நான்கு வருடங்களுக்கு பிறகு…
மூன்று வாண்டுகளும் கட்டிப்புரண்டு சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
“ டேய்…! டேய்…. ! ஏன்டா இப்படி சண்டை போடுறீங்க?” என்றபடி வந்து நின்றாள் அனு.
“என்னோட க்ரையான்ஸை ஆதவ் உடைச்சிட்டான்..” என அர்ஜூனும், “என்னோட காரை ஆர்ஜூன் உடைச்சிட்டான் “ என்று ஆதவ்வும் புகாரளித்துக் கொண்டே சண்டையிட்டு கொண்டிருந்தனர்.
“ டேய்…! நிறுத்துங்க டா…ஆர்யா…நீ ஏன் டா அவங்க கூட சண்டை போடுற…? டேய்…விடுடா…விடுங்களேன்…டா…” என்று அவர்களை விலக்கிக் கொண்டே இருக்கும் போது கூரிய பொருள் ஒன்று அனுவின் நெற்றியை பக்கம் பார்க்க , “ ஸ்ஸ்…ஆ…ஆ…” என்று நெற்றியை பிடித்துக் கொண்டாள் அனு.
உடனே மூவரும் சண்டையிடுவதை மறந்து பதறி அவளருகே வந்து , “அனுக்கா…என்னாச்சு…?சாரி..” என்று அவளது நெற்றியை ஆராய முன்னே வர,” ஒண்ணுமில்ல டா..போங்க டா…ஆரும்மா வந்துடப் போறாங்க… போங்க டா..அங்குட்டு…” என்று மூவரையும் துரத்துவதில் குறியாக இருந்தாள்.
அதற்குள் , “ என்ன இங்க சத்தம் ..?” என்ற குரல் கேட்கவும் மூவரும் விலகி நின்று கொண்டு திருட்டு முழி முழித்தனர்.
ஆருத்ரா தான் இடுப்பில் கை வைத்துக் கொண்டு மூவரையும் முறைத்துக் கொண்டிருந்தாள்.
பதில் கூறாமல் மூவரும் அமைதியாக நிற்கவே அவளின் பார்வை மூவரையும் ஒரு கணம் பார்த்து விட்டு திரும்பி நின்றிருந்த அனுவின் மீது நிலைத்தது.
அவளைத் தன் புறமாக திருப்பிப் பார்த்தாள்.
நெற்றியில் கூரிய பொருள் ஒன்று பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.
“யார் இப்படி பண்ணுனது?” என்றாள் அழுத்தமாக.
மூவரும் ஒருவரையொருவர் மாற்றி கையை காட்டிக் கொண்டனர்.
பெருமூச்சுடன் , “ தேவ்…!” என்றழைத்தாள்.
மாடியிலிருந்து , “என்ன ருத்ரா…என்ன வேணும்?” என்று அலைப்பேசியை நோண்டிக் கொண்டே இறங்கி வந்தான்.
“ மூணு பேரையும் ஒண்ணா விடாதீங்க பாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு தான சமைக்க போனேன்..இங்க பாருங்க வீட்டை என்ன அலங்கோலம் பண்ணி வச்சிருக்காங்கன்னு. மூணு பேரும் அடிச்சிட்டு இங்க பாருங்க.. அனு நெத்தியில காயத்தை பண்ணி வச்சிருக்காங்க. உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல தேவ்…இவங்களோட சேர்ந்து உங்களுக்கும் இன்னைக்கு பனிஷ்மெண்ட் . மதிய சாப்பாடு நாலு பேருக்கும் கிடையாது…” என்று கூறி விட்டு அனுவின் புறம் திரும்பியவள் , “அவனுங்களுக்கு நீ சப்போர்ட் பண்ணாத சரியா ?வா …க்ளீன் பண்ணி விடுறேன்..” என்று கூறி அவளை அழைத்துக் கொண்டு அறைக்குள் நுழைந்தாள் ஆருத்ரா.
“ ஏன் டா கொஞ்ச நேரம் சும்மாவே இருக்க மாட்டீங்களா டா…” என்று சலித்துக் கொண்டவன் மனைவியை சமாதானம் செய்வதற்கு அறைக்குள் நுழைந்தான்.
மருந்திட்டு அனுவை அனுப்பி வைத்து விட்டு சமையலறைக்குள் செல்ல, அவளின் பின்னோடு வந்து நின்றான் வாசு.
