Ep 13

அத்தியாயம் 14

அவளுக்கோ கொலை வெறி தான் வந்தது.

“சும்மா கூப்பிட்டா படுக்க வர மாட்டான்னு தானே இப்படி ஒரு கேவலமான காரியத்தை பண்ணி உங்க ஆசையை தீர்த்துக்கிட்டீங்க?” என்று ஆத்திரத்தின் உச்சத்தில் அவள் கத்த,

சிம்மனின் புருவங்களோ சற்று இடுங்கியது. ஆனாலும் அதை வெளிக்காட்டாதவனாய் சற்று ஏளனமாக அவளை பார்த்தவன், 

“இப்போ எதுக்கு இப்படி கத்துற பேபி? இது ஹாஸ்பிடல். நீ பேசுற விஷயம் வெளியில போச்சுன்னா உனக்கு தானே ப்ரோப்லம்!” என்று கர கரப்பான குரலில் சொல்ல, 

அவளுக்கோ இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. 

எல்லா தவறையும் அவன் செய்து விட்டு இப்போது தனக்கு இதனால் பிரச்சனை வரும் என்று இவ்வளவு சாதாரணமாக கூறுகிறானே!

“நீங்க எல்லாம் மனுஷனே இல்லை. ஒரு பொண்ணோட வாழ்க்கையவே அழிச்சிட்டு எப்படி உங்களால இப்படி எல்லாம் பேச முடிது?” என்று அவள் விம்மிய படி அழ, 

சிம்மனோ இரு பக்கமும் தலையசைத்த படி, கையில் இருந்த சிகரட்டை ஆஸ்ட்ரேயில் அணைத்து விட்டு, எழுந்து அவளை நோக்கி வர,

பயத்தில் நடுங்கிய படி நின்ற பெண்ணவளின் கால்களோ அவன் தன்னை நோக்கி வருவதை அறிந்ததும்  தானாக பின்னோக்கி சென்றது. 

“எ… என் பக்கத்துல வராதீங்க…” என்று திக்கி திணறிய படி அவள் பின்னால் செல்ல, சிம்மனோ அவளருகில் நெருங்கி வந்தவன், சுவற்றோடு சாய்த்து அவளை மொத்தமாக சிறை செய்திருந்தான்.

அவள் விழிகளோ அதிர்ச்சியில் விரிந்து போக, “எ… என்ன போக விடுங்க… இ…ல்லன்னா கத்திடுவேன்” என்று பயம் கலந்த குரலில் சொல்ல, 

“ஆஹான்?” என்று கேட்ட படியே அவள் முகத்துக்கு நேரே தன் முகத்தை கொண்டு வர, 

பெண்ணவளோ நடுங்கி தான் போனாள்.

ஏனோ கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இருந்த தைரியம் அவன் பக்கத்தில் வந்ததும் எங்கே சென்றது என்று கூட தெரியவில்லை. 

அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய, 

“உங்களுக்கு மனசாட்சிங்குறதே இல்லையா? ஏன் என்னை இப்படி சித்திரவதை பண்ணுறீங்க? நான் உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன்?” என்றவள் குரல் உடைந்து போய் வெளி வந்தது.

சிம்மனோ “ப்ச்… இப்போ எதுக்கு இப்படி அழுற பேபி? நீ அழும் போது பார்க்க நல்லாவே இல்லை” என்று அவள் கண்ணீரை பெரு விரல் கொண்டு துடைத்த படியே சொல்ல, 

“என்னை தொடாதீங்க” என்று வெறுப்போடு அவன் கையை தட்டி விட பார்க்க, 

அதை லாவகமாகத் தடுத்தவன், அவளது இரு கரங்களையும் பற்றிக் தலைக்கு மேலே உயர்த்தி சுவற்றோடு அணைத்து இன்னும் நெருக்கமாக நின்றான்.

அவள் விழிகளோ அதிர்ச்சியில் மேலும் விரிய, 

“என்னை மொத்தமா சிதைச்சும் உங்க வெறி இன்னும் அடங்கலையா?” அவள் அழுகையோடு வினவ, 

அவனோ மூச்சுக் காற்று படும் அளவுக்கு அவளை நெருங்கியவன், 

இதழை கடித்து ஈரமாக்கிய படி, “அடங்கலையே!” என்று ஒரு வித போதை கலந்த குரலில் சொல்ல, 

அவளுக்கோ அவன் நெருக்கத்தில் மூச்சு முட்டியது.

