அத்தியாயம் -18

மோகனா தனது பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து தனது பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தாள். 

பல வண்ணங்களில் சிறியதிலிருந்து பெரியது வரையிலான கரடி பொம்மைகளை பெரிய நெகிழிப் பையில் போட்டுவைத்தாள்.

“அடேயப்பா…! எத்தனை விதமான டெட்டி பியர். இதென்ன..? டெட்டி பியர் பச்சை கலர்ல கூட இருக்குமா? வித விதமா ரகரகமா வாங்கி குவிச்சி வச்சிருக்க. ஆட்டைய‌ போடுற காசுல பாதி காசை இந்த பொம்மையை வாங்குறதுலேயே செலவு பண்ணிருப்ப போலவே…! ம்ம்ம்…ஆனாலும் உனக்கு ரொம்ப தைரியம் தான். எந்த தைரியத்துல நான் உன்னைய அரெஸ்ட் பண்ண மாட்டேன் னு நம்பிட்டு இருக்க? போலீஸ் கம்ப்ளைண்ட் கொடுத்து உன்னையே உள்ள தள்ளுனா என்ன பண்ணுவ?” என்றான்.

அடுக்கி வைத்து கொண்டிருந்தவளின் கைகள் ஒரு தயங்கி பின்னர் அடுக்கிக் கொண்டிருந்தது.

அவளிடமிருந்து பதிலேதும் வராமல் போகவே அவளருகே குத்துக்காலிட்டு அமர்ந்தவன் , “ ஹலோ..! உன் கிட்ட தான் கேக்குறேன்….பதில் சொல்லு டி…”என்று அவளது தோளினைப் பிடித்து தன்புறமாக திருப்பினான்.

”ம்ம்ச்…” என்று சலித்துக் கொண்டே ஆதவ்வின் கரங்களை தட்டி விட்டவள்,  “இதோ…பாருங்க…டி போட்டு பேசாதீங்க….சொல்லிட்டேன்…”என்று கூறி முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“ஹலோ…நான் கேட்டதுக்கு பதில் இன்னும் வரலை…உன்னை நான் அரெஸ்ட் பண்ண‌ மாட்டேன்னு தைரியமா? உன்னையே பத்தி மத்த யாருக்கும் வேணா எதுவும் தெரியாம இருக்கலாம். ஆனா எனக்கு நல்லாவே தெரியும்…சொல்லு…என்ன தைரியத்துல இவ்வளவு கூலா இருக்க?” என்றான்.

“ நீங்க தான் காரணம். நீங்களே சஸ்பென்ஷன் ல இருக்கீங்க.அதனால கண்டிப்பா அரெஸ்ட் பண்ண மாட்டீங்கன்னு ஒரு தைரியம் தான். அப்பறம் உங்களை மாதிரி ரெப்யூடட் ஃபேமிலியோட பேரு வெளியே பேசும் பொருளாக விட மாட்டீங்கங்கற நம்பிக்கை தான்…” என்று அசராமல் கூறியவளைக் கண்டு ஒரு கணம் திகைத்து தான் போனான்.

அவள் கூறுவதிலும் ஓரளவிற்கு உண்மை இருக்கத்தான் செய்தது.

அவனது திகைத்த முகத்தை பார்த்தவள் மெல்லிய சிரிப்புடன், “என்னங்க சார்…அமைதியாகிட்டீங்க?இதுக்குதான் நான் வாயை திறக்காம இருந்தேன்.‌ நீங்க வற்புறுத்தி கேட்டதுனால தான் உண்மையை சொன்னேன்‌” என்று கூறி விட்டு தனது அழகு சாதனப் பொருட்களை தனிப் பெட்டியில் அடுக்கி வைக்க ஆரம்பித்தாள்.

அவளது பதிலில் ஆதவ்வின் ஈகோ  தூண்டப்பட்டது.

