கண்மூடி தரிசித்தேன், காதலை வந்து சேராயோ?
கனவே சேராயோ? 4
அந்தப் பெரிய மீட்டிங் ஹாலில் முப்பதிற்க்கும் மேற்பட்டோர் குழுமியிருந்தனர். நீள்வட்ட வடிவ மேஜையின் நடுநாயகமாக பெரிய சேர் ஒன்று போடப்பட்டிருக்க. அதில் ஆளுமையாக அமர்ந்திருந்தான் ஆறடி ஆண் மகன் தேஜா.
போர்ட் மீட்டிங் நடந்து கொண்டிருந்தது. முக்கியமான கம்பெனி உறுப்பினர்கள் ஷேர் ஹோல்டர்கள் என்று வீற்றிருந்தனர்.
அப்போது சடாரென்று கதவு திறக்கப்பட. அனிச்சை செயலாக அனைவரின் பார்வையும் பதினைந்தடி உயரமுள்ள கதவை நோக்கி திரும்பியது.
வேகமாக ஓடி வந்ததனால் நிலையில்லாமல் சறுக்கி கொண்டே உள்ளே நுழைந்தவன், நேர் எதிராக இருந்த தமக்கையின் முன்பு வந்து நின்றான்.
“அக்கா” என்று அவள் புஜங்களை பற்றிக் கொண்டான்.
அவனைப் பார்த்ததும் அனைவரின் புருவமும் இடுங்கியது. அதில் ஒருத்தியை தவிர. அவள் கண்கள் மட்டும் அதிர்ச்சியில் அகல விரிந்து கொண்டது. அவன் பார்வையும் அவளை மட்டுமே பார்த்தது.
கொக்கிற்கு மீன் ஒன்றே பிரதானம் என்பதற்கிணங்க,
அவன் பார்வைக்கு அவள் மட்டுமே தெரிந்தாள். கதவை திறந்ததும் நேர் எதிராக அவள் நின்றதும் அதற்கு ஒரு காரணம்.
“தேங்க் காட். அக்கா உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லனும்னு வந்தேன். இன்னைக்கு காலையில ஒரு விஷன் பார்த்தேன். அதை பத்தி சொல்லலாம்னு பார்த்தா, அதுக்குள்ள நீங்க ஆபீசுக்கு கிளம்பிட்டீங்க. அதை நான் இப்பவே இந்த நிமிஷமே சொல்லலனா என் தலையே வெடிச்சிடும்” அங்கிருந்தவர்களை கருத்தில் கொள்ளாமல். அவளை நெருங்கி படபடக்க ஆரம்பித்தான் நிர்மல்.
அவன் ஏதேதோ பேசிக் கொண்டிருக்க. அவளோ முகத்தை சுருக்கியபடி, பதட்டமாக அவன் வாயை பொத்தப் போனாள்.
காலையில் அவன் பார்த்ததை தமக்கையிடம் கொட்டி விடும் அவசரத்தில், அவள் கரங்களை தட்டி விட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்தான் நிர்மல்.
“அக்கா, நான் எவ்வளவு பதட்டமா சொல்லிட்டிருக்கேன்? என்னை சொல்ல விடாம பண்ணிட்டிருக்க?? நான் கண்ட கனவை மட்டும் சொன்னேனா நீ ஆச்சரியத்தில் மயங்கி விழுந்துடுவ” என்றபடி அவள் புஜங்களை உலுக்கி கொண்டிருந்தான்.
“ஏய் வாய மூடுடா தடியா” என்று சிறு குரலில் கத்திய மானசா. அவனை இழுக்க முயன்றாள்.
திடகாத்திரமான ஆண்னவனை, மெல்லிய தேகமுடைய பெண்ணவளால் இழுக்க கூட முடியவில்லை.
“அக்கா, என் கனவுல நீ உன் பாஸை கல்யாணம் பண்ணிக்கிட்ட. நேத்து உன்னை பொண்ணு பார்க்க வந்தானே? அந்த தீவெட்டிதடியன் உனக்கு கணவனா வர வாய்ப்பே இல்லை. அதனால நீ பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. கல்யாணத்தை நிறுத்த போராட வேண்டிய அவசியமும் இல்லை. நான் கனவுல பாக்குறது எல்லாம் நடக்கும்னு உனக்கே தெரியும் தானே?? கண்டிப்பா நீ உன் பாஸை தான் கல்யாணம் பண்ணிக்க போற” என்றதும் அவனை தடுத்துக் கொண்டிருந்தவள்.
