அத்தியாயம் 8

இரவு உணவுவேளையில் அதேபோல் எல்லாரிடமும் விசயம் பரிமாறப்பட்டது.முதலில் எல்லாரும் முடியாது என்றனர்.பிறகு ஒத்து கொண்டனர்.ஆனால் மீராவும் குந்தவையும் இது ஶ்ரீநிதி சொன்னால் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒவ்வொரு காரணம் சொல்லி மறுத்தார்கள்.அவர்கள் இந்த படத்தை புதுப்பட இயக்குனர் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடித்துள்ள கதாநாயகி அறிமுக நடிகை அதனால் படம் கண்டிப்பாக நல்லாயிருக்காது என்று ஒவ்வொரு காரணமாக சொல்லி கொண்டே இருந்தனர்.அதனால் ஶ்ரீயின் முகம் சுருங்கிவிட்டது.

அதைப்பார்த்த கிருஷ் அவர்களிடம் “இங்க பாருங்க அத்தை… இந்த வாரம் ஶ்ரீநிதியுடையது…அதனால் அவள் சொல்லுகிற படத்திற்கு தான் போக வேண்டும்…இந்த படம் ரொம்ப நல்ல இருக்குனு…நானும் கேள்விப்பட்டேன்…புது இயக்குனர் சில பேர் இப்போதெல்லாம் படம் நன்றாக தான் எடுக்கிறார்கள்…சோ…படம் எப்படி இருக்குனு போய் தான் பார்ப்போமே” என்றான் முடிவாக அவரைப் பார்த்து.

அதன்பிறகு தான் குந்தவையும் மீராவும் வேற வழியில்லாமல் ஒத்துக்கொண்டனர்…ஶ்ரீநிதிக்கு அந்த நாளில் இரண்டாவது அதிர்ச்சி கிருஷினால் ஏற்பட்டது.ஏனெனில் இதுவரை கிருஷ் ஶ்ரீநிதிக்கு ஆதரவாக பேசியதே இல்லை…அதனால் தான் இன்று இன்பமாக அதிர்ச்சி அடைந்தாள்.ஶ்ரீநிதி மட்டும் இல்லாமல் இன்னும் மூன்று பேர் கிருஷினால் அதிர்ச்சி அடைந்தனர்.ஆனால் மற்றொரு வழியில்.

அதில் ஒருவர் ரிஷி ‘என்னடா ரிஷி…?இந்த ஶ்ரீ அண்ணனையும் கரெக்ட் பண்ணிட்டாள் போலவே…அப்போ நான் மட்டும் அண்ணன்கிட்ட தனியாக திட்டு வாங்கணுமா…??அப்போ எனக்கு இருந்த ஒரு கம்பெனியும் போச்சா…!!ஐய்யையோ இது தப்பாச்சே…!!!’ என்று ரிஷியும்,

இரண்டாவது கீதா ‘இந்த ஶ்ரீ…இதுவரைக்கும் கிருஷ் அண்ணா இவளுக்கு ஆதரவாக பேசினது இல்லைனு சொன்னாள்…ஆனால் அப்படி இல்லை போலவே…அதற்கு ஆதரம் இதோ என் கண் முன்னால் இப்போது நடந்தது தான் ஆதரம்…ஈவ்னிங் கூட என் மேல் சத்தியம் பண்ணாலே…??ஶ்ரீ என்கிட்ட பொய் சொல்லமாட்டாளே…!ஆனால் இப்போ நடந்தது இது தான் உண்மை என்று காட்டுது…யோசி கீதா… யோசி…அப்…அப்போ இதுதான் உண்மை…சொன்ன மாதிரியே மேலிருந்து தொப்கடீர்னு கீழே தள்ளிவிட்டுட்டாளே…பாதகத்தி… எப்படியெல்லாம் வீர வசனம் பேசினாள்…எல்லாம் பொய்…பொய் வேஷம் …ஐய்யையோ அப்போ என் நிலைமை…!!!’ என்று கீதாவும்,

