21கனவே சேராயோ???

என் வாழ்வில் மீண்டும் ஒரு முறை நிஜமாக வருவாயா? உன் நிழலாக மாற நான் காத்திருக்கிறேன்.

கனவே சேராயோ??? 22

“என் வேலைய பத்தி யோசிச்சிட்டீங்களா”? என்று கேட்டான்.

“ஒரு வாரம் கழிச்சு தான் முடிவு சொல்லுவேன்னு சொன்னதா ஞாபகம்?” என்று அவள் மிடுக்காக கூறினாள்.

“ஓகே மேடம்” என்று சல்யூட் அடித்தவன். ஒரு விரலை நீட்டி, “ஒரே ஒரு சின்ன ரிக்வெஸ்ட்” என்று கூறினான்.

அவள் என்ன என்று கேட்டாள்.

“என்னால 9:30-க்கு மேல தான் வர முடியும். வீட்டிலிருந்து இங்க வரதுக்கு பத்து மணி ஆயிடும். அதேபோல 4:30-க்கு என்னை நீங்க ரிலீவ் பண்ணிடனும். எட்டு மணி நேரம் வேலைதான். ஆனா என்னால ஏழு மணி நேரம் தான் வேலை பார்க்க முடியும். அதுல நீங்க இன்கிரிமெண்ட் வேணா குறைச்சுக்கோங்க. ஐ மீன் சேலரில வேணா கம்மி பண்ணிக்கோங்க. பிரச்சனை இல்ல. ஆனா இந்த டைமிங் கீப் அப் பண்றது ரொம்ப அவசியம். அதை மட்டும் கொஞ்சம் யோசிச்சுக்கோங்க. நாலரை மணிக்கு நீங்க விட்டாத்தான் என்னால அஞ்சு மணிக்குள்ள போக முடியும்” என்று கூறினான்.

“வேலை கொடுக்குற நாங்க தான் ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் சொல்லணும். வேலை கேக்குற நீங்க சொல்லக்கூடாது” என்று கூறினாள்.

“சொன்னா புரிஞ்சுக்கோங்க மேடம். கொஞ்சம் கஷ்டம். ஆனால் இப்ப என்னால வெளியே சொல்ல முடியாது. ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்” மூன்று விரல்களை ஒன்றாக குவித்து, அவள் முன்பாக குனிந்து, பணிந்து நின்றபடி கெஞ்சி கேட்டுக் கொண்டிருக்கும் போது, அவளுக்கும் மறுக்க மனம் வரவே இல்லை.

“சரி போய் தொலைங்க. பெர்மனென்ட் ஆகும் போது தான் இதை பத்தி எல்லாம் பேசணும். இப்போதைக்கு எதையும் பேசுறதுக்கில்ல” என்று கூறிவிட்டாள்.

“அப்புறம் இன்னொரு ஸ்மால் ரிக்வெஸ்ட். உங்க பேரு வெறும் நேஹாவா?? இல்ல இன்னும் புனைபெயர் ஏதாவது இருக்கா?? அப்படியே உங்க வயசு சொன்னா இன்னும் நல்லா இருக்கும்” என்று கேட்டு வைத்தான் .

அவள் மீண்டும் முறைத்தாள்.

“ஓகே ஓகே, வேண்டாம்” என்று தோள்களை குலுக்கிவிட்டு சென்று விட்டான்.

அவன் செயலில், அவள் இதழ்கள் தானாகவே விரிந்தது.

மாய கண்ணன் தான் இவன்?? என்று அவளையும் அறியாமல் முணுமுணுத்தாள்.

…….

அலுவலகத்தில் வெங்கடேசன் வரும்போது அவள் தானாகவே எழுந்து நின்று விட்டாள். அவளை முறைத்துக் கொண்டே சென்றார் அவர். சற்று நேரத்தில் அழைப்பார் என்று அவள் எதிர்பார்த்தாள்..

ஆனால் அழைக்கவில்லை. பிறகு மதியம், தந்தை மகன் என்று சேர்ந்து செல்லும்போது அவள் பார்வை தானாக அவர்கள் புறம் சென்றது. ஆனால் தேஜா அவரிடம் எதையோ பேசிக்கொண்டு சென்றான்.

அவரும் அவன் பேசுவதில் கவனமாக இருந்து விட்டார். அவர்கள் இருவரும் கடந்த பிறகு, ஹப்பா என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு அமர்ந்தாள் மானசா.