அவளுடைய முட்டை கண்களை இன்னும் ஆகல விரித்து, தன் கைகளை வைத்து தன் வாயை பொத்திக் கொண்டாள்.
“வாட் இஸ் திஸ்”? என்று ஓங்கிய கர்ஜனையில் அவன் சற்று நிதானத்திற்கு வந்தாலும், திரும்பிப் பார்க்கவில்லை.
“அக்கா திடீர்னு எதுக்கு ஆம்பள குரல்ல பேசுற”? என்று புன்னகையோடு கேட்டு வைத்தான்.
“பைத்தியக்காரா, உனக்கு உண்மையிலேயே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. முதல்ல நீ வா சொல்றேன்” என்றபடி அவனை இழுக்க முற்பட்டாள் மானசா.
“காட்ஸ்” என்று ஓங்கிய குரலில், திடகாத்திரமான இரண்டு கருப்பு கோர்ட் போட்ட ஆட்கள் அவர்கள் இருவருக்கும் முன்னாள் வந்து நின்றனர்.
தங்களை அல்லாமல் அங்கு வேறு இருவர் இருப்பதை அப்போதுதான் உணர்ந்தான் நிர்மல். அவர்களை அண்ணாந்து பார்த்தவன். “இவனுங்க என்ன திண்ணுவானுங்கன்னு தெரியலையே? இம்மா ஒசரமா இருக்கானுங்க”? என்று மனதினுள் நினைத்தவன். அதன்பிறகு தான், அவர்களையும் தாண்டி கொண்டு எட்டிப் பார்த்தான்.
அத்தனை பேரை அவன் கவனிக்கவில்லை என்பது, அவனுடைய உச்சகட்ட அதிர்ச்சியான முகத்தில் தெரிந்தது.
அவன் விழி பிதுங்கி பத்து மீட்டர் தூரம் சென்று விட்டு வந்து. அவன் கண்களோடு ஒட்டிக்கொண்டதுப் போல பிரம்மை தோன்றியது.
“எதுக்கு இத்தனை பேர் இங்க இருக்கீங்க”? என்று கேட்டபடி, அவர்களைத் தாண்டி கொண்டு சென்றான் நிர்மல். மானசா அவன் கையைப் பிடித்து நிறுத்த முயற்சிச் செய்தாள்.
கரு நீல கோர்ட் போட்டு ஒருவன் அவனை நோக்கி நடந்து வருவது தெரிந்தது. கனவில் கண்டது இவனைப் போல் அல்லவா இருந்தது?? என்று அவன் முகத்தை சுருக்கி பார்த்தான்.
அவன் முன்னால் வந்து நின்றவன். சொடக்கிட்டான்.
ஆனால் அதற்குள் மானசா அவன் முன்னால் வந்து நின்றாள்.
“சாரி சாரி பாஸ். இவன் ஒரு கிறுக்கன். கனவு கண்டுட்டு ஏதாவது உளறிட்டே இருப்பான். ஐ அம் ரியலி சாரி. நான் இவனை கூட்டிட்டு போயிடுறேன்.”
அவர்கள் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகம் இல்லை என்றாலும், அதில் உள் புகுந்து தம்பியின் மீது ஒட்டி உரசி நின்றபடி, அவனிடம் மன்றாடிக் கொண்டிருந்தாள் மானசா.
“வாட் தி ஹெல்”? என்று கர்ஜித்தான் தேஜா.
அவள் பயந்து கண்களை விரிக்க.
“நீங்கதான் இவளோட பாஸா?? அப்ப நீங்க தான் என்னோட மாமா” என்றான் நிர்மல்.
“என்ன நடக்குது இங்க”? என்றபடி வயதான ஒருவர் அவன் அருகில் வந்து நின்றார்.
அப்போதுதான் நிலைமையின் தீவிரமே மானசாவின் பைத்தியக்கார தம்பிக்கு புரிந்தது.
வாயை பிளந்தபடி சுற்றுத்தை அலசி ஆராய்ந்தான்.
அது மீட்டிங் ஹால் என்பது அவனுக்கு அப்போதுதான் புலப்பட்டது.
அவன் உண்மையில் பைத்தியம் எல்லாம் இல்லை. ஆனால் அவன் பிதற்றும் வார்த்தைகளுக்கு அவன் வீட்டில் அவ்வப்போது அவனை அப்படி அழைப்பது வழக்கம் தான். அவனுடைய அந்த செயல் அங்கிருந்தவர்களையும், அவனை அப்படித்தான் பார்க்க வைத்தது.
