அடுத்தநாள் காலையில் எழுந்த ஶ்ரீநிதி தன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைப் பார்த்தவள்…அதை ஆசை ஆசையாகப் பிரித்தாள்.பிரித்து அதில் இருந்தவற்றை பார்த்து பதறியடித்து ஓடி தனது தோழியை வேகமாக தன் அறைக்கு இழுத்து வந்தாள்.
கீதா அவளிடமிருந்து தன் கையை இழுத்து கொண்டே “ஏய் லூசு…கையை விடுடி…எதுக்கு என்னை இப்படி இழுத்திட்டு வரே…!!” என்று எரிச்சலோடு கேட்டாள்.
ஶ்ரீயும் அதே எரிச்சலுடன் “இதை முதலில் பாருடி…அதைப் பார்த்தவுடனே நீ…இப்போது விட இன்னும் அதிகமாக டென்ஷன் ஆகுவே…!!” என்றவாறு கையில் அந்த பார்சலை திணித்தாள்.
கீதா வாங்கி அந்த பார்சலைப் பிரித்து அதில் இருந்த பொருளைப் பார்த்து அதை கையில் எடுத்தாள்.அது ஒரு கொலுசு என்று பார்த்துவிட்டு ஶ்ரீயைத் திரும்பி முறைத்தாள்.
“இதைப் பார்த்திட்டு தான்…என்னை இப்படி இழுத்திட்டு வந்தியா கிறுக்கி…?இதில் என்ன இருக்கு…நேற்று மாதிரி யாரவது இதை வச்சிருப்பாங்க…?” என்றாள் கோபமாக.
“நீ தான்டி லூசு…” என்று திட்டிவிட்டு,
நக்கலாக “மேடம்…!!கொஞ்சம்…அதிலே ஒரு பேப்பர் இருக்கு பாரு…!அதை எடுத்து கொஞ்சம் பார்த்துவிட்டு அப்புறம் சொல்லுறியா…??” என்று வினவினாள்.
அந்த பேப்பரில் என்ன இருக்கபோகுது என்று திமிராக…அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு…அதை விரித்தவள் முகம் அப்பட்டமாக அதிர்ச்சியைக் காண்பித்தது…
ஏனெனில் அதில்,
“என் இதயத்தில் குடியிருக்கும்…என் இதயராணி ஶ்ரீநிதிக்கு…என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்”
இப்படிக்கு,
உன் இதயக்கூட்டில் ஒரு இடத்தை எதிர்பார்க்கும் அன்பன்,
ரமேஷ்❤️
என்று அந்த கடிதம் முடிந்திருந்தது.
‘இப்போது இதுக்கு என்ன சொல்லப் போறீங்க மேடம்…??’ என்று கண்களால் ஶ்ரீநிதி வினவினாள்.
கீதா அவளை பாவமாக பார்த்து “சாரிடி…இவன் எதுக்கு இப்போ இந்த கிப்ட் அனுப்பி இருக்கான்…அதுவும் இங்கே பாரேன்…ஹார்ட்டின் போட்டு அம்பெலெல்லாம் விட்டிருக்கான்” என்று வினவினாள்.
ஶ்ரீநிதி அவளை முறைத்தவாறு “அது ரொம்ப இப்போ முக்கியம்…நானே அவனுக்கு எப்படி எனக்கு பிறந்தநாள்னு தெரியும்னு…?யோச்சிட்டு இருக்கேன்…?
“அதுமட்டுமில்லாமல் இந்த கிப்ட்டை இங்கு கொண்டு வந்து வைத்தது யாரு…??” என்று முகத்தை சுருக்கி யோசித்தாள்.
கீதாவும் அதே யோசனையில் தான் இருந்தாள்.அவர்களின் யோசனை கலைப்பதற்கேன்றே ரிஷி “ஹாய் கேர்ள்ஸ்…என்ன பண்ணுரீங்க…??” என்று கேட்டவாறு அந்த இடத்திற்கு வந்தான்.
அவசரமாக இருவரும் அந்த கிப்ட்டை தலையணையின் அடியில் மறைத்து வைத்துவிட்டு அவனிடம் ‘ஹாய்’ என்றனர்.
இருந்தும் கீதாவின் முகத்தில் ஒரு பதட்டம் இருந்தது.அதனைப் பார்த்த ரிஷி அவளைப் பார்த்துவாறே “இஸ் எவ்ரி தீங் ஓகே…??” என்று இருவரையும் கேட்டான்.
ஶ்ரீ கீதா எதுவும் சொதப்புவதற்குள் அவளை முந்திக்கொண்டு “எல்லாம் ஓகே…ஆமாம் நீ என்ன விசயமாக இங்கு வந்தே…அதை முதலில் சொல்லு…??” என்று பேச்சை மாற்றினாள்.
