17- கனவே சேராயோ??? 17

விதி என்று நினைத்தேன்.  (வதி)யாகிப் போனாய் பெண்ணே.

(வதி- மனைவி) 

கனவே சேராயோ??? 17

அதைவிட சுவாரசியமான விஷயமும் இருக்கு 1912-ல் (Titanic) டைட்டானிக் புறப்படுவதற்கு சுமார் பத்து நாட்களுக்கு முன்பு, (J. Connon Middleton) கானான் மிடில்ட்டன்னு ஒருத்தர், டைட்டானிக் கப்பல் கவிழ்ந்து, மக்கள் கடலில் தத்தளிப்பது போல கனவு கண்டிருக்கிறாரு. அதுவும் இரண்டு இரவுகள் தொடர்ந்து கண்டதாகக் கூறியிருக்கிறார்.” 

“ஆனா அவரோட அந்த பேச்சை யாருமே நம்பல. பட் அவர் தன்னோட   பயணத்தை ஒத்தி வச்சிருக்காரு . ரொம்ப தத்ரூபமா கண்ட கனவை அவர் இக்னோர் பண்ண விரும்பல.” என்றார் மருத்துவர்.

 டைட்டானிக் கப்பலின் விஷயம் என்பது, கிட்டத்தட்ட உலகத்தில் இருக்கும் எல்லோரும் அறிந்தது தான். படமாக வெளிவந்தது எல்லோர் மனதிலும் இடம் பிடித்த ஒன்று. அவனுக்குமே   அதைப் பற்றி தெரியும். ஆனால் இவர் கூறும் இந்த விஷயம் (Precognitive Dream) அவனுக்கு புதிதுதான். மருத்துவர் பேச்சை தொடர்ந்து கொண்டிருக்க. அவனும் அதை கவனிக்க ஆரம்பித்தான்.

“டைட்டானிக் கப்பல் ஏப்ரல் 14–15 அன்று உண்மையிலேயே மூழ்கிடுச்சு. கானான் தன் நண்பர்கள் கிட்ட இதைப் பற்றி பகிர்ந்துகிட்டதா  1912-லையே (Society for Psychical Research) பிஸிக்கல் ரிசர்ச் சொசைட்டி  நூல் ஒன்னு வெளியிட்டாங்க. இது வரலாற்றுப் பதிவுனு சொன்னாலும். அதற்கு ஆதாரங்களை தெளிவா  அவங்க கொடுக்கல. பல ஆண்டுகளாக ஆய்வு செய்யப்பட்டாலும் இன்னும் தீர்க்கப்படாத கேள்வி தான் இது.”

(2017 Dream-ESP Meta-analysis — International Journal of Dream Research)

(Maimonides Dream-ESP research review — University of New England) ப்ரீ கோகனட் ட்ரீம் பத்தி ரிசர்ச் பண்ணி அறிக்கைகளை வெளியிட்டாங்க. இப்படி பல அறிக்கைகளும், ஆவணங்களும் இருந்தாலும் நம்ம மாடர்ன் சயின்ஸாள இதை நிரூபிக்க முடியல.    மொத்தத்துல இது நம்பகத்தன்மையை பொறுத்த விஷயம் தான்.” என்று முடித்தார் மருத்துவர்.

“எனக்கு புரியல டாக்டர்?? இப்ப இப்படி ஒன்னு இருக்கின்றீங்களா? இல்லைன்னு சொல்றீங்களா?? இதை நம்பறதா வேண்டாமா”?? என்று கேட்டான் தேஜா.

அவன் பெயரிலேயே இப்படி ஒரு கனவு இருக்கும் என்று அவன் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. மிக ஆழமாக இல்லாமல், முன்கூட்டி காணும் கனவை பற்றி   மேலோட்டமாக கேள்விப்பட்டிருக்கிறான். ஆனால் இதுதான் என்று இப்போது மருத்துவர் கூறும் போது தான் அவனுக்கு தெளிவாக புரிந்தது. அவரும் பெயர்களை சொல்லி குறிப்பிடும் போது அவனுக்கு அது புதிதாகவே தென்பட்டது.

