அலுவலகத்தில் ரிஷியிடம் பேசி…போனை வைத்தவுடன்… மீரா உள்ளே வந்து ஶ்ரீநிதியைப் பற்றி பேச வேண்டும் என்று கூறி…அவன் இருக்கைக்கு எதிரே அமர்ந்து…பேச ஆரம்பித்தாள்.
“அத்தான்…நான் சொல்லுற விசயம் உங்களுக்கு அதிர்ச்சியா தான் இருக்கும்…ஆனால் இதை நீங்க நம்பணும் அத்தான்…” என்று பிடிகையுடன் ஆரம்பித்தாள்.
கிருஷ் எரிச்சலுடன் “முதலில் விசயத்தை சொல்லு…அப்புறம் நான் அதிர்ச்சியாகிறேனா…இல்லையானு பார்ப்போம்” என்றான்.
“அத்தான்…ஶ்ரீநிதி ஒருத்தரைக் காதலிக்கிறாள்” என்று கூறி அவன் முகத்தைப் பார்த்தாள்.ஆனால் அவன் முகத்தில்…இதில் என்ன இருக்கிறது என்ற முகபாவம் இருந்தது.அதைப் பார்த்து இவர் என்ன கோபப்படுவாருனு பார்த்தால் அமைதியாக இருக்காரு என்று எரிச்சலடைந்தாள்.
இருந்தும் விடாமல் தன் கைபையில் இருக்கும் அந்த லெட்டர் மற்றும் பார்சலை எடுத்து…அவனிடம் கொடுத்து “என்னை நம்பலைனா… இதைப் படிச்சு பாருங்க” என்றாள்.
இவ்வளவு நேரமும் ஶ்ரீநிதி தன்னை தான் விரும்புகிறாள் என்று லேசாக இருந்தவன் இந்த பார்சலையும் கடிதத்தையும் பார்த்துவிட்டு கோபமடைந்தான்.
கிருஷ் “ஏய்…இது எப்படி உன் கையில் கிடைச்சது…??அவளுக்கு தெரியாமல் எடுத்திட்டு வந்தியா…?சொல்லு…???” என்று கர்ஜித்தான்.
இந்த குரலில் ஒரு நிமிடம் அவளே பயந்து நடுங்கிவிட்டாள்.இருந்தும் “அது…வந்து…அத்தான்…போஸ்ட்மேன் என்னிடம் கொடுத்த பார்சலைக்…கொ…கொண்டு போய்…ஶ்ரீநிதியின் அறையில் வைத்தது…நா…நான் தான் அத்தான்…அதனால் தான்…அதில் என்ன இருக்கு என்று தெரி…ஞ்சிக்க…ஆர்வமாக பிரித்து பார்த்தேன் அத்தான்…” என்று திக்கி திக்கி கூறி முடித்தாள்.
“அவளுக்கு தெரியாமல் எடுத்திட்டு வந்தியா…??அதை சொல்லு??” என்று மறுபடியும் கர்ஜித்தான்.
பயத்தில் “ஆமாம்” என்று தலையாட்டினாள்.
“ஏய் உனக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையா…??அடுத்தவங்க அனுமதி இல்லாமல் அவங்க பொருளை எடுத்திட்டு வந்தது உனக்கு தப்புனு தெரியலையா…நானும் போனால் போகட்டும்…சின்ன பொண்ணாச்சே என்று பொறுத்து போனால்…நீ திருந்துவதுபோல தெரியலை…நான் தாத்தாவிடம்…என்று அவன் பேசி கொண்டிருக்கும் போதே,
மீரா அவனை இடைவெட்டி கண்களில் பொய்யான கண்ணீருடன் “சாரி அத்தான்…ஏதோ ஆர்வத்தில் இப்படி பண்ணிவிட்டேன்…இனிமே இந்த மாதிரி பண்ணமாட்டேன் அத்தான்…பிளீஸ் அத்தான்…தாத்தாவிடம் சொல்ல வேண்டாம்” என்று அவன் கையைப்பிடித்து கெஞ்சினாள்.
கிருஷ் தன் கோபத்தை கொஞ்சம் குறைத்து “இனிமே இந்த மாதிரி பண்ணாதே புரியுதா…??” என்று கேட்டான்.
