கனவே சேராயோ??? 3

காதல் கனவே, கண்மணியே! கானல் நீராய் போகாதே…

 

கனவே சேராயோ?? 3 

 “எதுக்கு இப்ப சும்மா சும்மா அடிக்கிற?? நீதான் ஆபீஸ்க்கு போகணும்? எனக்கு என்ன வேலை வெட்டி இருக்கு”? என்று சலிப்பாக கொட்டாவி விட்டபடியே தொப்பென்று கட்டிலில்  அமர்ந்தவன். கைகளில் உயர்த்தி நெட்டி முறித்தான்.

“அம்மா கரண்ட் பில் கட்ட சொன்னாங்களே கட்டுனியா”? என்று கேட்டாள் ma.

 “அதுக்கு பனிரென்டு மணிக்கு போனா கூட பரவால்லக்கா” என்றான் அவன்.

 “ஆன்லைன்ல வேலை தேட  சொன்னேன். தேடினியா இல்லையா”? என்று அடுத்த கேள்வி அவளிடம்.

“போ அக்கா,  நீயும் அப்பா மாதிரியே என்னை டார்ச்சர் பண்ற. நான் ஆன்லைன்ல எல்லாம் தேட மாட்டேன். நான் என்ன நேத்து சமஞ்ச பொண்ணா?? நான் சமஞ்சு  எத்தனை வருஷம் ஆச்சு தெரியுமா”?  என்று கேட்க.

அவன் மண்டையிலேயே ஒரு கொட்டு கொட்டினாள் பெரியவள்.

அதை தேய்த்துக் கொண்டே முகத்தை சுருக்கியவன். “நான் வேலைக்குனு  போனா ஆஃபீஸ்க்கு தான்  போவேன்.  வீட்ல இருந்து எந்த வேலையும் செய்ய மாட்டேன்.  நான் வண்டி கேட்டேனே எப்ப வாங்கி தருவ”? என்று கேட்டான் நிர்மல் குமார்.

“இங்க பாரு,. என்னால உனக்கு டூவீலர் வாங்கி தர முடியாது. கார் தான் வாங்கி தருவேன். அது உனக்கே தெரியும் திரும்பத் திரும்ப கேட்டா என்ன அர்த்தம்”? என்றாள்.

 “வேலைக்கு போய் ரெண்டு வருஷம் ஆகுதுல்ல?? இன்னுமா காசு சேர்த்து வச்சுட்டிருக்க”? அவன் நக்கலாக கேட்க. 

“அடி வாங்குவ டா எரும மாடு. நேத்து மட்டும் எனக்கு எவ்வளவு பணம் பட்ச்சா  வச்சே தெரியுமா??  இருபதாயிர ரூபா.  ஐயா போடுற டிரஸ் எல்லாம் காஸ்ட்லியா தான் போடுவாரு?? ஷுவும் அப்படித்தான். இதுல அப்பா கிட்ட முறுக்கிக் கிட்டு.  அவர்கிட்டயும் காசு கேக்க மாட்டாரு?? இளிச்சவாய் அக்கா மட்டும்தான் செலவு பண்ணனும்னா??  நான் எந்த காலத்துல காசு சேர்த்து வச்சு உனக்கு கார் வாங்கி கொடுக்கிறது”? என்று கேட்டுக்கொண்டே அவன் அருகே நடந்து வந்தாள்.

 “என்ன அக்கா இப்படி சொல்லிட்ட?? உனக்கு பிறந்தநாள் வருது டிரஸ் வாங்கிக்கோன்னு சொல்லி கூட்டிட்டு போன??  இப்ப இப்படி சொல்ற?? போக்கா” என்றவன் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டான். அவனை எப்படி பார்த்ததும் தமக்கையின் மனம் இலகிவிட்டது. 

