அத்தியாயம்-6

வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் வண்டியில் ஏறி பறந்திருந்தனர். 

“டேய்… நல்ல ஒரு ரெஸ்டாரண்ட் முன்னாடி வண்டிய நிறுத்துடா… நிம்மதியா விதவிதமா சாப்பிடனும்…” என்றான் ஆதி.

வண்டி ஓட்டி கொண்டிருந்த மாதேஷிற்கு காது கேட்டதோ இல்லையோ அவன் பாட்டிற்கு ஒட்டி கொண்டிருந்தவன் வாண்டியை நிறுத்தியது என்னவோ ஒரு புகழ்பெற்ற பப்பின் முன்னிலையில்.

“டேய்… இது பப்டா… இங்க எதுக்கு வந்த?” என்றான் அவசரமாக வண்டியை விட்டு இறங்கியபடியே ஆதி.

“டேய் காலையிலியே நான் என்ன சொன்னே ட்ரிங்க்ஸ் வேணும்னு தானே. இப்ப எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?”

“அதுக்குன்னு?”

“என்ன அதுக்குன்னு? இங்க பாரு முழுசா தண்ணி அடிக்கறோம்… இல்ல… இல்ல… தண்ணி அடிக்கறேன்… என்னை கொண்டு போய் நிதானமா வீட்டுல இறக்கி விடுற… டன்…” என்று மாதேஷ் கூற அவனையே பின் தொடர்ந்து சென்றான் ஆதி.

இருளடைந்த அந்த கிளப்பில் ஆங்காங்கே வெளிச்சங்கள் மின்மினிகளாக எறிய இசை மட்டும் மிக சப்தமாக இசைத்து கொண்டிருந்தது. அந்த இசையை கேட்டு ஆண் பெண் இருபாலரும் பேதமின்றி ஆடி கொண்டிருக்க சில நேரங்களில் அவர்களின் அத்து மீறலும் அப்பட்டமாக நடை பெற்று கொண்டிருந்தது. 

உள்ளே நுழைந்த இருவரும் இதை சுற்றும் முற்றும் பார்த்து கொண்டே ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்தனர். 

மாதேஷ் தனக்கு குடிக்க மது வகையறா ஒன்றையும் ஆதிக்கு வெறும் பழச்சாறு மட்டும் சொல்லியிருந்தான். 

அங்கே ஒலித்து கொண்டிருந்த இசையின் உதவியால் இருவரின் தலையும் தானாக ஆடி கொண்டிருக்க சுற்றி இருந்தவர்களை பார்த்து கொண்டே ஆதியும் மாதேஷூம் இருவரும் சிரித்து பேசி கொண்டிருந்தனர். 

அவர்களின் அருகே வந்த இளம்பெண் ஒருத்தியோ “ஹாய் டார்லிங்க்… கேன் ஐ ஜாயின் வித் யூ…” என்று கூறிக்கொண்டே ஆதியின் அருகே அமர்ந்து அவனது தோள்களை தடவி கொண்டிருந்தாள்.

“பாரு ஓசில குடிக்க அலையுறாளுகனு…” ஆதிக்கு மட்டும் கேட்கும் விதமாக மாதேஷ் கூறினான். 

ஆதியோ அதை பொருட்படுத்தாமல் “யா ஷுயூர் பேபி…” என்று எப்பொழுதும் போல் ஆளை மயக்கும் ஒரு புன்னகையை அந்த மாதுவை நோக்கி வீசினான். 

“இந்த பொண்ணுகளுக்கு எல்லாம் இவன மட்டும் தான் கண்ணு தெரியும் போல… பக்கத்துலயே உட்கார்ந்து இருக்க என்னை எல்லாம் கண்டுக்க மாட்டேங்குறாளுக…” என்று புலம்பிகொண்டிருக்க இருவரும் கூறிய திரவங்கள் அங்கே வந்திருந்தன.

ஆதி அவனுக்கு பழச்சாறு வாங்கியதை பார்த்து கொண்டிருந்த அந்த நவநாகரீக மங்கையோ “ஹேய் பேபி… வாட் ஈஸ் திஸ்… யூ ஆர்டர் ஜூஸ் ஒன்லி…”  என்று வினவினாள். 

