ஶ்ரீநிதி கண்ணீரோடு “வீட்டிலிருந்து மீராவைக் கூட்டிட்டு போன கிருஷ் அத்தான் காருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…!!” என்றவுடன்,
“வாட் ஆக்ஸிடென்ட்டா…??” என்று அதிர்ந்தாள் நிஷா.
ஶ்ரீநிதி ஆமாம் என தலையாட்டி மறுபடியும் பழைய கதையைக் கூற ஆரம்பித்தாள்.
கிருஷ்…ராம்…மீரா மூவரும் காரில் பயணித்து கொண்டிருந்தனரே ஒழிய எதுவும் பேசாமல்…அமைதியாக ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு சிந்தனையில் மூழ்கியிருந்தனர்.
கிருஷ் ‘மீரா எதுக்கு ஶ்ரீநிதிக்கு இந்த அநியாயம் செய்தாள்.அப்படி அவளை எதிரியாக நினைக்கும் அளவு என்ன நடந்தது…??’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
ராம் ‘இவளுக்கு எவ்வளவு திமிரு இருந்தால் இந்த மாதிரி பண்ணியிருப்பாள்…எல்லாம் இந்த அம்மாவால் வருது…அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுத்து வைத்திருக்காங்க’ என்று அவளையும் தன் அம்மாவையும் மனதில் வைது கொண்டிருந்தார்.
மீரா தன் மனதில் ‘இந்த அப்பாவும் கிருஷ் அத்தானும் என்ன பேச போறாங்க…ஒரு வேளை எல்லா உண்மையும் தெரிஞ்சிருச்சா…??’ என்று பயத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
இப்படியாக மூவரும் வெவ்வேறு நிலையில் யோசித்துக் கொண்டிருக்கும்போது…தீடிரென்று பக்கவாட்டிலிருந்து வந்த ஒரு லாரி இவர்களின் கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது.
அப்படி இடித்ததினால் மீரா காரின் வெளியே தூக்கி எறியப்பட்டாள்.கிருஷூம் ராமும் சீட் பெல்ட் போட்டிருந்ததால் அப்படியே காரிலே இரத்த வெள்ளத்தில் மயங்கி இருந்தனர்.
பக்கத்திலிருந்தவர்கள் உடனடியாக அவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர்.விசயம் கேள்விப்பட்ட குடும்ப உறுப்பினர் அனைவரும் பதறி மருத்துவமனையை அடைந்தனர்.அப்படியே ஶ்ரீநிதிக்கு போனில் விசயத்தை கூறினார்கள்.அவளும் பதறியடித்து டெல்லியிலிருந்து கிளம்பினாள்.அவள் மனதில்,
“உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எறியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
கனவே கனவே கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே
பெண்ணே நீ வரும் முன்னே
ஒரு பொம்மை போலே இருந்தேன்
புன்னகையாலே முகவரி தந்தாயே
ஆயுள் முழுதும் அன்பே
உன் அருகினில் வாழ்ந்திட நினைத்தேன்
அரை நொடி மின்னல் போலே சென்றாயே
புல் மேல் வாழும் பனி தான்
காய்ந்தாலும்
தலை மேல் தாங்கிய நேரம்
கொஞ்சம்
ஆனால் பொற்காலம்
உன் அருகாமை அதை நான்
இழந்தாலும்
சேர்ந்தே வாழ்ந்த ஒவ்வொரு
நொடியின் நினைவே
சந்தோசம்
கடல் மூழ்கிய தீவுகளை
கண் பார்வைகள் அறிவதில்லை
அது போலே உன்னில்
மூழ்கிவிட்டேன்
உன் கை கோர்த்து
அடி நான் சென்ற இடம்
தன்னந்தனியாய் எங்கே வந்தாய்
என்றே கேட்கிறதே
உன் தோள் சாய்ந்து
அடி நான் நின்ற மரம்
நிழலை எல்லாம் சுருட்டி கொண்டு
நெருப்பாய் எரிக்கிறதே
நிழல் நம்பிடும் என் தனிமை
உடல் நம்பிடும் உன் பிரிவை
உயிர் மட்டும் நம்பிட மறுக்கிறதே
உயிரே உயிரே பிரியாதே
உயிரை தூக்கி எரியாதே
உன்னை பிரிந்தால் உலகம் கிடையாதே
கனவே கனவே கலையாதே
கண்ணீர்த் துளியில் கரையாதே
நீ இல்லாமல் இரவே விடியாதே”
என்று அவனுக்காக மனம் உருகி வழிய ஆரம்பித்தது…கிருஷ்ணா…!அவர் எனக்கு வேணும்…அவர் இல்லாமல் நான் இல்லை…பிளீஸ் எனக்கு அவர் வேணும்…என் உயிரை வேண்டுமானால் எடுத்துக்கோ… அவரை எப்படியோ பிழைக்க வைச்சிடு என்று வேண்டிக்கொண்டிருந்தாள்.
