நாளை ஶ்ரீநிதியின் பிறந்தநாள் என்பதற்காக…அவளை இரவு 12 மணிக்கு ஆச்சரியப்படுத்த எண்ணி அவளுடைய பெற்றோர் மற்றும் அந்த வீட்டின் இளைய தலைமுறையினர் அனைவரும் உறங்கி கொண்டிருக்கும்…அவளின் படுக்கையின் அருகில் சத்தமில்லாமல் நின்று கொண்டு இருந்தனர்.
கடிகாரத்தில் சரியாக பன்னிரெண்டு மணி அடித்ததும்…எல்லாரும் ஒரு சேர…பிறந்தநாள் வாழ்த்து பாடலைப் பாடினார்கள்.அதைகேட்டு அவசரமாக எழுந்தவளுக்கு இவர்கள் அனைவரையும் பார்த்தவுடன்…அவளுடைய முகம் மலர்ந்து தனது மகிழ்ச்சியைக் காட்டியது.
கீதா தனது தோழிக்கு வாழ்த்து சொல்ல எண்ணி இங்கேயே தங்கியிருந்தாள்.
அதன்பிறகு அனைவரும் கேக் வெட்டி அவளுக்கு ஊட்டினார்கள். அவளும் அனைவருக்கும் கேக் ஊட்டினாள்.அப்படி ஊட்டி கொண்டே வரும்போது கிருஷிடம் வந்தவுடன் ஒரு தயக்கம் வந்தது…அதனால் அவனுக்கு ஊட்டிவிடாமல் கையில் கேக்கை தந்துவிட்டு ஓடிவிட்டாள்…ஓடி போகும் அவளின் செயலைப் பார்த்து சிரிப்புடன் அந்த கேக்கை சாப்பிட துவங்கினான்.
தனது தாயின் அருகில் சென்று கிருஷைத் திரும்பி பார்த்தாள்…அவன் இவளைப் பார்வையால் விழுங்கிக் கொண்டே அந்த கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்…அதைப் பார்த்தவுடன் ஶ்ரீநிதிக்கு ஏதோ அவளையே விழுங்குவது போல் தோன்றவும்…அவளின் உடல் முழுவதும் ஒரு சூடு பரவி..அவளின் தேகத்தைச் சிவக்க வைத்தது…முகத்தில் கேக் பூசி இருந்தததால் யாரும் இதனை கவனிக்கவில்லை…ஆனால் கிருஷின் கண்களுக்கு இந்த சிவப்பு தப்பவில்லை…பார்த்தவன் புன்னகை இன்னும் விரிந்தது.அதில் இன்னும் வெட்கம் சூழ தலைகவிழ்ந்து…அவள் வேறொரு உலகத்தில் சஞ்சரிக்கத் தொடங்கியபோது,
எல்லோரும் வாழ்த்து சொல்லி அவளுக்கு தனது பிறந்தநாள் பரிசுகளைத் தர ஆரம்பித்தவுடன் தன் கவனத்தை இந்த உலகத்திற்கு திருப்பினாள்…ஜானகியும் விசுவும் தனது மகளுக்கு ஒரு கை செயினை வாங்கி பரிச்சளித்து அவளை கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிட்டனர்.
கீதாவும் தனது தோழிக்கு ஒரு கைகடிகாரத்தை வாங்கி பரிசளித்தாள்…தயாவும் வம்சியும் அவளுக்கு ஒரு புது செல்போனை வாங்கி பரிசளித்தார்கள்…ரிஷியும் மீராவும் வெறும் கையை மட்டும் கொடுத்து வாழ்த்து சொன்னார்கள்.
வாணி தனது அக்காவிற்கு பிடித்த ரெட் கலர் மினி ஸ்கர்ட் வாங்கி தந்தாள்…அந்த மினி ஸ்கர்ட்டைப் பார்த்தவுடன்…ஶ்ரீநிதி அவசரமாக திரும்பி அங்கிருக்கும் ஆண்களில் யாராவது இதனைப் பார்த்துவிட்டார்களா…?? என்று பார்த்து யாரும் இதைப் பார்க்கவில்லை என்று கொஞ்சம் திருப்தியடையும் போது ரிஷி ஶ்ரீநிதியைப் பார்த்து நக்கலாக சிரித்து கொண்டுயிருந்தான்.
