அத்தியாயம் 5

அன்று மதியவேளையில் ஶ்ரீநிதி மற்றும் கீதா அவர்கள் நண்பர்களுடன் அன்றைய  பிராஜக்ட் நன்றாக முடிந்த திருப்தியுடன் பேசிவிட்டு அவர்களிடம் விடைப்பெற்றனர்.

அதன்பிறகு கீதா “ஓகேடி…நாம் திங்கள்கிழமை பார்க்கலாம்” என்று முக மலர்ச்சியுடன் விடைப்பெற்றாள்.

“ஸ்யூர்டி..பை மீட் பண்ணலாம்” என்று விடைப்பெற்றாள் ஶ்ரீநிதி. அவளுக்காக டிரைவர் கேட் அருகில் காருடன் காத்திருந்தார்.இவர் எதற்கு வந்திருக்கார் ரிஷியை தானே வரச்சொன்னேன் என்று அவரை யோசனையுடன் பார்த்தாள் ஶ்ரீ.

பார்த்துவிட்டு காரில் ஏறி டிரைவரிடம் “மணி அண்ணா…ரிஷி எங்கே…??” என்று கேட்டாள். 

“தம்பி…பிரண்ட்ஸ் கூட வெளியே போயிருக்கார் ஶ்ரீம்மா… போகும்போது என்கிட்ட உங்களை கல்லூரியில் இருந்து அழைத்து வர சொன்னார்” என்றார்.

வெளியில் ஓ என்று விட்டு மனதிற்குள் ‘என்னைவிட உன் பிரண்ட்ஸ் கூட சுற்றுவது தான் முக்கியமா??வாடி…உனக்கு இருக்கு இன்னைக்கு’ என்று கறுவினாள்.

இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த ரிஷியிடம் ஶ்ரீநிதி எதுவும் பேசவில்லை. அவனைப் பார்த்த உடனே ஶ்ரீநிதி தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

இப்படியாக இவர்களின் கண்ணாமூச்சி ஆட்டம் இரவு 9.30 மணி வரைத் தொடர்ந்தது.எல்லாரும் சாப்பிட்டு முடித்து உறங்கச் சென்றபிறகு ரிஷி ஶ்ரீயிடம் பேச அவளை பின் தொடர்ந்தான்.வாணி இவர்களின் சம்பாஷனைகளை நீண்ட நேரமாகக் கவனித்து கொண்டு இருந்தாள்.

ஶ்ரீநிதி அவள் அறைக்கு செல்லுவதற்கு முன் அவளிடம் பேச எண்ணி நகர்ந்த வேளையில் வாணி ரிஷியிடம் “என்ன அத்தான் பண்ணீங்க…??அக்கா ரொம்ப சூடாக இருக்கா…ஏதாச்சும் தப்பு பண்ணிங்களா…? நீங்க பேசாமல் உங்க ரூமுக்கு போங்க… இல்லையெனில் அவள் இருக்கும் கோபத்திற்கு உங்களை எரித்து சாம்பல் ஆக்கிடுவாள்…இது உங்களுக்கு நான் குடுக்கிறே…ஃபிரி அட்வைஸ்…கேட்ட கேளுங்க…கேட்காட்டி போங்க…!!” என்று இன்னும் வெறுப்பேற்றிக் கண்ணடித்தாள்.

ரிஷி அவள் கையை பிடிக்கபோக அதிலிருந்து தப்பிக்க நினைத்து ஓட போனவளின் கையைப் பிடித்து “ஏய்…நீ வேற…நானே அவளை எப்படி சமாளிக்கலாம்னு இருக்கேன்…நீ வேற என்னுடைய நிலைமைத் தெரியாமல் வெறுப்பேத்திட்டு இருக்கே…??” என்று அவன்போக்கில் ஶ்ரீநிதியைப் பார்த்து கொண்டே வாணியிடம் பேசிக்கொண்டு இருந்தான்.

