இணை 26

செழியன் முகத்தில் அதிருப்தியை கண்டதும் “அவர் தான் மாமாகிட்ட போன்ல சொல்லிக்கிறேன்னு கூட்டிட்டு வந்துட்டாரு” என்றாள் வளர்மதி மெல்லிய குரலில்.

 

செழியன் மீண்டும் ஏதோ சொல்ல எத்தனிக்க, “மாமா” என்று கணவனை அடக்கினாள் கனிஇதழி.

 

ஆர்யன் அவன் தந்தைக்கு வேறு ஏதோ காரணத்தை சொல்லி அவரை சமாதானம் செய்து கொண்டிருந்தான். அவர் சமாதானம் ஆகாமல் பேசிக் கொண்டே இருக்க, 

 

“உங்களுக்கு பேரன் பேத்தியை பாக்கணும்னு ஆசை இருக்கா இல்லையா?” என்றான் ஆர்யன் அழுத்தமான குரலில்.

 

“இருக்கு” அவர் சற்றும் யோசிக்காமல் பதில் கூற

 

“அதுக்கு தான் கிளம்பி வந்துட்டோம், போதுமா”

 

வளர்மதி கணவனின் அதிரடி பதிலில் அதிர்ந்து அவனை பார்க்க, அவன் பார்த்த பார்வையும் அவன் பேச்சும் தந்த வெட்கத்தால் அனைவரின் முன்பும் நிற்க முடியாமல் சமையல் அறைக்குள் ஓடினாள். 

 

செழியனுக்கு இப்போது தான் கனிஇதழி தன்னை அடக்கியதற்கான காரணம் புரிந்தது. அவன் கனியை பார்த்து விழிக்க, “ஒன்னுக்கு ரெண்டு முறை என்னை அம்மாவாக்கிட்டு ஒன்னுமே தெரியாத பச்சை புள்ளை மாதிரி கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க” என்று முணுமுணுத்தாள். 

 

ஆதிசங்கரனும் மறுவார்த்தை பேசாமல் அறைக்குள் சென்று விட்டார். ஆர்யன் சங்கடத்துடன் அமர்ந்திருப்பதை பார்த்ததும், “நான் வளருக்கு ஏதாச்சும் சமைக்கிறதுல ஹெல்ப் வேணுமானு கேக்கறேன்” என்று எழுந்தாள்.

 

“நீ சமைக்க போகாம இருக்கறதே அவளுக்கு பெரிய ஹெல்ப்” என்றான் செழியன்

 

கனிஇதழி கணவனை மேல் மூச்சு வாங்க முறைத்தாள், அதில் அவன் பார்வை திசை மாறவும் அங்கே நிற்காமல் சமையலறைக்கு சென்று விட்டாள்.

 

ஆர்யன் இருவரையும் கவனிக்காமல் சமையலறைக்குள் இருந்த வளர்மதியை தான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

 

“மாப்ள பயப்படாதீங்க. பாப்பா நல்லாவே சமைப்பா. கனிக்கு தான் சமைக்க தெரியாது. என் அம்மாவுக்கு ஐஸ் வச்சு வேலையே செய்யாம ஏமாத்திடுவா” என்றான் செழியன் 

 

“உங்க பாப்பா இதுவரைக்கும் எனக்கு எதுவுமே சமைச்சு கொடுத்ததில்ல. அவளுக்கு சமைக்க தெரியும்னு கூட எனக்கு தெரியாது. ஆனா அண்ணன் வந்ததும் தடபுடலா விருந்து சமைக்க போயிருக்காளேனு பாத்தேன்” என்று சிரித்தான் ஆர்யன்.

 

“கல்யாணமாகி ஒரு வாரம் தானே ஆச்சு, இனிமே சமைப்பா” என்றான் செழியன் தங்கையை விட்டுக் கொடுக்காமல்

 

“அப்படியா? ஒரு வாரம் தான் ஆச்சா? நீங்க உங்க பாப்பா கிட்ட ரொம்ப நாளா பாக்க வராதததுக்கு காரணம் சொல்லிட்டு இருந்தப்போ நானும் எங்களுக்கு கல்யாணம் ஆகி ரொம்ப மாசம் ஆயிடுச்சுனு இல்ல நினைச்சேன்?” 