வெறுப்போடு தன் முகத்தை மறு புறம் திருப்பியவள், “உங்களை மாதிரி ஒரு மோசமானவரை நான் பார்த்ததே இல்லை. மனசாட்சி இல்லாத மிருகம் நீங்க” என்று அவள் சொல்ல,

சிம்மனுக்கோ அவள் பேசுவதை கேட்டு கோபம் வருவதற்கு பதில் சிரிப்பு தான் வந்தது. 

அவளை ஒவ்வொரு முறையும் ரசிக்கும் அவனுக்கு இப்போது கூட அவளை ரசிக்க மட்டும் தான் தோன்றியது. 

மெதுவாக அவள் முகத்தில் விழுந்த முடியை அகற்றி விட்டவன், 

“எதுக்கு என் மேல இவ்ளோ வெறுப்பு பேபி? நான் தான் உன்ன எதுவுமே பண்ணலையே!” என்று கிறக்கமான குரலில் சொல்ல, 

பெண்ணவளோ அவனை சற்று அதிர்ந்து போய் பார்த்தவள், “எ… என்ன?” என்று குரல் நடுங்கிய படி கேட்டாள்.

அவளை ஒரு வித மோகம் கலந்த பார்வையுடன் பார்த்தவன், தன் கட்டை விரலால் அவளது செவ்விதழ்களை மென்மையாக வருடிக் கொண்டே, 

“எஸ்… நீ நினைக்கிற மாதிரி எதுவும் அங்க நடக்கல” என்றான். 

அவன் சொன்னதை கேட்டவளுக்கோ இதயம் படு வேகமாக துடிக்க, 

‘அப்படி என்றால் அவன் தன்னை தொடவில்லையா?’ என்ற எண்ணம் அவளுக்கு பெரும் நிம்மதியை கொடுத்தாலும், அடுத்த நொடி அவனை நம்பலாமா என்ற சந்தேகமே அவளை பதற்றமடைய வைத்தது.

இருக்காதா பின்னர். 

இவ்வளவு கீழ் தரமான ஒரு காரியத்தை செய்திருக்கிறான். தன்னை தொட வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலா அவ்வாறு செய்திருப்பான். 

அதுவும் கடைசியாக அவன் தன்னை நெருங்கியது அவளுக்கு இப்போது கூட நினைவிருக்கிறதே! 

அப்படி இருக்க அவன் சொல்லுவதை எப்படி அந்த பேதையால் நம்ப முடியும்?

“இல்லை… நீங்க பொ.. பொய் சொல்லுறீங்க!… எனக்கு நல்லா தெரியும். நீங்க என்னை கிஸ் பண்ணீங்க… அங்க ரூம்ல நான் அப்படி இருந்தது…. எல்லாமே பொய். நான் நம்ப மாட்டேன்” என்று அவள் மீண்டும் அழ,   

“உஷ்” என்று அவள் இதழ்களில் தன் ஒற்றை விரலை வைத்தவன், 

“நான் உன்ன கிஸ் பண்ணது உண்மை தான் பேபி. பட் உன்னோட பர்மிஷன் இல்லாம உன்னை மிஸ்யூஸ் பண்ற அளவுக்கு நான் ஒன்னும் அவ்ளோ சீப்பானவனும் கிடையாது, அதுல எனக்கு எந்த சாட்டிஸ்பேக்‌ஷனும் கிடைக்க போறதும் இல்லை” என்றவன் குரல் அழுத்தமாக ஒலித்தாலும் அவன் முகம் என்னவோ இன்னுமே மோகத்தின் பிடியில் தான் இருந்தது. 

அவன் பதிலில் மிரண்டு போய் விழித்தவளுக்கு ஏனோ இன்னுமே அவன் மீது சந்தேகம் போகவில்லை என்பது தான் உண்மை. 

“ஆனா… என் ட்ரெஸ் எல்லாம்…” என்று அவள் இழுக்க,

சிம்மனோ நக்கலாக புன்னகைத்த படி, அவள் காதோரம் இதழ் உரசிய படி குனிந்தவன், “அத நீ தான் கழட்டி விட்ட பேபி. நான் ஜஸ்ட் வேடிக்கை மட்டும் தான் பார்த்தேன். டிரஸ்ட் மீ” என்று கிசு கிசுப்பாக சொல்ல,

“போதும் நிறுத்துங்க” என்று அதற்கு மேல் கேட்க முடியாமல் கத்தினாள் அந்த பேதை.

அவளுக்கோ அவமானத்தில் முகம் வெளிரிப் போனது.

இப்படி தன் உணர்வுகளோடு விளையாடிக்  கொண்டு இருக்கிறானே! 

ஒரு பெண்ணுக்கு மானம் என்பது அவள் உயிரை விட மேலானது. 

ஆனால் அவன் அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு அவளை இந்த அளவுக்கு தவிக்க வைக்கிறான்.

