அத்தியாயம் 15

இன்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் இன்றைய விடுமுறை தினம் ரிஷியுடையது…ஆனால் அவன் இன்றைய தினத்தை ஶ்ரீநிதிக்கு பிறந்தநாள் என்பதால்…அவள் விருப்பத்திற்கு விட்டு கொடுத்தான்.

ஶ்ரீநிதி அந்த தினத்திற்கான திட்டத்தை வகுக்கும் முடிவைத் தாத்தாவிடமே விட்டாள்.அவர் ஒருமனதாக எல்லோரும் கோயிலுக்கு சென்றுவிட்டு…மாலையில் வீட்டிலே ஒரு சின்ன பார்ட்டி மாதிரி வைக்கலாம் என்று தன் திட்டத்தைக் கூறினார்.

அதன்படி ஶ்ரீநிதி அந்த புடவையிலே கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து அனைவருடன் பிரகாரத்தில் உட்கார்ந்தாள்.எல்லாரும் அமர்ந்து ரொம்ப நேரம் பேசி கொண்டிருக்கவும் போர் அடித்து…ஶ்ரீ அவர்களிடம் நான் சும்மா இந்த பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வருகிறேன் என்று கூறி எழுந்தாள்.

அவளுடன் வாணி,கீதா ரிஷி,அப்புறம் தயாவின் குழந்தைகள் எல்லோரும் வரோம் என்றவுடன் எல்லோரையும் அழைத்து கொண்டு புறப்பட்டு பிரகாரத்தைச் சுற்றி வரும் போது…அங்கே ஒரு கிளி ஜோசியர் இருப்பதைப் பார்த்த ஶ்ரீ முகத்தைச் சுருக்கி “அவரிடம் ஜோசியம் பார்க்கலாம்ப்பா பிளீஸ்…!!” என்று ரிஷியிடம் கெஞ்சினாள்.

ரிஷியும் வேற வழியில்லாமல் சரி என்று தலையாட்டினான்.ஶ்ரீநிதி சின்ன பிள்ளைகளின் துள்ளலுடன் அவரிடம் சென்று அவருக்கு நேராக உட்கார்ந்தாள்.

கீதாவும் வாணியும் ‘இவள் என்ன சின்ன குழந்தையா…?’ என்று பார்த்து கொண்டிருந்தனர்.

தயாவின் குழந்தைகள் இருவரும் ‘அய்…கிளி…கிளி…’ என்று தனது மழலையில் ஆர்பரித்து அந்த கூண்டிற்கு அருகில்போய் சமர்த்தாக உட்கார்ந்தனர்.

ஜோசியர் இவளைப் பார்த்து “உன் பேரு என்னம்மா…??” என்று கேட்டார்.

“ஶ்ரீநிதி”

அவர் கிளியின் கூண்டை திறந்தவாறு “ஶ்ரீநிதி…என்ற பேருக்கு ஒரு சீட்டு எடு மீனு…” என்று கிளியிடம் கூறினார்.

ரிஷி அருகில் இருக்கும் வாணியிடம் நக்கலாக “இங்க பாரு வாணி…கிளிக்கு மீனுனு பெயர் வைச்சிருக்காங்க இல்லை…!!” என்று கூறி சிரித்தவனை…

எந்தவொரு உணர்ச்சியுமில்லாமல் பார்த்த வாணி “இது ஒண்ணும் அவ்வளவு பெரிய காமெடியில்லை…!!” என்று கூறினாள்.

அதற்குள் அந்த கிளியும் சமர்த்தாக வெளியே வந்து ஒரு ஒரு சீட்டாக எடுத்து போட்டு கடைசியாக ஒரு சீட்டை எடுத்து அவரிடம் தந்தது.

அவர் அந்த சீட்டை பிரித்தார்.ஶ்ரீ ஆர்வமாக அவர் என்ன சொல்ல போகிறார் என்று அவர் முகத்தையே பார்த்தாள்.

மற்ற மூவரும் அவர் என்ன சொல்ல போகிறார் என்று உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தனர்.

