அத்யாயம் 3:
கார்மேககண்ணன் தாமரை மீது நின்று குழலுதும் அழகிலும்…அந்த இனிமையான இசையில் மயங்கியும்…கதிரவன் மெய் மறந்து இருந்த வேளையிலும் தன் கடமையின் பொருட்டு சோம்பலை முறித்து வலுக்கட்டாயமாக தன் கதிர்களை பூலோகத்தில் பதித்த வேளையில் நந்தவனத்தில் கிருஷ் மெதுவாக தன் கண் இமைகளைப் பிரித்தான்.
கீழ் பூஜையறையிலிருந்து,
ஆடாது அசங்காது வா, கண்ணா உன்
ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து அசைந்தாடு எனவே
ஆடலைக் காணதில்லை – அம்பலத்திறைவனும் தன்
ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்
ஆதலினால் சிறுயாதவனே – ஒரு மாமயிலிறகணி மாதவனே நீ
சின்னம் சிறு பதங்கள் சிலம் பொலித்திடுமே அதை
செவிமடுத்த பிறவி மனம் களித்திடுமே
பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே – மயில்
பீலி அசைந்தசைந்து நிலைகலைந்திடுமே
பன்னிருகை யிறைவன் ஏறுமயில் ஒன்று – தன்
பசுந்தோகை விரிந்தாடி பரிசளித்திடுமே – குழல்
பாடிவரும் அழகா – உனைக் காணவரும் அடியார் எவராயினும்
கனகமணி அசையும் உனது திருநடனம் கண்பட்டுப் போனால் மனம் புண்பட்டுப் போகுமே
என்று இனிமை நிறைந்த குரலில் பாடியது அவனது பெரியம்மா யசோதா மற்றும் அம்மா தேவகி.அவர்களை நினைத்து ஒரு முறுவலைச் சிந்திவிட்டு எழுந்து இரவு உடையிலிருந்து ட்ராக் ஷூட்டிற்கு மாறி ஜாகிங்கிற்கு சென்றான்.அந்த தெருவைச் சுற்றி வந்தவன் அருகில் அண்ணன் தயா அவனுடன் இணைந்தான்.
“குட்மார்னிங் அண்ணா…” என்றான் காலை உற்சாகத்துடன்.
“குட்மார்னிங் கிருஷ்”
கிருஷ் முதலில் தயங்கி பிறகு “அண்ணா இதை நான் உன்னிடம் கேட்கக்கூடாது…இருந்தாலும் தாத்தா என்னை என்ன விவரம் என்று உன்னிடம் கேட்க சொன்னார்…அதனால் கேட்கிறேன்…அண்ணிக்கும் உனக்கும் நேற்று ஏதாவது சண்டையா…?” என்று வினவினான் தயாவைப் பார்த்தவாறு.
அவன் தயங்கி கிருஷைப் பார்த்து “அப்படியெல்லாம் இல்லை கிருஷ்…சும்மா ஒரு வாக்குவாதம் அவ்வளவுதான்…மற்றபடி ஒண்ணுமில்லை” என்று எதையும் கூறாமல் பூசி முழுகினான்.
கிருஷ் தயாவை ஒரு நம்பாத பார்வைப் பார்த்து “சரி தயா…உனக்கு தெரியாதது ஒண்ணும் இல்லை…நேற்று குழந்தைகள் தாத்தாவிடம் அம்மாக்கும் அப்பாக்கும் டிஷ்யூம் தாத்தா…எனக்கு பயமா இருக்கு என்று அழுதார்கள்…அதனால் தாத்தா என்னவோ ஏதோ என்று பயந்து போய் என்னிடம் சொன்னார்.நான் அவரிடம்… அண்ணாவிடம் என்ன விவரமென்று நான் கேட்கறேனு சொன்னேன்…சோ என்னிடம் சொல்லக்கூடிய பிரச்சினை என்று நீ நினைத்தால் என்கிட்ட சொல்லு” என்று வினவினான்.
“அண்ணியோட அம்மா வீட்டில் ஏதோ பணம் பிரச்சினை போல…அதற்காக அண்ணி…என்னிடம் பணம் கேட்டாள்” என்று சிறிது தயக்கத்துடன் நிறுத்திவிட்டு பிறகு,
“இல்லை கிருஷ்…அவளிடம் நான் இது குடும்பத் தொழில்…சோ பணமெல்லாம் என்னால் தர முடியாது…இது எல்லாரும் கலந்து பேசி எடுக்க வேண்டிய முடிவு…அதனால் தனியாக என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்று சொன்னேன்…அதில் சின்ன வாக்குவாதம்…வேற பிரச்சினை ஒண்ணும் இல்லை” என்றான் தயா பயத்துடன் அவன் தன் மனைவியை தவறாக எதுவும் நினைக்கக் கூடாது என்று நினைத்து.
கிருஷ் அவனை திரும்பி பார்த்து “ஓகே அண்ணா…ரொம்ப பெரிய பிரச்சினை என்றால்…தாத்தாவோடு கலந்து பேசி முடிவு எடுக்கலாம் அண்ணா” என்றான்.
அவன் அவ்வாறு சொல்லவும் மலர்ந்த முகத்துடன் “ஓகே கிருஷ்…நீ சொல்லுவது சரி தான் கிருஷ்…! ஆபிஸ் கிளம்பவதற்கு முன் தாத்தாவோடு பேசி முடிவு எடுக்கலாம்” என்றான் உற்சாகத்துடன்.
இருவரும்பேசிக் கொண்டு வீட்டிற்குள் வந்தனர்.வீட்டிற்குள் நுழையும்போது ரிஷி அப்பொழுதுதான் எழுந்து சோம்பல் முறித்தவாறு வரவேற்பறையில் உள்ள படிக்கட்டுகளின் வழியே இறங்கி வந்து கொண்டு இருந்தான்.
