அத்தியாயம் 19

கிருஷும் தன்னை காதலிக்கிறார் என்று…கீதா சொன்னதிலிருந்து ஶ்ரீநிதி வானில் பறந்துகொண்டிருந்தாள்…காலையில் எழுந்ததிலிருந்து அவள் அங்கு அங்கு நின்று கனவு கண்டு கொண்டிருப்பதை பார்த்த…கீதாவிற்கு தான்…அவளை சமாளிப்பது…பெரும் பாடாக இருந்தது.

இதற்கெல்லாம் மேல் குளிக்க சென்றவள்…ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும் வெளியில் வராமல் இருக்கவும்…கீதா என்னவோ ஏதோ என்று பயந்து கதவைத் தட்டினாள்.முதலில் ஶ்ரீநிதி எதுவும் பதில் சொல்லவில்லை…ஆதலால் கீதா பதட்டம் அடைந்து…ஶ்ரீநிதியை அழைத்து கொண்டே இன்னும் வேகமாக கதவைத் தட்டினாள்.

இப்போது ஶ்ரீநிதி கதவை வேகமாக திறந்து “என்னடி…??எதுக்கு இப்போது கதவு உடையும் அளவுக்கு தட்டிட்டு இருக்கே…??” என்று எரிச்சலுடன் கேட்டாள்.

கீதாவிற்கு இப்போது பயம் குறைந்து ஶ்ரீநிதியை முறைத்துக்கொண்டே “நான் எத்தனை தடவை கதவை தட்டினேன் என்று தெரியுமா…??நீ பதிலே சொல்லலை…அதனால் தான் வேகமாக கதவைத் தட்டினான்…ஆமாம் அது இருக்கட்டும்…என்று அவளை மேலிருந்து கீழே வரை சந்தேகமாக பார்த்து பார்த்துவிட்டு,

“நீ உள்ளே குளிக்க போய் ஒரு மணி நேரமாகுது…ஆனால் உன்னை பார்த்தால் குளிச்ச மாதிரி தெரியலையே…நீ ஒரு மணி நேரமாக…குளிக்காமல் என்ன பண்ணினே…??” என்று வினவினாள்.

ஏனெனில் ஶ்ரீநிதி உள்ளே குளிக்கப்போகும் போது போட்டிருந்த அதே இரவு உடையுடனே இப்போதும் இருந்தாள்.அதை வைத்து தான் கீதா ஶ்ரீநிதியை கேட்டாள்.

ஶ்ரீநிதி அதே எரிச்சலுடன் “ஏய் லூசு…நான் குளிக்க போகி 5 நிமிடம் தான் ஆகுது…நீ ஒரு மணி நேரம்னு பொய் சொல்லுறியா…??நான் போகும்போது 7.30…இப்போது என்ன மணி…??” என்றவாறு பாத்ரூமை அடைத்து நின்றிருந்தவளைத் தள்ளிவிட்டு கடிகாரத்தை எட்டி பார்த்து திகைத்தாள்.ஏனெனில் மணி 8.40.

கீதா ஶ்ரீநிதியை இப்போ என்ன சொல்ல போறீங்க மேடம் என்றவாறு நக்கலாக பார்த்து கொண்டிருந்தாள்.சில நொடிகளில் கட்டுக்குள் வந்த ஶ்ரீநிதி “சாரிடி…நான் இப்போது தான் போன மாதிரி இருந்தது… ஆனால் ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகிடுச்சுனு…என்னால் நம்பவே முடியலைடி…அது தெரியாமல் உன்னை வேறே திட்டிட்டேன்டி…” என்று அசடு வழிந்தவாறு,

“சரிடி…நான் போய் வேகமாக குளிச்சிட்டு வந்திடுறேன்டி…” என்று கூறிவிட்டு கதவை சாற்றப்போனவளைத் தடுத்த கீதா “ஆமாம் இவ்வளவு நேரம் உள்ளே என்ன பண்ணிட்டு இருந்தே…??அதை முதலில் சொல்லு” என்று பிடிவாதமாக கேட்டாள்.

