இணை 16

“மதி ஆர் யு ஓகே? டயர்டா இருந்தா சொல்லு, வீட்டுக்கு கிளம்பிடலாம்” ஆர்யன் சொன்னதும், இன்பரசு இங்கே தான் இருக்கிறானோ என்று கலங்குவதை விட வீட்டிற்கு செல்வது நல்லது என்று வளர்மதிக்கு தோன்றியது.

“வீட்டுக்கு போனா, கெஸ்ட் எல்லாம் என்ன நினைப்பாங்க?” என்றாள் தயங்கி கொண்டே

“யாரும் எதுவும் நினைக்க மாட்டாங்க. அப்படியே நினைச்சாலும் ஐ டோன்ட் கேர். உன்னை விட எனக்கு வேற யாரும் முக்கியமில்ல” என்றவனை விழி விரித்து பார்த்தாள்.

“யோசிக்காதே மதி, கிளம்பு போகலாம்” என்றவன் செழியனுக்கும் அவன் தந்தைக்கும் போன் செய்து, “ரெண்டு நாளா அலைஞ்சதுல ரொம்ப டயர்டா இருக்கு. நானும் மதியும் வீட்டுக்கு கிளம்பறோம். வந்தவங்களை கவனிச்சு அனுப்பி வையுங்க” என்றான்.

“சாப்பிட்டு போகலாமே” என்ற செழியனிடம், “போற வழியில சாப்பிட்டுக்கறோம் மச்சான்” என்று போனை வைத்தான்.

வளர்மதியின் கரம் பற்றி பின்பக்கமாக சென்று கார் பார்க்கிங்கை அடைந்தவன் அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

“மதி டயர்டா இருந்தா என் மடியில படுத்துக்கோ”

“பரவால்லைங்க”

“சாரி மதி, ரிசப்ஷனை ரெண்டு நாள் தள்ளி வைக்க சொல்லி செழியன் சொன்னத நான் கேட்டிருக்கணும். உன் அண்ணனுக்கு தான் உன் ஹெல்த் பத்தி நல்லா தெரிஞ்சிருக்கு. ஒரே வேளையா எல்லாத்தையும் முடிச்சுட்டா பிசினஸ்ல கவனம் செலுத்தலாமேனு நினைச்சு, உன்னோட ஹெல்த்தை யோசிக்காம போயிட்டேன். ஐ அம் ரியலி சாரி”

“அச்சோ நீங்க சாரி சொல்ற அளவுக்கு, எதுவுமே நடக்கல. எனக்கு அங்கே அன்ஈசியா இருந்துச்சு, வீட்டுக்கு போனா நல்லாயிருக்கும்னு நினைச்சேன். நீங்க கேட்டதும் ஒத்துக்கிட்டேன். அவ்வளவு தான்”

“சூயரா?”

“ம்”

“அப்போ நிருபிச்சு காட்டு”

“எப்படி?”

“என் தோள்மேல சாஞ்சுக்கோ, அப்ப தான் நம்புவேன்”

அவனை முறைத்து விட்டு, அவன் தோளில் லேசாக தலைசாய்த்துக் கொண்டாள். மனைவி தோள்மீது உரிமையுடன் சாய்ந்து கொண்டதும் அவளின் தலையை வருடி கொடுத்து விட்டு வண்டியை இயக்கினான்.

ஆர்யனின் அன்பு வளர்மதியின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. அவள் அண்ணன் செழியன் உறுதியாக நின்று அவளுக்கு ஆர்யனை திருமணம் செய்து வைத்ததற்கான காரணம் இப்போது புரிந்தது. அவனை தவிர அவளுக்கு சிறந்த கணவனாக யாராலும் இருக்க முடியாது என்று சரியாக கணித்திருக்கிறான். 

வீண் பிடிவாதம் பிடித்து திருமணம் வேண்டாம் என்று நின்றிருந்தால் அவளை கட்டாயப்படுத்தி இருக்க மாட்டான் தான். அப்படி நிகழ்ந்திருந்தால் இப்படி ஒரு இனியவனை அவள் வாழ்நாளில் கண்டிருக்க முடியாது.

