அத்தியாயம் 17

மிருகேனை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தவள் அவனது இறுகியப் பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு விலகி நின்றாள்.

தடுமாறி அவன் பால் தாவிய மனதை கட்டுக்குள் கொண்டு வந்தவள், “இத்தனை அடி வாங்கியும் உன்னோட திமிரு அடங்கல ல ? அடங்க வைக்குறேன்…” என்றாள் பல்லைக் கடித்து கொண்டு.

“ ம்ம்…யாருக்கு திமிரு? பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளி என்னை ஹாராஸ் பண்ணிட்டு இருக்கீங்களே…உங்களை விட எனக்கு திமிரு கம்மி தான் கமிஷ்னர் மேடம். பொய் கேஸ் போட்டு என்னை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் துன்புறுத்தனதுக்கு நான் உங்க மேல கேஸ் போட செகண்ட் ஆகாது….போட்டேன்னா உங்க வேலை காலி.” என்றவன் சற்று இடைவெளி விட்டு,” ஆமா…அந்த பத்ரன் தானே இதெல்லாம் பண்ணுனான். அவனை தப்பிக்க விட்டுட்டு என்ன உள்ள தள்ளணும்னு எப்படி ஐடியா பண்ணுனீங்க? என்னை உள்ள தள்ளணும்ங்கற வெறி அப்படித்தானே? தீர எதையும் விசாரிக்காம மளமளன்னு அரெஸ்ட் பண்ணி கூட்டிட்டு வந்தாச்சு? நீங்க எதிர்பாக்குறது எப்பவுமே நடக்காது மேடம்” என்றவன் அவளைப் பார்த்து விட்டு  நொண்டிக் கொண்டே ஒரு ஓரமாக சென்று அமரந்தான் 

அவனை முறைத்தவள் கோபமாக ஏதோ கூற வாயெடுக்கும் முன்பு ,  “மேடம் உங்களை பார்க்க வஜ்ரவேல் வந்துருக்காரு.” என்றார் காவலர் ஒருவர்.

“ ம்ம்…வர்றேன்….நீங்க போங்க…” என்றவள் மிருகேனை ஒரு கணம் பார்த்தாள்.

அவனோ அவளை கண்டு கொள்ளாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தான். உதட்டோரத்தில் வழிந்து கொண்டிருந்த குருதியை துடைத்து விட்டுக் கொண்டிருந்தான்.

லாக்கப்பின்  இரும்பு‌ கம்பியை லத்தியால் ஓங்கி அடித்து விட்டு வெளியேறினாள்.

சத்தம் கேட்டு நிமிர்ந்தவன் சலிப்புடன் தலையை இருபக்கமும் ஆட்டி விட்டு சுவற்றில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

வெளியே வந்த கீதாஞ்சலி  நாற்காலியில் அமரந்நிருந்த வஜ்ரவேலை அனல் கக்கும் பார்வை பார்த்தாள்.

அவரோ தனக்கெதிரே அமர்ந்திருந்த  காவலரை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தார்.

“ சார்…நீங்க எதுவா இருந்தாலும் கமிஷ்னர் மேடம் கிட்ட பேசிக்கோங்க… இந்த விஷயத்துல நாங்க எதுவும் பண்ண முடியாது…” என்று கூறிக் கொண்டிருந்தார்.

“என்ன செல்வம்? யார் இவரு? என்ன வேணுமாம்?” என்று வஜ்ரவேலை அலட்சியமாக பார்த்துக் கொண்டே அந்த காவலரிடம் கேட்டாள்.

“ மேடம் இவர் தான் வஜ்ரவேல் . உள்ள இருக்கானே மிருகேந்திரன் அந்த நா**க்கு  வேண்டப்பட்ட…” என்று முடிக்கும் முன்பே பளாரென்று அறை விழுந்திருந்தது அந்த காவலரின் கன்னத்தில்.