அதை கேட்ட ஆதியோ “நோ… நோ… ஐ ஆம் ஆர்டர் திஸ் ட்ரிங்க்… இட் வாஸ் ஆர்டர்டு பை மை ஃப்ரண்டு..” என்று மாதேஷை நோக்கி கைகாட்டியவன் அவனுக்கு வந்த பழச்சாறை மாதேஷின் பக்கம் நகர்த்தி வைத்து விட்டு மதுவை தன் கைகளில் எடுத்தான். 

அதை பார்த்த மாதேஷோ… “டேய்… டேய்…” என்று கத்த அதை சிறிதும் காதில் வாங்காமல் அந்த பெண்ணிடம் பேசி கொண்டே அந்த திரவத்தை குடித்திருந்தான். அவனுக்கு இணையாக அவளும் அந்த திரவத்தை கேட்டு வாங்கி பருகி கொண்டிருந்தாள்.

 ஆதி ஒன்றும் மது அருந்தும் பழக்கம் இல்லாதவன் இல்லை. விபத்து நடக்கும் முன்வரை அவ்வப்பொழுது அவன் மது அருந்திகொண்டு தான் இருந்தான். 

கோமாவிலிருந்து வெளி வந்த பிறகு மருத்துவரின் ஆலோசனைக்கு இணங்க அவன் மது அருந்துவதை நிறுத்தியிருந்தான். 

அவன் மது அருந்துவதற்கு காரணம் அந்த பெண் மட்டுமல்ல… இன்று அவனுக்கு ஏற்பட்ட சில நிகழ்வுகளும் தான். 

அந்த பெண்ணும் ஆதியும் மாறி மாறி மது அருந்துவதை கண்ட மாதேஷோ தான் அருந்தாமல் இருந்து கொண்டான். 

யாராவது ஒருத்தர் மது அருந்தாமல் இருந்தால் தானே வீட்டிற்கு செல்ல முடியும் என்ற நினைவும் மாதேஷிற்கு இருந்தது. இருவரும் அளவுக்கு மீறி மது அருந்திவிட்டு அங்கே நடனமாடி கொண்டிருந்தவர்களை கண்டு “ஷால் வி கோ டான்ஸ் பேபி…” என்றால் கிறக்கமாக. 

போதையின் பிடியில் இருந்த ஆதியும் “ஓகே பேபி…” என்று தலையாட்டி விட்டு அவளுடன் சேர்ந்து நடனமாட சென்றான். 

அதை கண்ட மாதேஷோ… “இதுவேறயா…” என்று சலித்து கொண்டே அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தான்.

 இருவரும் இசைக்கேற்ப நடனமாடி கொண்டிருக்க சிறிது நேரத்தில் இருவரும் மூச்சிறைக்க வந்தமர்ந்தனர். 

ஆதியின் மேல் தனது பாதி உடல் படற அமர்ந்திருந்த அந்த பெண்ணோ “பேபி.. ஷல் வி கோ ஃபார் ரூம்…” என்று கூறிக்கொண்டே அவனது உதட்டருகே தனது உதடுகளை கொண்டு சேர்த்து இணைத்து கொள்ள நினைத்தாள்.

 

மாதேஷோ அவளின் இந்த நெருக்கத்தில் வாயை பிளந்து “அடிப்பாவி…” என்றான்.

 அதற்குள் ஆதியோ தனது உதட்டின் மேல் கை வைத்து இருவரது உதட்டிற்கும் இடையே தடை போட்டவன்… “நோ… நோ… பேபி… மை கிஸ் ஒன்லி ஃபார் மை லவ்வர் ஒன்லி… நாட் ஃபார் எவரிஒன்…” என்றவன் அவளின் செயலுக்கு வேண்டாம் என்று மறுத்திருந்தான். 

அதை கேட்டு சிணுங்கிய அவளோ “பேபி…” என்று சிணுங்கினாள்.

 “நோ… நோ மீன்ஸ் நோ ஒன்லி..” என்று அவன் அந்த போதையிலும் தெளிவாக கூற “இட்ஸ் ஒகே பேபி… வென்எவர் யூ வான்ட் லவ் மேக்… டோன்ட் ஃபர்கெட் டூ கால் மை நம்பர்…” என்று ஆதியின் கைப்பேசியை எடுத்து அவளது நம்பரை சேமித்து கொடுத்து விட்டு அழுத்தமாக அவனது கன்னத்தில் முத்தத்தை பதித்து விட்டு சென்றாள்.

