ரிஷி அவன் நண்பனின் சட்டையைப் பிடித்து “ஏன்டா…துரோகி இப்படி பண்ணினே…??உன்னை எப்படி நம்பினேன்…??உங்க அண்ணன் ஶ்ரீநிதியைக் காதலிக்கிறாருனு முன்னாடியே சொல்லிருந்தால்…நான் எங்க வீட்டில் பொறுமையாக எடுத்து சொல்லியிருப்பனே…ஆனால் ஏன்டா இப்படி பண்ணினே…!!” என்று கூறி அவனை அறைந்தான்.
தாத்தா தான் நடுவில் வந்து “விடுங்கப்பா…அவங்க போகட்டும்… இனிமே இந்த மாதிரி தப்பு தப்பாக நடந்துக்காதீங்க…!வெளியே போங்க…!” என்று கூறினார்.
அவர்கள் போகும்போது “உன்னை இருடா பார்த்துகிறேன்…எங்களை அவமானப்படுத்திய உன்னை சும்மாவே விடமாட்டோம்…” என்று கூறிவிட்டு சென்றனர்.
“ஏய் போங்கடா…” என்று கூறிவிட்டு ஶ்ரீநிதியைப் பார்க்க சென்றனர் கிருஷும் ரிஷியும்.
அங்கே அறையின் வெளியே நின்று கொண்டிருந்த யசோதாவிடம் “பெரியம்மா ஶ்ரீநிதிக்கு இப்போது எப்படி இருக்கு…” என்று தவிப்புடன் கேட்டான் கிருஷ்.
“தெரியலைப்பா…விசு மாப்பிள்ளை தான் பார்த்துட்டு இருக்காரு…!!” என்றார் அவரும் பதட்டத்துடன்.
விசு அறைக்கு வெளியேவந்து “ஒண்ணுமில்லை சாதாரண மயக்கம் தான்…ஆனால் காய்ச்சல் வர மாதிரி இருக்கு…நான் ஊசிப் போட்டுயிருக்கேன்…கொஞ்சம் நேரம் தூங்குவா…அவளை யாரும் போய் பார்க்கவேணாம்…அவளுக்கு துணையாக வாணியும் ஜானகியும் இருக்காங்க…” என்று கூறிவிட்டு தாத்தாவைப் பார்க்க சென்றார்.அவரைப் பின்பற்றி கிருஷும் ரிஷியும் சேர்ந்தே வந்தனர்.
தாத்தா அவர் அறையில் யோசனையுடன் படுத்திருந்தார்.விசு கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தார்.
தாத்தா விசுவைப் பார்த்துவிட்டு அவர் அருகில் நெருங்கியவுடன் “நான் தப்புப்பண்ணிட்டேன்ப்பா…என் பேத்தி இந்த மாதிரி தப்பு பண்ணமாட்டானு நான் நம்பியிருக்கணும்…அவள் மேலே சந்தேகப்பட்டு இருக்கவே கூடாது…நான் தப்பு பண்ணிட்டேன்ப்பா… என் பேத்தியை பற்றி இவ்வளவு தெரிஞ்ச நானே…அவளை இந்த மாதிரி நிலைமையில் நானே தள்ளிவிட்டுடேனே…அவள் என்னை மன்னிப்பாளா…??” என்று கண் கலங்க கேட்டார்.
எதற்கும் கலங்காதவர் கலங்கியவுடன் கிருஷ் அவரின் அருகில் சென்று “தாத்தா…!!இது தெரியாமல் நடந்த தப்பு…இதில் உங்க தப்பு ஒண்ணுமில்லை…எல்லோரிடமும் ரமேஷைப் பற்றி மறைச்சு வைச்சது…அவளோட தப்பு…அதனால் நீங்க வருத்தப்படாதீங்க…!!” என்று ஆறுதல் கூறினான்.
“இருந்தாலும்…என்று ஆரம்பித்தவரை தடுத்து விசு “தாத்தா என் மேலே தான் தப்பு…என் பொண்ணை நான் நம்பியிருக்கணும்…நானே நம்பாத போது நீங்க எப்படி நம்புவீங்க…எல்லா தப்பும் என் மேலே தான்…!!” என்று அவரும் வேதனையுடன் கூறினார்.
