கனவே சேராயோ??? 8

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்,

என் இதயம் காத்திருப்பது, உன் வருகைக்காக மட்டுமே

கனவே சேராயோ?? 8

“அப்புறம் என்ன?? அதிர்ச்சியில நான் எழுந்துட்டேன். அய்யய்யோ!! எங்க அக்காவுக்கு அதுக்குள்ள கல்யாணம் ஆயிடுச்சா??  அவங்கள நான் பிரிஞ்சி இருக்கணுமா?? எனக்கு  கார் வாங்கி கொடுக்கிறேன்னு சொன்னாங்களே?? அதுக்குள்ள கல்யாணம் ஆயிடுச்சே?? இப்ப எப்படி வாங்கி தருவாங்கன்னு?  ஒரே பீலிங்கா போயிடுச்சு சார்” என்று அவன் கூறிய நொடி,  தேஜா மென்னகையுடன் மானசாவை பார்த்தான். 

அவள் நிர்மலை பார்த்து பற்களை கடித்துக் கொண்டிருந்தாள்.  அவள் பார்வை  நிர்மலிடம் மட்டுமே இருந்தது. அவனோ கதை சொல்லும் ஆர்வத்தில்  அவளை கண்டு கொள்ளவில்லை. 

“என்ன சார் கேவலமா பாக்குறீங்க?? எனக்கும் வேலை கிடைச்சது சார். ஆனா  கடைக்குட்டி இல்லையா?? என் மேல ரொம்ப செல்லம். அதான் வேலைக்கு அனுப்ப மாட்டேங்கிறாங்க. என்னோட பிரச்சனைனால ஏதாவது பிரச்சனை வந்துருமோனு பயப்படுறாங்க. வீட்ல ரொம்ப போர் அடிக்கும் சார் எல்லாரும் வேலைக்கு போய்டுவாங்க. நான் மட்டும் தனியா இருப்பேன். அதனால சும்மா கேம் விளையாடிட்டிருப்பேன். மேக்ஸிமம் மதியானத்துல தூங்க மாட்டேன்.  நைட்ல தூங்குறதுக்கே இந்த பாடு?? இதுல மதியானம் வேற தூங்கினா அவ்வளவுதான்.” என்றான்.

“உனக்கு தெரிஞ்சவங்கலோட தொடர்புடையவங்க உன்னோட கனவுல   வராங்கன்னு வச்சுப்போம். ஆனா, உன் கணுவுல நான் தான் முதல்ல வந்திருக்கேன். அதுக்கு அப்புறம் தான் உன் அக்கா வந்திருக்காங்க. ஸோ நான் உனக்கு தெரிஞ்சவன் இல்லையே? அப்படி இருக்கும்போது நான் எப்படி உன் கனவுல முதல்ல வந்தேன்”? என்று கேட்டான் தேஜா.

‘இவன் எதற்கு இத்தனை விளக்கம் கேட்கிறான்’? என்று சலிப்பாக தன் மகனை பார்த்தார் வெங்கடேசன். 

“சார்,  எங்க அம்மா அப்பா எல்லாம் வந்தாங்க  சார். அதுல சைக்கிள் கேப்ல தான் நீங்க வந்தீங்க.  நீங்க மெயின் கேரக்டர் இல்ல. எங்க அக்கா தான் மெயின் கேரக்டர். நீங்க சைடு ரோல் தான்” என்று கூறினான்.

தேஜா முறைத்து பார்த்தான்.  அவன் இளித்து வைத்தான்.

அவன் மண்டையிலேயே  தட்டினாள் மானசா.  உடனே தேஜா அவளை திரும்பி முறைத்தான்.

“சாரி சார்” என்றாள் இறைஞ்சலுடன்.

“உன் கனவுல இன்னைக்கு மட்டும் தான் வந்தேனா? இல்ல முன்னாடியே இது போல கனவு வந்திருக்கா”? என்று கேட்டான் தேஜா.

