என்ன பண்ணுவது என்று மீரா யோசித்து கொண்டிருந்தாள்… அப்போது பார்த்து மீராவின் செல் போன் அலறியது…அந்த நம்பரைப் பார்த்தவுடன் இன்னும் எரிச்சல் தான் வந்தது.
இருந்தும் அதை எடுத்து காதில் வைத்து எரிச்சலாக “சொல்லு??” என்றாள்.
அந்தப்பக்கம் “மீரா என்னச்சுங்க…?ஏன் கோபமாக பேசிறீங்க…?” என்றான் ரமேஷ்.
“பேசாமல் போனை வைங்க…அப்புறம் ஏதாவது திட்டிட போறேன்” என்றாள் இன்னும் எரிச்சலாக.
ரமேஷ் இப்போது டென்ஷனாகி “இப்போது… உங்களுக்கு என்ன தான் பிரச்சினை…??” என்றான் அவனும் எரிச்சலுடன்.
மீரா திமிராக “இங்க ஒண்ணும் நடக்கலை அதுதான் என் பிரச்சினை…?நீ சரியான வேஸ்ட்…நீ மட்டும் ஒழுங்க நடித்திருந்தால் இந்நேரம் இரண்டு பேருக்கும் பலமான சண்டை வந்து பிரிஞ்சிருப்பாங்க…ஆனால் இங்க அப்படி ஒண்ணும் நடக்கலை…?உன்னை போய் என்கூட சேர்த்துக்கிட்டேன் பாரு…என்னை தான் ……..ஆல் அடிக்கணும்…?” என்று அவனை மரியாதையில்லாமல் பேசினாள்.
அவள் சொல்லாமல் விட்ட வார்த்தையை அறிந்த ரமேஷ் கோபமாக “ஏய்!!உனக்கு கொஞ்சம் கூட மரியாதையே தெரியாதா…?இப்படியெல்லாம் உன் பேச்சுக்கு தலையாட்டினேன் பாரு…எனக்கு இதுவும் வேணும்…இன்னுமும் வேணும்…!!” என்று உறுமினான்.
‘ஏய்…மீரா கொஞ்சம் அமைதியாக இருடி…அவனிடம் இன்னும் காரியமாக வேண்டியது நிறைய இருக்கு…அதனால் அமைதியாக பேசு…’என்று யோசித்து,
மீரா கொஞ்சம் தன் கோபத்திலிருந்து இறங்கிவந்து “சாரிப்பா…!நாம் போட்ட பிளான் ஓர்க் அவுட் ஆகலைனு…நான் ஏதோ கோபத்தில் பேசிட்டேன்…” என்றாள்.
அவனும் கோபத்தைக் குறைத்து “சரி…சரி…இனிமே இந்த மாதிரியாகமல் பார்த்துகோங்க…இந்த பிளான் தான் ஓர்க் ஆகலை…வேறே ஏதாவது ஐடியா வைத்திருக்கீங்களா…??” என்றான்.
“இல்லை… இனிமே தான் யோசிக்கணும்…” என்றவுடன்,
ரமேஷ் “சரி அப்போ யோசித்து சொல்லுங்க…நான் போனை வைக்கிறேன்…!!” என்று கட் செய்தான்.
அதன்பிறகு என்ன செய்யலாம் என்று யோசித்து மீரா ஒரு ஐடியாவைக் கண்டுபிடித்து அதைப் பற்றி சொல்ல ரமேஷிற்கு போன் செய்தாள்.
அவன் எடுத்துவுடன் மடமடவென எல்லாம் ஐடியாவையும் கூறினாள்.அவள் கூறியதைக் கேட்டுவிட்டு “இதன்மூலம் ஏதாவது பெரிய பிரச்சினையாகப் போகுதுங்க…இது நாம் நினைத்தமாதிரி சரியாக நடக்குமா…??” என்று சந்தேகத்துடன் கேட்டான்.