“சார் சார் ப்ளீஸ். நான் இவனை உடனே ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன். எனக்கு அப்படியே லீவு கொடுத்திடுங்க. ப்ளீஸ் பனிஷ் பண்ணாம விட்டுடுங்க சார்” என்றாள் மானசா.
“இது எவ்வளவு முக்கியமான மீட்டிங் தெரியும்ல?? நீயும் உன் தம்பியும் இந்த டோட்டல் மீட்டிங்க டிஸ்டர்ப் பண்ணது மட்டும் இல்ல, ஏதேதோ உளறி என் இமேஜயும் ஸ்பாயில் பண்ணிட்டிருக்கீங்க”? என்று கர்ஜித்தான் தேஜா.
அவள் தன் ஆள்காட்டி விரலையும் கட்டை விரலையும் தொண்டை குழியில் வைத்து பிடித்தபடி கெஞ்சினாள்.
“சார் ப்ளீஸ் சார். அவன் இப்படித்தான் ஏதாவது உளறிட்டே இருப்பான். இன்னைக்கு ஆபீஸ்க்கு வந்து உளறுவான்னு நான் சுத்தமா எக்ஸ்பெக்ட் பண்ணல?? நான் எல்லார்கிட்டயும் மன்னிப்பு கேட்கிறேன் சார்” என்று கூறியவள்.
அவனையும் தாண்டிக் கொண்டு சென்று. அங்கு நின்றிருந்த அத்தனை பேரிண் முன்பு தலைகுனிந்து கைகளை குவித்தபடி மன்னிப்பு யாசித்தாள்.
“ஐ அம் ரியலி சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ ஆல். அண்ட் ஐ ரீயலி அப்பாலஜி பார் யூ, ஆன் டிஸ்ட்ராயிங் யூவர் வேல்யூப்பில் டைம். சாரி சாரி” என்றவள். திரும்புவதற்கு முன்பாக.
“மீட்டிங் டிஸ்பஸ்” என்றான் தேஜா.
அந்த ஆளுமையான குரலில் அதிர்ந்து போய்விட்டாள் மானசா. ஆனாலும் தன்னை மீட்டெடுத்துக் கொண்டு.
“சார் நான் இவனை கூட்டிகிட்டு போயிடுறேன். நீங்க மீட்டிங்கை கேன்சல் பண்ண வேண்டாம்” என்றவள் கேட்டிருக்க.
“கார்ட்ஸ் இவங்க ரெண்டு பேரை தவிர மத்தவங்க எல்லாரையும் வெளியே அனுப்புங்க” என்று அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே கூறினான் தேஜா.
தகப்பனும் மகனும் மட்டுமே அங்கே இருக்க. மற்றவர்கள் எல்லாம் வெளியேற்றப்பட்டு கொண்டிருந்தனர். தேஜா அவளை ஆழமாக பார்ந்து கொண்டிருக்க. பாவயவள் தடுமாறி நின்று கொண்டிருந்தாள்.
தேஜாவை ஆராய்ந்தபடி, தன் கனவில் வந்தவனுக்கும் இவனுக்கும் உள்ள ஆறு வித்யாசங்களை சிந்தித்துக் கொண்டிருந்தான் நிர்மல்.
‘போச்சு போச்சு செத்தேன். இந்த சனியனை வச்சுக்கிட்டு ஒன்னும் பண்ண முடியல?? என் உயிரே போகுது.
கனவு கண்டு தொலைச்சா, மனசுக்குள்ளேயே வச்சுக்க வேண்டியதுதானே?? இல்ல போன் பண்ணி சொல்ல வேண்டியது தானே?? அதுவும் இல்லனா?? மீட்டிங் முடிஞ்சு வந்தவுடனே பேச வேண்டியதுதானே?? அவசர குடுக்கை. ஆபீஸ்க்கு வந்து என் வேலைக்கு உலையை வச்சுட்டான். இதுல ஐயாவுக்கு கார் வேற வேணுமாம். இனி எந்த ஆணியும் புடுங்க முடியாது. நல்ல வேலை கிடைச்சு, நல்ல சம்பளம் கிடைச்சதுன்னு சந்தோசப்பட்டேன். எல்லாம் போச்சு. அடுத்த வேலையை தேட வேண்டியதுதான். இதுல பாஸோட கல்யாணமாம்?? ரொம்ப அவசியம்”? என்று முணங்கிக் கொண்டே தேஜாவை கீழ் பார்வையாக பார்த்தாள்.
