கனவே சேராயோ??? 23

கனவில் வந்த மாயோனே? மாயமாய் போவதென்ன?

கனவே சேராயோ??? 23

வளர்ந்து கொண்டிருக்கும் நகரமாக ஆவடி நகரம் மாறிக் கொண்டிருக்க. போக்குவரத்தும் அதிகமாகவே இருந்தது.

சென்னையில் இருந்து பத்தொன்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது.

இன்றைய ஆவடி, தொழில்களின் நகரமாக மாறிக் கொண்டிருந்தது. பல கல்லூரிகள், பள்ளிகள் கம்பெனிகள், கனரக வாகனத்தின் தொழிற்சாலையின் பிறப்பிடமாகத் திகழ்கிறது. பொறியியல் சார்ந்த தொழிற்சாலைகளும் ஐ. டி கம்பெனிகளும் அதன் சுற்று வட்டாரத்திலேயே இருப்பதால், வாகன நெரிசலும் அதிகமாகவே இருக்கும்.

மானசா டிராபிக்கில் மாட்டி, தேஜா பில்டர்ஸ் அடையும்போது. நேரம் கடந்து விட்டிருந்தது.

நேரத்தை பார்த்துக் கொண்டே அங்கிருந்து தூணில் முட்ட சென்றவள். கடைசி நேரத்தில் தன்னை சுதாரித்துக் கொண்டு. வேகமாக கம்பெனிக்கு ஓட்டமும் நடையுமாக சென்றாள்.

லிஃப்ட் ஒன்று திறந்து மூடுவதற்கு ஆயத்தமாக இருக்க. வேகமெடுத்து ஓட்டத்தைப் பிடித்தவள். அதன் உள்ளே நுழைந்த பிறகு தான், சடன் பிரேக் அடித்து நின்றாள்.

ஆனால், அவள் முட்டிக் கொண்டு நின்றது என்னவோ, நெடிய ஆடவனின் முன்பு. மூச்சு வாங்க தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு புன்னகையோடு நிமிர்ந்து பார்த்தாள்.

அங்கு கைகளைக் கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றிருந்தான் சாய் தேஜா.

தன் எம்.டி-யை பார்த்ததும். அசடு வழிந்தவள்.

“ச..ச..ச….சாரி சார். டிராபிக்…. டைம் ஆயிடுச்சு….. பயோமெட்ரிக் வைக்கணும்..” என்று தத்தித் தத்தி தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினாள்.

அவன் ஒற்றைப் புருவத்தை ஏற்றினான்.

“வந்து, இந்த லிஃப்ட் விட்டா? மேல போயிட்டு வரதுக்கு நேரம் ஆகும்னு தான்? வேகமா வந்தேன். ஓடி வந்ததுல பேலன்ஸ் மிஸ்ஸாயிடுச்சு. நீங்க உள்ள இருப்பிங்கன்னு நான் கொஞ்சம் எக்ஸ்பெக்ட் பண்ணல சார். சாரி சார். வேணும்னா வெளிய போயிடவா சார்”? என்று கேட்டாள்.

அவன் அமைதியாக நேரத்தைப் பார்க்க, அதற்குள் லிப்ட் மேல்நோக்கி செல்ல ஆரம்பித்திருந்தது.

அவன் பதில் சொல்லாமல் போக. அடுத்த தளத்தில் இறங்கிக் கொள்ளலாம் என்று நினைத்தவள். பட்டனைத் தட்டப் போனாள்.

அவள் கரத்தைப் தன் வலது கையால் பிடித்தவன்.

“நேரத்துக்கு எப்பயும் வரத் தெரியாதா?? எப்பவுமே லேட்டா தான் வருவீங்களா”? என்றான்.

மிடறு விழுங்கியவள். பதில் சொல்லாமல் விழித்தாள்.

இது முதன்முறையாக நடக்கிறது என்றால் பரவாயில்லை?? லிப்டில் இதுபோல அவர்கள் சந்தித்துக் கொள்ளும்

ஐந்தாவது முறை இது. அதனால் எந்த எக்ஸ்கியூஸும் சொல்ல முடியாது. பொய்யும் உரைக்க முடியாது.

