கீதா உன்னுடைய கணவன் பெயரைச் சொல்லு என்றவுடன்…ஶ்ரீநிதி மெதுவாக தன் கணவன் பெயரை உச்சரித்தாள்.
அது “கி..ரு..ஷி..வ்..ந..ந்..த..ன்” என்று கூறியவுடன்,நிஷா அதிர்ந்தாள்.
இரண்டு முறை ஶ்ரீநிதி “நிஷா…நிஷா” என்று அழைத்தப்பிறகு தான் நிஷா சுயநினைவு வந்தாள்.
சுயநினைவு வந்தவுடன் நிஷா கோபத்துடன் “இதை முன்னாடியே சொல்ல வேண்டியது தானேடி…நான் வேறே நீ கிருஷ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கலை என்ற கோபத்தில்…இவ்வளவு நேரமும் உன்னை…மனசுகுள்ளே திட்டிட்டே இருந்தேன்…” என்று கூறியவள் தொடர்ந்து,
“ஏன்டி…நாம் அன்றைக்கு ஸ்பென்சர் பிளாசாவில் பார்க்கும் போது நீ உன் ஹாஸ்பென்ட் பேரு ஷிவ்னு தானே சொன்னே…??” என்றாள் சந்தேகத்தோடு.
ஶ்ரீநிதி நக்கலாக ஒரு பார்வைப் பார்த்தாள்.
அதுவே சொல்லாமல் சொல்லியது நீ தப்பாக புரிஞ்சிக்கிட்டு என்ன சொல்லுறியா…?? என்று,அதன்பிறகு நிஷா நன்றாக யோசித்து மனதில் ‘ஆமாமில்லை ஶ்ரீநிதி அன்றைக்கு அவள் கணவனை அறிமுகப்படுத்தவேயில்லையே… அவள் ஷிவ்னு கூப்பிட்டதை வைத்து…நாம் தானே ஶ்ரீநிதி ஹஸ்பென்ட் பேரு…ஷிவ்னு நினைச்சோம்’ என்று தன்னையே திட்டி கொண்டு ஶ்ரீநிதியிடம் அசடு வழிந்தவாறு,
“சாரிடி…நான் கிருஷ் அண்ணாவைப் பார்த்ததேயில்லையே…அதனால் தான் தப்பாக நினைச்சிட்டேன்” என்றவுடன் ஶ்ரீநிதி அவள் தலையில் கொட்டு வைத்துவிட்டு “நீ இன்னும் மாறவேயில்லைடி…!!” என்று சிரிப்புடன் கூறினாள்.
இப்போது நிஷா குழப்பத்துடன் “ஆமாம்…நீ காலேஜ் படிக்கும்போது கிருஷ் அத்தான்னு தானே கூப்பிடுவே…இப்போ எதுக்கு ஷிவ்னு சொல்லுறே… அதனால் தான் எனக்கு குழப்பமாகிடுச்சு…சோ எல்லாத் தப்பும் உன்னோடுது தான்” என்று பிளேட்டை அவள் பக்கம் திருப்பினாள்.
ஶ்ரீநிதி அவளை முறைத்துவிட்டு…அந்த நாள் இனிமையான நினைவுகளை ஞாபகப்படுத்தி முகம் முழுக்க புன்னகையுடன் பழைய நினைவைக் கூற ஆரம்பித்தாள்.
4 வருடங்களுக்கு முன்,
ஶ்ரீநிதி மற்றும் கிருஷின் திருமணம் முடிந்த திருப்தியுடன்…குடும்ப மொத்தமும் சந்தோஷத்தில் திளைத்திருந்தனர்…கிருஷ் தாலிக் கட்டி முடித்தவுடன் பிடித்த ஶ்ரீநிதியின் கையை…வரவேற்பு முடியும் வரை விடாமல் பிடித்து கொண்டிருந்தான்.
மணப்பெண் தோழியாக அருகில் நின்றுக்கொண்டிருந்த கீதா…இவர்களின் ரோமென்ஸ்களையெல்லாம் பார்த்து எரிச்சலடைந்து அவளின் காதில் “ஶ்ரீ இங்க நாங்களும் கொஞ்சம் இருக்கோம்…எங்களையும் கொஞ்சம் கவனி…!!” என்றாள்.