மீரா “அதெல்லாம் சரியாக நடக்கும்…நான் சொன்ன மாதிரி…நீங்க சரியாக நடந்தால்…அதுக்கு பிறகு எங்க வீட்டிலே…உங்க இரண்டு பேருக்கும் சேர்த்து கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க…நாம் நினைச்சது…இஸியாக நடந்திரும்” என்றவுடன்,வேறு வழியில்லாமல் சரி என்றான்.
அவர்களின் திட்டத்தின் முதல்படியாக ரமேஷ் ஶ்ரீநிதிக்கு போன் செய்து “நமக்கு போன் செய்தது…யாருனு கண்டுபிடிச்சீட்டேன்…நீங்க அன்றைக்கு வந்த ரெஸிடன்ஸிக்கு வந்திடுங்க…அங்கு வந்தால் எல்லா விவரமும் நான் சொல்லுறேன்…” என்றவுடன் ஶ்ரீநிதிக்கும் அது யாரென்று தெரிய வேண்டி இருப்பதால் சரியென்று கூறி கிளம்பினாள்.
ஶ்ரீநிதி அந்த ஹோட்டலின் உள்ளே நுழைந்தாள்.அங்கே ரமேஷ் இவளுக்காக காத்திருக்கும் டேபிளின் அருகே சென்றவுடன்…அவளின் கால் தடுக்கி…கீழே விழப்போனவளை ரமேஷ் ஓடி வந்து அவளை தாங்கிப்பிடித்தான்.
பிடித்தவன் அவளை விடும் எண்ணமில்லாமல் ரொம்ப நேரமாக பிடித்துக்கொண்டிருக்கவும்…ஶ்ரீநிதி அருவறுப்பாக இருந்தது…அதனால் அவனை தள்ளிவிட்டு முறைத்தாள்.
ரமேஷ் தன் தவறை உணர்ந்து “சாரிங்க” என்றுவிட்டு டேபிளில் அமர்ந்தான்.
ஶ்ரீநிதி சென்று அவனுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள். அமர்ந்தவுடன் நேரடியாக விசயத்திற்கு வந்தாள். “சொல்லுங்க…யார் இப்படி பண்ணியது…??” என்று கேட்டாள்.
அவன் “முதலில் ஏதாவது சாப்பிடுங்க…??” என்றவனை,
“நான் ஒண்ணும் இங்க சாப்பிட வரவில்லை…நீங்க விசயத்தைச் சொல்லுங்க…நான் கிளம்பணும்…!!” என்று தீர்க்கமாக கூறினாள்.
ரமேஷ் வேறு வழியில்லாமல் பேச வந்த விசயத்தை ஆரம்பித்தான். “இதற்கெல்லாம் காரணம்…என் பிரண்டு தாங்க…அவனுக்கும் எனக்கும் கொஞ்சம் தொழில் ஒரு பிரச்சினை…அதை மனதில் வைத்து தான் இப்படி செய்துவிட்டான்” என்றவனை நம்பாத பார்வைப் பார்த்தாள்.
உடனே ரமேஷ் அவசரமாக “நான் சொல்லறது உண்மைதாங்க…என் தம்பி எதார்த்தமாக என் காதல் விசயத்தை சொல்லியிருப்பான் போல…அவன் அதை வைத்து உங்களுடைய நம்பரைக் கண்டுபிடித்து நமக்கு இரண்டு பேருக்கும் போன் செய்து…உங்களிடம் என்னை மாட்டி கம்பி எண்ண வைக்க பிளான் பண்ணியிருக்கான் ஶ்ரீநிதி…??நேற்று இதை குடிபோதையில் என்னுடைய இன்னொரு நண்பரிடம் சொல்லியிருக்கான்…அவன் வந்து என்னிடம் சொன்னான்…” என்று நீளமாக பேசி முடித்தான்.