 

“சாரி மாப்ள” செழியன் சங்கடத்துடன் ஆர்யனை பார்க்க, “அச்சோ, சும்மா விளையாட்டுக்கு கேட்டேன். நீங்க சங்கடப்படாதீங்க” என்றான்.

 

“அதுக்கு இல்ல, பாப்பா உங்களை புரிஞ்சு ஏத்துக்கற சமயத்துல நானும் கனியும் நந்தி மாதிரி வந்துட்டோம். அதுக்குத் தான் சாரி கேட்டேன்”

 

“பரவால்ல” என்று செழியனுக்கு பதில் சொன்னாலும் ஆர்யனின் பார்வை வளர்மதியின் மீதே படிந்திருந்தது.

 

அனைவரும் சாப்பிட அமர்ந்த போது, வளர்மதி ஆர்யனுக்கு பரிமாறினாள்.

 

ஆர்யன் மனைவி சமைத்த உணவை அவளையே சாப்பிடுவது போல பார்வையால் அவளை ருசித்து, நாவால் உணவை ருசித்து சாப்பிட்டான். வளர்மதி அனைவரின் முன்னிலையிலும் கணவனின் பார்வையை தவிர்க்கவும் முடியாமல் சந்திக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள்.

 

செழியன் ஆதிசங்கரனிடம் “மாமா, ரெண்டுபட்டு இருந்த எங்க ஊர் திருவிழா ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் ஒத்துமையா நடக்க போகுது. அடுத்த வாரம் தான் திருவிழா, ஆனா இப்போ இருந்தே ஊர்ல கொண்டாட்டம் தொடங்கிடுச்சு. நீங்களும் எங்களோட நாளைக்கு ஊருக்கு வாங்களேன், எங்க ஊர் திருவிழா எப்படி இருக்குனு பாருங்க” என்றான் 

 

“எனக்கும் ஆசை தான்” என்ற ஆதிசங்கரன் ஆர்யனை பார்க்க, “நீங்க மச்சானோட கிளம்பறதா இருந்தா கிளம்புங்கப்பா. நாங்க அடுத்த வாரம் வர்றோம்” என்றான் ஆர்யன் பெருந்தன்மையுடன்

 

“ஆனாலும் எங்க அண்ணனுக்கு ரொம்ப பெரிய மனசு தான்” என்றாள் கனிஇதழி சிரித்துக் கொண்டே

 

ஆர்யனுக்கு அவள் கிண்டலில் வெட்கம் வந்து விட, “சும்மா இரு” என்று கண்களால் கெஞ்சினான்.

 

அனைவரும் சாப்பிட்டு முடித்ததும், ஆதிசங்கரன் உறங்க சென்றுவிட செழியனும் ஆர்யனும் காலாற நடந்து விட்டு வருவதாக வெளியே சென்றனர்.

 

“வளரு, அண்ணன் தவிக்கறத பாத்தா உங்களுக்குள்ள எதுவும் நடக்கல போலருக்கு” என்று விசாரித்தாள் கனிஇதழி

 

“இல்ல, இனிமே தான்” என்றாள் வளர்மதி மெல்லிய குரலில்

 

“பாவம்டி மனுஷன், உனக்காக மூணு வருஷம் காத்திருந்தது பத்தாதுனு கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரியாவே வச்சிருக்கியே” என்று தோழியை திட்டியபடி, அவளுக்கு அலங்காரம் செய்ய ஆரம்பித்தாள்.

 

“எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கே?” வளர்மதி சிணுங்க

 

“சும்மா இரு, இன்னைக்கு நாள் நல்லா இருக்குனு அத்தை போன் போட்டு சொன்னாங்க”

 

“எதுக்கு?”

