அத்தியாயம் 2

அத்யாயம் 2:
நந்தன் குடும்ப தொழில் நிறுவனத்தில் ஒரு நகை கடை மற்றும் துணி கடையும் உண்டு.அதற்காகவே ஶ்ரீநிதியை நகை வடிவமைக்கும் படிப்பைப் படிக்கக்கோரி கிருஷ் ந்ந்தன் வலியுறுத்தியுள்ளான்.

அதுமட்டுமில்லாமல் அவளை நிர்வாக படிப்பைப் படிக்கச் செய்து,இத்தகைய இரண்டு பெரிய நிறுவனத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பை ஶ்ரீநிதி மற்றும் ரிஷியிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது கிருஷின் எண்ணம்.ஆனால் இதைப்பற்றி அவர்களிடம் எடுத்துரைத்திருக்கவில்லை.தாத்தாவிடம் மட்டும் கலந்தாலோசித்து இந்த உறுதியான முடிவை எடுத்திருந்தான்.

ஶ்ரீநிதிக்கு நாளையிலிருந்து கடைசி வருட தேர்வு ஆரம்பிக்கயிருக்கிறது. அத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று தேர்வில் தேர்ச்சி பெறவே அவளை நல்லப்படியாக படிக்க அறிவுறுத்தினான். கிருஷ் இதனை வலுக்கட்டாயமாக ஶ்ரீயை செய்யக்கூறி வலியுறுத்த வில்லை.அவளுக்குமே இதை படிப்பதில் மிகுந்த விருப்பம்.அவளின் அன்னைக்கு சொந்தமான சொத்துகளை தான் ஶ்ரீநிதியை நிர்வகிக்கும்படியான முடிவை எடுத்திருந்தான் கிருஷ்.

ஶ்ரீநிதிக்கு நகை வடிவமைப்பு மற்றும் ஆடை வடிவமைப்பதில் விருப்பம் அதிகம் மட்டுமின்றி மிக அழகாகவும் ஒரு நேர்த்தியுடனும் செய்வதில் வல்லமை படைத்தவள்.அதைவைத்து தான் கிருஷ் அவளை பேஷன் டிசைனைங் படிப்பை தேர்ந்தெடுத்து படிக்க சொன்னான். அவளும் அதற்கு ஒப்புக்கொண்டு முழுமனதுடன் படித்து கொண்டு இருக்கிறாள்.

கிருஷினுடைய தம்பி ரிஷி மற்றும் மீராவும் அதே கல்லூரியில் எம்.பி.ஏ கடைசி வருடம் படிக்கிறார்கள்.ஶ்ரீயின் தங்கை வாணியும் அதே கல்லூரியில் தன் ஹீரோ அத்தான் கிருஷைப் பின்பற்றி பொறியியல் முதல் வருடம் படிக்கிறாள்.

வீட்டில் இரவு உணவை அனைவரும் சேர்ந்து தான் உண்ண வேண்டும் என்பது அந்த வீட்டின் எழுப்படாத விதிகளில் ஒன்று.

அப்பொழுது தான் வீட்டின் மக்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து பேசி கொள்வார்கள் என்று நந்தன் வகுத்த திட்டம் அது. ஏனெனில் காலையிலிருந்து எழுந்ததிலிருந்து எல்லாரும் வேலை அல்லது கல்லூரிக்கு செல்கின்றனர்.இரவு வேளை மட்டுமே அனைவரும் ஒரே நேரத்தில் வீட்டில் இருக்கின்றனர் என்பதால் இந்த ஏற்பாட்டை செய்தார்.

அனைவரும் இரவு ஒன்பது மணிக்கு உணவுக்கூடத்தில் இருந்த சாப்பாட்டு மேசையில் கூடினார்கள்.மேசையின் நடுவில் நந்தன் தாத்தா மற்றும் ராதை பாட்டியும் தம்பதி சகிதமாக கம்பீரமாக அமர்ந்து இருந்தனர்.அவர்களை சுற்றி மத்த குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்தனர்.அவர்களுக்கு இந்த வீட்டில் நீண்ட காலமாக பணியாற்றும் வள்ளியம்மா மற்றும் சுந்தரி உணவை பரிமாறினார்கள்.

பெரியவர்கள் அனைவரும் அவர்வர் போக்கில் பேசி கொண்டும்… இளைஞர் பட்டாளமும் அவர்களுக்குள் கேலி பேசிக் கொண்டும் சாப்பிட்டனர்.கிருஷ் அவன் தந்தை,தாத்தா மற்றும் பெரிய தந்தையிடம் தொழிலைப் பற்றி கலந்தாய்வு நடத்தினான்.

ராதை தான் “சாப்பிடும் போது…தொழிலைப் பத்தி பேசக்கூடாதுனு சொல்லிருக்கேனே…எத்தனை தடவை சொன்னாலும் கேட்கமாட்டிங்களா…?” என்றார் கணவனை முறைத்துகொண்டே.

“நல்லா கேளுங்கள் ராது…நான் கேட்க நினைக்கிறது எல்லாம் நீங்க கேட்கிறீங்க…?எப்ப பார்த்தாலும் பிஸினஸ்…பிஸினஸ்…பிஸினஸ் இதே மொக்கை தான்…” என்றவிட்டு சலிப்புடன்,

”அம்மாடி…என்னால முடியல…!” என்றாள் வாணி தலையில் கைவைத்து.

ஆனால் வாணி வெறும் மௌத் பீஸ் மட்டும் தான்.இதெல்லாம் ஶ்ரீநிதியின் வேலை.ஏனெனில் இங்கு தான் கிருஷ் இருக்கிறனே.அவனிடத்தில் உள்ள பயத்தினால் அவன் முன்னால் ஶ்ரீநிதியால் எதுவும் பேசமுடியாது.