“அச்சோ…!!அடுத்து நீங்களா மாமா…??உங்க இரண்டு பேர் மேலேயும் எந்த தப்பும் இல்லை…சரி இது வரைக்கும் நடந்ததை விடுங்க…இனிமே நடக்கப் போவதைப் பாருங்க…!!” என்று ஆறுதல் கூறினான்.
“ஆனாலும் என் பொண்ணு மேலே… நீ வச்சிருக்கே நம்பிக்கை கூட எங்களுக்கு இல்லாமல் போச்சே…!!” என்று கூறியவுடன்,
“அதெப்படி நம்பிக்கை இல்லாமல் போகும்…ஏனென்றால் அவ்வளவு காதல்…” என்று கூறியவாறு விசுவின் அண்ணன் ராம் உள்ளே நுழைந்தார்.
“என்ன காதலா…??” என்று கிருஷைத் தவிர அனைவரும் அதிர்ந்தனர்.
ராம் சிரிப்புடன் “ஆமாம்…காதலே தான்…!!” என்றார்.
ரிஷி தான் முதலில் அதிர்ச்சியிலிருந்து தன்னை மீட்டு “யாருக்கு யார் மேல் காதல்…??” என்று குழப்பத்துடன் கேட்டான்.
அவர் குறும்புடன் “கிருஷுக்கு ஶ்ரீநிதி மேலையும்…ஶ்ரீநிதிக்கு கிருஷுன் மேலையும் காதல்…!!” என்று கூறியவாறு கிருஷின் தோளில் கைப்போட்டு,
“என்னடா மாப்பிள்ளை…!!எப்போ என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கப்போறே…???” என்றார் புன்னகையுடன்.
கிருஷ் எதுவும் சொல்லாமல் சிரிப்புடன் பார்த்து கொண்டிருந்தான்… ஆனால் ரிஷி “என்னது…ஶ்ரீநிதி மேல் காதல்னு சொன்னீங்க…ஆனால் மீராவையா கிருஷ் அண்ணா கல்யாணம் பண்ணனும்…??” என்று புரியாமல் வினவினான்.
“டேய்…சின்ன மாப்பிள்ளை…!!மீரா மட்டும் என் பொண்ணுயில்லை… ஶ்ரீநிதியும் வாணியும் கூட என் பொண்ணுங்க தான்…இப்படியே நீ பேசிட்டு இருந்தே…அப்புறம் என் பொண்ணு வாணியை உனக்கு கல்யாணம் பண்ணி தரமாட்டேன்…!!!” என்று கண்டிப்பது போல் கூறி உண்மையைப் போட்டு உடைத்து சிரித்தார்.
இப்போது ஆவென்று வாயைப் பிளந்து நிற்பது ரிஷியின் முறையானது. இதுவரை இவர் பேசுவதைப் புரியாமல் பார்த்து கொண்டிருந்த தாத்தாவுக்கும் விசுவுக்கும் இப்போது விளங்கியது.விளங்கியவுடன் அவர்களுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
விசு எழுந்து கிருஷை அணைத்து கொண்டு நன்றி செலுத்தினார்.
கிருஷும் குறும்புடன் “உங்கள் நன்றியெல்லாம் வேணாம் மாமா…உங்கள் பொண்ணை மட்டும் கல்யாணம் பண்ணிக் கொடுங்க போதும்…!!” என்று கூறி சிரித்தான்.
விசுவும் மகிழ்ச்சியுடன் “என் பொண்ணு ஶ்ரீநிதியை கண்டிப்பாக உனக்கு கல்யாணம் பண்ணிக் கொடுப்பேன்…ஆனால் உன் தம்பிக்கு வாணியை கல்யாணம் பண்ணிக் கொடுக்கமாட்டேன்ப்பா…!!” என்று கூறி ரிஷியை வம்புக்கு இழுத்தார்.
ரிஷி இதற்கெல்லாம் அசராமல் “நீங்க என்ன கல்யாணம் பண்ணி வைக்கிறது…நாங்களே கல்யாணம் பண்ணிப்போம்…!!” என்று அசல்ட்டாக கூறினான்.
