அத்தியாயம் -20

 

சிறிது நேரத்திற்கு முன்பு‌ ….

கீதாஞ்சலியை கீழே அழைத்துச் சென்று விட்டுவிட்டு  திருமண மண்டபத்திலிருந்து வெளியேறி விடலாம் என்று நினைத்துச் சென்ற மோகனாவை கையோடு அழைத்துக் கொண்டு வந்து விட்டான் ருத்ரன்.

“இந்த பொண்ணு ஏன் கீழே நின்னுட்டு இருந்தா ஜானகி? முகமே சரியில்லையே….யாராவது ஏதாவது சொன்னாங்களா? ஒருவேளை தனக்குன்னு யாருமில்லைன்னு ஃபீல் பண்ணுறாளா? இல்லன்னா தங்கச்சி  கூட இல்லைன்னு ஃபீல் பண்ணுறாளா? “ என்றான் ருத்ரன்.

“அவ மனசுல என்ன இருக்குன்னு நேக்கு சரியாத் தெரியலைன்னா. ஆமா மோகனா எதுக்கு இந்த நேரத்தல  கீழே போனா?” என்று ருத்ரனிடமே மாறி கேட்டாள் ஜானகி.

” நான் உன் கிட்ட கேட்டா நீ என்னையே திருப்பிக் கேக்குற. எனக்கு எப்படித் தெரியும் ஜானகி….கல்யாண மண்டப வாசல் கிட்ட நின்னுட்டு இருந்தா.. பதட்டமா இருந்த மாதிரி இருந்தது…. என்னன்னு நீ தான் கேளேன்…” என்று கூறிக் கொண்டு இருக்கும் போதே அய்யர் கீதாஞ்சலி மற்றும் விதேஷை அழைத்து வருமாறு  கூறியதாக பார்த்திபன் வந்து கூறினான்.

வெளியே சென்ற ஜானகி அய்யரிடம்,  “மாமா…முதல்ல ஆதவ் மோகனாவுக்கு தான் கல்யாணம்  .ஒரு மணி நேரம் கழிச்சு‌ தான் கீதாஞ்சலி  விதேஷ் கல்யாணம்…” என்றாள் ஜானகி.

“ பரவாயில்ல வீட்டுக்கு மகாலக்ஷ்மி பொண்ணு தானே…அவளுக்கு முதல்ல கன்னிகாதானம் பண்ணிட்டு அப்பறமா பையனுக்கு கல்யாணம் பண்ணலாம். பொண்ணை அழைச்சிண்டு வாங்கோ …” என்று கூறி விட ஜானகி ருத்ரனின் முகத்தைப் பார்த்தாள்.

அவனோ ‘ சென்று அழைத்து வருமாறு’ ஜாடை செய்தான்.

வேக வேகமாக கீதாஞ்சலியின் அறைக்குச் சென்றாள் ஜானகி. 

அதற்குள் அறக்குள் கீதா்சலி இல்லாதது பதற்றத்தை உண்டு‌ பண்ணியிருந்தது. 

அங்கிருந்த பெண்கள் கலவரமான முகத்தடன்  கைகளைப் பிசைந்து கொண்டு நின்றிருந்தனர்.

“ கீதும்மா… அய்யர் முதல்ல உன்னைய அழைச்சிண்டு வரச்சொல்றார்…சீக்கிரமா  வாடாம்மா..” என்றபடி குளியலறை முன்பு குரல் கொடுத்தாள் ஜானகி

 

“ மே….மேடம்….” என்று தயங்கியபடி அழைத்தாள் அங்கிருந்த பெண்ணொருத்தி.

“ என்னம்மா…?”

“ மே…மேடம்…கீதாஞ்சலி மேடத்தை காணோம்…எல்லா இடத்துலையும் தேடிப் பார்த்துட்டோம்…எங்க போனாங்கன்னே தெரியல…” என்றாள் பதட்டத்துடன்.

“ எ…என்ன…என்னம்மா சொல்ற…? அவ இங்க தானே இருந்தா . நீங்க இத்தனை பேரும் இங்க தானே இருந்தீங்க… அப்படி இருக்கும் போது அவ எங்க போயிருப்பா…நல்லா தேடி பாத்தீங்களா…?” என்று பதட்டத்துடன் கூறிக் கொண்டிருக்கும் போதே ருத்ரனும் ஆதவ்வும் கீதாஞ்சலியின் அறைக்குள் நுழைந்தனர்.