‘ஐய்யையோ’ என்றுவாறு அந்த ஸ்கர்ட்டை அவசரமாக உள்ளே வைத்து ஹப்பா என்று பெருமூச்சுவிட்டு வாணியைத் திரும்பி முறைத்தாள்.வாணி குறும்புடன் சிரித்து கொண்டுடே சைகையால் கொஞ்சம் பின்னாடி பார் என்றாள்.ஏனெனில் கீதா வாணி என்ன கொடுத்தாள் என்றவாறு அந்த பையிலிருந்து மினி ஸ்கர்ட்டை எடுத்து விரித்து பார்த்து கொண்டுயிருந்தாள்.ஶ்ரீநிதி அதனைப் பார்த்து ஐய்யையோ என்றவாறு தலையில் கைவைத்து அப்படியே நின்றாள்.
எல்லாரும் அதனைப் பார்த்து சிரித்து கொண்டியிருந்தனர்.ஶ்ரீ எல்லாரையும் பார்த்து அசடு வழிந்துவிட்டு “ஏய் கொடுடி…” என்று அவளிடம் இருந்து வேகமாகப் பிடுங்கி உள்ளே வைத்தாள்.
அவளுக்கு மற்றவர்கள் பார்ப்பதைவிட கிருஷ் பார்த்தது தான் வெட்கமாக வந்தது.
கிருஷ் சிரித்து கொண்டு இருப்பதைப் பார்த்து ஶ்ரீநிதிக்கு இன்னும் வெட்கம் வந்து தலைக்குனிந்தாள்.
ரிஷி ஶ்ரீயின் அருகில் வந்து “ஶ்ரீ இன்னும் நீ சின்ன குழந்தையா…இந்த ஸ்கர்ட்லாம் போடறே…நீ இது மாதிரி போட்டு நான் பார்த்தே இல்லையே…??எப்போ போடுவே” என்று தனது அதி முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான்.
அவனைத் திரும்பி கண்களால் எரித்துவிட்டு இதனைப் பார்த்து சிரிக்கும் வாணியையும் கீதாவையும் சேர்ந்து அதில் பொசுக்கினாள்.
ஜானகி மகளின் அருகில் வந்து “ஏய்…எல்லாரும் சும்மா இருங்க…பிறந்தநாள் அதுவுமாக…என் பேபியைப் பார்த்து யாரும் சிரிக்கக்கூடாது” என்று கண்டிப்புடன் கூறுவது போல் கூறி அது முடியாமல் அவரும் சிரித்தார்.
அதனைப் பார்த்த ஶ்ரீநிதி சிணுங்கி கொண்டே தன் தந்தையிடம் சரணடைந்தாள்.அவரும் போதும் விடுங்கள் என்று கூறினாலும் யாரும் அடங்காமல் அவளை கிண்டல் செய்து சிறிதுநேரம் கழித்து தான் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்.
கிருஷ் மட்டும் கையைக் கொடுத்து கூட வாழ்த்து சொல்லவில்லை… அவன் எந்த பரிசும் தரவில்லை…ஶ்ரீநிதி கிருஷ் ஏதாவது தருவார் என்று ஆசையாகக் காத்திருந்தாள்…ஆனால் அவன் வந்து வாழ்த்தும் சொல்லாமல்…பரிசும் தராமல் சென்றவுடன் அவளுக்கு சப்பென்றானது…முகம் சுருங்கியது…அதனைப் பார்த்த மீராவுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை.
‘அப்பா…!கிருஷ் அத்தான்…ஶ்ரீக்கு எதுவும் தரவில்லை…
அவளிடம் எதுவும் பேசவில்லை…’ என்று…வேறவழியில்லாமல் ஶ்ரீ தன் பெற்றோருக்காக முகத்தைச் சிரித்தது போல் வைத்திருந்தாள்.
அனைவரும் சென்றவுடன் ஶ்ரீ தன் படுக்கையில் விழுந்தாள். ‘எல்லா வருடமும் வராதா அத்தான்…இந்த வருடம் வந்தாங்க…ஆனால் ஏன் எனக்கு வாழ்த்து கூட சொல்லலை…அதேமாதிரி எந்த கிபிட்டும் கொடுக்கலை…சும்மா எதுக்கு வந்தாங்க…’ என்று யோசித்து கொண்டிருக்கும் போதே…தூக்கம் கண்களை சுழட்ட கண்ணை மூடினாள்.
