கனவே சேராயோ??? 20

இதயங்கள் இணைந்திடும் நேரம், இடி இடித்தால் என்ன செய்வது??

கனவே சேராயோ??? 20

பக்கவாட்டில் இருக்கும் காம்பவுண்ட் சுவரின் மேல் ஏறி அமர்ந்தபடி, கால்களை ஆட்டிக் கொண்டிருந்தான் நிர்மல். 

 பிறகு அதிலிருந்து வெளிப்புறமாக எகிறி குதித்தான். ரோட்டுக்கு சென்று கட்டை விரலை மட்டும் உயர்த்தியபடி லிப்ட் கேட்டான்.

 ஒருவரும் அவனுக்கு செவி சாய்க்கவில்லை. கடைசியில் ஆட்டோவை பிடித்து. அந்த ரெஸ்டாரன்ட் முன்பு வந்து இறங்கினான்.

 தலையை கலைத்து விட்டான். சட்டையை இழுத்து விட்டான். ஒரு முடிவோடு ரெஸ்டாரென்ட்டுக்குள் சென்றான்.

 “பச்சைக்கிளி, பச்சைக்கிளி எங்க இருக்கு”?? என்று பாடியபடியே அவன் துலாவ. அவன் எதிர்பார்த்து வந்த அந்த பெண் மட்டும் அவன் கண்ணில் படவில்லை.

 “ஹலோ யாராவது இருக்கீங்களா’?? என்றவனின் குரலுக்கு ஒரு பேரர் வந்து நின்றார்.

“சார், நீங்க வந்து உட்கார்ந்தா, நாங்க ஆட்டோமேட்டிக்கா உங்ககிட்ட வருவோம் சார்” என்றார். 

“அது நான் சாப்பிட வந்திருந்தா,  வந்து உட்கார்ந்திருப்பேன்” என்றான் நிர்மல்.

 அங்கிருந்தவன் அவனை புருவம் இடுங்க பார்த்தான்..

 “நான் வேலை தேடி வந்திருக்கேன்” என்று புன்னகை பூத்தான் நிர்மல்.

“வேலையா”? என்று அவனை ஏற இறங்க பார்த்தார் அந்த மனிதர்.

 அவன் உடை, முகம் பாவனை என்று   எதுவுமே வேலைக்கு வந்தது போல் அவனுக்கு தெரியவில்லை போல??

“என்ன சார் வேலைக்கு வந்தா சோகமா முகத்தை வச்சுக்கிட்டு, பக்கி மாறி டிரஸ் பண்ணிட்டு வரணுமா என்ன?? இப்படியும் வரலாம்” என்று அவருக்கு மரியாதை கொடுத்து பேசினான். 

 அதில் அவர் முகத்தில் புன்னகை வந்தது.  “வரலாம் வரலாம்” என்றார்.

“உங்க முதலாளியை  கூப்பிடுங்க. கல்லால யாருமே இல்லாம இப்படி கல்லா காலியாக இருக்கிறது நல்லதே இல்ல? மணி பத்தாக போது. வாடிக்கையாளர்களும் வந்துட்டிருக்காங்க. இப்ப போய் கல்லா காலியா இருந்தா, நல்லா இருக்குமா”? என்று கேட்டபடி உள்ளே நடந்தான் நிர்மல்.

 “மேடம் உள்ள கிச்சனை செக் பண்றதுக்காக போயிருக்காங்க” என்று கூறினார்.

“மேடமா?? அப்ப பாஸ் இல்லையா”??  என்று கேட்டான் நிர்மல்.

 “இல்லல்ல,  மேடம் தான். அதோ மேடம் வராங்க” என்று அவன் காட்டிய திசையில் வந்து கொண்டிருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்னால் பார்த்த அதே  பெண் தான்.

அவளுக்கு பின்னோடு வேறு யாராவது வருகிறார்களா என்று பார்த்தான். ஆனால் வந்து கொண்டிருந்தது அவள் மட்டும் தான். அன்று சுடிதாரில் இருந்தவள். இன்று காட்டன் புடவையில் இருந்தாள். 

 பிளவுஸும், அவள் கட்டி இருந்த புடவையும் 

நேர்த்தியாக, மிக 

 நுணுக்கமாக இருந்தது.

அவன் வாயை பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் அவர்களைப் பார்த்துக் கொண்டே கடந்து சென்றாள்.

