Ep 12

அத்தியாயம் 12

பிருந்தாவும், ஜானவியும் கேன்டினுக்கு சாப்பிட வந்து அமர்ந்தார்கள். 

“இன்னக்கி சாப்பாடு ரொம்ப கம்மியா இருக்கு. வர வர இந்த கேன்டீன்ல கொள்ளடிக்க ஆரம்பிச்சிட்டாங்கடி” என்று சளித்த படி ஜானவி சொல்ல, 

பிருந்தாவும் அவளுக்கு பதில் சொல்லிய படி திரும்ப, அங்கே அவர்களை நோக்கி வந்த சிம்மனை கண்டு அவள் விழிகள் விரிந்தன. 

ஆனாலும் அவனை கண்டுகொள்ளாதது போலவே தலை குனிந்து உணவை சாப்பிட்டபடி இருந்தாள். 

அவனோ உணவை எடுத்து கொண்டு அவர்கள் இருக்கும் மேசைக்கு அருகில் வந்தவன், 

“கென் ஐ சிட் ஹியர்?” என்று அவன் கர கரப்பான குரலில் கேட்க, 

பிருந்தாவோ சற்று அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

ஆனால் அவன் பார்வையோ பக்கத்தில் அமர்ந்திருந்த ஜானவியின் மீது படிந்திருக்க, அவளோ உணவைத் தொண்டைக்குள் இறக்க முடியாமல் திணறிப் போய், “ஓ… எஸ் சார்! ஷ்யூர்..”  என்று பதறியபடி தன் தட்டை இழுத்துக்கொண்டு சற்று ஓரமாக அமர்ந்து கொண்டாள். 

சிம்மனும் எவ்விதச் சலனமுமின்றி பிருந்தாவிற்கு நேர் எதிரே உள்ள இருக்கையில் அமர்ந்தான். 

‘இவன் எதுக்கு இங்க வந்தான்?’ என கடுப்பாக மனதிற்குள் எண்ணிக் கொண்டிருந்தவள், 

மெல்ல தலையை உயர்த்தி அவனைப் பார்க்க, 

சிம்மனோ அவளை கண்டு கொள்ளாமல் அமைதியாக சாண்ட்விச்சை சாப்பிட்டுக் கொண்டிருந்தான். 

அவளுக்கு அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருப்பது மனதிற்குள் ஏனோ வருத்தமாக தான் இருந்தது. 

ஜானவிக்கோ சற்று ஆச்சரியமாக இருந்தது. எப்போதும் தனிமையில் சாப்பிட கூடியவன் இன்று இவர்களோடு அமர்ந்து சாப்பிட வியப்பாக தானே இருக்கும்.

அவளோ மெல்ல பிருந்தாவின் காதருகில் குனிந்து “ஏய் நம்ம சார் சாப்பிடும் போது கூட செம்ம ஹேன்சமா இருக்காருள்ள?” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கிசு கிசுக்க, 

பிருந்தாவோ ஓரக் கண்ணால் அவளை முறைத்து பார்த்தவள், “மூடிக்கிட்டு சாப்பிடு” என்றாள். 

ஜானவியும் அமைதியாக சாப்பிட்டு விட்டு அங்கிருந்து எழுந்து சென்று விட, 

இப்போது சிம்மன் மற்றும் பிருந்தா மட்டும் தான் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்.

ஜானவி போகும் வரை காத்திருந்தாற் போல, நிமிர்ந்து பிருந்தாவை பார்த்தவன், 

“உடம்பு எப்படி இருக்கு?” என்று கேட்க, 

சட்டென அவன் குரலில் ஏறிட்டு பார்த்தவள், 

“நல்லா இருக்கேன்” என்றாள் மெல்லிய குரலில். 

“ம்ம்” என்றவன், “ஏன் போனை ஸ்விச் ஆப் பண்ணி வச்சிருந்த?” என்று அடுத்த கேள்வியை கேட்டு விட, அவளுக்கு தான் திக்குமுக்காடிப் போனது. 

உண்மையில் அவன் போன் பண்ணி தொந்தரவு பண்ண கூடாது என்பதற்காக தானே அப்படி செய்திருந்தாள். 

இப்போது அவனிடம் அதை சொல்லவா முடியும். 