அவசரமாக விமானம் டிக்கெட் எடுத்து கோயம்புத்தூர் வந்து… அங்கிருந்து டாக்ஸி பிடித்து சேலம் வந்தடைந்தாள்.அவளுக்கே எப்படி இதெல்லாம் கடந்து வந்தாள் என்றே தெரியவில்லை…பொது இடத்தில் அழுக முடியாததால்…தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு வந்த ஶ்ரீநிதி…மருத்துவமனையில் தன் அம்மாவைப் பார்த்தவுடன் அழுகைப் பீறிட்டு வந்தது.
மூச்சுவிடாமல் அழுதுக்கொண்டிருந்தவளின் அருகில் வந்த அவளின் தந்தை விசு “கிருஷூக்கு ஒண்ணுமாகாதும்மா…கவலைப்படாதே…!!” என்று சமாதானப்படுத்தினார்.
அழுது அழுது மாய்ந்து கொண்டிருந்த ஶ்ரீநிதியின் அழுகைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி ஆபிரேஷன் தியேட்டரிலிருந்து வெளியே வந்த மருத்துவர் “கிருஷ் சீட் பெல்ட் போட்டு இருந்ததால்…அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை…ஆனால்…என்று கூறிவிட்டு,
கவலைப்படிந்த முகத்துடன் “அந்த பொண்ணு மீரா கோமாக்கு போயிட்டாங்க…அவங்களைப் பற்றி 24 மணி நேரம் கழித்து தான்…எதுவாக இருந்தாலும் சொல்லமுடியும்…அந்த பெரியவர் ராமின் கால் பலமாக நசுங்கி இருக்கு…அதனால் அவரால் நடக்கமுடியுமா என்று அவரின் காயங்கள் சரியான பிறகு தான் கூறமுடியும்” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
அவர் கூறியதை கேட்ட ஶ்ரீநிதி தன் அக்கா மீராவுக்காக கண்ணீர் வடித்தாள்.24 மணிநேரம் கழித்து மீரா பிழைத்துவிட்டாள் என்று செய்தி கிடைத்தது.ஆனால் அவள் கோமாவிற்கு சென்றுவிட்டதால் எப்போதும் வேண்டுமானாலும் நினைவு திரும்பலாம்…இல்லை திரும்பாமாலும் போகலாம் என்ற குண்டை தூக்கிபோட்டார் மருத்துவர்.
எல்லோரும் அவளின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டனர்.மீரா எவ்வளவு தான் கெடுதல் செய்திருந்தாலும்…ஶ்ரீநிதி அவளை அக்காவாகவே நினைத்து…அவளுக்காக கண்ணீர்விட்டாள்.
காவலர்கள் இந்த விபத்தைப் பற்றி விசாரித்துவிட்டு இதை செய்தவர்கள் ரமேஷ் வீட்டினர் என்று கூறினார்.அன்று கிருஷ் அவர்களை அடித்ததிற்காக அவனைப் பழிவாங்க தான்…இப்படி செய்தார்கள் என்று தெரிந்தவுடன் ஶ்ரீநிதி மனதால் ரொம்பவும் அடிப்பட்டு போனாள்.