 அங்கு நின்றிருந்தவர். “மேடம் உங்கள தான் பார்க்க வந்திருக்காங்க. வேலை வேணுமாம்”  என்று நீட்டி முளக்கி கூறினார்.

 நடந்து கொண்டிருந்தாள்.  அவன் புறம் பார்த்தாள். புருவத்தை ஏற்றி இறக்கினாள். அவனை எங்கோ பார்த்தது போல தோன்றியது.

 அவனும் தயக்கம், பதட்டம் என்று  முகத்தில் பல பாவனைகளை காட்டிவிட்டு பிறகு மலர்ந்த முகமாக அவளை நெருங்கினான். 

“நீங்க தான் இந்த ஹோட்டலுக்கு முதலாளியா?? அன்னைக்கு சர்வ் பண்ணீங்க”? என்று கேட்டுவிட்டான்.

இப்பொழுது அவளுக்கு ஞாபகம் வந்துவிட்டது. யாரோ ஒரு பெண்ணுடன் வந்தான் அல்லவா?? அவன் மட்டும் பார்க்கவில்லை, அந்தப் பெண்ணும் அவளைக் குறுகுறுவென்று  பார்த்தது. அத்தனை வேலைகளிலும் அன்று அவளால் உணரப்பட்ட ஒன்றுதான்.

 “யார் நீங்க? உங்களுக்கு என்ன வேணும்”??  என்று தோரணையாக கேட்டாள்.

 ‘நீங்க தான் வேணும்’ என்று மனதிற்குள் ஒலி எழுந்தாலும். “வேலை வேணும்” என்று மலர்ந்த முகமாக கேட்டான்.

 “வேலை கேக்குற லட்சணம் இதுதானா”? என்று அவனை ஏற இறங்க  பார்த்தாள்.

 “ஏங்க? வேலை கேக்குறதுக்கு ஏதாவது லட்சணம் வேணுமா”? என்று கேட்டு வைத்தான்.

 “மிஸ்டர், கையில  ஒரு ஃபைல் இல்ல. வெயிட் பண்ணவும் தெரியல?? ஸ்ட்ரெயிட்டா வரீங்க”? என்று அவள் பாவனையாக கூற.

 “ஆமா ஃபைல் இல்ல. ஆனா நான் படிக்கலைங்க. நான் இங்க ஏதாவது எடுபிடி  வேலை கேட்டு வந்தேன்” என்று அவன் கூறியதை அவளால் நம்ப முடியவில்லை. 

 முகத்தில்  ஒரு தேஜஸ் இருந்தது. கஷ்டப்படுபவர்கள் போல தெரியவில்லை உடையும் அப்படி இருக்கவில்லை. படிக்காதவன் என்று சத்தியம் அடித்து சொன்னாலும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது, அவனுடைய தோற்றம்.

ஆனால் அவனே கூறிக் கொண்டிருக்கும் போது நம்பாமல் இருக்க முடியாது அல்லவா?? 

“சமையலுக்கான ஆட்கள் இருக்காங்க” என்றாள். 

“ஐயய்யோ சுட்டு  போட்டாலும் எனக்கு சமைக்க வராதுங்க?? இப்ப என்ன?? இதுக்கு மேல கத்துக்குறேன். ஆனா நான் கேட்டு வந்தது  பேரர் வேலை,, சர்வீஸ் வேலை. இது போல ஏதாவது ஒண்ணுக்கு” என்று கூறினான்.

 அவள் புருவம் மீண்டும் இடுங்கியது. முகத்தை சுருக்கிவிட்டு   தன்னுடைய இடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள். 

 ‘இவள் எதுக்கு முகத்தை எத்தனை மாடுலேஷன் மாத்துற’? என்று சிந்தித்துக் கொண்டே அவள் பின்னோடு போனான்.

‘உம்  சும்மா சொல்லக்கூடாது. பின்னாடியும் நல்லா இருக்கு, முன்னாடியும்?? என்று சென்ற அவன் மூளைக்கு தடா விதித்து நிறுத்தினான்.

 ‘பார்க்க சின்ன பொண்ணு போல இருக்கு?? ஆனா இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்டை இதுக்குள்ளயே நடத்துறானா? ஒருவேளை நம்மள விட பெரிய பொண்ணா இருந்துட்டா?? என்ன பண்றது?? அம்மா வேற ஒத்துக்க  மாட்டாங்களே’? என்று அவன் மனம் சிணுங்கியது.