கைக்காப்பினை உயர்த்தி விட்டுக் கொண்டே , “ மரியாதை‌…! மரியாதையா பேசு….இல்லன்னா பேசுறதுக்கு வாய் வராமலே போயிடும்…” என்றார் மெதுவாக ஆனால் அழுத்தமான குரலில்.

அதிர்ந்து போய் கன்னத்தை பிடித்துக் கொண்டு கீதாஞ்சலியை பார்த்தார் அந்த காவலர்.  

அவளோ  அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் வஜ்ரவேலை உறுத்துப் பார்த்தாள்.

“ மேடம்….இவரு…என்னை….” என்று ஆரம்பிக்கும் முன்பே அவரை கையமர்த்தி , “ சொல்லுங்க மிஸ்டர் வஜ்ரவேல்…என்ன விஷயமா வந்துருக்கீங்க?” என்றாள்.

“மிருகேந்திரனை பொய் கேஸ் போட்டு அரெஸ்ட் பண்ணிருக்கீங்க. கோர்ட்ல இன்னமும் புரோடியூஸ் பண்ணல. ஏன்னு தெரிஞ்சுக்கலாமா? “

“ பொய் கேஸ் போட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை சார். பொண்ணுங்களை வெளிநாட்டுக்கு விக்கறதுக்கு அவர் தான் ஏற்பாடு பண்ணிருக்காருன்னு சம்பந்தப்பட்ட பொண்ணுங்களே வாக்குமூலம் கொடுத்திருக்காங்க. எல்லாத்தையும் விசாரணை பண்ணி தான் அவரை அரெஸ்ட் பண்டணிருக்கோம். சனி , ஞாயிறு கோர்ட் லீவு. திங்கட்கிழமை அரசாங்க விடுமுறை , செவ்வாய் கிழமைக்கு மேல தான் கோர்ட்டுக்கு கொண்டு போகணும். நாங்க எங்க கடமையை சரியாக தான் செஞ்சிட்டு இருக்கோம். சமூதாயத்துல நல்லவரா நடிச்சு வேஷம் போட்டுட்டு கடத்தல் தொழிலை பக்கவா பண்ணிட்டு இருக்குற உங்களை மாதிரி ஆட்களை வெளியே விட்டு வச்சிட்டு இருக்க சொல்றீங்களா?” என்றாள் அழுத்தமாக.

“மேடம்….” என்று ஆரம்பித்தவரால் வெளிப்படையாக எதுவும் பேச முடியவில்லை. ஆனாலும் பெண்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தலுக்கும் மிருகேந்திரனுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்று அவருக்கு நன்கு தெரியும்.

“ மேடம்….பெயில்ல எடுக்க முடியாத அளவுக்கு கேஸை ஃபைல் பண்ணிருக்கீங்க”என்றார் சற்று அழுத்தத்துடன்.

“ ம்ம்.. உள்ளே இருக்குறவரு என்ன சுதந்திர போராட்ட வீரரா? இல்ல தப்பே செய்யாத அப்பாவியா? இல்லல்ல? பண்ணுன தப்புக்கு தண்டனை அனுபவிச்சு தான் ஆகணும்‌ மிஸ்டர் வஜ்ரவேல். எனக்கு நிறைய வேலை இருக்கு. உங்களுக்கு விளக்கம் கொடுத்துட்டு இருக்க எனக்கு நேரம் இல்ல” என்றவள் நன்கு கைக்கடிகாரத்தில் நேரத்தை பார்த்து விட்டு , “செல்வம்  வேற எதாவது பேசணும்னா பேசி அனுப்பிடுங்க. ஐ ஹேவ் டூ கோ..” என்று கூறி விட்டு வெளியேறினாள்.

அந்த காவலர் ஏதோ கூற வர , “ நான் மிருகேனைப் பாக்கணும்.” என்றார் வஜ்ரவேல்.