அவன் அருகிலேயே அமர்ந்து   அவன் தலையை வருடி கொடுத்தவள். “அதுக்கு சொல்லலடா?? நான் சம்பாதிக்கிற காசு எல்லாமே உனக்கு தானே?? நீ செலவு பண்ண பிறகு தான் எனக்கே. நீ என்னோட செல்ல தம்பி டா” என்று அவன் ஒற்றைக் கன்னத்தை கிள்ளி கூறினாள்.

“நான் உன் கண்ணுத்தை கிள்ளுனா  எவ்வளவு  சாப்டா கில்லுறேன்??  நீ எப்படி கிள்ளுற பாரு”? என்று அவன் அதற்கும் கோபித்துக் கொண்டான்.

 அவன் செய்கைக்கு அவள் கோபித்துக் கொள்வதும். அவள் பேச்சுகளுக்கு அவன் சலுகையாக கோபித்துக் கொள்வதும் அவர்களுக்குள் எப்போதும் நடக்கும் ஒன்றுதான். 

சிறுவயதில் கட்டிலில் உருண்டு பிரண்டு சண்டை போட்டிருக்கிறார்கள். முடியை பிடித்து மாவாட்டியிருக்கிறார்கள். ஆனால் அவனுக்காக எப்பொழுதும் விட்டுக் கொடுப்பது அவளாகத்தான் இருப்பாள். அவன் மீது அவ்வளவு பாசம். தனக்கான எல்லாவற்றையும் அவனுக்கு செய்து விடும் அளவிற்கு. அவனும் பாசத்தில் குறைந்தவனில்லை. தமக்கை கேட்டால், தன் உயிரை கூட கொடுத்து விடுவான். தாய் தந்தையை விடவும் அவனுடனே தனியாக வளர்ந்த தமக்கையின் மீது அவனுக்கு அளவிட  முடியாத பாசம். 

 தாயும் தந்தையும் வேலைக்கு செல்பவர்கள் என்பதால் வீட்டில் எப்பொழுதும் சண்டையும் சமாதானமும் இருப்பது அக்காள் தம்பி இருவர் மட்டுமே. அவன் அழுதால் அவள் மனது தாங்காது. அவளைப் பெற்றவர்கள் கண்டித்தால் அவன் மனம் ஏற்காது. தமக்கைக்கு முன்னால் இரண்டு பிஞ்சு கரங்களையும் விரித்தபடி தான் தன் தமக்கைக்கு   துணையாக இருக்கிறேன் என்பது போல வந்து நிற்பான்.

 “முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள அக்காவுக்கு சப்போர்ட் பண்றியா?? இதை உடைச்சது யாரு”? என்று தாய் கேட்கும் போது.

நான்தான் என்று மானசாவும், தான்தான் என்று நிர்மலும் முன்னாள் வந்து நின்று கூறுவார்கள். பெற்றவர்களையே குழப்பியடித்து விடுவார்கள். தவறு செய்தவர்களுக்கு தண்டனை கொடுக்க முடியாமல் இருவரையும் விட்டு விடுவார்கள்.

“கூட்டு களவாணிகளா நீங்க?? சண்டை போடும்போது அப்படி போடுறீங்க ஆனா திருட்டு வேலை பண்ணும் போதும் சேர்ந்து பண்றீங்க”? என்று அவர்களின் தில்லு முல்லுக்களை முதலில் கவனித்தது அவர்களின் தாயார் தான்.

“விடு  சிவா, நம்ம பிள்ளைங்க ஒத்துமையா இருக்கிறதை பார்த்து நம்ம சந்தோஷப்படணும் நம்ம காலத்துக்கு அப்புறமும் இதே மாதிரி அவங்க இணை பிரியாம ஒண்ணா இருக்கணும்” என்று அவர்களின் தந்தை விஜயகுமாருக்கு  கூறுவார். 