இதையெல்லாம் ஆவென பார்த்து கொண்டிருந்தான் மாதேஷ்.

“டேய் உனக்கு மப்பு ஏறி போச்சு… வா வீட்டுக்கு போகலாம்…” என்று ஆதியை எழுப்ப முயன்றான்.

“போகலாம்… போகலாம்… ஆனா உன் வீட்டுக்கு… இல்ல… இல்ல… நம்ம வீட்டுக்கு…” என்று வாய் குழறலாக கூறினான்.

“ம்ப்ச்… அதெப்படி நான் நம்ம வீடுனு உரிமை கொண்டாடுவேன்… அது உங்க வீடு தானே… அங்க இருப்பது உன் அம்மா… அப்பா… தானே… அவங்களை நான் எப்படி உரிமை கொண்டாட முடியும்… எனக்குனு அம்மா… அப்பா… இருக்கறாங்க… இல்ல… ல்ல… அப்பா இல்ல… அவர் தான் எப்பவே செத்துட்டாரே… அம்மா… அம்மா மட்டும் தான்… உன்னை மாதிரி எனக்கு ஏன்டா அம்மா, அப்பா அமையல… ஒரு வேளை நீ ஒரே புள்ளையா இருக்கறனாலயோ.. ஆனா எனக்கு ஒரு தம்பி… ஒரு தங்கச்சி… எல்லாரும் அவங்க அவங்க  சுயநலமா யோசிக்கறாங்களே… அது ஏண்டா…” என்று ஏதேதோ பேசி கொண்டே இருந்தவனை கைத்தாங்கலாக கூட்டி கொண்டு அவனது இரு சக்கர வாகனம் நின்றிருக்கும் இடத்திற்கு வந்தனர் இருவரும்…

“டேய்… உனக்கு மப்பு ஓவரா தலைக்கேறிடுச்சு.. பேசாமா வா வீட்டுக்கு போகலாம்.” என்றான் மாதேஷ் வண்டியை எடுத்து கொண்டே.

“ம்.. போகலாம்.. போகலாம்.. உங்க வீட்டுக்கு… இல்ல.. இல்ல.. நம்ம வீட்டுக்கு போகலாம் தானே… கவலைப்படாதே… சும்மா தான் நம்ம வீடுனு சொல்லுவேன்.. நாளை பின்ன உன் சொத்துல பங்கு வேணும்னு எல்லாம் கேட்க மாட்டேன்…” என்று போதையிலும் கொஞ்சம் தெளிவாக தான் கூறிக்கொண்டிருந்தான்.

 “அது சரி… சொத்துல பங்கு பிரிக்கற வரைக்கும் போய்டுச்சா… டேய் நீ மட்டும் ஜானுட்டயும், பிரகாஷ்கிட்டயும் கேட்டனா கண்டிப்பா இருக்கற சொத்த உன் பேர்ல எழுதி வைக்க கூட கொஞ்சமும் யோசிக்க மாட்டாங்க… ஏன்னா அவங்களுக்கு உன் மேல தனி பாசம் டா…” என்று கூறிக்கொண்டே வண்டியை எடுத்தவன் ஆதி ஒழுங்காக தன் பின்னால் அமர்ந்திருக்கிறானா என்று பார்த்து கொண்டே “நல்லா என்னை பிடிச்சுக்கோடா… மறுபடியும் எங்காவது விழுந்து தொலைச்சுடாதா அப்புறம் உங்க அம்மாகிட்ட எல்லாம் என்னால பேச்சு வாங்க முடியாது..” என்று கூறினான்.

“நண்பேன்டா… எனக்கு ஏதாவது ஒன்னுனா உனக்கு துடிக்குது பாரு… அதெல்லாம் பாசம்டா… இருபது வருஷ நட்புடா… எனக்கு கிடைச்ச ஒரே நண்பன்டா…” என்று கூறியவன் தனது இரு கைகளையும் விரித்து கொண்டே “என் ஃப்ரண்ட போல யாரு மச்சான்..” என்று சாலையில் கத்தி கொண்டே பாட ஆரம்பித்திருந்தான்.