“ அவரை பாக்குறதுக்கு உங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாதுன்னு  சொல்லிட்டு போ…போயிருக்காங்க”என்று கன்னத்தைப் பிடித்துக் கொண்டே கூறினார்.

அந்த காவலர் அருகே நிதானமாக வந்த வஜ்ரவேல், “ உங்களை நாலு தட்டு தட்டிடுட்டுஉங்களைத் தாண்டி  என்னால மிருகேனை பாக்க முடியும். ஆனா அதை நான் செய்ய மாட்டேன். அவனை சுத்தி ஏதோ நடக்குது. ஒருவேளை இந்த வேலையெல்லாம் அந்த பத்ரனோடதா இருந்தாலும் சரி…இல்ல…இதுக்கு மேலயும் அவன் ஏதாவது பண்ணனும்னு நினைச்சான்னாலும் அன்னைக்கு தான் அவன் இந்த பூமியில கடைசியா இருக்குற நாளா இருக்கும்னு  சொல்லிடுங்க. நீங்களும் பத்ரனோட ஆளு தான் எனக்கு நல்லாவே தெரியும். உசிருக்கு பயந்து கோழை மாதிரி ஒளிஞ்சிட்டு இருக்குறானா அந்த பத்ரன். கைல மட்டும் மாட்டட்டும். இருக்கு அவனுக்கு. தேவையில்லாம மிருகேனைத் தொட்டுப் பார்த்துட்டான். கண்டிப்பா இதோட விளைவு என்னன்னு  சீக்கிரமே அவனுக்குப்‌ புரியும்” என்று கூறி விட்டு வெளியேறினார்.

ஒரு பெருமூச்சுடன் தொப்பென்று நாற்காலியில் அமர்ந்தார் செல்வம்.  ‘இவனுங்க ரெண்டு பேருக்கும் நடுவுல மாட்டிட்டு முழிக்குறேன்…ச்சை… என்ன வேலை இது…” என்று முணுமுணுத்துக் கொண்டார்.

ஆதவ் மோகனாவை அழைத்துக் கொண்டு அவளது வீட்டிற்கு வந்திருந்தான்.

நெடு நாட்களாக பூட்டியே இருந்ததால் தூசியும் ஒட்டையுமாக இருந்தது‌ வீடு.

“ ஆ…ஆவுச்..ஆ..ஆவுச்….” என்று தும்மிக் கொண்டே அறைக்குள் நுழைந்தாள் மோகனா.

போட்டது போட்டபடி இருந்தது.

ஸ்விக்கியில்  வாங்கிச் சாப்பிட்ட உணவு பொட்டலம் கூட குப்பைத் தொட்டியில் போடப்படாமல் மேசையின் மீதே எறும்பு மொய்க்க பரப்பிக் கிடந்தது.

அவற்றை பார்த்துக் கொண்டே பின்னோடு அவளது அறைக்குள் நுழைந்தவனை வரவேற்றது ஆடைகளின் கோபுரம்.

அவளது ஆடைகள், ஒரு புறம் குவிந்து கிடக்க மறு புறம் உள்ளாடைகள் கன்னாபின்னாவென்று கிடந்தது.

கஃப்போர்ட்டில் ஏதோ அவசரமாக தேடிக் கொண்டிருந்தவள் உள்ளாடைகள் சிதறிக் கிடப்பதை கவனிக்கவில்லை.

ஆடைக்குவியலையும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருந்த மேசையையும் பார்த்து முகம் சுழித்தவன் , ‘ சரியான சோம்பேரியா இருப்பா போல. எப்படி  குப்பை மாதிரி போட்டு வச்சிருக்கா பாரு…ச்சைக்…’ என்று முணுமுணுத்தவன் கஃப்போர்ட்டில் தலை நுழைத்து தேடிக் கொண்டிருந்தவளின் தோளினைத் தட்டினான். 

அவளோ அவனது கையை தட்டிவிட்டு விட்டு மும்முரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“ ஏய்…! ஃப்ராடு….”என்றான்‌ சற்று சத்தமாகவே.