ஆனால் இங்கே வாணியின் நிலைமைதான் மிகவும் மோசமாக இருந்தது.ரிஷி அவள் கையை பிடிப்பதற்காக தனது கையைக் கொண்டு செல்ல, அதிலிருந்து தப்பித்து ஓட நினைத்தவளின் கையை…அவளைச் சுற்றி வளைத்து அவள் கையைப் பிடித்திருந்தான்.கிட்டதட்ட முழுவதுமாக அணைத்த நிலை.அதனால் வாணி திகைத்து போய் நின்றிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகுதான் தன்னுடைய  சுய நினைவிற்கு வந்தாள்.சுயநினைவு வந்தவுடன் அவளின் முகம் செந்தூரமாக சிவந்தது.அவனை நிமிர்ந்து பார்க்க அவளின் வெட்கம் தடுத்தது.ஶ்ரீநிதி கொஞ்சம் தூரம் தள்ளி இருந்ததினால் இதனைக் கவனிக்கவில்லை. வாணி ரிஷியிடம் இருந்து வேகமாக தன்னை விடுவித்து அந்த இடத்திலிருந்து ஓடினாள்.

அவள் விலகும்போது தான்…ரிஷிக்கு வாணியின் ஞாபகம் வர…அவளின் பக்கம் பார்வையைத் திருப்பினான்.அதற்குள் வாணி மாயமாய் இருந்தாள்.இவள் எதுக்கு இப்போ இப்படி ஓடினாள் என்று யோசித்து…சரி அவளுக்கு ஏதாவது அவசர வேலை வந்து இருக்கும்.அதான் ஓடி இருப்பாள் இப்போ நாம் ஶ்ரீயை மலை இறக்குவோம் என்று அவனுக்கு அவனே முடிவெடுத்தான்.அவனுக்கு இன்னமும் வாணியை அணைத்தது போல் இருந்தது தெரியவில்லை.

ரிஷி…தான் எடுத்த முடிவின்படி அவளிடம் வந்து “சாரி ஶ்ரீ” என்றான் பாவமாக முகத்தை வைத்து.

ஶ்ரீநிதி திரும்பி அவனை ஒரு முறை முறைத்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ரியலி சாரி ஶ்ரீ…நான் உன்னை கூப்பிட வரலாம்னு தான் நினைச்சேன்.பட்…கிருஷ் அண்ணா தான்…ஆபிஸ் வர சொல்லி போன் பண்ணிணார்” என்று அன்று நடந்த முழுவதும் கூறினான்.

அதன்பிறகு ஶ்ரீநிதி சமாதானம் அடைந்து “ஓ… ஹிட்லர்தான் உன்னை வர சொன்னதா…?நான் உன்னை தப்பா நினைத்து,சாரி ரிஷி…இருந்தும் உன்னைமாதிரி பாவப்பட்ட ஜென்மம் யாரும் இல்லைப்பா” என்றாள் பாவப்படுவது போல் அவனை ஓட்டினாள்.

“ஏய்…போதும் எனக்கு பாவப்படறது இருக்கட்டும்… அடுத்து நீ என்ன பண்ணறதுனு பாரு…!இல்லையெனில் அண்ணா உன்னையும் இந்த பாவப்பட்ட லிஸ்டில் சேர்த்துடுவாறு” என்று கூறி நக்கலாக சிரித்தான்.

ஶ்ரீ கெத்தாக “நான் உன்னைமாதிரி இல்லை…நான் எல்லாம் பிளான் பண்ணிட்டேன்.சோ…நோ பிராப்ளம்…அந்த பாவப்பட்ட ஜென்மம் என்ற பட்டம் மிஸ்டர் ரிஷியை மட்டுமே சேரும்” என்றாள் கேலியாக.

“ஓஹோ…! நீயும் என்னை கிண்டல் பண்ணுறியா…?” என்றான் சோகமாக முகத்தை வைத்து கொண்டு.

“ஏய்…போதும் போதும் ரொம்ப ஃபீல் பண்ணற மாதிரி நடிக்காதே…!” என்று அவன் தலையில் தட்டினாள்.

“ஹிஹிஹி…கண்டுபிடிச்சிட்டியா…?”என்று அசட்டு சிரிப்பு சிரித்தான். 

“போதும் வழியுது…ஒன்றரை லிட்டர் பால் முகத்தில் வடியுது…தொடச்சிக்கோ” என்று இவளும் கிண்டல் செய்து கலகலவென சிரித்தாள்.

