அத்தியாயம் 28

தன்னை தவிப்போடு வில் சேரில் உட்கார்ந்தவாறு பார்த்து கொண்டிருப்பவரைப் பார்த்த ஶ்ரீநிதி “பெரியப்பா உங்களை மன்னிக்கும் அளவு பெரிய ஆள் நானில்லை…உங்கள் மேல் எனக்கு கோபமில்லை…ஏனெனில் இப்படியொரு அப்பா அம்மா எனக்கு உங்க மூலமாக தான் கிடைச்சிருக்காங்க…அதனால் எனக்கு எந்த கோபமும் இல்லை…??” என்று கூறி புன்னகை புரிய முயன்றாள்.

ராம் “இன்னும் என்ன பெரியப்பா…அப்பானு சொல்லுமா…??” என்றவரை,

“இல்லை பெரியப்பா…உங்களுக்கு மீரா அக்கா மட்டும் தான் பொண்ணு…நான் இவங்களோட பொண்ணாக இருக்கமட்டும் தான் ஆசைப்படுகிறேன்…என்று விசுவையும் ஜானகியையும் காண்பித்துவிட்டு,

“நீங்க மன்னிப்பு கேட்க வேண்டியது…பெரியம்மாவிடமும் அப்பாயி இடமும் தான்…அதனால் அவங்களிடம் மன்னிப்பு கேளுங்கள்…!!” என்று பெருந்தன்மையுடன் கூறினாள்.

அதைக்கேட்ட ஜோதிக்கும் குந்தவைக்கும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.இப்படிப்பட்ட பொண்ணையா நாம் தப்பாக பேசினோம்…நடத்தினோம் என்று வேதனைப்பட்டனர்.

ராமிற்கு ஶ்ரீநிதி அப்பா என்று கூப்பிடவில்லை என்ற வருத்தம் இருந்தது…இருந்தும் அவள் சொல்லவதும் சரி தான் என்று முடிவு செய்து தன் தாயிடமும் தாரமிடமும் மன்னிப்பு வேண்டினார்…அவர்களும் பெருந்தன்மையுடன் மன்னித்துவிட்டு ஶ்ரீநிதியிடம் அவர்கள் மன்னிப்பு வேண்ட அவளும் மன்னித்துவிட்டாள்.

இதையெல்லாம் கோவிலிருந்து வந்த மற்ற குடும்பத்தினருடன் பகிர்ந்தவுடன் அனைவருக்கும் எல்லையில்லாத மகிழ்ச்சியாக இருந்தது.எல்லோரும் ஒன்று கூடி பேசி கொண்டிருக்கும்போது ரிஷி தீடிரென்று “என்னப்பா…ஓரே சினிமா டிராமா மாதிரி எல்லோரும் அழுது வடிஞ்சிட்டு இருக்கீங்க…சீக்கிரம் இந்த ஶ்ரீநிதியை எனக்கு அண்ணியாக்குங்க…!!” என்று கூறியவுடன்,

தயா “அதற்கு என்னடா அவசரம்…” என்றவுடன்,

ரிஷி குறும்புடன் “அப்போ தானே என் ரூட்டு கிளியராகும்…!!” என்று வாணியைப் பார்த்து கண்சிமிட்டினான்.வாணி அதைப்பார்த்து வெட்கப்பட்டாள்.அதை கவனித்த எல்லோரும் சிரித்துக் கொண்டிருந்தனர்.

உடனே தாத்தா சிரிப்புடன் கிருஷையும் ஶ்ரீநிதியையும் பார்த்து “சொல்லுங்க…எப்போ கல்யாணம் வச்சிக்கலாம்…??” என்று கேட்டார்.

கிருஷ் சிரிப்பை மட்டுமே பதிலாக தந்தான்.ஆனால் ஶ்ரீநிதி தீவிரமான முகத்துடன் “மீரா அக்கா…எப்போது எழுந்து என் கல்யாணத்திற்கு சம்மதம் தராங்களோ…!!அப்போது தான் எனக்கு கல்யாணம்…!!” என்றவுடன் எல்லோரும் சிரிப்பை நிறுத்திவிட்டு அவளின் முகத்தைப் பார்த்தனர்.