“பிள்ளைங்க ரெண்டும் கெடுறதுக்கு காரணமே நீங்கதான். அவங்கள கண்டிக்கவே விடமாட்டீங்க அவங்களுக்கு சப்போர்ட்டுக்கு உடனே வந்துருவீங்க. பாருங்க உங்கள மாதிரியே தான். அவன் அக்காவுக்கு ஒன்னுனா முதல்ல வந்து நின்னுடுறான். இவள் மட்டும் என்ன?? தம்பி பண்ண தப்பெல்லாம் தன் மேல போட்டுகிட்டு திட்டு வாங்குறாள். நல்லவேளை அடிக்கிறதுக்குள்ள இவனே வந்து தப்பை ஒத்துக்கிறான்.   ஆனா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி பேசுறதுல யார் பண்ணதுன்னு எனக்கே கன்பியூசன் வந்திருது” என்று சிவமதி புலம்பித் தள்ளுவார்.

 மனைவியை சமாதானப்படுத்திய படி, பிள்ளைகளை விட்டுவிட்டு மனைவியை கையோடு அழைத்து சென்று விடுவார். திரும்பி பிள்ளைகளை பார்த்து கண் சிமிட்டு விட்டு செல்வார்.

 மிக மிக அழகான சிறிய குடும்பம் தான் அவர்களுடையது.  நால்வரின் பிணைக்கும் பண்பும் பாசமும் தான் அவர்களின்  கேடயம். இந்த கேடயத்தை உடைப்பதற்கு அல்லது அன்பை  பங்கு போடுவதற்கோ யாராவது வருவார்களா என்ன?? அப்படி வரை துடித்துக் கொண்டிருப்பவன் இவர்களுக்கு இடையில் வருவானா அல்லது இவர்களை சேர்த்து அணைத்துக் கொள்வானா?? அதை காலம் தான் முடிவு செய்யும்.

‘காலம் ஆடும் களியாட்டத்தில், நாமெல்லாம் கை பாவைகள் தான்’ இங்கு இவர்களுக்கு மத்தியில் காலம் ஆடப்போகும் களியாட்டத்தை, நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

 தம்பியின் முகத்தில் இருக்கும் சோர்வை கவனித்தவள்.

“இல்லடா நீ கேட்டதுக்கு பதில் சொன்னேன். காசு இப்படி செலவாச்சுனா??  கார் வாங்குவதற்கு லேட் ஆகும்னு சொன்னேன். என் தம்பிக்கு பண்ணாம நான் வேற யாருக்கு பண்ண போறேன்”?? என்று அவன் கொஞ்சுதலாக பேசினாள்.

அவ்வளவுதான் அவர்களின் சண்டையே.

“சரி சரி அக்கா, அப்பாகிட்ட நான் வேலைக்கு போறதை பத்தி பேசு அக்கா. ப்ளீஸ் அக்கா” என்றான் இளையவன்.

 “உன் பிரச்சனை சரியாகட்டும் டா.  அதுக்குள்ள நீ வேலைக்கு போய், அங்கேயும் தூங்கி விழுந்தேனா சேதாரம்    நமக்கு தான்” என்றாள்.

 “தூங்குறதுக்கா வேலைக்கு  போவாங்க?? என்னக்கா சின்ன புள்ளத்தனமா சொல்ற”? என்று கூறிவிட்டு வாயை பொத்திக்கொண்டு சிரித்தான்.

“புக்கை பாத்துட்டே இருந்தா, எப்படி நமக்கு தூக்கம் வருமோ?? அதே போல தான் பைலையும் கம்ப்யூட்டரையும் பார்த்துட்டே இருந்தாலும் தூக்கம் வரும்.  வேலை செஞ்சு பார்த்தா தெரியும்.  நீ இப்ப சும்மா உக்காந்துட்டே தூங்குறல்ல”? என்று கேட்டுவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள். 

தமக்கையை முறைத்தவன். ஒரு வேலையை எப்படி இருக்குமோ என்று சிந்திக்கலானான்.