அதைக்கேட்ட ஶ்ரீநிதி குறும்புடன் “உனக்கு அவ்வளவு பிலீங்கஸா இருந்தால்…நீயும் கல்யாணம் பண்ணி ரோமென்ஸ் பண்ணு…!இப்போது கீழே போய் வாணி கூட பேசிட்டி இரு போ…!!” என்று கூறி அவளை அங்கிருந்து துரத்தினாள்.
கீதா பயத்துடன் “வாணிக்கிட்டயா…அங்கே அதுக்கு மேலே ரோமென்ஸ் போயிட்டு இருக்கு…நான் பேசாமல் நம் பிரண்ட்ஸ் கூட உட்கார்ந்துக்கிறேன்…!!” என்று கூறி மேடையிலிருந்து கீழே இறங்கினாள்.
இங்கே கிருஷ் காலையில் தாலிக்கட்டும் போது…அவள் கட்டியிருந்த…அந்த எளிமையான கூரைப் புடவையில் மிளிர்ந்த அழகிலும்…வரவேற்பின் போது அவள் அணிந்திருந்த சிவப்பு நிற லெஹன்கா சோளியில்…கொஞ்சம் ஒப்பனையில் மிளிர்ந்த அழகிலும் தன்னையே தொலைத்து அவளை பார்வையால் விழுங்கி கொண்டே…இரவில் கிடைக்கும் தனிமைக்காகவும்… மனம் முழுக்க ஏக்கத்துடன் காத்திருந்தான்.
ஶ்ரீநிதியும் அவனின் விழுங்கிவிடும் பார்வையில்…தன் உடையின் நிறத்திற்கு நிகராக சிவந்த…தன் முகத்தை மறைக்கமுடியாமல் இருந்தும்…அவளும் சந்தன நிற ஷெர்வானியில் இருந்தவனின் அழகை ரசித்து கொண்டிருந்தாள்.
அதனைப் பார்த்த குடும்ப மொத்தத்திற்கும் மகிழ்ச்சியாக இருந்தது…வந்திருந்த அனைவரின் கண்ணும் கிருஷ் ஶ்ரீநிதியின் மேல் தான் இருந்தது…மீராவை அவளுடைய புகுந்த வீட்டிற்கு…அனுப்பி வைத்துவிட்டு…கிருஷையும் ஶ்ரீநிதியையும் நந்தவனத்திற்கு அழைத்து வந்தனர்.அப்போதும்…கிருஷ் விடாமல்…ஶ்ரீநிதியின் கையைப் பிடித்து கொண்டிருந்தான்…ஶ்ரீநிதிக்கு தான் ஒரு மாதிரி வெட்கமாக இருந்தது…இருந்தும் அவளும் விடாமல் அவன் கையைப் பிடித்து கொண்டிருந்தாள்.
வாணி தான் “அய்யோ அத்தான்…அக்கா கையைக் கொஞ்சம்விடுங்க…அக்கா உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டாள்… இங்கே தான் இருக்கப் போகிறாள்…என்று தன் அத்தானை கிண்டல் செய்துவிட்டு,
“அக்கா…நீ ரொம்ப கொடுத்து வைத்தவள்…எனக்கும் தான் ஒண்ணு இருக்கே…ரொமான்ஸ்னா என்னனு கேட்கும் போல…வேஸ்ட் ஃபேலோ…பேசாமல் ஆளை மாத்திக்கலாமா…??” என்று கண்ணடித்து கூறியவளை…ரிஷி முறைத்து கொண்டே…அவளை துரத்த ஆரம்பித்தான்.
அப்படியே துரத்தி கொண்டே இருவரும் மாடிப்படி ஏறி மேலே ஓடினார்கள்.
எல்லோரும் அவர்களைச் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தனர்.ஜானகி “தம்பி…உன்னை என்னவோ நினைச்சேன்டா…ஆனால் நீ இப்படி ரொமேன்ஸ் மன்னனாக இருப்பேன்னு நினைக்கவேயில்லைடா…” என்று குறும்புடன் கூறி தன் மகளின் கையைப் பிடித்தவாறு,
“தம்பி…கொஞ்ச நேரத்திற்கு உன் பொண்டாட்டியை இங்கிருந்து கூட்டிட்டு போறேன்…!!” என்று கூறி சிரிப்புடனே அழைத்து சென்றார்.
