அத்தியாயம் 11

கீதா தன் தோழியிடம் தன்னுடைய மனதை அரிக்கும் அனைத்து கேள்விகளையும் கேட்டாள்.

அதற்கு ஶ்ரீ சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ந்து தன் கையில் இருந்த போனை தவறவிட்டதை கூட அறியாமல் உறைந்து நின்றாள்.

ஶ்ரீ அந்தப்பக்கம் “ஏய் கீது…கீது…கீது…” என்று பலமுறை அழைத்து கொண்டுயிருந்தாள்.சிறிதுநேரத்திற்கு பிறகு தான் கீதா சுயநினைவிற்கு வந்து தன் கையில் இருந்த செல்போனைத் தேடினாள்.

அது தன் காலுக்கடியில் இருப்பதைப் பார்த்து அவசரமாக அதை எடுத்து காதில் வைத்தவளின்…காதில் அந்தப்பக்கம் ஶ்ரீ கீது கீது என்று தவிப்புடன் அழைப்பதைக் கேட்டு தன் காதில் விழுந்தது உண்மையா பொய்யா என்பதை அறிய “ஶ்ரீ நீ என்ன சொன்னே…??திரும்பவும் சொல்லு…” என்றாள் படப்படப்புடன்

ஶ்ரீ அந்தப்பக்கம் பெருமூச்சுவிட்டு “ஏய் லூசு…நீ நல்ல தான் இருக்கியா…??இவ்வளவு நேரம் கீது கீதுனு கூப்பிட்டுட்டு இருக்கேன்…நீ பதில் எதுவும் சொல்லாமல்…அமைதியா இருக்கே…லைனில் இருந்துட்டே விளையாடுறியா லூசு??இல்ல உனக்கு காதுக்கு எதுவும் பிரச்சினையா…??இந்த அர்த்த ராத்திரியில் போன் செய்துவிட்டு விளையாட்டிட்டு இருக்கே…உனக்கு விளையாடுவதற்கு ஒரு நேரம் காலமே கிடையாதாடி…??” என்று அவள் பாட்டிற்கு பொரிந்து தள்ளினாள்.

கீதா அவள் கேட்ட கேள்வியை டீலில்விட்டு தன் பிடியிலே நின்னு “ஏய் முன்னாடி நீ என்ன சொன்னே…??அதை முதலில் சொல்லு…!!” என்றாள் பிடிவாதமாக அதை தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன்.

ஶ்ரீ ‘நான் என்ன சொன்னேன்’ என்று பொறுமையாக யோசித்து பதில் கிடைக்காமல் அவளிடமே “என்னடி சொன்னேன்…??” என்று புரியாமல் கேட்டாள்.

கீதா படப்படப்புடன் “அதான்டி ஏதோ என் புருஷன்…அப்படினு ஏதோ சொன்னியே…”என்று எடுத்துகொடுத்துவிட்டு அவளுடைய பதிலுக்காகக் காத்திருந்தாள்.

திரும்பவும் ஶ்ரீ மூளையை நன்றாக கசக்கி பிழிந்து கடைசியாக மூளையில் பல்ப் எரிய “ஓ…அதுவா என் புருஷன் தான்…எனக்கு மட்டும் தான்” என்று ரொம்ப கூலாக கூறினாள்.

“என்னது” என்று மறுபடியும் அதிர்ந்து “ஏய்…என்னடி சொல்லுறே…??உனக்கு எப்போ கல்யாணம் ஆனது…யாருடி அதுவும் எனக்கு தெரியாமல்…!!” என்று பொறுமையை இழுத்து பிடித்து கேட்டாள்.

அதைகேட்ட ஶ்ரீநிதி இங்கு விழுந்து விழுந்து சிரித்து கொண்டுயிருந்தாள்.கீதாவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக இரத்த அழுத்தம் அதிகமாக கொண்டுயிருந்தது.

அதற்கு மேல் பொறுக்க முடியாமல் “ஏய்…!!நான் கேட்டதிற்கு பதில் சொல்லிட்டு சிரிடி…நீ உன் பாட்டுக்கு சிரித்து கொண்டுயிருந்தால் எல்லாரும் உன்னை பைத்தியம்னு சொல்லுவாங்க…அதனால் ஒழுங்கு மரியாதையாக சொல்லி தொலை” என்று கீதா அதிகப்பட்ச எரிச்சலுடன் வினவினாள்.