“சரி அத்தான்…ஆனால் இதை மட்டும் உங்களிடம் சொல்லிட்டு போயிவிடுறேன் அத்தான்…என்று அவன் சரி என்று ஒப்புதல் தருவதற்குள் “அத்தான் அன்னைக்கு சினிமா போய் இருந்தோம் தானே…அன்று இந்த ரமேஷை தியேட்டரில் பார்த்தேன் அத்தான்… அதன்பிறகு ஶ்ரீயின் பிறந்தநாளின் போதும் இவனை கோயிலில் பார்த்தேன்…அப்புறம் இந்த பார்சலை வேற யாருக்கும் தெரியாமல் ஶ்ரீநிதி மறைச்சு வைத்திருக்கறதைப் பார்த்தால் எனக்கு சந்தேகமாக இருக்கு அத்தான்…அதன்பிறகு இன்று வீட்டில் இருக்கும்போது ஶ்ரீநிதி யாரையோ 12 மணிக்கு ஹோட்டல் ரிஸிடென்ஸியில் மீட் பண்றேன் என்று பேசிக்கொண்டு இருந்தாள்…அதை என் காதாலே கேட்டேன் அத்தான்…எனக்கு என்னவோ ஶ்ரீ…ரமேஷை தான் பார்க்க போறானு நினைக்கிறேன்…இதை உங்களிடம் சொல்லனும்னு நினைச்சேன்…சொல்லிட்டேன்…பை அத்தான்” என்று மடமடவென்று சொல்லிவிட்டு…அவன் எதுவும் திட்டுவதற்குள் அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள்.
அவள் வெளியேறிய பின் கிருஷ் பயங்கர கோபத்தில் இருந்தான். அவனுக்கு ஶ்ரீயின் மீது சந்தோகமெல்லாம் இல்லை.ஆனால் இவ்வளவு பெரிய விசயத்தை எதற்கு மறைத்தாள் என்று தான் கோபமாக வந்தது.
‘இந்த குண்டச்சிக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை…எவ்வளவு பெரிய விசயத்தை எல்லாரிடமும் இருந்து மறைச்சி வச்சிருக்கா… இடியட்… ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன பண்ணறதுனு அதை யோசித்து பார்த்தாளா…??சரியான லூசு’ என்று திட்டிவிட்டு கோபத்துடன் தன் காரை எடுத்து கொண்டு ஹோட்டல் ரிஸிடென்ஸியை நோக்கி தன் காரை வேகமாக செலுத்தினான்.அவன் அவளுக்கு ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்று நினைத்து பயந்தான்.
அந்த ஹோட்டலுக்கு சென்று பார்த்தபோது ஶ்ரீநிதி அங்கு இல்லை…இந்த மீராவுக்கு கொஞ்சம் கூட அறிவேயில்லை…இப்போது தான் அந்த அளவுக்கு திட்டினேன்…ஆனால் மறுபடியும் பொய் தான் சொல்லியிருக்கிறாள் என்று அவளை எதுவும் செய்ய முடியாத தன் இயலாமையை நினைத்து பற்களைக் கடித்தான்.
சரி நாம் போவோம் என்று தனக்குள் கூறி…அந்த இடத்தைவிட்டு போகலாம் என்று திரும்பியவனின் பார்வையில் ஒரு ஆணின் காரில் இருந்து இறங்கி கொண்டிருந்த கீதாவும் ஶ்ரீநிதியும் பட்டனர்.உடனே அவன் அங்கே இருக்கும் டேபிளில்…அவர்களுக்கு தெரியாமல் அமர்ந்து கொண்டான்.
அங்கே இருந்தவாறு இவர்களை கவனித்து கொண்டே இருந்தான்.நடுவில் ஶ்ரீநிதி கோபமாக பேசுவதையும்…அவன் அவளிடம் கெஞ்சுவதையும் பார்த்து கொண்டிருந்தான்.ஏதாவது வரம்பு மீறி நடந்தால் நாம் போவோம் என்று அங்கிருந்தவறே பார்த்தான்.