“சரி…ஆனால் இனிமே நீங்க என்னை மறந்திட்டு வேற நல்லா பொண்ணை பார்த்து கல்யாணம் பண்ணிகோங்க…அதேமாதிரி என்னை காதலித்த விசயத்தை ஊர்பூராவும் தண்டோரா போடாமல் இருங்க…இதுக்குமேலே உங்களால் ஏதாவது பிரச்சினை வந்தால்… நான் சும்மா இருக்கமாட்டேன்…ஜாக்கிரதை…!!” என்று மிரட்டிவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.
அவள் சென்றபிறகு மீராவுக்கு வெற்றி என்று செய்தி அனுப்பினான். அதன்பிறகு சில போன் கால் செய்து சிலரிடம் பேசிவிட்டு அவனும் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
ஶ்ரீநிதியிடம் பேசுவதற்காக ரிஷி ரொம்ப நேரமாக அவளுக்காக வீட்டில் காத்திருந்தான்.அவள் வீடு வந்தவுடன் ரிஷி அவளை செல்லில் அழைத்து “ஒரு நிமிடம்…என் அறைக்கு வா…!!” என்று கூறி வைத்துவிட்டான்.
அவள் உள்ளே நுழைந்தவுடன் “எங்க போயிட்டு வர…??” என்று கோபமாக தன் முதல் கேள்வியாக கேட்டான்.
ஶ்ரீநிதி அசராமல் “பிரண்ட்டைப் பார்த்திட்டு வரேன்…” என்றாள்.
“எந்த பிரண்ட்…அதுவும் எனக்கு தெரியாமல்…??” என்று அவள் கண்களைப் பார்த்து வினவினான்.
இப்போது ஶ்ரீநிதி தடுமாறி “உனக்கு தெரியாது…அந்த பிரண்டைப் பற்றி…” என்றாள்.
“எனக்கு தெரியாது தான்…இருந்தும் என்னை கூட்டிட்டு போயிருக்க வேண்டியது தானே…தனியாக எதுக்கு போனே…??” என்று மறுபடியும் கேட்டான்.
ஶ்ரீநிதி தான் மனதில் ‘இவனுக்கு கிருஷ் அத்தானே பரவாயில்லை போல’ என்று எண்ணினாள்.
ரிஷி கண்டிப்புடன் “கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு ஶ்ரீ…??” என்றான்.
“சாரிடா…!!ஏதோ அவசரத்தில் போயிட்டேன்…இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன்…!!” என்று முகத்தைச் சுருக்கி சாரி சொன்னாள்.
“சரி…இனிமே என்னை கூட்டிட்டு போ…!!இப்போ போனதுக்கு பதில் சொல்லு… யாரைப் பார்க்க போனே…??யார் அந்த பிரண்ட்… சொல்லு…??” என்று விடாமல் கேட்டான்.
ஶ்ரீநிதி ரிஷியிடம் இதை எப்படி என்னவென்று சொல்லுவது என்று யோசித்தாள்.
அவளின் யோசனையைக் கலைப்பது போல் ரிஷி “ஶ்ரீஇஇஇஇ….” என்று கத்தினான்.
அவன் கோபத்தில் இருப்பதைப் பார்த்து ஏதோ ஒன்று கூறி சமாளிக்க எண்ணி “அன்றைக்கு ஹாஸ்பிட்டல் போன தானே…ஒரு பொண்ணுக்கு விபத்துனு…அந்த பொண்ணை பார்க்க தான்டா போனே…!!” என்று பொய் கூறினாள்.
ரிஷி அவளின் கண்களை உற்று பார்த்தவாறு “ஶ்ரீநிதி…உனக்கு பொய் சொல்ல வரலை…!!” என்று கூறினான்.
இப்போது ஶ்ரீநிதி தலைகுனிந்தாள்.
“ஶ்ரீ இப்போவாச்சும் உண்மையை சொல்லு…நான் உன்னுடைய நண்பன்னு தோணுச்சுனா சொல்லு…இல்லைனா வேண்டாம்…” என்று கூறி அவளின் முகத்தைப் பார்த்தான்.
