காலம் தாழ்ந்தாலும் நம் கனவுகள் மறையாதே!!
கனவே சேராயோ?? 18
“ரொம்ப நல்லா தெரிஞ்சவனா, பழக்கமானவனா, மனசுக்கு ரொம்ப நெருக்கமானவனா தோணுறான். நான் அன்னைக்கு தான் அவனை முதல் முறையா பார்த்தேன். ஆனா அவன் கூட ஜென்ம ஜென்மமா பழகுன ஒரு ஃபீல் இருந்துச்சு. அவன் பேச கேட்டுகிட்டே இருக்கலாம்னு தோணுச்சு. நார்மலா இதுபோல பேசுறவங்களை பார்த்தா எனக்கு இரிடேடிங்கா இருக்கும். ஆனா அவனை பார்க்கும்போது அப்படி தோணல. அவன் பேச்சு மட்டும் இல்ல முகம் கூட எனக்கு பரிச்சயமாக தோணுது. ஆனால் எங்க எப்பன்னு என்னால தெளிவா சொல்ல முடியல”? என்றபடி அவன் தலையைப் பிடித்துக் கொண்டான்.
“எப்பயும் இதுபோல சம்பவங்கள் பொறுமையா ரெக்கவர் ஆகறது தான் நல்லது மிஸ்டர் தேஜா. நீங்க ரொம்ப யோசிச்சு அதை வெளியே கொண்டு வரணும்னு நினைக்காதீங்க. அதுவா வெளிய வரணும்னு நினைக்கும் போது வரும். அப்புறம் உங்களுக்கு ரொம்ப ஸ்ட்ரைணாக போகுது.”
“ஆனா இதுக்கான தெளிவு வேணும்னு நினைக்கிறேன் டாக்டர்.”
“இங்க பாருங்க தேஜா. நாம தினமும் ஆயிரக்கணக்கானவங்கள பார்க்கிறோம். லட்சக்கணக்கான விஷயங்களை சிந்திக்கிறோம். நூறு கணக்கான கனவுகளை கூட காணுகிறோம். ஆனா அது எல்லாம் நம்மளோட நினைவில் நிற்காது. ஒரு சிலது மட்டும்தான் அழியாமல் நம்ம மனசுல நிக்கும். அதுக்கு சில காரணங்கள் இருக்கலாம். அதுவும் ஒரு நாள் வெளிய வரும். இல்லன்னா அதை வெளிக்கொண்டு வருவதற்கு தான் எங்களை போல டாக்டர்ஸ் இருக்காங்க.” என்று லகுவாக புன்னகைத்தார்.
அவனும் இள நகையை வெளிப்படுத்தினான்.
“நாம நிறைய கனவுகள் கண்டாலும் அது எல்லாம் நம் ஞாபகத்துல இருக்காது. அப்படி ஒரு கனவு நமக்கு ஞாபகம் இருக்கு. இருந்து அது என்னைக்காவது நடக்கவும் செஞ்சிருச்சுன்னா?? அப்ப நம்ம கண்ட கனவு பலிச்சிட்டதா ஒரு எண்ணம் தோன்றும். நமக்கு ஏதோ சூப்பர் பவர் வந்துட்டதா?? நாம ஏதோ வித்தியாசமா இருக்கிறதா தோண ஆரம்பிச்சுடும்.”
‘அது என்னமோ உண்மைதான்’ என்று தோன்றியது. அப்படி இருந்தால் பெருமை பீத்தி கொள்ளலாம். தாய் தந்தையிடம் கூட சொல்லலாம். ஆனால் அவனுக்கு வருவதை சொன்னால்? மன வருத்தப்படுவார்களே??.
“ஆழ்மனதின் கணிப்பு (Déjà vu & Intuition): நம்மைச் சுற்றி நடக்கும் சிறிய மாற்றங்களை நம் (விழிப்புணர்வு) மனம் கவனிக்கத் தவறலாம். ஆனால் ஆழ்மனது அவற்றைச் சேகரித்து வச்சு. இதுபோல நடக்க வாய்ப்பிருக்குன்னு கனவு மூலமா துல்லியமாகக் கணிக்கிறது.”
“இன்னொன்னும் துல்லியமா கணிக்கும். அதுதான் கோயின்சிடென்ஸ் (Coincidence). தற்செயல் நிகழ்வு. உலகில் கோடிக்கணக்கான மக்கள் தினமும் கனவு காண்கிறார்கள். அதில் சில கனவுகள் தற்செயலாக நிஜ வாழ்க்கையோடு பொருந்திப் போகவும் வாய்ப்பிருக்கு.” என்றார்.
