கீதா வந்தவுடன் அவளுக்காக காத்திருக்கும் ஶ்ரீயை கொஞ்சம் கூட மதிக்காமல் அவள் கேபினுக்குள் நுழைந்தாள்.அவளை பின் தொடர்ந்து ஶ்ரீயும் அந்த கேபினுக்குள் நுழைந்தாள்.
கீதா அவள் நாற்காலியில் உட்கார்ந்தவுடன் ஶ்ரீயும் அதற்கு எதிரே இருக்கும் நாற்காலியில் உட்கார்ந்து “கீதா நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளுடி பிளீஸ்டி” என்றாள்.
கீதா டேபிளில் இருக்கும் முக்கியமான பைலை எடுத்து பார்த்தாள்.ஶ்ரீ அவளிடம் இருந்து அதனைப் பிடுங்கி வைத்துவிட்டு “கீது பிளீஸ்டி…நான் என்ன சொல்லறேனு கொஞ்சம் கேளுடி..!.நீ ரமேஷ் பற்றி பேச ஆரம்பித்த உடனே எனக்கு எரிச்சலாக இருந்ததுடி…எங்க உன்னை திட்டிவிடுவனோனு…நினைச்சு செல்லை மூயுட்டில் போட்டுட்டேன்டி…!!” என்றவுடன் கீதாவிற்கு இன்னும் கோபம் வந்தது.
“ஏன்டி நான் என்ன சொல்ல வரேன்னு கூட தெரியாமல்…நீ பாட்டுக்கு மூயுட்டில் போட்டுவிட்டு உன் வேலையா பார்த்திட்டு இருக்கே… இவள் ஒரு கேனச்சி தான்…அதனால் இந்த லூசு பாட்டுக்கு தனியாக பேசிட்டு இருக்கட்டும்னு… விட்டுட்டே…அப்படிதானே” என்று கோபத்துடன் வினவினாள்.
ஶ்ரீ “ஏய் பிளீஸ்டி…நான் சொல்லறதை முழுசாக் கேட்டுவிட்டு சொல்லுடி…அப்புறம் என்னைத் திட்டுடி…எனக்கு ரமேஷ்னு பேரைக் கேட்டாளே எரிச்சலாக தான் இருக்கு…நீ அவனைப் பற்றி ஆரம்பிச்சவுடனே…எனக்கு இன்னும் எரிச்சலாக வந்ததுடி…உன்னை திட்டலாம்னு வாயைத் திறக்க போன போது வாணி வந்து என்கிட்ட பேசினாளா…??அவள் கூட தயா அத்தான் மனைவி வம்சி இருக்காங்க தானே அவங்களும் வந்தாங்களா…உடனே உன்னிடம் ஒரு நிமிடம் என்று சொல்லிவிட்டு…உன் போனை கட் பண்ணுவதற்கு பதில்…நான் மூயுட்டில் போட்டுவிட்டேன்டி…அப்புறம் அவங்க அந்த பாட்டு பற்றி கேட்டாங்களா…அதைப்பத்தி யோசித்து ஞாபகம் வரலைனு…
சரி வம்சி அக்கா…எனக்கு ஞாபகம் வரவில்லை…அதனால் உங்களுக்கு நாளைக்கு சொல்லுகிறேன் என்று அனுப்பிவிட்டு சரி உனக்கு கூப்பிடலாம்னு போனை எடுத்துப்பார்த்தால் அதில் நீ இன்னும் லைனில் இருப்பது தெரிந்தது…சரி உன்னிடம் பேசலாம்னு…மூயுட்டை எடுத்துவிட்டு போனை காதில் வைக்கபோகும் போது எனக்கு டக்குனு அந்த பாட்டு ஞாபகம் வந்திருச்சி…உடனே வாணியிடம் திரும்பி என் புருஷன் தான்…எனக்கு மட்டும் தானு சொன்னேன்டி…அதன்பிறகு உன்னிடம் எவ்வளவு நேரம் கீது…கீதுனு…கூப்பிட்டேன்டி…நீ பதிலே சொல்லலையா…டம்னு ஏதோ சத்தம் வேற கேட்டாதா??அதான் எனக்கு பயம் வந்திடுச்சு…அப்புறம் போனில் நீ நான் சொன்னதை தப்பா எடுத்து கொண்டு கேட்டவுடனே சிரிப்பு வந்திடுச்சி…சாரிடி…பிளீஸ்டி” என்று அவள் கையைப் பிடித்து கெஞ்சினாள்.