அதில் இருந்தது ஒரு கிருஷ்ணர் படம்…கிளி ஜோசியர் “உனக்கு கிருஷ்ணர் படம் வந்திருக்கும்மா…நீ ரொம்ப ராசியான பொண்ணும்மா…நீ தொட்டது எல்லாம் துலங்கும்…நீ இருக்கும் இடத்தில் எப்போதுமே மகிழ்ச்சி நிறைந்து இருக்கும் தாயி…நீ எதையுமே மறந்து மன்னிக்ககூடிய இரக்க குணம் கொண்டவள்…விட்டு கொடுக்கும் மனப்பான்மை கொண்டவள்…உனக்கு அந்த கிருஷ்ணனே மணமகனாக வருவான் தாயி…பெயருக்கு தான் கிருஷ்ணனே தவிர…ஆனால் குணத்தில் ராமன்…அவன் உன்னை தேடி கூடிய சீக்கிரம் வந்திடுவான்…!! என்று சொல்லி கொண்டிருக்கும்போதே கிருஷ் இவர்களைத் தேடி இங்கே வந்துகொண்டிருந்தான்.

ஜோசியர் “ஆனால் தாயி… என்று நிறுத்திவிட்டு அவளின் முகத்தை ஒரு வருத்தத்துடன் பார்த்துவிட்டு “இனிமே உன் வாழ்க்கையில் நிறைய பிரச்சினை வரப் போகுது தாயி…உன்னை சுத்தி இருக்கிறவர்களால் தான் பிரச்சினை வர போகுது… கொஞ்சம் ஜாக்கிரதையாக இரும்மா” என்று சொல்லவும் கிருஷ் அந்த இடத்திற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது.

கிருஷ் ரிஷியைப் பார்த்து முறைப்புடன் “இது யார் வேலை…?” என்று கேட்டான்.

ரிஷி அவசரமாக ஶ்ரீயைக் கைகாட்டினான்.கிருஷ் திரும்பி ஶ்ரீயை முறைத்துவிட்டு அவள் முகம் வாடி இருப்பதைப் பார்த்து “ஶ்ரீநிதி…!முதலில் நீ அங்கிருந்து எழுந்திருச்சு இங்கே வா…!!” என்று அதட்டினான்.

ஶ்ரீ அவன் அதட்டியதால் அவசரமாக எழுந்து அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

குழந்தைகளைத் தூக்கி வாணி மற்றும் கீதாவிடம் கொடுத்து நீங்க இரண்டு பேரும் முன்னாடி போயிட்டு இருங்க,நாங்க வரோம் என்றுவிட்டு ரிஷியிடம் திரும்பி “நீ இவருக்கு காசு கொடுத்துட்டு அவங்களை எல்லாம் பார்த்து கூட்டிட்டு போ…!!உன்னை அப்புறம் பார்த்துகிறேன்” என்றான் கோபமாக.

‘ஐய்யையோ நான் மாட்டினேன் எல்லாம் இந்த ஶ்ரீயால் வருது… அவளுக்கு வேறே இன்னைக்கு பிறந்தநாள்…அவளை எதுவும் திட்டவும் முடியாது’ என்று அவளை பாவமாக பார்த்துவிட்டு சென்றான்.

ஶ்ரீ இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை.அவள் மனது அவர் கூறியதையே சுற்றி சுற்றி வந்தது.

அவர்கள் சென்ற பிறகு கிருஷ் ஶ்ரீயைத் திட்டுவதற்காக அவள் பக்கம் திரும்பியவன்,அவள் முகம் வாடி இருப்பதைப் பார்த்து தன் கோப எண்ணத்தை மாற்றி ஶ்ரீநிதி என்று மெதுவாக அழைத்தான்.

கிருஷ் அவளை அழைத்தது துளிக்கூட…ஶ்ரீயின் காதில் விழவே இல்லை என்பதை அறிந்து அவள் கையைப் பிடித்து தன் பக்கம் திருப்பி ஶ்ரீநிதி என்று முறுபடியும் அழைத்தான்.

அதில் சுயநினைவிற்கு வந்து “என்ன அத்தான்…??” என்று தூக்கத்திலிருந்து விழிப்பவள் போல் கேட்டாள்.