“நிர்மல் உண்மையா தான் சொல்லி இருக்கான். அப்போ அவனுடைய இந்த பிரச்சனைகள் எப்போ முடிவுக்கு வரும்?? இல்ல இது அவன் காலம் இருக்கிற வரைக்கும் தொடர்ந்துட்டே இருக்குமா?? அதுக்கான சொல்யூஷன் என்ன”? என்று கேட்டான் தேஜா.
“தொடரவும் வாய்ப்பிருக்கு. இல்ல முடியறதுக்கும் வாய்ப்பு இருக்கு. உடனே அவனோட ஆழ் மனசு அவன் கிட்ட வேற எதையோ சொல்ல நினைக்குது. அது தெளிவான பிறகு இந்த கனவுகளும் முடிவடையலாம். இல்லனா இதே போல இன்னொரு ஆக்சிடென்ட்” என்று அவர் எதையோ கூற வர.
தேஜா பதறி விட்டான்.
“நோ டாக்டர் வாட் ரபிஷ் இஸ் திஸ்?? வார்த்தைக்கு கூட அப்படி சொல்லாதீங்க? அவனுக்கு எதுவும் ஆகக்கூடாது. எனக்காக மட்டும் இல்ல, அவன் குடும்பமும் அவன் மேல உயிரையே வச்சிருக்கு. திரும்பவும் அவனுக்கு ஏதாவது ஒன்னுனா கண்டிப்பா யாரும் தாங்க மாட்டாங்க. என்னாலயும் தாங்க முடியாதுன்னு தோணுது.’
மருத்துவர் என்பதால் மனம் விட்டு கூறியிருந்தான் தேஜா.
“சி மிஸ்டர் தேஜா. நீங்க கேட்டதுக்கு தான் நான் பதில் சொன்னேன். இதுதான் நடக்கும்னு இல்ல. இப்படி எல்லாம் நடந்தா மாறுவ்துக்கு வாய்ப்பு இருக்கு. இல்லனா அது தொடரத்துக்கும் வாய்ப்பு இருக்கு.” என்று அவர் முடிக்கவும்.
அவன் அதிகப்படியாக பதறிவிட்டது புரிந்தது.
“ சாரி டாக்டர் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்” என்றான்.
“கொஞ்சம் இல்ல தேஜா. நிறையவே எமோஷனல் ஆயிட்டீங்க. முதல்ல உங்களுக்கும் அந்த நிர்மலுக்கும் இருக்கிற சம்பந்தத்தை கண்டுபிடிக்கணும். முடிஞ்சா அவரையும் வர வச்சு அவர் ஆழ் மனசு கிட்ட பேசி பார்க்கணும்”. என்று முடித்தார் மருத்துவர்.
ஓரளவிற்கு அவனுக்கு தெளிவு பிறந்திருந்தது. கோப்புகளை எடுத்துக் கொண்டு மருத்துவரிடம் நன்றி உரைத்து விட்டு கிளம்பினான்.
……..
அன்று தாமதமாக தான் எழுந்தான் நிர்மல். கொட்டாவி விட்டபடி நெட்டி முறித்து எழுந்தவன். நேரத்தை பார்த்தான். 11:30 நெருங்கிக் கொண்டிருந்தது.
“இவ்வளவு நேரம் தூங்கிட்டோமா?? நமக்கு கொடுத்த மாத்திரைகள்ள, டாக்டர் ஏதாவது தூக்க மாத்திரையை கொடுத்துட்டாரா என்ன”?? என்று சிந்தித்தவன் காலை கடன்களை முடித்துக் கொண்டு தன் தமக்கையின் அறைக்கு சென்றான். அது வெறுமையாக அவனுக்கு காட்சி அளித்தது.
தன் அலைபேசியை எடுத்து தமக்கைக்கு தொடர்பு கொள்ளலாம் என்று நினைத்தவன். கடைசி நொடியில் மூடை மாற்றிக் கொண்டு அசட்டையாக நாக்கை துருத்தி பலிப்பு காட்டினான்.
எப்படியும் காண்டில் இருப்பவளிடம். தன் அழைப்பு விடுத்து திட்டு வாங்கிக்கொள்வானேன்?? என்று நினைத்தவன். தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு சமையலறையை நோக்கி சென்றான்.