கீதா அவள் கையைத் தட்டிவிட்டு “நீ எப்போடி ஒரு நிமிடம்னு சொன்னே…??எனக்கு கேட்கவேயில்லை…பொய் சொல்லி என்னை ஏமாத்தலாம்னு நினைக்காதேடி…??” என்று அதுதான் முக்கியம் போல் சொன்னாள்.
தன் தோழியின் குழந்தை தனத்தை ரசித்து சிரித்து “நான் சொன்னேன்டி…நீ தான் பேச்சு சுவாரசியத்தில் கவனிக்கவில்லை போல… இப்போ சொல்லுடி…நான் கேட்கிறேன்…ஆனால் ஒன்று ரமேஷைப் பற்றி மட்டும் பேசக்கூடாது” என்றாள் கறாராக.
“இனிமே ரமேஷ் பற்றி பேசவே மாட்டேன்டி…ஒரு தரம் பட்டது போதும் சாமி” என்று கையெடுத்து கும்பிட்டாள்.
“சரி…சரி…அப்புறம் வேறே என்ன…?”
“அப்புறம் கிருஷ் அண்ணா உன்னை என்று ஆரம்பித்தவளை
“இன்னும் நீங்க வேலை ஆரம்பிக்கலையா…??” என்ற கேள்வியுடன் கிருஷ் அந்த அறைக்கு வந்தான்.
இருவரும் அவசரமாக திரும்பினார்கள்.கிருஷூம் அவன் கூடவே ரிஷியும் வந்து கொண்டு இருந்தான்.ரிஷியைப் பார்த்து இருவரும் ஆவென்று வாய்பிளந்தனர்.
ஏனெனில் இதுவரை வெளியில் கிளம்பும்போது ஒரு லூசான டீசர்டும்…கீழே ஒரு கிழிஞ்சு போனே ஜீன்ஸூம் தான் போடுவான்…ஆனால் இப்போ அவன் கோர்ட் ஷர்ட் போட்டு ஆளேமாறி இருந்தான்.
வாயைப் பிளந்து இருந்தவர்களைப் பார்த்து ரிஷியும் “ஹாய் கேர்ள்ஸ்…” என்றவாறு அருகில் வந்தான்.
இருவரும் அவர்களை நெருங்கியவுடன் “உங்களை தான்…இரண்டு பேரும் வேலை நேரத்தில் வேலை செய்யாமல் இங்கு என்ன பண்ணிட்டு இருக்கீங்கனு கேட்டேன்…??” என்றான் கிருஷ்.
இதோ கிளம்பிட்டே இருக்கோம் என்று இருவரும் அவசரமாக கிளம்பினர்.
ஒரு நிமிடம் என்றதும் இருவரும் திரும்பினர்.
“இனிமே ரிஷி தான் இந்த பிராஜக்ட் பார்க்க போறான்…அதனால் இந்த பிராஜக்ட் பற்றி அவனுக்கு எல்லாம் எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது…உங்க இரண்டு பேருடைய கடமை…ஆனால் இறுதிமுடிவு எதுவாக இருந்தாலும் என்னிடம் கலந்தாலோசித்து முடிவு எடுங்கள் புரியுதா…??” என்று கேட்டுவிட்டு,
அவர்கள் சரியென்று ஒத்து கொண்டவுடன்…ஶ்ரீயை மட்டும் இங்கே இருக்க சொல்லிவிட்டு,
கீதாவைப் பார்த்து “நீ ரிஷியைக் கூட்டிட்டு போய்…எல்லாவற்றையும் சொல்லிகுடும்மா” என்று இருவரையும் வெளியனுப்பிவிட்டு ஶ்ரீயை தனது கேபினுக்கு அழைத்து சென்றான்.