அவனிடம் கேட்காமலேயே சில முறை இறங்கி விடுவாள். சில நேரங்களில் உள்ளே அவன் இருப்பதை பார்த்துவிட்டு வெளியிலேயே நின்று விடுவாள். அவன் கவனிக்கவில்லை என்று நினைத்தாள். ஆனால் அவன் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.

“சாரி.. சாரி சார்” என்றாள்.

“நீங்க எத்தனை சாரி சொல்றீங்கன்னு கவுண்ட் பண்ணிக்கோங்க மிஸ் மானசா” என்று சொன்னவன்.

தன் டையை இழுத்து விட்டுக் கொள்ள.

அவளும் தன் துப்பட்டாவை சரி செய்தபடி, அவனுக்கு எதிர்ப்புறமாக ஒதுங்கி சென்று நின்று கொண்டாள்.

அவள் புறம் கூட திரும்பவில்லை. என்றாலும், அவளை ஓரப் பார்வையாக அவதானித்துக் கொண்டிருந்தான் தேஜா.

அவளோ மிடறு விழுங்கியபடி நின்றுகொண்டிருந்தாள். கையெல்லாம் ஜில்லென்று ஆகிவிட்டது. வியர்வை முத்துக்கள் அவள் முகத்தை அலங்கரிக்க ஆரம்பித்துவிட்டது.

‘பரவால்ல இதுலயும் அழகா தான் இருக்காள்’? அவன் மனம் ஜொள்ளியது.

அவள் செல்ல வேண்டிய தளம் நான்காவது. அது வந்ததும் அவள் இறங்கிக் கொண்டாள். அவன் ஆறாவது தளத்தை நோக்கி சென்றான்.

படிப்படியாக முன்னேறி தான் இத்தனை தளங்கள் வந்திருக்கிறது. முதலில் இரண்டு தளங்களில் ஆரம்பித்த கம்பெனி தான் அது. இப்போது வளர்ந்து எட்டு மாடி கட்டிடமாக மாறி இருக்கிறது.

சீஃப் சிவில் இன்ஜினியரிங் எதிரில் பவ்யமாக நின்று கொண்டிருந்தாள் மானசா.

அவர் திட்டிய திட்டுகளை எல்லாம் தன் மனதில் ஓரமாக நிறுத்தி வைத்துவிட்டு. மனதிற்குள்ளாக அவரை அர்ச்சனை செய்து கொண்டிருந்தாள்.

“எவ்வளவு திட்டினாலும் அப்படியே மரம் மாதிரி நில்லுங்க. என்ன சொல்றதுன்னே தெரியல? கொஞ்சம் வார்த்தைகள் அதிகமா போச்சுன்னா?? அவ்வளவுதான் மேனேஜ்மென்ட் எங்க மேல ஆக்சன் எடுக்கும். ஆனா உங்க தப்புக்கு எங்களைத்தான் திட்டும். ஆனா நீங்க பண்ற வேலைக்கு நாங்க என்ன பண்றதுன்னு தெரியல”? அவர் இஷ்டத்திற்கும் பேசிக் கொண்டிருந்தார்.

அவள் அசட்டையாக இப்படியும் அப்படியும் சாய்ந்து நின்று அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டு தலையை வேறு சொரிந்து கொண்டிருந்தாள். அந்த வழியாக சென்ற தேஜா கண்ணாடி கதவின் வழியாக அதை கவனித்துக் கொண்டே நடந்தான். அவளும் எதிர்ச்சியாக அந்த பக்கம் திரும்பினாள். அவன் பார்வையை எதிர்கொண்டு, அசடு வழிந்தபடி நேராக நிமிர்ந்து நின்றபடி, சிவில் இன்ஜினியரை பார்க்க ஆரம்பித்தாள். அதன் பிறகு இப்படி எப்படி தலையசைக்க மனம் (தைரியம்) வருமா என்ன??

‘கிரைம் ரேட் கூடிக்கிட்டே போகுது மானசா. உன் தம்பி பாதி பண்ணான்னா? நீ மீதிய பண்ணிடுவ போல? அவர் பார்த்த பார்வையிலே நம்மளோட அசட்டைத்தனம் தெரியுது போல’? என்று மனதிற்குள் தன்னையும் திட்டிக் கொண்டிருந்தாள்.