ஶ்ரீ தன் சிரிப்பை நிறுத்தாமல் சிரிப்புடனே “அது வந்து கீது…என்று விட்டு மறுபடியும் சிறிதுநேரம் வாயிற்றை பிடித்து சிரித்து கொண்டு…தன் தோழியை இன்னும் சூடாக்கி,

“நான் அதை உன்னிடம் சொல்லலைடி…இங்கு வாணி பழைய நடிகை சுஹாசினி இருக்காங்க இல்லை…அவங்க கோபுரங்கள் சாய்வதில்லை படத்தில் ஒரு பாட்டு பாடூவாங்க தானே…அது என்ன பாட்டுனு கேட்டாளா…??நான் அதுக்கு…” என்று விட்டு மறுபடியும் ஒருமுறை சிரித்து,

“என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாட்டுனு சொன்னேன்டி…அதுக்கு நீ ஏன்டி இப்போ இவ்ளோ டென்ஷனாக இருக்கே…??” என்று சிரிப்புடனே கூலாக பதில் சொல்லி மறுபடியும் கட்டிலில் விழுந்து சிரித்து கொண்டுயிருந்தாள்.

அவ்வளவு தான் கீதாவிற்கு இரத்தம் அழுத்தம் பல மடங்கு ஏறியது…இருக்காதா பின்னே அவள் கிருஷ் அண்ணாவை மீரா அக்கா லவ் பண்ணறாங்க போலடி…ஆனால் கிருஷ் அண்ணா உன்னை தான் காதலிக்கிறாங்கடி…அதனால் தான் கேட்கிறேன்…நீயும் கிருஷ் அண்ணாவை காதலிக்கீறியா சொல்லுடி…??என்று கேட்டவளிடம் என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்று பதில் சொன்னதால் இங்கு ஒருத்தி சிலையாகும் அளவுக்கு அதிர்ச்சியடைந்திருந்ததை அறியாமல்.இப்போது இவள் கூலாக நான் உன்னிடம் சொல்லவில்லைடி…வாணியிடம் சொன்னேன்னு சொன்னால்…யாருக்கு தான் கோபம் வராது.

கோபம் தலைக்கேற தன்னுடைய செல்லை அணைத்து கட்டிலில் தூக்கி வீசினாள்.

அதன்பிறகு தான் ஶ்ரீ தன் சிரிப்பை நிறுத்தி தான் செய்த காரியத்தின் வீரியம் புரிய தன்னுடைய தோழிக்கு செல்லில் தொடர்பு கொண்டாள்.அது அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்ற பதிலே திரும்ப திரும்ப வந்தது.அதன்பிறகு தன்னையே நொந்துக்கொண்டு சரி நாளைக்கு அவளிடம் சென்று சாரி சொல்லி பேசிப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தாள்.

அடுத்த நாள் காலையில்,தனது தோழியைச் சமாதானப்படுத்த எண்ணி வேக வேகமாக குளித்து தயாராகி கொண்டு இருந்தாள் ஶ்ரீநிதி. அந்தநேரம் பார்த்து யாரோ கதவும் தட்டும் சத்தம் கேட்டு…இந்த நேரத்தில் யாரு என்று குழப்பத்துடன் கதவைத் திறந்தாள்.

திறந்தவள் அங்கு ரிஷி நின்று கொண்டு இருப்பதைப் பார்த்து ஆச்சரியத்துடன் அவனை பார்த்து உள்ளே அழைத்தாள்.ஏனெனில் ரிஷி 8 மணிக்கு முன்னால் எழுந்ததே கிடையாது…இன்று எழுந்தது மட்டுமில்லாமல் இந்த அதிகாலையில் தன்னை தேடி வந்து இருக்கும் ரிஷியையே கண்இமைக்காமல் பார்த்து கொண்டுயிருந்தாள்.அதனைப் பார்த்த ரிஷி “ஹலோ ஶ்ரீநிதி,என்ன பகலிலே கனவா…??” என்று அவள் முகத்திற்கு முன்னால் சொடுக்கு போட்டான்.