ஆர்யனின் உறவினர்களும் விருந்தினர்களும் செல்வந்தர்கள் என்பதை அவர்களின் நடை உடை பாவனையிலேயே தெரிந்தது. அப்பேர்பட்ட செல்வந்தன் அவள் தான் வேண்டும் என்று மூன்று வருடம் காத்திருந்து கரம் பற்றி இருக்கிறான். அப்படி பட்டவனுக்கு நான் என்ன செய்ய போகிறேன்? அவன் மனைவி தரம்கெட்டவள் என்ற அவப்பெயரை அல்லவா வாங்கி தரப்போகிறேன்?

கண்களில் கண்ணீர் உடைப்பெடுக்க அதை ஆர்யன் அறியா வண்ணம் அவசரமாக துடைத்துக் கொண்டாள். பாதையில் பார்வை பதித்திருந்தாலும் கணவனின் பார்வை பாவையின் மீதே இருப்பதை அவள் அறிந்திருக்கவில்லை. எதற்காக அழுகிறாள் என்று தெரியாமல் குழம்பினான்.

‘வீட்ல இருந்து கிளம்பும் போது கூட நல்லா தானே இருந்தா? மேடையில சம்மதானு கேட்டு அவங்க அண்ணி முன்னாடி அவளை சீண்டிட்டே இருந்தது அவளுக்கு பிடிக்கலையா? இல்ல, காலேஜ் பிரெண்ட்ஸ் பர்ஸ்ட் நைட் பத்தி பேசி கலாய்ச்சிட்டு இருந்தது பிடிக்கலையா? வேற ஏதாச்சும் காரணமா? ஹால்ல யாரை தேடிட்டு இருந்தா? அவ அண்ணனுங்களையா?’ அவனுக்குள் பல கேள்விகள் இருந்தாலும் அமைதியாகவே காரை செலுத்தினான்.

தான் அழுவது அவனுக்கு தெரியக்கூடாது என்று அவள் நினைக்கும் போது, அப்படியில்லை என்று அவளை சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்தான். அதுமட்டுமில்லாமல் ஏன் அழறனு கேட்டாலே பல பெண்களுக்கு இன்னும் அழுகை அதிகமாவதை நேரில் கண்டிருக்கிறான். 

அவ்வப்போது அவளின் தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே சென்றவன் கைப்பேசியில் அவர்களுக்கான இரவு உணவை ஆர்டர் செய்து எடுத்து வைக்கும்படி காவலாளியிடம் சொல்லிவிட்டு தன் பயணத்தை தொடர்ந்தான். 

வளர்மதியோ இன்பரசு அவளை மிரட்டியதை யாரிடம் சொல்வது என்ற ஆழ்ந்த யோசனையில் இருந்தாள். ‘அண்ணன்களிடம் கூறினால் இருவரும் சேர்ந்து அவன் தலையை எடுக்கவும் தயங்க மாட்டார்கள். ஆனால் அதற்கு பின்பு அவர்கள் ஜெயிலுக்கு போக வேண்டுமே, அண்ணிகள் மற்றும் குழந்தைகளின் கதி? ஆர்யனிடம் சொல்லலாமா? என்னவென்று சொல்ல முடியும்? என் அந்தரங்க புகைப்படத்தை என் முன்னால் காதலன் வைத்திருக்கிறான் என்றா? எந்த கணவனால் இதை ஏற்றுக் கொள்ள முடியும்? அப்படியே ஏற்றுக் கொண்டாலும் இனி அவனை அவள் எப்படி எதிர்கொள்வாள்? இன்பரசு வந்ததும் அவளை போனில் மிரட்டியதும் கனவாக இருக்க கூடாதா?” என்று மனம் கனத்தது.

வீட்டை அடைந்ததும், அவளை மாடிக்கு அழைத்து சென்றவன், “மதி, டிரஸ் மாத்திட்டு முகம் கழுவு. சாப்பாட்டை இங்கேயே கொண்டு வரச் சொல்றேன்” என்று மீண்டும் கீழே சென்றான்.

வளர்மதியும் உடைமாற்றி முகம் கழுவி வர, ஆர்யனே அவளுக்கு சாப்பாட்டை கொண்டு வந்தான். அவசரமாக அவனிடம் வாங்க முயன்றவளிடம் கொடுக்காமல், அவளை அங்கிருந்த நீள் இருக்கையில் அமர சொன்னான். அவள் அமர்ந்ததும் அவனே அவளுக்கு சாப்பாத்தியை எடுத்து ஊட்ட, “நானே சாப்பிட்டுக்கறேன்” என்றாள் தயக்கத்தோடு

“நீ ஏதோ மூட் அவுட்ல இருக்கே, உன்னை விட்டா சரியா சாப்பிட மாட்டே” என்றவன் அவள் வாயில் சப்பாத்தியை திணிக்க மீண்டும் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. ஆர்யன் அறியாவண்ணம் அதை உள்ளிழுத்தவள் சாப்பிட தொடங்கினாள்.