“ ஜானு…அங்க அய்யர் கூப்பிட்டுட்டே இருக்கார்…இங்க நின்னு பேசிட்டு இருக்க…கீது எங்க…? சீக்கிரமா கூட்டிட்டு வா…நேரமாச்சு… “ என்றவாறு அறையைச் சுற்றி பார்வையை சுழல விட்டான்.

கீதாஞ்சலி இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாததால் யோசனையுடன் புருவத்தை உயர்த்தி ஜானகியைப் பார்த்தான்.

அவளது முகமும் தெளிவில்லாமல் பதற்றத்துடன் இருந்ததை கவனித்து  “என்னாச்சு? எங்க கீது?” என்றான் அழுத்தமான குரலில்.

“ தெ…தெரியலன்னா…அவளைக்…கா…காணோம்னு …சொ…சொல்றா…கால் மணி நேரத்துக்கு முன்னாடி கூட இங்க தான்…இருந்…” என்று முடிப்பதற்குள் பளாரென்று அறைந்திருந்தான் ஜானகியை. அவள் தான் பொறுப்பின்றி நடந்து கொண்டு விட்டாள் என்று நினைத்து விட்டான் ருத்ரன். மகள் மேலிருந்த அளவிற்கு கண்மூடித்தனமான பாசம்  அவன் புத்தியை மழுங்கடித்தது. 

ஜானகிக்கும்‌ அவள்  மகள் தான் என்பதை மறந்து போனானோ?

கன்னத்தைப் பிடித்துக் கொண்டு அதிர்ந்து போய் அவளை பார்த்தாள் ஜானகி.

“அப்பா….” என்று சீறிக் கொண்டு ஆதவ் முன்னே வர  அவனை கை நீட்டி தடுத்தவன், “ முதல்ல நீ போய்  தாலி கட்டு…. இன்னும் அரைமணி நேரத்துல என் பொண்ணு இங்க வந்தாகணும்….இல்லன்னா…” என்றவன் அறையிலிருந்த அனைத்து பெண்களையும் தீயென முறைத்து விட்டு வெளியேறினான்.

அய்யரின் காதில் ஏதோ கூறி முதலில் ஆதவ் மற்றும் மோகனாவின் திருமணத்தை நடத்துமாறு கூறி விட்டு நிமிர்ந்து அனைவரையும் பார்த்தான்.

இறுகிப் போய் இருந்தது ருத்ரனின் முகம்.

ஆதவ்விற்கு ருத்ரன் மேல் அத்தனை கோபம்‌. 

என்ன ஏதென்று விசாரிக்காமல் தாயை அடித்து விட்டிருந்தது ஆத்திரத்தை வரவழைத்தது. 

முகம் சிவந்து கண்கலங்கி நின்ற ஜானகியைப் பார்த்தவனின் உள்ளம் கொதித்து தான் போனது. 

விவரம் தெரிந்த நாள் முதல் தாயின் புன்னகை முகத்தை மட்டுமே பார்த்ு வளர்ந்தவனுக்கு தந்தையின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாததாக இருந்தது.

முகம் இறுக மோகனாவின் கழுத்தில் தாலியை கட்டி ஏனைய சடங்குகளை செய்தான் ஆதவ்.

உண்மை தெரிந்தால் தன்னுடைய நிலை என்னவாகும் என்பதை நினைக்கும்‌ போதே வயிற்றில் பயப்பந்து உருண்டது மோகனாவிற்கு. 

அவள் கீதாஞ்சலியை கீழே அழைத்துச் சென்று விட்டுவிட்டு வந்த சில நிமிடங்களிலே அவளுடைய வங்கிக் கணக்கிற்கு குறிப்பிட்ட தொகை வைப்பு வைக்கப்பட்டதற்கான  குறுஞ்செய்தி வந்துவிட்டது. 

ஏனோ அந்த மிகப்பெரிய தொகை வைப்பு வைக்கப்பட்டதை எண்ணி நிம்மதி அடைய முடியவில்லை அவளுக்கு. 

ஒரு வித அழுத்தத்துடன் கூடிய பதற்றம் தொற்றிக் கொண்டது. 

எப்படியும் கீழே இருந்த நபருடன் பேசி விட்டு வந்து விடுவாள் என்று நினைத்திருந்தவளுக்கு கீதாஞ்சலி காணாமல் போன  செய்தி தாமதமாகத் தான் தெரிய வந்தது.

ஆதவ் அனைத்து  திருமண சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்க சப்தமில்லாமல் தனது ஆட்களை வைத்து அனைத்து இடங்களிலும் கீதாஞ்சலியை தேடச் சொல்லியிருந்தான் ருத்ரன்.