அதை கேட்ட மாதேஷிற்கு ஒரு புறம் சந்தோஷமாக இருந்தாலும் மறுபுறம் எங்காவது வண்டியிலிருந்து மறுபடியும் விழுந்து விடுவானோ என்று பயத்துடனேயே மெதுவாகவே வண்டி ஓட்டி கொண்டு வந்தான். 

“டேய் மச்சா பசிக்குது டா..” என்றான் ஆதி. 

அதை கேட்ட பின்பு தான் இருவரும் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்த மாதேஷ் அங்கே சிறிய தள்ளு வண்டி கடையில் நிறுத்தி அவர்கள் இருவருக்கும் உண்ண தோசை வாங்கி கொண்டு வந்தான். 

“டேய் மச்சா… பிரியாணி இல்லையாடா…”

“டேய்… இந்த மாதிரி கடையில எல்லாம் பிரியாணி வாங்கி சாப்பிட்ட நல்லா இருக்காது. நாளைக்கு வேற கடையில வாங்கிக்கலாம்…” என்று அவனை சமாதானப்படுத்தி சாப்பிட்டு விட்டு இருவரும் வீடு நோக்கி பயணப்பட்டனர். 

எப்படியும் இந்த நிலைமையில் ஆதியின் வீட்டில் அவனை விட்டால் அவர்கள் வீட்டையே ரெண்டு பண்ணி விடுவர் என்பதை உணர்ந்த மாதேஷ் தங்களது வீட்டிற்கு சென்றான்.

பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே செல்ல அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருக்க அங்கே வந்து திறந்தது என்னவோ பிரகாஷ் தான்.

ஆதியின் இந்த நிலைமைய் பார்த்த பிரகாஷோ… “டேய் நீ தான் தள்ளாடிட்டு வருவனு நான் நினைச்சேன்… ஆனா நிலைமை தலை கீழா இருக்கு… ஆதிய கொஞ்ச நாள் ட்ரிங்க்ஸ் எடுத்துக்க கூடாதுனு சொல்லி இருக்காங்கள்ள டா… என்ன பண்ணி வச்சுருக்க… கூட தானே போன.. அவன தண்ணி அடிக்க வச்சுட்டு நீ என்ன பண்ணிட்டு இருந்த… ஐயோ… நான் இப்ப என்ன பண்ணுவேன்…” என்று புலம்ப ஆரம்பித்திருந்தார்.

“டாடி… எதுக்கு இப்ப கத்திட்டு இருக்கீங்க… அதெல்லாம் ஒன்னும் ஆகாது. இவன் இவங்க அம்மாகிட்ட இருந்து காப்பாத்திட்டாலே போதும்… தயவு செஞ்சு இவன என்னோட ரூமுக்கு கூட்டிட்டு போக கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க… அது போதும்…” என்று கூறினான்.

பிறகு இருவரும் கைத்தாங்கலாக அவனை அழைத்து கொண்டு சென்றனர்.

போதையின் பிடியில் இருந்த ஆதியோ…. பிரகாஷின் முகத்தை பார்த்து கொண்டே “அப்பா… நீங்களும் எனக்கு இன்னொரு அப்பா தானே… மாதேஷ் மாதிரி என்னையும் உங்க பிள்ளையா தத்து எடுத்துக்குவீங்களா? எங்க வீட்டுல எல்லாருக்கும் நான் பாரமா தெரியறேன்… எனக்கு ஹாஸ்பிட்டலுக்கு செலவு செஞ்சத எல்லாம் திரும்ப திரும்ப சொல்லி காமிக்கறாங்க… கஷ்டமா இருக்கு… பேசாம அந்த விபத்துல இறந்திருக்கலாமோனு எனக்கு தோணுது…” என்று கண்கள் கலங்க கூறிக் கொண்டிருந்தான் ஆதி. 

அதைக் கேட்ட மாதேஷிற்கும் பிரகாஷிற்கும் கண்கள் கலங்கி விட்டது. ஓர் ஆண் மகன் எவ்வளவு துயரப்பட்டிருந்தால் அவன் வாயிலிருந்து இந்த மாதிரி வார்த்தைகள் வரும்… என்று மிகுந்த சங்கடப்பட்டனர்..

