அத்தியாயம் 40
மயக்கத்தில் இருந்து மெல்ல விழிகளை திறந்தாள் பிருந்தா.
தலையோ விண் விண்ணென்று வலிக்க, “ஸ்ஸ்…” என்று நெற்றியை பற்றிக்கொண்டே இமைகளை திறந்து பார்வையை சுழல விட்டவளுக்கோ ஒரு கணம் தான் எங்கு இருக்கிறோம் என்றே தெரியவில்லை.
முகத்தில் விழுந்து கிடந்த முடிகளை மெல்ல ஒதுக்கி விட்ட படி, மெதுவாக எழுந்து அமர்ந்தவள், அங்கே காற்றில் கலந்து வந்த சிகரெட் வாசனையில் தன்னையும் மீறி இரும ஆரம்பித்து விட்டாள்.
அவள் சத்தத்தில் ஜன்னலின் அருகில் நின்று புகைத்து கொண்டிருந்த சிம்மனும் தன் பார்வையை அவள் புறம் திருப்ப, இவளோ இருமிய படியே, மெல்ல அவன் இருந்த திசையை பார்த்தாள்.
அங்கே நின்று கொண்டிருந்தவனை கண்டதுமே சில நிமிடங்களுக்கு முன்னர் நடந்த அனைத்துமே அவள் நினைவுக்குள் வர, கடைசியாக விஷ்வாவின் கையில் இருந்த துப்பாக்கியின் சத்தம் மட்டுமே அவளுக்குக் கேட்டது.
அதன் பிறகு என்ன நடந்தது என்றே அவளுக்கு நினைவில் இல்லை.
நடந்த அனைத்துமே ஏதோ கனவு போல தோன்ற, “சி… சிம்மா உங்… உங்களுக்கு எதுவும் அ… ஆகலையே!” என்று பதறிப் போய் எழுந்தவள், அவசரமாக அவனை நெருங்கி வர போக,
இன்னும் மயக்கம் முழுமையாகத் தெளியாததால், இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே அவள் கால்கள் தடுமாறி விழப் பார்க்க, அடுத்த கணமே அவளின் இடையை பற்றி கீழே விழாமல் பிடித்திருந்தது அவனின் கரங்கள்.
“பிருந்தா என்ன பண்ணுற நீ? இப்போ தான் மயக்கம் தெளிஞ்சிருக்கு! அதுக்குள்ள இப்படி ஓடி வர?” என்று கடிந்து கொண்டே, அவளை அழைத்து வந்து அங்கிருந்த இருக்கையில் அமர வைக்க,
பிருந்தாவோ அதை எல்லாம் பொருட்படுத்தாமல், “சிம்மா… உங்களுக்கு எதுவும் ஆகலையே! நீங்க… நீங்க நல்லா தானே இருக்கீங்க?” என்று அவனை ஆராய்ந்த படியே கேட்க,
அவளின் பதட்டத்தை புரிந்து கொண்டவனோ, “பேபி ரிலேக்ஸ்… எனக்கு ஒன்னும் ஆகலடி. ஐ அம் பெர்ஃபெக்ட்லி ஆல்ரைட்!…” என்றான் அவளுக்காக புன்னகையை வரவழைத்த படி.
பெண்ணவளுக்கோ அந்த வார்த்தையை கேட்டதும் தான் மூச்சே வந்தது போல் இருந்தது.
அவள் கண்களோ கலங்கிப் போக, சட்டென அவனை அணைத்துக் கொண்டவள், “ந… நான் ரொம்ப பயந்து போயிட்டேன்…. தெரியுமா…” என்று தழு தழுத்த குரலில் சொல்ல,
அவளின் அணைப்பில் ஆடவனின் இதழ்கள் மெல்ல விரிந்து கொண்டது.
“பேபி எனக்கு எதுவும் ஆகலடி… முதல்ல இப்படி குழந்தை மாதிரி அழுறதை நிறுத்து.” என்றவன் அவள் கண்களில் வழிந்த கண்ணீரை தன் பெரு விரல் கொண்டு துடைத்து விட்டான்.