“எவ்வளவு நாளைக்கு இப்படியே பண்ணிட்டிருப்ப?? அதான் எம்.டி வேலையில் இருந்து தூக்க மாட்டேன்னு சொல்லிட்டாருல்ல?? அப்புறம் எதுக்கு பயப்படுற”? என்று கேட்டாள் ராதா.

“தேஜா சார் கூப்பிட்டு பேசின மாதிரி? அவரும் கூப்பிட்டு பேசிட்டா கொஞ்சம் நிம்மதியா இருக்கும் டி. ஆனா, அவர் இன்னும் பேசலையே?? நீயே பார்த்தல்ல?? காலையில போகும்போது முறைச்சுட்டே போனாரு?? அவர் பாக்குற பார்வையிலையே என்னை பஸ்பம் ஆக்கிடுவாரோ போல?? என்னமோ அவர் பையனை மயக்க இருக்கிறதாவே நினைக்கிறார்?? அவர் பையன் எல்லாம் மயங்குர டைப்பா என்ன”? என்று அவள் கேட்டு விட.

“கண்டிப்பா இல்ல”? என்று புன்னகையோடு கூறியவள். சடார் என்று கண்களை விரித்து எழுந்து நின்று விட்டாள் ராதா.

“என்னடி”? என்று அவளை உலுக்கினாள் மானசா. ஆனால் அவள் எதையோ திகைத்து விழிப்பது புரிந்து, திரும்பி பார்த்தாள். அங்கு தேஜா கைகளை கட்டிக்கொண்டு நின்றிருந்தான்.

“ஐயோ!” என்று இரண்டு கைகளால் வாயை பொத்தியவள்.

‘உன் தம்பிக்கு மட்டும் இல்லடி?? உன் வாயிலையும் சனி பகவான் இருக்காரு’ என்று மனதிற்குள் நினைத்தவள்.

‘தான் என்ன பேசினேன்’? என்று எண்ணி பார்த்தாள்.

அவன் நிலையில் மாற்றமில்லை, அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

“சாரி சார், அப்பா, ஐ மீன் பெரிய பாஸ் காலையில் முறைச்சுட்டு போனாரு?? அதான் கொஞ்சம் டென்ஷனா இருந்தது. மீதி எல்லாம் வாய் தவறி உளறுனது தான். நான் இனிமேல் ஆபீஸ்ல வாய மூடிக்குறேன் சார்” என்று தட்டு தடுமாறி கூறினாள்.

“ஆண் என்றால், பெண்களை பார்த்தா மயங்கணும்னு ஏதாவது ரூல்ஸ் அண்ட் ரெகுலேஷன் இருக்கா?? இல்ல பெண்கள் ஆண்களை மயக்குவதற்காக தான் இருக்கிறாங்கன்னு நினைப்பா?? பேசும்போது கவனம் இருக்கணும் மிஸ் மானசா.” என்றான் தேஜா அழுத்தமாக.

அவள் தவறு புரிந்தது. கண்கள் கரித்துக் கொண்டு வர தயாராக இருந்தது. ஏதோ வாய்க்கு வந்ததை உளறி விட்டாள். அப்படி எல்லாம் நினைக்கும் ரகம் இல்லை அவள். அவன் எவ்வளவு தெளிவாக சொல்கிறான். தான் ஏன் இவ்வளவு கீழிறக்கமாக பேசி விட்டேன்??’ உதட்டை மடித்து கடித்தவள்.

“சாரி சார், ஐ அம் ரியலி சாரி. வாய் தவறி கூட இப்படி எல்லாம் பேசக்கூடாது. என்னோட தப்பு தான்” என்று மனமுணர்ந்து கேட்டாள்.

அவன் மனம் இறங்கி விட்டது. அவன் எதற்காக வந்தானோ அதை பேச தொடங்கினான்.

“சும்மா எதுக்கு அப்பா வரும்போதெல்லாம் உங்க கண்ணை வச்சு உருட்டிட்டிருக்க?? நான் பாத்துக்குறேன்னு சொன்னேன்ல?? நான் பாத்துப்பேன். நீ உன் வேலையை மட்டும் பாரு. அவரை நினைச்சு டென்ஷனாக வேண்டாம். பதற்றப்படவும் வேண்டாம். அவர் உன்னை எந்த கேள்வியும் கேட்க மாட்டார். நான் சொல்றத நம்புனா போதும். நான் பாத்துக்குறேன்” என்று அழுத்தமாக கூறினான்.

அவள் சரி என்று தலையை ஆட்டினாள்.

“ஒருத்தர் பேசும்போது அவங்க கண்ணை பார்த்து பதில் சொல்லணும். நான் உன்னோட பாஸ். ஹஸ்பண்ட் இல்லை? அதை மறந்துடாத”? என்று கூற. அவள் விழுக்கென்று நிமிர்ந்து பார்த்தாள்.