பிரகாஷோ  ஆதியின் தோள்களை தடவிக்கொண்டே “ஆதி.. காம் டவுன்.. கொஞ்ச நேரம் தூங்கு…” என்று அவனது தலையை பிடித்து தடவினார்…

“அப்பா.. எப்பவுமே என் கூடவே இருப்பீங்களா?” என்று தலையை சிலுப்பி கொண்டே கூறினான்.

“கண்டிப்பா ஆதி… மாதேஷ் எப்படியோ அப்படி தான் நீயும் எனக்கு…” என்றிருந்தார்…

“தேங்கஸ்பா…” என்றவன் அவரது கைகளை பற்றி கொண்டே தலையணையில் சாய்ந்து படுத்தான். 

அவரது தலையினை கோதி கொண்டே “மாதேஷ்… ஆதி வீட்டுல என்ன நடந்துச்சு இன்னைக்கு..” என்றார்.

அவனும் நடந்தது பற்றி எல்லாமே கூறினார்.

அதை கேட்டு ஒரு பெருமூச்சு விட்ட பிரகாஷோ “அவங்க அம்மா சொல்றதெல்லாம் சரி தான். ஆனா அதை கொஞ்சம் பாசமா சொல்லி இருக்கலாமே… ஆதி ஒன்னும் அவ்வளவு கெட்டவனில்லையேடா… இவனுக்கும் தம்பி தங்கை, அம்மா எல்லார் மேலயும் பாசம் இருக்கே… இதே ஏன் அவங்க புரிஞ்சுக்கவே இல்ல… சின்னவன் பொறுப்பானவன் தான் அதுக்காக ஆதி ஒன்னும் தறி கெட்டு திரிஞ்சவன் இல்லையே. அவனும் நல்ல வேலைக்கு போய் குடும்பத்தை பொறுப்பா பார்த்துக்கனும்னு தானே ஆசைப்பட்டான்.” என்று கூறிக்கொண்டிருந்தார். 

“என்னப்பா பண்றது… அவன் வீட்டுல யாருமே அவன புரிஞ்சுக்கலையே…” என்று அவனும் வருத்தமாக கூறினார்.

“சரி… விடு… எல்லாம் நல்ல படியா நடக்கும்னு நம்பலாம்… போ… போய் படு… நாளைக்கு ரெண்டு பேரும் வேலைல ஜாயின் பண்ணனுமில்ல…”

“ஆமா பா… ஒகே குட் நைட்…” என்றவன் ஆதி படுத்திருக்கும் படுக்கையின் அருகே படுத்து விட்டான். 

பிரகாஷிம் விளக்கை அணைத்து விட்டு கதவை சாற்றி விட்டு சென்று விட்டார். 

மறுநாள் காலை…

கதிரவனின் கதிர்கள் ஜன்னலின் வழியாக திரை சீலையை துளைத்து கொண்டு உள்ளே நுழைய அந்த மெல்லிய வெளிச்சத்தில் கண்களை திறந்து பார்த்தான் ஆதி…

மாதேஷ் எழுந்து குளித்து விட்டு வெறும் துண்டை மட்டும் கட்டி கொண்டு வந்து தலை துவட்டி கொண்டிருந்தான். 

“ச்சே… கல்யாணம் ஆன உடனே புதுப்பொண்டாட்டி இப்படி தலை துவட்டிட்டு நின்னா எவ்வளவு சந்தோஷம் வரும். ஆனா எனக்கு வாச்சிருக்கறது பாரு… இப்படி ஒருத்தன இப்படி ஒரு நிலைமைல பார்க்கனும்னு…” என்று புலம்பி கொண்டே எழுந்து அமர்ந்தான் ஆதி. 

அவனை திரும்பி முறைத்து பார்த்த மாதேஷோ, “ஏன்டா சொல்ல மாட்ட… நேத்து நீ மட்டையானதும் உன்னை கொண்டு போய் உன் வீட்டுல விடாம கூட்டிட்டு வந்து இப்படி சொகுசா ஏசில படுக்க வச்சேனல்ல… என்னை பார்த்து இதுவும் பேசுவ… இதுக்கு மேலயும் பேசுவ…” என்று கடுப்புடன் கூறி கொண்டே தலையணையை எடுத்து அவனை அடித்தான்.