 அவள் அமர்ந்திட்டு அவனை பார்க்க. 

“உங்க வயசு என்ன இருக்கும்”? என்று கேட்டுவிட்டான்.

 “வாட்”? என்று அவள் அதிர்ந்து எழுந்து நின்று விட்டாள்.

 “இல்ல வந்து, பாக்க முதல சின்ன பொண்ணு மாதிரி தான் இருக்கீங்க? ஆனா இவ்ளோ  பெரிய ரெஸ்டாரண்டை   நடத்துறீங்கன்னா?? ஒன்னு நீங்க வசதியான இடமா இருக்கணும். இல்ல உங்களுக்கு வயசு அதிகமா இருக்கணும். ஆனா பார்க்க தெரியலையே?? அதான் கேட்டேன்” என்று ஈளித்து வைத்தான்.

“நீங்க வேலை கேட்க வந்தீங்களா?? இல்ல பொண்ணு பார்க்க வந்தீங்களா? தேவை இல்லாத கேள்வி எல்லாம் எதுக்கு கேட்டுட்டு இருக்கீங்க? இங்க வேலையில்லை முதலில் கிளம்புங்க” என்று கூறிவிட்டாள். 

 “ஐயோ! அவசரப்படாதீங்க மேடம். வேலை தேடி வரவங்க சோகமான முகத்தோட வரணும்னு அவசியம் இல்லையே?? அதே மாதிரி பழைய டிரஸ் போட்டுகிட்டு வரணும்னு அவசியம் இல்லையே?? நம்ம ஹோட்டலுக்கு சாப்பிட வரவங்க பார்க்கும்போது டீசண்டா டிகினிட்டியா டிரஸ் போட்டுக்கிட்டு இருக்கணும் இல்லையா?? அதனாலதான் நல்ல டிரஸ் போட்டுக்கிட்டு வந்தேன். நீங்க வேலை மட்டும் கொடுத்து பாருங்க? உங்களை விட சூப்பரா சர்வ் பண்ணுவேன்” என்றான். 

“என்ன படிச்சு இருக்கீங்க”? என்று அவள் கேட்டாள்.

“நீங்க என்ன நினைக்கிறீங்களோ அதை போட்டுக்கோங்க” என்றான். 

 “என்ன விளையாடுறீங்களா? எந்த கேள்விக்காவது ஒழுங்கா பதில் சொல்றீங்களா?? இங்க வேலை இருக்குன்னு  முதல்ல உங்களுக்கு யார் சொன்னா?? இங்க வேலை எல்லாம் இல்ல. எல்லாத்துக்கும்  ஆளுங்களும் இருக்காங்க” என்று கூறிவிட்டாள். 

 “கரெக்டா ஆளுங்கள வச்சிருக்க கூடாதுங்க. அன்னைக்கு சர்வர் லீவ் போட்டுட்டாங்கன்னு நீங்களே சர்வ் பண்ற மாதிரி ஆயிடுச்சுல்ல?  ரெண்டு எக்ஸ்ட்ரா சர்வர் போட்டு வச்சீங்கனா  உங்களுக்கும் உதவியா இருக்குமில்ல?? எனக்கு சம்பளம் அதிகமா வேணாம். சும்மா உங்களுக்கு என்ன தோணுதோ அதை குடுங்க போதும்” என்று கூறினான்.

 உண்மையில் இவன் வேலைக்கு தான் வந்தானா?? என்ற சந்தேகமே எழுந்தது அவளுக்கு. அன்று பெண்ணுடன் எதுல வந்தான்னு பாக்கணும். இருவருக்கும் ஒரே முக ஜாடை இருந்தது. அதனால் தமக்கையாகவோ, தங்கையாகவோ இருக்கலாம்னு  நினைத்தாள்.

இருவருமே தன்னை பார்ப்பதும் புரிந்தது. இன்று வேலை என்று வந்து நிற்கிறான். அன்று அவர்கள் இருவரையும் பார்த்தால் அப்படி தோன்றவில்லை? என்று அவள் சிந்தித்துக் கொண்டே இருக்க. 

 “ரொம்ப யோசிக்காதீங்க மேடம். இந்த மேடம்னு கூப்பிடறது உங்க வயசை கூடுதலா தூக்கி காட்டுற மாதிரி இருக்கு. உங்க பேரை சொன்னீங்கன்னா”? என்றவன் இளித்து வைத்தான்.