எதிரில் கிருஷ் வரவேற்பறை கதவின் வழியே உள்ளே நுழைந்து வருவதைப் பார்த்து… ‘ஐய்யையோ நான் இன்னைக்கு மாட்டினேன் சைத்தான் சைக்கிளில் தான் வரும்னு சொல்லுவாங்க… !ஆனால் இங்க சைத்தான் நடந்து வருது…!’ என்று மனதில் நினைத்தான் ரிஷி.
அவன் நினைத்த மாதிரியே “ஏன்டா ரிஷி…?எத்தனை தடவை உன்னிடம் சொல்லி இருக்கேன்…காலையில் என்கூட ஜாகிங் வரச் சொல்லி…ஒரு தடவையாவது நான் சொல்லுவதைக் கேட்டு இருக்கியா…?” என்று கிருஷ் ரிஷியை மிரட்டினான்.
அதற்கு பயந்து ரிஷி “சாரி அண்ணா…நாளையிலிருந்து கண்டிப்பாக நான் வரேன்” என்று பவ்யமாய் நல்லபையனைப் போல் கூறினான்.
“ஏன்ப்பா கிருஷ்…?காலையிலே எதற்கு அவனைத் திட்டுகிறாய்” என்றார் அவனுடைய தாய் தேவகி இவர்களை நெருங்கியவாறு.
“நீங்க தான்ம்மா அவனைக் கெடுகிறீங்க…!தினமும் என்கூட ஜாகிங் வர சொன்னேன்…நான் சொல்லுவதை இவன் கேட்டானானு கேளுங்கம்மா…” என்றான் கிருஷ் தாயிடம் முறையிட்டப்படி.
“இவன் சின்ன பையன்ப்பா போக போக சரியாகிடும்” என்றார் தேவகி ரிஷிக்கு சப்போர்ட்டாக.
“அடப்போங்கம்மா…இன்னும் என்ன சின்ன பையன் 24 வயசு ஆகுது… இவனும் என் பேச்சை கேட்க மாட்டான்…அவளும் கேட்கமாட்டாள்” என்று சலித்து கொண்டான்.
“எவள் கண்ணா…?” என்றார் தேவகி புரியாத பாவனையுடன்.
“வேற யாரு…?இந்த ஶ்ரீ தான்” என்றான் சலிப்புடன்.
உடனே தேவகி அவரசரமாக “அவள் நல்ல பொண்ணு கண்ணா…அவள் நீ என்ன சொன்னாலும் செய்வாள்…அவள் மேல் சின்ன குறைக்கூட சொல்லமுடியாது…நீ அவளை திட்டாதே கண்ணா…!” என்றார் படபடவென.
கிருஷ் அம்மாவின் தோளை அணைத்து “அம்மா ரிலக்ஸ்… அக்காக்கூட நான் ஶ்ரீயைத் திட்டினால் இந்த அளவு ஆதரவு கொடுப்பாளானு தெரியலை…நீங்க ஏன்மா இவ்வளவு படபடவென பேசுறீங்க…?என்னம்மா…!உங்க செல்ல பேத்திக்கு சப்போர்ட்டா…?” என்று கூறி புருவம் உயர்த்தினான்.
‘ரிஷிஇஇஇ…!இந்த அம்மா நம்மை திட்டினால் கூட இவ்வளவு படபடப்பா பேச மாட்டாங்க போல…இந்த ஶ்ரீக்கு வரிஞ்சிக்கட்டிக்கிட்டு வராங்கப்பா…அப்படி என்னத்தைப் போட்டு மயக்கினாலோ தெரியாலயே…எனக்கு கொஞ்சம் சொன்ன நானும் அதையே ஃபலோ பண்ணுவனே’ என்று மனதிற்குள் புலம்பினான்.
“ஆதரவு இல்லை கண்ணா…நிஜமாவே ஶ்ரீ நல்ல பொண்ணுப்பா…நீ அவளைத் திட்டாதே” என்றார் தேவகி மறுபடியும்…
கிருஷ் இரண்டு கையையும் கட்டி தலையை இடுப்புவரை குனிந்துவாறு “மகாராணி அவர்களே…!!உங்கள் சேவகனாகிய இந்த கிருஷ்நந்தன்…உங்களின் அன்பிற்குரிய பேத்தியை…ஒருபோதும் தாங்களின் அனுமதி இல்லாமல் திட்டமாட்டான்…ஆனால் உங்கள் மகனாகிய மகாகணம் பொருந்திய இந்த வீட்டின் இளவரசன் கிருஷ்நந்தனுக்கு செல்வி ஶ்ரீநிதியைத் திட்ட அனைத்து உரிமையும் இருப்பதாக…அவருடைய தந்தை விசுநந்தன் அவர்கள் அனைத்து வாக்குறுதியும் அளித்துள்ளார்… அதனால் தாங்கள் வாக்கை மீறினால் தன்னை மன்னியும்படி கேட்டு கொள்கிறேன் மகாராணி அவர்களே…!” என்றான் பழைய கால சேவகர் பாணியில் சிரிப்புடன்
கூறினான்.
சிரிக்கும் மகனின் கன்னகுழி அழகை ரசித்தவாறு “போடா…படவா!!” என்றார் அவரும் பூரிப்பான புன்னகையுடன்.
“ஶ்ரீயைத் திட்டினால்…நானே சண்டைக்கு வருவேன்…சித்தி சண்டைக்கு வரமாட்டாங்களா கிருஷ்…?அதனால் அண்ணனாகிய எனக்கும் மரியாதைப் பண்ணுமாறு சேவகன் கிருஷைக் கேட்டு கொள்கிறேன்” என்றான் தயாவும் குறும்புடன்.