ஶ்ரீநிதி திருதிருவென்று முழித்தாள்.ஏனெனில் இவ்வளவு நேரமும் குளிக்காமல் கிருஷை நினைத்து கனவு கண்டு கொண்டிருந்தேன் என்று எப்படி தன் தோழியிடம் கூறுவாள்.அவளின் முகத்தை வைத்தே கண்டுப்பிடித்த கீதா சிரிப்புடன் “லூசு…கனவு காணாமல் சீக்கிரம் போய் குளித்துவிட்டு வா…9 மணிக்கு கிருஷ் அண்ணா…ஆபிஸ் கிளம்பிட்டிங்களா என்று கூப்பிட ஆரம்பிச்சிடுவாங்க…நான் வேறே இன்னும் குளிக்கணு…” என்று சொல்லி முடிப்பதற்குள் ஶ்ரீநிதி பதட்டத்துடன் “ஆமாம்…ஆமாம் நான் போய் சீக்கிரம் குளிச்சிட்டு வரேன்” என்று அவசரமாக உள்ளே நுழைந்தாள்.

சரியான சமயத்திற்கு ஶ்ரீநிதி தயாராகி கீழே வந்தாள்.கீழே கிருஷூடன் பாட்டி தாத்தா அமர்ந்து இருப்பதைப் பார்த்த ஶ்ரீநிதி தன் பாட்டியை வம்பிழுக்க எண்ணி “தாத்தா…இந்த ராது…சரியே இல்லை…எப்போ பார்த்தாலும் என்னை திட்டிட்டே இருக்கறாங்க…இவங்க அவ்ளோ ஒண்ணும் அழகும் இல்லை…அப்புறம் எப்படி அவங்களை கல்யாணம் பண்ணீங்க தாத்தா…பேசாமல் பாட்டியை விவாகரத்து பண்ணிடுங்க… நான் உங்களுக்கு இளமையா அழகா ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணிவைச்சிடுறேன்” என்று குறும்புடன் கூறினாள்.

தாத்தா அதற்கு பலமாக சிரித்துவிட்டு “என்ன பண்ணிறது ஶ்ரீம்மா…எங்க அம்மா இவளை தான் நீ கல்யாணம் பண்ணணும் என்று ஒற்றைகாலில் நின்று என் தலையில் கட்டி வச்சிட்டாங்க…!!” என்று வம்பிழுத்தரை,

குமட்டில் ஒரு இடி இடித்து “ஆமாம்…அப்படியே உங்க தாத்தாரு எம்.ஜி.யாரு கணக்கா இருக்காரு…இவரை கல்யாணம் பண்ணிக்க எல்லாரும் வரிசையில் நின்னாங்க…நான் மட்டும் போனால் போகட்டும்னு…பாவப்பட்டு கல்யாணம் பண்ணலைனா… உங்க தாத்தாரு காலம் பூராவும்… கல்யாணம் பண்ணாமல் கட்ட பிரம்மசாரியா தான் இருந்திருக்கணும்… அப்புறம் நீயும் என் பேத்தியா வந்திருக்கே மாட்டே…நானும் இந்த உன் தொந்தரவு இல்லாமல் நிம்மதியா இருந்திருப்பேன்” என்று அவரும் இதில் நான் ஒண்ணும் உங்களுக்கு சலித்தவாரில்லை என்று நிரூபித்தார்.

இப்போது எல்லாரும் சேர்ந்து சிரித்தனர்.

ஆனாலும் விடாமல் ஶ்ரீ சிரிப்புடன் “என்ன ராது…நீ ஓவரா பேசிறே…?எங்க தாத்தா மாதிரி புருஷன் கிடைக்க நீ கொடுத்து வச்சிருக்கணும்… இதுக்காக நீ தினமும் காலையில் அவர் காலை தொட்டு வணங்கணும் புரிஞ்சிக்கோ…!அப்புறம் இந்த அழகான இளவரசி கிடைக்க நீ இன்னும் கொடுத்து வச்சிருக்கணும்!” என்றாள் தன் சுடிதாரில் இல்லாத காலரைத் தூக்கியவாறு.

தாத்தா “மற்றதெல்லாம் சரிம்மா…ஆனால் கடைசியாக ஏதோ இளவரசினு சொன்னியே…அது யாரும்மா…?அதுமட்டுமில்லாமல் நம்முடைய வீட்டில் அப்படி யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே…?” என்று புரியாமல் கேட்பதுபோல் கேட்டு அந்த நேரத்தில் அவள் காலை வாரினார்.

இவ்வளவு நேரம் பாட்டியை வம்பிழுத்ததை மறந்து ஶ்ரீ சிணுங்கயவாறு “பாருங்க பாட்டி இந்த தாத்தாவை…!!” என்று தன் பாட்டியிடம் சரணடைந்தாள்.

பாட்டி “இப்போது புரியுதா உங்க தாத்தாரை பற்றி…” என்றார் சிரிப்புடன்.