மூன்றாவது மீரா ‘இந்த அத்தான் எதுக்கு இத்தனை நாள் இல்லாமல் இன்றைக்கு ஶ்ரீக்கு சப்போர்ட் பண்ணினார்…??அப்போ ஒரு வேளை கிருஷ் அத்தான்…ஶ்ரீயை லவ் பண்ண ஆரம்பிச்சிட்டரோ…அப்போ என் நிலைமை…!!’ என்று மீராவும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதத்தில் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் இதில் சம்பந்தப்பட்ட இருவரும் தனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றவாறு அவர்கள் அருகில் உள்ளவர்களிடம் பேசி கொண்டு இருந்தனர்.

இரவில் கீதா,ஶ்ரீநிதியின் அறையில் உறங்குவதற்காக வந்தாள்.ஆனால் கீதா ஶ்ரீயிடம் எதுவும் பேசவில்லை.வாணியிடம் மட்டும் பேசி கொண்டு இருந்தாள்.ஶ்ரீ மீது கடும் கோபத்தில் இருந்தாள்.அதன்பிறகு தான் ஶ்ரீ கீதாவைக் கவனித்தாள்.

என்ன ஆச்சு இவளுக்கு ஈவ்னிங் நல்ல தானே இருந்தாள் என்று யோசிக்கும்போதே அவள் மூளையில் பல்ப் எரிந்தது.எரிந்த அடுத்த நிமிடமே அணைந்தது…ஐய்யையோ இவக்கிட்ட மாட்டிக்கிட்டேனே… இந்த ஹிட்லர் இருக்காரு பாரு…இன்னைக்கு ஒரு நாளிலேயே இருக்கும் அத்தனை விதமான உணர்வுகளிலும் பயணிக்க வைத்துவிட்டார் என்று பற்களை நறநறவெனக் கடித்தாள்.

இருந்தும் ஶ்ரீ நீ சமாளி என்று அவளுக்கு அவளே தட்டி கொடுத்துவிட்டு கீதாவிடம் பேசி சமாளிப்பதற்குள் போதும் போதும் என்றானது. சமாளித்துவிட்டு இருவரும் படுக்கையில் படுத்தார்கள்.

படுத்தவுடன் கீதா தான் முதலில் பேச ஆரம்பித்தாள்.

“ஶ்ரீ உங்கள் குடும்பத்தில் எல்லாரும் ரொம்ப நல்லவர்களாக இருக்கிறார்கள்…அதுவும் ரிஷி இருக்காரு பாரு…சோ ஸ்வீட் பெர்சன்டி…ஐ லைக் ஹீம்டி” என்றாள் கீதா கண்ணில் கனவு மிதக்க.

வாணியின் முகத்தில் எள்ளும் கொல்லும் வெடித்தது.அதனைப் பார்த்த ஶ்ரீ நமுட்டு சிரிப்புடன் “ஆமாண்டி…ஹி இஸ் வெரி நைஸ் மேன்டி” என்று இழுத்தவாறு வாணியைப் பார்த்தாள்.வாணியின் முகம் இன்னும் கோபத்தில் சிவந்தது.

கீதா தீடிரென்று “ஶ்ரீ பேசாமல் நான் ரிஷியைக் கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிகிறேன்…அவனுக்கு ஆள் யாரும் இல்லை தானே…???” என்று கேட்டு ஆர்வமாக ஶ்ரீயைப் பார்த்தாள்.

அவ்வளவுதான் ஶ்ரீ விழுந்து விழுந்து சிரித்தாள்…கீதா புரியாமல் இப்போ நான் என்ன கேட்டேன்னு இப்படி சிரிக்கிறாள் என்று இவளைப் பார்த்து கொண்டு இருந்தாள்.

சிறிதுநேரம் கழித்து ஶ்ரீ சிரிப்பை நிறுத்திவிட்டு தன்னை புரியாமல் பார்த்து கொண்டு இருக்கும் தோழியைக் கண்களால் வாணியைப் பார்க்கும்மாறு சைகைச் செய்தாள்.