அதற்கு நடுவில் ‘பாருப்பா மறுப்படியும்…இந்த ராட்சஸி என்ன பண்ணினால் எல்லாருக்கும்…இப்படி உருகறாங்க’ என்று ரிஷி மனதிற்குள் ஶ்ரீயை நன்றாக வசைப்பாடினான்.
அதை அந்த பக்கம் எதிர்ச்சையாக திரும்பிய கிருஷ் பார்த்துவிட்டு ரிஷியிடம் என்ன என்று ஒற்றை புருவம் உயர்த்தினான்.அதில் பயந்து பதறியவாறு ஒண்ணும் இல்லை என்று அவசரமாக தலையாட்டினான் ரிஷி.
‘ஐய்யோ ஹிட்லர் இருக்கும் போது மைன்ட் வாய்ஸ் கூட பேச முடியாது போலவே…எல்லாத்தையும் கப்கப்னு பிடிச்சராரு’ என்ற தன்னையே நொந்துகொண்டான்.
ரிஷி தலையாட்டிவுடன் தயாவைப் பார்த்து “அச்சோ…!!அடுத்து நீயா அண்ணா…நான் இந்த ஶ்ரீயை திட்டவே இல்லை போதுமா…ப்பா… விட்டால்…எல்லாரும் கத்தி எடுத்துட்டு அவளுக்காக என்கிட்ட சண்டைக்கு வருவீங்கபோல…எல்லோரிடமும் இந்த மாதிரி பக்கம் பக்கமாக வசனம் பேசறதுக்குள்ள எனக்கு வயசாகிடும்…அதனால் என்னால் முடியாதுப்பா…மீ ரொம்ப பாவம்” என்று கூறி பயந்தமாதிரி நடித்தான்.
இப்போது “டேய் படவா” என்று காதைப் பிடித்து திருகியவர் அவனின் பெரியம்மா யசோதா.தயாவும் ரிஷியும் இதைப் பார்த்து பொங்கி பொங்கி சிரித்தனர்.ஆஆஆஆஆ என்றுவாறு வலியில் கத்தினான் கிருஷ்.
“பெரியம்மா நீங்களும் சேர்ந்துட்டீங்களா…?அப்போ விடு ஜூட்” என்று அங்கிருந்து வேகமாக நகர்ந்தான்.
கிருஷ் செல்லும் திசையைப் பார்த்து கொண்டே “கிருஷ்…இன்னும் சின்ன பையன்மாதிரியே நடந்துகிறான்…இல்லயா தேவகி…?” என்றார் யசோதா பாசம் நிறைந்த குரலில்.
அதற்கு பதில் ரிஷியிடம் இருந்து வந்தது.“அதெல்லாம் உங்களிடம் மட்டும்தான்…என்னிடம் அண்ணா எப்படி நடந்துகிறார்…பாருங்களேன் பெரியம்மா…எப்போ பாரு திட்டிட்டே இருக்கார்” என்றான் வருத்தம் நிறைந்த குரலில்.
“அப்படி இல்லாடா ரிஷி…வீட்டில் அனைவரும் உனக்கு செல்லம் தான் கொடுக்கறாங்கடா…!நீ பிளஸ்டூ படிச்சிட்டு இருக்கும்போது உன் நண்பர்களால் வந்த பிரச்சினையைச் சமாளித்து…நீ இப்போது காலேஜில் படிச்சிட்டு இருக்கேனா…?அதற்கு காரணம் கிருஷ்…!!” என்று கூறி நிறுத்தி,
அவன் தோள் மேல் கைப்போட்டு “இப்போது கூட கிருஷ்…இப்படி நடக்க காரணம்…மறுபடியும் அந்த மாதிரி ஒரு தப்பு நடக்க கூடாதுனு தான்…அதை நினைத்து பார் ரிஷி…கிருஷ் இப்படி நடந்துக்கிறது தப்பே இல்லைனு உனக்கே தோணும்?” என்று கூறி ஆறுதல்படுத்தினான் தயா.
“ஆமாம்டா கண்ணா…!!நீ படிச்சி முடிச்சி கம்பெனி எடுத்து நடத்த ஆரம்பிச்சவுடன்…கிருஷ் இந்தமாதிரி கடுமையாக உன்னிடம் நடந்துக்கொள்ளமாட்டான்டா…இதெல்லாம் உன் நல்லதுக்காக தான் கண்ணா” என்று யசோதாவும் சமாதானப்படுத்தினார்.
வேதனையில் கசங்கிய முகத்தைப் பார்த்து தேவகி ரிஷியின் அருகில் சென்று,அவன் தலைக்கோதி நெற்றியில் முத்தமிட்டார்.ரிஷியை ஆறுதல் படுத்த அந்த ஒரு செயல் போதுமானதாக இருந்தது. அதன்பிறகு ரிஷி சமாதானமாகி பிறகு அவன் அறைக்கு சென்றான். தேவகியும் யசோதாவும் சமையல் அறைக்குள் சென்றனர்.
தயா,கிருஷ் இருவரும்…கிருஷ் அவன் அறையிலிருந்து வந்தபிறகு தாத்தாவைத் தேடிச் சென்றனர்.அவரிடம் காலையில் தயா கூறிய விவரத்தை தாத்தாவிடம் சொல்லி…என்ன பண்ணலாம் என்று கேட்டனர்.விவரம் எல்லாம் கேட்டு…எல்லாரும் ஒரு மனதாக…தயாவின் மனைவி வம்சி குடும்பத்துக்கு பணம் தர ஒத்துக்கொண்டார்.அதன்பிறகு உங்க அப்பாவிடம் மட்டும் ஒரு வார்த்தை சொல்லிவிடு தயா என்றார் நந்தன்.