கிருஷ் தன் மனதில் ‘உங்களுக்கு என்ன தெரியும்…எத்தனை வருடம் காத்திருப்பு இது…இதற்காக இந்த நிமிடத்திற்காக தான்…நான் காத்திருந்தேன்…அதனால் என் பொண்டாட்டி கையைப் பிடிச்சிருக்கேன்…இது உங்களுக்கு பொறுக்காதே…!!’ என்று எல்லோரையும் வைதான்.
ஶ்ரீநிதி சென்ற பிறகு மற்றவர்களிடம் பேசி கொண்டிருந்தான் கிருஷ்.ஆனால் அவன் எண்ணம் முழுவதும் ஶ்ரீநிதியைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்தது.
மேலே வாணியை ரிஷி பிடிக்கப்போகும் போது…வாணி அவளின் அறைக்குள் ஓடி…கதவைச் சாற்றப் போனவளைத் தடுத்த ரிஷி…அவளைத் தள்ளி அந்த அறைக்குள் நுழைந்து…கதவைத் தாளிட்டுவிட்டு…மெதுவாக அவள் பக்கம் திரும்பினான்.
வாணிக்கு இப்போது படப்படப்பு அதிகமாகியது…ரிஷி “கீழே என்ன சொன்ன மறுபடியும் சொல்லு…” என்று கேட்டவாறு அவளை நெருங்கினான்.
வாணிக்கு படப்படப்பு அதிகமாக பின்னால் நகர்ந்தவாறு “நா…நான் என்..ன சொ..சொன்னேன்…??” என்று திக்கி தடுமாறினாள்.
ரிஷி இன்னும் அவள் அருகில் நெருங்கிய வாறு “எனக்கு ரொமென்ஸ்னா என்னனு தெரியாதுனு தானே சொன்னே…இதுக்கு எல்லாம் மேலே…வேஸ்ட் ஃபேலோ வா…ஹூம்…!!” என்று கேட்டு ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
வாணி இப்போது இன்னும் பின்னால் நகர்ந்தவள்…கட்டிலின் கால் தடுக்கி மெத்தையில் விழுந்தாள்.
ரிஷி இன்னும் வேகமாக அவளை நெருங்கினான்.
இப்போது வாணி அதிலிருந்து எழுந்தவாறு “சாரி அத்தான்…நான் சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேன்…” என்று இதயம் படப்படக்க அவசரமாக கூறி முடித்தாள்.
அதற்குள் அவளை நெருங்கிய ரிஷி…அவளின் இடுப்பில் கைக்கொடுத்து தூக்கியவன்… அவள் விலகும் முன் அவளின் இதழோடு தன் இதழை இணைத்ததோடு…அணைப்பையும் இறுக்கினான்.
முதலில் திமிறியவள் பின்பு…அந்த முத்தம் தந்த கிறக்கத்தில்…அதை அனுபவிக்க ஆரம்பித்தாள்.தன்னையறியாமலே… அவளின் கை அவனை அணைத்திருந்தது.
அவள் சுவாசத்திற்கு தடுமாறியவுடன்…அவளை விடுவித்தவன் “இனிமே நீ என்னை வேஸ்ட்ஃபேலோனு சொல்லுவே…!!” என்று சிரிப்புடன் கைநீட்டி எச்சரித்தவனைப் பார்த்த வாணி…சிவந்த முகத்துடன் தலைக்குனிந்தவாறு இல்லை என்பது போல் தலையாட்டினாள்.
அவளின் வெட்கத்தை ரசித்து கொண்டே…ரிஷி அவளின் முகத்தை ஒரு விரலால் நிமிர்த்தி…அவளின் கண்களை உற்றுப் பார்த்தான்.
வாணியும் அவனின் கண்களை உற்று பார்த்தாள்.இருவரின் கண்ணும் ஒன்றோடு ஒன்று கலந்தது.அது தந்த மயக்கத்தில் அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்தாள் வாணி.
இரவு 10 மணிக்கு…கிருஷ் தன் அறையில்…தன் மனம் கவர்ந்தவளின் வருகைக்காக காத்திருந்தான்.