கீதா திரும்பி வாணியைப் பார்த்தாள்.அவள் இவளை கண்களால் எரித்துக்கொண்டு இருந்தாள்…அவளுக்கு மட்டும் எரிக்கும் சக்தி இருந்தால்…இந்நேரம் கீதா சாம்பலாகி இருப்பாள்…அந்த பார்வையின் உஷ்ணத்தைத் தாங்க முடியாமல் கீதா சடாரென்று திரும்பி தன் தோழியைப் பாவமாக பார்த்து கண்களால் எதனால் அவள் என்னை முறைக்கிறாள்…?? என்று வினவினாள்.ஶ்ரீ இவளின் முகத்தைப் பார்த்து இன்னும் சிரிப்பு வர அதனை அடக்கி அப்புறம் சொல்லுகிறேன் என்று சைகை செய்தாள்.

அவ்வளவுதான் கீதா எதற்கு வீண் வம்பு என்று கப்சீப்பென்று வாய் மூடிக்கொண்டுப் படுத்து உறங்கினாள்.ஶ்ரீயும் இவள் படுத்ததைப் பார்த்து புன்னகையுடன் தூங்கப் போனாள்.ஆனால் தூக்கம் வராமல் அன்று ஐஸ்கிரீம் பார்லரில் நடந்ததை நினைத்து பார்த்து கொண்டுயிருந்தாள்.

“வேற யாரு…ரமேஷ் தான்” என்று இன்னொரு தோழி கேட்டவுடன்.

ஶ்ரீ திரும்பி கீதாவை நன்றாக முறைத்தாள்.இதெல்லாம் உன் வேலை தானா…? என்பதை போல்.

கீதாவைப் பார்த்தவாறு “இவ சொன்னாளா…?அதெல்லாம் நம்பாதீங்க…அவர் ஒண்ணும் என்னுடைய ஆள் கிடையாது…அவர் தான் என்னை காதலிக்கிறார் நான் இல்லைப் புரியுதா…??” என்று அழுத்தமாக கூறினாள்.

“யெஸ்…யெஸ்…உங்க வீட்டிலே இரண்டு அழகான பசங்க இருக்கும்போது நீ எதுக்கு வெளியில் போய் சைட் அடிக்க போறே… எனக்கு மட்டும் இந்த மாதிரி அம்மாவுடைய தம்பிங்க இருந்தாங்க… நான் இந்நேரம் கல்யாணமே பண்ணி…குழந்தைகளே பெத்திருப்பேன்” என்று கூறி பெருமூச்சு விட்டாள் ஒருத்தி.

ஹாஹாஹா…என்று எல்லாரும் சிரித்தனர். “அதான்டி ஶ்ரீ…அவளை மாதிரி…யாரும் இருக்க மாட்டார்கள்.வீட்டிலே இரண்டு முறைப்பசங்க இருந்தும்…யாரையும் திரும்பி பார்க்கலை இல்லை…இதிலிருந்தே தெரியல…அவளுடைய ஒழுக்கத்தைப் பற்றி” என்று ஒருத்தி புகழ்ந்து தள்ளினாள்.

ஶ்ரீ அங்கு இருக்கும் எல்லாரையைம் முறைத்து “ஏய்…என்ன என்னை எல்லாரும் கிண்டல் பண்ணுறீங்களா…???”

“இல்லைடி…அவள் சொன்னது…உண்மை தானே ஶ்ரீ…காலேஜில் கூட எத்தனை பசங்க உன் பின்னாடி சுத்தனாங்க…ஆனால் நீ யாரையும் காதல் பண்ணலை”என்றாள் கீதா தன்னுடைய தோழியை நினைத்து பெருமையாக.மற்ற தோழிகளும் அதை ஒத்துக்கொண்டனர்.

“போதும்…போதும்…என்னுடைய பெருமை…நல்ல சமாளிச்சீங்க… இல்லையெனில்…” என்று டேபிளில் இருக்கும் கத்தியை எடுத்துவாறு,

இதை வைத்து…என்றவுடன் எல்லாரும் வேணாம்டி என்றவாறு அலறினார்கள்.