“ ஏய்…பாவம் டி…சுடச்சுட ப்ரியாணி பண்ணி வச்சிட்டு சாப்பிடாதன்னா இதெல்லாம் கொடுமை தெரியுமா?” என்றபடி அவளை நெருங்கி நின்றவனை ஒற்றை கையால் தள்ளி நிறுத்தினாள் ஆருத்ரா.
“ பாவம் டி பசங்க…”
“ ம்ம்ச்…சப்போர்ட் பண்ணாதீங்க… இன்னைக்கு சின்னக் காயத்தோடு போச்சு…வேற ஏதாவது பட்டிருந்தா என்ன ஆகுறது?”என்று கூறி விட்டு சமையல் மேடையை துடைத்துக் கொண்டிருந்தவளின் பின்னோடு இறுக அணைத்துக் கொண்டு கழுந்து வளைவில் முகம் புதைக்க வழக்கம் போல அவனது தொடுகையில் மெழுகாய் உருகினாள்.
சமையல் திண்டை இறுகப் பற்றிக் கொண்டு நின்றிருந்தவளின் இடையைப் பற்றிக்கொண்டது அவனது கை. முத்தமிட்டுக் கொண்டே இடையில் அழுத்தத்தை கொடுத்தான். பற்றிக் கொண் விரல்கள் இடையல் கோலமிட தவித்து தான் போனாள் ஆருத்ரா.
“ ந…நகருங்..க தே..வ்..” என்றவளின் குரல் இறங்கி ஒலித்தது.
“ ம்ம்…ம்மகூம்…முடியாது…” என்றவனின் கைகள் எல்லை மீறி மேலே நகர்ந்தது.
“ ஸ்ஸ்.. ம்ம்ச் தள்ளி நில்லுங்க “ என்றவள் புடவை தலைப்பை சரி செய்து கொண்டே, “ போங்க…. கொஞ்ச நேரம் போய் பசங்களோட விளையாடுங்க. திவ்யா குடும்பத்தோட வர்றேன்னு சொன்னா…ஆரோனுக்கு ப்ரியாணி ரொம்ப பிடிக்கும். லெக் பீஸ் தனியா எடுத்து வச்சிருக்கேன். “ என்று பேசிக் கொண்டே போனவளின் இதழில் அழுத்தமாக ஒரு முத்தத்தை அவசரமாக பதித்து விட்டு ,மூவருடன் கிரிக்கெட் விளையாடச் சென்றான்.
சிரித்தபடி பாத்திரங்களை சரி செய்து எடுத்து வைத்தாள்.
அனு தனியாக அமர்ந்து கொண்டு அவர்கள் விளையாடுவதை சுவாரஸ்யமாக பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
அப்போது யாரோ அவளது ஜடையை பிடித்திழுக்க , “ ஆஆ…” என்று கத்திய படி திரும்ப ஆரோன் தான் நின்றிருந்தான்.
“ என்ன டி குண்டு பூசணி…இங்க உக்காந்துட்டு இருக்க…? நீயும் விளையாட வேண்டியது தான?” என்று கூறி அவளது தலையில் நங்கென்று கொட்டினான்.
“ ஆ..ஆஆ…போடா எருமை மாடே..! நான் ஒண்ணும் குண்டு கிடையாது…நீ தான் எருமை..” என்று பதிலுக்கு எகிற , “என்ன சொன்ன..?” என்றவன் அவளது கரங்களை பின்னால் வளைத்துக் கொண்டு நிற்க, அவன் முன்பு வந்து நின்றனர் மூன்று தம்பிகளும்.
“ டேய் ஆரோன்…அக்காவை விடு டா. அவங்களுக்கு வலிக்கும்..” என்றான் ஆர்யன்.
“என்னது டா..வா..நான் உன்னை விட பெரியவன்..ஒழுங்கா வாங்க போங்கன்னு கூப்பிடு…அப்ப தான் அவளை விடுவேன்..” என்று கூறி அவளது கைகளை பிடித்து மேலும் முறுக்கினான்.
அதற்குள் அர்ஜூனும், ஆதவ்வும் பின்னாலிருந்து ஆரோனை பிடித்துக் கொள்ள அனு அவனது பிடியிலிருந்து நழுவினாள்.