அவள் முறைத்து வைத்தாள். 

 

“இல்லல்ல, முதலாளியோட முதலாளிய மேடம்னு கூப்பிடலாம் தப்பு இல்ல முதலாளிய பேர் சொல்லியும் கூப்பிடக்கூடாது இல்லையா?? அதனால பிரச்சனை இல்லை. சீக்கிரமா எனக்கு ஒரு அப்பாயின்மென்ட் போட்டு கொடுத்துடுங்க. என் பேரு நிர்மல். நான் பத்தாவது இல்ல, பனிரெண்டாவதன்னு போட்டுக்கோங்க. பனிரெண்டாவது  வரைக்கும் படிச்சிருக்கேன்” என்று பேசிக் கொண்டிருந்தவனை யோசனையாக பார்த்தாள்.

 “நான் உங்களுக்கு வேலை போட்டு தரேன்னு சொல்லவே இல்ல?? படிப்பை வாயில சொல்ல கூடாது. சர்டிபிகேட் எடுத்துட்டு வந்து காட்டணும். இந்த பேசிக் கூட உங்களுக்கு தெரியாதா?? வேலை தேடி வரும்போது  ரேசுயும் எடுத்துட்டு வரணும். அதுவும் தெரியாதா?? அதைவிட முக்கியமா பணிவிருக்கணும். உங்க கிட்ட எதுவுமே இல்ல.  நான் எதுக்கு வேலை கொடுக்கணும்”? என்று கேட்டாள். 

 “கரெக்டு. ஆனா சர்வர் வேலைக்கு சர்டிபிகேட் தேவையில்லை. ஒன்னுமே படிக்கலனாலும் நீங்க கொடுக்கலாம்.

 பிரச்சனை இல்ல. இங்க வேகன்ட் இருக்கு. சப்போஸ் யாராவது லீவுக்கு போயிட்டா கஷ்டமா போயிடும். இன்னொன்னு  பணிவு. அதுதான் உங்களுக்கு வேணுமா”? என்று கேட்டபடி.

அவன் பாதி குனிந்து வாயில் கையை வைத்தபடி, பவ்யமாக   “வேலை போட்டு கொடுங்க மேடம்”? என்று கேட்டான். 

 “நீங்க வந்ததுல இருந்து விளையாடுற மாதிரி இருக்கு”? என்று கூறினாள்.

 “சத்தியமா இல்லைங்க. எனக்கு உண்மையிலேயே வேலை வேணும். அதுவும் உங்க பக்கத்திலேயே வேணும். கணக்கு வழக்கு கூட நல்லா தான் பார்ப்பேன். ஆனா சர்டிபிகேட் இல்லாததுனால அந்த வேலையை உங்களால் கொடுக்க முடியாது. சர்வர் வேலை ஓகே. இங்கே இந்த இடத்திலேயே சுத்திட்டு இருப்பேன்”  என்று கூறினான்.

 “நீங்க கிளம்பலாம். இப்போதைக்கு எங்களுக்கு ஆட்கள் தேவை இல்லை” என்று கூறினாள். 

 “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது மேடம். நீங்க வேலை தர வரைக்கும் நான் இங்கேயே உண்ணாவிரதம் இருப்பேன். இல்ல அடுத்தடுத்த பிரியாணிய வாங்கி  கட்டிக்கிட்டே இருப்பேன். பிரியாணி கடைல எதுக்கு வேலைக்கு வருவாங்க?? சாப்பிடலாம்ன்னு தான். நீங்க வேணா என் சம்பளத்துல குறைச்சுக்கோங்க. இல்ல பிரியாணியை மட்டும் போடுங்க  போதும். சம்பளம் கூட தேவையில்லை. இந்த மாதிரி ஒரு அப்பர்ன்டிஸ் உங்களுக்கு எப்படி கிடைப்பாங்க சொல்லுங்க”? என்று அவளிடமே கேட்டான்.

 ஆனாலும் அவள் வேலை தர தயாராக இல்லை. அவன் பேச்சு பாவனை எதுவுமே அவளுக்கு சரியாக படவில்லை. அவன் வேலைக்கு வந்தது போலவும் அவளுக்கு தோன்றவில்லைaa. 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top