ஹாஹாஹா…என்று சிரித்து “ஏய்…கூல் கேர்ள்ஸ்…உங்களுக்கு இந்த கேக் வெட்டி கொடுக்கறேனு…சொல்ல வந்தேன்” என்று இமைசிமிட்டினாள்.

எல்லாரும் அவளை முறைத்தனர்.கீதா ஶ்ரீயை வம்புக்கு இழுக்க நினைத்து “ஆனால் ஒரு விசயம் மட்டும் இடிக்குது ஶ்ரீ…உன் பின்னாடி சுத்திய பசங்களைக் கூப்பிட்டு…ஆட்வைஸ் பண்ணுவப் பாரு…அப்போ எனக்கு ஒரு நிமிடம்…உன்னை பார்த்து…அன்னைதெரசா தான் நம்ப காலேஜிக்கு வந்துட்டாங்களோனு நினைப்பேன்” என்று சிரியாமல் கூறினாள்.

இப்போது ஶ்ரீநிதி திரும்பி கீதாவை முறைத்தாள்.அதன்பிறகு அவளை சமாதானப்படுத்தி… தோழிகள் இருவரும் எல்லோரிடமும் விடைப்பெற்று கிளம்பினார்கள்.வெளியில் வந்து வண்டியை எடுக்கும்போது கீதாவைப் பார்த்தமாதிரி நின்று இருந்தாள் ஶ்ரீ. தீடிரென்று கீதா முகம் பிரகாசமாகி “ஶ்ரீ அங்கப்பாரு…யாரு உன்னை பார்க்க வந்திருக்கிறாங்கனு” என்றாள் முக மலர்ச்சியுடன்.

ஒரு வேளை ரிஷி தான் வந்திருப்பனோ என்று நினைத்து சந்தோஷத்துடன் வேகமாகத் திரும்பி பார்த்தாள்.

உடனே அதே வேகத்தில் ஶ்ரீநிதி திரும்பி கீதாவைப் பார்த்து முகத்தில் எரிச்சலுடன் “அவன் ஏன் என்னை ஃபலோ பண்ணுறான்…?” என்று வினவினாள்.

“ஏய் ஶ்ரீ…உனக்கு ஏன் அவன் உன்னை ஃபலோ பண்ணறானு தெரியாதா…?? அவன் உன்னை இரண்டு வருஷமா காதலிக்கிறான்…அவனும் நல்ல பையன் தான்…நல்ல வசதியான குடும்பம்…நல்ல அழகாக இருக்கிறான்.அப்புறம் ஏன் நீ அவனைத் திரும்பி கூட பார்க்க மாட்டிகிறே…??…ஆனால் ஒண்ணுமட்டும் எனக்கு புரியல ஶ்ரீ…உன் பின்னாடி சுத்திய மற்றவர்களை எல்லாம் அழைத்து புத்திமதி சொன்ன நீ…ஏன் ரமேஷைக் கூப்பிட்டு புத்திமதி சொல்லலை…???அது ஏன்னு கொஞ்சம் யோசித்து பார் ஶ்ரீ…???”என்றாள் கீதா உண்மையைத் தெரிவித்துவிடும் ஆவலுடன்.

ஶ்ரீ அவளை  நன்கு முறைத்தாள். அதே கோபத்துடன் அவள் கையைப் பிடித்து “எனக்கு எதுவும் புரிய வேண்டிய அவசியம் இல்லை…கீது இப்ப வரியா இல்லையா?” என்றாள் ஶ்ரீ.இதன்பிறகு இவள்கிட்ட பேசி ஒண்ணும் ஆகாது என்று தெரிந்து இருவரும் வண்டியை எடுத்து கிளம்பினர்.

அங்கு நின்றிக்கொண்டிருந்தவன் ரமேஷ்.ரமேஷ் இவர்களுக்கு எதிர் சாலையில் தனது காருடன் நின்று இருந்தான்.ஶ்ரீநிதி கிளம்பியவுடன் அவள் போவதைப் பார்த்துவிட்டு திரும்பி நடந்தான் தனது காரை நோக்கி.