“எனக்கு என்ன பிரச்சனைன்னு டாக்டருக்கே சொல்ல தெரியல?? என்னை வச்சு அவங்க ட்ரையல் தான்  பாத்துட்டிருக்காங்க. அது தெரியாம சம்பாதிக்கிற முழு காசையும் அப்பா கொண்டுப்போய் அவங்க கிட்ட கூட கொட்டிக்கிட்டிருக்காரு. சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க? எனக்கு இருக்கறதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையே இல்ல அக்கா.  நான் பாத்துக்குறேன்.  நான் வேலைக்கு போறதுக்கு மட்டும் பர்மிஷன் வாங்குங்க. நான் அங்கு தூங்காம இருக்கிறேன்.  நான் சம்பாதிச்சு எனக்கே ட்ரீட்மென்ட்  பார்த்துக்கிறேன்” என்றவன் பேசிக் கொண்டிருக்க.

“நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம்” என்றபடி உள்ளே நுழைந்தார் சிவமதி.

 “ஏன்?? எல்லா அணியையும் நீங்களும்  அப்பாவும் தான் புடுங்கப்போறீங்களா”? என்று கேட்டுவைக்க.

அருகிலேயே அமர்ந்திருந்த மானசா, அவன் வாயிலேயே ஒரு கோடு போட்டாள்.

“பச்ச புள்ளைய மாத்தி மாத்தி அடிக்கிறீங்க?? இந்த  ஆண்பாவம் உங்களை சும்மா விடாது. இப்ப எதுக்கு காலங்காத்தால எல்லாரும் என்னை டவுசர் பண்றீங்க?? நான் வேலைக்கும்   போகக்கூடாது. தூங்கவும் கூடாதா”? என்றான். 

“தூங்க வேணாம்னு யாரு சொன்னா?? நீ கேம் விளையாடுறதை விட தூங்குறதே நல்லது. ஆனாலும் உன் தூக்கம் எத்தனை ஏழரைகளை கூட்டிட்டு வருமோ?? அதை நினைச்சா தான் பயமாயிருக்கு” என்றாள் மானசா. 

அவன் முகத்தை பாவம் போல சுருக்கினான். 

“போன வாரமே   உன்னை கரண்ட் பில் கட்ட சொன்னேல்ல?? இன்னைக்கு லாஸ்ட் டேட் இன்னைக்கு கட்டலைன்னா பீயிஸ் புடுங்கிடுவாங்க. அப்புறம் உன்னால கேம் விளையாட முடியாது. பரவாயில்லையா”? என்று கேட்டார் சிவமதி.

 “அய்யய்யோ”! என்று தலையை தேய்த்துக் கொண்டவன்.

“கூட்டம் வேற அதிகமாக இருக்குமே“? என்று சொல்லிக் கொண்டான்.

 “அதெல்லாம் தெரியாது. அப்பாவே உன்னை கையோட கூட்டிட்டு போயி  அங்க லைன்ல நிக்க வச்சுட்டு வருவாரு. ஒழுங்கா கட்டிடு.  எழுந்து கீழ வா” என்று கூறிவிட்டு அவர் செல்ல.

“வேலைக்கு போனா தான் பொறுப்பா நடந்துக்கணும் இல்ல. வீட்ல குடுக்குற வேலையை செஞ்சு கூட உன் பொறுப்பை காட்டலாம்” என்று கூறினாள் மானசா.

 “எந்த வீட்டுலையும் நடக்காத அநியாயம் எல்லாம் இந்த வீட்லதான் நடக்குது.  பொம்பள புள்ளைய வேலைக்கு அனுப்புறாங்க.  ஆம்பள பிள்ளையே வீட்டில பொத்தி பொத்தி வைக்கிறாங்க. இதை கேக்குறதுக்கு யாருமே இல்லையா”? என்று புலம்பிக்கொண்டே கழிவறை நோக்கிச் சென்றவனை.  ஆதுரவாக பார்த்திருந்தாள் மானசா.