கிருஷ் சரியான பிறகு இந்த வீட்டை விட்டு போய்விடலாம் என்று மறுபடியும் தப்பாகவே முடிவெடுத்தாள்.
கிருஷ் மருத்துவமனையிலிருந்து வந்ததிலிருந்து…அவனை கவனித்து கொள்ளும் முழுப்பொறுப்பும்…ஶ்ரீயே எடுத்துக் கொண்டாள்.கிருஷ் அவளின் அருகாமையை அமைதியாக ரசித்து கொண்டிருந்தான்.
ராமுக்கு கால் சரியாக இன்னும் இரண்டு மாதமாகும் என்று கூறியதால்…வீல் சேரைப் பயன்படுத்தினார்.மீரா இன்னும் கோமாவிலே இருந்தாள்.
இப்படியாக ஒரு மாதம் முடிந்தபின்பும் குந்தவை கவலையாக இருப்பதைப் பார்த்த ஶ்ரீநிதி மனசு கேட்காமல் அவரை ஆறுதல்படுத்த சென்றாள்.
அவரின் அருகில் சென்ற ஶ்ரீநிதி “அப்பாயி…மீரா அக்காவை நினைச்சு வருத்தப்படாதீங்க…அக்காவுக்கு சீக்கிரம் குணமாகி வீட்டிற்கு வந்திடுவாங்க…!!” என்றவுடன்,
மீராவின் அம்மா ஜோதி ஆங்காரத்துடன் “ஏய்…!எல்லா பிரச்சினையும்…உன்னால் தான்டி…நீ மட்டும் ஒழுங்காக இருந்திருந்தால்… அவங்க ஏன் உன்னை திட்ட போறாங்க…??அப்புறம் கிருஷ் உனக்காக சண்டைக்குப் போனதாலே தானே…அவங்க கிருஷை கொலைப்பண்ண முயற்சி பண்ணாங்க…இதில் என் பொண்ணும்…என் புருஷனும் தான் மாட்டிக்கீட்டாங்க…நீங்கயெல்லாம் நல்லாயிருக்கீங்க…” என்று வெடித்தார்.
அவர் அப்படி கூறியவுடன் ஶ்ரீநிதியின் கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது.அவளுக்கு சப்போர்ட்டாக யசோதா “என்ன ஜோதி இப்படி பேசிறே…இதெல்லாம் தப்பு…அவங்க சூழ்ச்சி பண்ணி இதையெல்லாம் செய்ததற்கு ஶ்ரீநிதி என்ன பண்ணுவாள்…!!” என்றார்.
“ஆமாம்…இன்னும் என்ன பண்ணலை…இந்த அனாதை கழுதை என்ன தான் பண்ணலை… முதலில் என் பொண்ணுக்கு கிடைக்க வேண்டிய வாழ்க்கையை இவள் பிடுங்கி அவளை சாகாமல் சாகடித்தாள்…அடுத்து என் பொண்ணை உண்மையாக சாகடிக்க செய்கிறாள்…இத்தனைக்கு காரணமான இவளை நான் ஒண்ணுமே சொல்லக்கூடாது…!!” என்று ஜோதி தன் போக்கில் உண்மையை உளறிக்கொண்டே சென்றவரை,
“அண்ணிஈஈஈஈ… போதும் நிறுத்துங்க!!!!!” என்று கர்ஜித்து நிறுத்தினார் அப்போது அங்கு வந்த விசுநந்தன்.
அப்போது தான் தான் உளறிக்கொட்டியதை உணர்ந்தார்.ஶ்ரீநிதி கண்ணீல் இன்னும் கண்ணீர் சுரந்தது.