“இங்க பாரு ஶ்ரீ…அவர் சொல்லறதுயெல்லாம் நீ மனசுல வைச்சிக்காதே புரியுதா…??அவங்கயெல்லாம் காசுக்காக இப்படித்தான் சொல்லுவாங்க…அப்படியே அவங்க சொல்லறதுயெல்லாம் நடத்திடுமா என்ன…??ஒரு கிளி சீட்டு எடுத்து போட்டு அது சொல்லறதுயெல்லாம் நடக்கும்னா…அப்புறம் யாருக்கும் கடவுளே தேவையில்லை…இந்த கிளியையே கடவுளாக கூம்பிடலாமே…யாராலும் யாருடைய எதிர்காலத்தையும் கணிச்சி சொல்ல முடியாது…என்ன நடக்கணும்னு இருக்கோ…அதுதான் நடக்கும்…நாம் என்ன தான்…மாற்ற நினைத்தாலும் எதையுமே மாற்ற முடியாது” என்று நிதர்சனத்தை எடுத்துரைத்தான்.

அப்போதும் அவள் சோகமாக இருப்பதைப் பார்த்து “ஶ்ரீ என் முகத்தைப் பாரு…என்று அவளை தன் முகத்தைப் பார்க்க செய்து,

“அப்படியே உனக்கு எதுவும் பிரச்சினை வந்தால் நான் உன் கூட இருக்கிறேன்” என்று ஆறுதல் கூறி பிடித்திருந்த கையை விடாமல் அழுத்தி கொடுத்தான்.

அவளுக்கு வரும் பிரச்சினைக்கு தானே காரணமாக போவதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

அவன் கூறிய ஆறுதலைக் கேட்டு அவள் முகத்தில் நம்பிக்கை ஒளி படர்ந்தது…அதன்பிறகு ஶ்ரீ சிறு புன்னகையுடன் “தேங்கஸ் அத்தான்” என்றாள் உண்மையான மலர்ச்சியுடன்.

அந்த மலர்ச்சி அவனையும் தோற்றிகொள்ள “சரி வா” என்று புன்னகையுடன் அழைத்து சென்றான்.

கோவில் தூணின் ஒரமாக நடக்கும் போது ஶ்ரீ கிருஷின் முகத்தை பார்ப்பதும் பின்பு தலைக்குனிவதுமாக இருப்பதைப் பார்த்த கிருஷ் அடுத்தமுறை அவள் தன்னை நிமிர்ந்து பார்க்கும் போது என்ன என்று ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.

அதில் தடுமாறி “அது…வந்து…வந்த…அத்தான்…” என்று அவள் திரும்பவும் பழைய புராணத்தை ஆரம்பிக்கவும்,

கிருஷ் அவசரமாக “நீ அப்புறம் வந்து வந்து போ…இப்போ சொல்ல வந்ததை சீக்கிரம் சொல்லி முடி…!!” என்று குறும்புடன் கூறினான்.

கிருஷ் அத்தான் திட்டறாங்களோ என்று பயந்து அவனைப் பார்த்தவள் அவன் முகத்தில் கோபம் இல்லை என்றவுடன் நிம்மதியடைந்து தான் அணிந்திருந்த உடையைக் கண்களால் காட்டி “அத்தான்…இந்த புடவை,இந்த நகையெல்லாம் நீங்களா வாங்கிக் கொடுத்தீங்க…??” என்று ஒரு வழியாக கேட்டுவிட்டாள்.

கிருஷ் அதற்கு அவளை நக்கலாக பார்த்து “அதை ஒரு வழியாக கண்டுப்பிடிச்சி தான் கேட்கிறியோ என்று நினைத்தால் இப்போதும் ஒரு சந்தேகத்தோடு தான் கேட்கிறே…??நீ ரொம்ப புத்திசாலினு நினைச்சினே…??நீங்க அப்படியெல்லாம் தப்பா நினைக்காக்கூடாது அத்தான்…நானே ஒரு மரமண்டை…என்று சொல்லாமல் சொல்லிட்டே…??” என்று அவள் தலையில் மெதுவாக தட்டி சிரித்தான்.

“ச்சு…போங்க அத்தான்…” என்று சிணுங்கிவிட்டு வழக்கம்போல் அவன் சிரிக்கும்போது விழும் கன்னக்குழி அழகை ரசித்தாள்.அவள் சிணுங்கலைப் பார்த்து கிருஷ் தான் தடுமாறி,அவனின் இதயம் வேக வேகமாகத் துடித்தது.