உடனே ராம் “தம்பி…அதுக்கு நாமே…இவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சி…நம்முடைய மானத்தை காப்பாற்றிக்கலாம்டா…!!” என்று பயந்தமாதிரி கூறினார்.
அதைக்கேட்டு எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.
தாத்தா இருவரையும் அருகே அழைத்து அவர்களின் தலையில் கைவைத்து “இரண்டு பேரும் நல்லா இருங்க…” என்று கூறி ஆசிர்வதித்து அவர்களை அணைத்து கொண்டார்.
சிறிதுநேரத்தில் குடும்ப அனைவருக்கும் விசயம் பரிமாறப்பட்டது… அனைவருக்கும் மகிழ்ச்சியான மகிழ்ச்சி…குந்தவை கூட ஶ்ரீநிதியின் மேல் பரிதாபப்பட்டார்.ஆனால் மீரா கொஞ்சம் கூட இளகாமல் இருந்தாள்.அதுவும் இந்த கல்யாணம் விசயம் கேள்விப்பட்டவுடன் இன்னும் அதிகப்படியான எரிச்சலில் இருந்தாள்.
கல்யாணத்தை நிறுத்த என்ன செய்யலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள்.ஆனால் கல்யாணம் விசயம் அறிந்த ஶ்ரீநிதி ரொம்பவும் வருத்தப்பட்டாள்.
‘என்னால் இந்த குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய அவமானம்…அதுவும் தாத்தாவை தலைகுனிய வைத்த எனக்கு இந்த குடும்பத்தில் இருக்கவே தகுதியில்லை…அதற்கும் மேலாக கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணிக்க…அவரின் காதலைப் பெற…எனக்கு துளி கூட தகுதியில்லை…’ என்று யோசித்து எப்படி இந்த கல்யாணத்தை தடுக்கலாம் என்று யோசித்து ஒரு முடிவெடுத்து கிருஷின் அறைக்கு சென்றாள்.
அவளை பார்த்த கிருஷ் “வா…வா…ஶ்ரீ இப்போது உடம்பு பரவாயில்லையா…??” என்று அவளின் நலம் விசாரித்தான்.
“நல்லாயிருக்கேன் அத்தான்…” என்றாள்.
“சரி…சரி…இங்க வந்து உட்காரு…!” என்று கட்டிலைக் காட்டினான்.
அவள் கட்டிலில் வந்து அமர்ந்து எப்படி ஆரம்பிப்பது என்று யோசித்தாள்.
கிருஷ் “என்னம்மா…?ஏதாவது வேணுமா…??தண்ணீ ஏதாவது கொண்டு வரட்டுமா…???” என்று அக்கறையாக விசாரித்தான்.
இந்த அக்கறையான கவனிப்புக்கு எனக்கு தகுதியில்லை என்று நினைத்தவுடன் ஶ்ரீநிதிக்கு கண்களில் கண்ணீர் நிறைந்தது.
அதைப்பார்த்தவுடன் கிருஷ் பதறி “எதுக்கு அழுகிறே…??” என்று கூறி அவளின் முகத்தை தன் வயிற்றோடு சேர்த்து அணைத்து ஆறுதல் படுத்தினான்.
சிறிதுநேரம் அழுகையில் கரைந்தவளை எழுப்பி நிறுத்தியவன் அவளை அப்படியே சேர்த்து அணைத்தான்.அவளும் இப்போது சேர்த்து அணைத்து கொண்டாள்.
சிறிதுநேரத்தில் அவளே தெளிந்து அவன் அணைப்பிலிருந்து வெளியே வந்தவாறு “சாரி அத்தான்…” என்றாள்.
கிருஷ் குறும்புடன் “இதற்கு நான் உனக்கு தேங்கஸ் தான் சொல்லணும்…நீ எதுக்கு சாரி சொல்லுறே…??” என்று கூறி கண்சிமிட்டினான்.
அதில் வெட்கம் வர சிவந்த முகத்துடன் தலைகுனிந்தாள்.கிருஷ் அவளின் அழகை ரசித்தவாறு அவளின் முகத்தை நிமிர்த்தி “நீ வெட்கப்பட்ட ரொம்ப அழகாக இருக்கே…!!” என்று கூறி அவள் நெற்றியில் முத்தமிட்டான்.