தயாவுக்கு தாத்தா சரியென்று சொல்லியவுடன்…மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது…அதை உடனே வம்சியிடம் பகிர்ந்து கொள்வதற்காக… அவன் அறைக்குத் துள்ளி குதித்து ஓடினான்…அதைப் பார்த்த கிருஷ் மற்றும் தாத்தாவிற்கும் மகிழ்ச்சியாக இருந்தது…அவர்கள் மகிழ்ச்சியைப் பார்த்து ராதை பாட்டி என்ன விவரமென்று கேட்டார்… அதற்கு கிருஷ் நடந்ததை கூறினான்.
அதைக் கேட்ட பாட்டி கண்ணில் கண்ணீருடன் “ரொம்ப சந்தோசம்ப்பா…இந்த குடும்பம் இதைப்போல எப்பவும் மகிழ்ச்சியாக இருக்கணும்…எங்கள் காலத்துக்கு பிறகு இந்த குடும்பத்தில் யாருக்காவது பிரச்சினை வந்தால்…நீ தான் தீர்த்து வைக்கணும் கண்ணா” என்றார்.
பாட்டியின் முகத்தை நிமிர்த்தி கண்ணீரைக் துடைத்துவாறு “ச்சு…என்ன பாட்டி…நீங்க என் குழந்தையுடைய கல்யாணத்தையெல்லாம் பார்ப்பீங்க…அப்புறம் அவங்க குழந்தைகளைப் பார்பீங்க…அதன்பிறகு அவங்க கல்யாணத்தைப் பார்ப்பீங்க…அப்புறம் அவங்க குழந்..என்று சொல்லி கொண்டே சென்றவனை இடமறித்த பாட்டி,
“அத்தாடி…!அவ்வளவு காலம் உயிரோடு இருந்து என்ன பண்ணறது…இது ரொம்ப பெரிய பேராசையா இல்ல இருக்கு…” என்று வாய் மேல் கை வைத்தார்.அதைக் கேட்டு தாத்தாவும் பேரனும் புன்னகைத்தனர்.
இவர்கள் சிரித்துக்கொண்டு இருக்கும்போது அந்த அறைக்குள் ஶ்ரீ நேற்று நடந்த நிகழ்வை மறந்து பழைய துள்ளலுடன் ராதுஉஉஉ என்ற அழைப்புடன் உள்ளே நுழைந்தாள்.
அப்போதுதான் கிருஷ் அங்கு இருப்பதைப் பார்த்து ஶ்ரீநிதி… ராது அழைப்பை நிறுத்தி தயக்கத்துடன் உள்ளே நுழைந்தாள்.உடனே கிருஷின் புன்னகை மறைந்து கடுமையாக “என்ன வேணும்…?” என்று அதட்டினான்.
அவள் பயத்தில் குரல் நடுங்க “அது…அது…வந்து அத்தான்…” என்றவளை இடமறித்து
“அதான் வந்துட்டியே…!அப்புறம் என்ன வந்து போயினு…?…சீக்கிரம் சொல்லு” என்று மறுபடியும் அதட்டினான்.
அவ்வளவுதான் வந்த குரல் உள்ளே அப்படியே தொண்டையில் சிக்கியது.ஶ்ரீ பாவம் போல் தாத்தாவையும் பாட்டியையும் மாறி மாறி பார்த்தாள்…ஏதாவது செய்யுங்களேன் என்பது போல்.
கிருஷின் தோளில் தட்டி “யேய் கிருஷ்…அவள் சொல்லுறதுக்குள்ள…நீ ஏன் அவளை இடமறிக்கிற…?அப்புறம் அவள் எப்படி சொல்லுவா” என்றார் தாத்தா ஶ்ரீக்கு உதவியாக.
உடனே அவளை முறைத்த கிருஷ் “ஓகே தாத்தா…நான் குளிச்சிட்டு ஆபிஸ் கிளம்பிறேன்” என்று அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
அவனுக்கு தெரியும் அவன் இங்கு இருக்கும்வரை அவள் வந்த விசயத்தைச் சொல்லமாட்டாள் என்று…அதனால் தான் கிளம்பிவிட்டான்.அவன் போகும்போது…இவளை தீர்க்கமான ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சென்றான்… எவ்வளவு நாள் தான் உனக்கு இவங்க ஆதரவு தராங்கனு பார்க்கலாம் என்று சொல்லாமல் சொன்னது அந்த பார்வை.அந்த பார்வையின் வீச்சைத் தாங்கமுடியாமல் தலைக்குனிந்தாள்.
அந்த பார்வையில் இருந்தது என்ன என்று அவளுக்கு தெரியவில்லை. அதில் கண்டிப்பாக கோபம் இல்லை என்று ஶ்ரீக்கு புரிந்தது… ஆனால் அதைப்பற்றி பிறகு யோசிக்கலாம்…இப்போது வந்த விசயத்தைப் பார்ப்போம் என்று திரும்பி தாத்தாவிடம் பேச ஆரம்பிக்கலாம் என்று நினைக்கும்போதே “ஏய் கூறு கெட்ட சிறுக்கி…!இங்க என்ன விசயமாக வந்து இருக்கே…??” என்று பாட்டி அவளை வம்புக்கு இழுத்தார்.
அவள் கிருஷைப் பற்றி யோசனையில் இருந்தனால் சிறுக்கியைக் கவனிக்கவில்லை.இல்லையானால் பாட்டியை அவளும் வம்புக்கு இழுத்து இருப்பாள்.
“தாத்தா ராது இரண்டு பேரும் எழுந்து…சேர்ந்து நில்லுங்க” என்றாள் தீவரமான முகத்துடன்.
பாட்டியும் அவள் ஏதோ முக்கியமான விசயம் பேச வந்து இருக்கிறாள் போல் என்று நினைத்து எழுந்தனர்.அவர்கள் எழுந்து நின்றவுடன் அவர்கள் காலில் விழுந்து வணங்கினாள்.அவர்கள் மனதார ஆசிர்வதித்தனர்.