“இல்ல சார் இன்னைக்கு காலைல வந்தது தான் ஃபர்ஸ்ட் டைம். முன்னாடியே நீங்க வந்திருந்தா?? நான் எங்க அக்காவை அலர்ட் பண்ணியிருப்பேன். நேத்து பொண்ணு பார்க்க வந்தவங்களையும் ஓட விட்டிருப்பேன். யூ நோ, எங்க அம்மா பாசத்தை காட்டி என் கையை கட்டி போட்டுட்டாங்க. ஆனா எங்க அக்காவுக்கு அந்த வரனை பிடிக்கல. அதனால அதை எப்படி  கவுக்குறதுன்னு யோசிச்சுட்டே இருந்தேன்.  நல்லவேளையா நீங்க என் கனவுல வந்து என் நெஞ்சுல பாலை வார்த்தீங்க” என்றான்.

“போதும்  நிர்மல், நீ சொன்ன வரைக்கும் போதும்” என்று எழுந்து தம்பியின் வாயை மூடியவள். 

“சார் எங்களை விட்டுடுங்க. இந்த ஒரு வாட்டி எக்ஸ்க்யூஸ் கொடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டபடி கேட்டாள்.   

“ஓகே, உன் அக்கா இங்கேயே இருக்கட்டும். நீ உன் வீட்ல எதையும் சொல்ல தேவையில்லை. போய் உன்னோட ரிப்போர்ட்ஸ் மட்டும் எடுத்துட்டு வா” என்று மானசாவை பார்த்தபடியே கூறிக்கொண்டு எழுந்து நின்றவன். தன் கோர்ட்டை  சரி செய்தபடி நிர்மலின் புறம் திரும்பினான். 

“அதுவரைக்கும் எங்க   அக்காவை எதுவும் பண்ணிட மாட்டீங்களே”? என்றவன் கேட்க.

“அப்ப நீ இரு. உங்க அக்கா போய் ரிப்போர்ட் எடுத்துட்டு வரட்டும்” என்று கூறினான்.

அவன் தன் தமக்கையை திரும்பி பார்த்தான்.

“நீ போ. நான் இங்க இருக்கேன்”  என்று கூறினாள் மானசா. 

தேஜாவின் மீது அவளுக்கு நம்பிக்கை இருந்தது. மிஞ்சி   போனால் போலீசில் மாட்டி விடுவார்கள். தம்பியின் ரிப்போர்ட்டை காட்டி வெளியில் வந்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. 

“இல்ல, நான் இங்க இருக்கேன். நீ போ”  என்றான் இளையவன்.

“இதுதான் நீ என் மேல வச்சிருக்க நம்பிக்கையா?? உங்க அக்காவையே எனக்கு கட்டிக் கொடுக்க முடிவு பண்ணியிருக்க? ஆனா, கொஞ்ச நேரம் உங்க அக்காவை விட்டுட்டு போக மாட்டேங்குறியே??  இன் ஃபேக்ட் ஷி இஸ் மை ஸ்டாப் டூ. நீ உண்மையை தானே சொல்ற?? அப்ப நீயே போய் எடுத்துட்டு வரலாமே”? என்று கேட்டான் தேஜா.

“ஐயோ சார்! நீங்க என்னை தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. உங்க மேல நம்பிக்கை இல்லனா,  எங்க அப்பா அம்மா இந்த வேலைக்கே அனுப்பி இருக்க மாட்டாங்களே?? இங்க வேலை கிடைச்சிருக்குன்னு அக்கா சொன்னவுடனே, உங்க கம்பெனிய பத்தியும், உங்கள பத்தியும்   தீர விசாரிச்சாங்க. அதுக்கப்புறம் தானே  வேலைக்கே அனுப்பி வச்சாங்க”? என்றான்.

“நான் சொன்னேல்ல தேஜா?? இவங்க ரெண்டு பேரும் ஏதோ பிளான் பண்றாங்க? நம்மள பத்தி எல்லா டீடைலும் எடுத்துட்டு  தான் இந்த மாதிரி டிராமா போடுறாங்க. ஒருவேளை இவனுக்கு இந்த பிரச்சனையே இருந்தா கூட?? இவன் அக்காவை உன் தலையில கட்டி வைக்கிறதுக்கு,  இவன் இந்த பிரச்சனையை யூஸ் பண்ணுறான்னு தோணுது”? என்றார் வெங்கடேசன்.  