ஶ்ரீநிதி எப்போதும் போல் தன் தாத்தா பாட்டியிடம் ஆசிர்வாதம் வாங்கி நிமிர்ந்தவளை கன்னத்தில் இடித்த பாட்டி “ஏன்டி சிறுக்கி…உன்னை அடக்க ஒருத்தன் வருவன்னு சொன்னேன் தானே…பாரு மகராசன் மாதிரி என் பேரனே வந்திருக்கான்….இனிமேலாவது பொம்பளை புள்ளையா அடக்க ஒடுக்கமாக இரு…!!” என்று வஞ்சித்தவரை பார்த்த ஶ்ரீநிதி,
நக்கலாக “எப்படி பாட்டி…??இப்படியா…?? என்றவாறு வாயைப் பொத்தி உடலை குறுக்கி காண்பித்தாள்.
அதைப்பார்த்த தாத்தா சத்தமாக சிரித்தார்.
பாட்டி கோபத்துடன் “உனக்கெல்லாம் வாய்கொழுப்பு அடங்குதானு பாரு…உனக்கெல்லாம் என் பேரான்டி கிஷூ தான் சரி…!!” என்று சரி நொடித்தவருக்கு,
ஶ்ரீநிதி திமிராக “பாட்டி…அத்தான் பேரு கிஷூ இல்லை… கிருஷ்… அதை முதலில் சரியாக சொல்லுங்க…அப்புறம் வந்து உங்கள் பேரன் என்னை அடக்கறதைப் பார்த்துக்கலாம்…அவரால் என்னை என்ன பண்ணமுடியும்…??” என்று கேட்டு பதிலடிக் கொடுத்தாள்.
பாட்டியும் விடாமல் “என்ன பண்ணமுடியும்னு…என் பேரன் காட்டுவான்…” என்று தன் பேரனைப் பற்றி தெரியாமல் கூறினார்.
ஶ்ரீநிதி கிருஷின் விழுங்கும் பார்வையை மனதில் வைத்து “சரி பாட்டி…யாரை யார் அடக்கறான்னு பார்க்கலாம்” என்று சவால் விட்டு நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.
அதில் ஒளிந்திருக்கும் சுட்சமத்தை அறியாமல் பாட்டியும் ஒத்து கொண்டார்.
தாத்தா சிரிப்புடன் “சபாஷ்…சரியான போட்டி” என்று கூறி பாட்டியிடம் முறைப்பையும்…பேத்தியிடமிருந்து ஹைப்பையும் வாங்கினார்.
அதன்பிறகு முதலிரவு அறையில் கண்களில் கனவு மின்ன அடியெடுத்து வைத்தாள் ஶ்ரீநிதி…அறையின் உள்ளே நுழைந்து கதவை தாளிட்டுவிட்டு திரும்பிய ஶ்ரீநிதி…கிருஷின் கையணைப்பில் இருந்தாள்.
ஶ்ரீநிதி அவன் அணைப்பிலிருந்து விலகியவாறே “அத்தான் விடுங்க… நான் உங்களிடம் கொஞ்சம் பேசணும்…!!” என்று கூறியவுடன்,
கிருஷ் கோபமாக “இங்கயெல்லாம் பேசக் கூடாது…எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கலாம்…” என்று அணைக்கப் போனவனின் கைகளைத் தட்டிவிட்ட ஶ்ரீநிதி,
“அத்தான் பிளீஸ்…பிளீஸ்…!!” என்று முகத்தைச் சுருக்கி கெஞ்சியவளை வேறு வழியில்லாமல் விலகிவிட்டு கட்டிலில் போய் அமர்ந்தான்.
ஶ்ரீநிதி அவனை சிரிப்புடன் பார்த்துக் கொண்டே அவனை ஒட்டி அமர்ந்தவாறு “அத்தான்…என் மேல் கோபமா…??” என்று கேட்டவளைப் பார்த்து முறைத்தவன்…
“இல்லை…உன் மேலே ஆசையாய் இருக்கேன்…” என்றவுடன்,
ஶ்ரீநிதி “அது தான் எல்லாருக்குமே தெரியுமே…!!” என்றாள் குறும்புடன்.
கிருஷ் முறைப்புடன் “அதுதான் தெரியுதே…அப்புறம் எதுக்கு இந்த நேரத்தில் வந்து பேசணும்… அது இதுனு சொல்லிட்டு இருக்கே…??” என்றான் எரிச்சலுடன்.
ஶ்ரீநிதி அவனின் கன்னகுழியில் விரல்விட்டு “அத்தான்…வெறும் பத்து நிமிடம் தான்…பிளீஸ்…” என்று குழைந்தவளிடம் மறுக்க மனமில்லாமல் சரி என்றான்.