“தாத்தா…இன்றைக்கு கடைசி செமெஸ்டர்… நான் பிராஜக்ட் ஒழுங்காக பண்ண வேண்டும் என்று ஆசிர்வாதம் பண்ணாங்க…” என்றாள்.
“ஓ…ஆமாமில்லை…ஒவ்வொரு தேர்வுக்கும் நீ எங்ககிட்ட … ஆசிர்வாதம் வாங்குவதுதானே…கேட்டால் ஆசிர்வாதம் வாங்காவிட்டால்…ஒழுங்கா எக்ஸாம் எழுத முடியவில்லை…அன்றைக்கு நாளே நல்லயில்லை…என்று வருத்தப்படுவ” என்று அவளை மாதிரியே பேசி கிண்டல் செய்தார் தாத்தா.
அதை கவனித்த ஶ்ரீநிதி “தாத்தா” என்று சிணுங்கியவாறு…
“நான் சொல்லுவது உண்மை தான் தாத்தா…அப்புறம் உங்களிடம் ஆசிர்வாதம் வாங்கவில்லையானால் எக்ஸாம் ஒழுங்க எழுதமுடியவில்லைதான்…! என்று உங்களிடம் என்ற வார்த்தையை அழுத்தி கூறி…பாட்டியை நக்கலாக ஒரு பார்வை பார்த்துவிட்டு முகத்தைச் சோகமாக வைத்துவாறே,
“ஆனால் நீங்க வருத்தம்படுவீங்க என்று போன போகட்டுமென்று இந்த ராது கிட்டயும் ஆசிர்வாதம் வாங்கினேன் தாத்தா” என்றாள்.
உடனே தாத்தா ஹாஹாஹா என்று சிரித்தார்.முதலில் பாட்டியிற்கு ஒன்றும் புரியவில்லை.
புரிந்தப்பிறகு “அடி கழுதை” என்று பாட்டி அடிக்க கை ஓங்கியவுடன். ஶ்ரீ சிரித்துவிட்டு “வெவ்வவெவ்வே” என்று பழித்துக்காட்டி அந்த இடத்தைவிட்டு ஓடினாள்.
அவள் போனப்பிறகு “பாருங்க…இந்த கழுதையை…என்னை எப்படி சொல்லறானு…” என்று கணவனிடம் ராதை பொறுமினார்.
தாத்தாவும் சிரிப்புடன் பாட்டியைக் கட்டிலின் அருகே அழைத்து “சும்மா ஒரு பேச்சுக்கு தானேடி ராது…நீ ஏன் கோபடறே… என்று கூறியவாறு அவர் எதிர்பாராத நேரத்தில் கன்னத்தில் முத்தம் ஒன்றைக் கொடுத்தார்.
அதில் திகைத்து எழுந்தவாறு கணவனை முறைத்து கொண்டே “உங்களுக்கு கொஞ்சமாச்சும் கூறு இருக்க…கொள்ளு பேத்திக்கே கல்யாணம் பண்ணும் வயசு வந்திருச்சி…நீங்க இப்போ போய் இப்படி பண்ணுறீங்க…” என்று கோபமாக கூறினார்.
தாத்தாவும் குறும்புடன் “எப்படி பண்ணுறேன்” என்றார் பதில் கேள்வியாக.அந்த கேள்வியில் அவரின் கோபம் குறைந்து…இந்த வயதிலும் பாட்டியின் முகம் சிவந்தது.
சிவந்த முகத்துடன் “ச்சு…போங்க” என்று அறையிலிருந்து வெளியேறினார்.தாத்தாவின் சிரிப்பு அவரைப் பின்தொடர்ந்தது. வயதின் முதிர்ச்சி முகத்தில் இருந்தாலும் அவர் செயலில் காதல் இருந்தது.இதிலிருந்து காதலுக்கு வயசு இல்லை என்பதை நிருபித்தார்கள்.
இதனை வெளியில் இருந்து ஶ்ரீநிதி கேட்டு மகிழ்ச்சியுடன்…இந்த வயதிலும் இவர்கள் அன்னியோயத்தைப் பார்த்து… நமக்கும் இந்த மாதிரி ஒரு வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்றும்…இதேபோல் இவர்கள் காலம் முழுவதும் வாழ வேண்டும் என்றும் அவளின் இஷ்ட தெய்வமான கிருஷ்ணனிடம் வேண்டுதல் வைத்தாள்.பாட்டி உள்ளிருந்து வரும் இருந்து வரும் அரவம் கேட்டவுடன்…சீக்கிரமாக அந்த இடத்தை விட்டு ஓடினாள்.
ஶ்ரீநிதி தாத்தாவின் அறையிலிருந்து ஓடி மாடிப்படி ஏறினாள். அப்பொழுது பார்த்து கிருஷ் இறங்கிவந்து கொண்டு இருந்தான்.ஶ்ரீ வேகமாக போய் கிருஷ் மேல் இடித்துவிட்டாள்.ஶ்ரீநிதி நிமிர்ந்து யாரென்று பார்த்தாள். அவ்வளவுதான் அவள் மூச்சு நின்றது. அச்சச்சோ…!!இன்றைக்கு எனக்கு செம்ம திட்டு விழப்போகுது என்று பயந்துபோய் அவனை கலக்கத்துடன் பார்த்தாள்.
அதைப்பார்த்து கிருஷ் சிரித்துவிட்டு “ஏய்…!இப்போ எதுக்கு பயப்படுறே…சரி சரி பார்த்துபோ…ஆல் தி பெஸ்ட்,ப்ராஜக்ட் நல்லப்பண்ணு” என்றான் வேகமாக.