அதற்குள் விசு “என் பொண்ணுக்கு நாங்க இருக்கும் போது…யாரைப் பார்த்து அனாதைனு சொன்னீங்க…அதன்பிறகு என்ன சொன்னீங்க… உங்க பொண்ணு வாழ்க்கையைப் பிடிங்கிட்டளா…??அவளாக ஒண்ணும் உங்கள் பொண்ணு வாழ்க்கையைப் பிடுங்கவில்லை… கிருஷும் ஶ்ரீநிதியை தான் காதலிக்கிறான்…அதை முதலில் புரிஞ்சிக்கோங்க…அடுத்து இந்த பிரச்சினைக்கு காரணம் ரமேஷ் தானே ஒழிய ஶ்ரீநிதி கிடையாது…புரியுதா…?இதுக்கு மேலேயும் ஏதாவது பேசுனீங்க…நான் சும்மாவே இருக்கமாட்டேன்…!!!!” என்று சீறிவிட்டு தன் மகளை அணைத்துவாறு,
“கண்ணம்மா…!!அவங்க சொல்லறதையெல்லாம் நீ கேட்காதேடா…!நீ என் பொண்ணு தான்…!!எப்போதுமே நீ தான் என்னோட மூத்த பொண்ணு…!அவங்க சொல்லறதையெல்லாம் மனசில் வைச்சிக்காதேடா…!நல்லவேளை உங்க அம்மா இங்கு இல்லை கேட்டிருந்தால் உடைந்து போயிருப்பாள்…இந்த உண்மை உனக்கு ஒரு போதும் தெரியக்கூடாதுனு…அவள் எப்போதும் கூறுவாள்…!!!” என்று கவலைத்தொய்ந்த முகத்துடன் கூறிக்கொண்டிருக்கும் போதே டொம் என்ற சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்ட அனைவரும் திரும்பி பார்த்தனர்.அங்கு ஜானகி இடிந்துப்போய் நின்று கொண்டிருந்தார்.அவரின் அருகில் வாணி கண்ணீருடன் நின்றிருந்தாள்.அதுவே சொல்லாமல் சொல்லியது அனைத்தையும் கேட்டுவிட்டனர் என்று.அய்யோ என்றானது விசுவிற்கு.
உடனடியாக மகளைவிட்டு ஜானகியிடம் சென்ற விசு ஜானகியை உலுக்கினார்…ஆனால் அவர் அப்படியே நின்றிருந்தாரே ஒழிய அசையவேயில்லை…விசு இன்னும் அவரை பலமாக உலுக்க ஆரம்பித்தார்.அப்போதும் அசையவேயில்லை.உடனே அவர் மனதில் கிலி பரவியது.அவர் தவிப்புடன் என்ன செய்வது என்று புரியாமல் இருந்தார்.
கீழே கேட்கும் சத்தத்தைக் கேட்டு கிருஷும் ரிஷியும் இறங்கி வந்தனர்.இறங்கி வந்தவன் பார்வையில் அழுது அழுது சிவந்த முகத்துடன் நின்றிருந்த ஶ்ரீநிதியும்…தவிப்புடன் நின்றிருந்த யசோதாவும் வாணியும்…எல்லாம் தன்னால் தான் என்பது போல் கைகளைப் பிசைந்து கொண்டிருந்த ஜோதி அத்தையையும்… உறைந்து போய் நின்றிருந்த அக்காவும்…அவரையே தவிப்புடன் பார்த்து கொண்டிருந்த விசு மாமாவையும்…இதையெல்லாம் அமைதியாக பார்த்து கொண்டிருந்த குந்தவையையும்…எல்லோரின் மனநிலையையும்… ஒரே நேரத்தில் கணித்த கிருஷ் ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கீழே இறங்கிவந்தான்.
இறங்கிவந்தவன் முதலில் ஶ்ரீநிதியின் கையைப் பிடித்து இழுத்து கொண்டு போய் ஜானகியின் முன் நிறுத்தினான்.அவனை நிமிர்ந்து பார்த்தவளை ஜானகியிடம் பேசுமாறு கண்களைக் காட்டினான்.