வாணி கூறியதை கேட்ட அவளுடைய தந்தை விசு “என்னமா வாணி… பெரியவங்கிட்ட எப்படி பேசணும்னு…நான் சொல்லிருக்கேனே..?அப்புறம் எப்படி இப்படி பேசிற?…பாட்டிகிட்ட சாரி கேளு” என்றார் வாணியை அதட்டி.

“சாரி டாடி…சாரி பாட்டி” என்றவளின் முகம் சுருங்கிவிட்டது.

ஶ்ரீயிடம் குனிந்து “எல்லாம் உன்னால்தான் அக்கா”என்றாள் எரிச்சலுடன்.

“சாரிடி… எல்லாம் இந்த அத்தானால் வருது …அவர் இல்லானா 
நானே சொல்லிருப்பேன்” என்றாள் அவளும் பதிலுக்கு எரிச்சலாக.

ஏனெனில் இதையே ஶ்ரீநிதி கூறி இருந்தால் யாரும் எதுவும் திட்டமாட்டார்கள்…அவ்வளவு செல்லம்…ஒருத்தருக்கு தவிர.கிருஷ் தான் அது.அவன் மட்டும் தான் ஶ்ரீநிதியைத் திட்ட கூடிய ஒரே ஆள்.

ரிஷி தனது மனதில் ‘பயப்புள்ள எப்படி மாட்டி விடுது…ஒண்ணும் தெரியாத பாப்பா போட்டாலாம் தாப்பா என்ற மாதிரி…அண்ணன் முன்னாடி ஒண்ணும் தெரியாத மாதிரி இருந்துட்டு என்ன வேலை பண்ணுறா இந்த ஶ்ரீ’ என்று திட்டினான்.

கிருஷ் “மாமா… என்ன இது ?இவள் சின்ன பொண்ணு …அவளை எதுக்கு திட்டுறீங்க…!!” என்றான் வாணிக்கு சப்போர்ட்டாக.

கிருஷிடம் திரும்பிய விசு “நீ தான்…அவளுக்கு ரொம்ப செல்லம் குடுக்கிறடா” என்றார் சற்று கோபமாக.

“அதெல்லாம் இல்ல மாமா…அவள் சின்ன பொண்ணு” என்றான் மறுபடியும் வாணிக்கு சப்போர்ட்டாக.

நடுவில் “மாமா விடுங்கள்…வாணி இன்னும் பேபி தான்” என்றார் ஜானகி மகளை விட்டுகொடுக்காமல்.

விசு திரும்பி ஜானகியைப் பார்த்த பார்வையில் ஜானகி பயத்துடன் வாயை இறுக மூடிக்கொண்டார்.

தாத்தாவும் “விடுப்பா விசு…அவ இன்னும் சின்ன பொண்ணுதானே…!அவளுக்கு பெரியவங்க முன்னாடி எப்படி பேசணும்னு தெரியவில்லை…போக போக சரியாகிடும்” என்றார் வீட்டின் பெரியவராக.

“சரி தாத்தா…ஆனால் அவள் கிட்ட யாராவது எடுத்து சொன்னால்… தானே தெரியும்…ஏனெனில் இன்னொரு வீட்டிற்கு போக போறே பொண்ணு” என்றார் விசு பிடிவாதமாக.

“ஓகே விடுப்பா…அவளுக்கு இன்னும் அந்த வயசு வரலை…அந்த வயசு வரும் போது பக்குவமும் சேர்ந்து வந்திடும்..பிறகு தனியாக அவள்கிட்ட எடுத்து சொல்லி கொடு…புரிஞ்சிப்பா” என்றார் தாத்தாவும்.

இதையெல்லாம் பார்த்து கொண்டு இருந்த கிருஷ் தாத்தாவின் காதருகே சென்று “ரொம்ப நடிக்காதீங்க தாத்தா…நீங்க தான் வாணியிடம் பாட்டியை ராதுனு கூப்பிட சொன்னீங்க…இப்போது நீங்களே தனியாக போய் அட்வைஸ் பண்ண சொல்லுறீங்களா…?இது உங்களுக்கே நல்லா இருக்கா தாத்தா” என்று கண்சிமிட்டி குறும்புடன் வினவினான்.

அவன் தோளில் கைப் போட்டு “டேய் படவா…உனக்கு எப்படி தெரியும்டா…சரி தெரிஞ்சிருச்சி இல்லை…அதை விட்டுடூடா பேராண்டி…யார்கிட்டயும் சொல்லதே…தாத்தாவோட மானம் இதில் இருக்குடா…!” என்றார் அவரும் குறும்புடன்.

“அதுமட்டுமில்லாமல் இப்போ மாமாக்கிட்ட பேசிட்டு இருக்கும் போது…வாணிகிட்ட கண்ணை காமிச்சீங்களே…அதையும் பார்த்துட்டேன்” என்றான் இதழ்ப்பிரித்து சிரித்தவாறு.

‘அடியாத்தி…இது எப்போ நடந்தது…நமக்கு தெரியாமே…அப்ப இந்த குடும்பத்துல யாரையும் நம்ப முடியாது போலவே…நாம் இனிமே கண்ணுல வெளக்கெண்ண ஊத்திட்டு பார்க்கணும் போல… என்னமா நடிக்கிறாரு என் புருஷன்…ஆ…’ என்று அவர்களுக்கு அருகில் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் ராதை பாட்டி மனதிற்குள் புலம்பினார்.