சில நொடிகள் அவனை அணைத்த படி இருந்தவளுக்கு விஷ்வாவின் நினைவு வர, சட்டென அவனை விலகி, “ஆமா என்ன நடந்தது? விஷ்வா உங்களை தானே ஷூட் பண்ணாரு? அதுக்கப்புறம் என்னாச்சு?” என்று சிறு பதட்டத்துடனே கேட்க,
அவனோ இருக்கையில் சாய்ந்து அமர்ந்தவன், தனது பின்னங்கழுத்தை வருடிய படியே, “எதுவும் ஆகல!” என்றான் இரண்டே வார்த்தையில்.
ஆனால் அவளுக்கு அது நம்பும் படியாக இருக்கவில்லை.
அவன் ஏதோ மறைக்கிறான் என்று தோன்றியது.
குழப்பமாக அவனை பார்த்தவள், “நீங்க ஏதோ மறைக்கிறீங்க! நான் மயங்கி விழுந்ததுக்கு அப்புறம் என்ன நடந்தது? விஷ்வா மறுபடியும் ஏதாவது பிரச்சனை பண்ணாறா? அந்த… அந்த புல்லட்ல இருந்து எப்படி தப்பிச்சீங்க?” என்று ஒரே நேரத்தில் பல கேள்விகளை அவள் அடுக்கிக் கொண்டே போக,
அவனுக்கு தான் எதற்குமே பதில் சொல்லும் எண்ணம் சுத்தமாக இருக்கவில்லை.
‘டாம்… இவ கேள்வி கேட்டே கொன்னுடுவா போலயே!’ என்று மனதுக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தவனுக்கு அப்போது தான் தன் தொடைப் பகுதியில் ஏதோ அழுத்துவது போல தோன்றியது.
அவனும் தன் பார்வையை திருப்பிப் பார்க்க, அவளின் கரங்கள் தான் பேச்சு வாக்கில் தன்னையும் அறியாமல் அவனின் தொடைகளை அழுத்திக் கொண்டிருந்தது.
அதை கண்டவன் புருவங்கள் இடுங்க, மெல்ல தன் விழிகளை உயர்த்தி அவளை நோக்கினான்.
பிருந்தாவோ எதையும் கவனிக்காமல் பட படவென பேசிக் கொண்டிருக்க, அவளின் இந்த அதீத நெருக்கத்திலும், தீண்டலிலும் அவனுக்குள் உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் மெல்ல வெளியில் வரத்துடித்தது.
அவள் தள்ளி இருந்தாலே அவனால் தன்னை கட்டுப்படுத்த முடியாது. இப்போது இவ்வளவு நெருக்கத்தில் உரசிக் கொண்டு இருக்கிறாள். எப்படி தன் உணர்வுகளை கட்டுப்படுத்துவான்?
‘இப்போ உன்ன எப்படி அடக்குறேன் பாரு’ என்று மனதுக்குள் நினைத்து கொண்டே, தன் கரத்தை அவளின் மெல்லிய கரத்தின் மீது பதிக்க, அவன் தொடுகையில் பெண்ணவளின் பேச்சு சட்டென தடைப்பட்டது.
அவளோ மெல்ல தன் விழிகளை சுழற்றி அவனின் கை இருந்த திசையை பார்த்தவளுக்கோ, தூக்கி வாரிப் போட்டது.
அப்போது தான் அவள் எந்த இடத்தில் கையை வைத்துக்கொண்டு இருக்கிறாள் என்றே அவளுக்குப் புரிந்தது.
‘அடியாத்தே’ என்று வாய்க்குள் முணு முணுத்தவளுக்கோ சங்கடமாகிப் போனது.
சற்று தடுமாறிய படியே, “ச… சாரி” என்றவள், அவசரமாக அவனிடம் இருந்து தன் கையை உறுவப் பார்க்க, அதற்கு அவன் இடமளித்தால் தானே!