“உளவியல் ரீதியா மனிதனோட ஆழ் மனது. அதாவது  சஸ்பிசியஸ் மைண்டினு சொல்லுவாங்க. (Subconscious mind) நாம வசிக்கிற   இடத்தை  கடந்து சில விஷயங்களை உணரும். அதுக்கும் நிறைய எக்ஸாம்பிள்ஸ் இருக்கு.  நம்மளோட சித்தர்கள், முனிவர்கள் இவங்க எல்லாம் காலம் கடந்து வாழ்ந்ததா சரித்திரங்கள் சொல்லுது.   இவங்க எல்லாம் வாழ்ந்ததற்கான ஓலைச்சுவடிகள் நம்மளுடைய ஹிஸ்டரியில் இருக்கு. இதை ஆன்மீக ரீதியாகவும் நாம எடுத்துக்கலாம்.”

“இன்னொன்னு அறிகுறிகள் காட்டுறது. தத்ரூபமா காட்டும்னு சொல்ல முடியாது ஆனா குறிப்புகள் போல காட்டும். பெரும்பாலும் விபத்துக்கள், மரணங்கள், நம்மளோட வாழ்க்கையில ஏற்படுற திருப்பங்கள் இப்படி நம்மளோட பினைஞ்சி இருக்கிற  உணர்வுப்பூர்வமான விஷயங்கள் நம்ம எல்லாருக்குள்ளேயும் இருக்கும். அது சில சமயங்களில் நமக்கும் வெளிப்படுத்தும்.  நம்ம ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தா? நாம  ஒவ்வொருத்தரும் இப்படி ஒரு அனுபவத்தை கடந்து வந்திருப்போம்.” என்று மருத்துவர் கூறும்போது.

 அவனுக்கு ஏற்படும் உணர்வுகளை அவன் சிந்திக்கலானான்.

அவன் அவ்வப்போது   அவரிடம் தான் கவுன்சிலிங் வருவது. தெளிவாக இல்லையென்றாலும் அவனுக்கு வரும்  அமானுஷ்யமான அந்த சிந்தனைகளுக்கு அவர் ஏற்கனவே விளக்கங்களை கொடுத்திருக்கிறார். இப்போது இதுவும் அது கூட தொடர்புடையது போல தான் அவனுக்கு தோன்றியது. அதனால் இன்னுமே ஆழ்ந்து கவனிக்கலானான்.  ஆனால் அது வேறு இது வேறு.

“இந்திய மண்ணில்  பிறந்த நாம ஒவ்வொருத்தரும் ஆன்மீகத்தை ஒதுக்கி வைக்க முடியாது. அது நம்ம கூடவே கலந்து வர ஒன்னு.  நம்மளோட புராணங்கள்ல  ஆழ் மனதோடு சக்திகளுக்கு நிறைய உதாரணங்கள் இருக்கு. இன்னொன்னு அறிவியல் ரீதியா பார்க்கிறது” என்று நிறுத்தினார்.

 தேஜாவின் புருவம் இடுங்கியது. 

“அறிவியல் உலகத்தில்  இதை (Parapsychology)  பாராசைக்காலஜின்னு சொல்லுவாங்க. இதையும் நம்மளால உணர முடியும். ஒவ்வொருத்தரும் இதையெல்லாம் கடந்து தான் வந்திருப்போம்.  காலைல எந்திரிக்கணும். ஸ்கூலுக்கு போகணும். வேலை கேக்கணும். எக்ஸாம்ஸ் வருது. இது எல்லாமே நம்ம ஆள் மனசோட நினைவூட்டல் தான். இதை செலெக்ட்டிவ் மெமரின்னு சொல்லுவாங்க (Selective Memory).

“ஆனா இதெல்லாம் சாதாரணமா நடக்கிறது தானே டாக்டர்? என்னோட பிரச்சனை உங்களுக்கு தெரியும். நிர்மலோட பிரச்சனைக்கும், என்னோட பிரச்சனைக்கும் சம்பந்தம் இருக்கா”? என்று தேஜா கேட்டான்.