இருவரும் ஒன்றாக சேர்ந்து சிரிப்பதை அப்போது அங்குவந்த கிருஷ் பார்த்து முறைத்தான்.இருவரும் பேச்சு சுவாரசியத்தில் மூழ்கி இருந்ததினால் கிருஷ் இங்கு வந்ததை சிறிதுநேரம் கழித்துதான் கவனித்தனர். பார்த்தமாத்திரம் இருவரும் திகைத்தனர். 

ஐய்யையோவ் நாம் பேசியதைக் கேட்டுவிட்டான் போலவே என்றவாறு.அதில் கிருஷின் கோபம் இன்னும் தலைக்கேறியது.

கிருஷ் கண்ணில் ஏறிய சிவப்புடன் “ராத்திரி நேரத்தில் இரண்டு பேரும் இங்கு தனியாக நின்னு என்ன பண்ணிட்டு  இருக்கீங்க…??” என்று கேட்டான் சூடாக. 

“இ…இல்லை அண்ணா…பிராஜக்ட்டை பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்” என்று ரிஷியும், 

“இன்னைக்கு ஆபிஸில் நடந்தது பற்றி பேசிட்டு இருந்தோம்” என்று ஶ்ரீநிதியும் அவன் கோபத்தில் தடுமாறி ஆளுக்கு ஒன்றாக சொன்னார்கள்.

கிருஷ் அதனைப் பார்த்து உதட்டை வளைத்து நக்கலாக சிரித்தான்.இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க என்று.அதில் இருவரும் இன்னும் பயந்தனர்.

உடனே முதலில் ரிஷி சுதாரித்து “இல்லை அண்ணா…பிராஜக்ட் எப்படி பிரசன்ட் பண்ணே…பிராஜக்ட் பற்றி மத்தவங்கயெல்லாம் என்ன சொன்னாங்க??அப்புறம் நம் கம்பெனியில் இன்றைக்கு நடந்தது பற்றி தான் பேசிட்டு இருந்தோம்…காலேஜ் முடிச்சிட்டு என்ன பண்ணபோறே…இப்படி எல்லாமே பேசிட்டு இருந்தோம்…வேற ஒண்ணும் இல்லை அண்ணா” என்றான் விளக்கமாக.

அதில் கொஞ்சம் கோபத்தைக் குறைத்து “சரி…அதை எல்லார் முன்னாடி பேச வேண்டியது தானே…ராத்திரியில் தனியாக பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது…??” என்றவுடன் ஶ்ரீ உதட்டை கடித்து தவிப்பை அடக்குவதைப் பார்த்து,

“சரி…சரி இனிமே இந்த மாதிரி நடக்காமல் பார்த்துகோங்க…சரி பேசிட்டீங்கனா…??ரூமுக்கு போங்க” என்று கூறி இருவரையும் கூர்ந்து நோக்கிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

கிருஷ் நகர்ந்தவுடன் “ஓகே பை ரிஷி…இதுக்கு மேல் நாம் இங்கு இருந்தோம் அத்தான் இன்னும் திட்டுவார்…நாளைக்கு காலையில் மீட் பண்ணுவோம்…குட்நைட்” என்றவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள் ஶ்ரீநிதி. 

“நீ மட்டும் வீட்டிலிருந்து நல்லா என்ஜாய் பண்ணு…என்னை மட்டும் இப்பவே ஆபிஸ் வரச்சொல்லி இந்த கிருஷ் அண்ணா எரிச்சல் பண்ணறாங்க…ச்சை” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தான்.

அடுத்தநாள் இரவில் ஶ்ரீநிதி அவளின் அறையில் தன்னுடைய தோழி கீதாவிற்கு செல்லில் தொடர்பு கொண்டாள்.தங்களுடைய பேலன்ஸ் தொகை குறைவாக உள்ளது என்று வந்தது.

ச்சு என்று விட்டு அங்கு கட்டிலில் படுத்திருந்த வாணியிடம் “வாணிம்மா உன்னுடைய போன் கொஞ்சம் தருகிறாயா…?என்னுடைய செல்லில் பேலன்ஸ் குறைவாக இருப்பதினால் போன் போகமாட்டிகுது…?” என்றாள்.

“சரி அக்கா” என்றவாறு போனைக் கொடுத்தாள்.வெளியில் தன் தாய் தன்னை அழைப்பதை அறிந்து வாணி படுக்கையில் இருந்து எழுந்து வெளியில் சென்றாள்.