காலை, மதியம் என்று தாய் சமைத்து வைத்திருப்பதை பிடிபிடியென்று பிடித்தான்.
( பாவம் வளர்ற புள்ள. ரெண்டு வேளை சோத்தயும் ஒண்ணா தின்றான். கண்ணு வைக்காதீங்க)
சாப்பிட்டு முடிக்கும் போது தான் ரெஸ்டாரண்டில் பார்த்த பெண்ணின் ஞாபகமே வந்தது. முதல் நாள் நினைவில் அவளுடன் டூயட் பாடி கொண்டு தான் இருந்தான். உறங்கும் வரை அவளை நினைத்திருந்தவன். உறக்கத்திற்கு பிறகு அவளை மறந்து போனான்.
‘அவளை மீட் பண்ணனும். அவள் கிட்ட பேசணும். நம்ம மனசுல இருக்குற எல்லாத்தையும் சொல்லணும். அப்படியே நம்ம கனவை பத்தியும் சொல்லணும். அமர காவியமான நம்ம காதல பத்தியும் சொல்லணும். அதுக்கப்புறம் அவளை காதலிக்க வைக்கணும். ஸ்சப்பா யோசிச்சு பார்க்கும்போதே ரொம்ப மலைப்பா இருக்கு?? ஆனா இது எல்லாத்தையும் எப்படி நிர்மல் நீ நடத்த போற?? கஷ்டம் தான். வாழ்க்கையில பிரச்சனைன்னு ஒன்னு இல்லாம இருக்காது. அவள் வேற ரொம்ப அழகா இருக்குறாள். உன்னோட கனவுக்கு நீயே முயற்சி பண்ணலைனா? அவள் எப்படி பண்ணுவாள்’?? என்று உதடு சுளித்து சிந்தித்தான்.
‘ஒருவேளை அக்கா சொன்ன மாதிரி?? அந்த பொண்ணுக்கு வேற ஏதாவது காதல் இருந்திருந்தால்?? அப்ப அதை வேற பிரேக்கப் பண்ண வைக்கணுமே?? உன்னோட கனவுல நடக்கிறது எல்லாம் நடக்கும்னா?? நீ எந்த ஆணியும் புடுங்க தேவையில்லை. அதுவே பிரேக்கப் ஆயிடும்?? அதேபோல அந்த சிடுமூஞ்சி பாஸும்.’
“ச்சே ச்சே, அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. மனுஷன் நம்மகிட்ட நல்லா தான் பேசினாரு. ஸ்டார்டிங்ல எல்லாரையும் பார்த்த உடனே ஹய்ப்புள்ள கத்துனாரே? அவ்வளவுதான். அதுக்கப்புறம் பொறுமையா, நிதானமா விலாவரியா கேட்டாரு. நான் மொக்கை போட்டதை எல்லாம் கேட்டாரு. கேட்டதையும் வாங்கி கொடுத்தாரு. அவரை தப்பா பேசக்கூடாது. எல்லாத்துக்கும் மேல நம்ம அக்காவுக்கு புருஷனாக போறவர் வேற?? என்னோட செல்ல அக்காவோட புருஷன்னா?? அவர் எனக்கும் பேவரட் தானே”?
“ஸ்டார்டிங்ல புடிக்கலனா என்ன?? அப்பறமா பேசி பேசி கவர் பண்ணிட மாட்டேனா?? அவங்க அப்பாவ கவர் பண்றது தான் கஷ்டம் போல இருக்கு?. பாத்துக்கலாம் நிர்மல். முயன்றால் முடியாதது ஒன்றுமில்லைன்னு முன்னோர்கள் சும்மாவா சொன்னாங்க’??
‘எல்லாத்தையும் பாத்துக்கலாம். பொறுமையா பாத்துக்கலாம். ஆனா முதல்ல இந்த பட்சியை கரெக்ட் பண்ணலாம். ரொம்ப வெறப்பா தான் இருக்காள். நம்ம கேரக்டருக்கும் அவள் கேரக்டருக்கும் செட்டே ஆகாது. ஆனாலும் கனவு கண்டிடியடா நிர்மல். உன்னோட பெட்ரமாக்ஸ் லைட் அவளாத் தான் இருக்கணும். சோ முயற்சி பண்ணி பாக்கணும். ஆனா வீட்ல இருந்து எப்படி முயற்சி பண்றது’??