“இருக்கிறதுனால தான், உங்களுக்கு இவ்வளவு நீண்ட விளக்கமா சொல்லிட்டு இருக்கேன் மிஸ்டர் தேஜா. நிர்மலோட பேரண்ட்ஸ்சும் நீங்களும் பயப்படற அளவுக்கு இது ஒன்னும் நோய் கிடையாது. அதிகப்படியான மெமரிஸ். உங்க ரெண்டு பேரோட மூளையும் ரொம்ப அதிகப்படியா செயல்படுது. ஆனா வெவ்வேறு விதமா செயல்படுது. உங்களுடையதும் அவருடையதும் வேற வேற பிரச்சினைகள் தான். ஆனா எங்கேயோ ஒரு மெல்லிய கயிறா இணைப்பும் இருக்கு.”

“உங்களுடைய விஷயத்துல ஆழ்மனம் தட்டி எழுப்பி வெளியே கொண்டுட்டு வர பார்க்குது. ஆனா உங்களுக்கு அது இன்னும் தெளிவா வரல. உங்களோட மெமரிஸ் அதை இன்னும் தெளிவா காட்டல. ஆனா நிர்மலுக்கு அந்த ஆக்சிடென்ட்டுக்கு அப்புறமா எல்லாமே தெளிவா காட்டி இருக்கு. நீங்க அவரை விளையாட்டு பிள்ளைன்னு சொன்னீங்க. அதனால அவரு எல்லாத்தையும் விளையாட்டா எடுத்திருந்திருக்கலாம். அதாவது ஆக்சிடென்ட்க்கு   முன்னாடி அவருக்கு தோன்றின எல்லா விஷயத்தையும் விளையாட்டா எடுத்துட்டிருந்து இருக்கலாம். டெத் போல மேசிவா ஒரு டிராஜடி நடக்கும்போது.  நிர்மல் மட்டும் இல்லாம,  அவரோட ஃபேமிலியை சேர்ந்தவங்க சுத்தி இருக்கவங்கன்னு எல்லாருமே அதோட சீரியஸ்னசை உணர்றாங்க. அவரை உங்களால கூட்டிட்டு வர முடிஞ்சா?? அவரோட ஆழ் மனசு கிட்ட பேச ட்ரை பண்ணி பார்க்கலாம். அவருக்கும் இது போல ஏதாவது முன்னாடியே கனவுகள் வந்திருக்கானு கேட்கலாம்.” என்றார் மருத்துவர்.

“அது கொஞ்சம் கஷ்டம் தான் டாக்டர். அவனை பொறுத்த வரைக்கும் பிரச்சனை இல்ல. கூப்பிட்டா கூட வந்துருவான். ஆனா அவனோட அக்கா ஒருத்தி இருக்காள். அவளுடைய தம்பிக்கு கேடயமே அவள் தான்னு நினைப்பு அவளுக்கு. அவள் தம்பிக்கு பதிலா உயிரை கூட கொடுப்பாள் போல? தண்டனையை கூட தனக்கு கொடுங்க. என் தம்பிக்கு கொடுக்காதீங்கன்னு சொல்லிட்டு, எல்லாத்துலயும் மூக்க நுழைப்பாள்.  அவள் கிட்ட பேசுறது தான் கஷ்டம்னு நினைக்கிறேன்”  என்றான் தேஜா.

 அதைக் கூறும்போதே அவன் இதழ்களில் ஒரு மெல்லிய புன்னகை வருவதை, அவனால் தடுக்க முடியவில்லை. மனோ தத்துவ நிபுணரும் அதை கவனிக்க செய்தார்.