“நேற்று இல்லாத மாற்றம் என்னது…??” என்று தன் இனிமையான குரலில் பாடிவிட்டு,

“போடா லூசு…கனவெல்லாம் ஒண்ணும் இல்லை…நீ உன் வாழ்க்கையில் சூரிய உதயத்தைப் பார்த்ததே இல்லையா…!!அதனால் தான் என்னடா இன்றைக்கு பையன் இவ்வளவு சீக்கிரமாக எழுந்ததுமட்டுமில்லாமல் என்னை தேடி வந்திருக்கானே…என்ன அதிசயம் நடக்குது இங்கனு பார்த்துட்டு இருக்கேன்…” என்று நக்கலாக கூறினாள்.

ரிஷியின் குரலைக் கேட்டு இந்த பக்கம் வாணி அவசரமாக எழுவதைப் ஓரக்கண்ணால் பார்த்த ஶ்ரீ ‘இடி விழுந்தால் கூட எழாதவள்,ரிஷி குரலைக் கேட்டு எப்படி எழுகிறாள் பார்…என்ன லவ்வோ சாமி’ என்று மானசீகமாக தலையில் அடித்துவிட்டு ரிஷியைப் பார்த்தாள்.

அவன் ஶ்ரீக்கு பதில் சொல்ல வாயைத் திறக்க போனவன் இந்தபக்கம் வாணி தன் மெத்தையிலிருந்து எழுவதைப் பார்த்து “ஹேய் எழுந்திட்டியா… குட்மார்னிங் வாணி” என்று உற்சாகத்துடன் கூறினான்.

அதேஅளவு உற்சாகத்துடன் வாணியும் “குட்மார்னிங் அத்தான்…என்ன இவ்வளவு சீக்கிரம் இந்த பக்கம்…??” என்று வினவினாள்.

உடனே ரிஷியின் முகத்தில் அவ்வளவு நேரம் இருந்த மலர்ச்சி போய் ஒரு வித தயக்கத்துடன் “ஶ்ரீயிடம் ஒரு முக்கியமான விசயம் பேசணும்…என் வாழ்க்கையே ஶ்ரீ சொல்லும் பதிலில் தான் இருக்கு…நீ கொஞ்சம் வெளியே இருக்கியா…பிளீஸ்??” என்றவுடன் வாணியின் முகம் சுருங்கிவிட்டது.

வாணி மனதிற்குள் என்னை வெளியே அனுப்பிவிட்டு தனியாக பேசும் அளவிற்கு என்ன முக்கியமான விசயம் இருக்கும் என்று பல்வேறு விதங்களில் தன் கற்பனைக் குதிரையை ஓட்டியவாறு அவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டே அறையை விட்டு வெளியேறினாள்.

அவள் சென்று சில நிமிடங்கள் கழித்தும் ரிஷி எதுவும் சொல்லாமல் அவனுக்கு எதிரில் இருக்கும் சுவற்றையே பார்த்து கொண்டு இருப்பதைப் பார்த்து கொண்டு இருந்த ஶ்ரீ ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்கமுடியாமல் “எச்சுசிமி…!!கொஞ்சம் என்னைப் பார்த்து என்ன விசயம்னு சொல்லிட்டு அப்புறம் உங்கள் ஆராய்ச்சியை பண்ணா நல்ல இருக்கும்…ஏனால் எனக்கு கொஞ்சம் ஓர்க் இருக்கு பாரு” என்று கூறி தன் கைகடிகாரத்தைப் பார்த்தாள்.

ச்சு என்றுவிட்டு ரிஷி “நானே செம்ம கடுப்பால இருக்கேன்…நீ வேறே இன்னும் கடுப்பு ஏத்ததே லூசு”என்றவனின் குரலில் எரிச்சலுக்கு பதில் ஒரு வித தயக்கமே இருந்தது,

அதைக்கவனித்த ஶ்ரீ “என்னவென்று முதலில் சொல்லு அப்புறம் தானே எனக்கு என்ன விசயம்னு தெரியும்” என்றாள்.