“ ஹலோ….! எத்தனை தடவை உங்களுக்கு சொல்றது? ஃப்ராடுன்னு சொல்லாதீங்கன்னு. சும்மா இப்படியே சொல்லிட்டு இருந்தீங்கன்னா…பாத்துக்கோங்க..என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது …” என்று கூறி விட்டு அவனை முறைத்தாள்.

“ஏய்…ஃப்ராடை ஃப்ராடுன்னு தான சொல்லணும்….அப்படி தான் சொல்லுவேன்….ஃப்ராடு…ஃப்ராடு.‌‌ ஒண்ணாம் நம்பர் ஃப்ராடு…” என்றான் வேண்டுமென்றே.

“அப்படி சொல்லாதீங்க…. சொன்னீங்கன்னா…சொன்னீங்கன்னா….” என ஒற்றை விரலை அவன் முன்பு  நீட்டி எச்சரிக்கை விடுவது போல ஆட்டிக் கொண்டே  புசுபுசுவென மூச்சு வாங்கினாள்.

“ அப்படிதான் சொல்லுவேன்…என்ன டி பண்ணுவ?” என்றவன் அவளது விரலை‌ மடக்கி தன் புறமாக பிடித்து இழுத்தான்.

“ஆ…ஆ…விரல் போச்சு…வலிக்குது…விடுங்க…” என்றாள் நெளிந்து கொண்டே.

விரலோடு கையையும் பிடித்திழுத்து அவளது முதுகு புறமாக  மடக்கியவன் தன்னோடு நெருக்கிக் கொண்டான்.

“ வி..விடுங்க கை…வலிக்குது…”

“ ஆமா…கலர் கலரா இன்னர்ஸ் வச்சிருக்கியே….ஃப்ளு கலர்ன்னா உனக்கு ரொம்ப பிடிக்குமா?” என்று அவளின் செவி மடலருகே குனிந்து கிசுகிசுத்தான்.

அவளும் ஏதோ நியாபகத்தில், “ ஆமா…எனக்கு ஃப்ளு கலர்ன்னா ரொம்பப் பிடிக்கும். என்னோட ட்ரெஸூக்கேத்த மாதிரி தான் இன்னர்ஸூம் வாங்கு.… என்று கூறிக் கொண்டே வந்தவள், “ஆமா எனக்கு ப்ளூ கலர் தான் பிடிக்கும்ன்னு  உங்களுக்கு எப்படித் தெரியும்? அதுவும் இன்னர்ஸ் ? எப்படி ?” என்றாள் அதிர்ந்த விழிகளோடு

நீண்ட நயனங்கள் விரிந்திருக்க அதனை பார்த்துக் கொண்டே அவளது கூரிய‌ நாசியில்  ஒற்றை விரலால் கோடிழுத்தவன் , “ சோம்பேரி…அங்க பாரு…உன்னோட எல்லா ட்ரெஸ்ஸூம், இன்னர்ஸூம் வெளியே தான் பப்பரப்பேன்னு கிடக்குது. ரூமை இப்படித்தான் வச்சிருப்பியா? இப்படி கலைஞ்சு கிடக்கறதைப் பார்த்தா எனக்குத் தப்பு தப்பா தான்‌ நினைக்க தோணுது…”என்றான் ஒரு‌ மார்க்கமான குரலில்.

ஆதவ் கூற வருவது எதுவுமே மோகனாவிற்கு புரியவில்லை ஆனாலும் ஏதோ விவகாரமாக பேசுகின்றான் என்று புரிந்தது.