என்னடா உலக மகா அதிசயமாக இருக்கு…இவரு திட்டுவாருனு பார்த்தால் சிரிக்கறாரு…என்று தன் போக்கில் யோசித்து கொண்டிருந்தாலும்…பதிலுக்கு வாய் தானாக “சரி அத்தான்” என்றது. அவனும் தலையாட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
ஶ்ரீநிதி அவனைத் திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே அவள் அறைக்குள் நுழைந்தாள்.அவள் எதிர்பார்த்தமாதிரி கட்டிலின் மேல் பென்டிரைவ் இருந்தது.அவள் பள்ளி படிக்கும்போதிலிருந்தே… ஒவ்வொரு எக்ஸாமின் போதும் அவளுக்கு இந்தமாதிரி ஏதாவது ஒரு சின்ன பொருள் கட்டிலின்மீது இருக்கும்…இதை யார் முதலில் இங்கு வைப்பது என்று தெரியாமல் இருந்தது…ஆனால் ஒரு முறை இதை கிருஷ்தான் இங்கு வைக்கிறான் என்பதை அவள் அறிந்துக்கொண்டாள்.
இருந்தாலும் இதை நேரடியாக அவனிடம் கேட்க பயம்.அவளும் இதை அடுத்தடுத்த தருணங்களில் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.அவளுக்கு இந்த அவன்தரும் பொருள் ராசியாக இருந்தது, அதனால் அவள் இதை எதிர்ப்பார்த்தாள்.
சிலமுறை அவளே “ஶ்ரீ…!நீ இவ்ளோ படிச்சி இருக்கே…!!இந்த சின்ன விசயத்துக்காக எதுக்கு இவ்வளவு சந்தோஷப் படுறே…?உனக்கு இது ஓவரா இல்லை…நீயெல்லாம் என்னத்தே படிச்சி கிழிச்சி பட்டம் வாங்க போறியோ…என்று மனதிற்குள் அவளை அவளே திட்டயது கூட உண்டு…இருந்தும் அதை ஒதுக்கிவைத்து விட்டு கிருஷ் கொடுத்த இந்த சின்ன பொருளைத் தான் பாஸ் ஆவதற்கு காரணம் என்று நிச்சயமாக நம்பினாள்.
அந்த சந்தோசத்துடன் பெற்றோர் அறைக்கு சென்றாள்.அவர்கள் இன்னும் எழுந்து கொள்ளவில்லை என்பதை தெரிந்து கொண்டு காலேஜிக்கு கிளம்பினாள்.நேற்று இரவு தாமதமாக தூங்கியதால் அவர்கள் இன்னும் எழுந்துகொள்ளவில்லை.
ஶ்ரீநிதி கல்லூரிக்கு செல்லும்முன் யசோதாவிடம் ஜானகியிடம் தான் கல்லூரி சென்று விட்டதை சொல்ல சொல்லி சென்றுவிட்டாள்.
ஒரு 7.30 மணி அளவில்,குந்தவை கைப்பேசியில் “மீராம்மா…எப்ப வரப்போவதாக இருக்கே கண்ணு” என்றார் உருகிய குரலில்.
உடனே மீரா “அப்பாயி…நாளைக்கு வந்துவிடுவேன்…ஏன் கேட்கிறீங்க…?” என்றாள் மீரா புரியாத பாவனையுடன்.
“சீக்கிரம் வந்துவிடு கண்ணு…அப்பா என்னை ரொம்பத் திட்டினார்” என்றவுடன் இடைமறித்து “அவர் எதுக்கு உன்னைத் திட்டினார் அப்பாயி” என்று பரபரத்தாள்.
“நீ பிரெண்ட்ஸ் கூட டிரிப் போனதுக்காகத் தான் மீராம்மா…நான் தான் உன்னை அனுப்பிவைத்தேன் என்று தாத்தாவுக்கு தெரிந்துவிட்டது… அதற்காக தான்” என்றார் குந்தவை.
மீரா கடுப்புடன் “இந்த நந்தன் தாத்தாக்கு வேற வேலையே இல்லையா…?அவருக்கு எப்பவும் ஶ்ரீ தான் செல்லம்…அவள் என்ன பண்ணினாலும் திட்ட மாட்டார்…ஆனால் நான் ஏதாவது செய்தால் மட்டும் அவருக்கு தப்பாக தெரியும்” என்று பொறிந்தாள் வெளியில்.
ஆனால் உள்ளுக்குள் ‘மீரா…!ஶ்ரீ ஒரு நாளும் தாத்தா பேச்சை மீறியது இல்லை…பட் நீ அப்படியா…’ என்று கேள்வி கேட்ட மனதை தட்டி அடக்கினாள்.
அதற்குள் இந்த பக்கம் குந்தவை “அச்சோ கண்ணு…அப்பாவை நான் சமாளிச்சிட்டேன்…நீ ஜாக்கிரதையா இரு…ஆனால் சீக்கிரம் வந்திடு” என்று ஆறுதலாகக் கூறினார்.
கைப்பேசியிலே முத்தம் ஒன்றை கொடுத்தவள் “மை ஸ்வீட் அப்பாயி…எனக்கு தெரியும் நீங்க சமாளிப்பிங்கனு…!தேங்கஸ் ஸ்வீட்டி…ஓகே பை” என்று கொஞ்சுவிட்டு தொலைபேசி தொடர்பை துண்டித்தாள்.
அதேநேரம் சமையலறையில் ஜானகி யசோதாவிடம் “ஶ்ரீ எங்கம்மா…?” என்று வினவினார்.
யசோதா “அவள் காலேஜ் கிளம்பிட்டாள்மா…போகும்போது உன்கிட்ட சொல்ல சொல்லிதான் போனாள்…நீ இப்போதான் எழுந்தியா…?” என்று கேட்டார்.
ஜானகி ஓ…கிளம்பிட்டாளா அவ்ளோ நேரமாத் தூங்கி இருக்கோம் என்று மனதிற்குள் நினைத்து வெளியில் “ஆமாம் அம்மா…நைட் தூங்க லேட் ஆச்சு …அதான் காலையில் நேரம் கழிச்சு எழுந்தேன்” என்றார் ஶ்ரீயைப் பார்க்கமுடியவில்லை என்ற ஏமாற்றத்துடன்.