அவளை அப்படியே சுவற்றோடு சாய்த்தவன் முகத்தருகே குனிந்து அவளது குண்டு கன்னத்தை தனது ஒற்றை கரத்தால் அழுந்தப் பிடித்துக் கொண்டு, “ரொம்பவே என்னைய லேசா நினைச்சுட்டல… இருக்கட்டும் ஒரு நாள் உனக்கு இருக்கு…அன்னைக்கு என்ன கதி ஆவன்னு தெரியாது….ஒரு விஷயம் நியாபகம் வச்சிக்க…உன் கூட இருந்த கிளுகிளுப்பு வீடியோ வந்தப்ப  கூட நாங்க ரெப்பியூடட் ஃபேமிலி தான்.‌‌இப்ப கூட உன் மேல ஏகப்பட்ட செக்ஷன்ல கேஸ் போட்டு உள்ள தள்ள எனக்கு செகெண்ட்ஸ் ஆகாது….வேணாமேன்னு பாக்குறேன்…ஓவரா பேசினா…பேசுற வாயை…அப்படியே….”என்றவன் இரு விரல்களால் ஆரஞ்சு பழ உதடுகளை பிடித்திழுத்தான்.

“ ஸ்ஸ்…..ஆ…..”என்று முணங்கிக் கொண்டே ஆதவ்வின் கரங்களை விலக்க முயன்றாள்‌

அவனோ வேகமாக அவளிதழை முத்தமிடுவது போல முகத்தை நோக்கி குனிய அவளோ வாயை மூடிக்கொண்டு பதறி விலகினாள்.

“ ம்ம்….அந்த பயம் இருக்கட்டும்… “ என்றவன் அவள் பரப்பி வைத்திருந்த அழகு சாதன பொருட்களையெல்லாம் பார்த்து விட்டு , “ ஆட்டைய போட்ட காசெல்லாம் இப்படி மேக்கப் ஐட்டமா மாறி நிக்குது…ம்ம்ம்…மேக்கப் ஐட்டம் வாங்கி குவிக்கறதுக்குன்னே…. பிக்பாக்கெட் அடிச்சு, மொட்டைத் தலையனுங்களை மட்டையாக வச்சு…பணத்தை கறந்துடுவியா? ஆமா…. அவ்வளவு பணத்தை வச்சு என்ன‌ பண்ணுவ நீ? உனக்கெதுக்கு இவ்வளவு பணம்? உன்னோட தங்கசச்சி படிக்குறான்ன…. அதுவும் பொய் தானே? இவ்வளவு ஆடம்பரமான வாழறதுக்கு தான நீ இவ்வளவு நாளா திருட்டுத்தொழில் பண்ணிட்டு இருந்த…. இனியாவது ஒழுக்கமா இரு…உனக்குன்னு ஒரு வீடு இருக்கு…தி கிரேட் பிசினஸ் மேன் ருத்ரனோட மருமக….ஏபிசி ஆதவ்வோட பொண்டாட்டி, கமிஷனர் கீதாஞ்சலியோட தம்பி வொய்ஃப்  நீ…சோ…இனியாவது இந்த மொள்ளமாறித்தனம், முடிச்சவிக்கித்தனம் பண்ணாம நேர்மையா இருக்கப் பாரு… பார்க்கவும் அழகா தான் இருக்க…போனா போகுதேன்னு உன்னை என்னோட பொண்டாட்டியா ஏத்துக்குறேன்… என்ன சொல்ற? இனி இந்த மாதிரி போர்ஜரி பண்ணி குடும்ப மானத்தை வாங்கிடாத….புரியுதா???” என்று மிதப்புடன் கேட்டவனை வெறுமையாக பார்த்தவள் பதிலேதும் கூறாமல் தனது பெட்டிகளையும் பைகளையும் தூக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.

“ எவ்வளவு திமிரு…..இவளுக்கு….? பதிலேதுவும் பேசாம போறா பாரு….” என்று முணுமுணுத்துக் கொண்டே அவளருகே வந்து நின்றான்.

“எதுக்குமே பதில் சொல்ல மாட்டியா? உனக்கென்ன அவ்வளவு திமிரு?போனா போகுதேன்னு வாழ்க்கை கொடுக்கலாம்னு பார்த்தா…ஓவரா தான் பண்ணுற நீ” என்று வார்த்தைகளை விட்டான்.