அவள் சென்றபிறகு கீதாவுடன் பேசி வைத்துவிட்டு போனைப் பார்த்தவளின் பார்வை அப்படியே ஒரு இடத்தில் நிலைகுத்தி நின்றது.

அந்தநேரத்தில் கிருஷ் கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தான்.வந்தவன் பார்வையில் முதலில் விழுந்தது அவள் அணிந்திருந்த உடை.அதனைப் பார்த்து ஒரு நிமிடம் அப்படியே திகைத்து நின்றான்…கருப்பு நிற பார்பி பிரன்ட் செய்யப்பட்ட டீசர்ட் அணிந்து கீழே அதே கருப்பு வண்ணத்தில் அங்கங்கே மஞ்சள்,இளஞ்சிவப்பு நிற பூக்களால் பச்சை நிற இலைகளோடு பிரண்ட் செய்யப்பட்ட டிசைன்களால் அலங்கரிக்கப்பட்ட ஸ்கர்ட் அணிந்து இருந்தாள்.இந்த கறுப்பு நிறம் உடை அவளின் வெள்ளை நிறத்தை மேலும் தூக்கி கொடுத்தது.

அவன் அப்படி பார்த்தற்கான காரணம் இதுவல்ல…இரவு நேரம் என்பதால் கணுக்கால் வரையிலான ஸ்கர்ட் மட்டுமே அணிந்து அவளின் வழவழப்பான வெள்ளை நிற வாழைத்தண்டு கால்கள் வெளியில் தெரியும் படி அணிந்து இருந்தாள்.இவ்வளவு நேரம் லாங் ஸ்கர்ட் தானே போட்டு இருந்தாள்…இது எப்போது மாற்றினாள் என்று யோசித்துவிட்டு அதன்பிறகு தான் அவள் நின்றிருந்த நிலை மனதில் உறுத்த அவள் அருகில் சென்று “ஶ்ரீநிதி” என்று அழைத்தான்.

தீடிரென்று காதருகில் கேட்கப்பட்ட அழைப்பின் காரணமாக ஶ்ரீநிதி பயந்து “ஆ…” என்று கத்தி கீழே விழ போக,அவளை விழாமல் இடுப்பை வளைத்துப் பிடித்து தன்னோடு சேர்த்தணைத்த நிலையில் அவளின் வாயைக் கை வைத்து அடைத்தான்.ஶ்ரீநிதியின் கண்கள் இப்போது ஆச்சிரியத்தில் விரிந்தது.முதன்முதலில் ஒரு ஆண்மகனின் ஸ்பாரிசம்,அதுவும் இத்தகைய நெருக்கத்தில் தன் மேல் பட்டதால் பெண்ணவளின் தேகம் சிலர்த்தது.

அவள் மான்விழி கண்களைப் பார்த்தவாறு “ஏய்…இப்போ எதுக்கு கத்தப் போறே…!நான் தான்” என்று கிருஷ் அதட்ட நினைத்தாலும் அவன் குரல் குழைந்துதான் வந்தது.அவனும் ஒரு வித மயக்கத்தில் ஆழ்ந்து இருந்தான்.அவன் மனதில் இதுவரைத் தட்டி அடக்கி வைக்கப்பட்டுயிருந்த ஆசைகள் அனைத்தும் வெளிவரத் தொடங்கின.

ஶ்ரீநிதிக்கு அந்த மாதிரி எண்ணங்கள் எதுவும் இல்லாததால்,ஒரு சில நிமிடங்கள் கழித்து கிருஷ் அவளை இன்னும் விடாமல் பிடித்து கொண்டு இருந்ததை பார்த்து ஶ்ரீநிதி ஒரு அவஸ்தையுடன் நெளிந்தாள்.அதன்பிறகு தான் கிருஷ் மயக்கத்திலிருந்து தன் தலையைக் குலுக்கி விடுப்பட்டு…அவளை விட்டு விலகி நின்றான்.அதன்பிறகு அவன் செய்ய நினைத்த காரியத்தின் வீரியம் புரிந்தது.