அங்கு சென்று இருவரும் நாற்காலியில் அமர்ந்தபிறகு தன் கையில் ஒரு பைலைப் பார்த்துக்கொண்டே “ஶ்ரீ நீ ஷோ டாப்பராக இருக்கேனு ஒத்துக்கிட்டேனு ரிஷி சொன்னான்…உனக்கு இதில் முழு சம்மதம் தானே” என்று கேட்டான்.
“எனக்கு சம்மதம் அத்தான்…”
“சரி…எல்லா டிசைனும் ரெடியாகிருச்சா…??” என்று முதலாளியாக கேட்டான்.
“முக்கால் வாசி முடிஞ்சிருச்சு அத்தான்…இன்னும் கடைசியாக பீனிஷிங் மட்டும் இருக்கு…அதுவும் இன்னும் 2 நாளில் முடிஞ்சிரும் அத்தான்” என்றாள் கடமையாக.
“ரிஷி இப்போ தான் வந்திருக்கான்…அவனுக்கு இதைப் பற்றி முழுவதும் தெரியாது…அதனால் அவனை கொஞ்சம் கண்காணிச்சிட்டே இருங்க…ஏதாவது சொதப்பிட்டனா…நம் கம்பெனிக்கு தான் கெட்ட பேரு வரும்…இந்த பொறுப்பை உங்களை நம்பி தான் கொடுத்திருக்கேன்…சரியா…??” என்று கண்டிப்புடன் கேட்டவுடன்.
சரி அத்தான் என்று தலையாட்டினாள்.ஆனால் மனதிற்குள் எப்போ பார்த்தாலும் ஸ்கூல் ஹெட் மாஸ்டர் மாதிரியே பேச வேண்டியது…கொஞ்சம் சிரிச்சி பேசினால்…ஆறு அடியிலிருந்து ஒரு இன்ச் குறைஞ்சிரும் போல ஹிட்லர் என்று நினைத்து கொண்டிருந்தவள்…
அதன்பிறகு தான் ஶ்ரீநிதி அவன் கம்பீரத்தையும்…அந்த சூழல் நாற்காலியில் உட்கார்ந்து பைல்களைப் பார்த்துக்கொண்டே தன்னிடம் பேசி கொண்டிருக்கும் அழகையும் பார்த்து அவனை அணுவணுவாக ரசித்துவிட்டு இந்த கண்டிப்பு கூட ஒரு விதத்தில் உங்களுக்கு அழகு தான் என்று ரசித்தாள்.
இரண்டு நிமிடங்களுக்கு மேலும் எதுவும் பேசாமல் அவள் இருக்கவும் அவளை நிமிர்ந்து பார்த்தான்.
நிமிர்ந்து பார்த்தவன் அவள் கண்களில் தெரிந்த ரசனையை அறிந்து இதழுக்கிடையில் தோன்றிய சிறு புன்னகையுடன் “ஶ்ரீ என்ன என்னை அப்படி ரசித்து பார்த்துட்டு இருக்கே…நான் நல்ல இருக்கனா இல்லயானு பார்த்துட்டு இருக்கியா…??” என்று கேட்டவாறு தன் நாற்காலியில் இருந்து எழுந்து அவள் அருகே வந்தான்.
அதன்பிறகு தான் செய்த தவறை உணர்ந்து பதறி “அப்படியெல்லாம் இல்லை அத்தான்…நான் சும்மாதான் பார்த்தேன்” என்று அவசரமாக கூறி அவளும் அடித்து பிடித்து சேரிலிருந்து எழுந்தவள் நாற்காலியின் கால் தடுக்கி கீழே விழப்போனாள்.