இருவரும் ஒருவழியாக சாப்பிட்டு முடித்ததும், “மதி போய் படுத்து தூங்கு. நல்லா தூங்கி எந்திரிச்சா டயர்ட் எல்லாம் போயிடும்” என்றான்.

“நீங்க தூங்கலையா?”

ஒரு நொடி அவளை ஆழ்ந்து பார்த்தவன், “நான் இந்த சோபாவுல படுத்துக்கறேன்”

“ஏன்?”

“ஏன்னா, நீ டயர்டா இருக்க, ஏதோ மூட் அவுட் மாதிரி தோணுது. நல்லா ரெஸ்ட் எடு. நம்ம வாழ்க்கைய தொடங்கறதுக்கு நிறைய நேரம் இருக்கு” என்றான் மென்மையான குரலில்

தாலி கட்டி முடிந்தது முதல் அவன் அவளிடம் செய்த சீண்டல்களை நினைத்து பார்த்தாள். கிளம்பும் போது அவன் கொடுத்த ஆழ்ந்த முத்தத்தில் அவளிடம் அவனுக்கான வேட்கையை உணர்த்தியிருந்தான். இதழ் வழியாக அவள் உயிரின் ஆணிவேர் வரை அல்லவா சென்று வந்தான்? அப்படியிருக்க அவளுக்காக தன் ஆசையை அடக்கி அவளின் மன நிலையை உணர்ந்து அதற்கான மதிப்பளிக்கிறான். கணவனாக அவள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விட்டான்.

“நீ எனக்கு பிரஷ்ஷா வேணும், இன்னைக்கு  உங்க பர்ஸ்ட் நைட் நடக்க கூடாது” என்ற இன்பரசுவின் வார்த்தைகள் அவள் காதில் ஒலிக்க, ‘நீ என்னடா சொல்றது?’ என்று அவன் மீது எழுந்த ஆத்திரத்தில், சட்டென கணவனின் கையை பற்றி நிறுத்தினாள்.

“என்ன வேணும் மதி?”

“சம்மதம்”

“எதுக்கு?”

“என்கிட்ட கேட்டீங்களே. எல்லாத்துக்கும் சம்மதம்”

ஆர்யன் வளர்மதியின் முகத்தை பார்த்தான். கிளம்பும் போது அவள் கண்களில் தெரிந்த படபடப்பும் வெட்கமும், தவிப்பும் இப்போது இல்லை. ஏதோ சண்டைக்கு தயார் என்பது போல அவள் முகத்தில் அப்படி ஒரு தீவிரம். ஏதோ ஒன்று அவளை குடைந்து கொண்டிருக்கிறது? அது என்னவாக இருக்கும்? என்று அவன் யோசனையில் ஆழ்ந்திருக்க அவனின் கரத்தை அவள் புறம் இழுத்தாள்.

அவனும் குனிந்து அவளின் முகம் பார்க்க, அவளோ எட்டி அவன் கன்னத்தில் அழுத்தமாக இதழ்பதித்தாள்.

தயக்கத்தோடு மெல்ல இதழ்தீண்டியிருந்தாலும் அவனுக்கு உச்சி குளிர்ந்து போய் இருக்கும். நீ கேட்டதை கொடுத்துவிட்டேன் என்கிற ரீதியில் அவள் கொடுக்கும் முத்தம் ஏனோ அவனுக்கு முழுதிருப்தியை கொடுக்கவில்லை.

மனம் கவர்ந்தவளாகவே இருந்தாலும் முழுமனதோடு கொடுக்கும் முத்தம் தான் இனிக்குமோ? கடமைக்கே என்றாலும் அவள் கொடுத்த முதல் முத்தம்! அதற்கான மதிப்பளிக்க வேண்டுமே? முத்தத்திற்கு எப்படி மதிப்பளிப்பது? பதில் முத்தம் தான்.