ஆனால் மனதிற்குள் அய்யோ இவள் சும்மாவே இருக்க மாட்டாள் போலவே…எப்போ பார்த்தாலும் மனுசனை சாவடிக்கிறாளே…கிருஷ் இதுக்குயெல்லாம் உன் மனசைத் தளரவிடக் கூடாது என்று அவனுக்கு அவனே கூறி கொண்டு அவளைப் பார்த்து “நான் தான் வாங்கினேன்… ஆனால் இதெல்லாம் உனக்கு தாத்தா கொடுத்த கிப்ட்…அவர் உனக்கு தெரிய வேண்டாம் என்று சொன்னார்…ஆனால் நீ என்னை கேட்டதினால் சொல்ல வேண்டியதாகி போய்விட்டது…இது உனக்கு பிடிச்சிருக்கா…??” என்று வாய் கூசாமல் பொய் சொல்லி கேட்டான்.

இவன் வாங்கவில்லை என்றவுடன் ஶ்ரீக்கு சப்பென்றானது.இருந்தாலும் தன் தாத்தாவை மனதில் வைத்து “நல்லா இருக்கு அத்தான்” என்றாள்.

“சரி சரி வா…எல்லாரும் ரொம்ப நேரமாக நமக்கு காத்துகொண்டு இருப்பாங்க” என்று கூறி அவளை அழைத்து சென்றான்.

கொஞ்சம் தூரம் நடந்தப்பிறகு தான் இருவரும் ஏதோ ஒரு வித்தியாசத்தை உணர்ந்து…அவசரமாக ஒரே நேரத்தில் கீழே குனிந்து பார்த்தனர்.குனிந்து பார்த்தே இருவரும் திகைத்தனர்.ஏனெனில் கிருஷ் முன்னாடி ஆறுதல் சொல்ல பிடித்த ஶ்ரீயின் கைகளை இப்போது வரை விடாமல் பிடித்திருந்தான்.அதில் இன்னுமொரு மாற்றமாக ஶ்ரீயும் அவன் கையை இறுக்கிப் பிடித்திருந்தாள்.எப்போது இந்த மாதிரி நடந்தது என்று இருவருக்குமே தெரியவில்லை.

இப்போது தெரிந்தும்…ஒருவரின் கையை மற்றவர் விடாமல் பிடித்து கொண்டிருந்தனர்.இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று தழுவியதோடு மட்டுமல்லாமல் கையையும் விடாமல் பிடித்து கொண்டே ஒரு அடி எடுத்து வைத்தனர்.தூரத்தில் ஶ்ரீ,அண்ணா என்று அழைத்துக்கொண்டு வரும் ரிஷியும் கீதாவும் கண்ணில் பட அவசரமாக இருவரும் பிரிந்து நடந்தனர்.

கிருஷும் ஶ்ரீநிதியும் நல்லவேளை இவர்கள் நம்மை பார்க்கவில்லை என்பது போல் திருப்தியடைந்தனர்.

ஆனால் இருவரின் திருப்தி ரொம்ப நேரம் நீடிக்காது என்பதை இருவரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை…ஏனெனில் ரிஷியும் கீதாவும் தூரத்தில் வரும்போதே இவர்களின் செயலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து திரும்பி இங்கு என்ன நடக்குது என்று ஒருவரை ஒருவர் பார்த்து திருதிருவென்று முழித்தனர்.

அவர்கள் வேறொரு உலகத்தில் இருக்கின்றனர் என்பதை அறிந்த ரிஷியும் கீதாவும் வேண்டுமென்றே…அவர்களை இவ்வுலகத்திற்கு கொண்டு வர…அவர்களைத் தேடுவதுபோல் அண்ணா,ஶ்ரீ என்று கூப்பிட்டு கொண்டே அவர்களை நெருங்கினார்கள்.

நினைத்த மாதிரி இருவரும் கையை விட்டு விட்டு தனியாகப் பிரிந்து நின்றனர்.

ரிஷி அவர்களை நெருங்கி “அண்ணா…!எல்லாரும் ஶ்ரீயைப் பார்க்கணும் என்று அவளைக் கூப்பிட்டு வரசொன்னாங்க…அதனால் தான் வந்தோம்” என்றான்.

கிருஷ் அவனை முறைத்தவாறு “நீ போய் ஜோசியர் சொன்னதை எல்லார்கிட்டயும் சொன்னியாடா…??” என்று சரியாக கணித்து கேட்டான்.

உடனே ரிஷி தலைக்குனிந்தவாறு “நான் இல்லை அண்ணா…அர்ஜூன் சொல்லிட்டான் அண்ணா…!!” என்றான் மெதுவாக.