 “ நீங்க பேசுறது எதுவும் புரியலை எனக்கு….ஆனா ஏதோ தப்பா தான‌ பேசுறீங்க? நீங்க உண்மையிலேயே போலீஸ் தானா? இல்ல டூபாக்கூர் போலீஸா? எப்ப பார்த்தாலும் வீட்டுலயே தான் இருக்கீங்க? வேலை வெட்டி எதுவுமே இல்லையா உங்களுக்கு? வேலைக்கு போற மாதிரியே தெரியலை. உங்களை உக்கார வச்சு ஆன்ட்டியும் அங்கிளும் சோறு போடுறாங்க. நீங்க பேசுறதெல்லாம் ஒரு மார்க்கமா தான் இருக்குது” என்றவள் ஏணியை இழுத்துப் போட்டு அதன் மேல் ஏற ஆரம்பித்தாள்.

அவளது கையை பிடித்து ஏணியிலிருந்து கீழே இறக்கியவன்,  “என்ன டி வாயெல்லாம் நீளுது? குளிர் விட்டு போச்சா? போலீஸ் அடின்னா என்னன்னு தெரியுமா உனக்கு?  ஒரு நாள் உனக்கு அதை தெரிய வைக்குறேன். நீ இன்னும் அதை வாங்கல ல…அதான் ஓவரா பேசிட்டு இருக்குற… நான் எதுக்கு சஸ்பென்ஷன் வாங்கினேன்னு மறந்து போச்சா? நான் வேணா உனக்கு நியாபகப்படுத்தவா?” என்றவன் நொடியில் அவளை அருகிலிருந்த சோஃபாவில தள்ளி அவள் மீது படர்ந்தான்.

“ ஆ..அய்யா…. என்ன பண்ணுறீங்க ? எழுந்திரிங்க முதல்ல…மூச்சு முட்டுது…” என்றவள் அவனை தன் மீதிருந்து விலக்கப் பார்த்தாள்.

அவனை ஒரு இன்ச் கூட தன்னிலிருந்து விலக்க முயலவில்லை.

“ப்ளீஸ்..எழுந்திருங்க….முதுகு வலிக்குது…”

“ நீதான கேட்ட வேலை வெட்டிக்கு போகாம வீட்டுல உக்காந்து ஓசி சோறு திங்குறேன்னு…சஸ்பென்ஷன்க்கு காரணம் நான் உன் கூட கிளுகிளுப்பா இருந்தது தான்னு நியூஸ் வந்துச்சு. அதை வச்சு தான் நீயும் எங்க வீட்டுக்கு வந்து ஃப்ளாக்மெயில் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்ட. அதான்…நியூஸை உண்மையாகக்கினா என்னன்னு எனக்கு இப்பெல்லாம் தோண ஆரம்பிச்சிடுச்சு…” என்றவன் அவளிதழை நோக்கி முன்னேற மோகனா முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ ப்ளீஸ்…ப்ளீஸ்…வேணாம்…விட்டுடுங்க…ப்ளீஸ்…தெரியாம சொல்லிட்டேன். மேல இருந்து எழுந்திருங்க…அ..அது…உங்க வீடு…நீ..நீங்க எப்படி வேணாலும் இருக்கலாம்…என்ன வேணாலும் பண்ணலாம்…வேலைக்கு போகலாம்…போகாமலும் இருக்கலாம்…ஹீ…ஹீ…இனி அதையெல்லாம்  கேப்பேனா…மாட்டேன்…மாட்டேன்..சாரி….” என்று விழிளை உருட்டிக் கொண்டு பேசியவள்,  இருவருக்கும் நடுவே கரங்களை வைத்து அவனது உடலின்  அழுத்தம்‌ தன் மீது படிவதை தடுத்தாள்.

“ ம்ம்…தட்ஸ் குட்…இனி ஏதாவது இப்படி ஏடாகூடாமா பேசினா…நிஜமாவே உன் கூட கிளு கிளுப்பு தான்…என்னைக்கு மாட்டப் போறன்னு தெரியலை.” என்று கூறிக் கொண்டே அவள் மீதிருந்து எழுந்தான்.