அவள் முகத்தில் தோன்றிய பதட்டத்தை கண்டு மெல்ல புன்னகைத்துக் கொண்டவன், நொடிப் பொழுதில் அவளின் இரு கரங்களையும் பற்றி மேலே உயர்த்தி தன் ஒற்றைக் கரத்தால் சிறை பிடித்திருந்தான்.
அவனின் இந்த எதிர்பாராத செயலில் பெண்ணவளோ திடுக்கிட்டு போய் அவனது விழிகளை பார்த்தவள், “சி… சிம்மா… என்ன பண்றீங்க? ந… நான் சீரியஸா உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். ஆனா நீங்க…. ” என்று அவள் வார்த்தைகளை முடிக்கும் முன்பே, “ஷ்ஷ்ஷ்….” என்று அவள் இதழ்களில் தன் விரலை வைத்திருந்தான் ஆடவன்.
அதில் அவள் பேச வந்த வார்த்தைகள் தொண்டைக் குழிக்குள்ளேயே சிக்கிக் கொள்ள, தன் விழிகளை சற்று விரித்து அவனைப் பார்த்தாள்.
சிம்மனோ அவளின் கரு விழிகளை ரசனையாக பார்த்துக் கொண்டே, “இப்போ நான் மட்டும் தான் பேசுவேன். யூல் பீ க்வயட்” என்று அதிகாரம் நிறைந்த குரலில் சொன்னான்.
அவளோ மேலும் விழி விரித்து அவனைப் பார்க்க,
“அண்டர்ஸ்டுட்?” என அவ் வார்த்தைக்கு லேசாக அழுத்தம் கொடுத்த படி கேட்டான்.
அவன் கட்டளை போடுகிறான் என்று தெரிகிறது.
ஆனாலும் அதை தடுக்கவோ, எதிர்த்து பேசவோ அவளால் முடியவில்லை.
எச்சிலை கூட்டி விழுங்கிய படியே, எந்த வித மறுப்பும் இல்லாமல், “ம்ம்” என்று மெல்ல தலையசைத்தாள்.
அதில் அவன் இதழ்கள் லேசாக விரிந்து கொள்ள, “குட் கேர்ள்” என்று சொல்லிக் கொண்டே, அவள் முகத்தில் விழுந்து கிடந்த முடிகளை மெல்ல தன் விரல்களால் ஒதுக்கி விட்டான்.
அதில் இவள் மேனி எல்லாம் சிலிர்த்துப் போக, மெல்ல தன் இமைகளை மூடித் திறந்தாள்.
சில நொடிகளுக்கு முன்னர் அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்த அத்தனை கேள்விகளும், பயமும் அவனின் இந்த ஒற்றைத் தீண்டலில் எங்கு போனது என்று கூட தெரியவில்லை.
அவன் நெருங்கி வந்தால் தான் அவள் தன்னை மொத்தமாக தொலைத்து விடுகிறாளே!
சிம்மனோ அவளின் பின்னந்தலையில் தன் விரல்களை மெதுவாக நுழைத்த படியே, அவளின் அப்பாவித் தனமான முகத்தை பார்த்தவன், “டூ யூ நோ வாட் யூ ஆர் டூயிங் டு மீ?” என்று கர கரப்பாக சொல்லிக் கொண்டே,
மெல்ல அவளின் காதோரம் தன் இதழ் உரச குனிந்து, “யூ மேக் மீ லூஸ் கண்ட்ரோல்” என்று மோகம் கலந்த குரலில் சொன்னவன், சட்டென அவளது கூந்தலை பற்றி பின்னால் இழுத்து, அவளின் மென்மையான கழுத்து வளைவில் தன் முகம் புதைக்க, பெண்ணவளோ சற்று திடுக்கிட்டு போய் விழிகளை விரித்தாள்.
அதில் இருவரின் தேகமும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து கொள்ள, அவளின் மெல்லிய தேகம் அவனின் பரந்த மார்போடு அழுத்தமாகப் பொருந்திக் கொண்டது.