ஆதவ் அவனது வயிற்றில் ஓங்கி குத்தி விட்டு ஓட்டம் பிடித்தான். அவன் பின்னே அனுவை இழுத்துக் கொண்டு மற்ற இருவரும் ஓடினார்கள்.
“ ஆ…ஆ…” என வயிற்றைப் பிடித்துக் கொண்டு நின்றவன் நால்வரும் சென்ற திசையை வெறித்துப் பார்த்துக் கொண்டே, “ இருங்க உங்களை வச்சிக்குறேன் டா…” என்று முணுமுணுத்து கொண்டான்.
ப்ராகஷ் மற்றும் திவ்யாவை வரவேற்ற ஆருத்ரா , “ ஆரோன் எங்க திவ்யா?”
“ இங்க தான் விளையாடிட்டு இருப்பான்…” என்று கூறி விட்டு அரட்டை அடிக்க ஆரம்பித்தாள்.
சமையலறையை வாசம் பிடித்துக் கொண்டே வந்த ஆரோன், “ அத்தை லெக் பீஸ் எடுத்து வச்சிருக்கீங்களா?” என்றபடி உரிமையுடன் அவளருகே வந்து அமர்ந்தான்.
மகன்களை பார்த்த படி , “உனக்கு மட்டுந்தான் டா லெக் பீஸ்..” என்றாள்.
“ ஹா…ஹா…தேங்க் யூ..அத்தை..” என்று கூறி விட்டு மூவர் கூட்டணியையும் வெறித்துப் பார்த்தான் ஆரோன்.
மூவரும் முகத்தை திருப்பிக் கொண்டனர்.
உண்டு முடித்து விட்டு ஆண்கள் இருவரும் குழந்தைகளுடன் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தனர். கலாட்டாவும் கேலியுமாக பொழுது கழிந்தது.
ப்ரகாஷ் மற்றும் திவ்யா ஆரோனுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு விடைப் பெற்று சென்றனர்.
வாசுவின் மார்பில் தலை வைத்து படுத்திருந்தாள் ஆருத்ரா.
அவளது கூந்தலை வருடியபடியே இருந்தது அவனது கரங்கள்.
“ இந்த நிமிஷம் உலகத்துலயே சந்தோஷமான ஆளு யாருன்னு கேட்டா அது நாந்தான்னு சொல்லுவேன்…” என்றபடி அவனது அடரந்த மீசையை முறுக்கி விட்டாள் ஆருத்ரா.
“ நானும் ரொம்பவே லக்கி ருத்ரா …”
“தங்கமான புருஷன் , அழகான குழந்தைகள், நிம்மதியான வாழ்க்கை…இது போதும் இந்த ஜென்மத்துக்கு. மனசு முழுக்க சந்தோஷமா, ரொம்ப அமைதியா இருக்கு…
“ இப்படியே பேசி ….வீட்டுலயே டேரா..போட்டுட்டாதீங்க ஆருத்ரா மேடம். ஒழுங்கு மரியாதையா…இன்னும் ரெண்டு மாசத்துல ஆஃபிஸ்க்கு வந்து உங்க ரெஸ்பான்சிபிலிட்டியை எடுத்துக்கோங்க….சரியா? நீ கேட்ட டைம் முடிஞ்சது…” என்று அவளது நெற்றியை முட்டினான்.
“நாம வேணா அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ணலாமே தேவ்…” என்றவளை முறைத்தவன் , “ வாய்ப்பே இல்லை…உன்னோட ஃப்ளான் என்னான்னு எனக்குப் புரியுது…இந்த வாசு எப்பவும் ஆருத்ராவுக்கு கீழே தான். உன்னோட நாற்காலி எப்பவும் உனக்கானது தான். என்னோட ருத்ராவுக்கு நான் எப்பவுமே அடிமை தான். அதுல நான் எப்போதும் வெக்கப் படமாட்டேன்.” என்றவனை காதலுடன் பார்த்தவள் அவனது இதழ்களை அதிரடியாக சிறையெடுத்தாள்.
பெண் மானின் ஆலிங்கனம் இரவு முழுவதும் தொடர்ந்தது.
பிழையாகிப் போன அவர்களது காதல் புரிதலோடு அழகாக திருத்தப்பட்டு முன்பை விட அதிக ஆழமாக ஆத்மார்த்தமாக விருட்சமாக வேரூன்றி வளர்ந்து கொண்டே இருந்தது…இனியும் வளரும்.❤️❤️
நன்றி🙏