தீடிரென்றி கீதா அழுவதையும்…ஶ்ரீ அவளை முறைப்பதையும் பார்த்து என்னச்சு எதற்கு இந்த ஶ்ரீநிதி அவளை முறைக்கிறாள் என்று யோசித்து கொண்டு…அங்கே கவனிக்கும்போது…அந்த ரமேஷ் ஏதோ ஒன்று கூறி போன் தருவதையும்…ஶ்ரீநிதி அதை பார்த்து தன் மொபைலையும் எடுத்து இரண்டையும் மாறி மாறி பார்ப்பதையும் பார்த்து குழம்பினான்.
அதன்பிறகு ஶ்ரீநிதி ஏதோ பேசிவிட்டு கிளம்பும் போது…அவன் ஏதோ ஒன்று சொல்லவும்…அவனை தீர்க்கமாக பார்த்து ஶ்ரீநிதி பதில் கொடுப்பதையும் பார்த்து கொண்டிருந்தான்.அவள் சென்றபிறகு அவன் முகம் கறுப்பதைப் பார்த்து என்ன சொன்னாள் இந்த ஶ்ரீநிதி…என்று யோசித்து குழம்பி அங்கிருந்து வெளியேறினான்.
கிருஷ் அங்கிருந்து வெளியேறியவுடன் ரமேஷ் தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசி முடித்துவிட்டு வைத்து அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
கிருஷ் காரை…குழம்பியபடியே ஓட்டி கொண்டிருந்தான். ‘இந்த குண்டச்சி எதுக்கு இங்க வந்தால்…அதுவும் என்னிடம் கூட சொல்லாமல்…அவள் மட்டும் இந்த விசயத்தை பற்றி என்னிடம் சொல்லாமல் இருக்கட்டும்…அப்புறம் இருக்கு அவளுக்கு…’ என்று அவளை திட்டிவிட்டு காரை அலுவலகம் நோக்கி செலுத்தினான்.
அதேநேரம் கீதாவும் ஶ்ரீநிதியும் வீட்டின் வெளிக்கேட்டை திறந்து கொண்டிருந்தனர்…வாயிற்காவலர் அவர்களுக்கு கதவை திறந்துவிட்டு ஶ்ரீநிதியைப் பார்த்து சிரித்தார்.ஶ்ரீயும் வேறு வழியில்லாமல் அவரைப் பார்த்து சிரித்துவிட்டு உள்ளே நுழைந்தாள்.வீட்டிற்குள் வரும்போது எப்போதும் ரசிக்கும்…தன் ரோஜா தோட்டத்தை ரசிக்காமல் குழப்பத்துடன் வீட்டிற்குள் நுழைந்தாள்.அவளுக்கு இப்போது யாரிடமும் பேச விருப்பமில்லை.
ஆனால் தேவகி இவர்கள் இருவரின் முகத்தைப் பார்த்து “என்னச்சும்மா ஶ்ரீநிதி…??ஏன் ஒரு மாதிரி இருக்கே…??அதுவும் இந்த நேரத்தில் ஆபிஸிலிருந்து வந்திருக்கே…??” என்று வாஞ்சையாக கேட்டவரை அலட்சியப்படுத்த முடியாமல் “என் பிரண்ட் ஒருத்தருக்கு ஆக்ஸிடென்ட் ஆகிடுச்சு…அதனால் ஆஸ்பெட்டல் போயிட்டு வீட்டிற்கு வந்திட்டோம் சின்ன அம்மு” என்றாள்.
தேவகி அதை உண்மையென்று நம்பி “இப்போ எப்படி இருக்காங்க ஶ்ரீம்மா…??” என்று அக்கறையுடன் வினவினார்.
ஶ்ரீநிதி அதற்கு நக்கலான புன்னகையுடன் “இப்போது ரொம்பவே பரவாயில்லை…சரி சின்ன அம்மு…நான் என் ரூமிற்கு போகிறேன்…!” என்று கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.
தன் அறைக்குள் சென்ற ஶ்ரீநிதி அங்கிருக்கும் கட்டிலில் அமர்ந்தாள்.அவளை பின்பற்றி கீதாவும் அவள் அருகில் உட்கார்ந்தாள்.இருவரும் எதுவும் பேசாமல் அவர்களுக்குள் குழம்பி கொண்டிருந்தனர்.