“ வேண்டாம்‌ சார்…நீங்க எனக்கு வாழ்க்கையே தரவே வேண்டாம்…உங்க கிட்ட வாழ்க்கை பிச்சை வாங்குற அளவுக்கு என் நிலைமை கீழே இறங்கி போயிடல. நான் என் வழியை பாத்துக்குறேன். நீங்க உங்க வழிய பாத்துக்கோங்க. உங்க அக்கறைக்கு ரொம்ப நன்றி… “ என்றவள் விடுவிடுவென குடியிருப்பு மின்தூக்கியினுள் நுழைந்து  தரை தளத்தின் பொத்தானை அழுத்தி விட்டு நின்றாள். 

மூட முயன்ற மின்தூக்கியினுள் அவசரமாக நுழைந்து கொண்டவன் மோகனாவின் முகத்தை பார்த்தான்.

கைகளை கட்டிக் கொண்டு வேறு திசையில் முகத்தை திருப்பிக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

அவளுக்கெதிரே பேன்ட் பாக்கெட்டில் கை விட்டுக் கொண்டு சாய்ந்து நின்றான் ஆதவ்.

ஏனோ மனம் ஆதவ்வின் பேச்சில் அவளது மனம் அதிகம் காயப்பட்டு தான் போனது. 

உதடு துடிக்க நின்றிருந்தவளின் முகம் செந்நிறமாக மாறியிருந்ததை கவனித்தான்.

“ நான் உன்னோட நல்லதுக்கு தான சொன்னேன்…” என்றவனை கையெடுத்து கும்பிட்டு,”வேணாம் சார்‌ விட்டுடுங்க…”என்றவள் அத்தோடு பேச்சு முடிந்தது என்பது போல அமைதியாக இருந்தாள்.

“போ…எனக்கென்ன வந்தது. உனக்கொரு நல்ல ஆஃபர் கொடுத்தேன்…வேணாம்ங்கற…தட்ஸ் ஓகே…ஆனா திரும்பவும் பழைய படி யாரையாவது ஏமாத்தி பணம் பறிச்சன்னு வைய்யி…அன்னைக்கு இருக்கு உனக்கு…”என்று முடிப்பதற்குள் தரைத்தளம் வந்து விட ,  “வெளியே வெயிட் பண்ணு .நான் காரை எடுத்துட்டு வந்துடுறேன்…” என்று கூறி விட்டு பார்க்கிங் ஏரியாவிற்கு சென்றான்.

அவன் சென்ற திசையை வெறித்துப் பார்த்தவள்  வெளியே சாலைக்கு வந்து நின்றாள். எதிரே வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி ஏறிக் கொண்டாள்.

ஆட்டோவில் ஏறி அமர்ந்தது தான் தாமதம் விழிகள் இரண்டும் கண்ணீரை சொரிய ஆரம்பித்துவிட்டது.

‘ மோகி இப்ப ஏன் அழற..? அந்த ஏபிசி ஏதோ சொல்லிட்டான்ங்கறதுக்காக அழுதுட்டு இருக்கியா? இதெல்லாம் பாத்துட்டு இருந்தா‌ பணம் பாக்க முடியுமா? இல்ல அந்த ஏபிசி கிட்டயோ…அந்த குடும்பத்துக்கிட்டயோ போய் பணம் கேக்க முடியுமா? முடியாதுல்ல…அவரு சொல்றதையெல்லாம் இந்த காதுல வாங்கி அந்த காதுல எப்பவும் போல விட்டுட்டு உன்னோட வேலையை மட்டும் பாரு…எமோஷனலா அட்டாச் ஆகாத…ஏதோ பாக்க கொஞ்சம் ஹேண்டசம்மா இருக்காருங்கறதுக்காக அவரு சொன்னதுக்காக எல்லாம் ஃபீல் பண்ணிட்டு இருக்கியா?’இது தேவையே இல்லாத வேலை…ஜஸ்ட் ஃப்ரீயா விடு….அடுத்து எப்படி பணம் பாக்குறதுன்னு‌ மட்டும் பாரு..நோ…இமோஷன்ஸ்….நோ…அட்டாச்மெண்ட்ஸ்…நோ..சென்ட்டிமென்ட்ஸ்….நீ பாட்டுக்கு உன்னோட வேலையை மட்டும் பாத்துட்டு இரு…இமோஷனலா ஆனா உன்னால எந்த வேலையையும் சரியா செய்ய முடியாது….’ என்று தனக்குத்தானே உருப்போட்டுக் கொண்டவள் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள். 