அவனின் சூடான மூச்சுக் காற்று அவள் கழுத்தில் பட்டு, பெண்ணவளின் உடலில் ஒரு வித நடுக்கத்தை உண்டாக்க, ஆடவனோ அவளின் கழுத்து வளைவுகளில் அழுத்தமாக முத்தம் பதித்தான்.
அதில் அவன் தாடி, மீசைகளின் உரசல்களும் அவளின் மென்மையான சருமத்தில் பட்டு, அவளுக்குள் ஒரு இனம் புரியாத கூச்சத்தையும், சிலிர்ப்பையும் உண்டாக்க, பெண்ணவளின் இதழ்கள் மென்மையாக விரிந்து “ஆஆஹ்..” என்று மெல்ல முனகியது.
அதில் அவன் இச்சை மேலும் அதிகரிக்க,
அவளின் கழுத்தில் முத்தத்தோடு சேர்த்து தன் பற் தடங்களையும் அங்கு முத்திரையாகப் பதித்தான்.
அதில் வலியும், இன்பமும் கலந்த உணர்வில் மோகமாக தன் விழிகளை மூடிக் கொண்டவள், கழுத்தை மேலும் விரித்து அவனின் தீண்டலுக்காக இணங்கினாள்.
அவனின் சூடான இதழ்களோ அதோடு நின்று விடாமல் அவள் கழுத்து வளைவிலிருந்து மெல்ல கீழிறங்க, பெண்ணவளின் தேகமோ சூடேரி உடலை வளைத்து, அவனை மேலும் தன்னோடு அணைத்துக் கொள்ளத் துடித்தது.
ஆனால் என்ன செய்ய?
அவளது இரு கரங்களும் அவனது இரும்புப் பிடியில் அல்லவா சிறை பட்டு கிடந்தன!
தன் கரங்களை விடுவிக்க முடியாமல் தவித்தவளின் மூச்சுக் காற்றின் வேகம் அதிகரித்து, அவளின் மார்புகள் மேலேறி கீழிறங்க, ஆடவனோ அதில் தன் முகத்தை புதைத்து, அவளின் மென்மையான வளைவுகளை திரையிட்டிருந்த மேலாடையை உரசிய படியே மெல்ல கீழிறங்கினான்.
அதில் பெண்ணவள் உடல் சிலிர்த்து துடிக்க, மேலும் இருக்கையோடு அவள் உடல் புதைந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் போராடியது.
அவளின் ஒவ்வொரு அசைவையும், தன் உணர்வுகளை அடக்க முடியாமல் அவள் திணறுவதையும் உணர்ந்தவனுக்கோ அது மேலும் போதையாக இருந்தது.
அவனுக்கு தான் பெண்ணின் உணர்வுகளை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பதில் அலாதி பிரியம் ஆயிற்றே!
ஆனால் அவனிடம் வந்து மாட்டிக் கொண்டவளுக்கு தான் அது பெரும் அவஸ்தையாகிப் போனது.
அவள் கூந்தலுக்குள் இருந்த அவனின் கரங்களோ மெல்ல அவளின் சுடிதாருக்குள் நுழைந்து பெண்ணவளின் மெல்லிடையை பற்றி அழுத்த, இவளோ கூச்சத்தில் தன் இடையை நெளித்த படியே, தன் கீழ் இதழ்களைப் பற்களால் கடித்துக் கொண்டாள்.
அதை உணர்ந்தவன் இதழ்கள் குறும்பாக புன்னகைத்துக் கொள்ள, அவளின் உணர்வுகளை மேலும் தூண்டி விட்டான் அந்தக் கள்வன்.
அவளின் ஆடைக்குள் மறைந்திருந்த அவனின் கரங்கள் மெல்ல நகர்ந்து சென்று அவளின் மென்மையான நாபியை வருட, அவனின் இந்த எதிர்பாராத தீண்டலில் அவள் உதரமோ ஒரு கணம் துடித்து தன் மூச்சை அடக்கியது.
