16-கனவே சேராயோ??? -16

தீராத  தேன் சுவையாக என் நாவினில் என்றும் தித்தித்துக் கொண்டிருக்கிறாய் நீ..

 

கனவே சேராயோ?? 16

மானசா நினைத்தது போல அன்று ஒன்றுமே நடக்கவில்லை. அவள் வேலையை தாமதமாக தான் தொடங்கினாள். 

சிறிது நேரத்தில் தன்னை அழைப்பார்கள். வேலையில் இருந்து தூக்குவார்கள் என்று அவள் எதிர்பார்த்துக் கொண்டிருக்க. அப்படி எதுவும் நடக்காமல் போனது.  

சீப் வேறு அவளிடம்  கொடுத்த வேலை முடிந்து விட்டதா?? என்று கேட்டுக் கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் வேலையை தொடங்கினாள் மானசா.

பனிரெண்டு மணி போல,  தேஜா அந்த இடத்தை  கடக்கும்போது கூட அவள் திரும்பி பார்த்தாள். அவன் தன்னை பார்க்கிறானா?? தன்னை அழைப்பானா?? என்று. ஆனால் அவனோ அவளை கண்டு கொள்ளாமல் சென்று விட்டான்.

முதல் நாள் இப்படி ஒரு விஷயம் நடந்தது போலவே காட்டிக்கொள்ளவில்லை ??. ஆனால் அவளுக்கு தெரியாது. அவன் சி.சி.டிவி வழியாக அவளைத்தான் ஆராய்ந்து கொண்டிருந்தான் என்று. 

 ஆனால் மதிய இடைவெளியின் போது, முன்தினம் நடத்தது பரபரப்பாக பேசப்பட்டு, அவள் தோழி மூலமாக அவள் காதையும் வந்தடைந்தது.

 “சாரிடி,  உன் தம்பிக்கு இருக்கிற பிரச்சனை எனக்கு தெரியும். ஆனா அவன் அப்படியே வந்து நிப்பான்னு, நான் யோசிக்கல. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருந்தது. அதனால இவனை சரியா கவனிக்கல. அவன் வெளியே போய் வெயிட் பண்ணுவான்னு நினைச்சேன்.  உள்ள போயிருப்பான்னு நான் யோசிக்கவே இல்லை.  கிட்டத்தட்ட இந்த பிரச்சனைக்கு நானும் ஒரு காரணம். என்னை மன்னிச்சிடு”  என்று கேட்டாள் ராதா. 

“விடு டி,  என் விதி சரியில்லை.  அதான் எல்லாம் நடந்திருக்கு. அதுக்கு நீ என்ன பண்ணுவ?? ஆனால் எப்படியும் எல்லாரும் என்னை தப்பா தான் பேசுவாங்க.  சீப் பேச்சுமே அப்படி தான் இருந்துது. அவங்களா அனுப்பலனாலும்,  நானா வேலையை விட்டு போறது நல்லதுன்னு நினைக்குறேன்.” என்றாள் மானசா.

“ஏன் டி அப்படி எல்லாம் சொல்லுற?? வேற ஒரு விஷயம் வரவரைக்கும் இந்த விஷயத்தை பத்தி பேசுவாங்க. அப்புறம் அதுக்கு தாவிடுவாங்க. அதுக்காக நல்ல வேலையை விட்டு போவியா”? என்று கேட்டாள் ராதா.

“அப்படி இல்லடி. பிரமோஷன்னால,  ஏற்கனவே என் மேல காண்டுல இருந்தவங்க எல்லாம். இப்ப இன்னும் இளிவா  பேச ஆரம்பிச்சிடுவாங்க.   நேத்தே மெண்டலா நான் இந்த வேலையை விட்டு போறதுக்கு பிரிப்பர் ஆயிட்டேன். ஆனா என்ன ஒன்னு?? நல்ல வேலையை விட்டு போறேன்னு மனவருத்தம் இருக்கு. ஆனா நம்மள பத்தி தப்பா பேசுற இடத்துல மன உளைச்சலோடு வேலை செய்ய முடியாது.  அது ரொம்ப மெண்டல்  பிரஷரை ஏற்படுத்திடும். நானே இன்னைக்கு ஏதேதோ நினைச்சு வந்தேன்.  எதுவுமே நடக்கல?? இன்னைக்கு விசாரிச்சிட்டு நாளைக்கு தான் வேலையிலிருந்து தூக்குவாங்க போல?? ப்ராப்பரா ரிலீவ் ஆகணும்னு தான் யோசிக்கிறேன். அதான் வெயிட் பண்றேன்”  என்று கூறியவளின் பேச்சில் திடமிருந்து.  