“டேய்…ஏன்டா எல்லாத்தையும் பார்த்துவிடுவியா…?உனக்கு தெரியாமல் ஒண்ணும் பண்ணமுடியாது போல…”என்றார் போலியான முறைப்புடன்.கிருஷ் அவரைப் பார்த்து தலையசைத்து கன்னங்குழிய புன்னகைத்து ஒற்றை கண்சிமிட்டினான்.

தாத்தா சிரித்துவிட்டு சாப்பிட குனிந்தார்.அனைவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

தீடிரென்று தாத்தா நிமிர்ந்து “ஆமாம்…மீரா எங்கே காணோம்…” என்றார் மீராவின் தந்தை ராமிடம்.

அதேநேரம் ரிஷி ஶ்ரீயிடம் திரும்பி “ஹேய் ஶ்ரீ…மீரா மாட்டிக்கிட்டா…இன்னைக்கு அவள் தாத்தா கையில் குருமா தான்” என்று ஆர்ப்பரித்தான்.

‘உன் மீரா குட்டி தான்டா எருமை’ என்று வாணி மனதில் நக்கலாக கவுன்டர் கொடுத்தாள்.

அவன் கையை யாரும் அறியாமல் நறுக்கென கிள்ளிவிட்டு “ஏய்…ச்சு…சும்மா இருடா…அத்தான் பார்க்க போறார்…நீ மாட்டணும்னா…தனியாக மாட்டு…என்னை ஏன்டா ஹிட்லர் கிட்ட மாட்டிவிடுறே” என்றாள் ஶ்ரீ பதட்டத்துடன்.

ரிஷி அலறியதைப் பொருள் படுத்தாமல் சாப்பிடுவது போல் பாவனை செய்தாலும்,கிருஷின் கூரிய பார்வையில் இருவரும் மாட்டிக்கொண்டார்கள்.கிருஷ் ரிஷியை விடுத்து ஶ்ரீநிதியை கண்களால் எரிக்க,

“ஐய்யையோ போச்சு போச்சு… பார்க்கறரே… பார்க்கறரே… இன்னைக்கு நம்ப முடிஞ்சோம்” என்றாள் ஶ்ரீநிதி உதறலுடன்.ஶ்ரீநிதி திரும்பி ரிஷியை நன்றாக முறைக்க ‘கிள்ளுனது இவ…என்னை என்னவோ முறைக்கிறா…நல்லவனுக்கே காலம் இல்லைப்பா’ என ரிஷி தன்னை நொந்துக்கொண்டான்.

‘மாட்டினீங்களா…ஹாஹா…ஶ்ரீ,ரிஷி அத்தான் நீங்க இன்னைக்கு முடிஞ்சீங்க…’ என்று வாணி மனதிற்குள் கும்மாளமிட்டாள்.

ராம் தாத்தா கேட்ட கேள்விக்கு அதற்கு “அவள் காலேஜில் ஏதோ டூர்னு போயிருக்கா தாத்தா…!!” என்றார் மெதுவாக.

“நம்முடைய ரிஷி கூட மீரா காலேஜ் தான்…” என்று ராமிடம் கூறிவிட்டு

ரிஷியிடம் “நீ போகவில்லையா ரிஷி…?”என்று புருவத்தின் மத்தியில் முடிச்சிட குழப்பத்துடன் கேட்டார் தாத்தா.

ரிஷி அவளை மாட்டிவிடும் நோக்கத்துடன் “இல்லை தாத்தா…இது காலேஜில் கூட்டிட்டு போற டூர் இல்லை…அவள் பிரண்ட்ஸ் கூட போயிருக்கா தாத்தா” என்றான் வேண்டுமென்றே.

‘அடேய் கிராதகா…மீராகுட்டி மீராக்குட்டினு கொஞ்சுட்டு…போட்டு குடுக்கறே… இது என்னவோ வேணும்னு போட்டு கொடுத்தமாதிரி இருக்கு… இருடா மவனே…உனக்கு இருக்கு…மீரா அக்காக் கிட்ட போட்டு கொடுத்து….உன் கதையை முடிக்கலை…நான் வாணியில்லைடா’ என்று வாணி அவனின் ஒவ்வொரு பேச்சுக்கும் கவுன்டர் கொடுத்தாள் மனதில்.

“ராம் என்னப்பா…இப்படி அவளை தனியாக அனுப்பி இருக்கே…?” என்றார் வந்த கோபத்தை இழுத்து பிடித்து கொண்டு ராமிடம்.

அவர் திரும்பி தனது அன்னையை பதில் பார்வை பார்த்தார்.நீதான் பதில் சொல்ல வேண்டும் என்பதைபோல்.ராம் எவ்வளவு தடுத்தும்,குந்தவைதான் மீராவை சுற்றுலாவிற்கு அனுப்பி வைத்திருந்தார்.

அதற்கு குந்தவை “அப்பா என்னப்பா…?அவள் ஒண்ணும் சின்னப்பொண்ணு இல்லை…என் பேத்தி அமெரிக்காவில் படிச்சிட்டு வந்து இருக்கா…எதுக்காக பயப்படறீங்க…அவளை அவளே பார்த்து கொள்வாள்” என்றார் ராமிடம் கேட்ட கேள்விக்கு பதிலாக.

நந்தன் திரும்பி குந்தவையைப் பார்த்து கடும் கோபத்துடன் “நீதான் அவளுக்கு ரொம்ப செல்லம் குடுத்து கெடுக்கிறே…காலம் ரொம்ப கெட்டு கிடக்கு…எல்லாரும் ஒண்ணு போல இருக்கமாட்டாங்க குந்தவை… அதுவும் வயசுக்கு வந்த பொண்ணை வீட்டில் உள்ளவங்க துணையும் இல்லாமல் வெளியூர் அனுப்பி இருக்கே…அதுவும் நண்பர்களோடு…அப்புறம் பின்னாடி ஏதாவது பிரச்சினை வந்தால்…எனக்கு எதுவும் தெரியாது…நீதான் சமாளிக்கணும்…அப்பவும் இந்த குடும்ப கௌரவுத்துக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது… அதையும் மீறி ஏதாவது பிரச்சினை வந்தால் நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது”என்று குரல் உயர்த்தி கூறிவிட்டு கடைசியில் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கர்ஜித்தார்.