அவளின் கால் விரல்கள் தரையோடு பதிந்து அழுத்தமாக சுருண்டு கொள்ள, ஆடவனின் விரல்களோ அவளின் நாபிக் குழியை சுற்றி மென்மையாக கோலமிட்டது.
அதில் சுகமாக தன் கழுத்தை வளைத்து, இடையை உயர்த்தி நெளித்தவளோ, “ஸ்ஸ்… ஆஹ்………” என்று விழிகள் சொருகிய படியே சற்று சத்தமாக முனகினாள்.
ஆடவனின் ஒவ்வொரு தீண்டலும் பெண்ணவளை வேறு ஒரு உலகிற்கே அழைத்து செல்ல, அவளின் தேகம் மொத்தமும் இப்போது உணர்வுகளின் பிடியில் சிக்கியது.
தன் கட்டுப்பாடுகளை மொத்தமாக தகர்த்தெறிந்து அவனுள் தன்னை ஒப்படைக்கவே பெண் மேனி துடித்தது.
காதலும், மோகமும் ஒன்றாகக் கலந்து அவனின் நெருக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ள அவளின் உடலும், மனமும் ஒருசேர ஆசைக் கொள்ள,
“சிம்மா… ஐ… ஐ… நீட் யூ…. ஐ நீட் யூ நவ்…” என்று மோகமும், ஏக்கமும் கலந்த குரலில் சொன்னாள்.
அதில் ஆடவனின் விழிகள் சற்றே விரிந்து கொள்ள, அடுத்த கணமே தன்னை சமாளித்து கொண்டு, மெல்ல அவளின் முகமுரச தன் முகத்தை நெருக்கமாக கொண்டு வந்தவன், “வாட்?” என்று ஹஸ்கி குரலில் கேட்டான்.
அவளோ மோகத்தின் பிடியில் விழிகளை இறுக்கமாக மூடியிருந்தாள்.
ஆனால் ஆடவனின் சூடான மூச்சுக் காற்றும் அவனின் ஈரமான இதழ்களின் உரசலும் அவள் முகத்தில் பட்டதும், அவன் தன் அருகில் தான் இருக்கிறான் என்பதை உணர்ந்து, அதற்கு மேலும் தன்னை கட்டுபடுத்த முடியாமல் அவனின் இதழ்களை கவ்வப் பார்க்க,
அதை உணர்ந்தவனோ சட்டென தன் தலையை பின்னால் இழுத்துக் கொண்டான்.
ஒரு கணம் முத்தம் கொடுக்க முடியாமல் போனதில் திடுக்கிட்டு போய் தன் விழிகளை திறந்தாள் பெண்ணவள்.
அவளின் மோகம் கலந்த விழிகளை பார்த்து ஒற்றை புருவத்தை உயர்த்தியவன், தன் பெரு விரலால் அவளின் இதழ்களை வருடிக் கொண்டே, “கெட்டிங் மீ இஸன்ட் தட் ஈசி பேபி. கண்ட்ரோல் யுவர்செல்ப்” என்று நக்கலாக சொல்லி கண்ணடித்தவன் அவளை சிறை செய்திருந்த தன் கரங்களை மெல்ல விடுவிக்க, இவளோ திரு திருவென முழித்தாள்.
தன் மானத்தை விட்டு அவளே அவனிடம் சரணடைய போனால் இப்படி மறுத்து விட்டானே!
அவள் முகமோ வெளிரிப் போனது.
என்ன தான் அவன் தன் கட்டுப்பாட்டை இழந்தாலும் இப்போதைக்கு அவளை ஆட்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு சுத்தமாக இருக்கவில்லை.
அவளின் முக மாற்றத்தை கண்டு உள்ளுக்குள் புன்னகைத்து கொண்டவன், தனது ஷேர்டை சரி செய்த படி அங்கிருந்து வெளியேறினான்.
பிருந்தாவோ அதே இடத்தில் அமர்ந்திருந்தாள்.
இன்னுமே அவள் தேகம் முழுக்க அவன் தீண்டலில் உண்டான சிலிர்பில் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தது.