தன் கட்டுப்பாட்டையே இழக்க வைத்தது மட்டும் அல்லாமல், தன்னை அணு அணுவாக ரசித்து கொண்டிருந்திருக்கிறானே!

அதை நினைக்கும் போதே அவள் உடல் மீது அவளுக்கே அருவருப்பு தான் வந்தது. 

ஆனால் அவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

ஒரு பெண்ணை தான் இந்த அளவுக்கு காயப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு கொஞ்சமும் இருக்கவில்லை. 

அதனால் தான் அவளை ஒவ்வொரு முறையும் இப்படி பதற வைத்து அதை ரசித்து கொண்டிருக்கிறான் போலும்.

அவள் முகத்தில் விழுந்து கிடந்த முடியை மெல்ல ஒதுக்கி விட்டவன், 

“ரொம்ப நேரமா இங்கேயே இருக்க. வெளியில உன்ன எல்லாரும் தேட போறாங்க. கிளம்பு” என்றவன், 

அவளை விட்டு விலகி சென்று மீண்டும் தன் வேலையில் மூழ்கி விட, 

அவள் தான் அப்படியே சிலை போல ஒரு கணம் நின்றிருந்தாள். 

என்ன தான் தன் மானதுக்கு எந்த பங்கமும் வரவில்லை என்ற நிம்மதி ஒரு பக்கம் இருந்தாலும் சிம்மன் செய்த அந்த கீழ் தரமான வேலையை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. 

ஏன் இவ்வாறு தன்னை சித்திரவதை செய்கிறான் என்று அவன் முகத்துக்கு நேராக கேட்கும் அளவுக்கு அவளுக்கு தைரியமும் இருக்கவில்லை. 

எற்கனவே நொந்து போயிருக்கிறாள். 

இதற்கு மேல் அவன் முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. 

வழிந்த கண்ணீரை துடைத்த படி விறு விறுவென வெளியேறி இருந்தாள்.

பிருந்தாவோ சற்று சோர்வாக நடந்து வர, 

அதே வேளை அங்கே ஒரு பெண்ணோடு பேசிக் கொண்டிருந்த ஜானவி அவளை கண்டதும் அவசரமாக அந்த பெண்ணிடம் ஏதோ சொல்லி விட்டு பிருந்தாவிடம் ஓடி வந்தாள்.

“பிருந்தா இவ்ளோ நேரம் எங்கடி போயிருந்த? நான் உன்ன எவ்ளோவோ தேடினேன். உனக்கு உடம்பு சரியில்லன்னு வீட்டுக்கு போயிட்டன்னு நினச்சேன்.” என்று அவள் சற்று பதட்டமாக கூற, 

பிருந்தாவுக்கோ அவள் பேசியது எதுவுமே காதில் விழவில்லை.

அதை கவனித்த ஜானவியோ அவள் தோளைப் பிடித்து உலுக்கிய படி, “பிருந்தா… என்னாச்சுடி உனக்கு? ஏன் பேய் அறைஞ்ச மாதிரி நிக்கிற?” என்றவள் குரலில் மேலும் படபடப்பு கூடியது.

தோழியின் உலுக்கலில் லேசாக சுயநினைவு பெற்றவள், தன் பதட்டத்தை மறைத்த படி, 

“ஒ… ஒன்னுமில்லை ஜானு. லைட்டா தலைவலிக்குது. நான் வீட்டுக்கு கிளம்புறேன்” என்றவள் அதற்கு மேல் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து அவசரமாக நகர்ந்தாள்.

*****

வீட்டுக்கு வந்தும் கூட இன்று நடந்த சம்பவத்தில் இருந்து பெண்ணவளால் இன்னுமே மீள முடியவில்லை.

இந்த சிம்மனுக்கு தன்னிடமிருந்து என்ன தான் வேண்டும்? 

எப்போதுமே தன்னை ஏதோ அடிமை போல அவன் நடத்தி கொண்டு இருக்கிறான். 

தன்னுடைய பயத்தை அவனுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு இருக்கிறான். 

இவனிடம் இருந்து எப்படி தான் தப்பிப்பது?

அதை நினைக்கும் போது கூட உடலில் ஒருவித நடுக்கம் தான் அவளுக்கு வந்தது.

அவனைத் தவிர்த்ததற்காக தானே அதற்கு தண்டனை என்ற பெயரில் அவளை இன்று அந்த அளவுக்கு துடிக்க வைத்திருந்தான்.

அப்படி இருக்க, பாவம் அவளால் என்ன தான் செய்ய முடியும்?

இவ்வாறு நாட்களும் நகர்ந்து சென்றது.