“அதுவந்து ஶ்ரீ…நான் சொல்லறதை நீ கண்டிப்பாக கேட்பேன்னு… எனக்கு நீ ஒரு வாக்கு தரணும்…” என்றான் பிடிகையுடன்.

அவன் முகத்தை உற்று பார்த்த ஶ்ரீ “நீ முதலில் விசயத்தைச் சொல்லு…அப்புறம் நான் வாக்கு கொடுப்பதா…வேணாமானு முடிவு பண்ணுகிறேன்” என்றாள் அவனுக்கு பிடிக்கொடுக்காமல்.

“அதுவந்து கிருஷ் அண்ணா என்னிடம்… என்று கூறி நேற்று அவன் ஶ்ரீயிடம் கேட்கச் சொன்ன விசயத்தைக் கூறிவிட்டு,

“பிளீஸ் ஶ்ரீ…நீ மட்டும் இதுக்கு ஒத்துக்கவில்லையெனில்…அண்ணா என்னை ஒண்ணுக்கும் உதவாதவன்னு முத்திரைக் குத்திடுவார்…அப்படி நடக்காமல் நீ தான் காப்பாற்றணும்…ஶ்ரீ பிளீஸ்ம்மா” ஒரு வித வேண்டுதலுடன் கெஞ்சி கேட்டான்.

அவன் அப்படி சொன்னவுடன் ஶ்ரீ புருவம் சுருக்கி யோசித்து விட்டு “இதெல்லாம் சரி வரும்னு எனக்கு தோணலை ரிஷி…சோ சாரிப்பா…நீ கிருஷ் அத்தானிடம் விசயத்தைச் சொல்லுவிடு…” என்றாள் தீர்மானத்துடன்.

அவள் அப்படி சொன்னவுடன் ரிஷி இன்னும் அவளிடம் கெஞ்சினான்… இன்னும் சிலபல பிளீஸ்களைப் போட்டுவிட்டு…அவள் கையைப் பிடித்து காலில் விழாதக் குறையாக கெஞ்சியபிறகு தான் ஶ்ரீ அதற்கு ஒத்துக்கொண்டாள்.

ரிஷி ரொம்ப மகிழ்ச்சியுடன் “ஹே…ரொம்ப தேங்கஸ்ப்பா…என்று கூறிவிட்டு உடனே முகத்தைச் சுருக்கி யோசித்து ஶ்ரீயை பார்த்து “ஶ்ரீ நீ தாத்தா…அப்புறம் உங்கள் அப்பா அம்மாவிடம் எல்லாம் அனுமதி வாங்காமலே சரினு சொல்லுறே…அவங்களிடம் கேட்டுவிட்டு சொல்லு போ!!” என்று அவளைத் துரத்தினான்.

ஶ்ரீ அவனை நீ என்ன பைத்தியமா என்பது போல் பார்த்துவிட்டு தன் கைப்பையை எடுத்தவாறு “லூசு!! நீயெல்லாம் எப்படி தான் கிருஷ் அத்தானுக்கு தம்பியாக பிறந்திருக்கியோ…!!அவர் தாத்தா அப்புறம் எங்கள் அப்பா அம்மாவிடம் பேசாமல் எப்படி உன்கிட்டே என்னிடம் பேச சொல்லிருப்பாரு…இதுக்கூட தெரியாமல் நீயெல்லாம் எப்படி உருப்படப் போறியோ…இந்த லட்சனத்தில் நீ எனக்கு நிர்வாகம் பண்ணே உதவி செய்ய போறியாம்…உனக்கே இது காமெடியா இல்லை ரிஷி…” என்று கூறிவிட்டு அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தாள்.

ரிஷி அசடு வழிந்துவிட்டு “ஆமாமில்லை” என்றான்.

ஶ்ரீ சிரிப்புடனே “ஆமாவா இல்லையா…??ஏதாவது ஒண்ணு சொல்லு” என்றாள்.

“ஏய் போ…எப்ப பார்த்தாலும் என்னிடமே வம்புக்கு வந்திட்டு இருக்கே…இனிமே உன்கூட பேசவே மாட்டேன் போ” என்று முறுக்கினான்.

“ஏய்…போதும் போதும்…உன் அலப்பறை…ஆனால் ஒரு விசயத்தில் உன்னைப் பாராட்டணும்டா…!! என்று நமுட்டு சிரிப்புடன் அவன் முகத்தைப் பார்த்தாள்.