“ஆமாம் பாட்டி…நீங்க தான் குட் பாட்டி…தாத்தா பேட் தாத்தா…!!” என்று சலுகையாக கூறி தன் தாத்தாவைப் பார்த்து “வெவ்வெவ்வே…!” என்று பழித்து காட்டிவிட்டு பாட்டியின் தோளில் சாய்ந்தாள்.

தாத்தா கிண்டல் பண்ணியவுடன் பாட்டி அருகில் உட்கார்ந்த ஶ்ரீநிதி தெரியாமல் ஒரு தவறு செய்திருந்தாள்.பாட்டியும் கிருஷும் ஒரே சோபாவில் சிறிது இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தனர்.ஶ்ரீநிதி பேச்சு சுவாரசியத்தில் பாட்டிக்கு அந்த பக்கம் உட்காருவதற்கு பதில்…கிருஷ் இருக்கும் பக்கம் உட்கார்ந்திருந்தாள்.

இவ்வளவு நேரம் இதையெல்லாம் சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்த கிருஷிற்கு இவள் அருகில் வந்து உட்கார்ந்ததும் ஒரு கூடைப் பூக்களை தலையில் கொட்டியது போல் இருந்தது.ஆனால் ஶ்ரீக்கு தான் அவன் அருகில் உட்காருவதற்கு ஒரு மாதிரி இருந்தது.

அதனால் ஶ்ரீ அதிலிருந்து தப்பிக்க எண்ணி “சரி தாத்தா…நேரம் ஆகிடுச்சு… கீதா வந்தவடனே… நாங்க சாப்பிட்டு விட்டு கிளம்புறோம்” என்றுவாறு எழுந்தாள்.

ஆனால் எழுந்தவளால் உடனடியாக எழுந்த கொள்ள முடியவில்லை… ஏனெனில் அவள் சுடிதார் துப்பட்டாவின் குஞ்சம் ஒன்று கிருஷின் பட்டனில் மாட்டியிருந்தது.துப்பட்டாவை எடுத்துவிட்டு எழுந்து கொள்ளலாம் தான்…இருந்தும் தாத்தா பாட்டி அருகில் இருக்கும்போது எப்படி எடுப்பது என்று தயக்கமாக இருந்ததினால் அங்கேயே உட்கார்ந்துவிட்டாள்.

கிளம்புகிறேன் என்று சொன்னவள் இன்னும் இங்கே இருப்பதைப் பார்த்த தாத்தா என்னவென்று கேட்கலாம் என்று நினைக்கும் போது தான்…கிருஷ் கண்ணை காட்டி கொஞ்சம் உள்ளே போறீங்களா தாத்தா…??என்று கேட்டவுடன் எதுக்கு…?என்று பதிலுக்கு அவரும் கண்ணால் கேட்டார்.

கிருஷ் கண்களால் தன் சட்டையைக் காண்பித்தான்.அவனுக்கு எதிரில் உள்ள சோபாவில் அமர்ந்திருந்ததால் அவருக்கும் இது தெரிந்தது…அதன்பிறகு தான் ஶ்ரீநிதி சங்கோஜப்படுவதைப் பார்த்து “ராதும்மா…!!கொஞ்சம் ரூம் வரைக்கும் வரியா…என் மூக்கு கண்ணாடி எங்க இருக்குனு தெரியலை வந்து எடுத்து தா…!!” என்று ராதையை அழைத்து சென்றார்.

அவர்கள் சென்ற பிறகும்…ஶ்ரீநிதி அப்படியே தான் உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு கிருஷின் முகத்தை திரும்பி பார்க்க வெட்கம் தடுத்தது.கிருஷூம் அவளே திரும்பி எடுக்கட்டும் என்று அவளை ரசித்து கொண்டு கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்தான்.

ஶ்ரீநிதி தான் “என்ன செய்வது…?” என்று தெரியாமல் தவித்து போனாள்.

“இந்த கீதா லூசு வருதானு பாரு…நான் இப்படி தனிமையில் மாட்டிக்கிட்டேன்…இந்த அத்தானும் கொஞ்சம் எடுத்துவிடாமல் ஜாலியா கால் மேலே கால் போட்டு உட்கார்ந்திருக்காரு… ஹிட்லர்…!!”  என்று தன் தோழியையும் தன் அத்தானையும் மனதில் நன்றாக திட்டினாள்.

சரி வேறு வழியில்லை நாம் தான் எடுக்கணும் என்று திரும்பி அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்காமல்…அதை எடுக்க முயற்சி செய்து கொண்டிருந்தாள்.இன்னும் நெருக்கமாக இருந்திதினால் அவளின் முகம் நன்றாக சிவந்தது.

