‘இவன் ஏன் என் தம்பி மேல குறியா இருக்கான்?? ஒரு வேலை இவன் அவனா இருப்பானோ”?? என்று சிந்தித்தவள்.
‘ச்சே, ச்சே, அப்படியெல்லாம் இருக்காது’ என்று தலையை உலுக்கி கொண்டாள்.
“உன் மைண்ட் ரீடிங் ரொம்ப கேவலமா, தப்பா போகுதுன்னு நினைக்கிறேன்”? என்று அவன் புருவங்களை உயர்த்தினான்.
“ஐயோ! சத்தியமா இல்ல சார்” என்று வேகமாக பதில் உரைத்தாள்.
“ரொம்ப யோசிக்காத, கிளம்பு” என்றான்.
அவள் திரும்பியதும், “அப்புறம்”? என்றவன் இலுக்க.
மீண்டும் அவன் புறம் திரும்பினாள் மானசா..
“இந்த ஆபீஸ்ல இருக்குறவங்க எல்லாம் உன்னை தப்பா பேசிட்டிருக்காங்க. அதுதான் உனக்கு இப்ப பிரச்சனை இல்லையா”? என்று கேட்டான்.
அவள் ஆம் என்று வேகமாக தலையாட்டினாள்.
“சீக்கிரமா அதுக்கு ஒரு சொல்யூஷன் கண்டுபிடிக்கிறேன். ஐ மீன் யாரும் உன்னை பத்தி பேசாத படி. கிளம்பு” என்று கூறினான்.
அவள் வேகமாக தலையாட்டி விட்டு, தப்பித்தால் போதும் என்று கிளம்பி விட்டாள்.
இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தவளுக்கு, தேஜாவின் சிந்தனை தான்.
‘எப்படி அனைவரின் வாயையும் அவனால் மூட வைக்க முடியும் என்று??
இது தவறாக நடந்தது தான் என்று எல்லாவற்றையும் ஆராய்ந்து விட்டான். அதனால் இந்த பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம் என்று மீட்டிங்கில் கூறுவானா?? இல்லை வேறு ஏதாவது செய்வானா?? வேறு என்ன செய்ய முடியும்?? மீட்டிங்கில் தான் கூறுவான். அப்போதுதான் மற்றவர்கள் தன்னை பற்றி பேச முடியாது.
இரண்டு பாஸ்கல் மீதும் ஆபீஸில் நிறைய பயம் இருந்தது. பெரியவரிடம் கூட சற்று இலகுவாக பேசிவிடலாம். தேஜா அவ்வளவு சீக்கிரத்தில் யாரிடமும் பேச மாட்டான். அழுத்தக்காரன். அவன் ஒரு விஷயத்தை கூறி மற்றவர்கள் அதை மீறி நடந்தால்?? அவன் கோபத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.
அதனால் அவன் கூறிய பிறகு கண்டிப்பாக மற்றவர்கள் தன்னை பற்றி பேச மாட்டார்கள் என்று சிந்தித்தாள் மானசா. எப்படி எப்படியோ யோசித்துப் பார்த்தாலும்?? அவன் எப்படி அனைவரின் வாயையும் மூட வைப்பான்?? என்பதற்கான பதில் அவளுக்கு கிடைக்கவில்லை.
அவள் வீட்டை அடையும்போது. இருள் சூழ்ந்த வீடு தான் அவளை வரவேற்றது.
பற்களை கடித்தபடியே வீட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தாள்.
“டேய் எரும மாடே, என்னடா பண்ணிட்டிருக்க?? லைட்டை கூட போட்டு வைக்க தெரியாதா உனக்கு?? வீட்ல சும்மா தானே இருக்க”?? ஏகபோகத்திற்கு அவனை திட்டிக் கொண்டே படிகளிலும் ஏறினாள்.
“பாத்தீங்களா? வீட்டுல சும்மா இருக்கேன்னு குத்தி காட்டுறீங்க?? அதுக்குத்தான் வேலைக்கு போறேன்னு சொல்றேன் கேக்க மாட்டேங்கிறீங்க?? சரி அதை விடுங்க, ஆபீஸ்ல என்ன ஆச்சு?? உங்க பாஸ் வேலையை விட்டு தூக்கிட்டாரா?? இல்ல என் கனவு உண்மைதான்னு நினைச்சு உங்களுக்கு பிரப்போஸ் பண்ணிட்டாரா”? என்று கேட்டு வைத்தான் நிர்மல்.