‘இப்போது காமெடி பண்ண தாத்தாவா இது…உங்களுக்குள்ள இப்படி ஒருத்தர் இருக்காங்களா…’ என்று கிருஷ் மனதிற்குள் நினைத்தான்.

இதுவரை தாத்தாவிடம் இதுப்போலான கோபத்தை யாரும் பார்த்தது இல்லை…அவர் எப்போதும் ஒரு வெள்ளை வேட்டி…வெள்ளை ஜிப்பா…நெற்றியில் திருநீறு…பார்க்க அவ்வளவு சாந்தமாக இருப்பார்.அவர் இவ்வளவு கோபப்படுவார் என்று அனைவரும் இன்னைக்கு தான் பார்க்கின்றனர்.ஆதலால் எல்லாரும் ஒரு நிமிடம் பயந்துவிட்டனர்.அவருக்கு குடும்ப கௌரவம் ரொம்பவும் முக்கியம்.அதனால் தான் இன்று இவ்வளவு கோபத்தைக் காட்டினார்.

அதில் பயந்து “சா…சாரிப்பா…இனிமே இந்தமாதிரி நடக்காமல் பார்த்துகிறேன்…இப்பவும் எந்த பிரச்சினையும் வராது… நான் பா…பார்த்துக்கிறேன்” என்றார் குரலில் சிறு நடுக்கத்துடன் குந்தவை.

ரகுநந்தன் “அப்பா கோபப்படாதீங்க…உங்க உடம்புக்கு நல்லது இல்லை… இனிமே இந்தமாதிரி நடக்காமல் அக்கா பார்த்துக்கொள்வாள்” அக்காவை ஒரு பார்வைப் பார்த்துக்கொண்டே சமாதானமாக.

ராதை பாட்டியும் அவர் கையை ஆறுதலாக அழுத்தி கொடுத்தார்.

அதில் கொஞ்சம் கோபத்தைக் குறைத்து ஶ்ரீநிதி மற்றும் வாணியை கண்களால் காட்டி “இவங்களும் உன் பேத்திகள் தான்… இவங்களெல்லாம் இப்படி இல்லையே…என்னை கேட்காமல் எங்கேயாவது போயிருக்காங்களா…?” என்றார் கேள்வியாக.

அதில் எரிச்சலான குந்தவை “இவங்களும் அவளும் ஒன்றா?அவள் அமெரிக்காவுக்கு போய் படிச்சிட்டு வந்து இருக்கா…இவளுங்களாம் இங்கேயே இருந்து குண்டு சட்டியில் குதிரை ஒட்டறாளுகள்… இவங்களைப் போய் மீராக்கூட ஒப்பிடுறீங்க…!!” என்று பயத்திலிருந்து தன்னை மீட்டு எடுத்து பதில் அளித்தார் தைரியமாக.

ஏனெனில் அவரின்ஒரே ஒரு ஆசை பேத்தியாயிற்றே மீரா.அவளை திட்டினால் பொறுத்துக்கொள்வாரா என்ன…?

இப்போது வாணி திரும்பி குந்தவையை முறைத்தாள்.ஶ்ரீநிதிக்கும் எப்படி பேசுகிறார் பார் என்று நினைத்து…ஒருமாதிரி ஆகிவிட்டது.அவளுக்கு மட்டும் இல்லை குடும்பம் மொத்தத்திற்கும் அதே எண்ணம் தான்.விசுவிற்கு முகம் சுருங்கிவிட்டது.

அதனைப்பார்த்த தாத்தா “போதும்…!அதையே சொல்லாதே குந்தவை…!!எங்க போய் படிக்கிறோம் என்றது முக்கியம் இல்லை…எப்படி படிக்கிறாங்கனுறதுதான் முக்கியம்…அதுவும் ரிஷியும் அமெரிக்கா போனதால் தான்…மீராவை நான் அவனுடன் படிக்க அனுப்பினேன்… இல்லையானால் நான் அனுப்பி இருக்கமாட்டேன் அதனால் அவள் அமெரிக்கா போனானு இனிமே என்கிட்டபெருமை பேசதே…என்ன புரிஞ்சிதா…?” என்றார் பொறுமையை இழுத்துப்பிடித்து.

குந்தவை தலையாட்டியதை ஏற்று “ஓகே இதுக்கு மேல மீரா உன் பொறுப்பு…எதுவும் பிரச்சினை வராமல் பார்த்துக்கோ…!!இருந்தாலும் அவள் வந்த உடனே என்னை பார்க்க சொல்லு” என்றார் மறுபடியும் கடுங்கோபத்துடன்.

இந்தமுறை ராம் அம்மாவிற்கு பதிலாக “சரி தாத்தா…நான் மீராக்கிட்ட சொல்லுறேன்”என்றார் குறுக்கே புகுந்து.

அதன்பிறகு ராம் தனது அம்மாவிடம் “அம்மா… தாத்தா தான்… அவ்வளவு தூரம் சொல்லுறாங்க தானே…நீ இதோடு இந்த பேச்சை விட்டுவிடு…!!” என்று விட்டு தாத்தாவிடம்,

“இனிமே இந்த மாதிரி நடக்காது…!!” என்று வாக்கும் கொடுத்தார்.சரியென்று தாத்தாவும் அந்த பிரச்சினையை அத்தோடு விட்டு விட்டார்.