அவள் முகம் இன்னும் சிவக்க…அவன் அவளின் முகத்தை இன்னும் உற்றுப்பார்க்கவும்…அவள் அவனிடமிருந்து தப்பிக்க எண்ணி அவன் நெஞ்சிலே முகத்தை மறைத்தாள்.
கிருஷ் சிரிப்புடன் அவளின் முகத்தை நிமிர்த்த முயற்சி செய்தான்… ஆனால் அவளின் முகத்தை நிமிர்த்த முடியாமல் போகவே… அவளை இறுக்கி அணைத்து கொண்டான்.
“இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
இந்த மௌனம்
இந்த மௌனம்
இப்படியே உடையாதா?
இந்த மயக்கம்
இந்த மயக்கம்
இப்படியே நீளாதா?
கிழக்கும் மேற்கும்
வடக்கும் தெற்கும்
மனிதன் வகுத்த
திசை ஆகும்
உன் முகம் இருக்கும்
திசையே எந்தன்
கண்களில் பார்க்கும்
திசை ஆகும்
கோடையும் வாடயும்
இலையுதிர் காலமும்
இயற்கை வகுத்த நெறியாகும்
உன்னுடன் இருக்கும்
காலத்தில் தானே
எந்தன் நாட்கள்
உருவாகும்
உந்தன் நிழல் அருகே
ஒய்வுகள் எடுத்திடுவேன்
இது காதல் இல்லை
இது காமம் இல்லை
தேகத்தை தாண்டியோ
மோகத்தை தாண்டியோ
உறவும் இது தானோ
இந்த நிமிடம்
இந்த நிமிடம்
இப்படியே உறையாதா?
இந்த நெருக்கம்
இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா?
என்ற பாடல் வரிகள் இருவரின் மனதிலும் எழுந்தது.உடனே ஶ்ரீநிதி அவனை இனி ஒரு போதும் பிரியமாட்டேன் என்பது போல்…அவனை இறுக்கி அணைத்து கொண்டாள்.
இருவரும் அப்படியே வேறொரு உலகத்திற்குள் பயணிக்க ஆரம்பித்தனர்.
இப்படியே சில நிமிடங்கள் நீண்ட இந்த அணைப்பிலிருந்து வெளியே வந்த ஶ்ரீநிதி தீடிரென்று “அத்தான்…நீங்க என்னை எப்போதிலிருந்து காதலிக்கீறிங்க…??” என்று சம்பந்தமில்லாமல் கேட்டாள்.
அப்படி அவள் கேட்டவுடன் கிருஷ் அவள் தலையில் செல்லமாக தட்டி “லூசு…இந்த கேள்வியை இப்போ தான் கேட்கணும்…அப்புறம் கேட்க வேண்டியது தானே…!!” என்று சலிப்புடன் கூறி சென்றான்.அவனுக்கு தன் கனவை பதியிலே கலைத்த கவலை.
‘எங்கே போகிறார் இவர்…?’ என்று நினைத்து ஶ்ரீநிதி அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.
அவன் அலமாரியை திறந்து ஏதோ ஒன்றை எடுத்து…அதைப் பின்னால் மறைத்தவாறு…அவள் அருகில் வந்து “உனக்கு நான் எப்போதிலிருந்து காதலிக்கறேனு தெரியணுமா…??” என்று கேட்டவனிடம் ஆமாம் என்று தலையாட்டினாள்.
“சரி…இந்த இதைப் பார்த்து தெரிஞ்சிக்கோ…!!” என்று கூறி அவளிடம் அவன் கொண்டு வந்ததை கொடுத்தான்.
அவள் அதை வாங்கி ஆர்வமாக பார்த்தாள்…அதைப் பார்த்தவளின் விழி ஆச்சரியத்தில் விரிந்தது…அது அவளின் சின்ன வயது புகைப்படமும் கொலுசும் என்பதை பார்த்தமாத்திரத்தில் புரிந்துகொண்டாள்.