“உன்னை” என்று அவள் அடிப்பதற்கு ஓட. அவள் கையில் மாட்டாமல் இருக்க அவனும் ஓடினான்.
அறைகளுக்குள் புகுந்து வெளியில் வந்து படிகளில் இறங்கி வந்து வீட்டு வாசலை அடையும்போது. அவன் தாயை மோதிக் கொண்டு நின்றான்.
“தடிமாடே?? பார்த்து வரத் தெரியாதா உனக்கு?? உனக்கும், உங்க அக்காவுக்கும் இதே வேலை. எப்ப பார்த்தாலும் ஓடிப் பிடிச்சு விளையாட வேண்டியது. விளையாடுறது. ஓரமாவும் விளையாடுறது இல்ல?? எங்க மேல மோதிக்கிட்டே தான் விளையாடனும். அப்பதான் தூக்கம் வரும்” என்று திட்டினார்.
தாயின் கோபத்தை பார்த்து அதிர்ந்து நின்றது ஒரு நொடிதான். அவர் திட்டி முடிப்பதற்குள் தாயைக் கட்டிக் கொண்டான் நிர்மல். அதில் அவர் மனம் இளகிவிட்டது.
“மதியம் சாப்பாடு சாப்பிட்டியா”? என்று தாயின் பரிவோடு கேட்டார் சிவமதி. அதற்கு மேல் தாய் மகனின் கொஞ்சல்கள் ஆரம்பித்து விட. அடிக்க அவனை துரத்திக் கொண்டு வந்த மானசா. இருவரையும் ஏக்க பெருமூச்சோடு பார்த்தாள்.
…….
“என்னக்கா சொல்ற உண்மையாவா சொல்ற?? நேத்து பேசுன பேச்சுக்கு, உன்னை வேலை விட்டு தூக்கிடுவாருன்னு நினைத்சேனே”? என்று கூறிவிட்டு, முதுகில் ஒரு மொத்தை வாங்கிக் கொண்டான் நிர்மல்.
“சரி சரி என்னோட ரிப்போர்ட்ஸ் எல்லாம் பார்த்திருப்பாரு, அனலைஸ் பண்ணி இருப்பாரு. அதனால நம்ம மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சிருக்கும். ஆனா உன்னை தப்பா பேசுறவங்களை எப்படி வாயை மூட வைப்பார்?? அதுதான் எனக்கு புரியல”?? என்றான் நிர்மல்.
“எனக்கும் அது தான் புரியல?? ஆனா அவர் அப்படி வாய மூட வச்சுட்டாருனா எனக்கு பிரச்சனை இருக்காது. இல்லனா கொஞ்சம் கான்ட்ரவர்ஸியா போகும். மன நிம்மதி இருக்காது. அதுதான் என்ன பண்றதுன்னு யோசிக்கிறேன்”? என்றான் மானசா.
தம்பி பதில் கூறாமல் இருக்க. அவனைத் திரும்பி பார்த்தாள். அவன் எதையோ ஆழமாக யோசித்துக் கொண்டிருப்பது தெரிந்தது.
“என்னடா”? என்று அவனை உலுக்கினாள்.
“இல்ல, அவர் உன்கிட்ட பேசினதை பற்றி தான் யோசிக்கிறேன்”??
“அதுதான் என்ன”? என்று மானசா கேட்க.
“ம்ப்ச், அதை விடு அக்கா. இந்த படத்துல முக்கியமான சீன் பாரு”?? என்று அவன் சுட்டிக்காட்டினான்.
வி.சி.டி பிளேயரில் ‘மைக்கேல் மதன காமராஜன்’, படத்தின் கடைசி மலையேறும் சீன் ஓடிக்கொண்டிருந்தது. எல்லா படங்களிலும் கிளைமாக்ஸ் காட்சி என்பது த்ரில்ளாக இருக்கும். ஆனால் இதில் மட்டும் காமெடி, கலந்து சுவாரசியமாக கொடுத்திருப்பார்கள்.
மற்ற எல்லாவற்றையும் மறந்து அவர்கள் அந்த படத்தில் இருக்கும் காமெடியில் மூழ்க தொடங்கினார்கள்.