“டேய்… ஏற்கனவே தலை வலிக்குது… மறுபடியும் அடிக்காத…”

“வலிக்குதா… நல்லா வலிக்கட்டும்… நீ குடிச்சுட்டு என்னை குடிக்க விடாம பண்ணுனயே… உனக்கு இதுவும் வேணும்… இதுக்கு மேலயும் வேணும்…” என்று கூறிக்கொண்டிருக்கும் போதே கதவை திறந்து கொண்டு “குட்மார்னிங்க்..” என்று உள்ளே நுழைந்தார் பிரகாஷ்.

“குட்மார்னிங்க் டாடி…” மாதேஷ் கூறினான்.

கையில் இருந்த ட்ரேயில் ஒன்றில் காபியும் மற்றொரு கண்ணாடி டம்ளரில் எலுமிச்சை சாரும் கொண்டு வந்து காபியை மாதேஷிடம் நீட்டினார்.

எலுமிச்சை சாறை பார்த்தவன் “என்ன இது…” என்றான்.

“இது ஆதிக்குடா… அவனுக்கு தலை வலிக்கும் இல்ல…” என்று அதை ஆதியிடம் நீட்ட அவனோ சங்கடப்பட்டு கொண்டே “ஸாரிப்பா…” என்றான்.

“பரவாயில்ல ஆதி… இதுல என்ன இருக்கு… இதெல்லாம் எஞ்சாய் பண்ற வயசு… இந்த வயசுல இந்த மாதிரி சின்ன சின்ன சந்தோஷம் கூட இல்லைனா எப்படி…” என்று கூறினார்.

அதை கேட்ட ஆதியோ, “தேங்க்ஸ்பா புரிஞ்சுகிட்டதுக்கு…” என்று கூறிக்கொண்டே அதை எடுத்து குடித்தான்.

“சரி… சரி… சீக்கிரம் கிளம்பி வாங்க… முதல் நாளே ஆஃபிஸ்க்கு லேட்ட போனா நல்லா இருக்காது..” என்று கூறிக்கொண்டே வெளியேறினார்.

அப்பொழுது தான் இன்று வேலைக்கு சேர வேண்டும் என்ற எண்ணமே ஆதிக்கு வர, “ஐயோ… லேட்டாகிடுச்சு…” என்று கூறிக்கொண்டே அவசர அவசரமாக குளிக்க சென்றான். 

குளித்து விட்டு வெளியே வந்த பொழுது, “டேய் உன் ட்ரஸ் ஏதாவது இருந்தா கொடுடா…” என்று கூறிக்கொண்டே கண்ணாடி முன் நின்று தலையை கோதி கொண்டிருந்தான் ஆதி.

“பெட் மேல புது ட்ரஸ் இருக்கு எடுத்துக்கோ… டாடி உனக்கும் எனக்கும் புது ட்ரஸ் வாங்கி வச்சுருக்காங்க…” என்று கூறிக்கொண்டே கிளம்பி வெளியே சென்றான்.

அந்த துணிகளை பார்த்ததுமே இதமான ஒரு உணர்வு மனதிற்குள் பரவ முதல் நாள் வேலை நல்லபடியாக அமைய வேண்டும் என்று நினைத்து கொண்டே அந்த துணியை அணிந்த படி வெளியே வந்தான்.

சாப்பாடு மேசையில் அமர்ந்து குனிந்த தலை நிமிராது சாப்பிட்டு கொண்டிருந்தான் மாதேஷ். 

அவனை திட்டி கொண்டே பரிமாறி கொண்டிருந்தார் ஜானகி.

“வா ஆதி… நீ இப்படி பண்ணுவேனு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்ல..” என்று அவனை கண்டதுமே கூற அவனோ இது எதற்காக என்று மனதிற்குள் திக்கென்ற உணர்வுடன் பிரகாஷ் மற்றும் மாதேஷை பார்த்தான்.

“ஜானும்மா… சாரி… நான் நேத்து…” என்று ஆரம்பித்த உடனேயே, 

“உனக்கு பிடிச்ச பூரி செய்யறேனு தானே சொன்னேன். கொஞ்ச நேரம் வெய்ட் பண்றதுக்கு என்ன? அதுக்குள்ள வெளிய போய் குடிச்சுட்டு வந்து…” என்று இடைபுகுந்தார் ஜானகி.