“மிஸ் ராதா, பாலாஜி கன்ஸ்ட்ரக்ஷனோட பைல் என்ன ஆச்சு”? ராதாவின் புறம் திரும்பியபடி கேள்வி எழுப்பினான்.

“அதை சைட் இன்ஜினியர் பாத்துட்டு உங்க டேபிளுக்கு அனுப்புறேன்னு சொன்னாரு சார்” என்றாள்.

“சோ நீங்க முடிச்சு அனுப்பிட்டீங்க?? அங்கிருந்து எனக்கு வரணும் அப்படித்தானே”? என்று கேட்டான் தேஜா.

அவள் ஆமாம் என்று தலை ஆட்டினாள்.

“ஓகே! ரெண்டு பேரும் வேலையை பாருங்க” என்று கூறிவிட்டு சென்றுவிட்டான்.

அலையடித்து ஓய்ந்ததுபோல இருந்தது. அவன் சென்ற பிறகு தான் அவர்கள் இருவராலும் சீராக மூச்சு விட முடிந்தது.

“அவர் வராருன்னு கண்காட்டி இருக்கலாம்ல”? மானசா சினுங்கினாள்.

“நான் எங்க டி கவனிச்சேன்?? அவர் சடார்னு வந்து நின்னுட்டாரு?? நான் உன்னை தானே பார்த்துட்டிருந்தேன்”? என்றாள் ராதா.

“கிழிஞ்சுது போ. இனி என்ன ஆகுமோ”? என்றாள் மானசா.

…..

தந்தையுடன் லிஃப்டிற்கு செல்லும்போது, தானாக அவன் பார்வை மானசாவை பார்த்தது. அவர்கள் கடப்பதை பயத்துடன் பார்த்திருப்பது புரிந்தது. பர்சை மறந்து விட்டதாக தந்தையிடம் பொய் சொல்லி விட்டு, வந்தவன். அவள் பேசியதை கேட்டு விட்டான்.

முதலில் புன்னகை தான் வந்தது. ஆனால் அவளுடைய பதட்டத்தை பார்த்த பிறகு, விளையாட வேண்டும் என்று தோன்றியது. அவள் பேசியதும் சற்று அதிகபடி தானே?? அதனால் அதையே எடுத்து பேசி விட்டான்.

அவனுக்குமே அந்த ஆதங்கம் இருந்தது. ஆண் என்றால் வழியும் ரகம் என்று, ஏன் இந்த பெண்கள் நினைக்கிறார்கள்?? பெண்கள் என்றால் மயக்கத்தான் என்று, ஏன் இந்த ஆண்கள் நினைக்கிறார்கள்?? இந்த விதியை முதலில் மாற்ற வேண்டும். அதுதான் அவனும் ஆதங்கமாக பேசி விட்டான். பிறகு சுதாரித்தான். தான் பேச வந்தது என்ன? இப்போது பேசிக் கொண்டிருப்பது என்ன என்று.

தன்னை இலகுவாக்கிக்கொண்டு. அவளிடமும் சகஜமாக பேசிவிட்டு வந்து விட்டான்.

அன்றைய பொழுது பதட்டமாகவே சென்றது மானசாவுக்கு. நம் நிர்மலுக்கு அப்படி இல்லை. குதூகலமாக சென்றது.

மாலை குறிப்பிட்ட அந்த நேரத்திற்கு அவள் முன்னால் வந்து நின்றான்.

‘என்ன’? என்பது போல பார்த்தாள்.

“நான் கிளம்பனும் மேடம். நாளைக்கு கரெக்டா டைமுக்கு வந்துடுறேன்” என்றான்.

“சரி கிளம்புங்க. டெய்லி வேஜஸ் தான் இப்போதைக்கு உங்களுக்கு. அதுவும் செவன் ஹௌர்ஸ் தான் இருக்கீங்க. சோ என்னால த்ரீ ஹன்ட்ரட் தான் கொடுக்க முடியும். பர்மனண்ட் ஆகும்போது சேலரி பத்தி பேசிக்கலாம்” என்றாள்.

அவன் தலையாட்டியபடியே, அவள் கொடுத்த அந்த முந்நூறு ரூபாயை பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன பத்தலைன்னு நினைக்கிறீங்களா”?? என்று கேட்டாள்.

“இல்லல்ல மேடம். இது என்னோட முதல் சேலரி. அதுதான் ஆவலா பாக்குறேன்.”

