தேனு(னூ)றும் இதழே!!
செந்தணலில் பூத்த பனிமலர் நாவலின் இரண்டாம் பாகம்...
குறும்பும் துறுதுறுப்புமென இருக்கும் நாயகி...அவளின் முழு முதற் நண்பன் ஆஞ்சிநேயர்...
வேகமும் விவேகமும் கொண்ட அதிரடியான தொழிலதிபன் நமது நாயகன்...
அகில உலக பாக்ஸிங் சாம்பியன்...
யாருக்கும் அடங்காத அஞ்சா நெஞ்சம் கொண்டவன்...
நாயகிக்கு அவன் எப்போதும் நரகாசூரன்...
மற்றவருக்கு அசுரனாய் இருந்தாலும்
அவனது தாயிற்கு என்றும் செல்லப்பிள்ளை..
அவரின் சொல் தட்டாத தனயன்...
திருமணத்தில் பெரிதாக நாட்டமில்லாதவன்...
அன்னையின் கோரிக்காக திருமணம் செய்ய ஒப்புக்கொள்கிறான்...இந்நிலையில் அவன் திருமணம் செய்துக்கொள்ளவிருக்கும் பெண் மண்டபத்தை விட்டு ஓடிவிட,அதிரடியாக நமது நாயகி மணமகளாகிறாள்...
அவள் எதற்காக அவனை மணந்துக்கொள்கிறாள்?
இவ்வாறு எந்தவொரு குணத்திலும் ஒத்துப்போகாத இருவரும் எவ்வாறு வாழ்வில் ஒன்றிணைந்து பயணிக்கிறார்கள்...அதுமட்டுமின்றி மேலும் பல வகையான சுவாரசியமான முடிச்சுகளோடு நகரும் நாவலே 'தேனு(னூ)றும் இதழே'