அவளது மூளை அடுத்து எப்படி பணம் சம்பாதிப்பது என்று யோசிக்கத் தொடங்கி விட்டது.

இங்கோ காரை எடுத்துக் கொண்டு வந்த ஆதவ் மோகனாவைக் காணாமல் சுற்றிக் கொண்டிருந்தான். 

அவளது உண்மையான அலைப்பேசி எண்ணைக்  கூட சேமித்துக் கொள்ளவில்லை ஆதவ்‌

‘எங்க போய் தொலைஞ்சா? ச்சை….!இவளை தேடிட்டு நாம நிக்கணுமா? வேற வேலை இல்லை.‌..வேணும்னா ஆட்ட பிடிச்சி வரட்டும் இல்லன்னா நடந்து வரட்டும்… ஒழுங்கான  ஃபோன் நம்பரும் கிடையாது….ஃப்ராடு…ஃப்ராடு..’ ஒன்று அவளை திட்டிக் கொண்டே காரை இயக்கினான்.

வீட்டிற்குள் நுழைந்தவன் காரை பார்க் செய்து விட்டு நேராக மோகனாவின் அறைக்குச் சென்றான்.

கதவை தட்டிவிட்டு நின்றிருந்தான் . 

நான்கைந்து முறை வேகமாக தட்டிய பின்பே கதவைத் திறந்தாள் மோகனா.

செவிப்பொறியை  மாட்டிக் கொண்டு அலட்சியமாக நின்றிருந்தவளை கண்டு கோபமாக வந்தது ஆதவ்விற்கு.

அவளது காதில் இருந்து செவிப்பொறியை பிடுங்கித் தூர எறிந்தவன், “என்ன டி திமிரா? சொல்லிட்டு போகணும்னு தெரியாதா? நீ பாட்டுக்கு கிளம்பி வந்துட்ட…நான் ஒருத்தன் இருக்கேன்னு உனக்கு நியாபகம் இல்லையா உனக்கு? வெயிட் பண்ணணும்னு தெரியாதா உனக்கு? மஹாராணிக்கு கொஞ்ச நேரம் கூட நிக்க முடியாதா?  நீ காணோம்னு நான் தேடித் தவிப்பேன்னு நினைக்குறியா? சரிதான் தொலைஞ்சது கஷ்டம் னு போயிட்டே இருப்பேன்…நீ என்ன பண்ணுனாலும் யாரும் எதுவும் கேக்க மாட்டாங்கன்னு நினைப்பு ….இந்த மாதிரி எகத்தாளம் எல்லாம் என் கிட்ட பண்ணிட்டு இருக்காத…சரியா? “ என்று ஆத்திரத்தில்  அவளது மணிக்கட்டைப் பிடித்து முறுக்கினான்.

தன்னை மதிக்காமல் அவள் பாட்டுக்கு கிளம்பிச் சென்றது அவனுக்கு கோபத்தை வரவழைத்திருந்தது..

“ ஷ்ஷ்…ஆ…கையை வி…விடுங்க.. வலிக்குது…ப்ளீஸ்…விடுங்க..சார்…” என்று கையை முன்னும் பின்னும் அவளசைக்க இன்னுமே அவனது பிடி இறுகியதே ஒழிய தளர்த்திக் கொள்ளவில்லை.

“எதுக்கு என் கிட்ட சொல்லாம கொள்ளாம போன? உன்னை வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு தானே போனேன். அப்பறம் என்னோட பேச்சுக்கு என்ன மரியாதை? எனக்கு என்ன மரியாதை?”என்று மணிக்கட்டை அழுத்தினான்.