“ ஆ…என்னோட முதுகு போச்சு…” என்று முதுகைப் பிடித்துக் கொண்டே எழுந்து நின்றவள் முதுகை அப்படியும் இப்படியும் அசைத்து சரி செய்து கொண்டு மீண்டும் ஏணி மீது ஏறினாள்.

தன்னுடைய ஆடைகளும் இதரப் பொருட்களையும் வைக்க பெரிய பெட்டியை  பரணிலிருந்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

ஆதவ் அவளது வீட்டைச் சுற்றி நோட்டம்‌ விட்டுக் கொண்டிருந்தான்.. அவள் ஒருத்திக்கு  இவ்வளவு பெரிய வீடு தேவையற்றது என்று தான் அவனுக்குத் தோன்றியது

பல கேள்விகள் அவன் மனதில் எழ அவளை நிமிர்ந்து பார்த்தான்.

அவளோ பெரிய பெட்டியை எடுக்க அதனருகில் இருந்த நெகிழிப்பை தொப்பென்று கீழே விழுந்தது.

‘ இவ்வளவு பெரிய பெட்டியை கஷ்டப்பட்டு எடுக்குறேனே…!கொஞ்சமாவது ஹெல்ப் பண்ணனும்னு தோணுதா பாரு…எல்லாத்தையும் நோட்டம் விட்டுட்டு நிக்கறதைப் பாரு…மம்க்கூம்’ என‌ மனதில் அவனை வறுத்தெடுத்துக் கொண்டே பெட்டியை கீழே இறக்கி தூசு தட்டினாள்.

கீழே விழுந்த நெகிழிப்ப்பையை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த நீள்விரிக்கையில் அமர்ந்தான் ஆதவ்.

“ என்னது இது?”

“எது..”என்றாள்  அவனைப் பார்க்காமலேயே.

“ இதோ இந்த‌ ப்ளாஸ்டிக் பையில என்ன இருக்கு?” என்று கூறி கொண்டே அதனைக் கவிழ்க்க அதிலிருந்து விழுந்தன பர்ஸூகள்.

அவற்றை பார்த்து அதிர்ந்தவன், “என்னது இது? இதுக்கு முன்னாடி ஏதாவது பர்ஸூ கடை வச்சிருந்தியா?” என்றவன் ஒவ்வொரு பர்ஸையும் பார்த்துக் கொண்டே வர மிகவும் பார்த்து பழக்கப்பட்ட பர்ஸ் ஒன்று தட்டுப்பட அதனை எடுத்து முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தான்.

ஆம்..! சில மாதங்களுக்கு முன்பு கோவிலில் தொலைந்தது போன அவனுடைய பர்ஸ் தான் அது.

“ எனக்கு சின்ன வயசுல இருந்தே வித விதமான பர்ஸ் வாங்குறது அப்பறம் எங்கயாவது யாராவது கொடுத்தா‌அதை சேகரிக்கறது பழக்கம்.அதான்….ஹீ…ஹீ…” என்று கேவலமான ஒரு சிரிப்பை உதிர்த்தாள்

“ஏன் ஜென்ட்ஸோட பர்ஸை மட்டும் தான் சேகரிப்பியா?”என்றான் அவளை அழுத்தமாக பார்த்துக் கொண்டே.

‘ அவங்க மட்டும் தான் பேன்ட் பாக்கெட்டுல வைக்குறாங்க ’என்று முணுமுணுத்தவள் , “ அவ..அது சின்ன வயசுல செத்து போன எங்க அப்பாவுக்கு பர்ஸூன்னா ரொம்ப பிடிக்குமா…அதான் அவரோட நியாபகமா….ஜென்ட்ஸ் பர்ஸை மட்டும் கலெக்ட் பண்ணுறேன்…” என்றாள் சமாளிப்பாக.

தனது பர்ஸை அவள் முன்பு நீட்டியவன், ”இது எந்த கோவில்ல அடிச்சன்னு நான் சொல்லவா?” என்றான் நக்கலாக.