அவன் அதுவரையிலும் கூட அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் நேற்பார்வையாக. சற்றென்று கண்களை மூடியவள்.
பாஸுடைய தந்தையை திரும்பிப் பார்த்தாள். அவரோ, மற்றவர்கள் வெளியேறுவதை பார்த்துக் கொண்டிருந்தார்.
‘போச்சு போச்சு! இன்னைக்கு தான் உனக்கு கடைசி நாளாயிருக்கும். செத்தேன் செத்தேன். பாடை தான் இன்னைக்கு’ என்று சிந்தித்தப்படி கண்களை மூடினாள். அவள் முணுமுணுப்பதை தான் பார்த்துக் கொண்டிருந்தான் தேஜா.
அவள் கையை யாரோ பற்றுவது தெரிந்தது. வேறு யாரும் இல்லை, அவளுடைய ஆசை தம்பி தான்.
“அக்கா கனவுல வந்தது இவரை போல தான் இருந்தது” என்று கிசுகிசுப்பான குரலில் கூறினான் நிர்மல்.
அவன் புறம் திரும்பி நின்றவள். அவன் கையைப் பிடித்து குனிய வைத்து, மண்டையிலேயே, ‘நங்கு நங்கு’ என்று கொட்டினாள்.
“அறிவு இருக்கா டா உனக்கு?? முட்டாள் பயலே, கனவு கண்டு தொலைச்சா காலையில் எழுந்தவுடன் மறக்க வேண்டியதுதானே?? ஏன்டா என் வேலைக்கு உலைய வச்ச”? என்று அவள் கேட்க.
“அக்கா சும்மா சும்மா கொட்டாத. நீ இன்னைக்கு லேட்டா வந்திருந்தா நான் வீட்டிலேயே உன்கிட்ட சொல்லி இருப்பேன். காலங்காத்தால கல்யாண கனவு காணக்கூடாதுன்னு அம்மா வேற ஒரே புலம்பல். அங்க இருக்க முடியல, உன்கிட்ட இதை சொல்லியே ஆகணும்னு ஓடி வந்தேன் தெரியுமா?? நீ இருக்கிற இடத்துல இல்ல, உன்னோட பக்கத்துல இருக்குற அந்த சூர்ப்பனகை தான் சொன்னாள். நீ இந்த பெரிய கதவுக்கு பின்னாடி இருக்கேனு. எனக்கென்ன தெரியும்?? இங்க மீட்டிங் நடக்கும்னு”?
பேசிக் கொண்டிருந்தவனை வெட்டவாக் குத்தவா என்று பார்த்தாள் மானசா.
“அவள் மீட்டிங் நடக்கும்னு சொல்லி இருந்தா?? நான் இங்க வந்திருப்பேனா?? பொறுமையா உனக்காக வெளியில வெயிட் பண்ணி இருப்பேன். நீ ஏதோ இங்க ரிலாக்ஸ் பண்ண வந்திருக்கேன்னு நினைச்சேன்”?
“மண்ணாங்கட்டி, யாராவது ஆபீஸ்க்கு ரிலாக்ஸ் பண்ண வருவாங்களா?? அதுவும் பெரிய கதவுக்கு பின்னால வந்து ரிலாக்ஸ் பண்ணுவாங்களா?? இந்த ரூம்ல எத்தனை கேமரா இருக்கு தெரியுமா?? நீ பண்ணி வச்ச வேலையில அவர் போலீஸ்க்கு போனால், என்ன பண்றது?? நாம ரெண்டு பேரும் கம்பி எண்ண வேண்டியது தான்.
“நீ தானே அக்கா சொன்ன?? ஆபீஸ்ல கம்ப்யூட்டரை பாத்துட்டே இருந்தா தூக்கம் வரும்னு.”
அவளுக்கு உயிரோடு சமாதிக் கட்டி கொண்டிருந்தான் நிர்மல். அவள் தலையில் கையை வைத்துக் கொண்டாள்.
“ஏன் அக்கா தேவை இல்லாம பயப்படுற?? எனக்கு இருக்கிற பிரச்சினை தான் டாக்டருக்கு தெரியும்ல?? அவர் மூலமா வெளிய வந்துடலாக்கா” என்று கூறினான்.
அவன் அப்படி அசால்டாக கூறுவதே, வித்தியாசமாக தான் தோன்றியது தேஜாவிற்கு. ஆனால் அவன் தந்தைக்கு கோபம் பெருக்கெடுத்தது.