அத்தியாயம் 20

ரிஷி காலையிலிருந்து மிகுந்த அதிர்ச்சியில் இருந்தான்.காலையில் சீக்கிரமாக எழுந்து கிருஷுடன் ஜாகிங் போய்விட்டு வந்தவன்…தன் அறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்து தன் செல்போனைத் தேடினான்.

தேடியவனுக்கு தன் செல்போனை எங்கு வைத்தேன் என்று தெரியவில்லை…அதனால் ஶ்ரீநிதியிடமிருந்து அவள் போனை வாங்கி தன் செல்லுக்கு அழைக்க எண்ணி அவள் அறையின் கதவைத் தட்டினான்.

ஆனால் கதவை வந்து திறந்தது வாணி…ரிஷி அவளிடம் “ஶ்ரீ என்ன பண்ணுறா…??” என்று கேட்டான்.

வாணி தூக்க கலக்கத்திலே “அக்கா…தூங்கிட்டு இருக்காள்…என்ன வேண்டும் அத்தான்…??” என்று வினவினாள்.

“தூங்கறாளா…அப்போ சரி உன் போன் கொஞ்சம் கொடுக்கிறீயா…??”

வாணியும் நல்ல தூக்கத்தில் இருந்ததினால் என்ன ஏது என்று கேட்காமல் தன் போனைக் கொடுத்துவிட்டு தன் படுக்கையில் விழுந்தாள்.

ரிஷி தான் ‘சரியான கும்பகர்ணி…!’ என்று திட்டிவிட்டு…அவன் அறைக்கு வந்தான்.பிறகு அவள் மொபைலில் தன் பெயர் இருக்கிறதா…என்று பார்த்தான்.ரிஷி என்று எதுவுமில்லை என்றவுடன்…இவள் என் பெயரை எதுவோ கேவலமாக சேவ் பண்ணிவச்சுருப்பா போலவே…என்று நினைத்து தன் நம்பரை அதில் போட்டு…அழைப்பு பொத்தானை அழுத்தினான்.

அழுத்தியவன் அதில் வரும் பெயரைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றான்.அதற்குள் தன் போனின் மணி அடிப்பதைக் கேட்டு…அதை எடுத்து அணைத்து வைத்துவிட்டு… நாம் ஏதோ தப்பாக நம்பரை அழுத்திவிட்டோமோ என்று மறுபடியும் அவன் நம்பரை வாணியின் மொபைலில் அழுத்தினான்…ஆனால் மறுபடியும் “மை பெட்டர் ஹாப்” என்றே வந்தது.அந்த வார்த்தையின் பொருளை அறிந்த ரிஷி… அதிர்ச்சியடைந்து வாணியின் செல்லை…அவள் அறையில் வைத்துவிட்டு…அப்போதே ஆபிஸ் கிளம்பிவிட்டான்.

வாணியும் தூக்கக்கலக்கத்தில் இருந்ததினால் அவளுக்கு ரிஷியிடம் மொபைல் கொடுத்தது தெரியவில்லை.

ஶ்ரீநிதி தான் அவன் குழப்பத்தில் இருப்பதைப் பார்த்து “என்னப்பா ஆச்சு…ஏன் ஒரு மாதிரி இருக்கே…??அதுமட்டுமில்லாமல் காலையில் சீக்கிரம் ஆபிஸ் கிளம்பி வந்துட்டேனு சின்ன அம்மு சொன்னாங்க…?எனி திங்க் பிராப்ளம்??” என்று புரியாமல் வினவினாள்.

ரிஷி இவளிடம் சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு நிமிடம் யோசித்து பிறகு சொல்லலாம் என்று முடிவெடுத்து காலையில் நடந்ததைப் பற்றி கூறினான்.

அதைக்கேட்டவுடன் ஶ்ரீநிதி சப்தமாக சிரித்தாள்.ஆனால் ரிஷி… ‘நானே என்ன பண்ணுறதுனு தெரியாமல் காலையிலிருந்து டென்ஷனாக இருக்கேன்…ஆனால் இவள் நான் ஏதோ பெரிய ஜோக் சொன்னமாதிரி சிரிச்சிட்டு இருக்கா…’ என்று மனதில் திட்டிவிட்டு அவளை முறைத்தான்.