அனைவரும் உறங்கிய பிறகு ஒரு ஆணின் உருவம் வந்து ஶ்ரீயின் அருகில் உள்ள மேசையில் ஏதோ ஒன்றை வைத்துவிட்டு தூங்கும் அவளின் அழகை ரசித்துவிட்டு சென்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை அதனால் காலையில் 8 மணிக்கு எழுந்த ஶ்ரீநிதி நேராக குளியலறைக்குள் சென்று குளித்துவிட்டு வந்தவள்…அங்கு கீதா அவளுக்காகக் காத்திருப்பதைப் பார்த்த ஶ்ரீ,புன்னகையுடன் அவள் அருகில் நெருங்கினாள்.
கீதா அவள் கையைப் பிடித்து “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஶ்ரீ…!!” என்று கூறி புன்னகைத்தாள்.
ஶ்ரீ “தேங்கஸ்டி” என்றவாறு அவளைக் கட்டியணைத்து விடுவித்தாள்.
சிறிதுநேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்துவிட்டு ஶ்ரீநிதி “நீ கீழே வாணி கூடப் பேசிட்டு இருடி…நான் டிரஸ் மாற்றிவிட்டு வரேன்…” என்று கூறி கீதாவை கீழே அனுப்பினாள்.
கீதா கீழே சென்றப்பிறகு கதவைத் தாளிட்டுவிட்டு…தன் கப்போர்டிலிருந்து…தன் தாய் தனக்காக வாங்கிய சுடிதாரை எடுத்து… கட்டிலின் மேல் வைத்துவிட்டு நிமிர்ந்தவளின் பார்வையில் மேசையின் மேல் இருந்த பார்சல் கண்ணில் பட்டது.
‘என்னது அது..??’ என்று யோசித்தவாறு அதன் அருகில் சென்று அதை எடுத்தாள்.அது கிப்ட் வேறப்பரால் பேக் செய்யப்பட்டு இருந்தது.அதன்மேல் கண்ணன் படமும் இனிய பிறந்த நாள் வாழ்த்தும் இருந்தது…அதைப் பார்த்தவுடன் ஆசையாகப் பிரித்தாள்.
பிரித்தவளின் கண்கள் ஆச்சிரியத்தில் விரிந்தது…அது ஒரு அழகிய டிசைனர் பட்டு புடவை…அதுவும் அவளுக்கு பிடித்த சிவப்பு நிற கலரில்…கோல்டன் நிற பார்டரும்…சேலை முழுவதும் பூக்களாலான கோல்டன் நிற சரிகையோடும் பார்க்கவே அழகாக இருந்தது…அதற்கு நிகராக சேலையில் உள்ள சரிகை பூக்களை வைத்து டிசைன் செய்த…தங்க அணிகலன்கள் எல்லாம் சேலைக்குப் பொருத்தமாக இருந்தது.
அதனைப் பார்த்தவள் ‘யார் இதை வைத்திருப்பார்கள்’ என்று யோசித்து ஒரு வேளை அம்மாவாக இருக்குமோ என்று யோசித்து…சரி யாராக இருந்தால் என்ன நமக்காக தான் வைத்திருக்கிறார்கள்…நாம் இதையே கட்டுவோம் என்று பிளவுஸைத் தேடினாள்…அது ஒரு ரெடிமேட் பிளவுஸ் அதனால் அதை தேடி எடுத்து அணிந்து கொண்டாள்.
அப்போது தான் அவளுக்கு ஒன்று உறைத்தது…தனக்கு புடவையே கட்ட தெரியாது என்று… ‘ஐய்யோ…!!’ என்று தலையில் அடித்துகொண்டு ‘நீயெல்லாம் பேஷன் டிசைனிங் படிச்சனு வெளியில் சொல்லதே…!!சேலைக் கூட கட்ட தெரியலனு எல்லாரும் காரித்துப்புவாங்க…!!’ என்று தன்னையே திட்டிகொண்டு ?இருக்கும்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
ஒருவேளை அம்மாவாக இருக்குமோ…??நமக்கு வாழ்த்து சொல்ல வந்திருப்பாங்களோ…??இல்லைனா கீதாவா இருப்பாள்…!அப்படிதான் இருக்கும் என்று யோசித்து…தன்மேல் ஒரு துண்டைப் போர்த்திவிட்டு கதவைத் திறந்தவள் அதிர்ந்தாள்.