‘கண்டிப்பா கேட்டா வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. அது ரெஸ்டாரண்டுக்கு சான்ஸ் இல்ல. தினமும் சாப்பிடுவதற்கு அங்கே போக முடியாது. அப்புறம் நம்மளை சாப்பாட்டு ராமன்னு நினைச்சுருவாள். சாப்பிடறது மிஞ்சி போனா அரை மணி நேரமோ?? இல்ல ஒரு மணி நேரமோ தான் டைம் ஸ்பென்ட் பண்ண முடியும்.
அதுக்குள்ள அவளை கரெக்ட் பண்றது கஷ்டம். காலைல இருந்து சாயங்காலம் வரைக்கும் இல்ல நைட் வரைக்கும் அவள் கூடவே இருந்தா மட்டும் தான். ஏதாவது ஒரு ட்ரை பண்ண முடியும். ஆனா இவங்க யாரும் ஒத்துக்க மாட்டாங்க. நாளைல இருந்து அக்கா வேற நம்ம கூட இருப்பாள். நீ பண்ணி வச்ச வேலை அது போல டா ஏதாவது ஒரு ஐடியா பண்ணலாம்னு பார்த்தா?? எல்லாத்தையும் நீயே சொதப்பி வச்சிருக்க’?.
‘சரி கனவு கொடுத்த கடவுள் அவளையும் கரெக்ட் பண்றதுக்கு ஒரு வழியை கொடுப்பாரு. கொஞ்சம் பொறுமையா இருடா நிர்மல். அந்தப் பட்சி உன் வசமாகும். முதல்ல அதுக்கு ஒரு ஐடியாவை போடணும். அப்புறம் எக்ஸிக்யூட் பண்ணனும்’ என்று நினைத்தபடி தன் மைண்ட் ரிலாக்ஸாக விளையாட்டுக்குள் இறங்கினான்.
மற்ற எல்லாம் மறந்து போக விளையாட்டு அவனைதனக்குள் இழுத்துக் கொண்டது.
………
“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்ற குரலில்.
“எஸ் கம் மின்” என்று விட்டு நிமிர்ந்து பார்த்தான் தேஜா.
தயங்கி தயங்கி உள்ளே வந்து கொண்டிருந்தாள் மானசா.
அவளைப் பார்த்ததும் ஆழ்ந்த மூச்சை விட்டுக் கொண்டே சாய்ந்து அமர்ந்தவன். சேரை சுட்டிக்காட்டி அமரும்படி கன்ஜாடை காட்டினான்.
“பரவால்ல சார்” என்றவள். அவன் முன்பாக ஒரு காகிதத்தை நீட்டினாள். அது என்னவாக இருக்கும் என்று அவள் பேச்சை கவனித்தவனுக்கு தெளிவாகவே புரிந்தது.
“முதல்ல உக்காருங்க” இருக்கையை காட்டியபடி கூறினான்.
அதற்கு மேல் மறுக்க தோற்றாமல் அமர்ந்து கொண்டாள் மானசா. நேரத்தை பார்த்தான் தேஜா. மணி ஐந்தை கடந்து கொண்டிருந்தது. அலுவலகம் விட்டு ஒவ்வொருவராக வெளியே சென்று கொண்டிருந்தனர்.
அமர்ந்துவிட்டும் அவள் அந்த பேப்பரை அவனிடம் மீண்டும் நீட்ட “என்ன இது”? என்று கேட்டான்.
“சார், வந்து நேத்து நடந்ததுக்கு அப்பாலஜி லெட்டர், பிளஸ் ரிஸிகினேசன் லெட்டர்” என்றாள் மானசா.
“நேத்தே போதும் போதும்ன்ற அளவுக்கு சாரி கேட்டுட்டீங்க?? உண்மையா பொய்யான்னு விசாரிக்கிறதுக்கு உங்க தம்பியோட ரிப்போர்ட்சையும் கொடுத்திருக்கீங்க. அதுக்கப்புறம் எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை”? என்று கேட்டான் தேஜா.
அவள் கண்கள் ஆச்சரியத்தில் மின்னியது. அவள் காதுகளை அவளாலேயே நம்ப முடியவில்லை. அவனுக்கு தெரியாமல் தன்னையே கிள்ளி பார்த்துக் கொண்டாள் மானசா.