 தாய் தந்தை என்று இருவரும் வேலைக்கு செல்கிறார்கள். தமக்கையை அனுப்பி வைக்கிறார்கள். இவனை மட்டும் அனுப்பி  வைக்காததற்கு காரணம் என்னவோ?? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

……

 

 மாலை மிளிரும் நேரமது… 

 தேஜா பில்டர்ஸ் என்ற அந்தப் பதாகை தாங்கிய பெரிய கட்டிடத்தின் முன்பு இருந்த டீக்கடையில்  பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள் மானசா.

இன்னும் அலுவலகம் முடிய ஒரு மணி நேரம் இருந்தது. ஆனால் அதற்குள் தோழமை  வட்டங்கள் தேனீர் அருந்துவது என்பது அவர்களுக்குள் வாடிக்கையாக நடக்கும் நிகழ்வுதான். 

 இடது கையில் தேநீரையும் வலது கையில் பஜ்ஜியையும் சுவைத்து கொண்டிருந்தாள்.

 அப்பொழுது எம்டியின் வாகனம் வந்து நிற்பது தெரிய, “பாஸ் இன்னைக்கு  சீக்கிரமா கிளம்புறாரு. ஏதாவது முக்கியமான மீட்டிங் இருக்கா”? என்று தோழமை வட்டங்களுக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள்.

 அவர்களும் வாகனத்தை பார்த்து விட்டு தெரியவில்லை என்று உதடு பெறுகிறார்கள். பொதுவாக அந்த நேரத்தில் அவன் வர மாட்டான். இப்பொழுது தங்களை இப்படி பார்த்தால் என்ன நினைப்பானோ?? என்று மற்றவர்கள் ஒதுங்க.

“இதுல நினைக்கிறதுக்கு  என்ன இருக்கு?? பசிச்சது  டீ சாப்பிட வந்திருக்கோம். அவங்க ஆபீஸ்ல காபியும் பாலு மட்டும் தான் நான் கொடுக்கிறாங்க டீ கொடுத்தா நாமளும் உள்ளேயே குடிக்க போறோம்”? மானசா வியாக்கானம் பேசிக் கொண்டிருக்க.

 

 அப்போது அந்த கட்டிடத்தில் இருந்து வெளியில் வந்தவன். காரில் ஏறுவதற்கு முன்னால் நின்று எதிரிலிருந்த தேநீர் கடையை பார்த்தான். அவ்வளவுதான் மானசாவிற்கு சர்வமும் அடங்கி விட்டது.

 கடித்துக் கொண்டிருந்த பஜ்ஜி பாதி வாய்க்குள்ளும், பாதி கையிலும் இருக்க. வாயை மட்டுமில்லாமல் கண்களையும் பிளந்தபடி அவனை பார்த்தாள். மற்றவர்கள் எல்லாம் மறைந்து இருப்பதால் அவள் மட்டுமே அங்கு நின்று கொண்டிருப்பதாக காட்சியளித்தது.

 ஒரு நொடிதான் அவளையாழமாக பார்த்துவிட்டு காரில் ஏறி புறப்பட்டு விட்டான். கார் மறையும் வரையிலும் அவள் நிலையில் மாற்றமில்லை.

 அதன் பிறகு நிதானத்திற்கு வந்து சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தினாள். அப்போதுதான் மறைந்திருப்பவர்கள் வெளியில் வந்தனர்.

“அடிப்பாவிகளா இப்படி என்னை கோர்த்து விட்டுட்டீங்களே?? டீ சாப்பிட்டது ஒரு குத்தமா”? புலம்பித் தவித்தாள்  மானசா.

அது ஒன்றும் அவ்வளவு பெரிய குத்தம் இல்லை. ஆனால் அவன் ஏன் அப்படி பார்த்துவிட்டு சென்றான் என்று தான் தெரியவில்லை??

 காரணம் என்னவோ?? அதை அவனே அறிய மாட்டான் அல்லவா??

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top