“வேணாம்டி அப்படி யோசிக்காத. அவங்களா  அனுப்புனா,  நம்மளால ஒன்னும் செய்ய முடியாது?? ஆனா நீயா போறது எனக்கு சரியா படல” என்றாள் ராதா.

“எம். டி எதுவும்  பெருசா பேசல. தம்பி கிட்ட கூட அவர் நல்லா தான் பேசினாறாம்.  ஆனா பாஸ் செம காண்டுல இருந்தாரு. கண்டிப்பா அவர் என்னை தான் டார்கெட் பண்ணுவாரு. அவங்கள சொல்லியும் குத்தம் இல்ல?? பிரச்சனை அதுபோல. நான் நேத்து நிறைய கம்பெனிக்கு அப்ளிகேஷன் போட ஆரம்பிச்சிட்டேன். ஆனா எங்கேயும் வேகன்ட் இருக்கிறதா தெரியல? பரவால்ல வெயிட் பண்ணி வேலைக்கு போயிக்குறேன்.  அதுவரைக்கும் தம்பி கூட  கேம் விளையாட வேண்டியது தான்”? என்று தன்னை சமன் படுத்திக் கொண்டு கூறினாள்.

“என்னடி இப்படி பேசுற?? உன்னை மாதிரி ஒரு பிரண்டு எனக்கும்,  நல்ல எம்பிளாய் இந்த கம்பெனிக்கும் கிடைக்க மாட்டாங்க டி” என்றாள்.

“அதுக்கு என்ன பண்றது??  என்னோட நாலேஜ் இப்படியே முடங்கிடாது.  அடுத்த வேலை கிடைக்கிற வரைக்கும் தான் விளையாட்டு. அதுக்கப்புறம் கண்டிப்பா என்னுடைய திறமையை காட்டுவேன்.” என்றாள் மானசா.

“உனக்குன்னு  எந்த கமிட்மென்ட்டும் இல்ல. அதான் இப்படி பேசுற? எங்களுக்கெல்லாம் வேலைக்கு போனா தான் சோறு”? என்றாள்.

“அஃப்கோர்ஸ், அந்த நிலைமை எனக்கு இல்ல. ஆனா என் தம்பியோட ட்ரீட்மென்ட்க்கு நிறைய செலவாகுது. அதனால அப்பா அம்மாவுக்கு கஷ்டம் கொடுக்காம எங்க ரெண்டு பேருக்கான செலவினங்களை நான் பாத்துக்கணும்னு நினைச்சேன். அது கொஞ்சம் டிலே ஆகும். ஆனா கண்டிப்பா பார்த்துப்பேன். உன்னோட ப்ரெண்ட்ஸ் யார் கிட்டயாவது வேகண்ட் இருக்கான்னு கேட்டு பாரு” என்று பேச்சை முடித்துக் கொண்டு.  வேலையை தொடங்கினாள் மானசா.

அவன் பேசிய எல்லாவற்றையும், காதில் மாட்டியிருந்த   ப்ளூடூத் ஹெட்போன் மூலமாக கேட்டுக் கொண்டிருந்தான்  தேஜா. முதல் நாள் இரவு தாமதமாக அலுவலகத்திலிருந்து கிளம்பியவன்.  அவள் மேஜையில் மைக்ரோ டிவைஸை பொருத்தியிருந்தான்.  

 அவர் மதிய உணவுக்கு கூட செல்லவில்லை. ஜூசை குடித்துவிட்டு அங்கேயே அமர்ந்திருந்தாள்.  அவள் வெகுவான அழுத்தத்தில் இருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது. 

காரில் புறப்பட்டதிலிருந்து, சைட்டில்  மேற்பார்வ இட்டுக் கொண்டிருக்கும் போதும், அதன் பிறகும் கூட, அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று அவன் தெளிவாக கேட்டுக் கொண்டுதான் இருந்தான். அவளைப் பற்றி அவன் தெரிந்து கொள்ள வேண்டுமென்று நினைத்தான். 

……

தேஜா அந்த ரிப்போர்ட்டை எடுத்து பெரிய மனோதத்துவர் நிபுணரிடம் கொடுத்துவிட்டு அமைதியாக அமர்ந்திருந்தான்.

அவர் பொறுமையாக ஒன்று விடாமல் படித்தார். ஏற்கனவே சிலவற்றை மெயிலில் அனுப்பி அவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தான். 