“அப்போதிலிருந்தே என்னை காதலிக்கிறீங்களா…??” என்று ஆச்சரியமாக கேட்டவளின் இடுப்பில் கைகொடுத்து அருகே இழுத்தவன் “ஆமாண்டி…குண்டச்சி…!!” என்று கூறி மூக்கோடு மூக்கு உரசி…செல்லமாக நெற்றியில் முட்டினான்.
“என்னது குண்டச்சியா…!!நான் என்ன குண்டவா இருக்கேன்…!!” என்று கூறி சிணுங்கினாள்.
அதைப்பார்த்து கிருஷ் தன் இதயம் இடம் பெயருவதை அறிந்து… தாங்க முடியாமல் அவளின் கன்னத்தில் முத்தமொன்றைக் கொடுத்தான்.
அந்த முத்தத்தை கண்களை மூடி அனுப்பவித்தாள்.
இத்தனை அன்பிற்கும் கண்டிப்பாக நான் தகுதியானவள் இல்லையே… என்னால் உங்களை ஒரு நாளும் கல்யாணம் பண்ணிக் கொள்ள முடியாது…சாரி அத்தான்…என்று கூறி…எவ்வளவு சீக்கிரம் முடியுமோ…அவ்வளவு சீக்கிரம் இங்கிருந்து போகணும் என்று முடிவெடுத்தாள்.
உடனே அந்த முடிவின்படி ஶ்ரீநிதி “அத்தான்…நம் கல்யாணத்தை இரண்டு வருடம் கழித்து வைச்சிக்கலாமா…??” என்று கேட்டவளை,
அவனின் அணைப்பிலிருந்து தள்ளி நிறுத்தி அவளின் முகத்தை பார்த்து “ஏன்…??” என்று குழப்பத்துடன் கேட்டான்.
“நான் முதலில் படிச்சு முடிக்கிறேன் அத்தான்…நீங்க தானே… அதைப்படி…இதைப்படினு சொன்னீங்க…இதெல்லாம் உங்கள் ஆசை தானே…அதனால் உங்கள் ஆசையை முதலில் நிறைவேற்றணும்…அதுக்கு பிறகு தான் கல்யாணம்…சோ… பிளீஸ் அத்தான்…!!” என்று கெஞ்சியவுடன்,
கிருஷ் “நீ இப்படி கெஞ்சினால்…நான் எப்படி வேணாம்னு சொல்லறது…??சரி படி…!!” என்று கூறி பெருமூச்சுவிட்டான்.
“தேங்கஸ் அத்தான்…” என்று கூறி அவன் கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு ஓடினாள்.
இதை எதிர்பார்க்காத கிருஷ் “ஏய்…!!நில்லுடி குண்டச்சி…!!” என்று கத்தியவனைக் கண்டுகொள்ளாமல் தன் அறைக்கு ஓடினாள்.
தன் அறைக்குள் சென்று எதற்கு என்று தெரியாமல் ஒரு மூச்சு அழுதாள்.
கிருஷ் எல்லோரிடமும் அவளின் படிப்பிற்காக பேசி அனுமதி வாங்கிக்கொடுத்தான்.முதலில் யாரும் ஒத்துக்கொள்ளமாட்டோம் என்றவர்களை…எப்படியோ பேசி பேசி சம்மதிக்க வைத்தான்.
வீட்டைவிட்டு செல்லும் நாள் வந்தவுடன்…எல்லோரையும் பார்த்து கொண்டே அழுகையோடு கட்டியணைத்து விடைப்பெற்றாள்.
கிருஷ் தான் தன் மனதில்,
“என்னால் உன்னை அழவைக்கவும்…!
சிரிக்க வைக்கவும் மட்டும் தான் முடியும்…!!
ஆனால் உன்னால் என்னை சாகாடிக்கவும் முடிகிறது…!!!
பிரிவு என்னும் வார்த்தையால்…!!!!”
என்று அவளின் பிரிவு துயரில் வருந்தினான்.
ஶ்ரீநிதி மனதில் ‘இதற்கு மேல் நான் இந்த வீட்டிற்கு வரமாட்டேன்… படிப்பு முடிந்தவுடன்…அங்கே ஏதாவது வேலையில் சேர்ந்துவிடுவேன்… அதேபோல் கிருஷ் அத்தானை கல்யாணம் பண்ணிக்க இஷ்டம் இல்லை என்று சொல்லிவிடலாம்’ என்று முடிவுடன் அந்த வீட்டிலிருந்து விடைப்பெற்றாள்.