அவள் குனிந்த தலையை நிமர்த்தவில்லை என்றவுடன் ரிஷி பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு “சரி நீ கிளம்பு” என்றான்.
அவள் அப்பவும் அங்கிருந்து நகராமல் இருக்கவும் “சரி நான் போகிறேன்” என்று கூறி கிளம்பியவனை ஶ்ரீநிதி அவனின் கைப்பிடித்து நிறுத்தினாள்.
அவன் திரும்பி அவள் முகத்தைப் பார்க்கவும் ஶ்ரீநிதி ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் கூறினாள்.
அவள் முழுவதும் கூறியவுடன் ரிஷி ஆத்திரத்தில் நரம்பு புடைக்க “ராஸ்கல்…நல்லவன் மாதிரி இருந்திட்டு எப்படி பண்ணியிருக்கான் பாரு…அவனை என்ன செய்கிறேன் பாரு…” என்று உறுமிவிட்டு நகரப்போனவனை ஶ்ரீநிதி கையைப் பிடித்து தடுத்து,
“வேண்டாம் ரிஷி…அவனை நான் வார்ன் பண்ணிட்டு தான் வந்திருக்கேன்…இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டான்…ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம்…அந்த பார்சல் எங்கே போனது என்று தான்…??” என்று கூறி யோசித்தாள்.
அதைக்கேட்டவனின் புருவத்தின் மத்தியில் மூடிச்சு விழுந்தது… அவனும் அதைப்பற்றி யோசித்து “ஶ்ரீநிதி அந்த பார்சல் என்ன கலர் கவரால் சுற்றி இருக்கும்…” என்று கேட்டான்.
ஶ்ரீநிதி “அது பிங்க் கலரில் வெள்ளை நிற ஹார்ட்டின் போட்டு இருக்கும்…!!” என்றவுடன்,
ரிஷி கண்டிப்பாக இது அந்த பார்சல் தான் என்று முடிவெடுத்து “ஶ்ரீநிதி இரண்டு நாளைக்கு முன்னால் அண்ணனின் டேபிள் மீது…நீ சொன்ன மாதிரி கவரில் பேக் செய்யப்பட்ட ஒரு பார்சல் இருந்தது…ஆனால் இது எப்படி அண்ணன் கைக்கு போனது…??” என்று கூறி யோசனையில் ஆழ்ந்தான்.
ஶ்ரீநிதி கொஞ்சம் கூட கிருஷன் மேல் சந்தேகப்படாமல் ஒரு வழி கண்டுபிடித்த ஆர்வத்துடன் “ரிஷி…இந்த பார்சலை யார் போஸ்ட் மேனிடம் வாங்கனாங்கனு கண்டுபிடிச்சா…இது யார் எடுத்தாங்கனு கண்டுபிடிச்சிடலாம்…ஏனால் இந்த பார்சல் என்னை கீதாவைத் தவிர வேறு யாருக்கும் இதைப் பற்றி தெரியாது…!!சோ…கண்டிப்பாக யாரிடம் வாட்ச்மென் அண்ணா இந்த பார்சலைக் கொடுத்தாங்களோ… அவங்க தான்…இதெல்லாம் செஞ்சாங்க…!அய்யாஆஆ நான் கண்டுபிடிச்சிட்டேனே…!!” என்று கூறி குதுகலித்தாள்.
ரிஷி அவள் குதுகலிப்பதைப் பார்த்து சிரிப்புடன் “லூசு…போதும் போதும் வா…வாட்ச்மென் அண்ணாவிடம் விசாரிப்போம்…” என்று அவளை அழைத்துக்கொண்டு அவரிடம் விசாரித்தனர்.
அந்த பார்சலை யாரிடம் கொடுத்தேன் என்று அவர் கூறியதைக் கேட்டவுடன் இருவரும் அதிர்ந்தனர்.