கிருஷ் இன்னும் அவனை முறைத்து “எப்படி 3 வயசு பையன் போய் அவங்கிட்ட இதெல்லாம் சொல்லிட்டனா…??உனக்கே இது அபந்தமா தெரியலைடா…” என்று கேட்டான் சூடாக.

இப்போது பதில் கீதாவிடமிருந்து வந்தது “அண்ணா அர்ஜூன் கிளி…சித்தப்பா…வந்து சித்தி…திட்டி…கிருஷ் சாமி வந்துச்சு… என்று உளறியதும் எல்லோரும் எங்களை என்ன என்ன என்று கேட்டாங்களா…??வாணி எல்லாவற்றையும் சொல்லிவிட்டாள் அண்ணா…!!” என்றாள் ரிஷிக்கு சப்போர்ட்டாக.

“அந்த வாலு தான் சொன்னிச்சா…!சரி சரி வாங்க” என்று மூவரையும் அழைத்து சென்றான்.

அந்த இடத்தை அடைந்தவுடன் எல்லாரும் அவளின் முகத்தைப் பார்த்து பதறி என்னச்சு…??அதெல்லாம் நம்பக்ககூடாதும்மா…!உனக்கு கஷ்டம் வர அப்படியெல்லாம் நாங்க சும்மா விட மாட்டோம் என்று ஆளாளுக்கு அவள் கன்னத்தைப் பிடித்து ஆறுதல் கூறினார்கள்.

ஶ்ரீ பாவமாக திரும்பி கிருஷைப் பார்த்தாள்.கிருஷ் கண்ணால் நான் பார்த்துகிறேன் என்று கண்மூடி திறந்து மற்றவர்களிடம் “போதும் போதும் வாங்க…இப்போ தான் நான் அவளைச் சமாதானம் படுத்தி கூட்டிட்டு வந்தேன்…மறுபடியும் அதேகேட்டு நீங்கலெல்லாம் நியாகப்படுத்தி இன்னும் வருத்திறீங்க…அதனால் யாரும் இதைப் பற்றி கேட்க வேண்டாம்…!நேரமாச்சு கிளம்பலாம்” என்று பெரிய மனிதன் தோரணையில் சொன்னான்.

ரிஷி உடனே மனதில் ‘ஒரு வேளை ஆறுதல் படுத்த தான் அண்ணா அவள் கையைப் பிடித்திருந்தரோ,நாம் தான் அவசரப்பட்டு தப்பாக நினைச்சிட்டோமோ’ என்று யோசித்து குழம்பினான்.

கிருஷ் கூறுவது சரி தான் என்று அனைவரும் கிளம்பினார்கள்.

அவர்கள் சமிக்ஞையைப் பார்த்து மீரா எரிச்சலடைந்து கோபத்தில் கண்ணின் ஓரத்தில் கண்ணீர் துளிர்த்தது…அதனை யாரும் பார்க்கும் முன் அவளை தூணின் மறைவில் நிறுத்திய குந்தவை “மீராம்மா எதுக்கு இப்போ இவ்வளவு கோபம் அழுகையெல்லாம்…?” என்றவாறு அவளின் கண்ணீரைத் துடைத்தார்.

“அப்பாயி…நீங்க பார்த்தீங்க தானே…கிருஷ் அத்தான் அவளுக்கு சப்போர்ட் பண்ணற மாதிரி பேசுவதை…அதுவும் இரண்டு பேரும் கண்ணால் பேசிகீறாங்க அப்பாயி…இதெல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை” என்றாள் எரிச்சலுடன்.

அவளின் முகத்தை நிமிர்த்திய குந்தவை “இங்க பாரும்மா…!நான் தான் எல்லாம் பார்த்துகிறேன்னு சொன்னேனா…இல்லையா…?இன்னும் எத்தனை நாள் தான் இதெல்லாம் நடக்கும்னு பார்க்கலாம்…கொஞ்சம் பொறுத்துக்கம்மா…அப்பாயி எல்லாம் பார்த்துபேன்” என்று ஆறுதல் கூறியவர் மனதில் இதுக்கு மேலே தாமதப்படுத்தினால் சரிப்படாது…இதுக்கு ஒரு முடிவு சீக்கிரம் எடுத்தேயாகணும் என்று உறுதி கொண்டார்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top