மனதிற்குள் திக்கென்ற ஒரு உணர்வு பரவியது ஆதிக்கு… ஐயோ இவங்களுக்கும் நான் தண்ணி அடிச்சுட்டு வந்தது தெரிஞ்சுருச்சா… என்ற குற்றஉணர்வுடன் “சாரி மா…” என்று கூறினான். 

“நீ எதுக்கு சாரி கேட்குற… இதோ நல்லா தண்ணி அடிச்சுட்டு வந்து இப்படி கண்ணு சிவந்து போய் நிக்குறானே இவனுக்கே அந்த உணர்வு வரல…” என்று மாதேஷை திட்டு கொண்டிருந்தார்.

அதைக்கேட்டு ஆதியின் மனதிற்குள் நிம்மதி பிறந்தாலும் தனக்காக நண்பன் திட்டு வாங்குகிறானே என்று எண்ணி “ஜானு மா… நேத்து குடிச்சது…” என்று ஆரம்பித்திருக்க இடை புகுந்தான் மாதேஷ்.

“டேய் மம்மி எப்பவுமே என்னை அர்ச்சனை பண்ணாம அனுப்ப மாட்டாங்க… நீ சீக்கிரம் சாப்பிட்டு கிளம்பு… லேட் ஆச்சு… ஈவினிங்க் சாவுகாசமா உங்க ஜானுமா கிட்ட பேசுவயாம்…” என்று மாதேஷ் அவனை சொல்லவிடாமல் தடுத்து அவனை கிளப்ப நினைத்தான். 

“ஆமா ஆதி.. ரெண்டு பேரும் சீக்கிரம் கிளம்புங்க…” என்று பிரகாஷும் கூற அவர்கள் இருவரையும் பார்த்து கொண்டே சாப்பிட ஆரம்பித்திருந்தான் ஆதி.

 வீட்டை விட்டு வெளியே வந்த ஆதியோ “டேய் சாரிடா… என்னால தானே ஜானுமா உன்னை திட்டுனாங்க… மன்னிச்சுடு…” என்றான்.

“டேய்… விடுடா… மம்மி என்னை என்ன இன்னைக்கு புதுசாவா திட்டுறாங்க… இது எப்பவும் நடக்குற கதை தானே…” என்றான்.

“தப்பு செஞ்சு திட்டு வாங்குனா சரி… ஆனா… நீ…” என்று இழுத்தவன் “ஆமா நேத்து தண்ணி அடிச்ச எனக்கே கண்ணு சிவக்கல உனக்கு ஏன்டா இப்படி கண்ணு சிவந்துருக்கு… ஒருவேளை என்னை வீட்டுக்கு கொண்டு வந்து விட்ட பின்னாடி நீ தனியா வாங்கிட்டு வந்து தண்ணி அடிச்சயா…” என்று கேட்டானே ஒரு கேள்வி.

அந்த கேள்வியில் வண்டியை ஓட்டி கொண்டிருந்த மாதேஷோ வண்டியை உடனே ப்ரேக் போட்டு நிறுத்தி விட்டு அவனை திரும்பி முறைத்து கொண்டே “தண்ணி அடிச்சா மட்டும் தான் கண்ணு சிவக்கும்னு யாருடா சொன்னது?” என்றான்.

“பின்ன இல்லையா?”

“டேய்… கடுப்ப கிளப்பாத… நைட் ஃபுல்லா தூங்கவிடாம என்னை எழுப்பி புலம்பிட்டே இருந்துட்டு இப்ப ஒன்னுமே தெரியாதவன் மாதிரி பேசாத…”

“ஹேய்.. நைட் நான் எங்க புலம்பினேன்… அப்பாகிட்ட பேசினேன். அப்புறம் தூங்கினேன்… அது மட்டும் தான் நியாபகம் இருக்கு…”

“டேய்… என்னை மிருகமா மாத்திடாத… சொல்லிட்டேன். முதல் நாள் வேளைக்கு நல்ல மைன்ட்செட்டோட போகனும்னு ஆசைப்படறேன் அத கெடுத்தடாத… பேசாம மூடிட்டு வந்துடு…” என்று ஆதியை திட்டி கொண்டே வண்டியை எடுத்து கொண்டு சென்றான்.

முதல் நாள் அனுபவம் இவர்களுக்கு எப்படி இருக்க போகின்றதோ? 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: Content is protected !!
Scroll to Top