புரிந்த நொடி அவனை அவனே திட்டிவிட்டு,தன் உணர்ச்சிகளை அடக்க எண்ணி தலைக்கோதி ஶ்ரீயைத் திரும்பி பார்த்தான்.அவள் இது எதை பற்றியும் நினைக்காமல் கையில் இருந்த செல்லைப் பார்த்து கொண்டு இருந்தாள்.எதைப் பார்த்து இப்படி நின்றுகொண்டு இருக்கிறாள் என்று அவள் கையில் இருந்த செல்லை எட்டி பார்த்தான்.பார்த்தவன் புருவத்தின் மத்தியில் மூடிச்சு விழுந்தது.

அதில் ‘ரிஷி மை லவ்’ என்று இருந்தது.அதன்பிறகு அவள் கையில் இருந்த போனை வாங்கி பார்த்துவிட்டு…ஶ்ரீநிதியைக் கண்களால் இது என்ன என்று வினவினான்.அவன் கண்களில் கனல் கூடுவதை கண்ட ஶ்ரீநிதி பயத்துடன் அந்த அறையில் இருந்த வாணியின் புகைப்படத்தைக் கண்களால் காண்பித்தாள்.

ஓ…என்றவாறு கிருஷ் எதையோ யோசித்தான்.அவன் யோசிப்பதைப் பார்த்து வாணியை ஏதோ சொல்லிவிடுவனோ என்று நினைத்து “அத்தான்” என்று மெதுவாக அழைத்தாள்.

அந்த குரலில் திரும்பி அவளை என்ன என்று பார்த்தான்.அவள் ஒரு வித தயக்கத்துடன் “அது…வந்து…அத்தான்!வாணி ரொம்ப சின்ன பொண்ணு…வீட்டில் கூட எதுவும் சொல்லாதீங்க அத்தான்…அவகிட்ட எடுத்து சொன்னால் புரிஞ்சிக்குவா…!அவளை எதுவும் திட்டாதீங்க அத்தான்…பிளீஸ்” என்று தங்கைக்காக கெஞ்சினாள்.

கிருஷ் திரும்பி அவளைப் பார்த்து ஒரு முறை முறைத்தான்.அதில் ஶ்ரீநிதி மிரண்டு வாயை மூடினாள்.

அதன்பிறகு கிருஷ் ஒரு தீர்க்கமான குரலில் “இங்க பாரு…வாணியைப் பற்றி எனக்கு தெரியும்… அவகிட்ட எப்படி பேசணும்…எப்படி நடக்கணும்  என்று எனக்கு நீ சொல்லி தெரிய வேண்டிய அவசியம் எனக்கு இல்லை புரியுதா…?இதைப் பத்தி நீ யார்கிட்டயும் எதுவும் பேசாமல் இருந்தால் அதுவே போதும்…அவளிடம் கூட இதைப் பற்றி நீ பேசாதே… என்ன புரிஞ்சிதா…?” என்று கடுகடுவென கேட்டான்.

ஶ்ரீநிதியும் “புரியுது…” என்று தலையாட்டினாள் மனதில் சிறு சுணக்கத்துடன்

அதன்பிறகு அவளிடம் செல்லைக் கொடுத்துவிட்டு “சரி…நான் வந்த விசயத்தை மறந்துவிட்டேன் பாரு…ஆமாம் பிராஜக்ட் எப்படி பண்ணே…??நேற்று இருந்த மனநிலையில் இதுபற்றி கேட்க என்னால் முடியவில்லை அதனால் தான் இப்போது கேட்கிறேன் சொல்லு” என்று வினவினான்.

அதில் ஶ்ரீநிதி தனது சுணக்கத்தை விடுத்து ஒரு ஆர்வத்துடன் “ஹூம் ரொம்ப சூப்பராகப் பண்ணிட்டேன் அத்தான்…இன்விஜிலேடராக வந்தவர் கூட இந்த கைநூலூடைகளை இந்த காலத்திற்கு ஏற்றவாறு பல்வேறு விதமான டிசைன்களில் தைத்து அதில் கலோக்கி டிசைன்களை வரைவது புதிய யோசனையாக இருப்பதாக கூறி ரொம்பவே பாராட்டினார்…

இந்த பிராஜக்ட் ரைட்ஸ் யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் கொடுக்கதேம்மா என்றார்…அப்புறம் நீ ஏதாவது பெரிய கம்பெனிக்கு ட்ரைப் பண்ணுறியாம்மா என்று கேட்டார்.