சாரி அத்தான்…என்று மனதிற்குள் அழுதவாறு…அவனை திரும்பி திரும்பி பார்த்து கொண்டே அவனை மனதினுள் நிரப்பியவாறு மனதில் பாரத்துடன் வெளியேறினாள்.
“ஏய்…ஏய்…வெயிட்…ஶ்ரீநிதி…!!” என்ற குரல் கேட்டு 4 வருடங்களுக்கு முன்பிருந்த பழைய நினைவுகளிலிருந்து வெளிவந்த ஶ்ரீநிதி “என்னடி நிஷா…??” என்று வினவினாள்.
“ஏன்டி…ஶ்ரீநிதி இந்த ஒரு சப்பை விசயத்திற்காகவாக…நீ கிருஷ் அண்ணாவைப் பிரிஞ்சு…ஷிவ் அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கிட்டே…?நீ சொல்லறதைப் பார்த்தால் கிருஷ் அண்ணா உன்னை உருகி உருகி காதலிச்சிருப்பாங்க போல…!!அப்படி பட்டவரை ஏன்டி பிரிஞ்சே…??” என்று வருத்தத்துடன் வினவினாள் நிஷா.
ஶ்ரீநிதி “அதுமட்டும் காரணமில்லை…” என்றவளை,
“இதுக்கு என்ன அர்த்தம்…??” என்று புரியாமல் கேட்டவளிடம்,
4 வருடங்களுக்கு முன்னால் நடந்த ஒரு கசப்பான நிகழ்வை நினைத்து இப்போது கண்களில் கண்ணீர் சுரக்க ஆரம்பித்தது.
அப்போது பார்த்து ஶ்ரீநிதியின் ஒரு வயது குழந்தை அழுதவுடன் தன் கண்ணீரைத் துடைத்து குழந்தையைத் தூக்கியவளின் அருகில் வந்த அவளுடைய கணவன் “ஶ்ரீம்மா…உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்…பழசை நினைச்சிப் பார்க்கக்கூடாது… அதில் உன் தப்பு ஒண்ணுமில்லை…நாளைக்கு ஊருக்கு போகணும் அது ஞாபகம் இருக்கா…??” என்று கேட்டவனைப் பார்த்து புன்னகைத்த ஶ்ரீநிதி,
“இல்லை ஷிவ்…நிஷா இப்போது தான் நான்கு வருடம் கழித்து என்னைப் பார்க்கிறாள்… அவளிடம் என் பழைய கதையைப் பற்றி சொல்லி கொண்டு இருக்கேன்…!!” என்று கூறினாள்.
அப்போது தான் அங்கிருக்கும் இன்னொரு பொண்ணைப் பார்த்த ஷிவ் “சாரி வாங்க…நான் உங்களை கவனிக்கவேயில்லை…ஏதாவது சாப்பிட்டீங்களா…??” என்று சம்பிர்தாயமாக பேசிவிட்டு,
ஶ்ரீயிடமிருந்து குழந்தையை வாங்கிக்கொண்டு “ஓகே நீங்க பேசுங்க…என்றவிட்டு,
ஶ்ரீயிடம் திரும்பிய ஷிவ் “ஆனால் ஶ்ரீ…நீ அழுகாமல் எதுவாக இருந்தாலும் பேசணும்…!!” என்று கண்டிப்புடன் கூறி குழந்தையுடன் வேறொரு அறைக்குள் சென்றான்.
நிஷா இதற்கு மேல் தாங்க முடியாமல் “சரி…சரி…இப்போது சொல்லு…என்னச்சுனு…??” என்று கேட்டவளைப் பார்த்து,
விரக்தியுடன் புன்னகைத்த ஶ்ரீநிதி 4 வருடத்திற்கு முன்னால் நடந்த நிகழ்வுகளைக் கூற ஆரம்பித்தாள்.
அவள் கூறுவதைக் கேட்க கேட்க நிஷாவுக்கே கண் கலங்க ஆரம்பித்ததோடு…அதிர்ச்சியும் சேர்த்து அடைந்தாள்.