அவள் ஜானகியைப் பார்த்து “அம்மா…!!” என்று அழைத்தவுடன்…இதுவரை விசு எப்படி உலுக்கியும் சுயநினைவிற்கு வராதவர்…ஶ்ரீநிதியின் அந்த ஒரு சொல்லில் சுயவுணர்வடைந்து ஶ்ரீநிதியை ஆவேசமாக அழுகையுடன் கட்டியணைத்துவாறு “ஆமாம்மா…நான் தான் உனக்கு அம்மா…நான் அம்மாயில்லைனு தெரிஞ்சவுடனே என்னை வெறுக்கமாட்டியேம்மா…நீ என் மூத்த பொண்ணு…நீ என்னை விட்டு போகக்கூடாது…நீ எனக்கு வேணும் பேபி…என்னை விட்டு போயிடதே…என் வயிற்றில் சுமக்கவில்லைனாலும்… நீ தான் என் மூத்த பொண்ணு…யாரும் சொல்லறதையும் கேட்காதேம்மா…நீ தான் எனக்கு முக்கியம்…நீ தான் என் பொண்ணு….!நீ எனக்கு வேணும்!!என்னைவிட்டு போகதே பேபி…!!!” என்று சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லி புலம்பி கொண்டிருந்தார்.
ஶ்ரீநிதியும் தன் தாயின் தவிப்பை புரிந்து கொண்டு அதைப் போக்க எண்ணி “அம்மா…!!நான் எப்போதுமே உங்க பொண்ணுதான்… உங்களைவிட்டு பிரியவேமாட்டேன்…!!என்னை பெற்றது வேண்டுமானால் அவர்களாக இருக்கலாம்…ஆனால் என்னை பெறாமலே…இத்தனை வருஷம் என்னை பெற்றவர்களுக்கு மேல் பாசம் காண்பித்த உங்களை எப்படிம்மா பிரிவேன்…!!சின்ன வயதிலிருந்தே எனக்கு என்ன பிடிக்கும்…என்ன பிடிக்காதுனு…பார்த்து பார்த்து செய்தவங்க நீங்க…நான் சின்னதாக வேதனையில் முகத்தைச் சுருக்கினாலும் அதை தாங்காமல் எனக்காக வந்து என்னை சமாதானப்படுத்தி… என்னை சந்தோஷப்படுத்தி நீங்களும் சந்தோஷப்படுவீங்களே…உங்களை எப்படிம்மா விட்டுட்டு போவேன்… !!அதையெல்லாம் மீறி நான் உங்க பொண்ணு இல்லைனு தெரிஞ்சும்…எனக்கு ஒண்ணுனா துடிச்சு போற இந்த குடும்பத்தை விட்டு என்னால் பிரிந்து போகமுடியாதும்மா… நீங்க தான் என்னோட அப்பா அம்மா…இது தான் என் குடும்பம்…இப்போது மட்டுமில்லை… ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்…பிகாஸ் ஐ லவ் மை பெமலி…ஐ லவ் மை அப்பா அம்மா…!!” என்று உணர்ச்சி வசத்துடன் கூறி தன் தாயையும் தந்தையையும் கட்டியணைத்தாள்.
கூடவே தன் தங்கை வாணியின் கையைப் பிடித்துக் கொண்டாள்.
முதலில் அவரின் தாய் பாசத்தைப் பார்த்த அனைவரின் கண்ணும் கலங்கியது.ஆனால் அதன்பிறகு பேசிய ஶ்ரீநிதியின் ஒவ்வொரு வார்த்தையைக் கேட்டப்பிறகு…எதற்கும் கலங்காத கிருஷிற்கே கண் கலங்க ஆரம்பித்தது.
அங்கே அனைவரும் பாசப்போராட்டத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருந்தனர்.
இதுவரை அமைதியாக இருந்த ராம் “உங்கள் எல்லோரிடமும் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்…இந்த குடும்பத்தில் நடந்த அத்தனை குழப்பத்திற்கும் காரணம் மீரா தான்… என்று தொடங்கி முதலிலிருந்து அனைத்தையும் கூறி முடித்தவர்…
“அதனால் யாரும் ஶ்ரீநிதியைத் தப்பாக பேசாதீங்க…அது என்னால் தாங்கமுடியாது… ஏன் என்றால்… என்று ஆரம்பித்தவர்…
தொண்டையைச் செருமி கொண்டு “ஶ்ரீநிதி… என்றவரை விசு அவசரமாக இடமறித்து
“அவளும் உங்களுக்கு பொண்ணுமாதிரி தான்…அதை தானே சொல்லவரீங்க…எங்களுக்கு புரியுது அண்ணா…மீராவும் எங்களுக்கும் பொண்ணு தான்” என்று கூறி முடித்தார்.