“ஹான்…வந்த விசயத்தை மறந்துட்டேன் பாரு…கிருஷ் அண்ணா நீங்க இரண்டு பேரும் ரெடியானு பார்த்திட்டு வர சொன்னாங்க…?” என்றான்.
“எதுக்கு ரிஷி…?” என்று கேட்டாள் ஶ்ரீநிதி.
ரிஷி தோளைக் குலுக்கி “யாருக்கு தெரியும்…?அண்ணா கேட்க சொன்னாங்க…நான் கேட்டேன் அவ்வளவு தான்!!” என்றான்.
“உனக்கு என்ன தான் தெரியும்…ஹிட்லரிடம் மைண்ட் வாய்ஸ் பேச தெரியும்…நல்லா பிரண்ட்ஸ் கூட சுத்த தெரியும்…எங்களிடம் வாயடிக்க தெரியும்…ஆளு மட்டும் தான்…பனை மரமாட்டாம் வளர்ந்திருக்கே…!…என்று கூறி மூளை இருக்கும் பகுதியைத் தொட்டு காட்டி,
“ஆனால் இங்க ஒண்ணும் இல்லை…வெறும் களிமண்தான் இருக்கு” என்று குறும்புடன் கூறி அங்கிருந்து குளியலறைக்குள் புகுந்தாள்.பின்னே அவன் அவளை துரத்தி துரத்தி அடிக்க வருவனே அதை யார் வாங்குவது என்று குளியலறைக்குள் புகுந்தாள்.
அதைகேட்டு கீதா ஹாஹாஹா வென்று சிரித்து “தொப்பி!தொப்பி!” என்று கூறி அடக்கமுடியாமல் சிரித்தாள்.
அதைப் பார்த்த ரிஷி இன்னும் கடுப்பாகி அவள் பாத்ரூமிற்குள் சென்றுவிட்டாள்…அதனால் போனால் போகட்டும் என்று விடாமல் ரிஷி கதவைத் தட்டியவாறு “ஏய்…!!ஒழுங்கா இப்பவே வந்துவிட்டால் ஒரு அடியோடு தப்பிச்சிடுவே…இல்லை நீ எப்போ என் கையில் சிக்கினாலும் அவ்வளவு தான்…ஒழுங்கா வெளியே வா ஶ்ரீ…!நீ வரும் வரை நான் இங்கே தான் இருப்பேன்” என்று இன்னும் பலமாக தட்டினான்.
ஶ்ரீ உள்ளிருந்து கூலாக “ஒண்ணும் பிரச்சினையில்லைடா…நான்வரும் வரை நீ இங்கே இரு…கிருஷ் அத்தான் வந்து…அவங்க ரெடியானு பார்த்துட்டு வர சொன்ன…நீ இங்கு என்ன பண்ணிட்டு இருக்கே…?என்று கேட்டு உன்னை திட்ட போகிறார்…!!” என்றவுடன்,
“ஐய்யையோ ஆமாம்…என்றுவிட்டு உன்னை இரு…அப்புறம் பார்த்து கொள்கிறேன் என்று மனதில் கறுவிவிட்டு,
ஶ்ரீயிடம் “ஆமாம் அண்ணா நீங்க ரெடியானு கேட்டால்…நான் என்ன சொல்லறது…??” என்று எரிச்சலுடன் வினவினான்.
அதற்கு ஶ்ரீ “இன்னும் பத்து நிமிடத்தில் ரெடியாகிடுவோம் என்று சொல்லு” என்று அவனை அனுப்பினான்.
இந்த பக்கம் கீதா இன்னும் சிரிப்பதை கண்ட ரிஷி அவளிடம் தன் கோபத்தைக் காட்டமுடியாமல்…இதற்கு காரணமானவளை நன்றாக மனதில் வைதுவிட்டு கிருஷிடம் சென்று அவன் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லிவிட்டு அவன் அறைக்கு சென்றான்.
ஶ்ரீநிதி சொன்ன மாதிரி பத்து நிமிடத்தில் கீழிறங்கி தன் தோழியோடு வந்தாள்.அந்த கிப்ட்டை எடுத்து அவள் அலமாரியில் வைத்துப் பூட்டிவிட்டு வந்தாள்.
கிருஷ் வரவேற்பறையின் சோபாவில் உட்கார்ந்தவாறு தன் பெரியப்பாவுடன் பேசி கொண்டிருந்தான்.