“நீங்க சொல்ல வரது எனக்கு புரியுது மிஸ்டர் தேஜா. நார்மலா நம்ம குடும்பத்துல இருக்குறவங்கள  மனோ தத்துவ நிபுணர் கிட்ட கூட்டிட்டு வர்றதே கஷ்டம் தான். நீங்களுமே என்கிட்ட  கவுன்சிலிங் எடுக்கறத பத்தி உங்க பேரண்ட்ஸ் கிட்ட சொல்லல. இது ஆழ்மனம் சம்பந்தப்பட்டது. ஆனால் இது நிறைய பேரு வேற மாதிரி தப்பா புரிஞ்சுக்கிறாங்க. அது நம்மளோட தப்பு இல்ல.  நம்ம சொசைட்டியோட தப்பு தான். டேக் யுவர் ஒன் டைம்” என்றார் மருத்துவர்.

“எனக்கு என்னமோ?? அவனுக்கும் எனக்கும் சம்பந்தம் இருக்குனு ஆழ் மனசுல சொல்லிட்டே இருக்கு டாக்டர். அதுக்கான காரணங்கள் தான் எனக்கு புரியல?? அதற்கான  கேள்வியை நான் எனக்குள்ள கேட்டுக்குறேன். ஆனா பதில் தான் எனக்கு தெரியல”??

“நான் இதுக்கு முன்னாடியே அவனை பார்த்ததே இல்லை? ஆனா அவன பார்க்கும்போது ஒரு நெருக்கமான உணர்வு தோணுது. அவன மட்டும் இல்ல. அவன் அக்காவை பார்க்கும் போதும் எனக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றியிருக்கு. ஆனா அது என்னோட வயது கோளாறுன்னு நினைச்சு,  நான் கண்ட்ரோல் பண்ணிட்டேன்” என்றான் தேஜா 

“என்ன மிஸ்டர் தேஜா?? இதை பத்தி நீங்க என்கிட்ட சொல்லவே இல்லையே”? என்று மருத்துவர் கேட்டார்.

“இதை போய் எப்படி டாக்டர் சொல்ல முடியும்”? என்று அவன் சங்கடமாக தலையை கோதினான். 

“நீங்க சொல்ல வர்றது எனக்கு புரியுது. ஆனா உங்கள பத்தியும் எனக்கு நல்லா தெரியும் இல்லையா?? உங்ககிட்ட வழிஞ்சிட்டு வர பெண்களையே நீங்க தூரம் தான் நிறுத்துவீங்க. அப்படிப்பட்ட உங்களுக்கு ஒரு பொண்ணு கிட்ட வேற விதமான உணர்வுகள் தோணுதுனா??அதை நாம கவனிக்கனும் மிஸ்டர் தேஜா.” என்று மருத்துவர் கூற வருவது அவனுக்கு தெளிவாக புரிந்தது.

‘ரெண்டு வருஷமா அவளை நான் எப்பொழுதாவது தான் பார்த்திருக்கேன். மேக்சிமம் லிஃப்ட்ல மீட் பண்ணி இருக்கேன். எப்பயுமே லேட்டா வருவாள். அதுவே அவளை தனியா காட்டும். இல்லனா அடிச்சு புடிச்சு வந்து லிப்ட்டு குள்ள நுழைவாள். ரொம்ப கேனத்தனமா இளிச்சு வைப்பாள். அவளும் கொஞ்சம் டிஃபரண்டான பர்சன் தான். அதனால தான்  என்னை அவள் அட்ராக்ட்  பண்றாளோனு கூட நான் யோசிச்சிருக்கேன்.” என்று தன் மனதில் இருப்பதை வெளிப்படையாக கூறினான் தேஜா.

“ம்ம்ம், அந்தப் பொண்ணு பேரு என்ன சொன்னீங்க”? என்று மருத்துவர் கேட்டார்.

“மானசா டாக்டர்.”

“ம்ம், அவளோட தம்பி பேரு நிர்மல் இல்லையா”? என்றார்.

 

“நிர்மலை பார்க்கும்போது, உங்களுக்கு எப்படிப்பட்ட உணர்வு ஏற்படுதுன்னு சொல்ல வரீங்க மிஸ்டர் தேஜா”?

……

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top