ஆர்யன் வளர்மதியின் தாடையை இரு கரங்களில் ஏந்தி அவளின் இரு கன்னங்களிலும் மென்மையாக இதழ் பதித்தான். கண்களை மூடி அதை ஏற்றுக் கொண்டாள். மனதின் இறுக்கம் அவள் முகத்திலும் தெரிய, அவளை தன் நெஞ்சோடு இறுக அணைத்தான்.

“மதி, உன் அண்ணனுங்க உன் மேல காட்டுற அன்பை என்னால பீட் பண்ண முடியுமானு தெரியல. ஆனா நிச்சயம் அதுக்கான முயற்சி செய்வேன். உனக்கு எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட தான் நீ முதல்ல சொல்லணும்னு எதிர்பார்க்கறேன். அது உடனே நடக்காது, அதுக்கு டைம் எடுக்கும்னு எனக்கு நல்லாவே புரியுது. அப்படி நீ என்னை முதன்மையா நினைக்கணும்னா உன்னை நான் அன்பால தான் ஜெயிக்கணும். என் முயற்சியை நீ ஏத்துக்குவியா?”

“ம்” என்றாள்

“இப்போ எதைப்பத்தியும் யோசிக்காம நல்லா தூங்கு” என்று அவளின் உச்சந்தலையில் முத்தமிட்டவன், அவளை அப்படியே தூக்கி சென்று கட்டிலில் படுக்க வைத்தான். அவன் நிமிரும் போது அவன் சட்டை காலரை இருகரங்களால் பிடித்து இழுத்தாள்.

“என்னை பத்தி தெரியாம என்னை சீண்டிட்டு இருக்கே மதி, ஆரம்பிச்சிட்டா நீயே சொன்னாலும் என்னால நிறுத்த முடியாது. இன்னும் கொஞ்சம் தெம்பேத்திட்டு வந்து என்னை சீண்டு” என்றான் புன்னகையுடன்.

அப்போதும் அவள் அவன் சட்டை காலரை விடாமல் இருக்க, அப்படியே அவள் மீது படர்ந்தான். அவள் இதழ்களை தன் இதழ்களால் கவ்வி கொண்டவன், அவள் மூச்சிற்காக அவன் தோள்களை தள்ளும்வரை விடவே இல்லை. அவள் நிலை உணர்ந்து பக்கவாட்டாக உருண்டவன் அவளை இழுத்து தன் மார்பில் படுக்க வைத்தான்.

உரிமையுடன் அவன் இடுப்பில் கைபோட்டு கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். “உன்னை பார்த்தாலே டயர்டா இருக்கறது நல்லா தெரியுது மதி, கொஞ்ச நேரம் நல்லா தூங்கு. நானே உன்னை எழுப்பறேன்” என்று அவள் தலைமுடியை கோதிவிட்டான்.

அவளும் வாகாக அவன் மார்பில் மஞ்சமிட்டு துயில் கொள்ள ஆரம்பித்தாள். விடியும் வரை இருவரும் அதே நிலையில் இருந்தனர். அவளை அணைத்துக் கொண்டே ஆர்யனும் நன்றாக உறங்கியிருந்தான்.

காலையில் கண்விழித்ததும் கணவனின் தூக்கம் கெடக் கூடாது என்று மெதுவாக அவனில் இருந்து பிரிந்து எழுந்தாள். குளித்து தயாராகி அவனை எழுப்பலாம் என்று நினைத்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். குளித்ததும் எட்டி அறையை பார்த்தாள். ஆர்யன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். பெரிய டவலை கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்.

டீபாயின் மீது அவள் எடுத்து வைத்த ஆடை அங்கே இல்லை. இங்கே தானே இருந்துச்சு? கீழே விழுந்துருச்சா? என்று அவள் குனியும் போதே ஆர்யன் அவளை பின்னால் இருந்து தூக்கியிருந்தான்.

“அச்சோ, விடுங்க” பதட்டத்தில் அவள் மீனாய் துள்ள, அவளை சுற்றியிருந்த டவல் வேறு நகர்ந்து அவளின் வெற்றுமேனி அவனின் கரங்களுக்கு தட்டுப்பட்டது. 