ஒவ்வொரு முறையும் வைத்தியசாலைக்கு செல்லும் போது ஒரு பயத்தோடு தான் உள்ளே நுழைவாள். 

ஆனால், அன்று நடந்த அந்த கசப்பான சம்பவத்திற்குப் பிறகு சிம்மனும் அவளை பெரிதாக தொந்தரவு செய்யவில்லை. 

எற்கனவே அவளை அளவுக்கு மீறி தவிக்க விட்டு ரசித்திருந்ததாலோ என்னவோ, இப்போது அவளிடம் கொஞ்சம் சாதாரணமாகவே நடந்து கொண்டான். 

இவ்வாறு ஒரு வாரம் கழிந்திருந்தது. 

அன்று வார்டில் நோயாளிகள் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது. 

பிருந்தாவோ ஒரு நோயாளிக்கு மருந்து கொடுத்துக் கொண்டிருக்க, அப்போது அவள் உடையின் பாக்கெட்டில் இருந்த தொலைபேசி அலறியது. 

பொதுவாக வேலை நேரத்தில் போனை லாக்கரில் வைத்துவிடுவது தான் வழக்கம். ஆனால் இன்று ஒரு அவசர வேலைப் பளுவில், போனை எடுத்து வைக்க மறந்து அப்படியே பாக்கெட்டில் போட்டுவிட்டு வந்துவிட்டாள்.

அலைபேசி தொடர்ந்து அலற, 

சற்று பதட்டத்துடன் சுற்றும் முற்றும் பார்க்க, நல்ல வேளையாக தலைமை செவிலியர்கள் யாரும் அங்கே இருக்கவில்லை. 

‘யாரும் வரதுக்கு முன்னாடி போனை ஆப் பண்ணி வைக்கலாம்’ என அவசரமாக அலைபேசியை எடுத்து ஆப் செய்யப் போக, 

சட்டென அவள் கரங்களில் இருந்த போனை யாரோ பிடுங்கி எடுத்திருந்தார்கள். 

அவளோ பதறிய படி திரும்ப, அங்கே சிம்மன் தான் அவளை முறைத்த படி நின்றிருந்தான்.

அவன் எப்போது வந்தான் என்று கூட தெரியவில்லை அவளுக்கு. 

அதற்குள் அழைப்பும் துண்டித்து விட, 

சிம்மனோ “டியூட்டி டைம்ல எதுக்கு போன்? போனை லாக்கர்ல வைக்கணும்னு தெரியாதா?” என்று அவன் அதட்டலாகக் கேட்க, 

அவன் போட்ட சத்தத்தில் வார்டில் இருந்த மற்ற செவிலியர்களும், ஊழியர்களும் வேலையை விட்டுவிட்டு இவர்களை வேடிக்கை பார்க்க, 

அங்குள்ள சில செவிலியர்கள் “இன்னக்கி இவ செத்தா” என்று ஒருவர் காதில் ஒருவர் கிசு கிசுத்தனர்.

பிருந்தாவோ பயந்த படி, “அது…. தெ…. தெரியாம எடுத்துட்டு வந்துட்டேன் சார்…” என்று திக்கித் திணற, 

“ஷட் அப். எக்ஸ்க்யூஸ் சொல்றதை முதல்ல நிறுத்து!” என்று கோபமாக அவன் கர்ஜிக்க, 

பெண்ணவளோ உடல் நடுங்கிய படி, அவமானத்தில் கூனி குறுகிப் போய் நின்றாள். 

இதை ஓரமாக நின்று இதழ்களில் ஒரு வன்மையான புன்னகையுடன் பார்த்துக் கொண்டு இருந்தாள் கார்த்திகா. 

ஏனோ அவள் திட்டு வாங்குவதை பார்க்கும் போது அதுவும் அவனே அவளை திட்டும் போது அவளுக்கு மனதுக்குள் குளு குளுவென்று இருந்தது. 

இங்கே சிம்மனோ, “திஸ் ஈஸ் யுவர் லாஸ்ட் வார்னிங். இனி இந்த மாதிரி பண்ண தொலைச்சிடுவேன்” என்று திட்டி விட்டு அவள் தொலைபேசியை கொடுக்க போக, 

அந்தோ பரிதாபம்! 

மீண்டும் அவள் அலைபேசி சிணுங்க ஆரம்பித்து விட, அதில் கொட்டை எழுத்தில் ‘விஸ்வஜித்’ என்ற பெயரே மின்னியது.

அதை கண்டவனோ “விஸ்வஜித்” என்று அந்த பெயரை சற்று அழுத்தமாக உச்சரித்த படி புருவங்களை சற்று உயர்த்தி அவளைப் பார்த்தான்.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top