அவனது ஆட்களால் கூட கண்டு பிடிக்க முடியவில்லை. திருமண மண்டபத்தின் முன் புற சிசிடிவி கேமராக்கள் மட்டும் உபயோகத்தில் இருந்தது. பின் புற வாசலில் இருக்கும் கேமராக்கள் ஜாம் செய்யப்பட்டிருந்தது.

“ சார்.மண்டபத்தோட பின் பக்க சிசிடிவியை பக்கத்து அப்பார்ட்மெண்ட் பசங்க கிரிக்கெட் விளையாண்டு உடைச்சிருக்காங்க.. அதனால மேடம் வெளியே போயிருந்தா அந்த  வழியா தான் போயிருக்கணும். ஏன்னா முன்‌ பக்க வாசல் வழியா  போனதுக்கான எந்த ஒரு அடையாளமும் இல்ல சார்…” என்றான் ருத்ரனின் காரியதரிசி பார்த்திபன்.

ருதர்னின் முகம் பாறையென இறுகியிருந்தது. கீதாஞ்சலி மற்றும் ஆதவ்வின்  திருமண அழைப்பை ஏற்று காவல்துறையை சார்ந்தவர்களும் வந்திருந்தார்கள்.  

ஆதவ்வின் திருமணம் முடிந்தது.

 அனைத்து சம்பிரதாயங்களையும் முடித்துக் கொண்டு தந்தையின் அருகில் வந்து நின்றான்.

“ ப்பா…என்னாச்சு….கீதுக்கா எங்க போனா?  ஏதாவது விஷயம் தெரிஞ்சதா?” என்றான்.

“ இல்ல ஆதவ்…விதேஷோட அப்பா அம்மா கிட்ட விஷயத்தை பக்குவமா எடுத்துச் சொல்லணும்…மண்டபத்துல இருக்குற எல்லார் கிட்டயும் விசாரிச்சு பாரு… “ என்றவன் விதேஷ் , வளவன் மற்றும் நித்யாவிடம் கீதாஞ்சலியை காணவில்லை என்ற விஷயத்தை மனம் கனக்கக் கூறினான்.

அதை அவர்களிடம் நிதானமாக எடுத்துக் கூறுவதற்குள் அத்தனை அழுத்தம் அவனுள்.

மூவரும் கோபமாக ஏதோ முணுமுணுத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியேறினர்.

திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்கும் கீதாஞ்சலி காணாமல் போனது அதிர்ச்சியாக தான்‌ இருந்தது. சலசலப்ப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஆளாளுக்கு வாய்க்கு வந்ததை அலசி ஆராய்ந்து கொண்டே உணவை உண்டு விட்டு  சென்றனர்.

மண்டபத்தை காலி செய்து விட்டு கிளம்பும் சமயம் அங்கிருந்த சமையல்காரர் ஒருவர்‌ கொடுத்த தகவலின் படி மோகனாவுடன் தான் கீதாஞ்சலி பின் புற வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தாள் என்று ஆதவ்விற்கு தெரிய வந்தது.

ருத்ரன் வீட்டில் …..

ஆதவ், ருத்ரன் , ஜானகி மூவரும் சோஃபாவில்  அமர்ந்திருக்க தலை குனிந்து நின்றிருந்தாள் மோகனா….

மிருகேந்திரனின் கருப்பு நிற தார் ஜீப் சென்னையின் எல்லையைத் தாண்டி சீறி பாய்ந்து கொண்டிருந்தது.

அவனருகே இருந்த இருக்கையில் தலை சாய்ந்து கண்களை மூடி மயக்கத்தில் இருந்தாள் கீதாஞ்சலி.

அவளது அழகிய மதி வதனத்தை ரசித்தவன் குனிந்து அவளது உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டான்.

“ ராட்சஸி….” என்று முணுமுணுத்தவனின் மனம் நினைவிடுக்குகளில் தங்கியிருந்த நியாபகங்களை நினைவுபடுத்தி பார்த்தது..

ஏழாண்டுகளுக்கு முன்பு…

அப்பெண்ணிடம் பேசி விட்டு வந்த மிருகேனைப் பார்த்து முறைத்தவாறு நின்றிருந்தாள் கீதாஞ்சலி.

“ என்ன கீது..?ஏன்‌ அப்படி ரொமாண்டிக்கா பாக்குற?” என்று அவளது தோளைப் சுற்றி கைகளை போட்டான் மிருகேன்.

