ஶ்ரீநிதி கீதாவை அழைத்து கொண்டு…ஆட்டோ ஒன்றை பிடித்து கே.என்.ரா மருத்துவமனைக்கு சென்றாள்.நடுவில் கீதா என்னடி என்னச்சு…??என்று நிறைய முறை கேட்டும் ஒன்றும் பதில் சொல்லாமல் “கீதா…கொஞ்சம் அமைதியாக வாடி…நான் அங்கே போய் எல்லா விவரமும் சொல்லுகிறேன்” என்று பதட்டத்துடன் கூறியவளை அதற்கும் மேல் கேள்வி கேட்டு தவிக்கவிடாமல்…கீதா வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
ஆட்டோ சென்று…மருத்துவமனையில் நின்றவுடன்…ஶ்ரீநிதி அவசரமாக அதிலிருந்து இறங்கி…பணம் கொடுத்துவிட்டு… மருத்துவமனையின் உள்ளே நுழையும்போது…எதிரில் ஒரு கார் வேகமாக வந்து நின்றது.
அதிலிருந்து இறங்கியவனைப் பார்த்தவுடன் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் அடுத்த நிமிடம் நிம்மதி பரவியது.ஆனால் அந்த நிம்மதி சிறிது நேரத்தில் கோபமாக மாறி இருக்க…அடுத்த நிமிடம் கோபத்தில் முகம் சிவக்க அவன் அருகில் சென்று அவன் சட்டையைப் பிடித்து “ஏய்…நீ நல்லா தானே இருக்கே…அப்புறம் எதுக்கு உனக்கு ஆக்ஸிடென்ட்னு சொல்லி வரவச்சிருக்கே…??அப்போ நீ என்னை பொய் சொல்லி வரவச்சிருக்கே அப்படிதானே…?எதுக்கு உனக்கு இந்த பொய் பித்தலாட்டமெல்லாம்…??” என்று அவன் சட்டை பிடித்து உலுக்கினாள்.
‘இங்கு என்ன நடக்குது…இவர் எதுக்கு இங்க வந்திருக்கார்…இவளும் இங்க வந்திருக்கா…’ என்று கீதா யோசித்து கொண்டிருக்கும்போதே ஶ்ரீ அவனின் சட்டையைப் பிடித்திருந்தாள்.அதில் கீதா அதிர்ச்சியடைந்து நின்றிருந்தாள்.
ரமேஷ் தான் சுற்றி எல்லோரும் தங்களையே பார்ப்பதை பார்த்து “ஶ்ரீநிதி…ஒரு நிமிடம் நான் சொல்லறதை கேளுங்க பிளீஸ்…!!” என்றவனை மதிக்காமல் அவள் பிடியிலேயே நின்றாள்.அவளுக்கு தன்னை ஏமாற்றியவனை சும்மா விட மனசில்லை.
கீதா கொஞ்சம் சுய உணர்வு பெற்றவுடன் அவசரமாக ஶ்ரீயின் அருகில் வந்து அவள் கையை தன் பக்கம் இழுத்துவாறு “ஶ்ரீ கையை எடுடி…எல்லோரும் நம்மையே பார்க்கறாங்க…” என்றவுடன் தான் ஶ்ரீநிதி வேறு வழியில்லாமல் கையை எடுத்தாள்.
ஶ்ரீநிதி கையை எடுத்தாளே ஒழிய அவனை கண்களால் பொசுக்கி கொண்டிருந்தாள்.
ரமேஷ் தவிப்புடன் “ஶ்ரீநிதி கொஞ்சம் ஓரமாக நின்று பேசுவோமா…??மற்றவங்களுக்கு காட்சி பொருளா இருக்க வேண்டாம்…பிளீஸ்ங்க…” என்று கெஞ்சியவுடன் கீதா தான் வேறு வழியில்லாமல் ஶ்ரீநிதியைக் கையைப் பிடித்து அழைத்து சென்றாள்.