ரமேஷ் ரிஷியின் தோழன் சுரேஷின் அண்ணன்.ஶ்ரீயை ஒரு தடவை ரிஷியின் செல்லில் உள்ள புகைப்படத்தில் பார்த்தான்.பார்த்தவுடன் அவளை மிகவும் பிடித்துவிட்டது.அதன்பிறகு அவன் தம்பியிடம் ஶ்ரீநிதியைப் பற்றி விசாரித்து தெரிந்து கொண்டான்.அதிலிருந்து ஶ்ரீயை நிழல் போல் பின்தொடர்ந்தான்.

ஒருமுறை ஶ்ரீநிதி ரிஷியுடன் பைக்கில் போகும்போது பார்த்து காரிலிருந்து இறங்கிவந்து ரிஷியுடன் பேசினான்.ரிஷியிடம் பேசினான் என்றுதான் பெயர் ஆனால் பார்வை முழுதும் ஶ்ரீயின் மேல்தான் இருந்தது.

ஶ்ரீ அதனை கண்டு கொண்டாள்.அதைக் கண்டு அவளுக்கு எரிச்சலாக வந்தது.அப்போது ரிஷி அவனை அறிமுகம் படுத்த…ஶ்ரீ வேணுமென்று வாயை காது வரை இழுத்து பிடித்து “ஹாய்” என்றாள்.

அவனும் “ஹாய் ஐயம் ரமேஷ்…நாங்க சொந்தமா ஸ்பின்னிங் நூல் பிஸினஸ் பண்ணுகிறோம்.சஞ்சீவ் குருப் ஆப் கம்பெனிஸ் கேள்விப்பட்டு இருக்கீங்களா…?அதுதான் எங்க கம்பெனி” என்றான் சிறு முறுவலுடன்.

“ஓ…நான் கேள்விப்பட்டு இருக்கேன்” என்று சுரத்தே இல்லாமல்  கூறிவிட்டு,

ரிஷியிடம் திரும்பி “ரிஷி வா போகலாம்…கிருஷ் அத்தான் வீட்டிற்கு வந்துவிடுவாங்க” என்றாள் எரிச்சலை உள்ளடக்கிய குரலில்.

கிருஷ் என்ற பெயர் சொன்னால் தான் ரிஷி இந்த இடத்தை விட்டு நகர்வான் என்று தெரிந்து சொன்னாள்.நினைத்ததுபோல் அது சரியாக வேலை செய்தது.

ரிஷி உடனே ரமேஷைப் பார்த்து “பை அண்ணா…எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு” என்று கூறி கிளம்பினான்.

ரமேஷ் ஶ்ரீயை பார்த்து கொண்டே விடைப்பெற்றான்.அவனுக்கு ஶ்ரீ கிருஷ் அத்தான் என்று சொன்ன உடனே …யார் என்று தெரிந்து கொள்ளணும் என்று ஆர்வம் எழும்ப அவன் தம்பிக்கு போன் செய்து யார் கிருஷ் என்று விசாரித்தான்…ரிஷியுடைய அண்ணன் என்று தெரிந்தபிறகு அவனுக்கு மிகவும் கவலையாகிவிட்டது…இனிமே நமக்கு போட்டி அதிகமாக இருக்கிறது…நாம் கவனமாக இருக்க வேண்டும் என்று அவளை பின் தொடர்ந்து கொண்டு இருந்தான்.

ரமேஷை சந்தித்தபிறகு தான்…ரமேஷ் தன்னை தினந்தோறும் பின் தொடர்வதை கவனித்தாள்.ஶ்ரீ படிப்பு முடிக்கபோகிறாள்,இன்றைக்கு அவளுக்கு கடைசி தேர்வு என்று தெரிந்து அவளைப் பார்த்து எப்படியாவது பேசி விட வேண்டுமென்று அவளுடைய கல்லூரிக்கு வந்தான்.அவர்கள் ஐஸ்கிரீம் பார்லருக்குள் நுழைந்தலிருந்து கவனித்துக் கொண்டு இருந்தான். வெளியில் வந்து அவனைப் பார்த்த பிறகு வழக்கம்போல் ஶ்ரீ அவனை கண்டு கொள்ளவில்லை.இதன்பிறகு பெற்றோரிடம் தான் பேச வேண்டும் என்று முடிவு செய்து கிளம்பினான்.