இதுவரை அவள் கண்ணிலும் கருத்திலும் படாதிருந்தவன் இப்போது அடிக்கடி படுவது போல் தோன்றியது? அவன் கண்ணிலும் தான் படுவதாக தோன்றியது. ஆனால் விதி போடும் சதிராட்டம் பாவம் அவளுக்கு தெரியாது வாய்ப்பு இல்லை. தேஜாவின் சதுரங்க ஆட்டமும் அவளுக்கு புரிய வாய்ப்பில்லை.

அவள் தலைகவிழ்ந்து அமைதியாக நின்று கொண்டிருந்தாள்.

“போங்க. போய் வேலையை பாருங்க. நேத்து முடிக்காத வேலையை இன்னைக்காவது முடிச்சு, சப்மிட் பண்ணுங்க” என்று சலித்துக் கொண்டார்.

அவளும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து சென்று. தன் இருப்பிடத்தில் அமர்ந்து ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டாள்.

அருகில் அமர்ந்திருந்த அவள் தோழி ராதா, “இன்னைக்கும் லேட்டா டி”?? என்று கடிந்து கொள்ள.

அவளை பார்த்து தன் அஃக்மார்க் புன்னகையை உதிர்த்துவிட்டு. தன் லேப்டாப்பை ஆன் செய்தாள்.

பெண்கள் அவ்வளவாக தேர்ந்தெடுக்காத சிவில் இன்ஜினியரிங்கில், அவள் சேரும்போதே அவளுடைய தந்தை ஆயிரம் முறையாவது அவளிடம் கேள்வி கேட்டு இருப்பார்.. ஆனால் அவளுக்கு அதில் தான் நாட்டம் இருக்கிறது என்று விடாப்பிடியாக சேர்ந்தாள்.

அதில் அவளுக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. வேலையையும் கருத்தாகத் தான் செய்வாள். சில நேரங்களில் கன்ஸ்ட்ரக்ஷன் சைட்டுக்கும் செல்ல வேண்டி இருக்கும். பெரும்பாலும் அதை சீஃப் இன்ஜினியர் பார்த்துக்கொள்வார் என்றாலும். அசிஸ்டண்டாக ப்ரமோஷன் கிடைத்த பிறகு, அவளுக்கும் அந்த வேலை வந்து சேர்ந்தது.

பில்டிங்கின் பிளான் இவளுடையதாக இருந்தால், இவள் சென்று பார்க்க வேண்டிய அவசியமும் ஏற்படும். இப்பொழுதும் ஒரு பெரிய ப்ராஜெக்ட் கிடைத்திருந்தது. அதுவும் கவர்மெண்ட்டுடையது. கிட்டத்தட்ட இருநூறு அடுக்கு மாடிகளை கட்டிக் கொடுக்க வேண்டிய ப்ராஜெக்ட். டென்டரில் இவர்களின் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிக்கு தான் சாங்க்ஷனாகி இருந்தது. இப்பொழுது அதன் வேலையை தான் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

முதல் நாள் சாட் வர்க்காக செய்ததை, இப்பொழுது பிளானாக வடிவமைத்துக் கொண்டிருந்தாள். மதியம் வரை வேலை தொடர்ந்து கொண்டிருக்க. முதலாளி பிளானை எடுத்துக்கொண்டு வர சொல்வதாக சீஃப் இன்ஜினியரிடமிருந்து அழைப்பு வந்திருக்க. இவளும் அதை மின்னஞ்சலில் முதலாளிக்கு அனுப்பி வைத்துவிட்டு வரைபடத்துடன் அவன் அறைக்குச் சென்றாள்.

அவளுக்காகவே வெளியில் காத்திருந்த சீப் இன்ஜினியர். “உள்ள போகலாம் ரொம்ப கோபமா இருக்காரு. பிளான் எல்லாம் முடிச்சுட்டு தானே”? என்று கேட்க.

“நான் மெயில்ல அனுப்பிட்டேன் சார்” என்றாள் பவ்யமாக.

அவர் முகத்தில் திருப்தி தெரிந்தது. தாமதமாக வந்தாலும் வேலையில் மிகச்சுட்டித்தான். அது அவருக்கும் தெரியும் அவ்வப்போது பாராட்டுவார். ஆனால் பெரும்பாலும் திட்டித் தீர்ப்பார்.