“ஆமாம் தாத்தா…மீரா அக்கா…கிருஷ் அத்தானை ரொம்பவும் விரும்பனாங்க…அதனால் தான்…இதையெல்லாம் செய்தார்கள்…சோ அவங்க எப்போது எழுந்து வந்து என் கல்யாணத்திற்கு முழு சம்மதம் சொல்லுறாங்களோ…??அப்போது தான் எனக்கு கல்யாணம்…!!” என்று முடிவுடன் கூறிவிட்டு மடமடவென்று தன் அறைக்குள் சென்றுவிட்டாள்.

இதையாரும் எதிர்ப்பார்க்காதிதினால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்தனர்.கிருஷ் ஶ்ரீநிதியின் மனநிலையைப் புரிந்து கொண்டான்.அதனால் அவளின் முடிவை ஏற்று கொண்டான். குடும்பத்தினர் எல்லோரும் மீரா கண் விழுப்பதற்காக காத்திருந்தனர். குந்தவை குற்றவுணர்ச்சியுடன் நடமாடிக் கொண்டிருந்தார்.ஶ்ரீநிதி தன் படிப்பைத் தொடர்ந்தாள்.

இப்படியாக காலம் யாருக்கும் காத்திருக்காமல் இரண்டு வருடம் எப்படி என்று தெரியாமல் உருண்டது…ஶ்ரீநிதி தன் படிப்பை முடித்துவிட்டாள்…ஆனால் மீரா கண்விழிக்கவேயில்லை…நடுவில் ஒரு நாள் ரமேஷின் குடும்பத்தினர் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றனர்…ரமேஷ் யாரையும் கல்யாணம் பண்ணிக்கொள்ள மாட்டேன் என்றுவிட்டான்…தொழிலில் எங்களுக்கு ஏகப்பட்ட நஷ்டம்…எங்க சின்ன பையனுக்கு அடிப்பட்டு ஆஸ்பெட்டலில் உயிருக்கு போராடி கொண்டு இருக்கிறான்…இதெல்லாம் உங்கள் குடும்பத்திற்கு நாங்கள் செய்த பாவம்…என்று மன்னிப்பு வேண்டியவர்களை வேறு வழியில்லாமல் மன்னித்துவிட்டனர்… எல்லோரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் ஶ்ரீநிதி தன் பிடியிலே இருந்தாள். எல்லோருக்கும் ஶ்ரீநிதியையும் கிருஷையும் நினைத்து கவலையாக இருந்தது.

அவர்களை சோதித்தது போதும் என்று நினைத்தவள் போல் மீரா கண்விழித்தாள்.அதன்பிறகு ஒரு மாதத்தில் கொஞ்சம் தேறிவிட்டாள்.அவளிடம் எல்லா விசயமும் பரிமாறப்பட்டது.அவளுக்கு இது மிகுந்த அதிர்ச்சியையும் குற்ற உணர்ச்சியையும் கொடுத்தது…

அதன்பிறகு ஶ்ரீநிதியை அழைத்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு வேண்டி கிருஷை கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி கூறினாள்.

அதற்கு ஶ்ரீநிதி “அப்போ உன் நிலைமை அக்கா…!!” என்றவளைப் பார்த்த,

மீரா குற்றவுணர்ச்சியுடன் “எனக்கு அத்தான் மேல் காதல் எல்லாம் இல்லை ஶ்ரீ…அவரை கல்யாணம் பண்ணிக்கொண்டால்…இந்த வீட்டில் என் மதிப்பு மரியாதை உயரும் …யாரும் என்னை கேள்வி கேட்க முடியாது என்று நினைத்தேனே ஒழிய அவர் மேல் எனக்கு காதலில்லை…இதற்காக நான் என்ன என்னவோ தப்பு பண்ணிட்டேன் ஶ்ரீநிதி என்னை மன்னி… என்று முடிப்பதற்குள்,

ஶ்ரீநிதி அவளின் வாயை மூடி “அதெல்லாம் தேவையில்லை அக்கா…” என்றவளை மீரா முகக்கன்றலுடன் “உனக்கு தெரியாது…நான் எவ்வளவு பெரிய ராட்சஸினு…உன்னையவே ஒரு தடவை கொ…கொ… என்று தடுமாறி முழுவதும் கூறி முடிப்பதற்குள்,

ஶ்ரீநிதி “எனக்கு தெரியும் அக்கா…!!” என்று கூறி சிரித்தாள்.

இப்போது மீரா அதிர்ந்து “என்ன உனக்கு தெரிஞ்சுமா…இத்தனை நாள் எனக்காக கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணாமல் இருந்தே…!!” என்று வினவினாள்.