ராம் அவரைப் பார்த்து விரக்தியாக சிரித்துவிட்டு “இதுக்கு மேலே நான் எதையும் மறைக்க விரும்பவில்லை விசு…நான் செஞ்ச பாவத்துக்கு தான் கடவுள் எனக்கு தண்டனைக் கொடுத்திருக்கார்… இப்போ கூட சொல்லைனா…கடவுள் என்னை மன்னிக்கவே மாட்டார்…எல்லோரும் நல்ல கேளுங்க…!! என்று எல்லோரையும் பார்த்து கூறியவர்…
“முக்கியமாக நீங்க இரண்டு பேரும்” என்று தன் தாயையும் தன் தாரத்தையும் சுட்டி காண்பித்துவிட்டு “ஶ்ரீநிதி என் பொண்ணு தான்…புரியலை…??அவள் பிறப்பதற்கு காரணமானவன் நான் தான்…” என்றவுடன் விசயம் தெரிந்தவர்களை தவிர…மற்ற எல்லோரும் சேர்ந்து அதிர்ந்தனர்.
குந்தவையே “என்னடா சொல்லுறே…??” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.
ராம் தலைகுனிந்தவாறு “ஆமாம் அம்மா…நான் காலேஜ் படிக்கும்போது ஒரு பொண்ணை விரும்பினேன்…அவள் பெயர் சீதாலட்சுமி…அதை உங்களிடம் சொல்ல எனக்கு பயமாக இருந்தது அம்மா…சரி காலேஜ் முடிஞ்சவுடன் உங்களிடம் சொல்லாம்னு இங்கு வந்து பார்த்தால்… எனக்கும் ஜோதிக்கும் கல்யாண ஏற்பாடு பண்ணியிருந்தீங்க…நாளை கல்யாணம் என்ற நிலையில் எப்படி சொல்வதுனு…நானும் சொல்லாமல் விட்டுவிட்டேன்…அதன்பிறகு அவளிடம் எந்தவொரு தொடர்புமில்லை… ஆனால் ஒரு நாள் சீதா போன் செய்து…என்னை பார்க்கணும் என்று கூறினாள்…நானும் சரியென்று போனேன்…அவள் என்னைப் பார்த்தவுடன் எனக்கு கேன்சர்…இன்னும் கொஞ்சநாள் தான்…உயிரோடு இருப்பேன்…அதுவரைக்கும் நீங்க என்கூடவே இருக்கீங்களா…?? என்று கேட்டவளின் கடைசி ஆசையை நிறைவேற்ற விரும்பி…என்று கூறிக்கொண்டிருந்தவர்,
முகக்கன்றலுடன் “அவளும் நானும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம்…எல்லாமே நல்லப்படியாக சென்று கொண்டிருந்த சமயம்…அப்போது மீராவிற்கு ஒரு வயசுயாகியிருந்த போது…சீதாவும் கருவுற்றிருந்தாள்…அதை கேட்ட எனக்கு கோபமாக வந்தது…நீ இப்படி இருக்கும் சமயத்தில் குழந்தை வேண்டாம்…கலைச்சிடலாம்னு எவ்வளவோ தடவை எடுத்து சொன்னேன்…ஆனால் அவள் கேட்கவில்லை…அதனால் அவள் ஊருக்கு செல்வதையே நிறுத்திவிட்டேன்…ஒரு நாள்…அந்த ஊரிலிருந்த ஒரு மருத்துவமனையிலிருந்து போன் கால் வந்தது…அவர்கள் உங்களுக்கு பெண் குழந்தைப் பிறந்திருக்கிறது…உங்கள் மனைவி சாகும் நிலைமையில் இருக்கிறார்…கடைசியாக உங்களை பார்க்க விரும்புகிறார் என்று சொன்னவுடன் பதறியடித்து…அவளைப் பார்க்க போனேன்…பார்த்தவுடன் அவள் கடைசியாக நம் குழந்தையைக் கை விட்டுடாதீங்க என்று மட்டும் தான் கூறி கண்ணைமூடிவிட்டாள்…
எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…வீட்டிற்கு கூட்டிவந்தால்… உங்கள் முகத்தில் எப்படி முழிப்பது என்று யோசித்து…சரி இந்த குழந்தையை ஒரு அனாதை ஆசிர்மத்தில் விட்டுவிடுவோம்…அவளின் பொறுப்பை மட்டும் நாம் ஏற்று கொள்வோம் என்று நினைத்து…அவளை அந்த ஆசிர்மத்தில் சேர்த்துவிட்டேன்… மாதம் ஒரு முறை போய் குழந்தையைப் பார்க்கலாம் என்று நினைத்து…முதல் மாதம் அங்கு போய்பார்த்தால் யாரோ குழந்தையை தத்து எடுத்துட்டாங்கனு சொன்னாங்க…
சரி எங்கேயாவது நல்லா இருக்கட்டும் என்று விட்டுவிட்டேன்…ஆனால் அதே இரண்டு நாள் கழித்து…விசு குழந்தையுடன் வீட்டிற்கு வந்தான்…எனக்கு ஒரு வேளை நம் குழந்தையாக இருக்குமோ என்று சந்தேகமாக இருந்தது…அதை உறுதிப்படுத்த அந்த ஆசிரமத்தில் விசாரித்து பார்த்தேன்…அவர்கள் கூறியது நந்தன் தாத்தாவின் பெயர்…எனக்கு அதிர்ச்சியாக இருந்தது…அதன்பிறகு ஒரு நாள் விசுவிடம் விசாரித்து தெரிந்து கொண்டேன்…விசு அந்த மருத்துவமனைக்கு பிராடிக்ஸ்க்காக அங்கு வந்திருந்திருக்கிறான்… அப்போது அங்கே என்னைப் பார்த்து எல்லா விசயத்தையும் தெரிந்து கொண்டு தாத்தாவிடம் கூறி…குழந்தை தத்து எடுத்த விசயத்தை கூறினான்..சரி நானும் நம் கண் முன்னால்…நம் பொண்ணு வளர்ந்தால் சரி என்று விட்டுவிட்டேன்…ஆனால் அதிலிருந்து தாத்தாவும் விசுவும் என்னிடம் பேசுவதில்லை…உங்கள் எல்லார் முன்னால் பேசுவதோடு சரி….” என்று மறைத்து வைத்திருந்த எல்லா உண்மையையும் கூறியவர்,
ஶ்ரீநிதியிடம் “என்னை மன்னிச்சிடும்மா…நான் செய்தது தப்பு தான்…அதற்கான தண்டனை கடவுள் எனக்கு கொடுத்துவிட்டார்… இந்த அப்பாவை மன்னிச்சிடுவியாம்மா…??” என்று தவிப்போடு வினவினார்.
எல்லாவற்றையும் கேட்டு உச்சக்கட்ட அதிர்ச்சியில் அனைவரும் மூழ்கியிருந்தனர்.அதுவும் குந்தவை இத்தனை நாளாக தன் சொந்த பேத்தியையா…?ஒதுக்கி வைத்திருந்தோம் என்று நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார்.
ஜோதிக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை…தன் கணவன் தனக்கு துரோகம் இழைத்தாரா…?? என்பதை இன்னும் நம்பமுடியாமல் உறைந்து நின்றிருந்தார்.
மற்றவர் இப்படியொரு தப்பு பண்ணினாரா…?என்று ராமை நினைத்து சங்கடமாகவும்…விசுவை நினைத்து பெருமையாகவும் யோசித்து கொண்டிருந்தார்.
ஜானகி இத்தனை வருடம் என் கூட வாழ்ந்திருக்கார்…ஆனால் ஒரு நாள் கூட ஶ்ரீநிதி…ராம் மாமா பொண்ணு என்று சொல்லவேயில்லை… என்று யோசித்துக் கொண்டிருந்தார்.