அவர்களைப் பின்பற்றி ரமேஷூம் வந்தான்.அவர்களை நெருங்கியவுடன் “இங்கே வேணாங்க…பக்கத்தில் தான் ஹோட்டல் ரிஸடென்ஸி இருக்கு அங்க போய் அமைதியாக உட்கார்ந்து பேசுவோம்” என்றவுடன் ஶ்ரீநிதி “டேய் என்னடா நினைச்சிட்டு இருக்கே…நீ எங்க கூப்பிட்டாலும் வராதுக்கு உன் லவ்ர்னு நினைச்சியா…இல்லை பொண்டாட்டினு நினைச்சியா…??என்னை பார்த்தால் உனக்கு எப்படி தெரியுது…நீ சொல்வது மாதிரியெல்லாம் என்னால் கேட்கமுடியாது…!!” என்று சீறினாள்.
அவன் அவளை பாவமாக பார்ப்பதை பார்த்து இன்னும் கடுப்பாகி “என்ன நான் இப்படியெல்லாம் பேச மாட்டேனு நினைச்சியா…??” என்று கேட்டவுடன்,
அவன் ஆமாம் என்று தலையாட்டினான்.
ஶ்ரீநிதி “என்னை பொய் சொல்லி…வரவழைத்த உனக்கு…இந்த மரியாதை போதும்…நீ எப்படி நடந்துகிறியோ அப்படி தான் நானும் நடந்துப்பேன்” என்றாள் எரிச்சலோடு.
ரமேஷ் மறுபடியும் தன் கெஞ்சல் படலத்தை ஆரம்பித்தான். “பிளீஸ்ங்க…எனக்கும் நீங்க ஆஸ்பத்திரியில் இருங்கீங்கனு தான் போன் வந்தது…அதனால் தான்…நான் உங்களை தேடி வந்தேன்…யார் இப்படி பண்ணியதுனு எனக்கும் தெரியாதுங்க…!!” என்று அவன் கூறியவுடன்,
அவனை நம்பாத பார்வைப் பார்த்து முகத்தை திருப்பி கொண்டாள் ஶ்ரீநிதி.
“ஶ்ரீநிதி நீங்க ரொம்ப நல்லவங்கனு கேள்விப்பட்டு இருக்கேன்… என்னை உங்களிடம் நிரூபிக்கறதுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க…பிளீஸ் நாம் அங்க போய் விவரமாக பேசுவோம்” என்று அவளிடம் கெஞ்சினான்.ஶ்ரீநிதி ஒன்றும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
அதைப் பார்த்த கீதா தான் அவனுக்காக மனமுருகி ஶ்ரீநிதியிடம் “பிளீஸ்டி வாடி…இங்க எல்லாரும் நம்மையே பார்க்கறாங்க…நாம் ஹோட்டல் போவோம்…அவர் என்ன தான் சொல்லறாருனு ஒரு முறை கேட்போமே…!!” என்று அவளை அந்த ஹோட்டலுக்கு அழைத்து சென்றாள்.
ஶ்ரீநிதிக்கு இது ஏதோ தப்பு போல் மனதை நெருடியது…இருந்தும் தன் தோழிக்காக அவனுடன் சென்றாள்.
காரில் கீதாவும் ஶ்ரீநிதியும் பின் சீட்டில் அமர்ந்தனர்…ரமேஷ் வண்டியை ஒட்டி சென்றான்.கார் ஹோட்டலை அடையும் வரை காரில் பலத்த அமைதி நிலவியது.
மூவரும் ஹோட்டலை அடைந்து ஒரு டேபிளில் அமர்ந்தவுடன் ரமேஷ் “நீங்க இரண்டு பேரும் என்ன சாப்பிடுறீங்க…??” என்று கேட்டவனை ஶ்ரீநிதி நன்றாக முறைத்தாள்.
அவள் முறைப்பைப் பார்த்து “நாம் இங்க பேச தான் வந்திருக்கோம் தெரியுதுங்க…இருந்தும் ஏதோ ஒன்று அர்டர் கொடுத்துட்டு அப்புறம் பேசுவோமே…வேண்டுமானால் நீங்களே பில் பே பண்ணுங்க…??” என்றவுடன் வேற வழியில்லாமல் உணவுக்கு அர்டர் கொடுத்துவிட்டு இப்போது சொல் என்பது போல் அவன் முகத்தை பார்த்தாள் ஶ்ரீநிதி.