“ஏய் லூசு…நீ எதுக்கு இப்போ சிரிச்சிட்டு இருக்கே…சொல்லிட்டு சிரி…” என்று எரிந்து விழுந்தான்.

ஶ்ரீ சிரிப்பை அடக்காமல் சிரிப்புடனே “டேய்…டியூப் லைட்…இந்த விசயம் எங்களுக்கு ஏற்கனவே தெரியும்…நீ ரொம்ப லேட்… அதுவுமில்லாமல் அவள் உனக்கு ரிஷி மை லவ்லிருந்து மை பெட்டர் ஹாப் என்று உனக்கு போரோமாஷன் வேற கொடுத்திருக்கா…அதை நினைச்சா…எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது…!!” என்று சொல்லிவிட்டு இன்னும் பலமாக சிரித்து கொண்டே அவன் தலையில் முதல் குண்டை தூக்கிப்போட்டாள்.

“என்னது!!உனக்கு ஏற்கனவே தெரியுமா…??” என்று ரிஷி அதிர்ச்சியில் கத்தி தன் இருக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

ஶ்ரீ உடனே சிரிப்பை அடக்கி “டேய் கத்தாதே…!!அத்தான் வந்து இரண்டு பேரையும் திட்டுவார்” என்றவுடன்,

ரிஷி அவளை முறைத்துக் கொண்டே “ஏய்…உனக்கு அறிவில்லை…இதை ஏற்கனவே என்னிடம் சொல்ல வேண்டியது தானே…இதுமட்டும் அண்ணாவுக்கு தெரிந்தது…என்னை உண்டு இல்லை என்று பண்ணிவிடுவார்…எருமை எருமை” என்று கூறி பற்களை நறநறவெனக் கடித்தான்.

ஶ்ரீ லேசான புன்னகையுடன் “அத்தானுக்கு ஏற்கனவே தெரியும்” என்று கூறி இரண்டாவது குண்டை தூக்கிப் போட்டாள்.

“என்னது….????” என்று சிலையென உறைந்து நின்றான்.

ஶ்ரீ சிரிப்புடனே அவன் அருகில் வந்து அவன் தோளைத் தொட்டு “ரிஷி பயப்படாதே…அத்தான் உன்னை ஒண்ணும் சொல்லமாட்டார்…வாணி உன்னை ரொம்ப அதிகமாக காதலிக்கிறாள் ரிஷி…நீயும் வேற யாரையும் காதலிக்கலைனு எனக்கு தெரியும்…உனக்கு அவளைப் பிடிச்சிருந்த சொல்லு…சப்போஸ் உனக்கு அவளை பிடிக்கலைனா… அவள் மனசை இப்போதே மாற்றிவிடுகிறேன்…பிறகு அவள் உன் மேல் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்துவிட்டால்…அவளின் மனசை மாற்றுவது கஷ்டம்ப்பா…!!” என்று நீளமாக பேசி முடித்தாள்.

ரிஷி பிடிக்குடுக்காமல் “ஶ்ரீநிதி…நான் வாணியை அந்த மாதிரி எண்ணத்தில் இதுவரைப் பார்த்ததில்லை…இனிமேலும் பார்ப்பேனா என்று எனக்கே தெரியாது…அதனால் எனக்கு யோசிக்க ஒரு இரண்டு நாள் டைம் வேணும்” என்றவுடன்,

ஶ்ரீயின் முகம் சுருங்கிவிட்டது.இருந்தும் அவன் சூழ்நிலையிலிருந்து பார்த்துவிட்டு “சரிப்பா…நீ யோசித்து சொல்லு…ஆனால் எந்த முடிவாகயிருந்தாலும் என்னிடம் சொல்லு” என்ற வாக்கை அவனிடமிருந்து பெற்றுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.

ரிஷியிடம் பேசிவிட்டு அவளும் கீதாவும் இருக்கும் அறைக்கு சென்று இருக்கையில் அமர்ந்தவுடன் ஶ்ரீயுடைய செல்லுக்கு ஒரு கால் வந்தது.