சுமார் 8.30மணி அளவில் அந்த வீட்டின் வரவேற்பரையில் வீட்டின் ஆண்கள் சோபாவில் அமர்ந்து ஒன்றாக கூடி தீவிர விவாதித்தில் இருந்தனர்.
முதலில் கிருஷ்தான் விவாதத்தை ஆரம்பித்தான்.“தாத்தா இன்றைக்கு ஒரு முக்கிய செய்தி தெரியுமா…?….அடுத்தவாரத்திலிருந்து பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக போகுது…” என்றான் கிருஷ்.
“ஆமா அப்பா…இதனால் நம்ப டிரான்போர்ட் பிசினஸ் கொஞ்சம் நஷ்டப்பட வாய்ப்பு இருக்கு” என்றார் ரகுநந்தன் ஆதங்கத்துடன்.
“அதனால் விலை நிர்ணயம் அதிகம் பண்ணனுமா கிருஷ்?” என்று கிருஷிடம் வினவினார் நந்தன்.
“ஆமாம் தாத்தா…அதுமட்டுமில்லாமல் பேருந்து கட்டணம் கூட உயரப் போகுது தாத்தா” என்றான் கிருஷ் மற்றுமொரு செய்தியுடன்.
“இதனால் நடுத்தர வர்க்க மக்கள் ரொம்பப் பாதிக்கப்படுவார்கள் அப்பா” என்றார் கிருஷின் அப்பா தனநந்தன் வேதனையுடன்.
அதற்கு பதிலாக “அரசாங்கம் இதன்மூலம் நம்மைப் போல் இருக்கும் தனியார் நிறுவனங்களை…விலையேற்றத்தை அதிகப்படுத்த நிர்ப்பந்தம் படுத்துகிறது தாத்தா…இதனால் கீழ்மட்ட தொழில் செய்யும் ரென்ஸ்போர்ட்க்கு அதிக நஷ்டம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது தாத்தா” என்றான் கிருஷ் ஒரு வித இயலாமையுடன்.
“ஆமா தாத்தா…இதன்மூலம் நேர்மையான பல நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் ரொம்பவும் பாதிக்கப்படுவார்கள்” என்றான் தயா மனகுமறலுடன்
அதன்பிறகு அவனே ஒரு யோசனை செய்து “பேசாமல் இதை நாம் பின்பற்றாமல் விட வேண்டியதுதான்…இதுக்கு ஓரே வழி தாத்தா” என்றான் தயா ஒரு வழி கிடைத்த திருப்தியுடன்.
“ஆனால் அண்ணா…நாம் மட்டும் அரசாங்கத்தை ஏதிர்த்து ஒண்ணும் பண்ணமுடியாது…அதுமட்டுமில்லாமல் தனியார் போக்குவரத்து சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒருமனதாக இந்த சட்டத்தை எதிர்த்தால் மட்டும்தான் இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்” என்று ஒரு வழியை கூறினான் கிருஷ்.
“ஆமா தயா…கிருஷ் சொல்லுவது சரிதான் கண்ணா.ஆனால் நம்மால் முடிந்ததை நமது வாடிக்கையாளருக்கு செய்ய வேண்டியதுதான்.நாம் நம் பேருந்தில் பழைய கட்டணத்தையே நிர்ணயிக்க வேண்டியதைப் பற்றி சங்கத்தில் பேசி முடிவு எடுக்கலாம்” என்றார் முடிவுடன் நந்தன்.
“ஆனால் அப்பா…!பெட்ரோல்,டீசல் விலை அதிகமாக இருக்கு அப்பா… அதனால் நாம் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லையானால் நமக்கு பயங்கர நட்டம் ஏற்படும்” என்றார் ரகு வேதனையான குரலில்.
“பெரியப்பா அதற்காக நாம் வாடிக்கையாளர்களை ஏமாற்றமுடியாது… நமக்கு கொஞ்சம் நஷ்டம்தான்…அதை நாம் சமாளிக்கலாம் பெரியப்பா…வெளிநாட்டு ஏற்றுமதியில் செய்யும் பொருளின் விலையை நாம் கொஞ்சம் அதிகமாக்கினால் நாம் நஷ்டத்தை சமாளிக்கலாம்” என்றான் கிருஷ் ஒரு யோசனையுடன்.
“சரிப்பா கிருஷ்…ஆனால் அதன்பிறகு அவங்க நம்முடைய கான்ரேக்ட்டை நீக்கிவிட்டால் என்னப்பா செய்வது… வாடிக்கையாளர்க்காக பார்த்துட்டு நமக்கு ரொம்ப நஷ்டம் ஆகப்போகுது” என்றார் கிருஷின் பெரியப்பா ரகு கவலையுடன்.
“அப்படியெல்லாம் எதுவும் ஆகாதுப்பா…நாம் அவர்களுக்கு நல்ல தரமான பருத்தி உடைகளைத்தான் ஏற்றுமதி செய்கிறோம். அதுமட்டுமில்லாமல் மார்க்கெட் ரேட்டுக்கு கொஞ்சம் குறைவு தான் நாம் நிர்ணயித்திருக்கும் விலை…சோ…நாம் கொஞ்சம் அதிகமாக நிர்ணயத்தாலும் ஒண்ணும் அவர்களால் சொல்லமுடியாது.அப்படியே எதுவும் பிரச்சினை வந்தால் நான் அவர்களிடம் பேசிக்கொள்கிறேன். அவர்களுக்காக நம் வாடிக்கையாளர்களை கஷ்டப்படுத்த முடியாது பெரியப்பா” என்று முடிவாக கூறினான் கிருஷ்.