“அது… போன்க்கு சார்ஜ் போட மறந்துட்டேன் சார்” என்று ஜானவியிடம் சொன்னதையே இவனிடமும் சொல்லி வைக்க, 

அவன் முகமோ அவளை ஒரு மாதிரியாக பார்த்தது. 

அவன் முகம் போன கோலத்திலேயே அவளுக்கு நன்றாக புரிந்தது. அவன் அதை நம்பவே இல்லை என்று.

“ஓஹோ” என்று ஒற்றை வார்த்தையை உதிர்த்தவன், 

தன் கையில் இருந்த காபியை அவளிடம் நீட்டி, “ரொம்ப டயர்டா இருக்க மாதிரி தெரியிற. இதை குடி” என்று கொடுக்க, 

அவன் நீட்டிய அந்தக் காபி கோப்பையை சற்று தயக்கத்துடன் பார்த்த படி, “இல்லை சார்.. எனக்கு இப்போ காபி குடிக்க தோணல” என்று அவள் நாசுக்காக மறுக்க, 

அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் உன் கிட்ட பெர்மிஸன் கேட்கல.” என்று அழுத்தமாக வந்தது அவன் வார்த்தைகள். 

அவனை சற்று மிரண்டு போய் பார்த்தவளுக்கு அதற்கு மேல் வார்த்தைகள் வரவில்லை. 

எப்படியும் தன்னை விட மாட்டான் என்று தான் தெரியுமா! 

எதற்கு வீண் பேச்சு என்றெண்ணி காபியை எடுத்து பருக, அவள் பருகுவதையே கண் கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான் சிம்மன். 

தன்னை விழிகளாலேயே தீண்டிக் கொண்டிருந்த ஆடவனை எதிர் கொள்ள முடியாமல் அவள் பார்வையோ தாழ்ந்துக் கொள்ள,

அவன் இதழ்களோ நக்கலாகப் புன்னகைத்துக் கொண்டது. 

அவளும் அந்தக் காபியை முழுவதுமாகப் பருகி முடித்து விட, 

அது வரை அங்கேயே அமர்ந்து அவளை ரசித்து பார்த்து கொண்டிருந்தவன், “ஓகே பிருந்தா உடம்ப பார்த்துக்கோங்க” என்று சொல்லி விட்டு  எழுந்து சென்று விட, 

அவளுக்கோ அப்போது தான் மூச்சே வந்தது. 

“சரியான இரிடேட்டிங் பெலோ!” என்று வாய்க்குள்ளேயே முணு முணுத்துக் கொண்டவள் கைகளை கழுவி விட்டு, தனது வேலையை பார்க்க சென்றாள். 

வார்டுக்குள் சென்று ஐந்து நிமிடங்கள் கடந்து இருக்கும். 

ஒரு நோயாளியை பரிசோதித்த படி இருந்தவளுக்கோ உடலில் ஏதோ வித்தியாசமாக தோன்றியது. 

முதலில் அதை பெரிதாக கண்டு கொள்ளாமல் இருந்தவளுக்கு போக போக தன்னுள் ஏதோ ஒரு விசித்திர மாற்றம் நிகழ்வதை உணர முடிந்தது.

முதலில் ஒரு மெல்லிய உடல் நடுக்கம் அவளை ஆட்கொள்ள, அதைத் தொடர்ந்து அவளது உள்ளங்கையில் லேசாக வியர்க்கத் தொடங்கியது.

‘என்னாச்சு நம்மளுக்கு? இது என்ன மாதிரி பீல்ன்னே தெரிலயே!’ என்று மனதுக்குள் எண்ணிய படியே, அருகில் நின்ற ஜானவியைப் பார்த்தாள்.

“ஏய் ஜானு…” என்று அவள் சற்று உடல் நடுங்கிய படி அழைக்க, 

ஜானவியும் என்ன என்பது போல அவளைத் திரும்பிப் பார்த்தாள். 

பிருந்தாவோ “இங்க ரொம்ப புழுக்கமா இருக்குல்ல? ஏசி ஓடுற மாதிரியே தெரியலையே,” என்று மூச்சிரைக்கக் கேட்டாள். 