“பேரன்ட்ஸ் கிட்ட குடுங்க, சந்தோஷப் படுவாங்க” என்றாள் நேஹா.

“படுவாங்க படுவாங்க, ரொம்ப சந்தோஷப்படுவாங்க” என்று அவன் ஏற்றி, இறக்கி கூறினான். ‘ஏறி மிதிப்பாங்க’ என்று மனதினுள் புலம்பினாள். அவள் புருவமிட்டுப் பார்த்தாள்.

“ஈஈ, என்று இழித்து வைத்தான். வீட்டில் சொன்னால்? அதுவும் இந்த வேலை என்று சொன்னால்?? என்ன நடக்கும் என்பது அவனுக்கு மட்டும் தான் தெரியும்??

“ஓகே பை, நான் அப்ப போயிட்டு வரேன் மேடம்” என்று அந்த பணத்தை கண்களில் ஒத்திக்கொண்டு கூறினான். அவள் முகத்தை சுருக்கினாள்.

அவன் கஷ்டப்படுகிறவன் என்று, அவள் நம்ப வேண்டும் அல்லவா?? அதற்காக சற்று ஓவர் ஆக்டிங் செய்து விட்டு தான் கிளம்பினான். ஆனால் முதல் சம்பளம் என்ற நெகிழிவு அவனுக்குள்ளும் இருந்தது.

அவன் வீட்டு காம்பவுண்ட் சுவரின் அருகில், கற்களை எடுத்து வைத்து அதில் ஏற செல்ல. வழியில் சென்று கொண்டிருந்தவன் நின்று அவனை கவனிக்கலானான்.

“சாவியை மறந்துட்டேன். வேண்டுதல். ஆதான் சுவர் ஏறி குதிக்கிறேன்” என்று கூறிக் கொண்டே எகிரி குதித்து விட்டான்.

அவனோ சுற்றும் யாராவது இருக்கிறார்களா?? என்று பார்த்துவிட்டு. பயந்து அங்கிருந்து ஓடி விட்டான்.

கைகளை தட்டிக்கொண்டு வீட்டினுள் குதித்தவன். தன் அறைக்கு சென்று அப்பாடா என்று கைகால்களை நீட்டி படுத்து விட்டான்.

அவன் படித்த வேலைக்கு சென்று இருந்தால் கூட இத்தனை கஷ்டமாக இருந்திருக்காது போலும்?? இவளுக்காக என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கிறது?? என்று முனங்கிக் கொண்டே காலையிலிருந்து நடந்ததை ரீவின் செய்து கொண்டிருந்தான். வேலை அதிகம் என்றாலும், அவளுடன் இருப்பது நன்றாகத் தான் இருந்தது.

அதற்குள் அவர்கள் வீட்டின் கேட் சத்தம் கேட்டது. கட கட என்று வீடியோ கேம் ஆன் செய்து. விளையாடுவது போல பாசாங்கு செய்தான்.

………

காரிடாரில் நின்று கொண்டிருந்தார்கள் பெண்கள் இருவரும்.

“காலையில உன் முகத்தை பார்க்கணுமே?? பேய் அரைஞ்ச மாதிரி இருந்தது” என்று சிரித்துக் கொண்டே கூறினாள் ராதா.

“இருக்கும் இருக்கும். பெரிய பாஸை பார்த்தா கூட, இவ்வளவு பயம் வராது. ஆனால் சின்னவரை கிட்டக்க பார்த்தா தொடை தானா நடுங்குது” என்றாள் மானசா.

“இப்ப பெரியவரை பார்த்தாலும் நடுங்குதுல்ல”? என்றாள் ராதா.

“ஆமாம் ரொம்ப” என்றாள்.

ம்ஹும், என்று தொண்டையை கனைத்துவிட்டு தேஜா கடந்து சென்றவன். அவளை ஒர பார்வை பார்த்து விட்டு சென்றான்.

‘தான் பேசியதை அவன் கேட்டானா இல்லையா?? பிறகு எதற்காக முறைத்து வைத்தான்?? ஒரு வேலை கேட்டிருந்தால்??? தன் தலையில் தானே தட்டிக் கொண்டாள்.

அவள் ஒன்றும் பெரிதாக பேசவில்லை, ஆனால் அவர்களைப் பற்றி பேசினாளே?? காலையில் தான் அவ்வளவு அறிவுரை கூறினான். இப்போது மீண்டும் சொதப்பி வைத்திருக்கிறாள்.

அவன் கேட்டானா? கேட்கவில்லையா?? என்று தனக்குள்ளாக தவித்துக் கொண்டிருந்தாள்.

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top