“ஆ…விடுங்க…நீங்க என்ன ஆசையா வா வெயிட் பண்ணுன்னு சொல்லிட்டு போனீங்க…? இல்ல தானே..போனா போகுதேன்னு ஏதோ வாழ்க்கை பிச்சை போடுற‌ மாதிரி‌ பேச்சு…இவ்வளவு நாள்ல என்னைக்காவது ஒரு நாள் யாருக்காவது என் கிட்ட உக்காந்து பேசணும்னு தோணிருக்கா?இல்ல …எனக்கு என்ன தேவைங்கறதையாவது யாராவது கேட்டுயிருக்காங்களா? எல்லாரும் அவங்கவங்க வேலைய பாத்துட்டு போறாங்க. உங்க அப்பா நான் வந்து உக்காந்தாலே நியூஸ் பேப்பரை வச்சு மூஞ்சியை மறைச்சிக்குறாரு….உங்க அம்மா அன்னைக்கு ஒருநாள் மட்டும் அதுவும் உங்க அக்காவோட கல்யாணத்துக்கு பர்சேஸ் பண்ண போனதுனால எனக்கும் சில திங்கஸை போனா போகுதேன்னு வாங்கிக் கொடுத்தாங்க…உங்க அக்கா அதுக்கும் மேல..என்னைய என்கவுண்டர் ல சுட்டு தள்ள ஃப்ளான் பண்ணுற மாதிரியே பாத்து பீதியை கிளப்புறாங்க…பசிக்குதுன்னா கூட எடுத்துப் போட்டு சாப்பிட அத்தனை சங்கடமா இருக்கு. அன்னைக்கு வெக்கத்தை விட்டு பசிக்குதுன்னு கேட்டதுக்கு அப்பறம் தான் சாப்பாடு வந்துச்சு…இதுவே நான் தனியா இருந்தா ஒவ்வொரு விஷயத்துக்கும் உங்களை எதிர்பார்த்துட்டு இருக்க வேண்டாம். அன்னைக்கு நாப்கின் வாங்க கூட காசில்லாம நின்னுட்டு இருந்தேன். அதை வாங்குறதுக்குள்ள உங்க கிட்ட நான் பட்ட நாடு…எவ்வளவு பேசுனீங்க…. வேண்டாம் சார்…விட்டுடுங்க. நீ மட்டும் என்ன ஒழுங்கான்னு நீங்க கேக்கலாம்…நான் ஒழுங்கு இல்ல தான் . நான் ஓப்பனாவே சொல்லிடுறேன்…எனக்குன்னு பணத்தேவை இருக்கு. அதனால தான் அன்னைக்கு நியூஸ் ல வந்த விஷயத்தை யூஸ் பண்ணி உங்களை ப்ளாக் மெயில் பண்ணி பணம் வாங்கலாம்னு வந்தேன். ஆனா எதிர்பாராத விதமா உங்க அம்மா கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்க. அதுக்கு நீங்க என்னென்னவோ இஷ்டத்துக்கு கேவலமா பேசிட்டீங்க. போதும்…எனக்கு இந்த கல்யாணம் கண்றாவியெல்லாம் செட் ஆகாது. நான்‌ பாட்டுக்கு ‌என் வழிய பாத்துட்டு போறேன். நீ உங்களுக்கு பிடிச்ச பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி லைஃப்ல செட்டில் ஆகுங்க. என்னை விட்டுடுங்க. .” என்றவளுக்கு தொண்டை கமறுவது போலிருக்க சரி செய்து கொண்டு அவனைப் பார்த்தாள்.

அவன் இரு கைகளையும் கட்டிக் கொண்டு அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். 

அவனது கூரிய பார்வை அவளிதையத்தை ஊடுருவிச்  செல்ல முயன்றது. அவனிடம் தடுமாறத் தொடங்கிய மனதை அடக்கிக் கொண்டு இடத்தை விட்டு நகர்ந்தாள்.

திடீர் திடீரென மாறும் ஆதவ்வின் குணம் ஒன்றும் பிடிபடவில்லை மோகனாவிற்கு. அவனிடமிருந்து தள்ளியிருப்பதே நல்லது என்று முடிவு செய்து விட்டாள்.

நாட்கள் வேகமாக நகர்ந்தது.

கீதாஞ்சலியின் திருமண நாள் நெருங்கிக் கொண்டிருந்தது .