 

“உன் அண்ணங்காரன் பாப்பானு கூப்பிடறதால நீ பாப்பாவாவே பிக்ஸ் ஆயிட்டியா? முதல்ல என் அண்ணனுக்கு பாப்பாவ பெத்து கொடுக்கற வழியை பாரு. இல்லனா நாத்தனார் கொடுமைக்கு தயாரா இரு” என்று பொய்யாக மிரட்டினாள் கனிஇதழி

 

வளர்மதி கனிஇதழியை கட்டிக் கொண்டாள். “ப்ரூட்டி உன்னால தான்டி நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன். அண்ணன் என்மேல பாசம் காட்றது வேற, நாங்க ஒண்ணா வளர்ந்தோம். ஆனா நீ அப்படி இல்ல, உன் மனசு தெரியாம உன்னையும் அண்ணனையும் எடுத்தெறிந்து பேசி இருக்கேன். அதை எல்லாம் மனசுல வைக்காம எனக்கு நல்லது மட்டுமே பண்ணிட்டு இருக்கீங்க. நான் பேசினதை நினைச்சு இப்பவும் மனசு பாரமாவே இருக்கு. என்னை மன்னிச்சிடு கனி, அப்பதான் என்னோட பாரம் குறையும்” என்று வளர்மதி மனம் திறந்து மன்னிப்பு கேட்டாள்.

 

“ஏய் லூசு, நமக்குள்ள அடிச்சுக்கறதும் சேர்ந்துக்கறதும் சின்ன வயசுல இருந்து நடக்கறது தானே. புதுசா மன்னிப்பு கேட்டுட்டு இருக்கே?” என்று கனிஇதழி தோழியின் தலையில் லேசாக குட்டினாள்.

 

“நீ போய் உங்க ரூம்ல இரு, அண்ணனை கொஞ்சம் வெறுப்பேத்திட்டு அப்புறம் ரூமுக்கு அனுப்பறேன்” என்று வளர்மதியை மாடிக்கு அனுப்பி வைத்தாள்.

 

கால் மணி நேரத்திற்கு பிறகு செழியனும் ஆர்யனும் வந்து விட்டனர். ஆர்யன் பார்வையால் மனைவியை தேட, “அண்ணா வளர்மதியை தேடறீங்களா? நாளைக்கு தான் நாங்க ஊருக்கு போறோமே, ரெண்டு பேரும் நிறைய பேச வேண்டி இருக்கு. அதனால அவ இன்னைக்கு எங்களோடவே படுத்துக்கட்டும். நீங்க போய் தூங்குங்க” என்றாள்.

 

ஆர்யன் செழியனை பாவமாக பார்க்க, செழியனோ கனிஇதழியை அழுத்தமாக பார்த்துக் கொண்டிருந்தான். அவனும் அல்லவா தன் மனைவியுடன் தனிமையில் இருக்க நினைத்தான். இப்போது தங்கையுடன் எப்படி ஒரே அறையில் தங்குவது?

 

இருவராலும் கனிஇதழியை முறைப்பதை தவிர எதுவும் செய்ய முடியவில்லை. ஆர்யன் வேண்டா வெறுப்பாக மாடியேறினான். இந்த ஒரு வாரமாக மதியுடன் உடலால் இணையாவிடினும் ஒரே படுக்கையில் இணைந்தே உறங்கினார்கள். இப்போது தனிமையில் அவள் இல்லாமல் எப்படி உறங்குவது? என்று மனம் வெதும்பியது.

 

கைப்பேசியை எடுத்து வளர்மதிக்கு அழைத்தான். அழைப்பு ஏற்கப்பட்டதும், “அண்ணா, வளரோட போன் என்கிட்ட தான் இருக்கு. என்ன விஷயம்?” என்றாள் கனி

 

“ஒண்ணுமில்ல” என்றவன் அழைப்பை துண்டித்து அறைக் கதவை திறந்தான்.

 

உள்ளே இருட்டாக இருக்கவும் மின்விளக்கை உயிர்பித்து சட்டையை கழட்டி நீள் இருக்கையில் வீசிவிட்டு கட்டில் பக்கம் திரும்பினான். வெள்ளி நிற சில்க் புடவையில் தலை நிறைய மல்லிகைப் பூவை சூடி வெண்மதியாக அமர்ந்திருந்தாள் வளர்மதி!