ஶ்ரீயும் கீதாவும் அவர்களை நெருங்கியவுடன் கிருஷ் வேண்டுமென்றே ஶ்ரீயை விட்டுவிட்டு கீதாவைப் பார்த்து “போய் இரண்டு பேரும் சாப்பிட்டு வாங்க…இன்னைக்கு என் கூடவே ஆபிஸ் வந்திடுங்க…நைட் ரொம்ப லேட்டாகுது…அதனால் இரண்டு பேரும் தனியாக போக வேண்டாம்…என்கூடவே வந்திடுங்க…கீதா நீ இந்த பிராஜக்ட் முடியும் வரை இங்கே இரும்மா…நைட் 10 மணிக்கு போய் ஹாஸ்டல் கதவை தட்ட வேண்டாம்” என்று கூறினான்.
கீதா தயக்கமாக “பரவாயில்லை அண்ணா…நான் போயிடுவேன்…ஒண்ணும் பிரச்சினையில்லை அண்ணா…!!” என்றாள்.
“உன் அப்பா எங்களை நம்பி தான்ம்மா இங்கே விட்டிருக்காங்க…உன் பாதுகாப்பு ரொம்ப முக்கியம்…அதனால் நான் சொன்னதை செய்ம்மா… என்று உறுதியாக அவளிடம் கூறிவிட்டு,
ஶ்ரீயிடம் திரும்பி “ஶ்ரீ நான் மட்டுமே பேசிட்டு இருக்கேன்…நீ ஏன் உன் பிரண்ட்டிடம் எதுவும் சொல்லாமல் அப்படியே நிக்கிறே…??” என்று அவளை அதட்டினான்.
ஶ்ரீ பயத்துடன் “சொல்லுகிறேன் அத்தான்…” என்று விட்டு கீதாவிடம் “இங்கே இருடி…அத்தான் அவ்வளவு தூரம் சொல்லுறாங்க தானே…” என்று பேசி பேசியே அவளை ஒத்துக்கொள்ள செய்துவிட்டு சாப்பிட்டுவிட்டு கிருஷுடன் காரில் கிளம்பினர்கள்.
ரிஷியையும் அதே காரில் ஏற்றிக்கொண்டு நால்வரும் ஒரே காரில் பயணித்தனர்.
ரிஷி ஶ்ரீயிடம் சண்டைப் போட்டதைக் கூட மறந்துவிட்டு லொட லொடவென்று பேசிக் கொண்டே வந்தான்.அவனுடன் கீதாவும் ஶ்ரீயும் அவனுக்கு ஒன்றும் சலித்தவர்கள் இல்லை என்பது போல் பேசிக்கொண்டே வந்தார்கள்.கிருஷ் மட்டும் அமைதியாக வந்தான்.
ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களின் முக்கை தாங்கமுடியாமல் கிருஷ் அவர்களை அமைதிப்படுத்த ஒலிநாடவை ஒளிக்க செய்து அதில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையைக் கசியவிட்டான்.
எடுத்தவுடன் முதல் பாடலாக,
“என்னவளே அடி என்னவளே” என்ற பாடல் ஒலித்தது…அதைக் கேட்டவுடன் மற்ற மூவரும் பேசுவதை நிறுத்திவிட்டு அந்த பாடலை ரசிக்க ஆரம்பித்தனர்.
இந்த பாடல் இசைத்தவுடன் கிருஷ் ரோட்டில் ஒரு கண் வைத்து கொண்டே,கண்ணாடியின் வழியாக பின்னாடி உட்கார்ந்திருக்கும் ஶ்ரீயை தான் பார்த்தான்.அவளும் அதேபோல் இவனை தான் பார்த்து கொண்டிருந்தாள்.இருவர் கண்ணும் ஒன்றோடு ஒன்று கலந்தது.அப்படியே அந்த பாடலின் ஒவ்வொரு வரியும் தங்களுக்காகவே வடித்ததுபோல் இருவரும் அதில் மூழ்கி ரசித்து கொண்டிருந்தனர்.
“என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்
வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
வசப்படவில்லையடி
வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
உருலுதடி
காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
நிமிஷமும் வருஷமடி
கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
தோன்றுதடி – இது
சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
வார்த்தையில் உள்ளதடி…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
கண்ணடிப்பேன்
கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
மீன் பிடிப்பேன்
வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
சொடுக்கெடுப்பேன்
வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
அனுப்பிவைப்பேன் – என்
காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்” என்று பாடல் முடியவும் ஆபிஸ் வருவதற்கும் சரியாக இருந்தது.