விதேஷ் அவளுக்கு அழைத்தாலும் ஏனோதானோவென்று பேசிவிட்டு வைத்து விடுவாள். ஆனால் விதேஷிடம்  ஒரிரு விஷயங்களை தெளிவுபடுத்தியிருந்தாள்.

ஆதவ் மீண்டும் பணியில் சேர்ந்து விட்டான்.‌

மோகனாவின் பேச்சு சிறிது மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது என்பதை விட மீண்டும் மோகனா தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.‌

அவளது பெயரில் புதிதாக வங்கிக்கணக்கு திறந்து பணத்தை அவள் பெயருக்கு போட்டு வைத்திருந்தான். 

ஏடிஎம் கார்டை அவளிடம் கொடுத்து வைத்தான். காரணம் கேட்டதற்கு ‘செலவுக்கு வைத்துக் கொள்’ என்று கூறி விட்டுச் சென்றான். 

அவ்வப்போது’ மோகனா சரியாக சாப்பிடுகிறாளா?  பேசுகின்றாளா?’ என்று ஜானகியின் கேட்டுத் தெரிந்து கொண்டவன் தாயிடம் ,”அம்மா கொஞ்சம் அவளை பாத்துக்கோங்க…அவளுக்கு என்ன வேணும்னு அப்பப்ப கேட்டுக்கோங்க…வீட்டு வேலைகள் எல்லாத்தையும் சொல்லி கொடுங்க… கீதுக்கா…நீயும் டைம் கிடைக்கும் போது  அவ கூட கொஞ்சம் பேசிப் பழக ட்ரை பண்ணேன்….”என்றவனை ஒரு மார்க்கமாக பார்த்தார்கள் கீதாஞ்சலியும்.

திருமண நாள் நெருங்கிவிட்டது. 

மிகப் பெரிய திருமண மண்டபத்தை பதிவு செய்திருந்தான்‌ ருத்ரன். 

தொழில்முறை நண்பர்கள் அதிகம் என்பதினால் இருப்பதிலேயே மிகவும் பிரம்மாண்டமான திருமண மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தான்‌ ருத்ரன். அன்பு மகள் மற்றும் மகளின் திருமணம் என்பதினால் ஊரே மெச்சும்படியாக மலர் அலங்காரத்தில் தொடங்கி உணவு பதார்த்தங்கள், விருந்தினர்களை அழைத்து வந்து தங்க வைப்பது முதற்கொண்டு அனைத்திலும் பணச்செழுமையுடன்  கூடிய நேர்த்தி இருந்தது. 

ஜானகி தான் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தாள். 

முதல் நாள் காலையிலேயே மண்டபத்திற்கு வந்துவிட்டார்கள் . 

பார்வதியும் பஞ்சாபகேசனும் பேரன் மற்றும் பேத்தியின் திருமணத்தை கண்குளிர பார்த்து மகிழ்வதற்கு ஆவலாக இருந்தனர். 

சில மணி நேர இடைவெளியில் ஆதவ் மோகனாவின் திருமணமும் , விதேஷ் – கீதாஞ்சலியின் திருமணமும் நடை பெறுவதாக இருந்தது.

நொடிக்கொரு தரம் மகளிடம் ஏதாவது கேட்டுக் கொண்டேயிருந்தாள் ஜானகி.

நான்கு சுவற்றிற்குள் நடந்த திருமணம் மோகனாவிற்கு பெரிதாக எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இன்று ஊரறிய நடைப்பெறப் போகும் திருமணம் ஒரு வித பதற்றத்தை கொடுத்தது . எனவே அவளது மனமும் தத்தளித்துக் கொண்டு தான் இருந்தது.

அழகுக்கலை நிபுணர்களைப் பற்றி ஏதோ கேட்க கீதாஞ்சலியிடம் பேச வந்த ஜானகியிடம் , “ம்மா…ப்ளீஸ்…! என் கிட்ட எதுவும் கேக்காத…உனக்கு என்ன தோணுதோ அதைப் பண்ணு…போதும். சும்மா சும்மா எதையாவது கேட்டு என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்காத….” என்று அலுப்புடன் கூறி விட்டு தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த அறையினுள் அமர்ந்திருந்தாள்.