“ரகு கிருஷ் சொல்லுவதுதான்…என்னுடைய முடிவும்.அதனால் இதனை இத்துடன் விட்டு விடுவோம்.ஏதோ பிரச்சினை வந்தால் கிருஷ் அதனை சமாளிப்பான்…கிருஷ் நீ சங்கத்தில் மட்டும் பேசிவிட்டு என்னிடம் சொல்லுப்பா” என்றார் நந்தன் முடிவாக.அதன்பிறகு யாரும் எதுவும் பேசவில்லை.
“ஓகே…எல்லாரும் ஆபிஸ் கிளப்புங்க” என்றார் நந்தன்.அனைவரும் பிரிந்து சென்றனர்.கிருஷ் சாப்பாட்டு மேஜைக்கு சென்றான். அப்பொழுது அங்கு வந்து யசோதா கிருஷிற்கு பரிமாறினார்.
கிருஷிற்கு சாப்பாடு பரிமாறிவிட்டு அவன் கன்னத்தைத் தொட்டு வழித்து “உன்னைமாதிரி பிள்ளை பெற ரொம்பக்கொடுத்து வச்சிருக்கணும்ப்பா. நீங்க பேசுவதைக் கேட்டுக்கொண்டு தான் இருந்தேன்.நீயும் தயாவும் நம் மக்களுக்கு சப்போர்ட் பண்ணி பேசினீங்க.ஆனால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க நீ சொன்ன யோசனையைக் கேட்டு எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு கண்ணா” என்றார் பெருமை பொங்க.அந்த இடத்தில்தான் தேவகி மற்றும் ஜானகியும் இருந்தார்கள்.இதை பெருமையாக பார்த்திருந்தார்கள்.
தேவகி “அக்கா கிருஷ் நீங்க வளர்த்த பையன் வேற எப்படி இருப்பான்” என்றார் யசோதாவிடம்.
கிருஷ் “அச்சோ அம்மாக்களே…!இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை.இது ஒரு சாதாரண செயல்,நீங்க இதை இவ்வளவு பெருசா பேசிறே அளவுக்கு நான் ஒண்ணும் பண்ணவில்லை” என்றான் சலிப்புடன்.
“அடப்போப்பா…இது எங்களைப் பொறுத்தவரை எவ்வளவு பெரிய விசயம் தெரியுமா…?.எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கு” என்றனர் ஒரு சேர இருவரும்.
“கிருஷ் இரண்டு பேரும் விட்டால் உனக்கு பாராட்டு விழா நடத்துவார்கள் போலடா…பெரிய மேடைப் போட்டு…மைக் செட் வைத்து…பெரிய பெரிய போஸ்டர் வச்சு…உன்னை தலைவர் ஆக்கிருவாங்கள் போலடா…” என்றாள் ஜானகி நக்கலாக.நக்கல் செய்தாலும் அவளுக்கும் இது பெருமையே என்பது குரலில் தெரிந்தது.
“அக்கா! என்ன கிண்டல் பண்ணுறியா…?தயா அண்ணாதான் முதலில் இதைச் சொன்னது உங்களுடைய பாராட்டு மற்றும் கிண்டல் செல்ல வேண்டியது அவரிடம்.சோ…அவருக்கிட்ட சொல்லுங்கள்.ஓகே நான் போய் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வரேன்…ஆபிஸ் கிளம்பணும்” என்று விடைப்பெற்று மேலே சென்றான்.
கிருஷ் அவனுடைய அறைக்குள் சென்று அவனின் அலமாரியைத் திறந்து அதிலிருந்து ஏதோ ஒன்றை எடுத்தான்.அதை எடுத்து கையில் வைத்து,தனக்குள் ஏதோ கூறினான்.பிறகு அதை அலமாரியில் பாதுகாப்பாக வைத்து பூட்டிவிட்டு,குளியல் அறைக்குள் நுழைந்தான்.
உடை மாற்றி கீழே இறங்கிவந்து கொண்டிருக்கும் கிருஷ் சாம்பல் நிற பிளேசரும் அதே நிறத்தில் பேன்டும் அணிந்து பிளேசருக்குள் வெள்ளை நிற சட்டையும் அதற்கு ஏற்றார் போல் சிவப்பு நிற டை அணிந்து கம்பீரமாக நடந்து வந்த கொண்டு இருந்த மகனின் அழகை ரசித்து கொண்டு இருந்தார் தேவகி.அதை கவனித்து கண்களால் என்ன என்றான் அம்மாவைப் பார்த்தவாறு.
“ஒண்ணும் இல்லை கண்ணா…என் பையன் எவ்வளவு அழகுனு பார்த்து ரசிச்சிட்டு இருக்கேன்” என்றார் பூரிப்புடன்.
“அம்மா…!போங்கம்மா…உங்களுக்கு வேற வேலையே இல்லை… சரிம்மா பை.அம்மா ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு…அதனால் நான் கிளம்பிடேனு…தாத்தாக்கிட்ட சொல்லிவிடுங்கள்” என்று கூறி அவசரமாக கிளம்பினான்.
அவன் சென்றபிறகு விசு சாப்பிட அமர்ந்தார்.அவருக்கும் விசயம் பரிமாறப்பட்டது.அவருக்கும் கிருஷை நினைத்து பெருமையே. அதன்பிறகு வீட்டில் உள்ள ஆண்கள் அனைவரும் சாப்பிட அமர்ந்தனர்.அவர்கள் ஒவ்வொருவராக சாப்பிட்டுவிட்டு வேலைக்கு சென்றனர்.
கிருஷ் அவன் அலமாரியில் இருந்தது என்ன…?அதை ஏன் மறைத்து வைத்தான்…?அதனிடம் என்ன கூறினான்…அப்படி அதில் இருந்தது என்ன…?