இருக்காதா பின்னர்?
அவளை கொஞ்ச நெஞ்ச பாடா படுத்தினான்.
அவனே நெருங்கி வந்தான்.
அவளின் உணர்வுகளை மொத்தமாக தூண்டி விட்டான்.
கடைசி நேரத்தில் எதுவும் நடக்காதது போல விலகி போய் விட்டான்.
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை தான்.
இப்போது அவன் விலகி சென்றும், அவன் கொடுத்த தீண்டல்களில் இருந்து வெளி வர முடியாமல் அவள் தான் தவித்து போனாள்.
அவள் மேனியோ இன்னுமே அவனை வேண்டி நின்றது.
அதை எண்ணி தன்னை நினைத்தே கோபம் தான் வந்தது.
“மானங்கெட்டவளே! அதான் வேணாம்னு போயிட்டான்ல!” என்று தன்னை தானே கடிந்து கொண்டவள், தனது கலைந்த உடையை சரி செய்து கொண்டு வெளியேறினாள்.
சிம்மனோ தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான்.
அவளை கண்டவன் இதழ்கள் கேலியாக வளைந்து கொள்ள, அவனை பார்த்து தாராளமாக முறைத்தவள் அங்கிருந்து விறு விறுவென செல்லப் பார்க்க, சிம்மனோ அவளை பார்த்து சொடக்கிட்டான்.
அதில் பெண்ணவள் கால்கள் அதே இடத்தில் நின்று விட, மெல்ல அவன் புறம் திரும்பினாள்.
அவனோ மேசை டிராயரில் இருந்த ஒரு சிறிய ஆயின்மென்டை எடுத்து அவளை நோக்கி நீட்டியவன், “ஐ திங்க் இது உனக்கு தேவைப்படலாம்” என்றான்.
அவனோ புரியாமல் அவனை பார்த்தாள்.
சிம்மனோ தன் விழிகளாலேயே அவள் கழுத்தில் இருந்த பற்தடங்களை காட்டி நக்கலாகப் புன்னகைக்க, அதில் சட்டென அவள் விரல்கள் தன் கழுத்தில் பதிந்தது.
அதை வருடியவளுக்கோ அவன் ஸ்பரிசம் மீண்டும் நினைவில் வந்து உடல் மெல்லிய நடுக்கத்தை உணர, அவள் முக மாற்றத்தை கண்டு அவன் இதழ்கள் கடித்து புன்னகையை அடக்கிக் கொண்டான்.
பிருந்தாவோ அவனை முறைத்து பார்த்தவள், அவசரமாக தன் கழுத்தை துப்பட்டாவால் மறைத்து விட்டு, “எனக்கு எதுவும் வேணாம்” என்று கூறி விட்டு போகப் பார்க்க,
“பிருந்தா… எனக்கு ஒரே விஷயத்தை திரும்பவும் சொல்ல புடிக்காது” என்றான் அழுத்தமான குரலில்.
அதில் பெண்ணவளோ கடுப்பாக விழிகளை மூடித் திறந்தாள்.
‘இவன் விட மாட்டான்’ என்று வாய்க்குள் முணு முணுத்துக் கொண்டவள், வேறு வழி இல்லாமல் அவனிடம் வந்து அந்த மருந்தை வாங்க போக,
சட்டென அதை பின்னால் இழுத்துக் கொண்டவன், “நான் வேணா….. ஹெல்ப் பண்ணட்டா?” என்று நக்கலாக ஒற்றை புருவத்தை உயர்த்தி கேட்டான்.
அவன் பார்வையின் அர்த்தத்தை உணர்ந்து கோபத்தில் முகம் சிவந்தவள், “ஒரு மண்ணாங்கட்டியும் வேண்டாம்” என்று சீறி விட்டு அந்த மருந்தை பிடுங்காத குறையாக எடுத்து கொண்டு வெளியேறி விட, அவனும் தலையை உலுக்கிக் கொண்டான்.