அவனும் அவளின் பார்வையை புரிந்து “ஒரு அரைமணி நேரத்திற்கு முன்னால் ஒரு போன் வந்தது…அதில் உங்களுக்கு ஆக்ஸிடென்ட்டாகி இருப்பதாகவும்…நீங்க கடைசியாக என்னை பார்க்க இருப்பதாகவும் போன் செய்து சொன்னாங்க…” என்றவுடன் ,
“நீங்க அதை நம்பிட்டு இங்க வந்தீட்டிங்க…இதை நாங்க நம்பணும்…??” என்று நக்கலாக கூறி அவனை பார்த்தாள்.
உடனே ரமேஷ் அவசரமாக “இல்லைங்க ஶ்ரீநிதி…நான் உடனே நம்பவில்லை…எனக்கு போன் செய்தது ஒரு பொண்ணுங்க… என்றுவிட்டு கீதாவைக் காட்டி,
“அவங்க என்னிடம் உங்க தோழி கீதா பேசுறேனு தான் சொன்னாங்க… அதனால் தாங்க…நான் நம்பிட்டேன்” என்று கூறினான்.
இவ்வளவு நேரம் இங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் பார்த்து கொண்டிருந்த கீதா இப்போது அதிர்ச்சியடைந்து தன் தோழி ஶ்ரீயிடம் “ஶ்ரீ சத்தியமாக நான் எதுவும் பண்ணலைடி…இவருக்கு நான் போன் பண்ணலைடி… பிளீஸ்டி என்னை நம்புடி” என்று தவிப்புடன் அவள் கையைப் பிடித்து கேட்டாள்.
ஶ்ரீநிதி அவள் கையை உதறிவிட்டு அவளை பார்த்து முறைத்தாள்.தன் தோழி தன்னை நம்பவில்லை என்று கீதாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்ட ஆரம்பித்தது.
அதைப்பார்த்தவுடன் ஶ்ரீநிதி “ஏய்…கீது லூசு…நான் உன்னை போய் சந்தேகப்படுவனா…??அப்புறம் நம்முடைய இத்தனை வருடம் நட்பிற்கு அர்த்தமே இல்லைடி…நான் கோபப்பட்டது கூட…நீ என்னை நம்புடி என்று கையைப் பிடித்து…சொன்னதுக்காக தானே ஒழிய…உன்னை சந்தேகப்பட்டதினால் இல்லை…புரியுதா லூசு…??” என்று கேட்டுவிட்டு அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டாள்.
“தேங்கஸ்டி” என்றவளை ஒரு முறை முறைத்துவிட்டு தன் பார்வையை இவனை நோக்கி திருப்பி “என் பிரண்ட் கீதா பண்ணலைனு எனக்கு தெரியும்…இப்போ எதுக்கு பொய் சொல்லி சமாளிச்சிட்டு இருக்கீங்க…ஒழுங்கா உண்மையை சொல்ல போறிங்களா…இல்லை கம்பி எண்ண போறீங்களா…??” என்று ஶ்ரீநிதி அவனை மிரட்டினாள்.
“என்னங்க இப்படியெல்லாம் பேசுறீங்க…நான் சொல்லறது உண்மைதாங்க…நீங்க நம்பலைனா…என்று தன் செல்போனை எடுத்து அவளிடம் கொடுத்து,
“நீங்க என்னை நம்பலைனா…கடைசியாக ஒரு அரைமணி நேரத்திற்கு முன் ஒரு கால் வந்திருக்கு பாருங்க…அந்த நம்பரிலிருந்து தாங்க பேசனாங்க…இப்போவாச்சும் நான் சொல்லறதை நம்புங்க பிளீஸ்” என்று கெஞ்சினான்.
அந்த நம்பரைப் பார்த்தவுடன் ஶ்ரீநிதியின் புருவத்தின் மத்தியில் முடிச்சு விழுந்தது.உடனடியாக தன் மொபைலை எடுத்து பார்த்தாள்… அவளுக்கு கடைசியாக வந்த கால் கிருஷிடமிருந்து வந்து இருந்தது…அதற்கு முன்பு தான் அந்த போலி அழைப்பு வந்திருந்தது.அந்த நம்பரும்… ரமேஷின் செல் நம்பருக்கு வந்திருந்த போன் காலின் நம்பரும் ஒன்று என்பதை ஶ்ரீநிதி அறிந்து…இன்னும் குழப்பத்தில் ஆழ்ந்தாள்.