“அக்கா இந்த அப்பாயி…எப்பப் பார்த்தாலும் நம்மை மட்டம் தட்டுறதை…வேலையா வச்சிருக்கு அக்கா” என்று வாணி கோபமாக ஶ்ரீயின் காதில் கிசுகிசுத்தாள்.

ஶ்ரீ மெல்லிய குரலில் “அப்படி இல்லை வாணி ,அக்கா அமெரிக்கா போயிட்டு வந்தாள்…அதனால் கொஞ்சம் அக்காவைப் பெருமையாக பேசுறாங்க…அவ்வளவுதான்…மற்றபடி நம்பளை மட்டம் தட்ட இல்லை…” அவளுக்கு பொறுமையாக எடுத்து கூறி,

“நாளைக்கே நீ ஏதாவது செய்து காட்டு…அப்பாயி உன்னைப் பற்றி பெருமையாக எல்லார்கிட்டயும் சொல்லுவாங்க” என்றாள் அவள் ஆதங்கத்தை மறைத்து.

“அதுக்கு நாமும் அமெரிக்கா  போய் தான் நம் திறமையை காட்டும்மாக்கா?”என்றாள் உதட்டை சுழித்து நக்கலாக.

ஶ்ரீநிதி வாணியைத் திரும்பி பார்த்து இல்லை என தலையை ஆட்டிவிட்டு “தாத்தா சொன்னதை கேட்டியா…இல்லையா…?

தலையாட்டுவிட்டு “புரியுது ஆனால்…” என்று தயக்கத்துடன் இழுத்து

“அக்கா…நீ பிளஸ்டூ படிக்கும்போது மாநிலத்திலேயே முதலாவதாக வந்ததை…அப்பாயி ஒண்ணும் அதை பெரிய விசயமாக எடுத்து… உன்னை வாழ்த்தவில்லை அக்கா…அதையும்விட அமெரிக்கா ஒண்ணும் பெருசுயில்லை” என்று அவளும் ஆதங்கத்துடன் கூறினாள்.

ஶ்ரீநிதிக்கும் உள்ளுக்குள் அந்த எண்ணம் உள்ளதுதான்.இருந்தாலும் தங்கை கோபத்தை மனதில் வைத்து “அப்படி இல்லைம்மா… அவங்களுக்கு இதெல்லாம் பெரிய விசயமாக தெரிந்து இருக்காது…அமெரிக்காதான் பெரிய விசயமாக இருக்கும்” என்றாள் குழந்தைக்கு சொல்லுவதுபோல்.

“போக்கா…நீ எப்ப பார்த்தாலும் அப்பாயிக்கு தான் சப்போர்ட் பண்ணுறே” என்றாள் மனதாங்கலுடன்.

வாணியின் கையை ஶ்ரீநிதி சமாதானமாக அழுத்தி கொடுத்தாள்.ரிஷி அந்தநேரம் “அத்தை பத்தி உங்களுக்கு தெரியாதா…அவங்க எப்பவும் இப்படிதானே…இது உங்களுக்கு தெரிஞ்ச விசயம் தானே…அப்புறம் எதுக்கு இரண்டு பேரும் ஃபில் பண்ணிறீங்க…சில் பட்டீஸ்” என்று வாணி மற்றும் ஶ்ரீயிடம் கூறினான்.வாணி திரும்பி ரிஷியை கண்களால் பொசுக்கினாள்.

‘இவள் எதுக்கு இப்போ காளி ஆத்தா அவதாரம் எடுக்கிறாள்…நான் அப்படி என்ன சொன்னேன்…’ என்று ரிஷி திருதிருவென்று முழித்தான்.

அவனை அதிலிருந்து காப்பாற்றவென அனைவரும் சாப்பிட்டு முடித்துவிட்டு இரவு வணக்கம் கூறி அனைவரும் அவர்வர் அறைக்கு சென்றனர்.

ரிஷி ‘அப்பாடா நான் எஸ்கேப்’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

ஶ்ரீநிதியும் மெதுவாக எழுந்து சோகமாகச் சென்றாள்.அதனை 
கிருஷ் பார்த்துவிட்டு விசுவிடமும் ஜானகியிடமும் கண்களால் வாணி மற்றும் ஶ்ரீயைக் காட்டினான்.அவர்களைச் சமாதானம் படுத்தக்கோரி.

இவ்வளவு நேரம் தனது அன்னையைப் பற்றி நினைத்து பிள்ளைகளைப் பார்க்கவில்லை என்று குற்றவுணர்ச்சியுடன் கிருஷைப் பார்த்து ‘நான் பார்த்துகிறேன்’ என்பதை போல் கண்ணை மூடி திறந்தார் விசு.

அவர் ஜானகியை அழைத்து சென்று வாணியிடம் என்ன பிரச்சினை என்று விசாரித்தனர்.அவர்களும் பார்த்து கொண்டுதானே இருந்தனர் குந்தவை பேசியதை.அவர்களிடம் அவள் எல்லாவற்றையும் சொன்னாள்.

“நீ அதைப்பற்றி கவலைப்படாதே வாணி…!!அப்பாயிக்கு முதல் பேத்தி மேல் கொஞ்சம் பாசம் அதிகம்…அதனால்தான் இப்படி…அதற்காக உங்கள்மேல் பாசம் இல்லையென்று அர்த்தமில்லை…நீ எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒழுங்கா படிக்கணும்…” என ஆறுதல் கூறியவர் அவளின் முகம் இன்னும் தெளிவடையாமல் இருப்பதை கண்டு “வாணி பேபி அம்மாவை நம்பிறியா…இல்லையா…?” என்று ஜானகி கேட்டார்.