“அத்தான்…நான் உங்களை காதலிக்கிறேன் என்று யார் உங்களிடம் சொன்னது…ஏனெனில் இதைப் பற்றி என்னை…கீதாவை தவிர…வேறு யாருக்கும் தெரியாது…அப்புறம் யார் சொன்னது உங்களிடம்…??” என்று கேட்டவளைப் பார்த்து சிரித்த கிருஷ்,
“அதை ராம் மாமா தான் என்னிடம் சொன்னாங்க…நீ ஏதோ மாதிரி இருந்தபோல…அதைப் பார்த்துவிட்டு மனசு கேட்காமல்…உன் அறைக்கு வந்திருக்காரு…அன்றுமட்டுமில்லாமல் நீ எப்போதெல்லாம் சோகமாக இருக்கியோ…அப்போதெல்லாம் உன்னை உன் அறையில் வந்து பார்த்துவிட்டு தான் போவாராம் குண்டச்சி…அப்போ தான் நீ கீதாவிடம் என்னை காதலிக்கிறதைப் பற்றி பேசிட்டு இருந்திருக்கே…அதைக் கேட்டுவிட்டு சந்தோஷத்துடன் என்னிடம் வந்து சொன்னாரு…ஆனால் என்னால் அன்றைக்கு சந்தோஷப்பட முடியலை குண்டச்சி…” என்றவுடன் விழிவிரித்து ஆச்சரியத்துடன் பார்த்தவளை அருகில் இழுத்து தன் அணைப்பில் வைத்தவாறு,
“ஏனால் நீ ரமேஷ் பற்றி என்னிடம் சொல்லாத கோபத்தில் இருந்தேன்…நீ ஏன் அவனைப் பற்றி என்னிடம் சொல்லவில்லை… ??” என்று கோபமாக கேட்டவனை,
ஶ்ரீநிதி பாவமாக பார்த்து “எல்லாத்தையும் நானே பார்த்துக்கலாம்னு விட்டுட்டேன் அத்தான்…உங்களிடம் சொல்லி…எதற்கு வீண் சிரமம்னு தான் விட்டுட்டேன்…சாரி அத்தான்…!!” என்றவளின் கன்னத்தில் முத்தமிட்டு,
“இட்ஸ் ஓகே குண்டச்சி…!!” என்றான் மலர்ந்த முகத்துடன்.
எப்போதும் போல்…அவன் சிரிக்கும் போது விழும் கன்னக்குழி அழகில் தன்னை தொலைத்த ஶ்ரீநிதி…அவனிடம் இன்னும் வாகாகப் பொருந்தி அவன் கன்னக்குழியில் முத்தமிட்டு…வெட்கத்தில் அவன் நெஞ்சில் முகத்தை மறைத்தாள்.
கிருஷ் இப்போது சிரிப்புடன் “குண்டச்சி…இப்போ நாம் பேசினது போதும்னு சொல்லுறியா…தேங்கஸ்டா…இது தான் எனக்கும் வேணும்…!!” என்று கணவனாக அவளை உணர வைக்கும் வேலையைத் தொடங்கினான்.
அதில் மயங்கிய ஶ்ரீநிதியும்…அவனிடம் தன்னை தொலைக்க ஆரம்பித்த வேளையில்…ஶ்ரீநிதியின் செல் போன் அலறியது…அதைக்கேட்டவுடன் அவர்களின் மயக்கநிலை நீங்க…கிருஷ் எரிச்சலுடன் இந்த நேரத்தில் யாரது என்றவாறு படுத்திருந்தப்படியே செல்லை எடுத்து பார்த்தான்.
பார்த்தவன் எரிச்சலுடன் “இது என்னது…??” என்று அவளிடம் காண்பித்து கேட்டான்.
அதைப்பார்த்த ஶ்ரீநிதி அசடுவழிந்தவாறு “சாரி அத்தான்…இன்றைக்கு கீதாவிற்கு பிறந்தநாள் அத்தான்…அதனால் அவளுக்கு மறக்காமல் வாழ்த்து சொல்லறதுக்காக அத்தான்…அலர்ட் வைச்சிருந்தேன் அத்தான்…இப்போ நான் அவளுக்கு வாழ்த்து சொல்லட்டுமா அத்தான்…பிளீஸ் அத்தான்…!!” என்று வார்த்தைக்கு வார்த்தை அத்தான் போட்டவளை முறைத்த கிருஷ்,
“இன்னொரு வாட்டி என்னை அத்தான் பொத்தான்னு சொன்னே… நான் செம்ம கடுப்பாகிடுவேன்…” என்றான் கோபத்துடன்.