இவள் முகம் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்த கீதா “என்னடி…என்ன ஒரு மாதிரி இருக்கே…??” என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லை சொல்லுறேன்டி” என்று அவளிடம் கூறிவிட்டு அவனிடம் பேச வாய் எடுக்கும்போது,
ரமேஷ் அவளை இடமறித்து “ஶ்ரீநிதி பிளீஸ் நம்புங்க…நான் எதுவும் பண்ணவில்லை…” என்று தவிப்புடன் சொன்னான்.
‘ஐய்யோ…!இவன் ஒருத்தன் நேரங்காலம் தெரியாமா…??நம்புங்க நம்புங்க என்று தேய்ஞ்சு போன ரெக்கார்ட் மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்கான்…’என்று எரிச்சலடைந்து அவனை திட்டுவதற்குள் அவளுடைய இன்னொரு மனம் நீ இப்போ கோபப்படக்கூடாது ஶ்ரீ…நிதானமாக தான் செயல்படணும்…என்று கூறி அமைதியடைய செய்தது.
அதன்படி ஶ்ரீநிதி “நான் உங்களை நம்பறேன்…” என்றவுடன் ரமேஷின் முகம் பொலிவடைந்தது.
“ஆனால் நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க…??” என்றவுடன் அவன் முகம் சுருங்கியது.
இருந்தும் “ஹூம் கேளுங்க…??” என்றான்.
“நீங்க என்னை லவ் பண்ணுறீங்களா…??”
ரமேஷ் இதுக்கு என்ன பதில் சொல்லவது என்றவாறு திருதிருவென்று முழித்தான்.கூடவே கீதாவும் இவள் என்ன செய்து கொண்டிருக்கிறாள் என்று குழப்பத்துடன் உட்கார்ந்திருந்தாள்.
“பரவாயில்லை சொல்லுங்க…நான் எதுவும் சொல்ல மாட்டேன்” என்று அவனை உண்மையைச் சொல்ல ஊக்கப்படுத்தினாள்.
அது தந்த தைரியத்தில் ‘ஆமாம்’ என தலையாட்டினான்.
ஶ்ரீ தன் அடுத்த கேள்வியைக் கேட்க ஆரம்பித்தாள். “சரி நீங்க யார்கிட்டயாவது என்னை காதலிக்கறதை பற்றி சொல்லி இருக்கீங்களா…??” என்று கேட்டாள்.
ரமேஷ் அதற்கு இல்லை என்பது போல் தலையாட்டினான்.
“நல்ல யோசித்து சொல்லுங்க…” என்று மறுபடியும் கேட்டாள்.
ரமேஷ் புருவத்தை சுருக்கி நன்றாக யோசித்து “நான் என் தம்பியை தவிர வேறே யார்க்கும் இதைப் பற்றி சொல்லவில்லை” என்றவுடன் ஶ்ரீநிதியின் முகம் அப்பட்டமாக ஏமாற்றத்தைக் காண்பித்தது.
உடனே ஶ்ரீநிதி “நாங்க கிளம்புகிறோம்” என்று கூறி டேபிளின் மேல் 1000 ரூபாயை வைத்துவிட்டு கிளம்ப தயாரானவளைத் ரமேஷ் கேட்ட கேள்வி தடுத்து நிறுத்தியது.
இப்போது அவன் தைரியமாக “ஜ லவ் யூ ஶ்ரீநிதி…இதுக்கு பதில் சொல்லிட்டு போங்க…??” என்று ஒரு வழியாக தன் காதலை. சொல்லிவிட்டான்.
அவனை முறைத்துகொண்டே “எனக்கு உங்களைப் பிடிக்கலை… அதுமட்டுமில்லாமல் எங்க அப்பா அம்மா சொல்லற பையனைத் தான் கல்யாணம் பண்ணிப்பேன்…போதுமா…??” என்று முகத்திற்கு நேரே கூறிவிட்டு தன் தோழியை இழுத்துக்கொண்டு புறப்பட்டாள்.
இதைக்கேட்டவுடன் ரமேஷின் முகம் கறுத்தது. ‘நீ எங்க போயிட போறே… நான் உன்னை அப்புறம் பார்த்துகிறேன்’ என்று மனதிற்குள் கறுவினான்.
இதையெல்லாம் தூரத்திலிருந்து கிருஷ் பார்த்து கொண்டிருந்தான். அவன் மனம் உலைக்களமாக கொதித்து கொண்டிருந்தது.