அதை எடுத்து பேசியவளுக்கு சத்தியமாக யார் பேசியது என்று தெரியவில்லை…அவன் கூறிய சாராஹம்சம் இது தான்…ரமேஷிக்கு ஆக்ஸிடன்ட்டாகி கே.என்.ரா ஆஸ்பத்திரியில் இருக்கிறான்…அவன் உங்களை கடைசியாக ஒருமுறைப் பார்க்க வேண்டும் என்கிறான்…பிளீஸ் வாங்க என்று அவன் நண்பன் ஒருவன் கூறி போனை வைத்துவிட்டான்.

தன் தொலைப்பேசியை வைத்துவிட்டு அவனைப் பார்க்கப் போகலாமா…?வேண்டாமா…?என்று யோசித்துக் கடைசியாக போகலாம் என்று முடிவெடுத்து…கீதாவையும் அழைத்துக் கொண்டு…ரிஷியிடம் மட்டும் கூறிவிட்டு…ஆஸ்பத்திரியை நோக்கி சென்றாள்.

கிருஷ்…இவர்கள் இருவரும் வெளியேறியதை…ஜன்னலின் வழியே பார்த்து…ஶ்ரீநிதிக்கு போன் செய்தான்.அவள் தன் போனை கட் செய்வதினால் எரிச்சலோடு தன் தம்பி ரிஷிக்கு போன் செய்தான்.

அவனிடம் “எங்கடா இரண்டு பேரும் தனியாக போறாங்க…??” என்று மொட்டையாக வினவினான்.

முதலில் ரிஷிக்கு யார் இரண்டு பேரும் என்று புரியவில்லை…புரிந்தபிறகு “ஓ…ஶ்ரீநிதியா…!!ஶ்ரீநிதி அவளுடைய பிரண்ட் யாருக்கோ ஆக்ஸிடெண்ட் ஆகிடுச்சாம் அண்ணா…அதனால் நான் போய் பார்த்துவிட்டு வரேன் என்று என்னிடம் சொல்லிவிட்டு போனாள் அண்ணா…ஏன் அண்ணா உங்களிடம் எதுவும் சொல்லலையா…??” என்று கேட்டான்.

ஏற்கனவே என்னிடம் சொல்லாமல் இவனிடம் மட்டும் சொல்லிவிட்டு சென்றிருக்கிறாள் என்று நினைத்து கொண்டிருந்தவன் மனதில் இந்த கேள்வியைக் கேட்டு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினான்.

கிருஷ் சூடாக “நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிட்டே தானே…இனிமே உன் வேலையைப் பாரு” என்று சீறிவிட்டு போனைப் பட்டென்று வைப்பதற்கும்…மீரா கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைவதற்கும் சரியாக இருந்தது.

மீரா உள்ளே நுழைந்தவுடன் “என்ன…??இங்கு எதற்கு வந்தே…?எதுவாக இருந்தாலும் அப்புறம் வந்து பேசு?” என்று அவளிடமும் சீறினான்.

இருந்தும் மீரா அங்கிருந்து நகராமல் “அத்தான்…உங்களிடம் ஶ்ரீயைப் பற்றி ஒரு முக்கியமான விசயம் பேசணும்…?நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளுங்க அத்தான்…பிளீஸ் அத்தான்…!!” என்று கெஞ்சினாள்.

ஶ்ரீநிதி என்றவுடன் கிருஷ் கொஞ்சம் அமைதியாகி “சரி சொல்லு” என்றவுடன்,மீரா மடமடவென்று எல்லாவற்றையும் கூறிவிட்டு…வந்த வேலை முடிந்ததுபோல் அறையைவிட்டு வெளியேறினாள்.

வெளியே சென்றவளின் முகத்தில் வெற்றி புன்னகை இருந்தது.

மீரா கூறியதைக் கேட்டவுடன்  கிருஷிற்கு கொஞ்சநஞ்சம் இறங்கிருந்த கோபம் மீண்டும் தலைக்கேறியது.

அந்த கோபத்தில் தன் கார் சாவியை எடுத்து கொண்டு காரில் ஏறி சீறி பாய்ந்தான்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top