‘ச்சு’ என்று வாணி சலித்தப்படி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

”வாணிம்மா இங்க பாரு…குடும்பத்தில் எல்லாரும் எவ்வளவு பாசமாக இருக்கறாங்க.கிருஷ் கூட உனக்கு எவ்வளவு சப்போர்ட் அன்ட் என்கரேஜ் பண்ணுகிறான்…இப்பக்கூட என்கிட்ட உனக்கு சப்போர்ட் பண்ணான்….அதைவிட அப்பாயி உங்களை அப்படி பேசிட்டாங்கனு… இதை பெருசா எடுத்து… வருத்தப்படக் கூடாது…சரியாம்மா” என்றார் விசு.

உடனே கொஞ்சம் தெளிந்து “யெஸ் டாட்…நான் ஏன் கவலைப்படணும்… நீங்கயெல்லாம் எல்லாம் இருக்கும்போது” என்றாள் புன்னகையுடன்.

“குட்…தட்ஸ் மை பேபி” என்று கட்டி அணைத்து இருவரும் விடுவித்தனர்.

“ஓகே பேபி… அதேமாதிரி உங்க அக்காவையும் சமாதானம் பண்ணி வச்சிட்டு வரோம்…நீ கொஞ்சம் அதுவரைக்கும்…ஹாலில் வெயிட் பண்ணும்மா” என்றார் விசு கனிவாக.

“டாட்…அக்கா என்கிட்ட அப்பாயிக்கு சப்போர்ட் தான் பண்ணினாள்.அப்புறம் என்னாப்பா…?” என்றாள் தந்தையைப் புரியாமல் பார்த்து.

“சொன்ன கேட்கணும் குட்டிம்மா” என்று சிறு அழுத்தத்துடன் கூறினார்.அந்த குரலை மீற முடியாமல் வாணி அங்கிருந்து சென்றாள்.

“ஏன் மாமா…?இவ்வளவு கடினமாக அவள்கிட்ட பேசினீங்க” என்றாள்.

“இல்லையென்றால்… கேள்விமேல் கேள்வி கேட்டு குடைவாள்… அப்புறம் அவளுக்கு பதில் சொல்லமுடியாது” என்றார் விசு.

“அதுவும் சரி மாமா…வாங்க போகலாம்” என்றார் ஜானகி.

விசுவும் ஜானகியும் சென்றபிறகு கிருஷ் வாணியிடம் என்ன நடந்தது என்றவாறு பேச்சு கொடுத்தான்.வாணி அவளுக்கும் ஶ்ரீக்கும் நடந்த பேச்சு வார்த்தையைப் பற்றி கூறினாள்.

கிருஷ் ‘பரவாயில்லை ஶ்ரீநிதி…குந்தவை அத்தை…இவங்க இரண்டு பேரையும் அவ்வளவு பேசியும்…அவங்களுக்கு சப்போர்ட் பண்ணி தான் பேசி இருக்காள்…இதெல்லாம் மனப்பக்குவம் இருந்தால் மட்டுமே இப்படி பேச முடியும்…’ என்று ஶ்ரீநிதியைப் பெருமையாக மனதில் நினைத்துவிட்டு வெளியில் வாணியைச் சமாதானம் படுத்திவிட்டு சென்றான்.

இருவரும் அவள் அறைக்குள் சென்றனர்.அவர்கள் நினைத்தது போல் அவள் சோகமாக விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தாள்.அவள் அருகில் சென்று அவள் தலையில் கை வைத்து “ஶ்ரீ என்னம்மா…?” என்றார் ஜானகி உள்ளத்தை உருக்கும் குரலில்.

ஜானகிக்கும் விசுவுக்கும் ஶ்ரீநிதியின் மேல் பாசம் அதிகம்.அவர்கள் உயிரே அவள் என்கிற அளவுக்கு பாசம் அதிகம்.அவள் இந்த அளவுக்கு வருத்தப்படுகிறாள் என்பதை நினைக்கும்போது ஜானகிக்கு கண் கலங்கியது.

முதலில் ஶ்ரீ…அவர்கள் இந்த அறைக்குள் வந்ததை கூட அறியாமல்… விட்டத்தை வெறித்திருந்தாள்.அவர் ஶ்ரீ என்று அழைத்தவுடன், அதிலிருந்து மீண்டு “என்னம்மா” என்றாள் மெதுவாக பார்வையைத் அவர்கள் மீது திருப்பி.

அம்மா கண்கலங்கியதைப் பார்த்தவுடன் அவசரமாக “அச்சோ என்னம்மா அச்சு…?ஏன் கண்ணு கலங்குது?” என்றபடி கண்களைத் துடைத்துவிட்டாள்.

“ஶ்ரீம்மா…வாணி எல்லா விவரமும் சொன்னாள்…அதைக்கேட்டு இங்கு வந்துப்பார்தால்… நீ விட்டத்தை வெறித்துக் கொண்டு இருந்தியா… அதைப்பார்த்தவுடன் கண் கலங்கிவிட்டது” என்றார் சிறு தேம்பலுடன்.

“ச்சு… ஒண்ணும் இல்லைம்மா…கண்ணைத்துடை…நான் நல்லாதான் இருக்கேன்” என்றாள் வரவழைக்கப்பட்ட சிறு முறுவலுடன்.

அதற்குள் சிறு வருத்தம் இழையோடியதைப் பார்த்து…விசு குறுக்கே புகுந்து “உன்னை அப்பாயி அப்படி பேசியதற்காக வருந்ததே கண்ணம்மா…நீ வாணிக்கிட்ட அப்பாயிக்கு அவ்வளவு சப்போர்ட் பண்ணி பேசிவிட்டு…இங்க வந்து ஏன் வருத்தப்படறேம்மா…?”என்றார் அவளை அணைத்து தந்தையாக.