 முக்கியமான பைலை  புரட்டிக் கொண்டிருந்தவர் ஆழ்ந்த பெருமூச்சோடு நிமிர்ந்து அமர்ந்தார். 

“ இதுக்கு ஏதாவது விளக்கங்கள் இருக்கா டாக்டர்?? இது எப்படி சாத்தியமாகுது?? பொய் சொல்லி இருக்கலாம். ஆனா இதுக்கு முன்னாடி அவன் கனவில் வந்தது நடந்திருக்கு. அதையும் நான் விசாரிச்சு பாத்துட்டேன். இதற்கான எந்த கிளாரிஃபிகேஷனும் ஆன்லைன்ல கொடுக்கப்படவில்லை. இதை பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க”? என்று கேட்டான்  தேஜா.

 “வெல், இந்த பேஷண்டை பத்தி நானும் கேள்விப்பட்டிருக்கேன். என் பார்வைக்கு இந்த பேஷண்டோட ரிப்போர்ட் முன்னாடியே வந்தது. நியூராலஜி,  சைக்காலஜி டாக்டர்ஸ்குள்ள இந்த பேஷண்டை பத்தின டீப் டிஸ்கஷன் நடந்திருக்கு. நீங்க கேட்ட உடனே. இவன் தான்னு எனக்கு தெரிஞ்சிருச்சு.  உங்க மேயில்ல எனக்கு கிளாரிஃபிகேஷன்  கிடைச்சிருச்சு. ஆனா நீங்க கேக்குற இந்த கேள்விக்கான விளக்கம் என்னால கொடுக்க முடியாது தான்.” என்று தோள்களை குலுக்கினார்.

“அப்படின்னா இது அவனுடைய இலுசினேஷனா?? அப்படியே இலுசினேஷனா இருந்தாலும், எப்படி அது நடக்குது”?   என்று கேட்டான் தேஜா.

“மெடிக்கல்  சயின்ஸ்க்கு அப்பாற்பட்டு நிறைய விஷயங்கள் இந்த மெடிக்கல் ஃபீல்டுல  இருக்கு மிஸ்டர் தேஜா. அப்படி ஒன்னு தான் இது. இன்னும் இதை பத்தின ரிசர்ச் நடந்துட்டு தான் இருக்கு. விடை தெரியாத கேள்விகளா?? மர்ம முடிச்சுக்கலா இன்னும் அவிழ்க்கப்படாமல் இருக்கு.” என்றார் மருத்துவர். 

 “இது சாத்தியமா டாக்டர்? பின்னாடி நடக்க போறது முன்னாடியே கனவுல தெரியுமா”?

 “எல்லாருக்கும் அப்படி தெரியாது மிஸ்டர் தேஜா. ஆனா ஒரு சிலருக்கு இதுபோல தெரிஞ்சதா வரலாறு சான்றுகள் இருக்கு” என்றார்.

 “அது எப்படி சார் சாத்தியம்”? 

 “சயின்டிஃபிகளா இதுக்கு எந்த விளக்கங்களும் இல்லை. ஆனால் இது போல நடந்திருக்கிறது உண்மைதான். அதே சமயத்தில் அதுக்கான விளக்கங்களை கண்டுபிடிக்க முடியாததும் உண்மைதான். இதை பத்தி நிறைய சயின்டிஸ்ட் ரிசர்ச் பண்ணி இருக்காங்க. இன்னும் பண்ணிக்கிட்டே இருக்காங்கன்னு சொல்லலாம். டாக்டர் ரிசர்ச்சர்ஸ்னு இன்னும் எவ்வளவோ பேரு ஆராய்ச்சி பண்ணிட்டே இருக்காங்க. ஒவ்வொருத்தரோட ரிப்போர்ட்டும் வேற வேறயா இருக்கும். ஆனா சைன்ஸ் படி பார்த்தா இதுக்கு சாத்திய கூறுகள் இல்லைன்றது தான் உண்மை.” என்றார்.

 “ஆனா ரிப்போர்ட் பொய் சொல்லலையே?? அவன் உண்மையைதானே சொல்லி இருக்கான்?? ஒருவேளை அவன் நடிக்கிறானா?? ஆனா அவன் சொன்னதெல்லாம் எப்படி நடந்து இருக்கு”? என்று கேட்டான் தேஜா.