கீழே விழப்போனவளை கிருஷ் வேகமாக வந்து தாங்கிப் பிடித்தான்…தாங்கி பிடித்தவுடன் ஶ்ரீயின் கண்கள் பயத்தினால் மூடியது…சிறிது நேரம் கழித்து பயம் தெளிந்தவுடன் கண்களைத் திறந்தாள்.திறந்தவளின் கண்கள் இன்னும் பெரிதாக விரிந்தது…அவன் கண்களில் தெரியும் ஒரு ஒளியைக் கவனித்தாள்…அன்று கீழே விழும் போது தாங்கி பிடித்த கிருஷின் பார்வையில் இருந்து புரியாத ஒன்று இன்று கொஞ்சம் கொஞ்சமாக புரிய ஆரம்பித்தது…ஆனால் அந்த உணர்வுக்கு பெயர் காதல் என்பது அவளுக்கு இன்றும் புரியவில்லை…அவன் கண்களில் தெரிந்த ஒளியில் கவரப்பட்டு அவளும் தன் கண்களால் கிருஷின் கண்களைச் சிறைச்செய்தாள்.இருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் விழுங்கிக் கொண்டுயிருந்த வேளையில் பூஜை வேளைக் கரடியாக ரிஷி கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்.
அவர்கள் இருவரும் அவசரமாக பிரிந்து நின்றனர்.அவர்கள் இருவரின் தடுமாற்றத்தைப் பார்த்த ரிஷி என்னச்சு இரண்டு பேருக்கும் ஏன் ஒரு மாதிரி இருக்காங்க என்று யோசத்துவிட்டு அண்ணா எதாவது ஶ்ரீயைத் திட்டி இருப்பார் அப்புறம் ஶ்ரீயைக் கேட்டுகலாம் என்று அவனே ஏதோ பதில் சொல்லிவிட்டு கிருஷிடம் “அண்ணா உங்களை அப்பா நம்முடைய ரைஸ் மில்லிக்கு வர சொன்னார்” என்றான்.
“சரி இரண்டு பேரும் போய் வேலைப்பாருங்க” என்று விட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தான்.
ஶ்ரீ தான் ரிஷியினால் பெரும் அவஸ்தைக்குள்ளானாள்.என்னாச்சு என்னாச்சு என்று பலதடவை கேட்டு ஒண்ணும் இல்லை என்று சொன்னபிறகும் விடாமல் அப்புறம் ஏன் ஒருமாதிரியாக இருக்கே என்று கேட்டு கேட்டு காதை புளிக்கும் படி செய்துவிட்டான்.அவனை சமாளித்து கீதாவிடம சென்றால் அவள் அதற்கு மேல் போய் “ஏய் உன் முகத்தில் ஒரு பல்ப் எரியுது…நீ வரும்போது இப்படி இல்லையே…என்ன நடந்ததுடி…” என்று கேள்வி கேட்டு குடைந்தாள்.
இப்போ இவளிடம் இருந்து வேறே தப்பிக்கணும் என்று யோசித்து “ஏய் அத்தான்…இரண்டு நாளுக்குள் எல்லா டிசைனையும் முடிச்சு தரணும்னு சொன்னார்…சோ நோ பேச்சு…வேலையா மட்டும் பாரு…குயிக் குயிக்” என்று அவளை அவசரப்படுத்தி திசைத் திருப்பினாள்.
அன்றைய இரவில் தன் படுக்கையில் விழுந்தவுடன் ஶ்ரீ அன்று ஆபிஸில் நடந்த நிகழ்வை நினைத்து பார்த்து கொண்டுயிருந்தாள்.எனக்கு என்ன ஆச்சு…நான் ஏன் அப்படி நடந்து கொண்டேன்…நான் முன்னாடி மாதிரி இல்லையே…இப்போது எல்லாம் அத்தானைப் பார்த்தால் நான் நானாக இல்லையே…எனக்குள் நடக்கும் மாற்றம் எதனால்…??ஆனால் எனக்கு இந்த உணர்வு பிடிச்சிருக்கே…அது ஏன்…??அத்தான் கண்களில் ஏதோ ஒரு ஈர்ப்பு விசை என்னை அதனுள் இழுக்கிறதே…அது என்ன…?? என்று பல்வேறு கோணங்களில் யோசித்துவிட்டு ஏதோ ஒண்ணு அது எனக்கு பிடிச்சிருக்கு என்று மகிழ்ச்சியுடன் கண்களை மூடினாள்.