ரிஷி இதனையெல்லாம் கவனிக்காமல் பாடலை ரசித்து கொண்டே…தன் செல்போனை நோண்டி கொண்டிருந்தான்.ஆனால் கீதா மட்டும் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு ‘அய்யோ இதுங்க ரொமேன்ஸ் வர வர தாங்க முடியாலைடா சாமி…அதுவும் இந்த கிருஷ் அண்ணா வீட்டிலே இருக்கும் போது ஶ்ரீயை அப்படி அதட்டி மிரட்டி பேசனாங்க…ஆனால் இங்கே அப்படியே தலைகீழாக இருக்கு… ஆனாலும் ஒரு சின்ன பொண்ணு…இங்க இருக்காளே…அவள் முன்னாடி இப்படி பண்ணறது தப்புனு தோணுதானு பாரு…இரண்டு பேருக்கும் விவஸ்தையே இல்லை’ என்றவாறு மானசீகமாக தலையில் அடித்து கொண்டு,
ஶ்ரீயை மனதில் இருடி உனக்கு இருக்கு…இன்றைக்கு நைட்…என் கூட தானே இருப்பே…அப்போ வச்சிக்கிறேன் கச்சேரி…என்று கறுவிகொண்டிருக்கும் போதே ஆபிஸ் வரவும்…அப்பாடி ஆபிஸ் வந்திடுச்சி…இவங்களிடம் இருந்து நான் தப்பித்தேன் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டாள்.
கார் நின்றவுடன் இருவரும் தங்களின் பார்வையை மாற்றிவிட்டு சகஜமாக இருக்க முயன்று அதில் வெற்றியும் கண்டனர்.
அதன்பிறகு அலுலகத்திற்குள் நுழைந்து…அவரவரின் வேலைகளை மற்ற எதைப் பற்றியும் நினைக்காமல் செவ்வனே செய்தனர்.
அதேநேரம் வீட்டில் குந்தவை தன் முதல் திட்டத்தை செயல்படுத்த எண்ணி சில பல வேலைகளைச் செய்துவிட்டு ஶ்ரீநிதிக்காகக் காத்துகொண்டிருந்தார்.
அன்று பார்த்து ஶ்ரீநிதி இரவு 9 மணிக்கு மேல் தான் வீட்டிற்கு வந்தாள்.வந்தவளை அவள் அறைக்கு கூட செல்லவிடாமல் “ஶ்ரீநிதி இங்கே வாம்மா…!” என்று அவர் அறையில் இருந்தாவாறே அழைத்தார்.
ஶ்ரீநிதி முதன்முதலாக தன்னை வாம்மா என்று அழைத்ததில் மனமுருகி கீதாவை உட்கார்ந்து சாப்படுமாறு பணித்துவிட்டு தன் அப்பாயியை ஒரு மலர்ச்சியுடன் பார்க்க போனாள்.
அவர் முகம் ஏதோ யோசனையில் இருப்பதைப் பார்த்த ஶ்ரீ,அவர் அறையின் உட்சென்று அங்கே கட்டிலில் அமர்ந்திருக்கும் தன் அப்பாயியின் அருகில் சென்று நின்று “என்ன விசயம் அப்பாயி…எதுக்கு கூப்பிட்டிங்க…??ஏதாவது வேணுமா…??உங்க முகமே சரியில்லையே…ஏதாவது உங்களுக்கு உடம்பு சரியில்லையா…??நான் வேண்டுமானால் கால் கை அமுக்கி விடவா அப்பாயி…ரொம்ப முடியலைனா…ஆஸ்பத்திரி வேண்டுமானால் போகலாமா…??இல்லை அப்பாவைக் கூப்பிடட்டுமா…எதாவது சொல்லுங்கள் அப்பாயி…எனக்கு பயமாக இருக்கு??” என்று படப்படவென அனைத்து கேள்விகளும் அவருக்கு உடம்பு முடியவில்லையோ என்று நினைத்து ஒரு வித பதட்டத்துடன் கேட்டாள்.
இவளின் பாசத்தைப் பார்த்து குந்தவை நெகிழ்ந்தது என்பதோ உண்மை…ஆனால் அடுத்த நிமிடம் தன் செல்லப்பேத்தி மீராவை நினைத்து தன் மனதை கடுமையாக்கியபடி சிரித்த முகத்துடன் அவளிடம் பேச ஆரம்பித்துவிட்டு அவளிடம் ஒரு கவரைக் கொடுத்தார்.
அவர் பேச ஆரம்பிக்கும் போது இருந்த மலர்ச்சி முடித்தப்போது இல்லை…இருந்தும் அதை வெளியே காட்டி கொள்ளாமல் புன்னகையுடன் “சரி அப்பாயி…அப்பாவிடம் பேசி சம்மதிக்க வேண்டியது என் பொறுப்பு” என்றுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியேறினாள்.
அவள் வெளியேறியவுடன் தன் முதல் திட்டம் வெற்றியடைந்தினால் அவர் முகத்தில் மலர்ச்சி கூடியது.அடுத்த தன் திட்டத்தை எப்படி எங்கிருந்து ஆரம்பிக்கலாம் என்று யோசிக்க ஆரம்பித்திருந்தார்.