அதற்கு மேல் கீதா தாங்க முடியாமல் ஶ்ரீயிடம் “இங்கு என்ன நடக்குதுனு எனக்கு கொஞ்சம் சொல்லுப்பா பிளீஸ்…எனக்கு ஒரே குழப்பமாக இருக்கு” என்று தலையைப் பிய்த்து கொள்ளாத குறையாக கேட்டாள்.
அதன்பிறகு ஶ்ரீநிதி காலையில்…அவளுக்கு வந்த போன் காலைப் பற்றி கூறிவிட்டு “அப்புறம் நடத்தது தான்…உனக்கே தெரியுமே…ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம்…எங்க இரண்டு பேருக்கும் போன் பண்ணி ஆஸ்பிட்டல் வர சொன்னது யாருனு தான் தெரியலை…” என்று யோசனையுடன் கூறினாள்.
“ஆமாண்டி…எனக்கும் அதே சந்தேகம் தான்…”
“இந்த ரமேஷிடம் கேட்டால் யாரிடமும் என்னை லவ் பண்ணறதைப் பற்றி சொல்லலைனு சொல்லுறான்…நாமும் யார்கிட்டயும் சொல்லை…அப்புறம் யார் எப்படி பண்ணது…??” என்று குழப்பத்துடன் வினவினாள்.
“சரி விடுடி…ஆனால் நான் இதை உன்னிடமிருந்து எதிர்ப்பார்க்கவில்லைடி” என்று கீதா கூறியவுடன் ஶ்ரீநிதி புரியாமல் கீதாவைத் திரும்பி பார்த்தாள்.
கீதா குறும்புடன் “இவ்வளவு நாள் அன்னைதெரசா மாதிரி இருந்தே…தீடிரென்று விஜயசாந்தி மாதிரி மாறிட்டே…உன் சீக்ரெட்டின் ரகசியம் என்ன…??” என்று கேட்டு கண்ணடித்தாள்.
ஶ்ரீநிதி குழப்பத்திலிருந்து மனம் தெளிந்து லேசாகச் சிரித்தாள்.ஶ்ரீ சிரிப்புடன் “ஆனால் இந்த ரமேஷ் சரியான பயந்தங்கொளியா இருக்கான்டி” என்றாள்.
“ஆமாண்டி…ஆள் தான் பார்க்க ஜிம் பாடி மாதிரி இருக்கார்…ஆனால் நீ சட்டையைப் பிடித்ததும் அவர் மூஞ்சியைப் பார்க்கணுமே…அப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி” என்று கூறி கீதா சிரித்தாள்.
அதன்பிறகு அதைப் பற்றி ரொம்பவும் யோசிக்காமல் எப்பவும் போல் இருக்க ஆரம்பித்தாள் ஶ்ரீநிதி.ஆனால் மனதில் ஓரத்தில் யார் இதை பண்ணியது என்ற யோசனை ஓடிக் கொண்டிருந்தது.
இவர்களால் பயந்தங்கோளினு என்று சொல்லப்படுபவன் ஶ்ரீநிதியை அடைய..மீராவுடன் திட்டமிட்டு இருப்பதை இருவரும் அறியவில்லை.
கிருஷ்…ஶ்ரீநிதி வந்து தன்னிடம் எல்லா உண்மையும் சொல்லுவாள் என்று எதிர்ப்பார்த்தான்…ஆனால் இரண்டு நாளுக்கு மேலாகியும் ஶ்ரீ அதைப்பற்றி பேசாமல் இருக்கவும் கிருஷிற்கு கோபம் வந்தது.
அதன்பிறகு கிருஷ் அவள் மீது உள்ள கோபத்தால்…அவளிடம் பேசுவதைத் தவிர்த்தான்.அவனே சென்று கேட்க…அவன் ஈகோ இடம் கொடுக்கவில்லை…முதலில் ஶ்ரீ இதனைப் பெரிய விசயமாக எடுத்து கொள்ளவில்லை…ஆனால் இரண்டு நாளுக்கு மேலாக கிருஷ் தன்னிடம் பேசவில்லை என்பதை யோசித்தவள்…அவனிடம் நாமே ஏதோ ஒன்று பேசுவோம் என்று அவனைத் தேடி சென்றாள்.
