அத்தியாயம் 16

மாலையில் வீட்டினை சாதாரணமாக அலங்கரித்து ஒரு சின்ன பார்ட்டி மாதிரி செய்தனர்.

காலையில் எவ்வளவுக்கு எவ்வளவு பாரம்பரிய உடை உடுத்தியிருந்தளோ மாலையில் அதற்கு நேரெதிராக நவீன உடையை அணிந்திருந்தாள் ஶ்ரீநிதி.

இளஞ்சிவப்பு நிற கலரில் பொன்னிற ஜமக்கியால் டிசைன் செய்யப்பட்ட லேஹன்கா சோளி அணிந்திருந்தாள்.இதுவும் அவள் நிறத்திற்கு பாந்தமாக பொருந்தியது.

யசோதா தன் பேத்தியின் அழகை கண்டு பூரித்து “இத்தனை அழகும் யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ…?” என்று கூறி அவளுக்கு தீர்ஷ்டி கழித்தார்.

அவர் அப்படி கூறியவுடன் அவள் கண்ணுக்கு முன்னால் தோன்றிய முகம் கிருஷ்.உடனே அவள் முகம் சிவந்தது.

அவளின் சிவந்த முகத்தைப் பார்த்த யசோதா இன்னும் பூரித்து அவளைக் கட்டியணைத்து நெற்றியில் முத்தமிட்டார்.

அதன்பிறகு ஒரு ஆறு மணி அளவில் வீட்டு ஆட்களோடு சேர்ந்து கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடினாள்.

அவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எண்ணி அவளது தாய் ஜானகி தன் இனிமையான குரலில்,

“தேவதை வம்சம் நீயோ,
தேனிலா அம்சம் நீயோ,
பூமிக்கு ஊர்வலம் வந்த வானிவில் நீயோ,

பூக்களின் வாசம் நீயோ,
பூங்குயில் பாஷை நீயோ,
சூரியன் போனதும் அங்கே வருவதும் நீயோ…”என்ற பாடலைப் பாடினார்.

அவர் பாடி முடித்தவுடன் “தேங்கஸ் அம்மா…” என்று அவரைக் கட்டி அணைத்து முத்தமிட்டாள்.

இப்படியாக அனைவரும் ஶ்ரீயின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி அவளை மகிழ்வித்தனர்.

இரவு பதினொரு மணிக்கு கிருஷ் தன் படுக்கையில் படுத்திருந்தவாறு அந்த புகைப்படத்தை கையில் வைத்து மீண்டும் பழைய நினைவுகளில் ஆழ்ந்தான்.

அவன் பெரியம்மா “கிருஷ் அவளின் நெற்றியில் பொட்டு வைத்து மாலைப்போடுப்பா…” என்றவுடன்,

எரிச்சலுடன் பொட்டு வைக்க கை உயர்த்தி அவளைப் பார்த்தவன் அதிர்ந்தான்.

ஏனெனில் ஒரு வருடத்திற்கு முன் பார்த்தவள் நன்றாக குண்டாகவும், கன்னங்கள் இரண்டு சப்பியாகவும் ரொம்ப சின்ன பொண்ணாகவும், பார்த்தவுடன் அவளைக் கன்னத்தைக் கடித்து திண்ண வேண்டும் போல் இருப்பவள்…இப்போது கொஞ்சம் பெரிய பொண்ணாகவும் கொஞ்சம் சப்பியாகவும்…பருவம் அடைந்த மங்கையாரின் சாயலுடன் மாறி இருந்தாள்.ஆனால் அவளுடைய அழகு மட்டும் அப்படியே இருந்தது.ஒரு வருடத்தில் இவ்வளவு மாற்றமா என்றதுமட்டுமல்லாமல், அவளின் அலங்காரத்தைப் பார்த்து ஒரு நிமிடம் அவனே அசந்துவிட்டான்.

அப்போது அவன் பெரியம்மா “கிருஷ் பொட்டு வைப்பா…என்ன யோசிச்சிட்டு இருக்கே…??” என்று கேட்டவுடன் அவசரமாக அவள் நெற்றியில் பொட்டு வைத்து மாலைப் போட்டு அவர்கள் சொன்னதைச் செய்துவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.

இவ்வளவு செய்து முடிக்கும் வரைக்கும் அவள் இவனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அது அவனுக்கு ஏமாற்றமாக தான் இருந்தது.

இருப்பினும் கிருஷ் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தானே ஒழிய ஏன் என்றே தெரியாமல் அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

அவளை வீட்டின் மூளையில் உட்கார வைத்து உலக்கை ஒன்றைப் போட்டுவிட்டு குடிசை கட்ட சொன்னார்கள்.அந்த முறையையும் கிருஷை செய்ய சொன்னார்கள்.

இந்த முறை எரிச்சலெல்லாம் இல்லை…விருப்பத்துடனே இதையெல்லாம் செய்தான்.குடிசைக் கட்டி முடிப்பதற்குள்…அவளை ஓர் ஆயிரம் முறை…அந்த ஓட்டைகளின் வழியே…அவளின் அழகைப் பார்த்து ரசித்து கொண்டிருந்தான்…குடிசை மாதிரி அமைத்து அதில் அவளை உட்கார வைத்துவிட்டு “நீ போப்பா” என்றவுடன்,

கிருஷ் அவள் ஏதாவது தன்னை நிமிர்ந்து பார்ப்பாளா என்று பார்த்தான்.அவள் தலையை நிமிர்த்தவே இல்லை…

கிருஷ் எரிச்சலுடன் “போடி குண்டச்சி…நீ பார்த்தால் என்ன பார்க்கவிட்டால் என்ன…?மனசிலே பேரழகினு நினைப்பு” என்று நினைத்து தன் தாத்தாவிடம் பேச்சைத் தொடங்கினான்.