கிருஷ் வேண்டுமென்றே “சீக்கிரம் எடுடி…நேரமாகுது” என்று அதட்டுவது போல் கூறினான்.

அந்த நேரத்தில் அவன் அவளை டி என்று அழைத்தது கூட கவனிக்காமல்,ஶ்ரீநிதி பதட்டத்துடன் “இதோ அத்தான்” என்று கூறினாளே ஒழிய அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை.இப்போது ஶ்ரீநிதிக்கு வெட்கமெல்லாம் போகி பயம் குடி வந்தது.அவன் ஏதோ திட்டிவிடுவனோ என்று.

கிருஷிற்கு இதனை கண்டு சிரிப்பு தான் வந்தது.ஶ்ரீநிதி பதட்டமானதால் அதை எடுக்க முடியாமல் போக தவிப்புடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அவன் முகத்தில் புன்னகை இருப்பதை கண்டவுடன் மறுபடியும் ஶ்ரீநிதி முகம் சிவந்து தலைகுனிந்தாள்.அதனால் மூளை அவளை எழுந்து போகச் சொல்லி அறிவுறுத்த…ஆனால் அவள் மனம் இன்னும் அவனிடம் நெருங்க சொல்லியது.

கடைசியில் யாரோ வரும் அரவம் கேட்டு ஶ்ரீநிதி தான் அவன் சட்டையிலிருந்து தன் துப்பட்டாவை பலமாக இழுத்து கொண்டு அந்த இடத்திலிருந்து ஓடினாள்.

கிருஷ் சிரிப்புடன் குனிந்து தன் சட்டையைப் பார்த்தான்.அவன் பட்டனில் அவள் துப்பட்டாவின் நூல் சிறிது இருந்தது.அதை எடுத்து பத்திரப்படுத்திவிட்டு எழுந்தான்.

தன் அறைக்கு சென்றபிறகு தான் ஶ்ரீநிதி அவன் தன்னை “டி” என்று சொன்னது உறைத்தது. ‘அத்தான்…நான் என்ன உங்களுக்கு பொண்டாட்டியா…டி…சொல்லுறீங்க…அதுக்கெல்லாம் இன்னும் நேரம் இருக்கு அத்தான்…அதுவரைக்கும் பொறுமையாக இருக்கணும் புரியுதா…??’ என்று தனியாக பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்து கீதா தலையில் அடித்து கொண்டாள்.

கிருஷையும் ஶ்ரீநிதியையும் பார்த்து கொண்டிருந்த…மீராவுக்கு வயிறு எரிந்தது.இதற்கு மேல் அப்பாயியை நம்பினால் வேலைக்கு ஆகாது…நாமே இதில் இறங்கிவிட வேண்டியது தான் என்று முடிவு செய்தாள்.

நேற்று இரவில் தூக்கம் வராமல்…சிறிதுநேரம் பால்கனியில் போய் இருக்கலாம்…என்று வெளியே வந்தவளின் காதில்…கீதாவும் ஶ்ரீயும் பேசியது…விழுந்து…ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் இருந்தது.

அதை கேட்டதிலிருந்து அவள் மனம் எரித்தணல் போல் எரிந்து கொண்டிருந்தது. ‘எனக்கு தான் கிருஷ் அத்தான் சொந்தம்…அவர் கிடைப்பதற்காக நான் எந்த லெவலுக்கும் போவேன்…உன்னை கிருஷ் அத்தானிடமிருந்து பிரிக்கலை…என் பெயர் மீரா இல்லைடி…’ என்று சூளுரைத்தாள்.

அதன்பிறகு தான் மீராவுக்கு ஒன்று உறைத்தது.அன்று ஶ்ரீநிதியின் பெயருக்கு ஒரு பார்சல் வந்ததே…அதை அனுப்பியது யாரு…அதை வைத்து ஏதாவது செய்ய முடியுதானு பார்ப்போம் என்று யோசித்து…ஶ்ரீநிதி அலுவலகம் கிளம்பியப்பிறகு…அவள் அறைக்கு சென்று அவள் அறை முழுவதும் தேடினாள்.

கடைசியில் அவள் தேடியது…ஶ்ரீநிதியின் அலமாரியிலிருந்து கிடைத்தது…வேகமாக அதனைப் பிரித்து பார்த்தவளுக்கு…சந்தோஷம் பிடிப்படவில்லை…இருடி…இதை வைத்தே உன்னையும் கிருஷ் அத்தானையும் பிரிக்கிறேன் என்று கறுவிக்கொண்டு அந்த இடத்தைவிட்டு வெளியேறினாள்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top