அவன் அறையின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றாள்.அப்போது தான் குளித்துவிட்டு துண்டுடன் வெளியே வந்தவன் இவளைப் பார்த்தவுடன் கொஞ்சம் மறைந்திருந்த கோபம் வெளியே வர ஆரம்பித்தது.
ஆனால் அவளுக்கு அவனின் மார்பில் சாய்ந்து…அந்த மார்பில் இருக்கும் முடியோடு தன் கன்னத்தை உரசி…அவனை இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும்…என்ற ஆசை எழுந்தது.அதை அடக்கும் வழி தெரியாமல் ஶ்ரீநிதி திணறி அவனைப் பார்க்கமுடியாமல் வெட்கத்தோடு தலைக்குனிந்தாள்.
கிருஷூம் அவள் முகத்தைப் பார்க்காமல்… தன் கோபத்தை அடக்கும் வழி தெரியாமல்…தன் கைவிரலை மடக்கி கோபத்தை அடக்கி “என்ன ஶ்ரீநிதி” என்று கேட்டான்.
ஶ்ரீ தன் வெட்கத்தை அடக்கி “அத்தான்…அப்பாயி இருக்காங்க தானே…அவங்க… என்று கூறி குந்தவை அவள் படிப்பு பற்றி கூறியதை முழுவதும் கூறிவிட்டு “நீங்க தான் அத்தான்…அப்பா அம்மாவிடம் இதைப் பற்றி பேசி…அனுமதி வாங்கி தரணும்” என்றவுடன்,
கிருஷ் ஓ என்று சொல்லிவிட்டு சிறிதுநேரம் எதுவும் பேசவில்லை…
அப்புறம் பெருமூச்சு ஒன்று விட்டு “சரி நான் பேசறேன்” என்று கூறிவிட்டு…நீ போகலாம் என்று சொல்லாமல்…அவன் துணி இருக்கும் அலமாரி பக்கம் சென்றவுடன்…ஶ்ரீநிதி முகம் சுருங்கி வெளியேறினாள்.
அவள் வெளியேறியவுடன் ‘நீ இப்போது கூட…அவனைப் பற்றி என்னிடம் சொல்லலை…நான் தான் உன்னை என் பொண்டாட்டியா நினைக்கிறேன்…ஆனால் நீ அப்படி என்னை நினைக்கலைனு… சொல்லாமல் சொல்லிட்டே…நீ எப்போ இதைப் பற்றி சொல்லுறியோ… அப்போ தான் நீ என்னை உண்மையாக காதலிக்கிறேனு அர்த்தம்…’ என்று கூறி அலமாரியின் கதவை குத்தினான்.
ஶ்ரீநிதி முகம் சுருங்கி அவள் அறைக்கு சென்று…தன் அலமாரியை திறந்து பார்த்தாள்.இப்போது தான் அவளுக்கு ஒன்று உறுத்தியது…உடனடியாக அவசரமாக அலமாரி முழுவதும் அதனை தேடினாள்.அன்று ரமேஷ் கொடுத்த பார்சல் எங்கே என்று புருவம் சுருக்கி யோசித்தவளுக்கு எங்கே என்று தெரியவில்லை.
ஆனால் அவளுக்கு ஒன்றும் மட்டும் விளங்கியது…இதனை இந்த வீட்டிலிருந்து தான் யாரோ செய்திருக்கிறார்கள் என்று…ஏனெனில் இந்த பார்சல் கை கால் முளைத்து எங்கயும் போயிருக்காது…ஆனால் இங்கு இந்த அளவு பண்ணுவதற்கு யார் இருக்கா…??என்று யோசித்துவிட்டு சீக்கிரம் இதைக் கண்டுபிடிக்கணும் என்று முடிவெடுத்தாள்.
ஶ்ரீநிதி எடுத்த முடிவினால்…கிருஷின் கோபத்திற்கு உள்ளாகி…ஶ்ரீநிதியே கிருஷை விட்டு பிரிந்து போக முடிவெடுப்பாள் என்பதை அவள் அறியவில்லை.