வலியோரிடத்தில் வாங்கும் திட்டுகளை, எலியோரிடம் செலுத்துவது தானே காலம் காலமாக நடந்து கொண்டிருப்பது. அது எல்லாருக்கும் பொருந்தும் அல்லவா?? இவர் மேலிடத்தில் வாங்குவதை அவருக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு டிரான்ஸ்பர் செய்வார்.

“சரி வா உள்ள போகலாம்” என்று அவளையும் உள்ளே அழைத்துச் சென்றார்.

‘எம்.டி’ என்று போடப்பட்டிருந்த அந்த பெரிய சூழல் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தவன். பார்வையை உயர்த்தாமலேயே “ப்ளீஸ் சிட்” என்றான்.

சீப் இன்ஜினியர் அமர்ந்து கொள்ள. அவள் நின்றபடி அங்கிருந்த போர்டில் அந்த பிளானை விரித்து வைத்தாள்.

அவன் கை சட்டையை சரிசெய்தபடியே முதலில் தன் பார்வையை அவளிடம் செலுத்தியவன். அதன் பிறகு போர்டிடம் பார்வையைத் திருப்பினான்.

அவள் விளக்கம் கூற ஆரம்பித்தாள்.

“எக்ஸ்கியூஸ் மீ. இது கவர்மெண்ட் ப்ராஜெக்ட்டா இருந்தாலும், இந்த விளையாட்டுத் திடல் வேணும்னு நான் சொல்லி இருந்தேன். அது எங்க போட்டிருக்கீங்க”? என்று கேட்டான் தேஜா.

சதுப்பு நிலமான அந்த இடத்திற்குப் பின் இருந்த இடத்தை சுட்டிக்காட்டினாள்.

“இந்த ஹோல் ப்ராஜெக்ட்டுக்கும் வாட்டர் ஸ்பெசிளிட்டி”? என்று கேட்டான்.

“சார், இந்த இடத்துல தண்ணி நல்லா கிடைக்கும். நானே அந்த இடத்துக்கு போய் ஆய்வு பண்ணிட்டு வந்துட்டு தான் இந்த இடத்தை தண்ணீருக்காக பிக்ஸ் பண்ணேன். அங்க ஒரு டேங்க் கட்டிடலாம் அதுவும் ஆயிரம் பேருக்கு தேவையான அளவுக்கு கெபாசிட்டி உள்ள டேங்க். கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு நூற்றி முப்பத்தி ஐந்து கிலோ லிட்டர் அளவிற்கு தண்ணீரை அது சேமித்துக் கொள்ளலாம் சார்” என்றாள்.

“இருநூறு குடும்பங்கள்னு போது ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலை நாலு பேருன்னு வெச்சாலும். எண்ணூறு பேருக்கு வேண்டிய தண்ணீர் தேவை இருக்கும். அவ்வளவு தண்ணிரை அங்கு எடுக்க முடியுமா?? பூமியில் அவ்வளவு தண்ணீர் இருக்குமா”? என்று கேட்டான் தேஜா சார்,

“கண்டிப்பா கிடைக்கும் சார். அந்த இடத்துல தண்ணீர் பிரச்சனை வரதுக்கு வாய்ப்பு இல்லை.”

“எப்படி சொல்றீங்க?? சென்னையிலயும் அதோட சுற்று வட்டாரத்தில்லும் இருக்கிற தண்ணீர் பிரச்சினையை பற்றி தமிழ்நாட்டுக்கு ஏன் இந்தியாவுக்கே தெரியும். இந்த இடத்துல தண்ணீர் பிரச்சினை வராதுன்னு எப்படி சொல்றீங்க”? என்று கேட்டான்.

அவனை எதிர்கொள்ளும் போது. அவன் கண்களில் புன்னகை மலர்ந்தது. அதைப் பார்த்து குழம்பிப் போனாள். எச்சிலை உள் கூட்டி விழுங்கியவள். அங்கிருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று சாய்த்துக்கொள்ள. அது அவள் தொண்டையை மட்டுமல்லாமல், அவள் உடையையும் நனைத்தது. அதில் தானாக அவனுடைய பார்வை கீழே செல்ல எத்தனிக்க பிரம்ம பிரயத்தனம் பட்டு அதை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். அவனுக்குள் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றவர்களுக்கு இருக்குமா???

……………………….

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top