இருந்தும் பார்வை அவனை அறியாமல் அங்கே தான் சென்றது… இப்படியே சிறிதுநேரம் சென்றது…இவனைக் காக்க வைத்தது போதும் என்று நினைத்தவள் போல் அவனை அந்த ஓலைகளின் ஓட்டை வழியே பார்த்தாள்…அதைப்பார்த்து அந்த மான்விழி கண்களின் அழகில் மயங்கியவனுக்கு… அவ்வளவு தான் ஜிவ்வென்று வானத்தில் பறப்பது போல் தோன்றியது…உடனே அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டான்… அதனைப் பார்த்தவள் பயத்தில் மிரண்டாள்…

அதனைப் பார்த்த கிருஷ் ‘கிருஷ்..!கொஞ்சம் அடக்கிவாசிடா…!அவள் சின்ன பொண்ணு பயந்திடுவாள்…!’ என்று தனக்கு தானே கூறி…மனதை அடக்கினான்.

அதன்பிறகு அவளைப் பார்ப்பதற்காகவே ஆறு மாதத்திற்கு ஒரு முறை அமெரிக்காவிலிருந்து வந்துவிடுவான்.அப்படி வரும்போது தான் ஒரு முறை அவள் தவறவிட்ட கொலுசை எடுத்து எதற்கேன்றே தெரியாமல் பத்திரப்படுத்தினான்.

அந்த வயதில் அவனுக்கு இது காதல் என்ற உணர்வு எல்லாம் இல்லை…ஏதோ அவளைப் பார்த்தால் நன்றாக இருக்கிறது…வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்கிறது என்ற ஒரு இனகவர்ச்சி மட்டுமே இருந்தது…ஆனால் வயதாக வயதாக இது எப்படி காதலாக மாறியது என்பது அவனுக்குமே புரியாத புதிர்…இப்படி தன்னை அந்த வயதிலே கவர்ந்த தன் குண்டச்சியை நினைத்து பார்த்து அவள் புகைப்படத்திற்கு முத்தம் ஒன்றைக் கொடுத்தான்.இப்போதும் அவள் மிரண்ட விழிகள் அவனுக்கு ஞாபகத்தில் இருந்தது.அந்த மிரண்ட விழிகளைப் பார்ப்பதற்காகவே அடிக்கடி அவளை அதட்டி கொண்டே இருந்தான்.

“குண்டச்சி…!என்ன இருந்தாலும் எனக்கு இப்போது இருக்கும்…இந்த ஶ்ரீயை விட…அந்த சின்ன வயதிலே…என் மனதை கவர்ந்த அந்த குண்டச்சி தான் பிடிச்சிருக்கு…!!” என்றவாறு மறுபடியும் அவளின் புகைப்படத்திற்கு முத்தம் ஒன்றை கொடுத்துவிட்டு,

“ஆனாலும் நீ என்ன ரொம்ப சோதிக்கிறடி…ஒரு நாள் இல்லனா…ஒரு நாள் நான் எல்லை மீறப் போறேன் பாரு…அப்புறம் என்னை குத்தம் சொல்லி ஒண்ணுமாகாது” என்று அவளை மிரட்டிவிட்டு அவளின் போட்டாவைப் பார்த்து போலியாக முறைத்தான்.அது ஒரு புகைப்படம் என்பதை கூட மறந்து ஏதோ நேரில் அவளிடம் உரையாடுவது போலும்,ஒரு 28 வயது வாலிபன் என்பதை கூட மறந்தும் அவளிடம் உரையாடி கொண்டிருந்தான்.

உடனே கிருஷ் முகத்தில் சிரிப்புடன் “நீயும் என்னை காதலிக்கிறேடி…அது உன் கண்ணில் தெரியுதுடி குண்டச்சி…எத்தனை வருடம் உனக்காக நான் காத்திருந்தேன்…இப்போது தான்…நான் உனக்கு கண்ணுக்கு தெரிஞ்சனா குண்டச்சி…??இன்னும் கொஞ்ச நாள் தான்…அதுவரை பொறுமையாக தான் இருக்கணும்” என்று கூறி பெருமூச்சுவிட்டு அந்த போட்டாவைப் பத்திரப்படுத்திவிட்டு தன் கண்களை மூடி தூங்கினான்.

அடுத்தநாள் காலையில் எழுந்த ஶ்ரீ தன் மேசையின் மேல் ஒரு கவர் இருப்பதைப் பார்த்தவள் அதை ஆசையாகப் பிரித்தாள்.பிரித்து அதில் இருந்தவற்றை பார்த்து பதறியடித்து ஓடி தனது தோழியின் முன்னால் நின்று இருந்தாள்.

குந்தவை தனது முதல் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதன் விளைவாக…ஶ்ரீநிதி இந்த வீட்டை விட்டு பிரிய வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டாள்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top