அவளது கையிலிருந்த அலைப்பேசியை வெறித்துப் கொண்டிருந்தாள்.

மிருகேனை அணைத்தபடி அவனது முகத்தை அளவில்லா காதலுடன் பார்த்துக் கொண்டிருப்பது போல இருந்தது அந்தப் புகைப்படம்.

 அவனுடன் இருக்கும் புகைப்படங்களை மருதாணியிட்ட அவளது விரல்கள் தட்டி விட்டுக் கொண்டே இருந்தது. 

சில புகைப்படங்கள் அதீத நெருக்கமாக , சில புகைப்படங்கள் பார்வைகள் மட்டுமே பேசிக் கொள்ளும் விதமாக.

இறுதியாக இருந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு உள்ளே இருந்த  ஏதோ ஒன்று உடைவது போலிருந்தது. 

ஆண்மைத் ததும்பிய அவனது முகம் இன்னும் ஆழமாக அவளுள் இறங்கத் தயாராகி நிற்க ,அதனை தன்னுள் இறங்கி பலகீனமடையச் செய்ய விடாமல் அவளது ஈகோவும் கோபமும் தலை தூக்கி நின்றது.

“மிஸ்டர் மிருகேன்…நாளைக்கு இந்நேரம் நான் மிஸர்ஸ் விதேஷ் ஆகியிருப்பேன்….உங்களால் ஒண்ணும்‌ பண்ண‌ முடியாது…  உங்க வாழ்க்கையில எதுவுமே நிலைக்காது மிஸ்டர். கூடிய சீக்கிரம் நீங்க உயிரா நினைக்குற வஜ்ரவேலயும் தூக்கி உள்ள வச்சி தண்டனை வாங்கிக் குடுக்கல என் பேரு கீதாஞ்சலி இல்ல…”என்று தனக்குத்தானே கூறிக் கொண்டவள் அவனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையெல்லாம் தனது  அலைப்பேசியிலிருந்து அழித்தாள்.

அதே சமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருந்த மிருகேந்திரன் எப்படியோ வெளியே வந்து விட்டான்‌.

 அவனை ஆறத் தழுவி வரவேற்றார் வஜ்ரவேல். 

அவரிடம் சிறிது நேரம் பேசியவன் தனது அலைப்பேசியுடன் அறைக்குள் நுழைந்தான்.

அலைப்பேசியில் தனக்கு வந்திருந்த குறுஞ்செய்திகளையெல்லாம் பார்வையிட்டுக் கொண்டே அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்தான்.

ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தவனின் விழிகள் அந்த எண்ணி லிருந்து வந்த குறுஞ்செய்தியில் நிலைத்தது. 

ஆம்…! அது கீதாஞ்சலியின் எண்ணிலிருந்து அனுப்பப்பட்ட திருமண அழைப்பிதழ். 

அதனைப் பார்த்தவன் நாள்காட்டியை நிமிர்ந்து பார்த்தான். நாளை காலை திருமணம். ஏற்கனவே அவள் மீது அதீத கோபத்தில் இருந்தவனுக்கு அவளது திருமண அழைப்பிதழ் அவன் மனதில்  இன்னும் அதிக நெருப்பை பற்ற வைத்திருந்தது.

 அலைப்பேசியிலிருந்த கேலரிக்குச் சென்றவன் தனியாக இருந்த ஃபோல்டரை திறந்தான். 

அதில் சற்று நேரத்திற்கு முன்பு‌ கீதாஞ்சலியால் அழிக்கப்பட்ட புகைப்படங்கள் அனைத்தும் இருந்தது. 

இறுதியாக இருந்த புகைப்படத்தை விரல்களால் வருடியவன், “ ரொம்பவே என்னை சீண்டிப் பார்த்துட்ட கீது…. அவ்வளவு சீக்கிரம் உன்னை விட்டுடுவேனா? வெயிட் அண்ட் சீ….வந்துட்டே இருக்கேன்…மிஸர்ஸ் கீதாஞ்சலி மிருகேந்திரன். “ என்றவன் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதனை அழகாக திட்டமிட்டுக் கொண்டான்.

பகிர்: Facebook WhatsApp
❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
error: Content is protected !!
Scroll to Top