“ம்ம்ச்.. கையை‌ எடு..மிரு…” என்று‌ எரிச்சலுடன்  அவனது கையைத் தட்டி விட்டாள் கீதாஞ்சலி.

“ ஏ…என்ன.. டி? என்ன தான் உனக்கு பிரச்சினை ?”

“ அந்த பொண்ணு கிட்ட ஏன் அவ்வளவு நேரம் பல்லைக் காட்டி பேசிட்டிருந்த? ஓஹோ….அவ ரொம்ப அழகா இருந்தால் ல அதானே…!” என்றாள்.

“ அடிப்பாவி…  அந்தப் பொண்ணு ரொம்ப சின்னப் பொண்ணு . இப்படி அபாண்டமா பேசாத…” என்றான் கடுப்பாக.

அவளோ முகத்தை திருப்பிக் கொண்டு அந்த வீட்டினுள் நுழைந்தாள்.

அவள் பின்னோடு சென்றவன் அவளது கையைப்‌ பிடித்து இழுத்து நிறுத்தினான்.

அவளோ திமிறிக் கொண்டு‌ கையை‌ உதறினாள்.

“ ஏன் டி நீ இப்படி இருக்க…? அந்த பொண்ணு அட்ரஸை தொலைச்சிடுச்சு…தெருவோட பேரை  சொல்லி கேட்டுட்டு இருந்தா…அதான் சரியான வழிய  சொல்லிட்டு இருந்தேன்…இதை போய் தப்பா பேசுற நீ…முடியல டி உன்னோட..” என்று இடுப்பில் கை வைத்து பெருமூச்சு விட்டான் மிருகேன்.

“ ஆமா…டா…உனக்கு நான் ரொம்ப சலிச்சு போயிட்டேன்…அதான் என்னோட லவ் கூட உனக்கு கசக்குது…” என்று தனதறைக்குள் நுழைந்து கதவினை அடித்துச் சாற்றிக் கொண்டாள் .

நெற்றியை நீவிய படி சோஃபாவில் பொத்தென்று அமர்ந்தான் மிருகேன்.

தொலைக்காட்சியை‌ ஓட விட்டவன் சாற்றியிருந்த அவளது அறையின் கதவை வெறித்து பார்த்து விட்டு ரிமோட்டில் சேனலை மாற்றிக் கொண்டே இருந்தான்.

அவனது கைகளில் சிக்கி ரிமோட் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது

 

அவளது கோப முகம் அவனை இம்சிக்கவே, “ ம்ம்ச்..படுத்துறா…” என்று ரிமோட்டை தூக்கி போட்டு விட்டு எழுந்து கொள்ள முயலும்‌ போதே பொத்தென்று அவனருகே வந்தமர்ந்தவள் தனது காலைத் தூக்கி அவனது தொடை மீது வைத்து அவன்‌ எழுந்து கொள்ளாதவாறு அணை கட்டினாள்.

உதட்டில் உறைந்த சிரிப்புடன் அவளது மென் பஞ்சு பாதத்தை பிடித்து விட்டான்.

“ எனக்கு பசிக்குது…சாப்பிட போலாம்….வா…” என்றாள்‌ சுவற்றைப் பார்த்தபடி.

“ஃப்ரைடு ரைஸா…? ஐஸ் கிரீமா?” என்றான் அவளது கால் விரலுக்கு சொடக்கு எடுத்தபடி.

ஒற்றை விரலால் அவனது முகத்தை நிமிர்த்தியவள், “ ஃப்ரைடு ரைஸ் ஹோட்டல்ல….ஐஸ் கிரீம் மட்டும் வீட்டுக்கு வந்து “ என்று மெல்லிய குரலில் கூறி அவனது அடர்ந்த மீசையை பிடித்திழுத்தாள்.

அவளது கிறுங்கிய பார்வையில் அவனது இதயத்துடிப்பை எகிற வைக்க பிடித்துக் கொண்டிருந்த பாதத்தை விட்டுவிட்டு அவளது காலை தன் பக்கமாக பிடித்திழுத்து தன் மடி மீது  அவளை அமர வைத்து பின்னோடு  அணைத்துக் கொண்டான்.

“ ஐஸ் கிரீம் மட்டும் தானா?” என்று அவளது செவி மடலில் மீசை உரசக் கேட்டான்.

“ கொஞ்சம் ஐஸ்கிரீம் அப்பறம் நிறைய லவ்…” என்று கூறி விட்டு அவனை மையலாகப் பார்த்தாள்.

 

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top