 “அதுக்கு வாய்ப்பில்லை. அவனை ஏற்கனவே நிறைய டெஸ்ட் பண்ண ரிப்போர்ட்ஸ் எல்லாம் நீங்க வச்சுருக்கறதிலேயே இருக்கு. நீங்க அனுப்பும் போதே நான் இது எல்லாத்தையும் அனலைஸ் பண்ணிட்டேன். இவனுக்கு ட்ரீட்மென்ட் பார்த்த அந்த டாக்டரும் எனக்கு தெரிஞ்சவர்தான். அவர்கிட்ட கூட விசாரிச்சிட்டேன். ஃபுல்லா இந்த பேஷண்ட பத்தி ஸ்டடியும் பண்ணிட்டேன். அவன் நடிக்கல, அவனுக்கு உண்மையிலேயே அப்படி ஒரு இல்லுஸன்   தெரியுது. அது அவனுடைய ஆழ்ந்த தூக்கத்துல மட்டும் தான் அவனுக்கு கனவுகளா வருது. மத்தபடி அவன் நார்மல் பெர்சன் தான்.’

“ஓகே, அப்படின்னா என்ன இது?? இதுக்கு பேர் என்ன?? எதனால  இப்படி வருது”?  என்று கேட்டான். 

(முன்கூட்டிக் காணும் கனவு) (Precognitive dream)  ப்ரீ கோகனட்டிவ் ட்ரீம்னு இதை சொல்லுவாங்க. அதாவது எதிர்காலத்தில் நடக்க போறதை முன்கூட்டியே காண்கின்ற கனவு.  ஆனால் இது எதிர்காலத்தை உண்மையாகவே கணிக்கக் கூடியது தான்னு  அறிவியல் பூர்வமா நிரூபணம்   ஆகல. இதை 

பிரெஞ்சுல ‘Déjà rêvé’ ‘தேஜா ரீவீ’ ன்னு  சொல்லுவாங்க. இதுக்கு தமிழ்ல ( déjà vu) தேஜாவுன்னு அர்த்தம்  இருக்கு” என்று மருத்துவர் முடிக்க. 

அவன் சீட்டின் நுனிக்கு வந்து ஆர்வமாக அதைக் கேட்க ஆரம்பித்தான்.

 “அதாவது ஒரு இடத்தையோ, இல்ல ஒரு பொருளையோ, இல்ல ஒரு சம்பவத்தையோ அவங்க முன்னாடியே பார்த்த மாதிரி தோணும். நமக்குள்ளே கூட இது நிறைய பேருக்கு  நிகழ்ந்திருக்கும். ஆனா அதுக்கு சாலிடான எவிடன்ஸ்  இருக்காது. இதுக்கு பேரு தான் தேஜாவ னு சொல்றாங்க.”

“சில பேர் அதை கோஇன்சிடென்ட்னு   சொல்லி மழுப்பினாலும், தட்டி கழிச்சாலும், நம்மளுடைய ஹிஸ்டரில பதிவுகள் இருக்கு.” என்றார் மருத்துவர்.

“அப்படியா? அதெல்லாம் நிரூபிக்கப்பட்டிருக்கா”? என்று கேட்டான்.

“ஏன் இல்லாம?? புகழ்பெற்ற வரலாற்று ஆதாரங்களே நிறைய இருக்கு மிஸ்டர் தேஜா. 

ஆபிரகாம் லிங்கன் தன்னோட மரணத்தை பத்தி முன்னாடியே கனவா கண்டிருக்காரு. அதுவும் சில நாட்களுக்கு முன்னாடி தான் பார்த்திருக்கிறார். வெள்ளை மாளிகையில் ஒரு சடலம் வைக்கப்பட்டு இருக்கிறதாகவும்

லிங்கன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, வைக்கப்பட்டிருப்பதையும், அது ஜனாதிபதியோட சடலம்னு ஒரு வீரர் பேசுவதையும். அவர் தன்னோட  கனவில் கண்டதாக எழுதி வச்சிருக்காரு. ஆனா அவர் எழுதி வச்சதா சொல்லப்படுற காகிதங்கள் ஆதாரமா கிடைக்க படல. அதனால  இதோட  நம்பகத்தன்மை சந்தேகத்திற்குரியதானது” என்று கூறினார் மருத்துவர்.

“அப்போ இதை மட்டும் வச்சு, எப்படி உறுதியாக சொல்ல முடியும் டாக்டர்”? என்று கேள்வியாக நிறுத்தினான்  தேஜா.

“நான் இன்னும் சொல்லி முடிக்கல மிஸ்டர் தேஜா. இதுபோல இன்னும் சில ஆதாரங்கள் இருக்கு” என்று புன்னகைத்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top