ஆனால் இந்த மலர்ச்சி கூடிய சீக்கிரம் துடைத்தெறிய போவதை பாவம் அந்த பேதை அறியாள்.
ஶ்ரீ சோ டாப்பராக போவதை அறிந்த குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.ஆனால் மீராவுக்கு மட்டும் மகிழ்ச்சிக்கு பதில் பொறாமை தான் ஏற்பட்டது.அதன்பலனாக அவள் அறையில் கட்டிலில் படுத்து அழுதுகொண்டு இருந்தவளை எழுப்பி உட்கார வைத்து “என்னம்மா ஆச்சு மீரா…??ஏன் அழுகிறே…??” என்று கேட்டார் குந்தவை தவிப்புடன்.
“அப்பாயி…அந்த ஶ்ரீ…வந்து அவ…ளை மட்டும் ஏற்கனவே எல்லாரும் தூக்கி வைச்சு ஆடு…றாங்க…இப்போ அவள் இதில் பங்கே…ற்றால் இன்னும் அவ்வளவு தான் அப்பாயி…அவள் தான்…இந்த வீட்டிற்கு மகாராணி அப்பாயி…அப்புறம் என்…நிலைமை அப்பாயி…அதுவும் கிருஷ் அத்தான் தான்…ஶ்ரீயை டாப்பராக்கும் ஐடியாவையே சொன்னாராம்…எனக்கு பயமா இருக்கு அப்பாயி…எனக்கு கிருஷ் அத்தான் வேணும் அப்பாயி…அவரை வச்சு தான்…நான் நிறைய கனவு வச்சிருக்கேன் அப்பாயி…அவ…அவரை நான் ரொம்ப விரும்புறேன்… கடைசியில் அவரும் என்னை…விட்டு போயிடுவரா அப்பாயி…நீ தான் என்னை கிருஷ் அத்தான் கூட சேர்த்து…வைக்கணும்…ஶ்ரீயிடம் நான் எக்…காரணம் கொண்டும்…தோற்கவே கூடாது அப்பாயி…பி…ளீஸ் அப்பாயி” என்று தேம்பிக்கொண்டே குந்தவையின் கைகளைப் பிடித்து கெஞ்சி அழுதாள்.
மீராவுக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் குந்தவை தன் பேத்தியின் கெஞ்சலில் உருகி அவள் கண்ணீரைத் துடைத்துவிட்டு “இங்க பாரு மீராம்மா…நீ எதைப் பற்றியும் கவலைப்படாதே… கிருஷூக்கும் உனக்கும் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது…என் பொறுப்பு…சரியா…??” என்று கேட்டார்.
“அப்பாயி ஆனால் கிருஷ் அத்தான்…என்று ஏதோ சொல்ல போனவளின் வாயில் ஒற்றை விரல் வைத்து “என் மேல் உனக்கு நம்பிக்கை இருந்தால் இனிமே இதைப் பற்றி பேசக்கூடாது… புரியுதா…??அப்படியே கிருஷ் ஶ்ரீயை விரும்பினால்…ஶ்ரீயை அவனிடமிருந்து பிரித்து பார்த்துக்கொள்ள வேண்டியது என் பொறுப்பும்மா” என்று வாக்கு கொடுத்தார்.
தன் அழுகையை நிறுத்தி “அப்பாயி…ஆனால் ஶ்ரீயும் உங்கள் பேத்தி தானே…??” என்று சந்தேகமாக கேட்டவளிடம்,
“எனக்கு உன்னையும் உன் சந்தோஷத்தையும் தவிர வேறே எதுவுமே முக்கியமில்லை” என்றார் தெளிவுடன்.அதைக்கேட்டவுடன் அப்பாயி என்று தன் பாட்டியை அணைத்துக் கொண்டாள்.
குந்தவை தன் செல்ல பேத்தியின் ஆசைக்காக அவளின் கல்யாணத்தை எப்படியாவது நடத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் சில திட்டங்களை செயல்படுத்த ஆரம்பித்தார்.