“ஏன் சார் நீங்க ஆரம்பத்துல இருந்து தப்பு தப்பா பேசுறீங்க?? எங்க அக்கா இருக்கிற அழகுக்கு. நான் நீன்னு போட்டி போட்டுட்டு கல்யாணம் பண்ணிக்க வருவாங்க. நாங்க எதுக்கு பிளான் போடணும்?? நீங்க உங்க பையனுக்கு உடனே வரனை பார்த்து கல்யாணம் முடிஞ்சு வையுங்க சார். எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை”. 

“நேத்து கோயம்புத்தூர்ல இருக்க பெரிய மில் முதலாளி தான் எங்க அக்காவை பொண்ணு கேட்டு வந்தாங்க. இதுவரைக்கும் எதுக்கும் வற்புறுத்தாத எங்க பேரன்ட்ஸ், நல்ல இடம்னு தான், இதுக்கு வற்புறுத்தினாங்க. எங்களுக்கு பணம் முக்கியம்னா?? எங்க அக்கா ஈன்னு இளிச்சுட்டு தலையாட்டி இருப்பாள். அப்படி இல்லாததுனால தான் வரன் பிடிக்கலைன்னு  நானும் எங்க அக்காவும் போர் கொடி தூக்கினோம். சும்மா பணம் பணம்னு பேசாதீங்க சார்” என்றான் நிர்மல்.

 அதுவரை இருந்த லகுத்தன்மை அவன் முகத்தில் காணாமல் போனதை கவனித்தான் தேஜா.

“அப்படின்னா உங்க அப்பா அம்மாவுக்கு பணத்தாசை இருக்கு. அதனாலதான் வசதியான வரன் வந்ததும்,  பெண்ணுக்கு பிடிக்கலன்னாலும் பரவால்லன்னு  கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவெடுத்திருக்காங்க”? என்று வெங்கடேசன் கேட்டார்.

“அது அப்படி இல்ல சார்.   நாலு மாசத்துக்கு முன்னாடி ஃபங்ஷனுக்காக நாங்க ஊருக்கு போயிருந்தோம். அப்ப எங்க அக்காவை பார்த்து பிடிச்சு தான், யாரு என்னனு கேட்டு, இப்போ  பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. எங்க அக்காவ பிடிச்சு கேட்டதனால தான். எங்க அப்பா அந்த வரனுக்கு  சம்மதிச்சார். நீங்க சொல்றது போல இல்ல” என்றான் நிர்மல்.

“அப்பா இந்த பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன்னு சொன்னேன்” என்றான் தேஜா அழுத்தமாக.

 ‘மகன் எதற்காக இவர்களிடம் இப்படி அடக்கி வாசிக்கிறான்?? இதுவரை யாருக்காகவும் தன்னிடம் எதிர்த்து பேசாதவன்?? மற்றவர்களின் முன்னால் தன்னிடம் அழுத்தம் கூட்டுகிறான். இதெல்லாம் எங்கே போய் முடியுமோ’? என்று நினைத்தவர் மீண்டும் அமைதியானார். 

“சரி, இப்போ உங்க வீட்டுக்கு  நீ போறியா? இல்ல உன் அக்கா போறாளான்னு கேட்டு சொல்லு”? என்றான் தேஜா.

 

“இல்லல்ல,  நான் போனா ஆட்டோ புடிச்சு போகணும். அதான் எனக்கு வண்டியே வாங்கி கொடுக்கலையே?? அதனால எங்க அக்காவே போகட்டும். அதுக்குள்ள நான் கண்ட கனவு எல்லாத்தையும்  டீடைலா சொல்றேன்” என்று புன்னகையோடு கூறினான் நிர்மல். 

அவன் இரு பக்கமும் தலையாட்டினான்.

“சார் ஒரு நிமிஷம்” என்றவள்.

“டேய் ப்ளீஸ் டா. உன் கையை, காலா நினைச்சு கேட்டுக்குறேன். தயவுசெஞ்சு அமைதியா வாய மூடிக்கிட்டு இருடா. நீ கூட்டி வச்ச ஏழரை வரைக்கும் போதும்” என்று கையெடுத்து கும்பிட்டவள்.