ஶ்ரீயும் சாதாரண குரலில் “நான் அதற்குயெல்லாம் வருத்தப்பட இல்லைப்பா…போனவாரம் லட்சுமி ஆன்ட்டி ரொம்ப வருஷம் கழித்து வந்தாங்க தானே…

அவங்க உங்க பேத்திங்க எங்கே…?என்று அப்பாயிகிட்ட கேட்டாங்கப்பா…?அப்போ நான் அந்த பக்கம் வந்துட்டு இருந்தேன்… அப்பாயிவும் என்னைப்பார்தாங்க…ஆனா எதுவும் சொல்லாமல் மீரா அக்காவை மட்டும் கூப்பிட்டு காட்டி இவள் என் பேத்தி மீரா… அமெரிக்காவில் படித்துவிட்டு வந்து இருக்காள்…இங்க காலேஜில் படிக்கிறாள் என்றார்.

அதன்பிறகு லட்சுமி ஆன்ட்டி என்னை பார்த்து நான் யாருனு…? கேட்டாங்க அப்பாயிக்கிட்ட…

அதற்கு அப்பாயி இவளா…?என் இரண்டாவது பையன் விசு இருக்கான்தானே…அவனுடைய பொண்ணுனு சொன்னாங்கப்பா.

அதான் ஏன்ப்பா அப்பாயி எங்களை பேத்தினு கூடச் சொல்லமாட்டீகீறாங்க…அவங்களுக்கு என்னைப் பிடிக்காதா அப்பா?” என்று கூறி அழுகையில் அவள் உதடு துடிக்க விசுவின் மடியில் தலைவைத்து படுத்து கொண்டாள்.

உடனே இருவரும் அவசரமாக “அப்படியெல்லாம் இல்லை பேபி” என்றனர்.

“அவங்களுக்கு முதல் பேத்திமேல் கொஞ்சம் பாசம் அதிகம் கண்ணம்மா…அதனால் தான்!!.நீ இதை பெரிய விசயமாக எடுத்துக்காதே பேபி… அதுவுமில்லாமல் நீ என்னுடைய பொண்ணு… அப்படினு லட்சுமி ஆன்ட்டி தெரிந்தக்கொள்ளணும்னு கூடச் சொல்லி இருக்கலாம்” என்று இருவரும் ஒருசேர கூறினார்கள்.

“அப்பா…இதுக்கூட பரவயில்லைப்பா…லட்சுமி ஆன்ட்டி அன்றைக்கு அப்பாயி என்னை விசுவுடைய பொண்ணுனு சொன்னப்பிறகு…

ஓ… நம்ப விசு அண்ணன் பொண்ணா ரொம்ப லட்சனமான பொண்ண இருக்கு …என்று என்னை அருகில் அழைத்து மகாலட்சுமி மாதிரி இருக்கேம்மா… என்று நெற்றியில் முத்தம் குடுத்தாங்க.

உடனே மீரா அக்காவின் முகம் சுருங்கிருச்சி…அதைப்பார்த்த அப்பாயி என்ன லட்சுமி இவளைப்போய் மகாலட்சுமினு சொல்லுறா?உனக்கு என்ன கண்ணு தெரியலையா லட்சுமி…?நீ முன்ன பின்ன மகாலட்சுமியை நேரில் பார்த்து இருக்கியா…இல்லையா…??என்று சிரிச்சிட்டு… என்னைப்பார்த்து போய் லட்சுமிக்கு ஏதாவது குடிக்கக் கொண்டு வானு சொல்லுறாங்கம்மா…

நான் என்ன வேலைக்காரியா…?அவங்க என்னை கொஞ்சியதால்… உடனே அப்படி சொல்லுறாங்கப்பா,அதைப்பார்த்து அக்கா சிரிக்கிறா அப்பா.இதையே மீரா அக்காக்கிட்ட லட்சுமி ஆன்ட்டி அப்படி சொல்லிருந்தா…இதனை மீரா அக்காக்கிட்ட சொல்ல முடியுமா… அப்பாயினால்…?.அவ்வளவுதான் வீட்டையே இரண்டு ஆக்கிடுவா.இப்ப சொல்லுங்கப்பா,நீயும் சொல்லும்மா அப்பாயிக்கு ஏன் என்னைப் பிடிக்கலை…??” என்று அழுகையும் கோபமுமாய் தனது பெற்றோரிடம் கேட்டாள் ஶ்ரீநிதி.

ஜானகிக்கும் அழுகை வந்தது.உடனே “ச்சு…எதுக்கு ரெண்டு பேரும் அழுகறீங்க…இங்க பாரு கண்ணம்மா…அம்மாவுக்கு கோபம் உன்மேல் இல்லை…என்மீதுதான் அம்மாவிற்கு கோபம் அதை உங்கள் மீது காட்டுகிறார்” என்றார் பொறுமையாக எடுத்துக்கூறி.

ஶ்ரீநிதி தந்தை என்ன சொல்லுகிறார் என்று விசுவின் மடியிலிருந்து தலை நிமிர்த்தி பார்க்க,ஜானகி இவர் ஏதாவது உளறிக் கொட்டப் போகிறார் என்று பயத்துடன் பார்த்தார்.

விசு ஜானகியை ஒரு பார்வைப் பார்த்து கொண்டே ஶ்ரீநிதியிடம் “அம்மா சொல் பேச்சை சின்ன வயதிலிருந்து நான் கேட்கவில்லை…அதனால் தான் அம்மாவிற்கு என்மீது கோபம்டா” என்றார்.அவர் கூறக் கூற ஜானகிக்கு உடல் விறைக்க ஆரம்பித்தது.