இன்னும் துள்ளினால் டவல் மொத்தமாக விலகிவிடும் அபாயம் இருந்ததால் “நைட் நல்ல புள்ளையாட்டம் வேணாம்னு சொல்லிட்டு காலைல என்ன பண்ணிட்டு இருக்கீங்க” முனகினாள்

“காலைல நீ கொடுத்த தரிசனம் அந்த மாதிரி. கண்முழிச்சு பார்த்தா டவலை கட்டிட்டு வந்து நிக்கிறே, நான் நல்லவன் தான், ஆனா ரொம்ப நல்லவன் இல்ல மதி” என்றவன் அவளை அப்படியே தூக்கி கொண்டு கட்டிலை நோக்கி சென்றான்.

“வளரு, ரெடி ஆயிட்டியா? நாங்க கிளம்பணும், உனக்காக நம்ம வீட்டு ஆளுங்க கீழே காத்துட்டு இருக்காங்க” என்று வெளியே இருந்து குரல் கொடுத்தாள் வீரமல்லி.

“இதோ வரேன் அண்ணி” என்றவள் தன்னை மறந்து ஆர்யனின் கரங்களில் இருந்து வேகமாக துள்ளி குதிக்க, டவல் நழுவி கீழே விழுந்தது. அச்சோ என்று முகத்தை அவள் மூடிக் கொள்ள ஆர்யன் இமைக்காமல் மனைவியின் அழகை கண்களால் விழுங்கி கொண்டிருந்தான்.

அவசரமாக குனிந்து டவலை சுற்றிக் கொண்டு வேறு உடையை தேடி எடுத்து அவள் மீண்டும் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள். அவள் வெளியே வரும் வரை ஆர்யன் அதே நிலையில் இருக்க அவனை நிமிர்ந்து பார்க்க வெட்கப்பட்டு தலையை குனிந்தவாறே, “சீக்கிரம் ரெடியாயிட்டு வாங்க, நான் கீழே போறேன்” என்றவள் அவனை திரும்பி பார்க்காமல் சென்றுவிட்டாள்.

ஆர்யன் தலையை உலுக்கி கொண்டு நீண்ட பெருமூச்சுகளை விட்டுக் கொண்டே குளியலறைக்குள் புகுந்தான். அவன் தயாராகி வரும் போது அனைவரும் சாப்பிட்டு முடித்து, வளர்மதியின் கரம் பற்றி ஒவ்வொருவராக புத்திமதி சொல்ல, அவள் கலங்கிய கண்களுடன் தலையாட்டிக் கொண்டிருந்தாள்.

ஆர்யனை கண்டதும் வளர்மதியின் குடும்பத்தினர் அவனை சூழ்ந்து கொண்டனர். “எங்க பொண்ணை நல்லா பாத்துக்கோங்க மாப்ள. அவ ஏதாச்சும் தப்பு பண்ணா பொறுமையா எடுத்து சொல்லுங்க கேட்டுக்குவா” என்பதையே ஆளாளுக்கு அவர்கள் பாணியில் சொல்ல, அவனும் பொறுமையாக கேட்டுக் கொண்டான்.

“உங்களுக்கு மதிய பிரியறது கஷ்டமா இருந்தா இன்னும் நாலு நாள் இருந்துட்டு போகலாமே?” என்றான்

“இல்ல மாப்ள, நிலம் அறுவடைக்கு தயாரா இருக்கு. நிறைய வேலை கிடக்கு. நாங்க போயே ஆகோனும். ஏதாச்சும் அவசர ஜோலி இருந்தா போன் பண்ணுங்க உடனே வாரோம்” என்றார் செல்வரத்தினம்.

செழியன் ஆர்யனை ஆரத்தழுவிக் கொண்டு, “நீங்க என் தங்கச்சிய நல்லா பாத்துக்குவீங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு மச்சான். எந்த உதவி வேணும்னாலும் எனக்கு தயங்காம போன் பண்ணுங்க” என்றான்.

பாண்டியோ, “வளரு, மாப்பிள்ளைய பத்திரமா பாத்துக்கோ. உன் அண்ணி சொல்லி கொடுத்த வித்தையெல்லாம் அவர்கிட்ட காட்டாதே புரியுதா? அண்ணனாவே இருந்தாலும் நான் மாப்ளைக்கு தான் சப்போர்ட் பண்ணுவேன். ஏன்னோ ஒரு புருஷனோட கஷ்டம் இன்னொரு புருஷனுக்கு தான் தெரியும்” என்றான்

வீரமல்லி முறைக்கவும், “பகல்ல நீ சிலம்பம் கத்து கொடுக்கறப்போ என்னைய தாக்கறத மட்டும் தானே இவ பாத்திருக்கா, ராத்திரியில நாம கொஞ்சிக்கிறது அவளுக்கு தெரியாதில்ல. புருஷனை பொண்டாட்டி அடிக்கணும்னு தப்பா நினைச்சுக்க போறானு புத்தி சொல்லிட்டு இருந்தேன் மல்லி. வேற எதுவும் உன்னை தப்பா சொல்லல”

“யோவ் மானத்தை வாங்காம, புள்ளைய தூக்கிட்டு வெளிய நட” என்று மல்லி குழந்தையை அவனிடம் கொடுத்தாள்.