நான் அவரிடம் நம்முடைய நந்தன் டெக்ஸ்டைல் பற்றி சொல்லி இது எங்களுடைய டெக்ஸ்டைல்ஸ் நான் அங்கதான் என்னுடைய பிராஜக்ட் ரைட்ஸ் கொடுக்கப்போறேன் என்று சொன்னேன்.அதற்கு அவர் ஓ…ஓகேம்மா…அது எவ்வளவு பெரிய டெக்ஸ்டைல்…அது உங்களுடையதா…?உன்னுடைய பிராஜக்ட் அங்கு சென்று சேர்வதுதான் சரி…அங்கு தரமான துணிகள் மட்டும் தான் தயாரிப்பார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் என்று சொன்னார் அத்தான்.அதுமட்டுமில்லாமல் விலை அந்தந்த துணிகளுக்கு ஏற்ற குறைந்த விலைதான் நிர்ணியித்து இருக்கிறார்கள் என்றார்…அவர் நம் டெக்ஸ்டைல்ஸ் பற்றி பாராட்டி சொன்னது  எனக்கு ரொம்ப பெருமையாக இருந்தது அத்தான்” என்றாள். 

அவள் தன்னை பாராட்டியதைக் கூட பெரிய விசயமாக எடுக்காமல் இந்த கம்பெனியைப் பாராட்டி சொன்னதைப் பெருமையாக நினைப்பதைப் பார்த்து ஶ்ரீயை நினைத்து அதிசயத்தான்.

அவளின் பேச்சை கேட்டுவிட்டு கிருஷ் “சரி…நீ காலேஜில் செய்த பிராஜக்ட்டை இன்னும் கொஞ்சம் விரிவுப்படுத்தி…நீ யோசித்து வைத்த டிசைன்களை வரைந்து வை…நான் அதை தயாரித்து…ஒரு பேஷன் சோவுக்கு ரெடி பண்ணி…உன்னுடைய புது ஐடியாவை எல்லாருக்கும் வெளியிடலாம்…அப்புறம் எந்த கல்லூரியில் நகை வடிவமைப்பு க்ளாஸ் போகப் போறேனு முடிவுப்பண்ணி வை…நான் அந்த இடத்தில் உனக்கு சீட் வாங்கி தரேன்…அப்புறம் இன்னொரு முக்கியமான விசயம் அந்த செல்லில் உள்ளதை பற்றி வாணியிடம் நான் பேசி கொள்கிறேன்…நீ அதை பற்றி எதுவும் அவளிடம் பேசாதே சரியா…??” என்று எச்சரித்தான்.

அவன் பேச பேச ஶ்ரீநிதியின் முகத்தில் மகிழ்ச்சி கூடிக்கொண்டே சென்றது…ஆனால் கடைசியாக அவன் கூறிய விசயத்தைக் கேட்டவுடன் ஶ்ரீயின் மூகம் சுருங்கியது.இருந்தும் வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் “சரி அத்தான்…குட்நைட்” என்றாள் அவனை இங்கு இருந்து வெளியனுப்ப நினைத்து.

கிருஷ் அவள் முகத்தைப் பார்த்து “ஶ்ரீ இதை உன் மனதில் வைத்து ரொம்பவும் குழம்பி கொள்ளாதே…எல்லாம் நான் பார்த்து கொள்கிறேன்…” என்றவுடன்,

ஶ்ரீ நிமிர்ந்து கிருஷின் முகத்தை பார்த்தாள்.நீ போய் நிம்மதியாக தூங்கு என்றுவாறு கண் மூடி திறந்து அவளுக்கு கண்ணால் ஆறுதல் அளித்து விடைப்பெற்றான்.

அதன்பிறகு தான் ஶ்ரீயின் முகத்தில் எல்லாம் அத்தான் பார்த்து கொள்வார் என்று நம்பிக்கை ஒளிப்பெற்றது.

இப்படியாக ஒரு வாரம் எப்படி என்று தெரியாமல் பறந்தது.இந்த வாரத்தின் நடுவில் மீரா வந்து தாத்தாவிடம் நன்றாக திட்டுவாங்கிவிட்டு இதற்கு மேல் இப்படி பண்ணமாட்டேன் தாத்தா என்று வாக்குறுதி அளித்தாள்.அதன்பிறகு தான் அவர் கோபம் குறைந்து மீராவை மன்னித்தார்..

 

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top