“என்னப்பா …நீங்க ஏன் அப்பாயி பேச்சைக் கேட்கலை…” என்றாள் புரியாமல்.

“அம்மாவைக் கல்யாணம் பண்ணிட்டு மாமாவுடையத் தொழிலைப் பார்க்க சொன்னாங்க…நான் முடியாதுனு சொல்லிட்டு டாக்டருக்கு படித்தேன்.அதனால் என்மேல உள்ள கோபத்தை உங்கமேலே காமிக்கிறாங்கடா…நீ இதைப் பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளாதே கண்ணம்மா” என்றார் மனைவி மற்றும் மகளைப் பார்த்து.அதன்பிறகு தான் ஜானகி மூச்சுவிட்டார்.

“சரிப்பா ஆனால் என்மேல் எதுக்குப்பா கோபத்தைக் காமிக்கணும்… நான் என்ன பண்ணினேன்”என்றாள் மீண்டும் ஒரு பிடிவாத்த்துடன்.

“என்னை சின்ன வயசிலிருந்தே பிடிக்காது.நான் அம்மா பேச்சைக் கேட்கவே மாட்டேன்.அண்ணன்தான் எப்பவும் செல்லம்…சோ… என்னைப் பிடிக்காதனால் என் பிள்ளைகளான உங்களிடம் அப்படி நடந்து கொள்கிறார் அவ்வளவுதான்” என்றார் விரக்தி கலந்த உண்மையான வருத்தத்துடன்.

“நீ இதைப்பற்றி கவலைப்படாதே பேபி,அப்பாதான் அவ்ளோ சொல்லுறாங்கதானே” என்றார் ஜானகி அவளின் தலையை வருடிக்கொடூத்து சமாதானப்படுத்தி.

அப்போதும் சமாதானமாகமல் “ஓகே அம்மா…ஆனால் அதற்காக எங்ககிட்ட இப்படி”என்று அவள் ஆரம்பிக்கும்போதே…

விசு குறுக்கே புகுந்து “கண்ணம்மா…இதை இப்போதே விட்டுவிடு…உனக்கு இத்தனை பேர் இருக்காங்க…நாங்க உனக்கு எப்பவும் சப்போர்ட் பண்ணுவோம். கிருஷ்,தாத்தா இருக்காங்க… அவங்களும் உனக்கு சப்போர்ட்  பண்ணுவாங்க…சரியாம்மா…?” என்றார் விசு.

உடனே ‘அத்தான் சப்போர்ட் எனக்கு பண்ணிட்டாலும் பூமி இரண்டாகப் பிளந்திடும்’ என்று முணுமுணுத்தவள் இப்போது சிறிது தெளிந்திருந்தாள்.

“ஓகே அப்பா,ஐயம் கிளியர்”என்று முழுமையாக சமாதானம் ஆனதுபோல் சிரித்து மலுப்பினாள்.

அவர்களும் “ஓகே பேபி…நீ தூங்கு குட்நைட்” என்று கூறினார்கள்.

“அம்மா ஒரு நிமிடம்…நான் உங்க மடியில் படுத்துக்கட்டா…?” என்று மெதுவாக கேட்டாள் தாயை ஏறிட்டவாறு.

அதிலே அவர்களுக்கு தெரிந்துவிட்டது அவள் இன்னும் அதிலிருந்து மீளவில்லை என்று,இருந்தும் “வா குட்டிம்மா…படுத்துக்கோ” என்று கூறி கட்டிலில் அமர்ந்தாள் ஜானகி.

ஶ்ரீநிதி அவர் மடியில் தலைவைத்து படுத்து “அம்மா!எனக்கு நீ சின்ன வயசுல ஒரு பாட்டு பாடுவியே அதைப் பாடும்மா…பிளீஸ்” என்றாள் கெஞ்சல் குரலில்.

ஜானகியும் சரியென்று தலையாட்டிவிட்டு பாட ஆரம்பித்தார்.

“குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கண்ணா 
குறை ஒன்றும் இல்லை கோவிந்தா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா 
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு 
குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேசன் நின்றிருக்க 
வேண்டியது வேறில்லை மறை மூர்த்தி கண்ணா 
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா

திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
உன்னை மறை ஓதும் ஞானியர் மட்டுமே காண்பார் 
என்றாலும் குறை ஒன்றும் எனக்கில்லை கண்ணா…” என்று பாடிக் கொண்டு இருக்கும்போதே ஶ்ரீநிதி நன்றாக தூங்கிவிட்டாள்.

அதன்பிறகு தூங்கும் மகளை ரசித்துவிட்டு விசு மெதுவாக வெளியேறினார்.நடுவில் வாணி அந்த அறையில் வந்து ஜானகியின் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு குட்நைட் கூறி தன் மெத்தையில் தூங்கிவிட்டாள்.ஜானகி ஶ்ரீநிதியின் தலையை எடுத்து தலையணையில் வைத்து,விளக்கை அணைத்துவிட்டு தன் அறைக்கு தூங்க சென்றார்.

அவர் சென்ற சில நிமிடங்களில் ஒரு உருவம் அவள் அருகில் வந்து தலையைத் தடவியது.உடனே கண்ணைத் திறக்காமல் ஶ்ரீ…அவளின் தாய் ஜானகி என்று நினைத்து “அம்மா!கிட்டவா”என்று அழைத்து கன்னத்தில் முத்தமிட்டு குட்நைட் என்றாள்.உடனே அந்த உருவம் முதலில் அதிர்ந்து பின்பு சிரித்துவிட்டு சென்றது.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top