 

அவன் கண்களையே அவனால் நம்ப முடியவில்லை. அவளையே நினைத்து ஏங்கி கொண்டு வந்ததால் வந்த பிரமையா என்று கண்களை தேய்த்துவிட்டு பார்த்தான்.

 

வளர்மதி நாணத்தில் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தாள். ஆர்யன் வேகமாக சென்று அவள் தோளை அழுத்தமாக பற்றவும் மெல்ல நிமிர்ந்தாள்.

 

ஆர்யன் நம்பமுடியாமல் மனைவியை பார்க்க, அவளோ தன் இருகைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.

 

“மதி” என்று அவள் கரங்களை அகற்றி அவளின் நாடியை நிமிர்த்தினான்.

 

கண்களை திறக்காமலே “ம்” என்றாள்.

 

வெள்ளி நிற சில்க் புடவை அவள் மேனியை தழுவி இருக்க, வெள்ளி நிலவாய் ஜொலிக்கும் மனைவியின் அழகை கண்டு மலைத்தான்.

 

மதி முகத்தை வருடியவனின் விரல்கள் அவள் கன்னத்தில் கோலமிட்டு உதடுகளை அழுத்தமாக வருட, அவளின் உடல் லேசாக நடுங்க தொடங்கியது. ஆதரவிற்காக அவன் கரத்தை பிடித்துக் கொண்டாள்.

 

“மதி கண்ணை திற” என்று அவள் இமைகளின் மீது இதழ் பதித்தான்.

 

தாமரை மொட்டு விரிப்பது போல மென்மையாக அவள் இமைகளை திறக்க, ஆர்யனின் பார்வை கதிர்வீச்சு அவளுக்குள் அதிவேகமாக நுழைந்தது.

 

அவன் ஒற்றை பார்வை எதற்கு இவ்வளவு உஷ்ணத்தையும் நாணத்தையும் கொடுத்து அவள் கன்னங்களை சிவக்க வைக்கிறது என்று புரியாமல் மீண்டும் கரங்களால் முகத்தை மூட எத்தனிக்க அவன் இரு கரங்களால் அவள் கரத்தை பிடித்திருந்தான். அவள் காதில் ரகசியமாக, 

 

“வெண்ணிலாவே வெள்ளை பூவே வா வா…

வெட்கம் என்னும் ஆடை வேண்டாம் வா வா” என்று மெல்லிய குரலில் பாடி காதில் அழுத்தமாக இதழ் பதித்தான்.

 

வெண்ணிறத்தில் இருந்து இளஞ்சிவப்பாக மாறும் நிலத்தாமரை (changeable rose) மலர் போல மதியின் முகம் ரத்தமென சிவந்து விட்டது. காதில் பதித்த இதழ்களை அப்படியே நகர்த்தி அவள் கன்னத்தில் கவிபாடவும், மீண்டும் இமைகளை மூடிக் கொண்டாள்.

 

ஆர்யனின் இதழ்கள் அவள் கன்னத்தில் இருந்து முகமெங்கும் உலா வந்து விட்டு இதழ்களில் இளைப்பாற துவங்கியது. பலமுறை இதழ்களை மென்மையாக ஒற்றி அவளுக்கு ஒத்திகை காட்டிவிட்டு மெல்ல மெல்ல வன்மைக்கு மாறிக் கொண்டிருந்தான்.

 

இடைவிடாத அவன் இதழ் யுத்தத்தில் தடுமாறி அவள் பின்னால் சாய்ந்தாள். அதில் ஆர்யனின் இதழ்கள் சறுக்கி சங்கு கழுத்தில் வழுக்கிக் கொண்டு நகர்ந்தது. மிடறு விழுங்கியவளின் தொண்டைக்குழியில் முத்தமிட்டான். 