மற்றவர்கள் வந்த சிரிப்பை அடக்கி கொண்டு நிற்க, ஒவ்வொருவராக ஆதிசங்கரன், ஆர்யன் மற்றும் வளர்மதியிடம் விடைப்பெற்றுக் கொண்டு கிளம்பினார்கள். கனிஇதழி தன் தோழியை இறுக அணைத்து பிரியாவிடைப் பெற்றுக் கொண்டு கணவனுடன் கிளம்பினாள்.

அவர்கள் சென்றதும், “ஆர்யா, நீ மருமகளை அழைச்சிட்டு வெளியே போயிட்டு வா. நான் ஆபிஸ் கிளம்பறேன்” என்று ஆதிசங்கரனும் கிளம்பினார்.

சமையல்காரர் ஆர்யனை சாப்பிட அழைக்க, “மதி நீ சாப்பிட்டியா?” என்றான் மனைவியிடம்

“இன்னும் இல்லைங்க, நீங்க வந்ததும் சாப்பிடலாம்னு இருந்தேன்” 

“சரி வா” என்று அவளை அழைத்து சென்று சாப்பாட்டு மேஜையில் அமரவைத்து அவளுக்கு பரிமாறினான்.

“நீங்க சாப்பிடலையா?”

“இல்ல, சாப்பிட்டா தீயா வேலை செய்ய முடியாது”

“வேலை இருக்கா?”

“ம், நிறைய வேலை இருக்கு”

“மாமா ஆபிஸ்க்கு வரவேணாம்னு சொன்னாரே”

“வேலை இருக்குனு சொன்னேனே தவிர ஆபிஸ்லனு சொல்லலையே”

“வேற எங்கே?” சாப்பிட்டுக் கொண்டே அவள் அவன் முகம் பார்க்க, அவன் பார்வை வேறெங்கோ பதிந்திருக்க, அவளுக்கோ மூச்சு முட்டியது.

இப்போது அவளின் முகத்தை குறும்புடன் பார்த்து கண்சிமிட்டினான்.

வாயில் வைத்த இட்லி, தொண்டைக்குள் இறங்காமல் சண்டித்தனம் செய்ய, அவளுக்கு புரை ஏறியது. “மெதுவா சாப்பிடு மதி” என்று அவளின் நெஞ்சை நீவி விட்டான், ஆனால் கையை அகற்றவில்லை அந்த குறும்புக்காரன்.

படபடக்கும் விழிகளோடு அவனின் கரம் பற்றி அவள் கீழிறக்க, அவன் கரங்களோ மேலே தாவ, அவள் தவித்த தவிப்பை கண்டு கிறங்கி போனான். அவளோ அவன் கரங்களை கிள்ள, அவன் அவளை கிள்ளினான். வெட்கம் தாளாமல் அவள் எழுந்து நின்று விட, “சரி, சாப்பிட்டு முடியற வரைக்கும் தொல்லை பண்ண மாட்டேன், சாப்பிடு” என்று அவளுக்கு எதிரே அமர்ந்தான்.

அப்போதும் பார்வையால் அவளை விழுங்கி கொண்டிருந்தான். ஆர்யனின் கைப்பேசி ஒலிக்கவும் மனைவியை பார்த்துக் கொண்டே அதை ஏற்று காதில் வைத்தான்.