“தயவு செஞ்சு வாயை திறக்கவே திறக்காத.  அவர் கிட்ட எதுவும் பிரச்சினை பண்ணிக்காத. உன்னால என் வேலை போவது மட்டும் இல்லை, அப்பா அம்மா கிட்ட வேற நான் திட்டு வாங்கணும்” என்று அவள் சிறு குரலில் கூறினாள்.

 அவள் மெல்லக் கூறினாலும் அவர்கள் அருகிலேயே இருந்த தேஜாவிற்கு அது நன்றாக கேட்டது.

 “நீ போ அக்கா நான்  பாத்துக்குறேன்.   மாமாவை பார்த்தா? என்று கூறியவன்.

பிறகு அவள் முறைப்பில், தன்னை அடக்கிக் கொண்டு.

 “சாரை பார்த்தால், ரொம்ப நல்லவரா தான் இருக்காரு. நான் கண்ட கனவு பத்தி கேட்டாருல்ல?? அதை சொல்லிட்டிருக்கேன். அதுக்குள்ள நீ போயிட்டு வந்துடு” என்று கூறியவன்.

“அது தான் அந்த கனவை    சொல்லிட்டேன்ல?? அது நடக்காது. கவலைப்படாதீங்க” என்று தமக்கையை சமரசம் செய்தான்.

தேஜாவின் புருவம் இடுங்கியது.

 

“சார் அவனை ஏதும் பண்ணிடாதீங்க. நான் ரிப்போர்ட்டை எடுத்துட்டு வரேன். இந்த ஒரு வாட்டி மன்னிச்சு விட்டுடுங்க. உங்க கண்ணுல படாத அளவுக்கு தூரமா போயிடுறோம்” என்று கூறினாள் மானசா.

“நீ வர வரைக்கும் உன் தம்பியை ஒன்னும் பண்ண மாட்டேன். நீ சொன்னது பொய்யில்ல உண்மைதான்னு  தெரியுற வரைக்கும்  நான் எதுவுமே பண்ண மாட்டேன். பொய்யின்னு தெரிஞ்சது?? அப்புறம் நான் எதை பத்தியும் யோசிக்க மாட்டேன்.  போ போயி, நீங்க சொன்ன அந்த பையிலை   எடுத்துட்டு வா” என்று அழுத்தமாக கூறினான் தேஜா.

 

“போக்கா, எனக்கு ஒன்னும் ஆகாது. எனக்கு எதுவும் ஆகுற மாதிரி தான் நான் கனவு காணலையே?? கல்யாணம் ஆகும்போது நான் தானே அவருக்கு மெட்டியை மாட்டுறேன்”? என்றவன் புன்னகையோடு கூற அவள் பல்லை நரநரத்தாள்.

 

“ஓகே ஓகே! நீ போய் எடுத்துட்டு வா. நான் வாயை மூடிகிட்டு இருக்கேன்.” ஜகா வாங்கியபடி திரும்பினான்  நிர்மல்.

தேஜா, நிர்மலை யோசனையாக பார்த்துக் கொண்டிருப்பது புரிந்தது. 

 

 “சார், நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க. எனக்கு நாக்குல தான் சனின்னு எங்க வீட்ல எல்லாரும் சொல்லுவாங்க. ஆனால் உண்மை அது இல்லை. என் மண்டையில தான் சனி  புகுந்துடுச்சு. அதுதான் என்னை ஆட்டிப் படைக்குது. ம்ப்ச்” என்று உச்சு கொட்டினான் நிர்மல்.

 

“சோ உன் கனவை சொல்லிட்டா அது நடக்காதா”? என்று கேட்டான். 

இல்லை என்று தலை ஆட்டியவன். பிறகு ஆமாம் என்று தலையாட்டி,  பிறகு நாலாப்புறமும் தலையாட்டினான். 

 

“அப்ப எதுக்கு அப்படி உன் அக்கா கிட்ட சொன்ன”? என்று கேட்டான்.

அசட்டுத்தனமாக சிரித்து வைத்தான் நிர்மல்.

 

 

 

 

 

 

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top