 

மதியின் மயக்கும் மதிவதனத்தை ரசித்தவன் கண்கள் அவள் மேனியின் இரு மதிகளை கண்டதும் மூச்சடைத்து போனான். அப்போதே அதை களவாடும் எண்ணத்துடன் கைப்பற்றினான். கணவனின் பிடியில் அதிர்ந்து அவள் கட்டிலில் சாய, அவனோ அவள் மீது படர்ந்திருந்தான். கணவனின் கைகளை விலக்க போராடியவளின் கரங்களை இறுகப்பற்றி இதழ்களால் அவளை ஆராதிக்க தொடங்கி விட்டான்.

 

அவள் உடல் துள்ளியதில் வெள்ளி நிற ஆடை ஒதுங்கி வெண்ணிற இடை அவன் கண்ணை பறிக்க, அங்கே தன் கையால் வருடி, பின் இதழ்களால் வருடவும் கூச்சத்தில் நெளிந்தாள். முத்தங்களால் அவளை மொத்தமாக திணறச் செய்தான்.

 

தருகின்ற முத்தத்தை வாங்கி விடு போதும்

வாங்கி வைத்த முத்தத்தை தந்து விடு போதும் 

என்ற ரீதியில் அவன் முத்தங்களால் அவளை ஆராதிக்க, 

 

கொஞ்சம் கொஞ்சமாக அவளை கொள்ளை கொண்டிருந்தவன் மொத்தமாக தன்னை கொள்ளையிட்டு கொள்ளட்டும் என்பது போல அவள் வெண்ணிற ஆடை நழுவி அவனுக்கு வழிகொடுத்தது. உடையோடு காற்றாக அவளுக்குள் நுழைந்தவன் உயிருக்குள் மழையாக விழுந்து விட துடித்தான்.

கணவனின் கரங்கள் பட்ட இடமெல்லாம் அனலாய் கொதிக்க, வெட்கத்துடன் அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். 

“மதி உனக்கு ஓகே தானே” என்றான் மென்மையாக

“ம்”

“அப்புறம் ஏன்டி இவ்வளவு வெட்கம்?”

“வெட்கமா இருக்கே, என்ன பண்றது?” சிணுங்கினாள்

“வா என்ற சொல்லுக்கு வளைந்து கொடு போதும்…
வள்ளல் போல் ஆடைகளை வழங்கி விடு போதும்…” 

என்று மெல்ல பாடியவன் அவள் ஆடைகளுக்கு விடுதலை கொடுக்கவும், அவன் கரங்களிலேயே சிறைப்பட்டாள்.

ஆர்யனின் அதிரடியில் அவள் அவனை விலக்கவும் முடியாமல் அவனை விட்டு விலகவும் முடியாமல் திணறினாள். ஆர்யன் மொத்தமாக அவளை கொள்ளையிட தொடங்கியதும், அவள் அங்கம் மொத்தம் அவன் கைவசம்.

விடிகின்ற வரை என்னை அள்ளி எடு போதும்…

விடியாது என்று மட்டும் சொல்லிவிடு போதும்…

 

என்று அவள் அவனுக்கு மொத்தமாக தன்னை அள்ளித்தர முடிவெடுத்து அவனுடன் ஒத்துழைக்க, ஆர்யன் மனைவியின் ஒத்துழைப்பில் வேகமாக முன்னேறி அவளை முழுவதுமாக ஆக்ரமித்திருந்தான். 

 

இருமனம் ஒரு மனதாக சேர்ந்த பின்பு கூடியதாலோ என்னவோ அவர்களின் சங்கமம் இருவருக்குள்ளும் மிகுந்த மனநிறைவை கொடுத்திருந்தது. மனமொத்த தாம்பத்யம் யோகம் போல நடந்தேறி அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்து வைத்திருந்தது. 

 

விடிகின்ற வரையிலும் தவணை முறையில் அவளை கொள்ளையிட்டு கொண்டாடி தீர்த்தவன் வெற்றி களிப்புடன் மனைவியின் நெற்றியில் இதழ்பதித்து விலகி படுத்த போது மணி எட்டாகி இருந்தது. 

 

(தொடரும்)

 

 

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
1 Comment
error: Content is protected !!
Scroll to Top