அவளுக்கோ இப்போது தனக்கு ஏன் இந்த அளவுக்கு மூச்சு வாங்குகிறது என்றே தெரியவில்லை. 

ஜானவியோ அவளை புரியாமல் பார்த்தவள், 

“புழுக்கமாவா? எனக்கு ஒன்னும் அப்படி இல்லையே பிருந்தா. இங்க ஏசி நல்லா தானே ஓடுது” என்று அவள் கூற, 

அப்படி என்றால் தனக்கு மட்டும் தான் இப்படி எல்லாம் தோன்றுகிறதா என்று யோசித்தவளுக்கோ, இதயம் முன்னரை விட படு வேகமாகத் துடிக்கத் தொடங்கியது.

தன்னையும் மீறி அவளது உடல் தள்ளாடியது. 

அவளின் முக மாற்றங்களை கவனித்த ஜானவியோ “என்னடி ஆச்சு உனக்கு? ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று பதற்றத்துடன் தன் கையை நீட்டிப் பிருந்தாவின் நெற்றியைத் தொட்டுப் பார்க்க, 

அவள் விரல்கள் நெற்றியில் பட்ட அடுத்த நொடி, பிருந்தாவின் உடல் அப்படியே ஒரு முறை சிலிர்த்துப் போனது. அந்தத் தீண்டலில் அவளையும் அறியாமல் ஒரு மெல்லிய முனகல் அவள் இதழ்களில் இருந்து வெளிப்பட, பிருந்தாவோ சட்டெனத் தன் இதழ்களைக் கடித்துக் கொண்டாள்.

“என்னடி சிணுங்குற? என்னாச்சு உனக்கு? ஏன் இப்படி ஒரு மாதிரி பண்ணுற?” என்று ஜானவியோ குழப்பமாகவும் சற்று அதிர்ச்சியாகவும் கேட்க,

பிருந்தாவோ சட்டென பின்னால் சென்றவள், 

“அது… எனக்கு தெரில்ல….” என்றவளுக்கு சாதாரணமாக பேசக்கூட முடியவில்லை. 

தன் உடல் ஏனோ தன் கட்டுப்பாட்டில் இல்லாதது போலவே உணர்ந்தாள். 

பிருந்தா தன் தள்ளாட்டத்தைச் சமாளித்துக் கொண்டு, “ஜானு… நான் இப்போ வந்திடுறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து விறுவிறுவென வாஷ்ரூம் நோக்கி ஓடினாள்.

கண்ணாடியின் முன் வந்து நின்றவளுக்குத் தன் உருவமே அந்நியமாகத் தெரிந்தது. 

குழாயைத் திறந்து தண்ணீரை அள்ளி அள்ளி முகத்தில் அடித்தாள். 

ஒரு முறை… இரு முறை… பல முறை முகத்தைக் கழுவியும், அவளது மேனியில் தோன்றும் அந்த விசித்திரமான உணர்வு துளியும் குறையவில்லை.

மாறாக, அந்த நீர்த் துளிகள் அவள் கழுத்தில் இறங்கி அதுவே ஒரு விதமான இன்பமான வேதனையை அவளுக்குள் உண்டாக்கியது. 

“ஓ காட் என்ன நடக்குது எனக்கு? ஒரு வேளை திரும்பவும் காய்ச்சல் வந்துடுச்சா?” என்று யோசித்தவளுக்கு அது காய்ச்சல் போல தெரியவில்லையே!

இதற்கு முன்னர் இப்படி ஒரு தவிப்பை அவள் உணர்ந்ததே இல்லை.

தன் கழுத்தை மென்மையாக வருடிய படி இருந்தவளுக்கு சட்டென கொஞ்ச நேரத்துக்கு முன்னர் சிம்மன் கொடுத்த அந்த காபி நினைவுக்கு வர, அவளுக்கோ ஊஸ் என்றிருந்தது. 

‘அந்த கருமம் புடிச்சவன் காபில என்னத்த கலந்தான்னு தெரிலயே!’ என்றவள் உடலோ நடுங்கிக் கொண்டிருக்க, 

இப்போதே அவனிடம் சென்று இதைக் கேட்க வேண்டும் என்ற ஆவேசம் அவளுக்குள் எழும்பியது.

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top