அவனும் இவள் என்ன சொல்ல போகிறாள் என்று நின்று கொண்டிருக்கும் ஶ்ரீயை நிமிர்ந்து பார்த்தான்.

ஶ்ரீநிதி இப்போது நன்றாக விரிந்த புன்னகையுடன் “இவ்வளவு நேரம் நீ ஆடுனே நாடகம் இருக்கே…ரொம்ப சூப்பர்டா…நானே ஒரு அஞ்சு நிமிடம் ஏமாந்திட்டேன்டா” என்றாள்.

ரிஷி பதட்டத்துடன் “நாடகமா என்ன நாடகம்ப்பா” என்று ஒண்ணும் தெரியாதவன் போல் நடித்தான்.

“டேய் போதும் போதும் உன் குட்டு ஏற்கனவே வெளிப்பட்டுவிட்டது… இதுக்கு மேலே நடிக்காதே…நீ ஶ்ரீம்மானு உருகனா பாரு…அப்போதே நான் தெளிவாகிட்டேன்…அப்புறம் ஏன் ஒத்துக்கட்டேன்னு யோசிக்கிறயா…!!” அவன் பாவமாக தலையாட்டுவதைப் பார்த்து,

ஶ்ரீ முகத்தில் புன்னகையுடன் “அது உனக்காக தான்…ஏன்னா நீ சொன்ன ஒரு விசயம் உண்மை…நான் ஒத்துக்கலைனா கிருஷ் அத்தான் உனக்கு எந்த பொறுப்பும் தரமாட்டாங்க அதனால் தான்” என்றாள் ஶ்ரீ.

ரிஷி எப்படி இவள் கண்டுப்பிடித்தாள்…இரவு முழுவதும் தூங்காமல் அவளிடம் எப்படி பேசினால் வேலைக்கு ஆகும்னு யோசித்து வந்து இவளிடம் நடித்தால் அத்தனையும் கண்டுபிடிச்சிட்டாளே என்று ஆடு திருடியவனைப் போல் திருதிருவென முழித்தான்.

அவன் கையை நறுக்கென கிள்ளிவிட்டு “இவ எப்படி கண்டுப்பிடிச்சானு யோசிக்கிறியா…??” என்று கேட்டாள்.

ரிஷியும் பாவமாக ஆமாம் என தலையாட்டினான்.

ஶ்ரீ சிரித்துக்கொண்டே “ஏன்னா நாம் இரண்டு பேரும் கிரைம் பார்ட்னர்ஸ்… ஒரே டீமில் இருந்து இதுக்கூட கண்டுப்பிடிக்கவில்லையானால் …எப்படி தம்பி…??” என்று குறும்புடன் வினவினாள்.

“அதுவும் சரிதான்…எப்படியோ நீ இதுக்கு ஒத்துக்கிட்டே அதுவே போதும்… நான் அண்ணாவிடம் போய் சொல்லுகிறேன்…டாடா” என்று அவளிடமிருந்து தப்பித்து ஓடினான்.

அவன் சென்றபிறகு இப்போதாவது தன் தோழி கீதாவைப் பார்க்கலாம் என்று  கிளம்பியவளை வாணி தடுத்து அவன் என்ன சொன்னான் என்று கேள்விகேட்டு,ஶ்ரீ பதில் சொல்லியபிறகு தான் அந்த இடத்தைவிட்டு நகரவிட்டாள்.

ஶ்ரீ வேகமாக அலுவலகத்திற்கு சென்று தன் தோழி கீதாவைச் சந்திக்க சென்றாள்.

அவள் இன்னும் அலுவலகத்திற்கு வரவில்லை என்பதை தெரிந்துக்கொண்டு அவளைத் தொடர்பு கொண்டாள்.அது இன்னும் அணைத்து வைக்கப்பட்டு இருக்கிறது என்று ஒரே பதிலையே திரும்ப திரும்ப சொன்னது.சரி அவள் வரட்டும் என்று அவளுக்காக காத்திருந்தாள்.

 

❤️ Loading reactions...
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
Select your currency
INR Indian rupee
Scroll to Top