ஶ்ரீயும் அவனைப் பற்றி தேவையில்லாமல் வீட்டில் சொல்லி ஏன் வீண் பிரச்சினை கிளப்பவேண்டும் என்று அமைதியாக இருந்தாள்.பின்னால் ஏன் சொல்லவில்லை என்று வருத்தப்படப்போவதை அவள் அறியாள்… விதி வலியது…அது யாரைவிட்டது.

அன்று நடந்ததை நினைத்துப் பார்த்து கடைசியாக கீதா கேட்ட கேள்வியை நினைத்து ஏன் நான் ரமேஷை மட்டும் கூப்பிட்டு புத்திமதி கூறவில்லை???என்று யோசித்து பார்த்தவளுக்கு விடைத்தெரியவில்லை… சரி அதைப் பற்றி பிறகு யோசிக்கலாம் என்று கண்மூடி தூங்கினாள்.

ஒரு விசலமான அறையில் ஶ்ரீநிதி அமர்ந்து இருக்கிறாள்…ஒரு ஆடவன் அந்த அறைக்குள் நுழைந்து அவளை நெருங்கி…கையைப் பிடித்து எழுப்பி…அவள் இடையில் கை வைத்து அவளை இறுக்கமாக அணைக்கிறான்.ஶ்ரீ அவன் முகத்தைப் பார்க்க விரும்பாமல் வெட்கத்துடன் தலைகுனிகிறாள்.அந்த ஆடவன் இதற்கு மேலும் தன்னைக் கட்டுப்படுத்தி கொள்ள முடியாமல் அவள் முகத்தை ஒற்றை விரலால் நிமிர்த்தினான். நிமிர்ந்தவளின் கண்கள் மூடியிருந்தது…அவன் அவளின் சிப்பி இமைகளில் முத்தம் வைத்துவிட்டு… அவள் இதழ் அமுதத்தைச் சுவைக்கும் ஆசையில்…தன்னுடைய இதழை… கீழ்நோக்கி நகர்த்தி…அவள் இதழ்களுடன் தன் இதழ்களை இணைக்கிறான்.

அவள் இதழில் ஒரு நீண்ட நெடிய முத்தயுத்தத்தை நடத்தினான்.அது எப்போது முடியும் என்று தெரியாமல் நீடித்துகொண்டே இருந்தது.இதுவரை அதை கண்மூடி ரசித்து கொண்டு இருந்தவள் யாரவன் என்பதை அறிய கண்களைத் திறந்து…அவன் முகத்தைப் பார்த்தவள் அதிர்ந்தாள்.

ஶ்ரீநிதி அதிர்ச்சியினால் கனவிலிருந்து முழித்தாள்.ச்சே எல்லாம் கனவா…?இதுவரை இந்த மாதிரி கனவு வந்தது இல்லையே…திடிரென்று எப்படி இந்த கனவு வந்தது.சரி இனிமே இந்த மாதிரி கெட்ட கனவு வரக்கூடாது கண்ணா…இந்தமாதிரி கனவு வராமல் நீ தான் பார்த்துக்கொள்ளணும் என்று கடவுளின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டு உறங்கினாள்.ஆனால் இப்போது அவளுக்கு தெரியவில்லை…இந்த பாரத்தை அவர் ஏற்று கொள்ளாமல் அதனை அவள் பக்கமே திருப்பப் போகிறார் என்று அறியாமல் நிம்மதியாக தூங்கினாள்.அதன்பிறகு கனவு எதுவும் வரவில்லை.

ஶ்ரீயின் கனவில் வந்த ஆடவன் யார்…???

ரமேஷினால் ஶ்ரீயின் வாழ்க்கையில் எதாவது பிரச்சினை நேருமா…???

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top