ஏனெனில் வெளியே நின்று இருந்தது…அவளது அம்மாவோ…அவளது தோழியோ இல்லை…கிருஷ் நின்று இருந்தான்…இவள் இருக்கும் கோலத்தைப் பார்த்த அதிர்ச்சியில் அங்கிருந்து நகராமல் அவனும்,இவனைப் பார்த்த அதிர்ச்சியில் மேலே போர்த்தியிருந்த துண்டு கீழே விழுந்ததுக் கூட தெரியாமல் அவளும் அப்படியே நின்று இருந்தார்கள்.
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தார்கள் என்று தெரியவில்லை… முதலில் சுதாரித்தது கிருஷ்தான்…அப்போது தான் அவளின் எழில் மேனி வளைவுகளைப் பார்த்து தடுமாறி…அவன் நாடி நரம்புகள் எல்லாம் துடிக்க ஆரம்பித்தது…அவன் மூளை இங்கிருந்து போவென்று சொன்னாலும்…அவளை இப்படி பார்த்துவிட்டு அவனுடைய கால்கள் இங்கிருந்து செல்ல மறுத்தது…அவளை அப்படியே கட்டியணைக்கத் துடித்த கைகளை வெகு சிரமப்பட்டு அடக்கி…ஒரு வழியாக அந்த இடத்தைவிட்டு நகரும் முன் வேற யாரும் வருகிறார்களா என்று பார்த்துவிட்டு…அவள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதைப் பார்த்து கன்னத்தில் தட்டி ‘உள்ளே போ…!!’ என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்.
அதன்பிறகு அவசரமாக துண்டையெடுத்து கதவை சாத்தப்போகும்போது கீதா அங்கு வந்தாள்…அவள் நின்ற கோலத்தைப் பார்த்து திகைத்து “என்னடி இப்படி இருக்கே…??” என்று கேட்டு அவளை உள்ளே தள்ளி கதவைச் சாற்றினாள்.
உள்ளே நுழைந்தவுடன் “என்னடி வெறும் பிளவுஸ் மற்றும் பாவாடையோடு…கதவைத் திறந்து வெளியே நிற்கிறே…உனக்கு கிறுக்கு எதாவது பிடிச்சிருக்கா…??யாராவது வந்தால் என்னவாகி இருக்கும்” என்று தன் தோழியைக் திட்டினாள்.
இப்போ நடந்ததை எல்லாம் எப்படி இவளிடம் சொல்ல முடியும் என்று நினைத்து “இல்லடி…இந்த புடவை எப்படி கட்டறதுனு தெரியலையா…??அதான் யாரையாவது கூப்படலாமனு…கதவைத் திறந்தேன்…ஆனால் யாரும் இங்கே இல்லை…!சரின்னு கதவைச் சாற்றப்போகும் போது நீ வந்திட்டே” என்று தன் தோழியிடம் பொய் கூறினாள்.
கீதாவும் ‘நீயெல்லாம் பேஷன் டெக்னாலஜி படிச்சேன்னு…வெளிய சொல்லதேடி…’ என்று திட்டிவிட்டு ‘சரி…சரி…வா..!’ என்று அழைத்து அவளுக்கு அந்த புடவையைக் கட்டிவிட்டாள்.
ஶ்ரீநிதி ரோஷத்துடன் “எனக்கு புடவையெல்லாம் கட்ட தெரியும்…எனக்கு புடவை மற்றவர்களுக்கு மட்டும் தான் கட்டிவிட தெரியும்…எனக்கே கட்டிக்க தெரியாது…அவ்வளவுதான்…அதுக்குள்ள ஓவரா நீ வாய் பேசறே…!!” என்று கூறினாள்.
கீதா “சரி…சரி…விடு” என்றுவிட்டு அதன்பிறகு அங்கிருந்த நகைகள் அனைத்தையும் போட்டுவிட்டு அவளுக்கு தலையைப் பின்னி போட்டுவைத்து அவளைத் திருப்பியவள் அசந்துவிட்டாள்.அவ்வளவு அழகாக இருந்தாள்.