ஶ்ரீநிதி வேண்டுமென்றே பாவமாக “அத்தான்…வேறே எப்படி அத்தான்…உங்களை கூப்பிடறது அத்தான்…நீங்களே சொல்லுங்க அத்…என்று கூறி கொண்டே சென்றவளை தடுத்த கிருஷ்,
“அம்மா தாயே…!!நீ எப்படி வேணாலும் கூப்பிடு…ஆனால் அத்தான்னு சொல்லாதே…என்றவுடன் அவளின் கண்களில் குறும்பு தென்படவும்,
கிருஷ் உஷாராக “அதுக்குனு போடா வாடானு சொல்லாதே…!!” என்று கையெடுத்து கூம்பிட்டான்.
ஶ்ரீநிதி அவனைச் சிரிப்புடன் பார்த்து “அப்போது நான் இனிமே கிருஷ்னு சொல்லட்டா…என்று சொன்னவள் அவளே “வேணாம் எல்லாரும் உங்களை அப்படி தானே கூப்பிடறாங்க…வேற ஏதாவது என்று யோசித்து கண்டுப்பிடித்த புன்னகையுடன் “ஷிவ்…இது எப்படி இருக்கு …நல்லாயிருக்கா அத்தான்…??” என்று ஆர்வமாக கேட்டவளிடம்,
“சூப்பர் குண்டச்சி…ஆனால் மற்றவர்கள் முன்னால் அத்தான்னு கூப்பிடு…நமக்குள்ளே மட்டும் இந்த ஷிவ் இருக்கட்டும்” என்று கூறி ஆசையாய்…அவளின் முகத்தை நெருங்கியவனிடம்,
“ஷிவ்…நான் கீதாவிடம் பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிடட்டா…நான் ஒரு தடவைக் கூட…அவள் பிறந்தநாளுக்கு விஷ் பண்ணாமல் இருந்தது இல்லை…” என்று கூறியவளை,
இவள் இதெல்லாம் தெரிஞ்சு பண்ணறாளா…??இல்லை தெரியாமல் பண்ணுறாளா…?? என்று நினைத்து பாவமாக அவளை பார்த்தவன்…அவள் கண்களில் குறும்பும்…உதடுகளில் சிரிப்பும் தெரிய அவளின் விளையாட்டைப் புரிந்துக்கொண்ட கிருஷ்…அதன்பிறகு அவளை பேசவிடாமல் செய்ய…அவளின் இதழில் கவிதை எழுத ஆரம்பித்தான்.அவளை கொஞ்சம் கொஞ்சமாக காதலால்… தாம்பத்தியம் என்னும் வாழ்க்கையில்…தன் பக்கம் இழுத்து கொண்டிருந்தான்.
இதையெல்லாம் சொல்லிமுடித்த ஶ்ரீநிதி…தன் தோழி இன்னும் ஆர்வமாக தன் கதைக் கேட்டு கொண்டிருப்பதைப் பார்த்து ஶ்ரீநிதி சிரிப்புடன் “ஏய்…போதும்…போதும்…ஸ்டாப்…இதுக்கு மேல் சென்சார் பண்ணியாச்சு…இதெல்லாம் உன்னிடம் சொல்லமாட்டாங்க…அப்புறம் இன்னும் என்ன ஜொள்ளு ஊத்திக்கிட்டே…கதைக் கேட்டுட்டு இருக்கே…!!” என்று அவளை கிண்டல் செய்தாள்.
உடனே நிஷா “போடி லூசு…நான் ஜொள்ளு ஊத்தறதை நீ பார்த்தியா…??ஆனாலும் உன் குறும்புத்தனத்தை முதலிரவிலுமாடி காட்டுவே…” என்றவளைப் பார்த்து கண்ணடித்த ஶ்ரீநிதி,
“அதெல்லாம் சும்மா ஒரு என்ஜாய் மென்ட்க்கு” என்றவுடன் நிஷா முறைத்தாள்.அவளைப் பேசி சமாதானம் செய்து…சாப்பிட வைத்து அனுப்பிவிட்டு…கிருஷைத் தேடி சென்றாள்.