“அக்கா…நீ எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரு…நான் எப்போதோ அதையெல்லாம் மறந்துவிட்டேன்…பிளீஸ் அக்கா…” என்று அவளை சமாதானப்படுத்தினாள்.

அதன்பிறகு ஆறுமாதம் கழித்து ஒரு சுபயோக சுபத்தினத்தில் கிருஷ் ஶ்ரீநிதியின் கழுத்தில் மங்கல நாணைப் பூட்டினான்.அதேநேரம் மற்றொரு மணவறையில் மீராவின் கழுத்தில் ரமேஷ் தாலிக் கட்டினான்.இதுயெல்லாம் ஶ்ரீநிதியின் யோசனை தான்.ரமேஷிடம் மீராவிடமும் பேசி…இதற்கான சம்மதத்தை வாங்கினாள் ஶ்ரீநிதி.

நடப்பில் இதையெல்லாம் கேட்டு கொண்டிருந்த நிஷா “ஏய் ஶ்ரீநிதி…” என்று சத்தமாக அழைத்தாள்.

அந்த நாளின் இனிமையான நினைவுகளில் சஞ்சரித்து கொண்டிருந்தவளின் நினைவுகளை நிஷா தடைச்செய்தவுடன் “என்னடி…??” என்று எரிச்சலுடன் வினவினாள்.

“என்னடி…இவ்வளவு சாதாரணமாக இருக்கே…நான் இங்க குழம்பிட்டு இருக்கேன்…!!” என்றவளைப் பார்த்த ஶ்ரீநிதி,

“என்ன குழப்பம்…!!”

“நீ கிருஷ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு சொன்னே… !!ஆனால் இப்போது ஷிவ் அண்ணாக் கூட இருக்கே…??” என்று கேட்டு முடித்தவளைப் பார்த்து ஶ்ரீநிதி முறைத்தாள்.

அந்த முறைப்பே சொல்லியது…நாம் ஏதோ தப்பாக கேட்டுவிட்டோம் என்று…ஆனால் என்னவென்று விளங்காமல் ஶ்ரீநிதியைப் பார்த்தாள்.

அப்போதும் அதே முறைப்போடு ஶ்ரீநிதி “ஏன்டி…என்னைப் பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது…ஒருத்தரைக் காதலிச்சிட்டு இன்னோர்த்தரை கல்யாணம் பண்ணிப்பது போல் தெரியுதா…??” என்று கோபமாக வினவினாள்.

நிஷா பாவமாக “நீ தான்டி முன்னாடி சொன்னே…??” என்றாள்.

“என்ன சொன்னேன்…??”

“ஶ்ரீநிதி இந்த ஒரு சப்பை விசயத்திற்காகவாக…நீ கிருஷ் அண்ணாவைப் பிரிஞ்சு…ஷிவ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே…?நீ சொல்லறதைப் பார்த்தால் கிருஷ் அண்ணா உன்னை உருகி உருகி காதலிச்சிருப்பாங்க போல…!!அப்படி பட்டவரை ஏன்டி பிரிஞ்சேனு நான் கேட்டதுக்கு நீ என்ன பதில் சொன்னே…??

அதுமட்டும் காரணமில்லை என்று சொன்ன தானே…அதுக்கு என்ன அர்த்தம்…நான் கிருஷைவிட்டுட்டு ஷிவ்வை கல்யாணம் பண்ணியதற்கு அதுமட்டும்காரணம்யில்லை என்று தானே அர்த்தம்…??” என்று கேட்டவளை நன்றாக முறைத்த ஶ்ரீநிதி,

“லூசு கிறுக்கி…நான் சொன்னது கிருஷ் அத்தானை அப்போது பிரிந்தற்கான காரணத்தை வைத்துதான் சொன்னேன்…நான் அடுத்த கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் குழந்தை அழுதுச்சா…??நான் அந்த கேள்வியை மறந்து விட்டேன்…அதற்காக என்னை இப்படி நினைப்பியா…??” என்று அவளிடம் சண்டைப் பிடித்தாள்.

நிஷா இப்போது பாவமாக “சாரிடி…நீயே சொல்லு…நீ கல்யாணம் செய்தவரின் பெயரைச் சொல்லு…??” என்று கேட்டவுடன்,

ஶ்ரீநிதி மெதுவாக அந்த பெயரை உச்சரித்தாள்.

அது “கிருஷிவ் நந்தன்”.

இப்போது நிஷா அதிர்ந்தாள்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top