“சொல்லுங்கப்பா”

“ஆர்யா, இந்த யுகியும் நிஷாவும் பேப்பர் போட்டு இருக்காங்கடா. அதுவும் இன்னைக்கே ரிலீவ் ஆகணுமாம், வேணும்னா லாஸ்ட் மன்த் சேலரிய பிடிச்சுக்கோங்கனு சொல்றாங்க. எனக்கு எதுவுமே புரியல. எவ்வளவு எடுத்து சொன்னாலும் கன்வின்ஸ் ஆகமாட்டேங்கிறாங்க”

“ஷிட்” ஆர்யன் நெற்றியை தேய்த்துக் கொண்டான். திருமணத்திற்கு அழைக்காததால் யுகேந்திரன் கோபம் கொண்டிருக்கிறான் என்று புரிந்தது. ரிசப்ஷன் முடியும் வரை அமைதியாக இருந்துவிட்டு இப்போது தன் கோபத்தை காட்டுகிறான். நேரில் சென்று சமாதானம் செய்தால் ஒழிய அவன் யார் பேச்சையும் கேட்க மாட்டான். 

“அப்பா, நான் நேர்ல வந்து அவன்கிட்ட பேசிக்கிறேன்” என்று போனை வைத்தவன், “மதி நான் அவசரமா ஆபிஸ் போகணும். நீ வீட்ல தனியா இருந்துப்பியா?”

தனியாக இருக்க ஏனோ பயமாக இருந்தது அவளுக்கு. “நானும் உங்க கூட வரட்டுமா?”

ஆர்யன் யோசித்தான். யுகேந்திரனும் நிஷாவும் கோபம் கொண்டதற்கான காரணமே திருமணத்திற்கு முறையாக அழைக்காதது தான். அதைப்பற்றி அவர்களிடம் விளக்கமாக பேசும் போது வளர்மதியும் உடன் இருந்தால் அவளுக்கு குற்ற உணர்ச்சியாக இருக்கும். அதே சமயம் பழைய நினைவுகளால் மீண்டும் கூட்டுக்குள் முடங்கி கொள்வாளே என்று நினைத்தான்.

“மதி, ரெண்டே மணி நேரத்துல நான் வந்துடுவேன். நீ மேல ரெஸ்ட் எடு. இல்லனா உன் வீட்டு ஆளுங்க கிட்ட பேசிட்டே இரு. அதுக்குள்ள நான் வந்துடுவேன் சரியா?” என்று அவளின் கன்னம் தட்டினான்

“சரி சாப்பிட்டு போங்க”

அவளின் தட்டிலிருந்தே இரண்டு இட்லிகளை அவசரமாக வாயில் திணித்துக் கொண்டு, கிளம்ப எத்தனித்தான், “இன்னும் சாப்பிடுங்க” என்று அவள் தட்டில் இட்லியை வைக்க, “வந்ததும் உன்னை முழுசா சாப்பிட்டுக்கறேன்” என்று அவளின் கன்னம் கிள்ளிவிட்டு சென்றான்.

நாணத்துடன் அவனுக்கு கைகாட்டி வழி அனுப்பிவிட்டு சாப்பிட்டு முடித்தாள். மாடிக்கு சென்று ஆர்யன் அலமாரியில் வைத்திருந்த புத்தகங்களை ஆராய்ந்தாள். தொழிலில் எப்படி முன்னேறுவது என்பது தொடர்பான புத்தகங்களே நிறைய இருந்தது. அதில் ஒன்றை பிரித்து வைத்து படித்தாள்.

அறையில் இருந்த இன்டர்காம் ஒலித்தது. அவள் எழுந்து எடுப்பதற்குள் நின்று விட்டது. அவள் மீண்டும் சென்று புத்தகத்தை எடுக்கும் போது இன்டர்காம் இரண்டாம் முறை ஒலிக்க, அதை எடுத்து காதில் வைத்தாள்.

“மேடம், உங்களை பாக்கறதுக்கு உங்க மாமானு சொல்லி ஒருத்தர் வந்திருக்காரு. உள்ளே அனுப்பட்டுமா?”

‘யாரா இருக்கும்?’ என்று மாடியில் இருந்து எட்டி பார்த்தாள்.

கையில் பார்சலுடன் தலையில் தொப்பியுடன் அண்ணாந்து மாடியை பார்த்தபடி நின்றிருந்தான் இன்பரசு!

மாடியில் நின்றபடி வளர்மதி அதிர்ச்சியில் உறைந்திருக்க, அவளுக்கு கொஞ்சமும் குறையாத அதிர்ச்சியோடு கைபேசியின் திரையில் சிசிடிவி காட்சியாக இன்பரசு நின்றிருப்பதை பார்த்துக் கொண்டிருந்தான் ஆர்யன்.

 

(தொடரும்)

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
5 Comments
error: Content is protected !!
Scroll to Top