“ எ..ன்ன..என்ன..கோவில்? என்ன அடிச்சேன்…?” என்றாள் புரியாத பாவனையில்.

“ அடிங்க.” என்று கையை ஓங்கியவன் பின் என்ன நினைத்தானோ அவளது தாடையை அழுத்தமாக பிடித்திழுத்து ,  “இது என்னோட பர்ஸ்…போன மாசம் எங்கம்மாவோட கபாலீஸ்வரர் கோயிலுக்கு போன போது மிஸ் ஆச்சு…ஃப்ளேடு போட்டது நீதானா? எவ்வளவு தைரியம் உனக்கு? போலீஸ்காரன் கிட்டயே பிக்பாக்கெட் அடிச்சு, போலீஸ்காரனை பத்தியே தப்புத் தப்பா சொல்லி …அதுவும் எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மா அப்பா கிட்டயே தைரியமா பொய் பேசி ஏமாத்திருக்க…ம்ம்ம்…எவ்வளவு பெரிய தில்லாலங்கடி நீ?”  என்று உறுமினான்.

அவனது கரங்களை தனது தாடையிலிருந்து வலுக்கட்டாயமாக எடுத்து விட்டவள் போலியான ஆச்சர்யத்தை குரலில் தேக்கி, “அச்சோ…! அப்படியெல்லாம் இல்லை…இந்த பர்ஸ் கீழே கிடந்தது…நல்லா இருந்ததேன்னு…எடுத்து வச்சேன்…பாருங்களேன்…உங்க பர்ஸ் கூட என்கிட்டேயே வந்து சேர்ந்திருக்கு…ஹீ…ஹீ…” என்று இளித்தாள்.

“ஷ்ஷ்….புல்ஷிட்…”என்று கேசத்தை அழுந்தக் கோதியவன் , “ பொய் பேசாத டி…இது என்னோட பர்ஸ்…நான் போலீஸ்காரன்…. நீ அடிச்சது கூட பெரிய விஷயமா தெரியல…ஆனா…போலீஸ்ங்கற பயமே இல்லாம எவ்வளவு சரளமா பொய் பேசி என் கிட்டயே சமாளிக்குற?இதுக்கு பேரு பர்ஸ் கலெக்ஷனா?  இவ்வளவு பர்ஸையும் கோவில்ல இருந்து அடிச்சிருக்கங்கறது கூட தெரியாத அளவிற்கு முட்டாள் கிடையாது.. எவ்வளவு தைரியம்?” என்று தோளைப் பிடித்து உலுக்கினான். 

எதற்கும் அசராமல் பதிலுக்குப் பதில் பேசி மல்லுக்கட்டி அவனுடைய இரத்த அழுத்தத்தை எகிற வைத்துக் கொண்டிருந்தாள் மோகனா.

” சொல்லு எவ்வளவு தைரியம்? எந்த தைரியத்துல நீ இப்படி பேசுற?” என்றான் .

‘நீங்க  என்னோட ஹஸ்பண்ட்ங்கற‌ தைரியம் தான். ‌‌வேறென்ன?” என்று எங்கோ பார்த்துக் கொண்டே முணுமுணுத்தாள்.

“ சரியா கேக்கல..என்ன சொல்ற? சத்தமா பேசிக் தொலை” என கடுகடுத்தான்..

“ ஒண்ணும் இல்லை…நீங்க தானே என்னோட ஹஸ்பண்ட் ?அந்த தைரியம் தான் போதுமா?” என்றவள் மளமளவென்று தனது துணியை பெட்டியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

அவன் யோசனையுடன் அவளைப் பார்த்து வைத்தான்.

‘ அப்படியென்றால் கணவன் என்ற உறவை அவள் ஏற்றுக் கொண்டு விட்டாளா?’ என்ற கேள்வி எழுந்து மனம் முழுவதும் ஏதோ ஒரு உணர்வை தோற்றுவித்தது.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top